*** ஸ்பாய்லர் அலெர்ட்****
இன்டெர்ஸ்டெல்லார் படத்தைப்பத்தி குருடர்கள்
யானைய தடவிப்பாத்த மாதிரி ஆளாளுக்கு ஒவ்வொரு விதமா எழுதியிருக்காங்க. நிறைய
விமர்சனங்களில் நிறைய தப்புகள் தெரியுது. அதனால என்னோட புரிதலை பதிகிறேன்.
ஒருதடவைதான் பார்த்திருக்கேன். நல்ல பிரிண்ட் டிவிடி கிடைச்சதும் இன்னும்
சிலமுறை பார்த்துட்டு எதாவது மாற்றம் இருந்தா இந்த பதிவிலேயே
அப்டேட்டுறேன்.
உலகம் அழியுது, வேற உலகம் உருவாக்கணும். இதுல முதல்
பிரச்சினை புது உலகை கண்டுபுடிக்குறது. அதுக்கு தடுமாறிட்டு இருக்குறப்ப
திடீர்னு எங்கிருந்தோ ஒரு வோர்ம்ஹோல் கைக்கெட்டுற தூரத்துல சூரிய
மண்டலத்துலயே உருவாகுது (இந்த பிரபஞ்சத்தோட அளவை ஒப்பிட்டா நாலு கோள்கள்
தள்ளி இருக்குற தூரமும் கைக்கெட்டுற தூரம்தான்).
ப்ளாக்ஹோல் மாதிரி
வோர்ம் ஹோல், தானா உருவாகாது, அதை யாராவது உருவாக்கினாத்தான் உண்டு. அதனால
பூமிக்கு உதவி செய்யுறதுக்காக யாரோ உருவாக்கியிருக்காங்கன்னு தோணுது. இப்ப
உள்ள போக ஏழு தனித்தனி ஸ்பேஸ்க்ராஃப்ட்ல அதுக்குள்ள ஆட்களை அனுப்புறாங்க.
அதுல மூணு பேர்கிட்ட இருந்து மட்டுமே பிங் வருது. அவங்க லொகேஷன் தெரியுது,
ஆனா டேட்டா எல்லாம் எதுவும் வரலை. இப்ப அந்த மூணையும் தேடி மறுபடி போக ஆள்
வேணும். இங்கதான் நம்ம ஹீரோ கூப்பரோட பயணம் வருது.
ஹீரோவாகப்பட்டவன்
ஒரு காலத்துல ஆஸ்ட்ரோநெட். தல பூமிக்கு மேல ஒரு விண்வெளியில சுத்திட்டு
இருக்குறப்ப ஒரு சின்ன சிக்கல் வருது, அப்ப இவன் கொடுக்குற கட்டளைக்கு மாறா
ஆட்டோபைலட் சிஸ்டம் வேற ஒரு வேலைய செஞ்சி அந்த க்ராஃப்ட் ஆக்சிடென்ட்
ஆகிடுது, தல தப்பிச்சிட்டாலும், "போங்கடா, நீங்களும் உங்க விண்வெளி
ஆராய்ச்சிகளும்"ன்னு கடுப்பாகி குடும்பத்தோட வந்து விவசாயம் பண்ணிட்டு
இருக்காரு. தன் பொண்ணு மேல அதீத பாசம்.
இப்ப வீட்டுல க்ராவிட்டி
வழியா புழுதியில எழுதப்பட்டுற மோர்ஸ் கோட்ல கிடைக்குற ஒரு லொகேசன் கோ
ஆர்டினேட்ஸை வெச்சி ஒரு பெரிய விண்வெளி ஆய்வகத்துக்கு போறாரு. இது
வெளியுலகத்துக்கு தெரியாம நடந்துட்டு இருக்கு. ஏன்னா உலகமே அழிஞ்சிட்டு
இருக்குறப்ப விண்வெளிக்கு பில்லியன்கணக்கா செலவு செய்யுறது தப்புன்னு
எதிர்ப்பு வந்ததால எல்லா நாடுகளும் விண்வெளி ஆராய்ச்சிகளை மூட்டை
கட்டிடுது. இங்க வந்து பார்த்தா டாக்டர் க்ராண்ட் அப்படின்னு ஒரு
வெள்ளைத்தலை விஞ்ஞானியும் அவரோட சூப்பர் ஃபிகரான பொண்ணும் ஒரு பெரிய
விஞ்ஞான கும்பலோட வேலை செஞ்சிடுட்டு இருக்காங்க. ஏழு பேரை
வோர்ம்ஹோல்க்குள்ள அனுப்பினதே இவங்கதான்.
அந்த மூணு பேரை தேடிப்போற
குழுவுக்கு தலைமை தாங்க சரியான ஆள் இல்லை. இவர் வந்ததும் (வழக்கமான தமிழ்
சினிமா மாதிரி) "உங்களை விட்டா இந்த பூமியை காப்பாத்த யாருமே இல்லை"ன்னு
சீன் போட்டு அவரை அனுப்புறாங்க. வழக்கமான ஹாலிவுட் படமாட்டம் கூட அந்த
சூப்பர் ஃபிகரும், இன்னொரு விஞ்ஞானியும் போறாங்க. நிறைய தமிழ் / ஆங்கில
படம் பார்த்திருந்தா இவங்க மூணு பேர்ல ரெண்டு பேர்தான் கடைசியில உயிரோட
இருப்பாங்க அதுவும் ஹீரோவும் ஹீரோயினியும் நீங்க சரியா கதைய
புடிச்சிருப்பீங்க.
இவங்க எல்லாரும் ஒரு சின்ன வண்டியில
கிளம்பிப்போயி விண்வெளியில இருக்குற ஒரு வட்டமான பெரிய வண்டியில ஏறி
வார்ம்ஹோலுக்கு போறாங்க. வார்ம்ஹோலுக்கு போகவே ரெண்டு வருசம் ஆகும், அங்க
போறாங்க, அதுக்குள்ளயும் போறாங்க.
அங்க அற்புதமா ஒரு ப்ளாக்ஹோல்
இருக்கு. ப்ளாக்ஹோல்னா அது எல்லாத்தையும் உறிஞ்சிக்கும், உச்சகட்ட ஈர்ப்பு
விசை இருக்கக்கூடிய ஒரு அமைப்பு. ஒளி கூட தப்பிக்க முடியாது. அதோட மையத்தை
சிங்குலாரிட்டின்னு சொல்றாங்க. அந்த சிங்குலாரிட்டியில என்ன இருக்குன்னு
கண்டுபிடிக்குறது நம்ம வெள்ளைத்தலை க்ராண்ட்டோட ரெண்டாவது பிரச்சினை. ஏன்னா
என்னதான் இன்னொரு கிரகத்தை கண்டுபுடிச்சிட்டாலும், பூமியில மிச்சம்மீதி
இருக்குறவங்களை அலேக்கா தூக்கிட்டு போகணும் இல்லையா, அதுக்கு எவ்ளோ சக்தி
வேணும். அதை செய்ய ஒரு ஃபார்முலா வெச்சிருக்காரு, அந்த ஃபார்முலாவை
கம்ப்ளீட் பண்ணா வெள்ளைத்தலையருக்கு ஒரு ப்ளாக்ஹோல்ல சிங்குலாரிட்டியில
என்ன இருக்குன்னு தெரியணும்.
அதுக்குதான் அவர் பொண்ணையும்
அனுப்பியிருக்காரு, அதன்படி இந்த பயணம் போறவங்க திரும்பி போக எல்லாம்
முடியாது, ஒன்வே தான். இதை நம்ம ஹீரோட்ட இருந்து ஹீரோயினி மறைச்சிட்டாங்க.
இங்க ஒரு லலாலலா சோக சீன் எல்லாம் உண்டு.
இதுக்கு நடுவுல ஹீரோயினி
வந்ததுக்கு இன்னொரு காரணம், பிங் வந்திருக்குற மூணு பேர்ல ஒருத்தரு கூட
ஹீரோயினிக்கு லவ்வு. அதனால அங்க முதல்ல போகணும்னு சொல்லிகிட்டே இருக்கு.
ஆனா ஹீரோ சண்டை எல்லாம் போட்டு அதெல்லாம் ஆகாதுன்னு சொல்லிடறாரு. இதெல்லாம்
சைடு ட்ராக்.
முதல் கிரகத்துக்கு போறாங்க. அது அந்த ப்ளாக்ஹோலோட
ரொம்ப பக்கத்துல இருக்கு. அதனால ஈர்ப்பு விசை ரொம்ப அதிகம். அந்த அதீத ஈர்ப்பு விசையால பூமியில ஒருமணிநேரம்ன்றது அங்க கிரகத்துல 7 வருசம். அதனால
போய் பாத்துட்டு உடனே திரும்பிவந்துடணும். அதுக்கே ஏழு வருசம்
போயிருக்கும். ரிஸ்க் எடுத்து போறாங்க. அங்க போனா முதல்ல வந்த விஞ்ஞானி
செத்து போயிட்டாருன்னு தெரியுது, பெரிய அலைகள்ல மாட்டி திரும்புறதுக்கு
கொஞ்சம் அதிக நேரம் ஆகிடுது. வந்து பார்த்தா பூமியில 23 வருசம் ஆகிடுது.
ஹீரோவோட பொண்ணு எல்லாம் பெருசாகிடுது. அதுவும் இப்ப விஞ்ஞானி.
மூணுல
ஒரு இடம் அவுட்டு. ரெண்டாவது எங்க போறது சண்டை எல்லாம் போட்டுட்டு,
ஹீரோயின் சொன்ன அவர் லவ்வர் எட்மன்ட் கிரகத்து போகாம, இன்னொரு கிரகத்துக்கு
போறாங்க. அங்க நம்ம மேட் டீமன் இருக்காரு. அவரு இந்த கிரகம் சூப்பர் அது
இதுன்னு செம பில்ட் அப் கொடுக்குறாரு. ஆனா உண்மையில அது மனிதர்கள் வாழ
தகுதியில்லாத கிரகம், ஆனாலும் இவரு இப்படி சொல்ல காரணம், அப்பதான் யாராவது
வருவாங்க, அவங்க வர்ற ஸ்பேஸ்க்ராஃப்ட்ல பூமிக்கு தப்பிச்சி போயிடலாம்னு.
அப்படி அவர் தப்பிக்குற முயற்சியில ஹீரோ ஹீரோயின் கூட வந்த இன்னொரு
விஞ்ஞானி செத்துடறாரு. இவங்க வந்த பெரிய வட்ட வண்டியும் டேமேஜ் ஆகிடுது. மேட் டீமனும் புட்டுக்குறாரு.
இப்ப
வேற வழியே இல்லை, ஹீரோயின் லவ்வர் எட்மன்ட் இருக்குற கிரகத்துக்கு
போகணும். பிரச்சினை அங்க போற அளவுக்கு ஃப்யூயல் இல்லை, பெட்ரோல் தீந்து
ஹைவேல நிக்குற மாதிரி விண்வெளியில ப்ளாக்ஹோல்ட்ட நிக்குறாங்க. இப்பதான்
நம்ம ஹீரோ செம ஐடியா பண்ணுறாரு
ப்ளாக்ஹோலை சுத்தி அதோட ஈர்ப்பை
வெச்சி வேகமா போயிட்டு திடீர்னு கிக் கொடுத்து அதை விட்டு தப்பிச்சா அந்த
வேகத்துலயே ப்ளாக்ஹோலை விட்டு ரொம்ப தூரம் ரொம்ப வேகமா போயிடமுடியும். (இதை
ஸ்டீஃபன் ஹாகிங் அவரோட டிஸ்கவரி சீரிஸ்ல செமையா விளக்கியிருப்பாரு). இப்ப
இதை செய்யுறப்ப ஹீரோ ஒரு தியாகம் பண்ணுறாரு, ஹீரோயினை மட்டும் அனுப்பிட்டு
இவரு அந்த ப்ளாக்ஹோல் உள்ளாற போயிடுறாரு, அதாவது சிங்குலாரிட்டியில என்ன
இருக்குன்னு பாத்து பூமிக்கு மெஸேஜ் அனுப்பி ரெண்டாவது பிரச்சினைய
தீர்க்குறதுக்கு (இங்க ஒரு லலாலாலா தீம் மீயூசிக் பேக்கிரவூன்ட்ல
போட்டுக்கோங்க).
அதுக்குள்ளா போனா நம்ம ஆளு ஒரு பெரிய வித்தியாசமான
டெசரக்ட்ன்ற அமைப்புள்ள போயிடுறாரு, கூடவே அவரோட செல்ல ரோபோவும்.
அதுக்குள்ள பல்வேற காலகட்டத்துல முன்ன பின்ன போய் பாக்க முடியும். பாக்க
மட்டும்தான் முடியும், வேற ஒண்ணும் பண்ணமுடியாது. அதுல இவர் பார்க்குறது
இவர் வீட்டோட லைப்ரரி.
அப்ப எப்படி மெஸேஜ் அனுப்புறது, அங்கதான்
நம்ம ஆளு இன்னொரு ஐடியா பண்ணுறாரு (பெரிய ஐடியாமணியா இருப்பாரு போல). இந்த
மாதிரி ஹையர் டைமன்ஷன்ல (இதுக்கு தமிழ்ல என்ன?) ஊடுறவுற ஒரே விசயம்
க்ராவிட்டி (ஈர்ப்பு விசை). அதன் மூலமா ஆரம்ப காலத்துக்கு போயி புழுதியை
மாத்தி வெச்சி விண்வெளி மையத்தோட லொகேஷனை எழுதிடுறாரு. அதாவது இவரேதான்
இவரை அங்க அனுப்பியிருக்காரு.
அடுத்ததா பூமியோட இப்போதைய
காலத்துக்கு போயி, அந்த சிங்குலாரிட்டியோட ஃபார்முலாவை ஒரு வாட்ச் உள்ள
மோர்ஸ் கோடா எழுதிடுறாரு. அங்க கடைசியா பார்க்க வர்ற அவர் பொண்ணு அதை
எடுத்து பார்த்து படிச்சி தெளிஞ்சி "நம்ம அப்பா நம்மளை
காப்பாத்திட்டாரு"ன்னு சந்தோச கூச்சல் போடுது. (இன்னொரு லலலா பாட்டு
போட்டிருக்கலாம்)
இப்ப நம்ம ஆளுக்கு வந்த வேலை முடிஞ்சது. அந்த
டெசரெக்ட் அப்படியே அழியுது. அதுல இருந்து நம்ம ஆளு வெளிய வந்து (வர்றப்ப
ஆரம்ப பயணம் செய்யுற ஹீரோ ஹீரோயினை வேற தரிசிக்குறாரு). அப்படியே வந்து
விண்வெளியில மிதக்குறாரு.
அப்ப பூமியில இருந்து வந்தவங்க அவரை
கண்டுபுடிச்சி கூட்டிட்டு போறாங்க. எழுந்தாத்தான் தெரியுது நம்ம ஆளுக்கு,
இவர் மெசேஜ் அனுப்பி இவங்க இவரை பிக் அப் பண்ணுறதுக்குள்ள பூமியில 50
வருசம் கடந்துடுச்சின்னு.
இவர் கொடுத்த ஃபார்முலாவை வெச்சி பெரிய
ஒரு விண்வெளி மையத்தை அமைச்சி அதன் மூலமா பூமியில இருக்குறவங்களை அலேக்கா
தூக்கிட்டு வந்துட்டாங்க. அதன் பேரு கூப்பர் ஸ்டேஷன். "ஹை, என் பேரையே
வெச்சிட்டீங்களா?"ன்னு கேக்க, "அது உங்க பேர் இல்லசார், உங்க பொண்ணோட பேரு,
அவங்கதான் இதை உருவாக்கினவங்களே"ன்னு சொல்றாங்க.
இப்பதான் அந்த
முக்கிய சந்திப்பு நடக்குது. பலவருசம் கழிச்சி தன் அன்பு மகளை திரும்ப
சந்திக்குறாரு. ஆனா இவருக்கு 45 வயசுதான், பூமியில வருசங்கள் கடந்ததால அவர்
பொண்ணு 92 வயசு கிழவியா படுத்த படுக்கையா தன் குடும்பத்தோட இருக்காங்க.
(லலாலா.. லலாலா).
அவங்களை சந்திச்சி பேசுறப்ப அவங்க விளக்குறாங்க.
இவர் கொடுத்த ஃபார்முலாவை வெச்சி இந்த ஸ்டேஷனை கட்டி பூமியில இருக்குற
உயிரினங்களை காப்பாத்தியாச்சி. இப்பதான் சமீபத்துல ஹீரோயின்கிட்ட இருந்து
மெசேஜ் வந்திருக்கு. எட்மன்ட் கிரகம் நல்லா இருக்காம், அங்க போக
இனிமேத்தான் வேலைகள் செய்யணும்னு. தனக்கு வயசாகிட்டதால தன்னோட கடைசி காலம்
தன் குடும்பத்தோட இருக்குறது நல்லதுன்னு சொல்றாங்க. அதனால ஒரு பாட்டம்
அழுது முடிச்சிட்டு, நம்ம ஹீரோ ஒரு வண்டிய திருடிட்டு ஹீரோயினை பார்க்க
கிளம்பிடுறாரு.
அந்த வோர்ம்ஹோல், டெசரெக்ட் எல்லாத்தையும் உருவாக்கினது யாருன்னு கேள்வி வரும். அதை செஞ்சவங்க எதிர்காலத்துல இருக்கக்கூடிய முன்னேறிய மனித இனம். இவங்க செஞ்சிருக்குற வேலைகள் மூலமா மனித இனம் வாழ்வாங்கு வாழ்ந்து, டெக்நிகலா முன்னேறி இதை எல்லாம் செஞ்சி, தங்களை தாங்களே காப்பாத்தி இருக்காங்க (தலை சுத்துதுதானே?)
அங்க ஹீரோயின் க்ரான்ட், தனியா அந்த கிரகத்துல
இருக்காங்க. அவங்களுக்கும் காலம் அதிகமா ஓடலைன்றதால சின்ன வயசாவே இருக்காங்க. பின்ன ஹீரோவோட மகளுக்கு வயசாகலாம், ஹீரோயினுக்கு வயசாகுமோ? (நோலன் ரொம்ப தமிழ்ப்படம் பாக்குறாருன்னு நினைக்குறேன்). அவங்க லவ்வர் செத்து போயிடுறாரு (ஹீரோவுக்கு ரூட் க்ளியர்). மனிதர்கள் பூமியை மாதிரியே
சுவாசிக்க, வாழ ஏற்ற அந்த கிரகத்துல பூமியில இருந்து மனிதர்கள் வரவுக்காக வெயிட்
பண்ணிட்டு இருக்காங்க.
*சுபம்*
Showing posts with label திரைப்படம். Show all posts

Saturday, April 18, 2015
இன்டெர்ஸ்டெல்லார் : கதைச்சுருக்கம்
Labels:
Interstellar,
இன்டெர்ஸ்டெல்லார்,
திரைப்படம்,
விமர்சனம்
Monday, March 16, 2015
எனக்குள் ஒருவன் : தவறவிடக்கூடாத தமிழ் படம்
முன் குறிப்பு 1: நீங்கள் இன்னும் எனக்குள் ஒருவன் பார்க்கவில்லை என்றால் தியேட்டருக்கு போய் பாருங்கள். ஒரு அற்புதமான அனுபவத்திற்கு நான் உத்திரவாதம்
மு.கு.2: இதன் ஒரிஜினலான கன்னட படம் "லூசியா"வை நான் பார்க்கவில்லை. என் பார்வை முழுக்க தமிழின் எனக்குள் ஒருவனைப் பற்றி மட்டுமே.
*****
கிறிஸ்டோஃபர் நோலன் உலகையே பிரமிப்பில் ஆழ்த்திய "இன்செப்ஷன்" படத்தில் ஒரு காட்சி வரும். கனவுக்குள் கனவு என நான்கு நிலைகளுக்கு செல்வதற்கு தகுந்த சரியான மயக்கமருந்து ஃபார்முலா தேடி ஒருவரிடம் செல்வார்கள். அவர் தன் மருந்தின் வீரியத்தை காட்ட ஒரு அறைக்கு அழைத்துச் செல்வார். அங்கே சுமார் 20 பேர் அந்த மருந்தை எடுத்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களை அடித்தால் கூட எழமாட்டார்கள்.
அந்த கெமிஸ்ட் "இவர்கள் எல்லாரும் தினம் இங்கே வருவார்கள். காலை எழுந்து சென்றுவிட்டு, மீண்டும் சீக்கிரமாக இங்கே திரும்பி விடுவார்கள்" என்பான்
லியானார்டோ அவரிடம் "திரும்ப தூங்க இங்கே வருவார்களா?" எனக்கேட்க
அந்த கெமிஸ்ட் சொல்லும் பதில் "இல்லை, அவர்கள் இங்கே வருவது திரும்ப விழித்தெழ"
அதாவது, அந்த மனிதர்களைப் பொறுத்தவரை இந்த புற உலகம் வேறு வழியில்லாமல் இருக்கும் இடம். அந்த கனவுலகம்தான் அவர்களைப் பொறுத்தவரை நிஜ வாழ்க்கை, அதைத்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
"எனக்குள் ஒருவன்" படத்தின் அடிப்படை கதையின் ஒருவரி அந்த கெமிஸ்ட் சொல்லும் பதில்தான்
****

ஒரு தியேட்டரில் டிக்கெட்டில் டார்ச் அடித்து சீட் நெம்பர் பார்த்து சரியான சீட்டில் உக்காரவைக்கும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் விக்கி என்ற கருப்பு சித்தார்த்திற்கு கிடைக்கும் அற்புத மாத்திரை லூசியா.
மருந்து கம்பெனி நடத்தி வரும் ஜான் விஜய் "இதை போட்டுகிட்டா உனக்கு கனவு வரும், அதுல நீ வாழ நினைச்ச மாதிரி எல்லாம் வாழலாம்" என்று சொல்லி கொடுக்கும் மாத்திரையை போட்டுக்கொண்டு தூங்க, கனவில் ஒரு பெரிய சினிமா ஸ்டாராக விக்னேஷ் என்ற வெள்ளை சித்தார்த்.
அதன்பின் கனவிலும் நிஜத்திலும் என்று பேரலலாக போகும் இரட்டை கதை, இரண்டிலும் ஒரே ஆட்கள் வேறு வேறு பாத்திரங்களாக என்று கடைசி வரை திரைக்கதையில் அதகளம்.
படத்தின் மேக்கிங் அற்புதம். அதிலும் கனவு கருப்பு வெள்ளையிலும் நிஜம் வண்ணத்திலும், அதற்கான காரணங்கள் என்று அசத்தியிருக்கிறார்கள்.
கதையின் மிகப்பெரிய பலமே க்ளைமாக்ஸ் காட்சிகள். படம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் அதிலிருந்து இன்னும் நான் வெளிவரவில்லை.
இதற்கு மேல் சொன்னால் ஸ்பாயிலர் ஆகிவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
"ஐ டோன்ட் சீ டமில் மூவிஸ்" என்று சொல்பவர்களும் பார்க்கவேண்டிய படம் இது.
************
ஸ்பாயிலர் அலெர்ட்: படம் பார்க்காதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.
படம் பார்த்தவர்களுக்கு, படத்தோட க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பிரமிப்பாக இருந்திருக்கும்.
சில வருசங்களுக்கு முன்னால் அமெரிக்க வாழ் பதிவர் நண்பர் ஸ்ரீதர் நாராயணன் கதை வசனம் எழுதி நண்பர் கணேஷ் சந்திரா & அவர் நண்பர்கள் நடித்த ஒரு குறும்படம் "நிமித்தக்காரன்". சுமார் கால்மணிநேரம் ஓடும் இந்த குறும்படமும் கனவுகளைப் பற்றியே பேசுகிறது.
வசனம் அதிகம் இருந்தாலும் பொறுமையாக பார்த்தால், க்ளைமாக்ஸில் ஒரு வாவ் மொமென்ட் உண்டு, முக்கியமாக இதை எனக்குள் ஒருவனுடன் ரிலேட் செய்ய முடியும்.
பி.கு: எனக்குள் ஒருவனின் கன்னட ஒரிஜினலான லூசியா ரிலீஸ் ஆனது ஃபிப்ரவரி 2013. இந்த நிமித்தக்காரன் ரிலீஸ் ஆனது ஏப்ரல் 2011. அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்பே..
Youtube Link: https://www.youtube.com/watch?v=bXva1IDvSjE
Labels:
அனுபவம்,
சினிமா,
திரைப்படம்,
விமர்சனம்
Thursday, April 3, 2014
மனிதனுக்குள் ஒரு மிருகம் : The Purge (2013)
ஒரு வருசம் முழுக்க உங்களை மாடு மாதிரி வேலை வாங்கிட்டு அப்ரைசல் நடக்கும்போது "நீங்க இன்னும் நல்லா வேலை செய்யணும்"னு சொல்லி ப்ரோமோசன் குடுக்காத மேனேஜர் உங்களுக்கு இருந்திருக்காரா?
வீட்டுல ஒரு நல்லகாரியம் நடக்கும்போது எப்போதோ நடந்த பகையை அல்லது நீங்க நல்லா வாழ்றீங்கன்ற வெறுப்புல இல்லாத பொல்லாதை சொல்லி அந்த விழா மனநிலையவே கெடுக்குற ஒரு உறவினர் இருந்திருக்காரா?
தினம் தினம் தன் வீட்டு குப்பைகளை உங்க வீட்டு முன்னால கொட்டுற பக்கத்து வீட்டுக்காரர்? கொடுத்த பணத்துக்கு மீதி தராம, கேட்டா உங்களையே திட்டுற கண்டக்டர்? நாலு பேர் முன்னால உங்களை அசிங்கப்படுத்தின யாரோ ஒரு எக்ஸ் ஒய் இசட்?
இந்த மாதிரி ஆட்களைப் பாக்கும்போது உங்களுக்கு என்ன தோணும்? எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கிடைச்சா இவனுங்களை எல்லாம் கொலையே பண்ணிடுவேன்னு தோணுமில்லையா? உண்மையாவே அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா என்ன செய்வீங்க, நிஜமாவே கொலை செய்வீங்களா?
சொன்னாலும் சொல்லாட்டாலும் நீங்களும் நானும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா என்ன செய்வோம்னு யாருக்கும் தெரியாது. நமக்குள்ள இருக்குற மிருகத்தோட உண்மையான முகம் அப்பதான் தெரிய வரும். அந்த மிருகத்தோட வக்கிரம் நமக்கு இப்ப தெரியுமான்றதே சந்தேகம்தான்
"அடுத்த 12 மணிநேரத்துக்கு நீ என்ன வேணும்னாலும் செஞ்சிக்கலாம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாமே. உன்மேல எந்த வழக்கும் போடப்படாது. போலீஸ், மருத்துவ உதவிகள் எதுவுமே அந்த 12 மணிநேரத்துக்கு வராது"ன்ற மாதிரியான ஒரு உத்தரவாதம் கிடைச்சா நம் ஆழ்மனசுல இருக்குற வக்கிரம் எல்லாத்தையும் நிறைவேத்திக்குவோம் இல்லையா?
அதுதான் 2013ல வந்த "The Purge" படத்தோட கதை
*****
வேலை இல்லா திண்டாட்டம், குற்றங்களின் எண்ணிக்கைன்னு அமெரிக்கா மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்குது. இதை சரி செய்ய அமெரிக்காவின் புதிய நிறுவனர்கள் (New Founding Fathers) ஒரு புதிய ஐடியாவை செயல்படுத்துறாங்க.
அதன்படி, வருசத்துல ஒருநாள் மாலை 7 மணிமுதல் அடுத்த நாள் காலை 7 மணி வரைக்கும் "பர்ஜ்" அப்படின்ற ஒரு நிகழ்வுக்காகன்னு ஒதுக்குறாங்க. இந்த 12 மணிநேரத்துல எந்த சட்டமும் கிடையாது. பெரிய அழிவை ஏற்படுத்துற பயங்கர ஆயுதங்கள் மற்றும் அரசின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை தாக்க மட்டும் தடை. மற்றபடி துப்பாக்கி, கத்தி இதை வெச்சி யாரையும் கொல்லலாம், காயப்படுத்தலாம், கற்பழிக்கலாம், எதுவுமே தப்பில்லை.
இதன் மூலமா மக்கள் தங்கள் ஆழ்மன வக்கிரங்களை இறக்கி வெச்சிட்டு மற்ற 364 நாட்களிலும் வேலைகளில் கவனம் செலுத்துறதால வேலை இல்லா திண்டாட்டம், குற்றங்களின் எண்ணிக்கை எல்லாம் குறைஞ்சி, நாடே சுபிட்சமாகிடுது.
பெரும்பாலும் இதனால பாதிக்கப்படுறது அதிக வசதியில்லாத ஏழை எளிய மக்கள்ன்றதால "இது அப்படிப்பட்டவங்களை ஒழித்துக் கட்டுறதுக்காகவே நடத்தப்படுற விசயம்"னு ஏகப்பட்ட எதிர்ப்பு இருந்தாலும் வருடா வருடம் இது நடத்தப்படுது. நேரடி ஒளி/ஒலிபரப்பும் செய்யப்படுது
****
அப்படிப்பட்ட ஒரு பர்ஜ் இரவில் படத்தின் ஹீரோ ஜேம்ஸ், தன் மனைவி, மகன், மகளுடன் தன் வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே இந்த படத்தின் கதை.
ஜேம்ஸ், வீட்டிற்கான செக்யூரிட்டி சிஸ்டம்களை விற்கும் சேல்ஸ்மேன். பர்ஜ் இரவில் இருந்து உயிர் தப்பிக்க பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் செக்யூரிட்டி சிஸ்டம்களை பொருத்துவதால சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய பணக்காரன் ஆனவன்.
பர்ஜ் இரவிற்காக உட்சபட்ச பாதுகாப்பு சாதனங்களை நிறுவி, தன் வீட்டிற்குள் பூட்டிக்கொண்டு இருக்கிறான், அப்போது வெளியே மற்றவர்களிடம் சிக்கி அடிபட்டு உயிர்தப்பிக்க ஓடி வரும் ஒருவனை ஜேம்ஸின் மகன் கதவைத் திறந்து வீட்டிற்குள் அனுமதிக்கிறான். கதவு மறுபடி மூடப்பட்டாலும், அந்த மனிதனை தேடி வரும் ஆயுதம் தாங்கிய குழு, அவனை ஒப்படைக்கா விட்டால் வீட்டில் எப்படியாவது நுழைந்து அந்த மூன்றாம் மனிதனையும், ஜேம்ஸ் குடும்பத்தாரையும் கொல்வோம் என்று கொக்கரிக்க, ஜேம்ஸ் அதை எப்படி எதிர் கொள்கிறான் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
*****
வெறும் 3 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, விமர்சகர்களால் பெரிய அளவில் பாராட்டப்படா விட்டாலும், இந்த படம் சுமார் 90 மில்லியன் டாலர் அளவுக்கு வசூல் செய்திருப்பதே இதை மக்கள் விரும்பியதற்கு சாட்சி.
அதனாலேயே இதன் அடுத்த பாகம் ஜூலை 2014ல் வெளிவர இருக்கிறது.
ஆக்சன் / த்ரில்லர் பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம் இது.
http://en.wikipedia.org/wiki/The_Purge

Friday, August 9, 2013
Monday, December 26, 2011
ஒரு காதல்கதையும் அடைய முடியாத நான்காம் இலக்கும்
படிக்க ஆரம்பிக்கும் முன் ஒரு கேள்வி: பெரிய விமான நிறுவனங்களில் விமானம் ஓட்டும் ஒரு பைலட்டின் ஆரம்ப சம்பளம் எவ்வளவு?
சென்ற வாரம் பொழுது போகாமல் ரீடரில் படிக்காமல் வைத்திருந்த பதிவுகளை படித்துக் கொண்டிருந்தபோது வினவின் பக்கங்களில் ஒரு பதிவின் தலைப்பே ஈர்த்தது. மைக்கேல் மூரின் “Capitalism - A Love Story" என்ற ஆவணப்படத்தைப் பற்றி பதிவு அது. ஏற்கனவே மைக்கேல் மூரின் ”ஃபாரன்ஹீட் 9/11” படம் பார்த்திருந்ததால் மைக்கேல் மூர் மீதிருந்த மரியாதையால் அந்த படத்தை டவுன்லோடி பார்க்க ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு முறை நம் அரசியல்வாதிகளை திட்டும் போதும் “அமெரிக்க அரசியல்வாதிங்கள பாருங்க, எவ்ளோ தொலைநோக்குப் பார்வை அவங்களுக்கு. எத்தனை போர்கள் எதுக்கு பண்ணுறானுங்க, அவங்க நாடு நல்லா இருக்கணும்னுதானே, அமெரிக்கர்கள் குடுத்து வெச்சவங்க” என்ற ரீதியில் பேசிக் கொண்டிருக்கிறோம்.
”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அமெரிக்க நிறுவனங்கள் எந்த அளவுக்கு அரசின் துணையுடன் மற்ற நாடுகளை சீரழிக்கின்றன, அதற்கு அவர்கள் கையாளும் தந்திரங்களும் மோசடிகளும் அதிர்ச்சி அடைய வைக்கும். ஆனால் அத்தனையும் தன் நாட்டு மக்களின் நலனுக்காக செய்யப்படுவது என்று நம்மை தேற்றிக் கொள்ளும்முன் பார்க்க வேண்டிய படம் “முதலாளித்துவம் - ஒரு காதல் கதை” என்ற மைக்கேல் மூரின் ஆவணப்படம்.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எப்படி அமெரிக்க நிறுவனங்களும், வால் ஸ்ட்ரீடும் தன் சொந்த நாட்டு மக்களை சூறையாடுகின்றன, 99 சதவீத மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து 1 சதவீத உயர்தட்டு மக்களை காப்பாற்ற என்ன என்ன செய்கின்றன என்பதை ஆதாரங்களுடன் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக விளக்கிக் கொண்டே போகிறார்.
அதில் ஒன்றுதான் மேலே சொன்ன பைலட் சம்பளம். அமெரிக்காவிற்கு வேலைக்கு வரும் எந்த சாஃப்ட்வேர் ஆளும் குறைந்தது வருடத்திற்கு 40,000 டாலர்கள் சம்பளம் பெற முடியும். ஓரளவு திறமை இருந்தால் 60லிருந்து 70ம் தனியாக கன்சல்டண்ட்களாக மாறினால் 100 ஆயிரம் டாலர்களையும் சம்பாதிக்க முடியும். ஆனால் அமெரிக்காவின் பெரிய விமான நிறுவனங்களில் வேலை செய்யும் பைலட்களின் சம்ப்ளம் 15,000 டாலர்களில் மட்டுமே ஆரம்பிக்கிறது. 20,000 என்பது சராசரி. அதாவது மாதம் 1,500 டாலர் அளவிற்கு.
வேலையாட்களுக்கு குறைந்த சம்பளம் தருவதன் மூலம் கொள்ளை லாபம் அடிப்பது மட்டுமல்லாமல், தனியார் சிறைச்சாலை பலன் பெற நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்து சின்ன தவறு செய்யும் சிறுவர் சிறுமிகளையும் பல மாதங்கள் சிறையில் அடைப்பது, ஒவ்வொரு நிறுவனமும் தன் வேலையாட்களின் மீது அவர்களின் குடும்பங்களுக்கேத் தெரியாமல் இன்ஸ்யூரன்ஸ் எடுத்து அவர்களின் சாவிலும் பணம் பண்ணுவது, வீட்டுக்கடன் வட்டி கட்ட முடியாமல் வீட்டை விட்டு வெளியேறும் குடும்பத்தினரையே அந்த வீட்டை குறைந்த காசுக்கு சுத்தம் பண்ணித் தர சொல்வது, அமெரிக்க அதிபரைச் சுற்றி பெரும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே இருப்பது, அவர்கள் எடுக்கும் முடிவுகளே நாடாளுமன்றத்தில் எப்படியாவது நிறைவேற்றப்படுவது என்று உச்சபட்ச கொடுமைகளை காட்டும்போது, நம்ம ஊரே பரவாயில்லடா என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
அமெரிக்காவின் இன்னொரு முகம் தெரிய அவசியம் பார்க்கப்படவேண்டிய படம் இது
*********
இந்த வாரம் நான் பார்த்த இன்னொரு படம் மேற்சொன்னதிற்கு முற்றிலும் மாறுபட்ட ஆக்சன் திரைப்படம். டாம் க்ரூஸின் பல படங்களைப் பார்த்திருப்பதாலும் இதற்கு முந்தைய மூன்று Mission Impossible படங்களும் திருப்தியான ஆக்சன் மசாலாவாக இருந்ததாலும் இதன் நான்காம் பாகத்தை தவறவிட வேண்டாம் என்று கடந்த சனிக்கிழமை சென்றிருந்தேன்.
டிஜிட்டல் ப்ரொஜெக்சன், டிடிஎஸ், டால்பி என்று சவுண்ட் எஃபக்ட் என்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் சினிமா தொழில்நுட்பத்தின் தற்போதைய உச்சம் என்று IMAX தியேட்டர்களை சொல்லலாம். சுமார் 80 அடி உயரம் மற்றும் அகலத்துடன் மிகப்பெரிய ஏறத்தாழ சதுரமான திரை, 12 ஆயிரம் வாட்ஸ் சவுண்ட் சிஸ்டம், 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்பீக்கர்கள் என்று படம் பார்ப்பதை முற்றிலும் புதிய அனுபவமாக மாற்றவல்லவை இந்த தியேட்டர்கள்.
அதனால் இந்த முறை படத்தை IMAXல் பார்க்கலாம் என்று முடிவு செய்து பார்த்தேன். படத்தின் முக்கிய காட்சிகளான துபாயில் நடக்கும் நிகழ்வுகள் பெரும்பாலும் IMAX கேமிராவிலேயே எடுக்கப்பட்டதால் படம் கலக்கலாக இருந்தது. படத்தின் மற்ற பகுதிகள் 70 எம் எம் ல் எடுக்கப்பட்டதால் மேலும் கீழும் இடம் விட்டு பாதி திரை அளவுக்கே தெரியும் காட்சிகள், ஸ்பெஷல் கேமிராவில் எடுக்கப்பட்ட காட்சிகள் வரும்போது முழுத்திரையிலும் விரியும்போது விசிலடிக்கத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பெங்களூர் சன் நெட்வொர்க் வளாகத்தில் எடுத்திருப்பதும், பெங்களூர் மந்த்ரி மால் வளாகம் முன் சில காட்சிகளும் வருவது நம் சினிமா மார்க்கெட்டிற்கு ஹாலிவுட் தர ஆரம்பித்திற்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
மசாலாப்பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம், உங்கள் ஊரில் IMAX இருந்தால் நிச்சயம் IMAXல் பார்க்கப்படவேண்டிய படம்.

துணுக்ஸ்,
நிகழ்வு
Monday, October 19, 2009
இரண்டு புத்தகங்கள் + இரண்டு திரைப்படங்கள் + ஒரு தத்துவம்
புத்தகம் 1: எரியும் பனிக்காடு:
நாம் தினமும் குடிக்கும் தேநீரின் பின்னால் இருக்கும் கறுப்பு சரித்திரத்தை சொல்லும் ரெட் டீ (Red Tea) என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழ் வடிவம்தான் இந்த புத்தகம். ஆங்கிலத்தில் பி.எச்.டேனியல் அவர்களால் எழுதப்பட்டு, தமிழில் இரா.முருகவேள் அவர்களால் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த புத்தகம், 1920களில் மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டம் அமைக்க இந்திய ஏழைகளின் வாழ்க்கையை சூறையாடிய வெள்ளையர்கள் + இந்தியர்களின் வாழ்க்கையை சொல்லும் இரத்தம் தோய்ந்த வரலாறு.
தமிழகத்தில் நடக்கும் கதை, ஆங்கிலத்தில் எழுதப்பட்டு மீண்டும் தமிழில் மொழிபெயர்ப்பது சவாலான விசயம். அந்த பகுதி மக்கள் அந்த காலகட்டத்தில் பேசிய மொழியை எழுத்தில் கொண்டுவந்திருக்கும் முருகவேள் பாராட்டப்பட வேண்டியவர்.
அவசியம் படிக்கப்பட வேண்டிய புத்தகங்களின் வரிசையில் முதல் சில இடங்களில் இருக்கும் புத்தகம் இது என்று சொன்னால் அது மிகையில்லை.
இந்த புத்தகம் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் விமர்சனம் இங்கே.
திரைப்படம் 1: Hangover:
சமீபத்தில் நான் பார்த்து ரசித்த சிறந்த பொழுதுபோக்கு படங்களில் ஒன்று. படத்தின் நான்கு ஹீரோக்களில் ஒருவனது பேச்சிலர் பார்ட்டியை கொண்டாட லாஸ் வேகாஸ் நகருக்கு செல்பவர்கள், தாங்கள் தங்கும் ஹோட்டலின் மொட்டைமாடியில் உட்கார்ந்து தண்ணியடிக்க ஆரம்பிக்கிறார்கள். காலையில் தங்கள் அறையில் விழித்து எழுந்தால் முதல் நாள் நடந்தது எதுவும் நினைவில் இல்லை என்ற நிலையில், அறையில் பாத்ரூமில் ஒரு புலி உறும, கப்போர்டில் குழந்தை அழ, இவர்கள் கார் என்று ஒரு போலீஸ் காரை கொண்டு வந்து ஹோட்டல் சிப்பந்தி நிறுத்த என்று குழப்பத்தின் மேல் குழப்பமாக ஆரம்பித்து அனைத்தும் சுபமாக முடிவதுதான் கதை.
தமிழில் உல்டா பண்ண அருமையான திரைக்கதை. யார் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
எனக்கு இந்த படத்தை அறிமுகப்படுத்திய கேபிள் சங்கரின் விமர்சனம் இங்கே.
புத்தகம் 2: Pirate Latitudes:
ஜுராஸிக் பார்க் எழுதிய மைக்கேல் கிரிக்டன் போன வருடம் இறந்த பிறகு அவரது கணிணியை நோண்டிக் கொண்டிருந்த அவரது உதவியாளர் கண்டுபிடித்த இதுவரை வெளிவராத இரண்டு நாவல்களில் ஒன்று "பைரேட் லாட்டிட்யூட்ஸ்". கிரிக்டனால் முழுவதுமாக எழுதி முடிக்கப்பட்டிருந்த இந்த நாவல் நவம்பர் இறுதியில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர கிடைத்துள்ள இன்னொரு முடிக்கப்படாத நாவலை எழுதி முடிக்க எழுத்தாளரை தேடிக்கொண்டிருக்கிறாராம் பதிப்பாளர். ஒரு அப்ளிகேஷன் போடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். :)
சுஜாதாவோட கணிணியையும் யாராவது நோண்டுங்கப்பா, உங்களுக்கு புண்ணியமா போகட்டும்.
திரைப்படம் 2: 2012:
உலகின் மிகப்பெரிய அழிவு எது நடந்தாலும் அல்லது நடக்கப்போவதாக தெரிந்தாலும் அதை படமாக்குவது ஹாலிவுட் இயக்குனர்களுக்குக் கை வந்த கலை. டைட்டானிக், 9/11, உலகப்போர்கள் என்ற பெரிய அழிவுகளை வெற்றிப்படங்களாக்கியவர்கள் அவர்கள். இன்டிபென்டன்ஸ் டே, காட்ஸில்லா, டே ஆஃப்டர் டுமாரோ ஃபேன்டஸி படங்களின் இயக்குனர் ரோலன்ட் எம்மரிக் இயக்கி நவம்பர் 13ல் வெளிவர இருக்கும் 2012 படம், 2012ல் உலகம் அழியும் என்ற கருத்தை ஒட்டி எடுக்கப்பட்டுள்ளது.
இயக்குனரின் முந்தைய படங்களைப் போலவே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் ட்ரைலரே மிரட்டுகிறது. சும்மாவா பின்ன, 260 மில்லியன் டாலர் பட்ஜெட்டாச்சே (சுமாராக 1300 கோடி ரூபாய்). ஏறத்தாழ தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியின் ஐந்து வருட பட்ஜெட்டை விட இந்த ஒரு படத்தின் பட்ஜெட் கொஞ்சம் அதிகம்தான்.
நான் அதிகம் எதிர்பார்க்கும் படம் இது.
தத்துவம்:
நான் தற்போது படித்துக்கொண்டிருக்கும் சன்ஸ் ஆஃப் ஃபார்சூன் (Sons Of Fortune) கதையில் எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் (Jeffrey Archer) கொடுத்திருக்கும் ஆலிவர் ஹோம்ஸ்(Oliver Wendell Homes)ன் ஒரு தத்துவம் இன்றைய பதிவுலகத்திற்கு பொருத்தமாக தோன்றியது.
'Beat a man with the strength of your argument, not the strength of your arm'

புத்தகம்,
விமர்சனம்
Monday, September 21, 2009
உன்னைப்போல் ஒருவன்!!!! என்னை ஏமாற்றிய கமல்....
"உங்களோட சீரியஸ் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைவதாகத் தெரியவில்லையே. இது பற்றி?" கொஞ்சம் தைரியம் அதிகமான ஒரு ரிப்போர்ட்டர் கமலிடம் சில வருடங்களுக்கு முன் கேட்டிருந்தார்.
"ஒவ்வொரு சீரியஸ் படம் பண்ணினதும் அடுத்ததாக கமல் ஒரு காமெடி படம் பண்ணுவாரு, அதைப் பாத்துக்கலாம்னு மக்கள் நினைக்குறாங்களோ என்னவோ" என்ற அவரின் பதில் இன்னமும் எனக்கு நினைவில் இருக்கக் காரணம் அவர் சொன்ன வகை சினிமா ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதுதான்.
"ஹே ராம்" பார்க்கவில்லை. "காதலா காதலா" பலமுறை பார்த்தாலும் சலிக்கவில்லை. "மகாநதி" கிளிப்பிங் வந்தாலும் சேனல் சேஞ்ச். "அவ்வை சண்முகி" பத்து தடவையாவது பார்த்தாச்சு. இதே ட்ரீட்மெண்ட்தான் கமலின் ஒவ்வொரு சீரியஸ் படங்களும் நான் கொடுத்து வந்திருக்கிறேன்.
"உன்னைப்போல் ஒருவன்" படத்தின் விளம்பரத்தை முதல்முறை பார்த்தபோதே இது எனக்குப் பிடிக்கும் என்று தோன்றியது. காரணம் பெரிதாக ஏதுமில்லை என்ற போதும் கமலின் கெட்டப்பும், மோகன்லாலின் வசன உச்சரிப்புகளும் ஈர்த்தன.
அதேநேரம் கமல் தன்னுடன் நடிக்கும் பெரிய நடிகர்களை சரியாக உபயோகப்படுத்துவதில்லை (அ) அவர்களை விட தன் கதாபாத்திரத்தை சிறப்பாகக் காட்டுகிறார் என்பது என்கருத்து. உதாரணம் குருதிப்புனல், ஹே ராம், பஞ்சதந்திரம் போன்ற படங்கள். அதிலும் இது அவரது சொந்தத் தயாரிப்பு. அதனால் இந்த படத்திலும் மோகன்லாலை மட்டம் தட்டியிருப்பார், தன் மகளின் இசைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்று எதிர்ப்பார்ப்புடனேயே படம் பார்க்கச் சென்ற என்னை நடு மண்டையில் "நச்"சென்று அடித்திருக்கிறார் கமல்.
படத்தில் ஹீரோ என்று யாரும் இல்லை. லீட் ரோலில் கமல் + மோகன்லால். மோகன்லாலுடன் தொடங்கும் படம் அவருடனே முடிகிறது. கமலுக்கு ஒரே கெட்டப். எந்த இடத்திலும் யாரும் ஓவர் ஆக்ட் செய்யவில்லை. தேவை இல்லாத வசனங்கள் இல்லை, படத்தின் கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு ஷாட் கூட இல்லை. எல்லாமே "ஜஸ்ட் ரைட்".... எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மட்டுமே, கூடவும் இல்லை, குறைவும் இல்லை.
தெளிவான கதை, அதை முழு வேகத்தில் நகர்த்தும் திரைக்கதை, தனித்துத் தெரியாமல் கதையின் ஓட்டத்திற்கு துணைபுரியும் இசை, அற்புதமான கேமிரா, அந்தந்த கேரக்டர்களில் அச்சாக பொருந்தும் நடிக நடிகைகள், வார்த்தைக்கு வார்த்தை பின்னி எடுக்கும் இயல்பான வசனங்கள், நிஜம் என்று நம்ப வைக்கும் செட்கள் என்று பட்டாசு கிளப்பி இருக்கிறார்கள்.
படம் பார்த்து இவ்வளவு நேரமாகியும் இது தமிழ்ப்படம், கமல் படம் என்பதை நம்ப முடியாமல் இருக்கிறேன். ஹேட்ஸ் ஆஃப் டு யூ கமல்..
******************
பின்குறிப்பு 1: இவ்வளவு அற்புதமான படத்தின் இரண்டு பெரிய சறுக்கல்கள். ஒன்று சென்னையில் நடக்கும் கதை, ஆனால் சென்னையில் எடுக்கப்படவில்லை, காரணத்தை கமல் மட்டுமே சொல்ல முடியும்.
சென்னையில் எடுத்திருந்தால் படம் இன்னமும் ஆதன்டிக்காக இருந்திருக்கும். படம் பார்க்கும் போது என் தங்கமணிக்கும் எனக்கும் நடந்த உரையாடல்:
தங்கமணி: ஏங்க, கமல் அஞ்சு பாமும் சென்னையிலதானே வெச்சதா சொல்றாரு...
நான்: ஆமா.. ஏன் கேக்குற?
தங்கமணி: அப்புறமா ஏன் போலீஸ் போய் ஹைதராபாத்ல இருக்குற ப்ரசாத்ஸ் மல்டிப்ளக்ஸ்ல பாமை தேடுறாங்க?
நான்: ஙே...
மற்றொரு விசயம், படத்தின் ட்விஸ்டே பாம் வைப்பவரை முதலில் தீவிரவாதியாக படம் பார்க்கவர்கள் நினைக்க அதை முடிவில் மாற்றுவதுதான். ஆனால் கமல் அந்த பாத்திரத்தை செய்வதால் "நிச்சயமா இதுக்கு எதுனா நியாயமான காரணம் இருக்கும்" என்று நாம் நம்புகிறோம், அதன்படியே நடக்கிறது. ஒருவேளை மோகன்லாலும் கமலும் கதாபாத்திரங்களை மாற்றிச் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?
பின்குறிப்பு 2 : சாதரணமாக நான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை ('கொய்யால, முதல்ல நீ பதிவே எழுதுறதில்ல, அப்படி எழுதுனாத்தானே என்னத்தை எழுதுறன்னு கவலைப்படுறதுக்கு' என்று கத்தும் கார்க்கி, ஆதி, கேபிள், பரிசல் வகையறாக்கள் அமைதி கொள்க). ஆனால் இந்தப் படம் பார்த்து இன்னமும் பிரமிப்பு நீங்காமல் யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இந்தப் பதிவு.

Subscribe to:
Posts (Atom)