(சரோஜ் நாராயண்சாமி ஸ்டைலில் படிக்கவும்)
நேற்று 6.8.2008 புதன்கிழமை மாலை காந்தி சிலை அருகில் டிபிசிடி அவர்கள் சென்னைப் பதிவர்களை சந்தித்துள்ளார். அப்போது சில திடுக்கிடும் நிகழ்வுகள் நடந்ததாக தெரியவந்துள்ளது.
டிபிசிடியை அனைவரும் வரவேற்று பேசியபின், புதிய பதிவர் ஒருவர் அவரிடம் "உங்க சைட்ல புதசெவின்னு போட்டிருக்கீங்களே! அப்படின்னா என்னா?
புரியலயே
தயவு
செஞ்சி
விளக்குங்க!!" என்று கேட்டு தனது செவுளில் பொளேர் என்று அடி வாங்கியதாகத் தெரிகிறது. அந்த பதிவர் "அப்படி நான் என்ன கேட்டுட்டேன்னு இவரு இப்படி அடிக்கிறாரு? நான் இனிமே பதிவே எழுத மாட்டான்டா!!" என்று புலம்பியவாறு அந்த இடத்தை விட்டு அகன்றுள்ளார். இது குறித்து நமது நிருபரிடம் பேசிய டிபிசிடி தமிழ் வலையுலகில் ஒரு மொக்கை பதிவர் குறைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
அங்கிருந்த லக்கிலுக்கிடம் பிளீச்சிங் பவுடர் என்ற பதிவர் லக்கிலுக் தனது பின்னூட்டங்களை, முக்கியமாக கலைஞரை திட்டும் பின்னூட்டங்களை ஏன் வெளியிடுவதில்லை என்று கேட்டுள்ளார். தனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 100 பின்னூட்டங்களாவது வருவதாகவும் அதில் ஒரு சிலது இப்படி தவறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் லக்கி தெரிவிக்க அதை ஒத்துக்கொள்ளாத பி.ப மேலும் ஏதோ கேட்க, கடுப்பான லக்கி "அதுதான் ஜெயலலிதாவ திட்டுறதுக்கு உடன்பிறப்பும், கருணாநிதிய திட்ட அதிமுககாரங்களும் சைட் வெச்சிருக்காங்கள்ள.. அங்க போய் திட்டுங்கடா.. என்னை விடுங்கடா.." என்று காட்டுக்கத்தல் கத்தியுள்ளார்.
அவரது கத்தலைக் கேட்டு அந்த பகுதியிலிருந்த அனைவரும் (சிலையாக இருந்த காந்தி உட்பட) லக்கியின் பக்கம் திரும்பிப் பார்த்துள்ளனர். இன்று காலையில் காந்தி சிலை ஏன் தலையை திருப்பிக் கொண்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருப்பது கூடுதல் செய்தியாகும்.
இதற்கிடையே அங்கு வந்த பைத்தியக்காரன் "நான் உன்னைக் கொலை பண்ணப்போறேன்டா" என்று கத்தியவாறே வேகமாக பாலபாரதியின் மீது பாய்ந்து அவருக்கு கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்துள்ளார். இதை சிறிதும் எதிர்பார்க்காத பாபா உடனியாக மயக்கம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த பதிவர்கள் அவருக்கு முதலுதவி செய்து 10 நிமிடம் கழித்து அவரை மயக்கம் தெளிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய பைத்தியக்காரன், தான் மூன்று நாட்களுக்கு முன்பே பல் விளக்கியதாகவும், ஏன் பாபா மயக்கமானார் என்பது தனக்குப் புரியவில்லை எனவும் தெரிவித்தார். அதிர்ச்சியிலிருந்து மீண்ட பதிவுலக சூப்பர் ஸ்டார் பாலபாரதி, தான் எழுதிய, எழுதப்போகும் எந்த புத்தகத்தையும் இனி யாருக்கும் ஓசியில் தரப்போவதில்லை என்றும் தான் இந்த சம்பவத்திலிருந்து ஒரு நல்ல பாடம் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
அப்போது அங்கு வந்த அதிஷாவிடம் டிபிசிடி, நீங்க ஏன் தலையில ஸ்கார்ப் கட்டியிருக்கீங்க? என்று கேட்க, அதற்கு அவர் கவலையுடன் "வண்டி ஓட்டுறப்ப இருக்குற நாலு முடியும் பறந்துடக் கூடாதுல்ல?" என்று பதில் அளித்துள்ளார். இதைக் கேட்ட அனைவரும் 'கொல்' என சிரிக்க அதிர்ச்சியான அதிஷா, நான் உடனே தற்கொலை பண்ணிக்கப் போறேன் என்று கூறியவாறே லைட் ஹவுஸ் மீது ஏறியுள்ளார்.
ஆஹா.. பதிவு போட சூப்பர் மேட்டர் கிடைச்சிடிச்சிடா என்றவாறே கீழே கூடிய பதிவர்கள் எவ்வளவு கேட்டும் கீழே இறங்காத அதிஷா, அந்த பக்கம் காற்று வாங்க வந்த பத்து பத்து சோனாவை ஏரியல் வியூவில் பார்த்து விட்ட ஜொள்ளில் தானே வழுக்கி படிக்கட்டு வழியாக கீழே வந்து சேர்ந்துள்ளார்.
அவர் பாதுகாப்பாக கீழே வந்ததை சற்றும் எதிர்ப்பாக்காத பதிவர்கள், ஒரு சூடான பதிவு மிஸ்ஸான சோகத்தை காண்டு கஜேந்திரனை பார்த்து தணித்துக் கொள்ள வேளச்சேரி பக்கமாக வண்டிகளை கிளப்பிக் கொண்டு போனதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
******
ஹி...ஹி... நேத்து காந்தி சிலை பக்கமா போக முடியல.. அதனால அங்க என்ன நடந்திருக்கும்னு கற்பனையில யோசிச்சதுல..