Sunday, August 10, 2008

சென்னைப் பதிவர் சந்திப்பு 10.ஆகஸ்ட்.2008 (படங்களுடன்)


நாள்: ஆகஸ்ட் 10, 2008 ஞாயிற்றுக்கிழமை

இடம்: சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை பின்புறம், மரத்தடி மற்றும் டீக்கடை

நேரில் சிறப்பித்த பதிவர்கள்: அதிஷா, ஜிங்காரோ, பாலபாரதி, லக்கிலுக், டோண்டு ராகவன், வெண்பூ, ரமேஷ் வைத்யா, கடலையூர் செல்வம், முரளி கண்ணன், டாக்டர் புருனோ

போனில் சிறப்பித்தவர்கள்: வால்பையன், பரிசல்காரன்

எதிர்பாராத வருகை: மழை (பதிவர் இல்லை, நிஜ மழைதான்)

நடந்த நிகழ்வுகளும் போடப்பட்ட மொக்கைகளும்:
1. பதிவர்களின் வருகைக்காக காத்திருத்தல்
2. பதிவர்களின் வருகைக்காக காத்திருத்தல்
3. பதிவர்களின் வருகைக்காக காத்திருத்தல்

4. புதிய பதிவர்கள் அறிமுகம்
5. பாலபாரதிக்கு வாழ்த்துக்கள்
6. முரளிகண்ணன் வீட்டில் சொன்ன காரணம் குறித்த விளக்கம்
7. மழைக்கு மரத்தடி ஒதுங்கல்
8. பாலபாரதியின் புத்தகம் குறித்த விவாதம்
9. அதிஷா ஸ்பான்சரில் குல்பி ஐஸ்
10. வலைப்பதிவு மூலம் தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது எப்படி என்பது பற்றிய லக்கிலுக்கின் பேச்சு
11. தமிழ் வலைப்பதிவுலகின் வரலாறு குறித்து டோண்டு, புருனோ, லக்கிலுக் மற்றும் பாலபாரதியின் உரை
12. டோண்டு ராகவன் ஸ்பான்சரில் டீ மற்றும் பிஸ்கட்
13. விகடனின் புதிய வடிவம் குறித்த வருத்தங்கள்
14. நன்றி நவிலல்

பதிவர் சந்திப்புக்கு வந்த அனைவருக்கும் நன்றிகள். புகைப்படங்கள் கீழே...

24 comments:

said...

பதிவர் சந்திப்பு நிகழ்வு என்பதுடன்
அதை நகைச்சுவை என்று (உண்மையை) கூறிவிட்டீர்களே :) :)

சந்திப்பு குறித்த என் இடுகை இங்கு உள்ளது

said...

:-))))))

1. பதிவர்களின் வருகைக்காக காத்திருத்தல்
2. பதிவர்களின் வருகைக்காக காத்திருத்தல்
3. பதிவர்களின் வருகைக்காக காத்திருத்தல்

said...

படத்துல இருக்க்றது யார் யாருன்னு சொல்லுங்கப்பூ...

said...

இந்தப் பதினாலு தலைப்புலயும் நாளைலேர்ந்து எழுதுவீங்களா பார்ட்னர்?

said...

கடைசி ப்[அடத்துல ஒருத்தர் சிரிக்கறதப் பார்த்தாலே, என்ன நிலைமை ஆச்சுன்னு புரியுது!

said...

மொத படத்துல இருக்கறவரு குச்சியோட வெரட்டீட்டாரா? அதுனாலதான் வேற பக்கம் ஒதுங்கினீங்கன்னு கேள்விப்பட்டேன்!

said...

படத்துல இருக்கறவங்களை முடிஞ்சவரைக்கும் சொல்றேன்.. கரெக்டான்னு சொல்லுங்க..

1. மகாத்மா காந்தி
2. அதிஷா, ஜிங்காரோ ஜமீன்
3. டோண்டூ
4. டோண்டூ, லக்கிலுக், யெஸ்.பாலபாரதி, அல்டிமேட் ஸ்டார் அஜீத்
5. ரமேஷ் வைத்யா (என்னா ஒரு ஆங்கிள்!! பாவம்யா மனுஷன்!)
6. முரளிகண்ணன்
7. பாலா, அதிஷா, புரூனோ, ????

said...

போட்டோல இருக்கிறது யாருன்னு சொல்லுங்க வெண்பூ.

உங்கள் முகத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்..

said...

தனியா எவ்ளோ நேரம்தான் பேசிட்டிருக்கறது. எனக்கு பயமாயிருக்கு. கிளம்பறேன்!

said...

@ வழிப்போக்கன்

சில க்ளூ தர்றேன்.. பாருங்க..

வெண்பூ போட்டிருப்பது சட்டை அல்ல.

அது கருப்பு வண்ணம் அல்ல.

முழுக்கையும் அல்ல.

கண்டுபிடிச்சாச்சா?

said...

நாலாவது போட்டோ..தோளில் ஒரு பேக். சரியா ?

(கடைசி போட்டோல ஒருத்தர் இருக்காரே.ஆனா உங்க டிஸ்ப்லே இமேஜிற்கு நாலாவதுதான் சரின்னு தோணுது)

said...

ஏனுங்கோ போட்டோ போட்டிட்டு செவ‌னேன்னு போனா என்னா அர்த்த‌ம். யாருனு நாங்க‌ தெரிஞ்சிக்க வேண்டாமா.பேரை போடாட்டி எப்படியாம்?


இப்ப‌டிக்கு
புதிய‌ ப‌திவ‌ர்க‌ள் சார்பாக‌

said...

கரெக்ட் வழிப்போக்கன்.

(கடைசி போட்டோல 2வதா இருக்கறவரை சொல்றீங்கன்னு நெனைக்கறேன். பாக்கி எல்லாருமே ஷர்ட்தான். அது அதிஷா. 2வது ஃபோட்டோலயே இருக்காரு. ஃபுல்கையை சுருட்டீருக்காருன்னு நெனைக்கறேன்!)

Anonymous said...

// karikalan said...

ஏனுங்கோ போட்டோ போட்டிட்டு செவ‌னேன்னு போனா என்னா அர்த்த‌ம். யாருனு நாங்க‌ தெரிஞ்சிக்க வேண்டாமா.பேரை போடாட்டி எப்படியாம்?


இப்ப‌டிக்கு
புதிய‌ ப‌திவ‌ர்க‌ள் சார்பாக‌/////

எனது வேண்டுகோளும் இதுவே.
சுபாஷ்

said...

என்னங்க பரிசல்..

இருக்கீங்களா ??

ஆட்டத்த ஆரம்பிப்போமா ?

said...

ஏங்க, இதன பேரு கேட்குறோம், கொஞ்சம் போட்டோ பக்கத்துல பேரு போடுங்க...:)

said...

short and sweet. ஆனாலும் உங்களுடைய போன பதிவு தான் சூப்பர்

said...

படம் போட்டு பாகங்களைக் குறிக்க வேண்டாம் - கு.ப பேராவது போடலாமில்ல???????

said...

//ச்சின்னப் பையன் said...
படம் போட்டு பாகங்களைக் குறிக்க வேண்டாம் - கு.ப பேராவது போடலாமில்ல???????//

:-))))))))))

said...

//7. பாலா, அதிஷா, புரூனோ, ????//

???? --> டோண்டு ராகவன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

/dondu(#11168674346665545885) said...

//7. பாலா, அதிஷா, புரூனோ, ????//

???? --> டோண்டு ராகவன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

ஐயா.. அது நிங்க அல்லன்னு நெனைக்கறேன். ஓரத்துல இருக்கறது வேணா நீங்களா இருக்கலாம். கடைசி படத்துல கேமராவைப் பார்த்துட்டு சிரித்தபடி இருப்பவர் யார்??

said...

\\
ஐயா.. அது நிங்க அல்லன்னு நெனைக்கறேன். ஓரத்துல இருக்கறது வேணா நீங்களா இருக்கலாம். கடைசி படத்துல கேமராவைப் பார்த்துட்டு சிரித்தபடி இருப்பவர் யார்??

\\

அவர்தாங்க கடலையூர் செல்வம்

said...

ஏகப்பட்ட ஆணிகளின் மேல் அமர்ந்திருப்பதால் பதில் பின்னூட்டமிட முடியவில்லை. கலந்து கொண்ட‌ பதிவர்களின் வேண்டுகோளுக்கிணங்கதான் படங்களின் பெயர்கள் தரப்படவில்லை. :(

இருந்தாலும் பெயர்களை பரிசலும் அதிஷாவும் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். சிறு தவறு. நான்காவது படத்தில் பெரும்பதிவர்களுடன் இருப்பது அல்டிமேட் ஸ்டார் அஜீத் இல்லை ஆதர்ஷ் அப்பா வெண்பூ... :)))

said...

ஒண்ணும் களைகட்டுன மாதிரி தெரியலையே.! அடுத்த முறை நான் வருவேனில்லை பாத்துக்கலாம்.. (கொஞ்சம் காதைக்கொடுங்க.. சீனியர்களை கழட்டிவுட்டுறலாம் என்ன.!)