Monday, October 8, 2012

ஹிஸ் நேம் ஈஸ் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட்

இந்தியர்களுக்கு நவம்பர் மத்தியில் தீபாவளி என்றால் உலகெங்கும் இருக்கும் ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு நவம்பர் இரண்டாம் தேதியே தீபாவளி அட்வான்ஸாக வந்துவிடுகிறது.

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு, பின் படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, அதன் பின் மீண்டும் துவங்கப்பட்டு நவம்பர் 2ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பாண்டின் அடுத்த படமான “ஸ்கைஃபால்”ஐ ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.

பாண்ட் மீது நடக்கும் கொலைமுயற்சி, அவர் இறந்துவிட்டதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது அவர் மீண்டு வருவது என்று கதையின் ப்ரீல்யூடை ட்ரெய்லரில் காட்டி எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறார்கள். லண்டன் ஒலிம்பிக் துவக்க விழாவில் இங்கிலாந்து ராணியை பாண்ட் (டேனியல் க்ரைக்) அழைத்து வருவது போல் காட்டியது இந்த படத்திற்கான அட்டகாசமான விளம்பரம்.

இதன் அடுத்த கட்டமாக, இங்கிலாந்தின் புகழ்பெற்ற பாடகி Adele பாடியுள்ள Skyfall தீம் பாடல் வெளிவந்துள்ளது. வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் படங்களின் டைட்டில் பாடல்களை நினைவுபடுத்தும் அதேநேரம் நம் காதுகளுடன் மனதையும் குளிர்விக்கும் குரலில் அசத்தியிருக்கியிறார். யூ ட்யூபில் அதன் வரிகளுடன் கேட்டு மகிழுங்கள்.


*******

Friday, October 5, 2012

ராம்னி Vs ஒபாமா : அருமையான நேருக்கு நேர்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடக்க இருப்பதை இந்நேரம் அறிந்திருப்பீர்கள். கடந்த ஒன்றரை வருடங்களாக நடந்து வந்த பிரச்சாரம் கடந்த மாதத்தில் நடந்த கட்சிகளின் மாநாடுகள் மூலம் சூடு பிடித்தது.

 நம் ஊரைப் போல, கட்சியோட தலைவர்தான் நிரந்தரமா முதலமைச்சர் வேட்பாளர், எத்தனை தடவை என்றாலும் அவர்தான் முதலமைச்சர் / பிரதமர். அவரோட நெருங்கிய சொந்தக்காரர்தான் அடுத்த இடம் என்பதெல்லாம் இங்கே செல்லுபடி ஆவதில்லை. இரண்டே கட்சிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் அரசியல் களத்தில் இரு கட்சிகளில் இருந்தும் முதல் படியாக கட்சியின் வேட்பாளர் ஆவதற்கு கடும் போட்டி நடக்கிறது.

டெமாக்ரட்ஸ் கட்சிக்கு பெரிய பிரச்சினை இல்லை. ஏற்கனவே அதிபராக இருக்கும் ஒபாமா சுலபமாக கட்சியின் வேட்பாளர் ஆகிவிட்டார். இங்கே ஒருவர் இருமுறைதான் அதிபர் ஆக முடியும் என்பது கூடுதல் தகவல். ரிபப்ளிகன் கட்சியில் கடும் போட்டி. போட்டி போட்ட ஏழெட்டு பேரில் மாஸ்ஸூட்டஸ் கவர்னராக பணியாற்றிய மிட் ராம்னி முண்ணனிக்கு வந்து கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கடந்த மாத மாநாட்டில் அறிவிக்கப்பட்டு விட்டார்.

என்னதான் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருந்தாலும், பொருளாதாரம் அடி வாங்கி இருந்தாலும் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை ராம்னியை விட ஒபாமா பல புள்ளிகள் முண்ணனியிலேயே இருந்தார். டெமாக்ரடிக் கட்சி மாநாட்டில் ஒபாமாவை ஆதரித்து அவரது மனைவி மிஷேல் பேசிய பேச்சும், முன்னாள் டெமாக்ட்ரடிக் அதிபர் பில் கிளிண்டனின் பேச்சும் அவருக்கு ஒரு சிறப்பான இடத்தை இந்த போட்டியில் பெற்றுத்தந்தது என்று உறுதியாக கூற முடியும்.

அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம்:
இந்த நிலையில்தான் கடந்த அக்டோபர் 2ம் தேதி முதல் ”பிரசிடென்சியல் டிபேட்” நடந்தது. நம் ஊரில் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு விசயம். அதிபர் தேர்தலில் போட்டியிடும் இருவரும் ஒரு பெரிய அரங்கில் மக்கள் முன்னிலையில் நேருக்கு நேர் விவாதம் நடத்தும் நிகழ்ச்சி. தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு என்பதால் சுமார் அறுபது லட்சம் பேர் நேரடியாக பார்க்க வாய்ப்பு இருந்தது.

ஏற்கனவே நான்கு ஆண்டுகள் ஓரளவு சுமாராக ஆட்சி செய்தது, ராம்னி தனது பிரச்சாரத்தின் இடையில் தன் ஆதரவாளர்களுடன் பேசுகையில் அரசு உதவி பெறுபவர்களை மோசமாக பேசியதன் வீடியோ வெளியானது, பெரு நிறுவனங்களுக்கு ராம்னி ஆதரவானவர் என்ற பொது கருத்து, ஒபாமாகேர் எனப்படும் அனைத்து மக்களுக்கான மெடிக்கல் இன்ஸ்யூரன்ஸ் கொண்டு வந்தது என்று அனைத்தும் ஒபாமாவிற்கு ஆதரவாகவே இருந்தன. வாத பிரதிவாதத்தில் சிறந்தவராக அறியப்பட்ட ஒபாமா சுலபமாக ராம்னியை நசுக்கி விடுவார், ஒபாமாவின் வெற்றி 100% இந்த விவாதத்தில் உறுதிப்படுத்தப்படும் என்பதே பரவலான பேச்சாக இருந்தது.

நடந்தது என்ன? டென்வர் பல்கலைக்கழக அரங்கில் விவாதம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள் மட்டுமே நேரடியாக அரங்கில் அமர்ந்து பார்க்க முடியும். பத்திரிக்கையாளர் ஒருவர், இந்த விவாதத்தை வழிநடத்தினார். விவாதத்தில் பங்குபெறும் இரு வேட்பாளார்கள் மற்றும் நடத்துனர் தவிர அரங்கில் இருக்கும் யாரும், இந்த 90 நிமிட விவாதத்தின் போது எதுவும் பேசவோ, கைதட்டவோ கூடாது என்று கடுமையான விதிமுறைகள். 

விவாதத்தை 6 பாகங்களாக பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கும் 15 நிமிடங்கள் ஒதுக்கி, ஒவ்வொரு ஆளும் பேச ஆளுக்கு இரண்டு நிமிடம், அதன் பின் ஒருவர் சொல்வதை மற்றவர் மறுத்து / விளக்கி கேள்விகள் கேட்பது என்று அருமையான வழிமுறைகளுடன் விவாதம் ஆரம்பித்தது.

பெரும்பாலோனோர் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக, ஒபாமா இந்த விவாதத்தில் சொதப்போ சொதப்பு என்று சொதப்பினார். எந்த விசயத்தையும் தெளிவாக சுருக்கமாக எண்ணிக்கைகள் அடிப்படையில் சொல்ல அவரால முடியவே இல்லை. மாறாக, ராம்னி ஒவ்வொரு தலைப்பிலும் பாயிண்ட் பை பாயிண்டாக கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்ய தவறினார்கள், அதை எப்படி சரி செய்வது, அதற்கு தன்னிடம் இருக்கும் திட்டங்கள் என்ன, ஒபாமா சொல்லும் திட்டங்களில் பிரச்சினைகள் என்ன என்று தெள்ளத் தெளிவாக எந்த தயக்கமும் இல்லாமல் (சரியோ தவறோ) நெம்பர்களை குறிப்பிட்டு விளாசி விட்டார்.

ஒட்டுமொத்தமாக விவாதம் முடிந்த போது, ராம்னியை விட ஒபாமா ஐந்து நிமிடங்கள் அதிகமாக பேசியிருந்தாலும் விவாதத்தின் வெற்றியாளர் சந்தேகமே இன்றி ராம்னிதான். மிகச் சிறந்த முறையில் அவர் தயாராகி வந்திருந்ததையும், ஒபாமா ஏனோதானோ என்று தயாராகி இருந்ததையும் நன்றாக உணர முடிந்தது.

இந்த விவாத வெற்றியின் மூலமாக மட்டுமே ராம்னி வெற்றி பெறுவது சாத்தியமல்ல என்பதையும் ராம்னியும் உணர்ந்தே இருப்பார். ஆனால் நேருக்கு நேர் நிற்கும்போது, தன் போட்டியாளரை விட தான் சிறந்த லீடர் என்பதை நிச்சயம் இந்த விவாதத்தில் உணர்த்தியிருக்கிறார்.

இன்னும் இரு விவாதங்கள் இருக்கின்றன. ஒருவேளை ஒபாமா விழித்துக்கொள்ளாமல் இதே போன்று ஏனோதானோ என்று அடுத்த இரு விவாதங்களையும் எதிர்கொள்வாரேயானால் ராம்னி சுலபமாக வெள்ளை மாளிகையில் குடியேறி விட முடியும். அதிலும் இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்காவிற்கு எதிராக கடும் விளைவுகள் ஏற்பட்டு வரும் வேளையில் அடுத்த விவாதம் “வெளியுறவு கொள்கைகள்” குறித்து என்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் நான்கு ஆண்டுகள் அமெரிக்காவையே திறமையாக ஆண்ட ஒபாமா அப்படி ஒன்றும் சுலபமாக இதை விட்டுவிடுவார் என்று தோன்றவில்லை.

மொத்தத்தில், இந்த முதல் விவாதத்தின் மூலம் ஒபாமா மறுமுறை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சுகமான பயணத்தில் ஒரு எதிர்பாராத “ஸ்பீட் ப்ரேக்கரை” ராம்னி போட்டிருக்கிறார் என்றால் அது மிகையில்லை.

பி.கு: முழு விவாதமும் யூ ட்யூபில் இருக்கிறது. அதன் லிங்க் இங்கே.
http://www.youtube.com/politics?feature=etp-pv-ype-3bff3fd3f0

Thursday, March 1, 2012

2012ல் நான் எதிர்பார்க்கும் ஆங்கில‌ ப‌ட‌ங்க‌ள்

ஆங்கில‌ திரைப்ப‌ட‌ங்க‌ளை ரொம்ப‌ எதிர்பார்த்து காத்திருந்து பார்க்கிற‌ ப‌ழ‌க்க‌ம் எல்லாம் இல்லை. ஆனால் ஏற்க‌ன‌வே நான் பார்த்த‌தில் என்னைக் க‌வ‌ர்ந்த‌, வெற்றிய‌டைஞ்ச‌ திரைப்ப‌ட‌ங்க‌ளோட அடுத்த‌ பாக‌ங்க‌ள் வ‌ர்ற‌ப்ப‌ என்னோட‌ எதிர்பார்ப்பு அதிக‌மாகுற‌து ஆச்ச‌ர்ய‌ம் இல்ல‌. அந்த‌ மாதிரி இந்த‌ வ‌ருச‌ம் நான் ஆவ‌லோட‌ எதிர்பார்க்குற‌ சில‌ ப‌ட‌ங்க‌ள் இங்கே. இது உங்க‌ளோட‌ லிஸ்டோட‌ ஒத்துப்போனா நீங்க‌ளும் என் இன‌ம்தான் :)

ஸ்பைட‌ர் மேன் 4 (The Amazing Spider-Man)
ஸ்பைட‌ர்மேன் சீரிஸ் ப‌ட‌ங்க‌ளைப் ப‌த்தி சொல்ல‌வே வேணாம். குழ‌ந்தைக‌ளைக் க‌வ‌ர்ந்த‌ காமிக்ஸ் ஹீரோவா இருந்தாலும் எல்லா வ‌ய‌தின‌ரையும் ஸ்பைட‌ர்மேன் சீரிஸோட‌ முத‌ல் மூணு பாக‌ங்க‌ள் க‌வ‌ர்ந்த‌து. ஹீரோ டோபே & ஹீரோயின் கிறிஸ்ட‌ன் ட‌ன்ஸ்ட் (ம்ம்ம்) ரெண்டு பேரோட‌ கெமிஸ்ட்ரி அட்ட‌காச‌மா இருந்த‌தும் இந்த‌ பாக‌ங்க‌ளின் வெற்றிக்கு கார‌ண‌ம். இந்த‌ நாலாவ‌து பாக‌த்துல‌ இந்த‌ சீரிஸை ரீபூட் அடிக்குறாங்க‌, அதாவ‌து ம‌றுப‌டியும் ஆர‌ம்ப‌த்துலேர்ந்து ஸ்பைட‌ர் மேன் ஏன் அப்ப‌டி ஆகுறான்ற‌துல‌ இருந்து ஆர‌ம்பிக்க‌ப்போறாங்க‌. முற்றிலும் புது ந‌டிக‌ர், ந‌டிகைக‌ள். உண்மையை சொல்ல‌ணும்னா இந்த‌ பாக‌த்தோட‌ ட்ரெய்ல‌ர் என‌க்கு ரொம்ப ஏமாற்ற‌மா இருந்த‌து. இருந்தாலும் இந்த‌ ப‌ட‌த்தை நான் எதிர்பார்த்துட்டுதான் இருக்கேன்

The Amazing Spider-Man
Release Date : July 3, 2012
Released in - 3D and IMAX 3D
http://en.wikipedia.org/wiki/The_Amazing_Spider-Man_%282012_film%29

பேட்மேன் : தி டார்க் நைட் ரைஸைஸ் (Batman - The Dark Knight Rises)
இதுவும் இன்னொரு சூப்ப‌ர் ஹீரோ ப‌ட‌ம்தான். இன்செப்ஷ‌ன் ப‌ட‌ம் மூல‌மா பெரும்பாலான‌ த‌மிழக‌ ர‌சிக‌ர்க‌ளிட‌ம் பிர‌ப‌ல‌மான‌ டைர‌க்ட‌ர் கிறிஸ்டோஃப‌ர் நோல‌னோட‌ அடுத்த‌ பட‌ம் + ஏற்க‌ன‌வே பெரிய‌ அள‌வில் வெற்றி பெற்ற‌ இரு பாக‌ங்க‌ளின் அடுத்த‌ & கடைசி பாக‌ம்ன்ற‌தா ஒட்டுமொத்த‌மாவே இந்த‌ ப‌ட‌த்துக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கு. இர‌ண்டாவ‌து பாக‌த்தோட‌ முடிவில் ம‌க்க‌ளோட‌ ந‌ம்பிக்கையை சிதைக்காம‌ இருக்க‌ணும்ன்ற‌துக்காக‌ கெட்ட‌ பேரோட‌ காணாம‌ போற‌ பேட்மேன் (அ) டார்க் நைட் மீண்டும் வெளியில் வ‌ந்து வில்ல‌ன்க‌ளை அழிக்குற‌ க‌தை.

இதுவ‌ரைக்கும் இல்லாத‌ வ‌கையில் ப‌ட‌த்தின் பெரும்ப‌குதி, ஏற‌த்தாழ‌ 55 நிமிட‌ அள‌வுக்கு, நேர‌டியா ஐமேக்ஸ் கேமிராவில‌யே ப‌ட‌மாக்கியிருக்காங்க‌. மிஷ‌ன் இம்பாஸிபிள் ப‌ட‌த்துக்கு போன‌ப்ப‌ இந்த‌ ப‌ட‌த்தோட‌ முத‌ல் 6 நிமிச‌த்தை காட்டுனாங்க‌. ஆகாய‌த்துல‌ ஒரு விமான‌த்துல‌ இருந்து இன்னொரு விமான‌த்துக்கு ஆட்க‌ள் க‌யிறு மூல‌மா ஏற‌ங்குற‌ ஆக்ச‌ன் சீக்வ‌ன்ஸ். ப‌ட‌ம் பாத்துட்டு இருக்குற‌ ந‌ம்ம‌ உக்காந்திருக்குற‌ சேர் ஆகாய‌த்துல‌ ப‌ற‌ந்த‌ மாதிரி உண‌ர்வு. அதுக்க‌ப்புற‌ம் இந்த‌ ப‌ட‌த்துக்கான‌ எதிர்பார்ப்பு எகிறிடுச்சி.

The Dark Knight Rises
Release Date : July 20, 2012
Released in - Regular & IMAX screens
http://en.wikipedia.org/wiki/The_Dark_Knight_Rises

அமெரிக்க‌ன் ரீயூனிய‌ன்
அமெரிக்க‌ன் பை ப‌ட‌ங்க‌ளை புடிக்க‌லைன்னு யாரும் சொல்ல‌வே முடியாது. டீன் காமெடின்னு வ‌கைப்ப‌டுத்த‌ப்ப‌டுற‌ ப‌ட‌ங்க‌ள்ல‌ டாப் ஸ்பாட் இந்த‌ சீரிஸ்க்கு ச‌ந்தேக‌மில்லாம‌ குடுக்க‌லாம். முத‌ல் மூணு பார்ட்டுக்கு அப்புற‌ம் வ‌ந்த‌ நாலு பார்ட்டும் டைர‌க்ட் டூ டிவிடி. அத‌னால‌ இந்த‌ சீரிஸ்ல‌ பெரிய‌ திரைக்கு வ‌ர்ற‌ நாலாவ‌து பார்ட் அப்ப‌டிங்குற‌தும், முத‌ல் மூணு பார்ட்ல‌ இருந்த‌ அதே ந‌டிக‌ர், ந‌டிகைக‌ள் ம‌றுப‌டியும் இதுல‌யும் ந‌டிக்குற‌தும் ஹைலைட்ஸ்.

காலேஜ் ப‌டிக்குற‌ ப‌ச‌ங்க‌ பொண்ணுங்க‌ளை க‌ரெக்ட் ப‌ண்ண‌வும் செக்ஸ்க்காக‌வும் அலையுற‌தையும், அது ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ செலிப்ரேஷ‌ன்ஸ், பார்ட்டின்னு நாம பொறாமைப்ப‌டுற‌ அள‌வுக்கு அமெரிக்க‌ டீனேஜ் ப‌ச‌ங்க‌ளோட‌ வாழ்க்கையை காட்டுன‌ ப‌ட‌ங்க‌ள் இவை. இந்த‌ பாக‌த்துல‌ அதே க்ரூப் ம‌றுப‌டியும் காலேஜ் ரீயூனிய‌னுக்காக‌ ஒண்ணு சேர்ற‌தை க‌தையாக்கி இருக்காங்க‌ போல‌. பாக்க‌லாம், எப்ப‌டி இருக்குன்னு..

American Reunion
Release Date : April 6, 2012
http://en.wikipedia.org/wiki/American_Reunion

ஸ்கைஃபால் (ஜேம்ஸ் பான்ட் 23)
இந்த‌ வ‌ருச‌ம் நான் எதிர்பார்க்குற‌ மிக‌ப்பெரிய‌ ப‌ட‌ம் இது. ஜேம்ஸ் பான்ட்டோட‌ தீவிர‌ ர‌சிகர்க‌ளுக்கு போன‌ வ‌ருச‌ம் பெரிய‌ அதிர்ச்சி, அடுத்த‌ ப‌ட‌ம் ட்ராப் ஆன‌து. அதுக்க‌ப்புற‌ம் நான் இது ப‌த்தி ஃபாலோ ப‌ண்ண‌வே இல்ல‌. ரெண்டு நாள் முன்னால‌ இந்த‌ ப‌திவு எழுத‌லாம்னு தோணின‌ப்ப‌ "என்ன‌த்த‌ எழுதுற‌து, இந்த‌ வ‌ருச‌த்தோட‌ மிக‌ப்பெரிய‌ ஏமாற்ற‌ம் பான்ட் ப‌ட‌ம் இல்லாத‌து"ன்னு ப‌ஞ்ச் வெச்சி முடிக்க‌லாம்னு தோணின‌து. ச‌ரின்னு இது ப‌த்தி எதுக்கும் தேட‌லாமேன்னு தேடின‌ப்ப‌தான் தெரிஞ்ச‌து போன‌ ந‌வ‌ம்ப‌ர்ல‌யே அடுத்த‌ ப‌ட‌ம் அறிவிச்சிட்டாங்க‌ன்னு.

நாலு வ‌ருச‌ம் முன்னால‌ டேனிய‌ல் க்ரைக் ந‌டிச்சி வ‌ந்த‌ ப‌ட‌ம் இந்த‌ சீரிஸோட‌ ரீபூட். முத‌ல்ல‌ ப‌ட‌ம் சுத்த‌மா புடிக்க‌வே இல்லை, ஆனா க‌தை புரிஞ்சிகிட்டு ச‌ப் டைட்டிலோட‌ ப‌ட‌ம் பார்த்த‌ப்ப‌ என்னை ரொம்ப‌ க‌வ‌ர்ந்த‌து. இதுவ‌ரைக்கும் நான் அதிக‌ முறை பார்த்த‌ ப‌ட‌ம்னு கேஸினோ ராய‌லை சொல்ல‌லாம். எத்த‌னை த‌ட‌வை பார்த்தாலும் போர் அடிக்குற‌தில்லை. அடுத்த‌தா வ‌ந்த‌ க்வாண்ட‌ம் ஆஃப் சோல‌ஸ் ஓகேன்ற‌ டைப்தான். இருந்தாலும் இந்த‌ வ‌ருச‌ம் என் எதிர்பார்ப்பு லிஸ்ட்ல‌ இந்த‌ ப‌ட‌த்துக்குதான் முத‌லிட‌ம்னு ச‌ந்தேக‌மே இல்லாம‌ சொல்ல‌ முடியும்.

Skyfall
Release Date : October 26, 2012
Released in - Regular & IMAX screens (IMAX தியேட்ட‌ர்க‌ளில் ரிலீஸ் ஆக‌ப்போகும் முத‌ல் ஜேம்ஸ்பாண்ட் ப‌ட‌ம்)
http://en.wikipedia.org/wiki/Skyfall

Wednesday, February 1, 2012

ச‌ட்ட‌ச‌பை, கிரிக்கெட் : இன்றைய‌ ட்விட்ஸ்

ஜெயுடன் மக்கள் பிரச்சினை குறித்து விகாந்த் ஆக்ரோஷம்.. வட போச்சே, ஸ்டாலின்

தேமுதிக காவலர்களால் வெளியேற்றம், திமுக வெளிநடப்பு... நானும் ரவுடிதான். நானும் ரவுடிதான்

அன்னிக்கு ச‌ண்டை ந‌ட‌ந்த‌ப்ப‌ ஜீப்புக்குள‌ அன்ட்ராய‌ரோட‌ ஒண்டிட்டு இருந்தான்: உ.அ.தா க‌வுண்ட‌ர் ஜெய்க‌ணேஷ் ப‌ற்றி #ச‌ட்ட‌ச‌பை திமுக‌

தென்காசியில‌ ச‌ர‌த்ட்ட‌ சொல்லி ராதிகாவை ஜெயிக்க‌ வெச்சி ச‌ட்ட‌ச‌பைக்கு கூட்டிட்டு வ‌ந்திருக்க‌லாமோ? : ஜெ

ஜெ: இதுக்கு மேல‌யும் என்னால‌ பொறுமையா இருக்க‌ முடியாது, ஒரே வ‌ழி, உட‌னே செ.ஜார்ஜ் கோட்டையில‌ ஒரு டாஸ்மாக் ஆர‌ம்பிங்க‌ :))

க‌ரு: ஏன் த‌ம்பி நெப்போலிய‌னை க‌ட்சிய‌ விட்டு தூக்க‌ சொல்ற‌? ஸ்டா: நேத்து ஒருத்த‌ர் ஆக்ரோஷ‌மா பேச‌ அவ‌ருதான் கார‌ண‌மாமே

இர‌ண்டு முக்கிய‌ செய்திக‌ள்: 1. எலைட் ஒயின்ஷாப் ஆர‌ம்பிப்ப‌தை அர‌சு நிறுத்திவைத்த‌து. 2. ச‌ட்ட‌ச‌பையில் விகாந்த் ஆக்ரோஷ‌ம்

அதிமுக‌ ச‌ர்வாதிகார‌மாக‌ செய‌ல்ப‌டுகிற‌து: க‌ரு... நாம‌தான் செய‌ல்ப‌டுற‌தே இல்லையே, அப்புற‌ம் என்ன‌ க‌வ‌லை? :)

ஸ்டா:இன்னிக்கு நாமளும் ஆக்ரோஷமா பேசணும்..
துரைமுரு:முதல்ல பேசுங்க. அப்புறம் ஆக்ரோஷமெல்லாம்

புள்ளபூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்... விகாந்த் பற்றி ஸ்டாலின்

அச‌ந்து போகும் அள‌விற்கு அறிவிப்புக‌ள்:ஜெ... நாம‌ ஆடிப்போற‌ அள‌வுக்கு கேஸ் போடுற‌தை சொல்றாங்க‌ளோ: ஸ்டாலின்

அழ‌கிரி க‌ட‌வுளாக‌ சித்த‌ரித்து திமுக‌ போஸ்ட‌ர்: க‌ட‌வுளை ந‌ம்புப‌வ‌ன் காட்டுமிராண்டி, நான் சொல்ல‌லைப்பா, பெரியார் சொன்ன‌து:)

பாத்துட‌லாம் நீயா நானான்னு: அவ‌ரைப் பார்த்து இவ‌ர்: ஸ்டாலின் (மக‌ன்), விகாந்த் (ம‌க‌ன்)

"There is a tomorrow: Dhoni"... ச‌னிப‌க‌வான்ட்ட‌ பிள்ளையார் சொன்ன‌ மாதிரி சொல்றாம்பாரு.. கொய்யால‌.. :)

முத‌ல்ல‌ ஆஸி டீம் ம‌ட்டும்தான்மா அடிச்சாங்க‌, அப்புற‌ம் ஃபோனைப் போட்டு ஸ்ரீல‌ங்காவை "வாடா ம‌ச்சான்"ன்னு கூப்பிட்டாங்க‌ : தோனி

***********

To follow @iVenpu