Thursday, October 8, 2009

இணையம் இல்லா எட்டு நாட்களும், கற்பிழந்த மலைகளின் ராணியும்

ஆகஸ்ட் நடுவுல இருந்து செப்டம்பர் வரைக்கும் ஏறத்தாழ ஒரு மாசமாவே நான் வலையுலகில் அதிகம் செயல்படவில்லை. ஏற்கனவே சொன்ன மாதிரி அலுவலகத்தில் வலைப்பூக்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டதால் என்னால் வலையுலகில் பதிவுகளை முழுவதுமாக படிக்கவோ பின்னூட்டமிடவோ முடியவில்லை. அது மட்டுமின்றி செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் ஒரு வாரம் எங்காவது குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம் என்று முடிவு செய்திருந்ததும் காரணம். ஒரு வார விடுமுறைக்கு முன்னால் முடிக்கவேண்டிய பணிகளும், விடுப்பு முடிந்து வந்ததும் சேர்ந்து போன ஆணிகளை பிடுங்கிய வகையிலும் ஏறத்தாழ ஒரு மாதமே ஆகிவிட்டது.

சென்ற வருடம் இதே நேரத்தில் நாங்கள் ஐந்து நாட்கள் கொடைக்கானல் சென்றிருந்தோம். அந்த பயணம் அருமையாக இருந்ததால் இந்த வருடம் அதே போல் ஊட்டி செல்லலாம் என்று முடிவு செய்திருந்தோம். சென்ற வருடம் போலவே, கணிணி, இணையம், அலுவலக வேலைகள் என்று எல்லாவற்றுக்கும் ஒரு வாரம் மொத்தமாக லீவ்.

எனக்கென்னவோ கொடைக்கானலைப் போல் ஊட்டி வசீகரிக்கவில்லை. முதல் காரணம் ஊரே முற்றிலும் வணிகமயமாக்கப்பட்டிருப்பதுதான். எங்கெங்கு திரும்பினாலும் கடைகள், கடைகள், கடைகள். மக்கள் நடமாட்டமும் மிக அதிகம். சீசனே இல்லாத இந்த சமயத்திலே இப்படி என்றால் சீசன் சமயத்தில் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

வெள்ளையன் கண்டுபிடித்து ஆரம்பித்த ஒரு இயற்கையான மலைப்பிரதேசத்தை எந்த அளவுக்கு சீரழிக்க முடியுமோ அந்த அளவுக்கு நாம் சீரழித்து இருக்கிறோம். மிகச்சிறந்த உதாரணம் ஏரி. கூவத்தின் மறுபதிப்புதான் அந்த மலைவாசஸ்தலத்தின் ஏரி. மலைரயில் ஊட்டியைத் தொடும்போதே தெரியும் கழிவுநீர்க் கால்வாயும், நம் நாசியை நிறைக்கும் கெட்ட வாடையும் இந்த முறை எங்கள் தேர்வு தவறு என்று சத்தியம் செய்து சொன்னதாகவே தோன்றியது.

ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து சென்ற மலைரயில் பயணமும் அவ்வளவு இனிதாக இல்லை. கால் வைக்கவே இடம் இல்லாத அளவுக்கு சின்ன இடத்தில் ஐந்து மணிநேரப் பயணம் கொஞ்சம் கடுப்படித்தது. டார்ஜிலுங் மலை ரயில் குறித்து படித்தபோது இதை விட சிறிய ட்ராக்கில் ஓடினாலும் முதல் வகுப்பு என்று தனியாக ஒன்று உண்டு என்பது தெரிந்தது. அதுபோல் எதாவது மாற்றம் செய்தால் சிரமம் இல்லாமல் பயணம் செய்யலாம்.

அதையும் தாண்டி பயணத்தில் கண்ட‌ சில நல்ல விசயங்கள்:
1. சாப்பாடு பிரச்சினையே இல்லை. நாங்கள் சேரிங்கிராஸ் அருகே தங்கியிருந்த ப்ரீதி பேலஸ் ஹோட்டலின் வெஜிடேரியன் ரெஸ்டாரண்ட் அருமை. அதிலும் அங்கே சாப்பிட்ட ஆனியன் ஊத்தப்பம்.....ம்ம்ம்ம்ம்ம்ம். மறக்காமல் முயற்சிக்கவும். அது மட்டும் இல்லாமல் பல தரமான உணவகங்களைக் காணமுடிந்தது. ஒரு சுற்றுலா பிரதேசத்தில் உணவுப் பிரச்சினை இல்லாமல் இருப்பது ஒரு ப்ளஸ் பாய்ண்ட்.
2. ஊட்டியின் க்ளைமேட். அற்புதம், வேறென்ன சொல்ல‌??
3. கொடநாடு வ்யூபாய்ண்ட்: கொஞ்சம் தூரம்தான் என்றாலும் (ஊட்டியில் இருந்து 50 கி.மீ. கோத்தகிரியில் இருந்து சுமார் 20 கி.மீ). மிஸ் பண்ணக்கூடாத இடம். மற்ற வ்யூபாய்ண்ட்கள் போலில்லாமல் தூரத்தில் தெரியும் பரந்து விரிந்த சத்தியமங்கலம் காடுகளும், ஒரு கோடு போல் தெரியும் பவானி ஆறும், தூரத்தே தெரியும் பவானி சாகர் நீர்த்தேக்கமும் முற்றிலும் வித்தியாசமான அனுபவம். கொடநாடு எஸ்டேட்டின் விஸ்தீரணத்தையும் வழியில் பார்க்கமுடிவது ஒரு ப்ளஸ். :)
4. திரும்பும் நாளன்று எதேச்சையாக கோத்தகிரியில் ஏற்பட்ட பதிவர் லதானந்த் அவர்களுடனான சந்திப்பு ஒரு கூடுதல் ஆச்சர்யம்.

21 comments:

Anonymous said...

ஊட்டி ரொம்ப வணிகமயமாகிட்டதா எல்லாரும் சொல்லறாங்க. சின்ன வயசில ஊட்டிக்கு போனது. மறுபடி போக வாய்ப்பே இல்லை.

said...

ஊட்டி மிகவும் பொல்யூட் ஆகிவிட்டது. என் சாய்ஸ் எப்போதுமே கோடைதான்.. அங்கே அவ்வளவு சீக்கிரம் பொல்யூட் செய்ய முடியாதபடியான ஒரு பிரதேச அமைப்பு.

கொடைவியூ பாயிண்ட் மிகவும் அருமையாய் இருக்கும். அந்த 16 கிலோ மீட்டர் ஒத்தை ரோடு.. சூப்பர்ப்

said...

நாந்தான் வேற இடம் போங்கன்னு சொன்னேன்ல.

said...

ரைட்டு.. ஊட்டிக்கு அப்ப நோ.. எதுக்கா? போங்க சகா

said...

ஊட்டியில் கொடைகானலை விட எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட இடங்கள் எல்லாமே வெகுவிரைவில் மாசடைந்தே தீரும்.

என்ன செய்வது?

said...

லதானந்த் பார்த்திங்களா? அவர் எங்கிட்ட சொல்லவேயில்ல

said...

அடிச்சுக்கும் சூட்டுக்கு ஒரு நாலுநாளாவது ஊட்டி போயிட்டுவரலாமுன்னு திட்டம் வச்சுருந்தேன்.

இப்போ..... அங்கேயும் கூவமுன்னா.....

எப்படிங்க நம்ம மக்களுக்குச் சுத்தம் பற்றிய அறிவே இல்லைன்றது ஆச்சரியம்தான் (-:

said...

நம்ம பதிவர்கள்லாம் அடிக்கடி மசினக்குடி போறங்களே... அங்க போயிருக்கலாமோ?

said...

வாங்க சின்ன அம்மணி, நானும் 12 வருசம் கழிச்சி இப்பதான் போனேன். போய் ஏமாந்ததுதான் மிச்சம்.

வாங்க கேபிள்.. அந்த ரோடு நிஜமாவே சூப்பர். அம்மா அடிக்கடி போறதால அந்த ரோடு மட்டும் எப்பவுமே குண்டு குழி இல்லாம பாத்துக்கறாங்கன்னு டிரைவர் சொன்னாரு. எனக்கு ஊட்டியில இருந்து கோத்தகிரி வழியா கீழ வர்ற ரோடு முழுக்கவே புடிச்சிருந்தது.

வாங்க அப்துல்லா.. நீங்க சொன்னத கேட்டிருக்கலாம்னு இப்ப தோணுது :))

கார்க்கி... ஊட்டி எல்லாம் மோசமான சாய்ஸ், நான் பார்த்த வரைக்கும் கொடைக்கானல் ரொம்ப நல்லா செட் ஆகும். வாழ்த்துகள் :))

வாங்க வரதராஜுலு.. கூட்டம் அதிகமா இருக்குன்னாலும் அடிப்படை வசதிகள் சரியா செஞ்சா இவ்வளவு மோசமாகாது. அந்த விஷன் இருக்கணுமே?

said...

வாங்க வால்.. அவர் மறந்திருப்பாரா இருக்கும். ஜஸ்ட் 5 நிமிஷ சந்திப்பு.

வாங்க துளசி டீச்சர்.. குளிர் அடிக்கிறது நல்லா இருக்கு. ஆனா கொடைக்கானல் அளவுக்கு ஊட்டியில இயற்கைய என்ஜாய் பண்ண முடியாது. அங்கேயே இருக்குற ஒரு நண்பரே ஊட்டியில போட்டிங் போகவேணாம், பைக்காரா லேக் நல்லா இருக்குன்னு சொன்னாரு. அது இன்னும் அந்த அளவுக்கு மாசுபடாம இருக்குன்னு சொன்னாரு. கூகுள்ல ஊட்டி ஏரியோட சேட்டிலைட் இமேஜ் பாருங்க டீச்சர், அதோட கண்டிஷன் தெரியும். :(

வாங்க மஹேஷ்.. மசினக்குடி காட்டுக்குள்ள கொஞ்ச தூரம் போகணும். நண்பர்கள் நெறய பேர் இருந்திருந்தா போயிருப்போம். நாங்க மூணு பேர் மட்டும்ன்றதால டிரை பண்ணலை.

said...

கொங்கு மண்டலத்திற்கு வந்து விட்டு எங்களைச் சந்திக்காமல் சென்ற வெண்பூவை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

- அண்ணாச்சி பாசறை

said...

பொதுவாக நீலகிரிக்கு செல்பவர்கள் ஊட்டியை மட்டுமே பார்த்துவிட்டு சென்று விடுகின்றனர். ஊட்டி நகரம் நெரிசல் மிகுந்து வணிக ரீதியினால் நாசமடைந்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஊட்டியை விட்டு அருகிலுள்ள பல கிராமங்களினூடே பயணப்பட்டால் இனிய பல இயற்கை காட்சிகளையும் சுத்தமான காற்றையும் எளிமையான மக்களையும் சந்திக்க முடியும்.

ஆனால் பலருக்கு அது தெரிவதில்லை. வருத்தம் தான்.

ஊட்டியிலிருந்து 34 கிமீட்டரில் இருக்கிறது மஞ்சூர்.

said...

கொடைக்கானலை விட எனக்கு ஊட்டிதான் பிடிக்கும் ஆனால் நான் இப்ப போன போது வந்த கூட்டத்தை பார்த்த போது கொடைக்கானல் எவ்வளவோ மேல்...

said...

வெல்கம் பேக் வெண்பூ...
கொடைக்கானல் தான் பெஸ்ட்...

said...

செல்வேந்திரன், ப்ளானிங் சரியாக செய்யாததால் வந்த பிரச்சினை அது. ரிடர்ன் டிக்கெட்டையும் மேட்டுப்பாளையத்தில் இருந்தே போட்டிருந்தேன். கடைசி நாளில் அதை கோவையில் இருந்து கிளம்புமாறு மாற்றவும் முடியவில்லை. கண்டிப்பாக ஒரு வார இறுதியில் திருப்பூர், கோவைக்கு வருகிறேன்.

said...

வாங்க மஞ்சூர் ராஜா. நீங்கள் சொல்வது நிஜம். ஊட்டி மட்டும்தான் என்னை ஏமாற்றியது. அதை சுற்றியுள்ள இடங்கள் அருமை. முக்கியமாக கோத்தகிரி வழியிலான மேட்டுப்பாளையம் பயணம் அருமையாக இருந்தது. உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

வாங்க ஜாக்கி.. கூட்டம் ரொம்ப அதிகம், கொடைக்கானலில் கூட்டம் கொஞ்சம் குறைவு, அதே நேரம் அது இன்னும் அந்த அளவுக்கு வணிகமயமாகவில்லை.

வாங்க தமிழ்ப்பறவை.. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

said...

ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.html

said...

ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.html

said...

:-))

அப்படியே பங்களா பாத்தீங்களா..?

எஸ்டேட்டானது நடுவிலுள்ள இரண்டு மலைகளையும், ஏரியையும் உள்ளடக்கியதாம்..

ஊட்டியினை தவிர்த்து மற்ற மலை கிராமங்கள் அனைத்தும் அழகு.
ப்ராய்லர் கோழிப்பண்ணை மாதிரியாகிவிட்டது மலைகளின் ராணி.

said...

வாங்க கும்க்கி, வெளியில் இருந்து பார்த்தா பங்களா தெரியலை :(

ஆனால் அந்த எஸ்டேட்டின் விஸ்தீரணம் பிரமிப்பில் ஆழ்த்தியது உண்மை.

//
ப்ராய்லர் கோழிப்பண்ணை மாதிரியாகிவிட்டது மலைகளின் ராணி.
//
சரியா சொன்னீங்க..

said...

ஆமாம் தல ஊட்டி ரொம்ப கேவலமா பண்ணிட்டோம்
எல்லாம் ரியல்எஸ்டேட்காரங்க ம்கிமை
உங்க பயணம் நல்லபடியா அமஞ்சது சந்தோசமே :-))