Tuesday, October 21, 2008

என் 25ம் பதிவு : சைக்கிள் ரேஸ் அனுபவங்கள்

இது என்னோட 25வது பதிவு. முதல்ல இத்தனை நாளா என் பதிவுகளையும் படிச்சி எனக்கு பின்னூட்டம் போட்டு என்னை ஊக்கப்படுத்தின உங்க எல்லாருக்கும் நன்றி. போன ஜீன் மாசம் எழுத ஆரம்பிச்சேன். இந்த அஞ்சு மாசத்துல மொத்தமாவே 25 பதிவுதான்னு சொன்னாலும் உங்க மனசுல நிக்குற மாதிரி எழுதியிருக்கேன்னுதான் நெனைக்கிறேன். அதனால எனக்கு நானே குடுத்துக்குறேன் ஒரு ஷொட்டு, அதேநேரம் பல காரணங்களால நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு நெறய பதிவு போடுறதில்ல, அதுக்கு எனக்கு நானே குடுத்துக்குறேன் ஒரு குட்டு..

இந்த பதிவுல என்ன போடுறதுன்னு ரொம்ப யோசிச்சப்ப, அட அப்படின்னு சொல்லமுடியாட்டாலும் கொஞ்ச நாளா என் மனசை அரிச்சிட்டு இருக்குற ஒரு விசயத்த உங்க கூட பகிர்ந்துக்கலாம்னு நெனச்சேன். அதுதான் இங்க.. (படிச்சிட்டு திட்டாதீங்க)..

****

எங்க ஊர்ல ஐப்பசி மாச வாக்குல மாரியம்மன் பண்டிகை ரொம்ப விமர்சையா கொண்டாடுவோம். அதுக்காக ஒவ்வொரு நாளும் பாட்டு கச்சேரி, பட்டி மன்றம், விளையாட்டு போட்டின்னு களை கட்டும். இப்படிதான் கொஞ்ச வருசத்துக்கு முன்னால எங்க ஊர்ல இருக்குற ஒரு பெரிய மனுசன் சைக்கிள் ரேஸ் ஏற்பாடு பண்ணுனாரு. போட்டியில் கலந்துகிட்டு ஜெயிக்கிறவங்கள அனவுன்ஸ் பண்றதுக்கும் பரிசு குடுக்குறதுக்கும் எங்க ஊர்லயே பெரிய சைக்கிள் கடை வெச்சிருக்குற அண்ணாச்சியை கூப்புட்டிருந்தாங்க.

நானும் என் ஃப்ரண்ட்ஸும், ஆஹா ஊருக்குள்ள நம்மள ப்ரூஃப் பண்ண இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சிடுச்சே, இதை விடக்கூடாதுன்னு எங்க சைக்கிளுங்கள நல்லா சர்வீஸ் பண்ணி தெனமும் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சோம். சின்ன ஊர் அப்படின்றதால யார் யாரெல்லாம் கலந்துக்குவாங்க, யாருக்கு ஜெயிக்கறத்துக்கு வாய்ப்பு இருக்கு அப்படின்னெல்லாம் ஓரளவுக்கு தெரியும். நானும் இது வரைக்கும் இப்படி ரேஸ்ல எல்லாம் கலந்துகிட்டதே இல்ல. இருந்தாலும் பரவாயில்லை நாமளும் ரவுடிதான்னு உலகம் எப்படி நம்பும்னு வடிவேலு கணக்கா ப்ளான் போட்டேன்.

போட்டி வித்தியாசமா இருந்திச்சி. ஏறத்தாழ‌ 30, 40 பேர் கலந்துகிட்டாங்க. எல்லாரையும் ஒரே டைம்ல விட்டா டிராஃபிக் ஜாம் ஆகும்னு, கொஞ்சம் கொஞ்சம் பேரா பிரிச்சி விட்டாங்க. கிளம்புற நேரத்தையும் போய் சேர்ற நேரத்தையும் தனித்தனியா நோட் பண்ணிகிட்டாங்க. இதுல என்ன பிரச்சினைன்னா, நாம ஃபர்ஸ்ட் ப்ரைஸா இல்லையான்னு நமக்கே தெரியாது. அவங்க சொல்ற வரைக்கும் வெய்ட் பண்ணனும்.

ஆனா ரேஸ் பாத்துகிட்டு இருந்த என் ஃப்ரண்ட்ஸ்லாம் "கண்டிப்பாக உனக்கு ப்ரைஸ் கிடைக்கும்டா, ரொம்ப நல்லா ஓட்டுன" அப்படின்னாங்க. ஒரே சந்தோசம். முதல் ப்ரைஸ் இல்லாட்டினாலும் மொத மூணு இடத்துல ஒருத்தனா வந்தா சந்தோசமுன்னு நானும் நெனச்சிகிட்டு இருந்தேன்.

சாயங்காலம் வரைக்கும் போட்டி நடந்தது. நாங்க எல்லாரும் சாயங்காலமே ஜெயிச்சவங்க பேர் சொல்லிடுவாங்கன்னு நெனச்சோம். ஆனா அவங்க ஒண்ணுமே சொல்லல. சரின்னு மறுநாளும் போய் பாத்தோம். அப்பவும் ஒண்ணும் சொல்லல. சரி, நாப்பது பேரு கலந்துகிட்டாங்க. அத்தனை பேரோட டைம் டீடெய்லயும் சரியா கணிச்சிதானு சொல்ல முடியும் அப்படின்னு நெனச்சோம். சோதனையா, அடுத்த ஒரு வாரத்துக்கு ஒண்ணுமே சொல்லல. எங்களுக்கா ரொம்ப கஷ்டமா போச்சி. "என்னடா இது? ரேஸ் ஆரம்பிக்கறதுக்கு ஒரு மாசம் முன்னாலயே அப்படி வெளம்பரம் பண்ணுனாங்க. இப்ப என்னடான்னா இப்படி இழுத்தடிக்கிறாங்களே"ன்னு பேசிக்குவோம்.

அப்படி, இப்படின்னு ஒரு மாசம் கழிச்சி, பண்டிகையெல்லாம் முடிஞ்சப்புறம் ஒருநாளு பக்கத்து ஊட்டு ஃப்ரெண்டு வந்து "டேய்.. இன்னிக்கு அங்க ரிசல்டு சொல்றாங்களாண்டா! வா, ஒனக்கு ப்ரைஸ் குடுக்கப் பேர் கூப்புடுறப்ப நீ இல்லைன்னா நல்லா இருக்காது" அப்படின்னு சொன்னான். ஆஹா.. அப்படின்னு விழுந்தடிச்சி ஓடுனேன் (அந்த வேகத்துலயும், போட்டோ எடுத்தா பளிச்சின்னு தெரியுறதுக்காக பவுடரை அப்பிட்டு ஓடுனது வேற கதை).

அங்க போனா ஒரு சின்ன மேடையில ஊர் பெரிய மனுசனுங்க எல்லாம் உக்காந்திருந்தாங்க. இத்தன பேருக்கு நடுவுல நம்ம பேரை சொல்லத்தான் போறாங்கன்னு அப்படியே இளிச்சிகிட்டே நின்னுகிட்டு இருந்தேன். சைக்கிள் ஷாப் ஓனர் கையில ஒரு லிஸ்ட் இருந்தது. அதை ஒரு தடவை படிச்சிட்டு அவர் மைக் முன்னால நின்னாரு..

"எல்லாருக்கும் வணக்கம். நீங்க எல்லாரும் இந்த சைக்கிள் ரேஸ்க்கு இவ்ளோ ஆதரவு தருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. என் கையில உங்க எல்லோரோட டைம் டீடெய்லும் இருக்கு. இதுல மூணுபேருக்கு ப்ரைஸ் குடுக்கப் போறோம்."

அப்படின்னு நிறுத்தினாரு. எனக்கா தாங்கல. இந்த மனுசன் ஏன் இப்படி நீட்டி முழக்குறாரு. சொல்லவேண்டியதுதான அப்படின்னு நெனச்சிகிட்டே அவர் சொல்றத கேட்டுகிட்டு இருந்தேன்.

"ஆனா பாருங்க.. உலகத்துல எத்தனையோ சைக்கிள் இருக்குது, ஆனா நான் விக்குற அட்லஸ் சைக்கிள் மாதிரி வேற எதுவுமே கிடையாது. அதனால அட்லஸ் சைக்கிள் வெச்சி இந்த ரேஸ்ல கலந்துகிட்டவங்கள்ல இருந்து மொத மூணு பேரை தேர்ந்தெடுக்கப்போறேன்" அப்படின்னாரு..

எங்க மாமா வீட்டு லேத் பட்டறையில இரும்பை வெட்றதுக்கு வெட்டிரும்பை கம்பி மேல வெச்சி சம்மட்டியால ஓங்கி அடிப்பாங்க. அதை என் தலையில அடிச்ச மாதிரி இருந்திச்சி. பின்ன, நாம ஓட்டுனது எங்க அப்பாவுக்கு அவரோட அப்பா வாங்கி குடுத்த ஹீரோ சைக்கிளாச்சே.

மனசே கனத்து போச்சி.. ஆனா ஒரே சந்தோசம், ஜெயிச்ச மூணு பேருமே திறமைசாலிங்க அப்படின்றதுதான். அதுலயும் மொதோ பிரைஸ் வாங்குனவரு பயங்கரமா சைக்கிள் ஓட்டுவாரு. கைய விட்டுட்டு ஓட்டுறது, சைக்கிள் மேல நின்னுகிட்டு ஓட்டுறது, பின்னால திரும்பி பெடல் பண்ணுறதுன்னு ஒரே களேபரமா இருக்கும். அவர் எங்கியாவது சைக்கிள் ஓட்டுறார்னா ஓடிப்போய் பாக்குறவங்கள்ல நானும் ஒருத்தன். அதனால அவரை பாத்து கை குடுத்துட்டு பாராட்டிட்டு திரும்பி வந்துட்டோம்.

திரும்பி வர்றப்ப என் ஃப்ரெண்டு கேட்டான் "அவங்க மூணு பேரும் திறமைசாலிங்க, ப்ரைஸுக்கு தகுதியானவங்க அப்படின்றதுல எந்த சந்தேகமும் இல்லடா. ஆனா இந்த சைக்கிள் ஷாப் ஓனர் இப்படி பண்ணிட்டாறேடா! ரேஸ் எல்லாம் முடிஞ்சப்புறம் அட்லஸ் சைக்கிள் மட்டும்தான் போட்டிக்கு எடுத்துக்குவேன் அப்படின்னு சொல்லிட்டாரேடா! அட, நீ ப்ரைஸ் வாங்காதது பிரச்சினை இல்லை, ஆனா உன்னை ப்ரைஸுக்கு கன்ஸிடர் கூட பண்ணலியேடா! எதுக்கெடுத்தாலும் கத்துவ.. நீ ஏன்டா அங்கியே சத்தம் போடலை?" அப்படின்னான்.

அதுக்கு நான் அவன்கிட்ட சொன்னேன் "டேய், எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது அப்படின்றது நெஜந்தான். ஜெயிச்ச மூணு பேரும் எவ்ளோ சந்தோசமா இருக்காங்க பாத்தியா! அங்க நான் போய் ஏன் நீங்க இதை மொதல்லியே சொல்லலன்னு சத்தம் போட்டா ஜெயச்சவங்களோட கொண்டாட்டம் அப்படியே அடிபட்டு போயிடும். ரெண்டாவது, ரேஸ் நடத்துனதும், பரிசை கொடுத்ததும் பெரிய மனுசங்க. நாமெல்லாம் ஆவரேஜான இந்திய நடுத்தர வர்க்கத்த சேந்தவுங்க, இந்த மாதிரி நடந்தா மனசுக்குள்ளே அழுதுகிட்டு அடுத்த வேளை சோத்துக்கு வழிய பாக்க போகுறதுதான் நாம இத்தனை நாளா பண்ணிகிட்டு இருக்கோம். நானும் அதுக்கு விதிவிலக்கில்லடா!! ஏமாற்றம்லாம் நமக்கு புதுசா என்னா??"

பதிலுக்கு என்னை பாத்த பார்வைக்கு அவன் என்னை முறைச்சானா இல்லை பரிதாபப்பட்டானா அப்படின்றதுதான் எனக்கு இன்னிக்கு வரைக்கும் புரியவே இல்லை. ஒரு சிலது புரியாம இருக்குறதுதான் நல்லதோ..

*****

மேல சொன்ன கற்பனை கதைக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க!!!

82 comments:

Anonymous said...

அடுத்தவங்க வெற்றி பெற்றதைப் பார்த்து சந்தோஷப் படும் மனநிலை எல்லோருக்கும் வாய்க்காது வெண்பூ. இதுவே நீங்கள் பெற்ற வெற்றி

வாழ்த்துக்கள்.

said...

அண்ணாச்சி சொல்றதை வழிமொழிஞ்சுக்கறேன்.

25வது பதிவுக்கு வாழ்த்திக்கறேன்.

முக்கியமா, உங்க பதிவு முழுசையும் உங்க குரல்ல கேட்கறா மாதிரி உணர்ந்தேன். அதுதான் ஒரு எழுத்தாளனோட வெற்றி.

தனித்தன்மை!

வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்!

said...

வாழ்த்துக்கள் சகா.. அடிக்கடி எழுதுங்க.. ஆனா இதே மாதிரி மனுசுல நிக்கிற மாதிரி.. ஒரு நர்சிம் பத்தல எங்களுக்கு..

said...

//
வடகரை வேலன் said...

அடுத்தவங்க வெற்றி பெற்றதைப் பார்த்து சந்தோஷப் படும் மனநிலை எல்லோருக்கும் வாய்க்காது வெண்பூ. இதுவே நீங்கள் பெற்ற வெற்றி

வாழ்த்துக்கள்.
//
ரிப்பீட்டு

said...

// ரெண்டாவது, ரேஸ் நடத்துனதும், பரிசை கொடுத்ததும் பெரிய மனுசங்க. நாமெல்லாம் ஆவரேஜான இந்திய நடுத்தர வர்க்கத்த சேந்தவுங்க, இந்த மாதிரி நடந்தா மனசுக்குள்ளே அழுதுகிட்டு அடுத்த வேளை சோத்துக்கு வழிய பாக்க போகுறதுதான் நாம இத்தனை நாளா பண்ணிகிட்டு இருக்கோம்.//

இதுக்கு மாற நீங்க மட்டும் எதுத்துக்கேட்டிருன்தீங்கன்ன.அங்க நீங்கதான் ஹீரோ.

இயல்பான நடை.குவாட்டருக்கு வாழ்த்துக்கள் :-))

said...

டியர் மிஸ்டர் வொயிட் பிளவர், நல்லா இருக்கு இந்த பதிவு. ஆனா ஒன் கொஸ்டின்?

// நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு நெறய பதிவு போடுறதில்ல// இத யாருன்னு மட்டும் சொல்லிடுங்க:))

said...

//முக்கியமா, உங்க பதிவு முழுசையும் உங்க குரல்ல கேட்கறா மாதிரி உணர்ந்தேன். //

பரிசல் இது பாராட்டு மாதிரி தெரியலையே:))))

said...

:))

said...

//என்னை பாத்த பார்வைக்கு அவன் என்னை முறைச்சானா இல்லை பரிதாபப்பட்டானா அப்படின்றதுதான் எனக்கு இன்னிக்கு வரைக்கும் புரியவே இல்லை.//

உங்களை நண்பானா அடைஞ்சதுக்கு பெருமை பட்டு இருப்பார்!!!

said...

வெண்பூ.. 25க்கு வாழ்த்துக்கள்.. 50க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

தாமதத்திற்கு மன்னிக்கவும்..

நர்சிம்

said...

// கார்க்கி said...
வாழ்த்துக்கள் சகா.. அடிக்கடி எழுதுங்க.. ஆனா இதே மாதிரி மனுசுல நிக்கிற மாதிரி.. ஒரு நர்சிம் பத்தல எங்களுக்கு//

ஆகா.. சகா.. வணக்கம்..

நர்சிம்

said...

வாழ்த்துக்கள் வெண்பூ. நீங்க ஜூனில் ஆரம்பித்தீர்களா? நான் கடந்த மே மாதம். கவனிக்கையில் இதோ எனது அடுத்த பதிவு 25-யைத் தொடுகிறது:)!

அனுபவம் அருமை, உங்க பதிவைச் சொல்கிறேன்:) [வலை அனுபவமும்தான்].

//ஒரு சிலது புரியாம இருக்குறதுதான் நல்லதோ..//

ஆமாம் என்றே தோன்றுகிறது.

//மேல சொன்ன கற்பனை கதைக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க!!!//

சிறிலின் 'தேன்' பார்த்தேன்.
ரசித்தேன். சிரித்தேன்:))!

said...

25க்கு வாழ்த்துக்கள்!!! 250க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!!

said...

25க்கு வாழ்த்துக்கள், தரமான பதிவுகளை தர மீண்டும் வாழ்த்துக்கள்

said...

அண்ணே நீங்களும் நானும் ஓரே சமயத்தில் வந்தோம். ஆனா நான் 28 பதிவு போட்டேனே ஹைய்யா!!!

பாத்துக்க!பாத்துக்க! நாங்களும் ரவுடிதான் பார்த்துக்கன்னு நம்ம ரெண்டு பேரும் எப்படியோ பொழப்ப ஓட்டிட்டோம் :))))

said...

வாழ்த்துகள் பார்ட்னர்.

த.மா.கா சைக்கிள் மாதிரி இல்லாம அண்ணாமலை சைக்கிள் மாதிரி இருந்துச்சு :)

said...

வெண்பூ,
முடிந்தால் ஜிடாக் சாட்டுக்கு, இன்னும் அரைமணியில் வரமுடியுமா? இல்லை அட்லீஸ்ட் ஒரு தனி மடல் எனது முகவரிக்கு அனுப்புங்கள்!!;-)

said...

அன்பு வெண்பூ...

என்ன சொல்வதென்று தெரியவில்லை எனக்கு!

நன்றிகள் & ஸாரி...!

Anonymous said...

உள்குத்துங்கறது இதுதானா?

said...

வெண்பூ விரைவில் சதமடிக்க வாழ்த்துக்கள்

Anonymous said...

25க்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

மறந்துட்டேனே..

குவார்ட்டர் அடிச்சதுக்கும், விரைவில் ஹால்ஃபும், ஃபுல்லும் அடிக்கவும் வாழ்த்துக்கள்!

:-)))))

said...

வாழ்த்துக்கள் வெண்பூ. சிறப்பான பதிவுகளை கொடுக்க வேண்டுகிறேன்.

said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி, வேலன், பரிசல், கார்க்கி, சிவா, கார்க்கி..

//
பரிசல்காரன் said...
வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்!
//

சைக்கிள் கேப்ல என்னை உங்களவிட வயசானவன் ஆக்கிட்டீங்க.. நெஜம்தான்.. என்னோட எழுத்துக்களை விட உங்க எழுத்துக்கள் இளமையாத்தான் இருக்கு.. :)))

said...

//
குசும்பன் said...
** நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு நெறய பதிவு போடுறதில்ல** இத யாருன்னு மட்டும் சொல்லிடுங்க:))
//

ஹி..ஹி.. ஒரு விளம்பரம்...

said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி குசும்பன், இலவசக்கொத்தனார், நர்சிம், ராமலக்ஷ்மி, ச்சின்னப்பையன், குடுகுடுப்பை..

//
ச்சின்னப் பையன் said...
25க்கு வாழ்த்துக்கள்!!! 250க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!!
//
என்னாது 250ஆ? இந்த ஸ்பீட்ல போனா 250 அடிக்க ஆறு வருசம் ஆகும்.. அதுக்குள்ள ச்சின்னப்பையனே பெரியப்பையன் ஆயிடுவாரு.. ஆனாலும் ரொம்ப அட்வான்ஸா வாழ்த்து சொல்லிட்டீங்க நீங்க.. :))))

said...

வெண்பூ,
நீங்கள் ஓட்டிய சைக்கிள்(கள்) வெற்றி பெறாததில் எனக்கு பெரும் வருத்தம். உங்களுக்கு கண்டிப்பாக ப்ரைஸ் கிடைக்கும் என்று ஏமாந்த நண்பர்களில் நானும் ஒருவன். ஆனால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சைக்கிள், ஒரு சைக்கிள் அல்ல(அது மொபெட், புல்லட், ஆட்டோ, கார் போன்ற ஏதோ ஒன்று என்பது எனது கருத்து). வெற்றி பெற்றவர் சைக்கிளும் நன்றாகவே ஓட்டுவார் என்பதால், அது சைக்கிள் போட்டியில் கலந்து வெற்றியும் பெற்றுவிட்டது.

//அங்க போனா ஒரு சின்ன மேடையில ஊர் பெரிய மனுசனுங்க எல்லாம் உக்காந்திருந்தாங்க. இத்தன பேருக்கு நடுவுல நம்ம பேரை சொல்லத்தான் போறாங்கன்னு அப்படியே இளிச்சிகிட்டே நின்னுகிட்டு இருந்தேன்//
// ரெண்டாவது, ரேஸ் நடத்துனதும், பரிசை கொடுத்ததும் பெரிய மனுசங்க. நாமெல்லாம் ஆவரேஜான இந்திய நடுத்தர வர்க்கத்த சேந்தவுங்க, இந்த மாதிரி நடந்தா மனசுக்குள்ளே அழுதுகிட்டு அடுத்த வேளை சோத்துக்கு வழிய பாக்க போகுறதுதான் நாம இத்தனை நாளா பண்ணிகிட்டு இருக்கோம். நானும் அதுக்கு விதிவிலக்கில்லடா!! ஏமாற்றம்லாம் நமக்கு புதுசா என்னா??"//
உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! - அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்;-))


//ஆனா நான் விக்குற அட்லஸ் சைக்கிள் மாதிரி வேற எதுவுமே கிடையாது. //
சூப்பரு

நேற்று நீங்கள் சாட்டில் வந்தபொழுது, உடனே கட் செய்ததற்கு வருந்துகிறேன். தங்கமணி கையில் கரண்டியோடு(சாப்பாடு போடத்தான்!) நிற்கும் அந்த அபாயகரமான தருணத்தில், நெட்டை டிஸ்கனெக்ட் செய்வதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்கு தள்ளப்படும் ரங்கமணியின் நிலை உங்களுக்கு புரியும்தானே!!;-))

said...

//
புதுகை.அப்துல்லா said...
அண்ணே நீங்களும் நானும் ஓரே சமயத்தில் வந்தோம். ஆனா நான் 28 பதிவு போட்டேனே ஹைய்யா!!!
//
இதை ஒத்துக்க மாட்டேன் அப்துல்லா.. நீங்க எனக்கு சீனியர்.. உங்க முதல் பதிவு ஜூன் 3. என்னோடது ஜீன் 17.. அதனால நீங்க பெருமை பட்டுக்க முடியாது.. ஹி..ஹி..

//
பாத்துக்க!பாத்துக்க! நாங்களும் ரவுடிதான் பார்த்துக்கன்னு நம்ம ரெண்டு பேரும் எப்படியோ பொழப்ப ஓட்டிட்டோம் :))))
//
இது வேணும்னா கரெக்ட்டு.. அப்படி இப்படின்னு எப்படியோ கம்பியை புடிச்சி தொங்கிட்டே போய்கிட்டு இருக்கோம்.. :))))

//வாழ்த்துகள் பார்ட்னர்.

த.மா.கா சைக்கிள் மாதிரி இல்லாம அண்ணாமலை சைக்கிள் மாதிரி இருந்துச்சு :)
//
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி அப்துல்லா..

said...

வாங்க யோசிப்பவர். நேத்து வீட்டுக்கு போனா நெட் வேலை செய்யல.. ஆற்காடு வீராசாமி புண்ணியத்துல அடிக்கடி கரெண்ட் கட் ஆனது & லோ வோல்டேஜ்னால எதோ பிரச்சினை. அதனாலதான் நேத்து உங்க கூட "ச்சாட்"ட முடியல.. இன்னிக்கு பேசலாம்.

said...

//
இரா. வசந்த குமார். said...
அன்பு வெண்பூ...

என்ன சொல்வதென்று தெரியவில்லை எனக்கு!

நன்றிகள் & ஸாரி...!
//

ஆஹா.. வசந்த்.. நீங்கள் வருத்தப்பட இதில் உங்கள் தவறு எதுவுமே இல்லை.. இது குறித்து வருத்தப்படும் எல்லாருமே யுனானிமஸாக சொல்லும் ஒரே விசயம், பரிசு வாங்கியவர்கள் தகுதியானவர்கள் என்பதுதான். அதனால் நீங்கள் ஸாரி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை...

said...

//
வீரசுந்தர் said...
உள்குத்துங்கறது இதுதானா?
//

ஆஹா.. வீரசுந்தர் என்ன இப்படி சொல்லிட்டீங்க.. உள்குத்தெல்லாம் எதும் இல்லிங்க. சும்மா புலம்பல்னு வேண்ம்னா வெச்சிக்கலாம்.. :))

said...

வாழ்த்துக்களுக்கு நன்றி முரளிகண்ணன், கடையம் ஆனந்த், வீரசுந்தர், கிரி..

//
குவார்ட்டர் அடிச்சதுக்கும், விரைவில் ஹால்ஃபும், ஃபுல்லும் அடிக்கவும் வாழ்த்துக்கள்!
//
ஹி..ஹி.. அடிச்சிடுவோம்..

said...

முக்கியமான ஒரு ஆளை விட்டுட்டனே.. நேற்று என்னை தொலைபேசியில் அழைத்து பாராட்டிய நண்பர் அதிஷாவிற்கு நன்றிகள்..

said...

வாங்க யோசிப்பவர்.. நீங்கள் உட்பட என் வருத்தங்களை பங்கு போட்டு கொண்ட சக பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல..

அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன் அவர்களின் அறிவுரை சூப்பர்.. காலத்தை கடந்து நினைவில் இருக்கும் ( நினைவில் இருத்திக்கொள்ள வேண்டிய) வசனம்..

//
நேற்று நீங்கள் சாட்டில் வந்தபொழுது, உடனே கட் செய்ததற்கு வருந்துகிறேன்.
//
லூஸ்ல விடுங்க.. இதுக்கு போய் வருத்தப்பட்டுகிட்டு..

//
தங்கமணி கையில் கரண்டியோடு(சாப்பாடு போடத்தான்!)
//
சரி..சரி.. சாப்படு போடத்தான் அப்படின்னு நம்பிட்டோம்..

//
நிற்கும் அந்த அபாயகரமான தருணத்தில், நெட்டை டிஸ்கனெக்ட் செய்வதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்கு தள்ளப்படும் ரங்கமணியின் நிலை உங்களுக்கு புரியும்தானே!!
//
ஹி..ஹி..இதென்ன கேள்வி.. வீட்டுக்கு வீடு தங்கமணிகள்தானே.. :)))

said...

வெண்பூ,

நானும் கிட்டத்தட்ட 'யோசிப்பவரின்' மனநிலையில் இருக்கிறேன். I just cant believe it nor accept that its a fair decision. Politically correct வாக்கியங்களான 'வென்றவர்கள் அனைவரும் தகுதியானவர்களே', 'இந்தத் தோல்வி (?!) உங்கள் பெருவெற்றிக்கான முதல் படிக்கட்டு' என்பதை ஒதுக்கிவிட்டு போட்டிக்கு வந்த எல்லாக் கதைகளையும் படித்திருந்தால், மனசாட்சி உள்ள எவரும் ஒப்புக்கொள்வார்கள் உன்னுடைய (நான் உன்னைவிட 'சற்று' வயதானவன் என்ற உரிமையில்) கதை கட்டாயம் பரிசு பெற்றிருக்கவேண்டுமென்று.

இதை முன்னமே உன்னிடம் சொன்ன ஞாபகம். போட்டி உனக்கும் வசந்தகுமாருக்கும் பலம். என்னுடைய கணிப்பில் அவர் சற்று முந்தி இருக்கிறார். ஸ்ரீதரும் சேவியரும் என் நல்ல நண்பர்கள்தாம். ஆயினும் என்னளவில் உன் புனைவுகள் முற்றிலும் வேறு தளத்தில் இருந்தன. மூன்றாவது பரிசு யாருக்கு என்பதில்தான் சிக்கல் இருக்கும் என்று நம்பினேன்.

நீ என் நண்பன் என்பதனால் சொல்லவில்லை. சுஜாதா நடுவராக இருந்திருந்தால் நீ பரிசு பெற்றிருப்பாய். இலக்கிய உலகில் சுஜாதாவுக்கு பெரிய இடம் கொடுக்க யாருக்கும் மனதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அறிவியல் புனைவுகளில் அவர் சென்ற இடம் மற்றவர்களால் நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று. ஆதலால், சோர்வாக இருந்தாலும் அறிவியல் புனைவை நிறுத்தாதே. இந்தப் போட்டிகளின் புது விதிப்படிதான் அறிவியல் புனைவுகள் இருக்கவேண்டும் என்றும் தவறாக கற்பிதம் கொள்ளாதே. In short, juz do it buddy. I love ur stories. What the heck!

அனுஜன்யா

said...

//
//
பரிசல்காரன் said...
வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்!
//

சைக்கிள் கேப்ல என்னை உங்களவிட வயசானவன் ஆக்கிட்டீங்க.. நெஜம்தான்.. என்னோட எழுத்துக்களை விட உங்க எழுத்துக்கள் இளமையாத்தான் இருக்கு//

எந்த பால் போட்டாலும் கோல் அடிக்கறான்யா...

said...

//இந்தப் போட்டிகளின் புது விதிப்படிதான் அறிவியல் புனைவுகள் இருக்கவேண்டும் என்றும் தவறாக கற்பிதம் கொள்ளாதே//
இது ரொம்ப ரொம்ப முக்கியம்!!!

said...

////
பரிசல்காரன் said...
வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்!
//

சைக்கிள் கேப்ல என்னை உங்களவிட வயசானவன் ஆக்கிட்டீங்க.. நெஜம்தான்.. என்னோட எழுத்துக்களை விட உங்க எழுத்துக்கள் இளமையாத்தான் இருக்கு.. :)))
//


அப்போ உங்க எழுத்துக்கள் தான் முதிர்ச்சியா இருக்கு, கிருஷ்ணா சார் எழுத்து ச்சின்னப்புள்ளத்தனமா இருக்குங்கறீங்க:):):)

said...

// நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு நெறய பதிவு போடுறதில்ல//

யாரெல்லாம் அந்த துரோகிங்கன்னு மட்டும் சொல்லுங்க சம்பந்தி, அவங்களுக்கெல்லாம் தினம் ஒரு கவுஜய பார்சல் பண்ணிடறேன்:):):)

said...

//என்னை பாத்த பார்வைக்கு அவன் என்னை முறைச்சானா இல்லை பரிதாபப்பட்டானா அப்படின்றதுதான் எனக்கு இன்னிக்கு வரைக்கும் புரியவே இல்லை.//

ஹி ஹி, நானெல்லாம் டைரெக்டா சொன்னாலே புரிஞ்சிக்க முடியாத ஆளு, கண் பேசும் வார்த்தைகள புரிஞ்சிக்கிற பெரிய மனுஷனா நீங்க:):):)

said...

இது உள்குத்து பதிவா:):):) ஆனா, எனக்கு 'பாரு'வை விட சைக்கிள் கடக்காரற பிடிக்கும்:):):)

said...

நீங்க அனுஜன்யா அவர்கள் சொல்லிருக்க மாதிரி மக்கள் விரும்புற எழுத்தாளரா இருங்க:):):)

said...

////
வடகரை வேலன் said...

அடுத்தவங்க வெற்றி பெற்றதைப் பார்த்து சந்தோஷப் படும் மனநிலை எல்லோருக்கும் வாய்க்காது வெண்பூ. இதுவே நீங்கள் பெற்ற வெற்றி

வாழ்த்துக்கள்.
//
ரிப்பீட்டு////

ரிப்பீட்டு

said...

காற் சதத்துக்கு இனிய பாராட்டுகள்.

நிறைய எழுதனுமுன்னு வாழ்த்துக்கிறேன்.

said...

பாராட்டுக்களுக்கும், வருத்தங்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி அனுஜன்யா..

//
இந்தப் போட்டிகளின் புது விதிப்படிதான் அறிவியல் புனைவுகள் இருக்கவேண்டும் என்றும் தவறாக கற்பிதம் கொள்ளாதே
//
கண்டிப்பாக இல்லை. போட்டிகளில் நடுவருக்கு தகுந்த மாதிரி கதை எழுதுவதோ, பாடுவதோ, ஆடுவதோ நம் தனித்துவத்தை வெளிக்காட்டாது என்பது மட்டுமல்ல, நீண்ட கால வெற்றிக்கான வழியாகவும் இருக்காது என்பதை அறிந்தே இருக்கிறேன்.. அதனால் இந்த புதுவிதிகள் கண்டிப்பாக பாதிக்காது.

said...

//
rapp said...
அப்போ உங்க எழுத்துக்கள் தான் முதிர்ச்சியா இருக்கு, கிருஷ்ணா சார் எழுத்து ச்சின்னப்புள்ளத்தனமா இருக்குங்கறீங்க:):):)
//

ஆஹா.. இதுக்கு நான் பொறுப்பில்ல பரிசல்.. நம்ம நட்பை பிரிக்க வலையுலகில் தீவிர முயற்சி நடக்குது அப்படின்றது இதன் மூலமா தெரிஞ்சிக்கங்க... :))

said...

//
rapp said...
// நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு நெறய பதிவு போடுறதில்ல//

யாரெல்லாம் அந்த துரோகிங்கன்னு மட்டும் சொல்லுங்க சம்பந்தி, அவங்களுக்கெல்லாம் தினம் ஒரு கவுஜய பார்சல் பண்ணிடறேன்:):):)
//

ஹி..ஹி.. இந்த கமெண்டை படிச்சப்புறம் இனிமே யாருக்குமே அந்த துணிச்சல் வராதுன்னு நினைக்கிறேன்.

said...

me the 48Th

said...

49:):):)

said...

me the 50th:):):)

said...

//
rapp said...
நீங்க அனுஜன்யா அவர்கள் சொல்லிருக்க மாதிரி மக்கள் விரும்புற எழுத்தாளரா இருங்க:):):)
//

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி வெட்டியாப்பீசர்...

said...

நடுவில் புகுந்து 50 அடித்த அன்புக்குரிய சம்பந்தி அம்மாவிற்கு இதுவரை பின்னூட்டம் போட்ட அனைத்து பதிவர்கள் சார்பாகவும் என் சார்பாகவும் ஒரு பெரிய "ஓஓஓஓஓஓ" போட்டுக்கொ(ல்)கிறேன்.. :)))

said...

//
துளசி கோபால் said...
காற் சதத்துக்கு இனிய பாராட்டுகள்.

நிறைய எழுதனுமுன்னு வாழ்த்துக்கிறேன்.
//

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி டீச்சர்...

said...

//இது என்னோட 25வது பதிவு.//

வெள்ளிவிழா நாயகன் வெண்பூவிற்கு வாழ்த்துக்கள்

said...

/./அதனால எனக்கு நானே குடுத்துக்குறேன் ஒரு ஷொட்டு, அதேநேரம் பல காரணங்களால நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு நெறய பதிவு போடுறதில்ல, அதுக்கு எனக்கு நானே குடுத்துக்குறேன் ஒரு குட்டு..//

தனக்கு தானே ஞாநி(னி)யாகும் திட்டமா

said...

25-வது பதிவுங்கரதால நான் எதுவும் திட்டல

said...

ஒருவேளை இது நிஜமாக இருந்தால்

போட்டியில் அட்லஸ் சைக்கிள் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும் என்று முன்னரே தெரிவித்திருக்கவேண்டும்.

உங்களுக்கு தியாகம் செய்யும் மனமிருந்தால் போட்டியிலேயே யாருக்காவது விட்டு கொடுத்திருக்கலாம்.

ஆனாலும் அது இன்றுவரை உங்களை உறுத்தி கொண்டே இருப்பது இந்த பதிவில் தெரிகிறது

said...

வெண்பூ இதை வெகு லாவகமா கையாண்டிருக்கீங்க.

நெட்டில் போட்டின்னா எப்போதுமே முடிவுகளில் கஷ்டம்தான். நடத்துபவர்களுக்கும்.

ஓட்டு போடுங்கன்னு சொன்னா கள்ள ஓட்டு எப்படி குவியும் தெரியுமா?

இது போல யாராவது ஒருத்தரை விட்டு( உதாரணத்துக்கு நீங்களே ஜட்ஜ் என்று வைத்துக்கொண்டால்) செலக்ட் செய்ய விட்டால் அவர்களுக்கு பிடித்தவையைத்தான் செலக்ட் பண்ண முடியும்.

இந்த பிடித்ததும் இன்று படிப்பதுக்கும் அதையே இன்னும் ஆறு மாதம் கழித்து படிக்கும்போதும் மாறுபடும்.

அது அந்தந்த நேர மனநிலையும் இதை தீர்மானிக்கும்.

ப்ராக்டிகலா இவ்வளவு ப்ரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் படப்பாளியாக கொஞ்சமாவது சோர்வடைவது தவிற்க முடியாதுதான்.

said...

25 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வெண்பூ...எண்ணிக்கை முக்கியமில்லை என்பது எனது எண்ணம்.

said...

me the 60th:):):)

said...

//
வால்பையன் said...
வெள்ளிவிழா நாயகன் வெண்பூவிற்கு வாழ்த்துக்கள்
//

வாழ்த்துக்களுக்கு நன்றி வால்பையன்..

//தனக்கு தானே ஞாநி(னி)யாகும் திட்டமா//
ஹி..ஹி.. தெரிஞ்சிருச்சா???

//
ஆனாலும் அது இன்றுவரை உங்களை உறுத்தி கொண்டே இருப்பது இந்த பதிவில் தெரிகிறது
//

நிஜம்தான் வால்.. :(

said...

25ஆம் பதிவிற்கு வாழ்த்துக்கள்.

said...

வாங்க நந்து..

கண்டிப்பாக நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது. எனது ஆதங்கம், முதலில் ஒரு தலைப்பை கொடுத்துவிட்டு எல்லாரும் படைப்புகளை அளித்த பிறகு ரூல்ஸை மாற்றியதுதான். நினைத்துப்பாருங்கள், இந்த மாத பிட் போட்டிக்கு "விளம்பரம்" என்பது தலைப்பு. எல்லாரும் ஃபோட்டோக்களை கொடுத்த பிறகு முடிவு அறிவிக்கும்போது உணவுப்பொருள், காஸ்மெடிக்ஸ் இவையெல்லாம் விளம்பரங்களில் இருப்பதை விளம்பரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னால் எப்படி இருக்கும். அவர்கள் அதை செய்வதில்லை என்பதால்தான் அவர்களது முடிவுகளை யாரும் விமர்சிப்பதில்லை.

என் கேள்வியெல்லாம் "அறிவியல் புனைகதை போட்டி" என்பதுடன் "எப்போதும் வெளிவரும் அறிவியல் புனைகதைகளிலிருந்து வித்தியாசப்பட்டிருக்க வேண்டும்" என்று ஒரு வரியை சொல்லியிருந்தால் இப்போது ஏன் நான் கவலைப்படப் போகிறேன்.

நம்பமுடியவில்லை என்ற தேய்வழக்கு, வியப்பு, மர்மம், உலகம் அழிவது, அறிவியல் கண்டுபிடிப்பு தவறாவது என்ற விசயம் எதுவும் இருக்கக்கூடாது என்று முடிவை அறிவிக்கும்போது கூறுவது எந்த விதத்தில் நியாயம்? உலகில் சயின்ஸ் ஃபிக்ஷன் என்றாலே 95% இதுபோன்ற கதைகள் என்பது தெரியாதா?

இன்று உலக அளவில் சயின்ஸ் ஃபிக்ஷன் என்றாலே நினைவுக்கு வரும் மைக்கேல் கிர்க்டன் (ஜுராசிக் பார்க் கதாசிரியர்) அவர்களின் எல்லா சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளுமே மேலே சொன்ன லிஸ்டில்தான் வருகிறது. சுஜாதாவின் பெரும்பாலான கதைகளும் அவ்வாறே (ரஜினியின் எந்திரன் கதை கூட ரோபோ உருவாக்கம் தவறாவதை அடிப்படையாகக் கொண்டதாக யூகங்கள் வந்து கொண்டிருக்கின்றன நந்து)

இன்னொரு விசயம் நந்து. கதை, கவிதை, ஃபோட்டோ போன்ற படைப்புகளை தீர்மானிக்கும் போட்டிகளில் நடுவருக்கு என்ன பிடிக்கும் என்று ஆராய்ந்து அதற்கு தகுந்தாற்போல படைப்புகளை கொடுப்பது வெற்றியடைய வைக்கும் என்றாலும் அதுவா அந்த போட்டிகளின் நோக்கம்? படைப்பாளிகளை ஊக்கப்படுத்தத்தான் போட்டிகளே தவிர அவர்களை சோர்வடைய வைக்க இல்லை என்பது என் கருத்து.

தனக்கு பரிசு கிடைக்கவில்லை என்பதற்காக போட்டியை நடத்தியவர்களையும், நடுவர்களையும் தூற்றும் கீழ்த்தர அரசியல் இல்லை இது என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

said...

//
தமிழ்ப்பறவை said...
25 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வெண்பூ...எண்ணிக்கை முக்கியமில்லை என்பது எனது எண்ணம்.
//

வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ்ப்பறவை.. நீங்கள் கூறுவது நிஜமே. இவை பயணத்தில் ஒரு மைல்கல் போன்றவையே. என்றாலும் நமக்கு இது போன்ற எண்களை பார்க்கும்போது ஒருவித பெருமை தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. கண்டிப்பாக 25 அல்லது 50 என்ற எண்ணிக்கையை நோக்கி எழுதவில்லை. எழுதும்போது அது இந்த எண்ணிக்கையை தொடும்போது சந்தோஷமாக உணர்கிறேன்.

said...

//
rapp said...
me the 60th:):):)
//

me the 65th.. :)))

said...

உங்க பதிவுக்கு மெதுவா பின்னூட்டம் போட்டுக்கலாம். அதுக்குள்ள வேற பதிவா போட்டுற போறீங்க.. இன்னும் பதிவ படிக்கலை. நாளைக்கு திரும்பவும் வர்றேன். ஊர்லருந்து வந்தாச்சுன்னாலும் நைன்டி போட (ரொம்ப நாளாச்சுங்க.) இன்று கண்ணன் வீட்டுக்கு வருவதால் அவசரமாக கிளம்பிக்கொண்டிருக்கிறேன். பிரியாணி சாப்பிட என் பதிவுக்கு போகவும். பை.

said...

அய்யய்யோ ரொம்ப முக்கியமான தலைகளெல்லாம் பின்னூட்டத்தில தென்படுகிறதே.. நான் வேறு நைன்டி அது இதுனு சொல்லித்தொலைச்சிட்டேனே..

said...

ஐ...25.... ஒரு க்வாட்டர் அடிச்சாச்சா? வாழ்த்துக்கள்... நின்னு நிதானமா ஆடுங்க...

நானும் 22 ஆச்சு... சீக்கிரமே 25 போட்டுடறேன்.... வாழ்த்துங்க !!

said...

வாங்க தாமிரா.. என்ன இப்பவாவது பதிவை படிச்சாச்சா?

said...

வாங்க மஹேஷ்.. வாழ்த்துக்களுக்கு நன்றி.. சீக்கிரமே நீங்களும் 25 அடிக்க வாழ்த்துக்கள்.

said...

அப்துல் :அண்ணே நீங்களும் நானும் ஓரே சமயத்தில் வந்தோம். ஆனா நான் 28 பதிவு போட்டேனே ஹைய்யா!!!//
இந்த ஸ்பீடுக்கு பெருமை வேறயா.? விளங்கிரும்.!

கார்க்கி : அடிக்கடி எழுதுங்க.. ஆனா இதே மாதிரி மனுசுல நிக்கிற மாதிரி.. ஒரு நர்சிம் பத்தல எங்களுக்கு// ரிப்பீட்டேய்..

said...

கதையில்தான் குட்டி சோகம் வைத்திருந்தீர்கள் எனில் நிஜத்திலும் நடந்ததா? அடடே.. சிறிலை உதைக்கலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன். சரி எந்தக்கதையை அனுப்பியிருந்தீர்கள்.? சொல்லவும்.

said...

வாங்க தாமிரா.. பாராட்டுகளுக்கு நன்றி..

ஆஹா.. நீங்க இன்னும் படிக்கலையா.. இதோ லிஸ்ட்..

இரண்டாவது மூளை
கடைசி ஆசை
மாயா..மாயா..எல்லாம் மாயா.. (அறிவியல் சிறுகதை)

said...

இம்புட்டு நல்லவரா நீங்க?

சான்ஸே இல்ல தலைவா...


இது மாதிரி தரமான பதிவு போட்டு, படிக்கறவங்க மனசுல சின்ன சின்ன நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தறது ரொம்பப்பெரிய விஷயம்!

said...

:(

said...

வாங்க ரோஜா காதலன்.. அட நான் ரொம்ப நல்லவனா இருந்திருந்தா இந்த பதிவு கூட வந்திருக்காதுங்க.. என்ன செய்ய.. ஆதங்கம் தாங்கல.. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..

(ஆமா.. ரோஜா காதலன் அப்படின்னா ரோஜாவோட காதலன்னு அர்த்தமா.. செல்வமணி கோச்சுக்கமாட்டாரா... சும்மா ஜோக்குக்கு, தப்பா நெனச்சிக்காதீங்க)

said...

//
கிழஞ்செழியன் said...
:(
//

வாங்க கிழஞ்செழியன்.. வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி.. (நீங்கதான் "மீ த 75த்.)

said...

//
(ஆமா.. ரோஜா காதலன் அப்படின்னா ரோஜாவோட காதலன்னு அர்த்தமா.. செல்வமணி கோச்சுக்கமாட்டாரா... சும்மா ஜோக்குக்கு, தப்பா நெனச்சிக்காதீங்க)
//

ரோஜாப்பூ எனக்கு ரொம்ப புடிக்கும். அதுனால தான் இப்படி பேர் வைச்சுகிட்டேன்..

”ரோஜாக்காதலன்”னு வச்சுக்காம ”ரோஜா காதலன்”னு இருக்கறதுக்கு காரணம் இருக்கு.

ரோஜாவை காதலித்தாலும், நான் கொஞ்சம் இடைவெளி விட்டே இருப்பேன், ரோஜாவிற்கு இடைஞ்சலாய் இல்லாமல்...

said...

25 பதிவுக்கு வாழ்த்துக்கள்..
அன்புடன் அருணா

said...

//
ரோஜா காதலன் said...
”ரோஜாக்காதலன்”னு வச்சுக்காம ”ரோஜா காதலன்”னு இருக்கறதுக்கு காரணம் இருக்கு.

ரோஜாவை காதலித்தாலும், நான் கொஞ்சம் இடைவெளி விட்டே இருப்பேன், ரோஜாவிற்கு இடைஞ்சலாய் இல்லாமல்...
//

கவிதையான பதில். கலக்கலாக..

said...

//
Aruna said...
25 பதிவுக்கு வாழ்த்துக்கள்..
அன்புடன் அருணா
//

வாங்க அருணா! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

said...

பப்ளிக்கா ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். http://thamira-pulampalkal.blogspot.com/2008/11/5_30.html இப்பதிவின் பின்னூட்டங்களை பார்க்கவும்...