Friday, August 1, 2008

கர்நாடக கண்டக்டரும் கவுண்ட பெல்லும்

காமெடி ந‌டிக‌ர் க‌வுண்ட‌ பெல் அவ‌ர‌து தோட்ட‌த்துக்கு த‌ண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ வ‌ருகிறார் உத‌வி இய‌க்குன‌ர்.

"அண்ணே! அண்ணே! ஒரு சின்ன‌ பிர‌ச்சினைனே!!!"

"என்ன‌டா நாயே?"

"அண்ணே! நீங்க‌ ந‌டிக்கிற‌ புதுப்ப‌ட‌த்துல‌ உங்க‌கிட்ட‌ அடிவாங்குற‌ கேர‌க்ட‌ர‌ ந‌டிக்கிற‌துக்கு செந்தேள் ஒத்துக்க‌ மாட்டேன்னு சொல்லிட்டாருணே"

"அந்த ப‌ச்சிலை புடுங்கி ஏண்டா ஒத்துக்க‌ல‌?"

"அண்ணே அவருக்கு உங்ககிட்ட அடி வாங்கி வாங்கி சலிச்சு போச்சாண்ணே. அதுனாலதான் வேற யாரைப் போடுறதுன்னு டைரக்டர் கேட்டுட்டு வரச் சொன்னாருன்னே"

"சரி. சிச்சுவேஷன சொல்லு. யாரைப் போடுறதுன்னு சொல்றேன்"

"கதைப்படி, உங்க ஊருக்கார பையன் ஒருத்தன் பஞ்சம் பொழக்கறதுக்காக பக்கத்து ஊருக்கு போறான். அங்க போயி வியாபாரம் பண்ணி பெரிய ஆளா ஆயிடுறான். கொஞ்ச நாள் கழிச்சி உங்க ஊருக்கும் அந்த ஊருக்கும் வாய்க்கால் தகறாரு ஆயிடுதுன்னே. அந்த பையன் என்னா பண்றான்னா தன் சொந்த ஊருன்னுக்கூட பாக்காம உங்க ஊரைக் கேவலமா பேசிடுறான்"

"அவன் செவுட்டுலயே அறைய வேண்டியதுதான"

"கரெக்டா சொன்னீங்கண்ணே... அதத்தான் நீங்க பண்ணீறீங்க. அவன் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கலன்னா அவன் உங்க ஊருக்கு வியாபாரமே பண்ண வரக்கூடாதுன்னு சொல்றீங்க. அவனும் மூணாவதா ஒரு ஊருக்கு போயி அங்க இருந்து போன் பண்ணி மன்னிப்பு கேக்குறான்"

"ஏண்டா! அவன் கடை வச்சிருக்குற ஊர்காரனுங்க அவனை சும்மா விடுவானுங்களா?"

"அட அவனுங்க எல்லாம் சொரணை கெட்டவனுங்கண்ணே. இவன் மன்னிப்பு கேட்டுகிட்டு இருக்குறப்பவே அவன் கடையில பொருள் வாங்குறதுக்கு க்யூல நிப்பானுங்கண்ணே"

"அடப்பாவிகளா! அப்ப அவனுங்களத்தானு அப்பணும்"

"அது எல்லாம் நம்ம கதையில இல்லைண்ணே. எத்தனைப் பேரை அப்புவீங்க‌. இப்ப சொல்லுங்க. யாரை போடலாம் அந்த பையன் கேரக்டருக்கு"

"ம்ம்ம்ம்... அவனைப் போடுங்க" என்று ஒரு பெயரை சொல்கிறார்.

"அண்ணே! அவராண்ணே.. அவரு எவ்ளோ பெரிய ஆளு.. அவரு போயி எப்படிண்ணே?"

"டேய் இன்னிக்கு தேதிக்கு அந்த மாங்கா மண்டையன விட்டா இந்த கேரக்டர்ல நடிக்கிறதுக்கு இந்த இந்தியாவிலயே ஏன் உலகத்துலயே ஆளு கெடையாது. பணம் நிறையா குடுக்குறதா சொல்லு.. பன்னாடை பல்லு இளிச்சிட்டு வந்துடுவான்.. என்ன இருந்தாலும் அவனும் " அடுத்த வார்த்தைகளை முணுமுணுக்கிறார்.

"அண்ணே!! என்னண்ணே சொன்னீங்க?"

"அடங்கொய்யால.. அவனும் வியாபாரிதான அப்படின்னு சொன்னேன். உனக்கு வேற மாதிரி கேட்டா நான் ஒண்ணும் பண்ண முடியாது."

57 comments:

Anonymous said...

வெண்பூ,

குமரன் குடில் வலையில போட்ட அதே பின்னூட்டம் இங்கயும்.

ரஜினி என்ற உள்ளீடற்ற உருவத்தின் மீது கட்டமைக்கப்படும் பிம்பத்தின் சரிவை, உருவத்தின் சரிவு எனப்பிதற்றுகிறோம்.

பொருளின் உள்ளடக்கதிற்குத்தான் விளம்பரம் துணை போகவேண்டும். விளம்பரத்தால் வெறும் குப்பைகளை வியாபாராமாக்க முடியாதென்பது வெகு விரைவில் புரிந்து விடும்.

said...

போட்டுத் தாக்குங்க.....:-)))

said...

ஆமா... கவுண்டபெல் என்ன சொன்னாருன்னு எனக்கு மட்டுமாவது சொல்லுங்க...... :-)))

said...

\\ரஜினி என்ற உள்ளீடற்ற உருவத்தின் மீது கட்டமைக்கப்படும் பிம்பத்தின் சரிவை, உருவத்தின் சரிவு எனப்பிதற்றுகிறோம்\\

வடகரை வேலன்னா, இதை தமிழ்ல மொழிபெயர்த்து சொல்லுங்கண்ணா

said...

வெண்பூ, கலக்கலோ கலக்கல். இப்படித்தாங்க ஒரு பதிவை எதிர்பார்த்தேன். எல்லாரும் டைரெக்டா திட்டி, போரடிக்கறாங்க. உங்களோடது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு :):):)

said...

//ரஜினி என்ற உள்ளீடற்ற உருவத்தின் மீது கட்டமைக்கப்படும் பிம்பத்தின் சரிவை, உருவத்தின் சரிவு எனப்பிதற்றுகிறோம்.

பொருளின் உள்ளடக்கதிற்குத்தான் விளம்பரம் துணை போகவேண்டும். விளம்பரத்தால் வெறும் குப்பைகளை வியாபாராமாக்க முடியாதென்பது வெகு விரைவில் புரிந்து விடும்//

வடகரை வேலன் சார், எப்போ பின்நவீனத்துவவாதியா மாறினீங்க :):):)

said...

//ஆமா... கவுண்டபெல் என்ன சொன்னாருன்னு எனக்கு மட்டுமாவது சொல்லுங்க...... :-)))//

அஸ்கு புஸ்கு எனக்கும்தான்

said...

:-)))).....

Anonymous said...

காலிப்பெட்டிக்கு இன்னத்துக்கு னைனா கவிர்ச்சியா வெளம்பரம்? புர்தா?

said...

வெண்பூ,

இதுவரை உங்களில் பதிவுகளை நான் படித்தவரை கவனித்தது, ஒரு சீரியசான கருத்தை நகைச்சுவை ஷுகர் கோட் கொடுத்து எழுதும் திறமை உங்களிடம் இருக்கிறது, உதாரணத்துக்கு இது:

"அட அவனுங்க எல்லாம் சொரணை கெட்டவனுங்கண்ணே. இவன் மன்னிப்பு கேட்டுகிட்டு இருக்குறப்பவே அவன் கடையில பொருள் வாங்குறதுக்கு க்யூல நிப்பானுங்கண்ணே"

- எனக்கு நிச்சயம் உறைத்தது. மற்ற உறைக்கவேண்டியவர்களுக்கும் உறைத்தால் சரி!

Anonymous said...

//ரஜினி என்ற உள்ளீடற்ற உருவத்தின் மீது கட்டமைக்கப்படும் பிம்பத்தின் சரிவை, உருவத்தின் சரிவு எனப்பிதற்றுகிறோம்.//

போங்கு ஆளு மேல கோட்டு மாட்டி மறச்சுக்கினு, ஆளு சூப்பராக்கீரான்னு சொல்லிக்கினனே. அப்பால கோட்டு கிழியுதாங்காட்டியும் உள்ள கீரதெல்லம் வெளிய தெர்து. இப்ப இன்னான்னா ஆளு போங்குன்னு கூவிக்னுகீரே.

இத்தத்தா மொதச்சொல்ல நானு சொல்லிக்னுகீரன்.


//பொருளின் உள்ளடக்கதிற்குத்தான் விளம்பரம் துணை போகவேண்டும். விளம்பரத்தால் வெறும் குப்பைகளை வியாபாராமாக்க முடியாதென்பது வெகு விரைவில் புரிந்து விடும்//


காலிப்பெட்டிக்கு இன்னாத்துக்கு நைனா கவிர்ச்சியா வெளம்பரம்?


இன்னா புர்தா? இல்லாக்காட்டி காத்தால இன்னொருதபா படத்தப் பாரு மாமே. முடிஞ்சா டாஸ்மாகுல ஒரு கட்டிங் வுட்டுக்கோ.

said...

பாவமய்யா:(

said...

//அவனும் வியாபாரிதான அப்படின்னு சொன்னேன். உனக்கு வேற மாதிரி கேட்டா நான் ஒண்ணும் பண்ண முடியாது//
வி, ப என்ற 2 எழுத்துகள் மட்டும் தெரிகின்றன. இன்னும் 2 எழுத்துகள் 'சரி'யாகத் தெரியவில்லை. ;-)

said...

செத்த பாம்பை அடிக்காதீங்க !!!!!!!

said...

//முரளிகண்ணன் said...

\\ரஜினி என்ற உள்ளீடற்ற உருவத்தின் மீது கட்டமைக்கப்படும் பிம்பத்தின் சரிவை, உருவத்தின் சரிவு எனப்பிதற்றுகிறோம்\\

வடகரை வேலன்னா, இதை தமிழ்ல மொழிபெயர்த்து சொல்லுங்கண்ணா//

மறுக்காச் சொல்லேய்ய்ய்

said...

ஆபரேஷன் சென்ஷி-ல வந்ததால இன்ஸ்பெக்டர் வடகரைவேலன் இப்படி ஆய்ட்டாரு!

said...

குசேலன் என்ற ஒப்பற்றா திரைக்காவியத்தை தமிழர்களுக்கு தாரை வார்த்திருக்கும் தலைவரை இழித்து, இப்படி ஒரு பதிவா?

அவர் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டது ஏன் தெரியுமா? என் குசேலன் விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். பார்க்கவும். அதற்குப் பிறகு அவர் செய்தது தவறா என்று சொல்லுங்கள்!

said...

கலக்கல் வெண்பூ.. (//பன்னாடை பல்லு இளிச்சிட்டு வந்துடுவான்// என்னதான் மாற்றுக்கருத்தென்றாலும், புக‌ழ்பெற்ற மனிதர்களை விமர்சிக்கலாம், திட்டவேண்டாம்னு நினைக்கிறேன். ஒருமாதிரியா இருக்குது.)

said...

ஹைய்யோ ஹைய்ய்யோ:-))))

said...

//வடகரை வேலன் said...
ரஜினி என்ற உள்ளீடற்ற உருவத்தின் மீது கட்டமைக்கப்படும் பிம்பத்தின் சரிவை, உருவத்தின் சரிவு எனப்பிதற்றுகிறோம்.
//

உள்ளீடற்ற உருவத்திற்கும் உண்மைக்கும் வித்தியாசம் அறியாததால்தான் அடுத்த முதல்வரை திரைப்பட திரையில் தேடிக்கொண்டிருக்கிறோம் வேலன். நல்ல கருத்து. நன்றி.

said...

//ச்சின்னப் பையன் said...
ஆமா... கவுண்டபெல் என்ன சொன்னாருன்னு எனக்கு மட்டுமாவது சொல்லுங்க...... :-)))
//

வாங்க ச்சின்னப்பையன்.

கீழே பாலராஜன்கீதா கமெண்ட்டையும் அவருக்கு நான் போடப்போகும் பதிலையும் பாருங்கள்.

said...

//முரளிகண்ணன் said...

வடகரை வேலன்னா, இதை தமிழ்ல மொழிபெயர்த்து சொல்லுங்கண்ணா
//

வாங்க முரளிகண்ணன்... அவரு நல்லா விளக்கிட்டாரு. புரிஞ்சிடுச்சா???

said...

//rapp said...
வெண்பூ, கலக்கலோ கலக்கல். இப்படித்தாங்க ஒரு பதிவை எதிர்பார்த்தேன். எல்லாரும் டைரெக்டா திட்டி, போரடிக்கறாங்க. உங்களோடது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு :):):)
//

வாங்க வெட்டியாப்பீஸர்.. பாராட்டுக்கு நன்றி..

said...

//விஜய் ஆனந்த் said...
:-)))).....
//

வாங்க விஜய் ஆனந்த். வருகைக்கு நன்றி.

said...

//கயல்விழி said...
எனக்கு நிச்சயம் உறைத்தது. மற்ற உறைக்கவேண்டியவர்களுக்கும் உறைத்தால் சரி!
//

வருகைக்கு நன்றி கயல். உறைக்கும் என்று நம்புவோம். இன்னும் 2 நாட்களில் இந்த பிரச்சினையை எல்லோரும் மறந்து விடுவார்கள். அடுத்த படம் வரும்போது அவர் மீண்டும் லைம்லைட்டுக்கு வருவார். என்ன செய்ய?

said...

//வடகரை வேலன் said...

போங்கு ஆளு மேல கோட்டு மாட்டி மறச்சுக்கினு, ஆளு சூப்பராக்கீரான்னு சொல்லிக்கினனே. அப்பால கோட்டு கிழியுதாங்காட்டியும் உள்ள கீரதெல்லம் வெளிய தெர்து. இப்ப இன்னான்னா ஆளு போங்குன்னு கூவிக்னுகீரே.
//

கரீக்டா கூவுன வேலா.. கேட்டதுமே மெர்சலாயிடுச்சிபா.. பாரேன் இந்த வேலன.. இன்னாமா கூவுது.. இதுக்குள்ளயும் ஏதோ ஒண்ணு கீது.. இன்னா சொல்ற??

said...

//வடகரை வேலன் said...
இன்னா புர்தா? இல்லாக்காட்டி காத்தால இன்னொருதபா படத்தப் பாரு மாமே.
//

இன்னாத்துக்கு.. ஸ்ட்ரெய்டா கீழ்பாக்கத்துக்கு பஸ் ஏத்திவுட்டுறலான்னு பாக்குறியா? நீ கண்டி கைல மாட்டுனன்னு வெய்யேன்.. அப்பால கீது உனிக்கு..

said...

//ராஜ நடராஜன் said...
பாவமய்யா:(
//

படம் பாத்தவுங்கள சொல்றீங்களா? :)

said...

//பாலராஜன்கீதா said...
வி, ப என்ற 2 எழுத்துகள் மட்டும் தெரிகின்றன. இன்னும் 2 எழுத்துகள் 'சரி'யாகத் தெரியவில்லை. ;-)//

வாங்க பாலராஜன்கீதா..என்னாது மீதி எழுத்து தெரியலயா? "சாரி" அதெல்லாம் என்னால சொல்ல முடியாது. :)

said...

//ARUVAI BASKAR said...
செத்த பாம்பை அடிக்காதீங்க !!!!!!!
//

வாங்க பாஸ்கர். நீங்களும் நானும்தான் சொல்லணும் செத்த பாம்புன்னு. நேத்து பாத்தீங்களா? படம் ரிலீஸ் ஆனதை வெச்சி எல்லா சேனல்லயும் (டைம்ஸ் நவ், என்.டி.டி.வி, ஹெட்லைன்ஸ் டுடே உட்பட) இதுதான் மெயின் நியூஸ். :(

said...

//பரிசல்காரன் said...
குசேலன் என்ற ஒப்பற்றா திரைக்காவியத்தை தமிழர்களுக்கு தாரை வார்த்திருக்கும் தலைவரை இழித்து, இப்படி ஒரு பதிவா?
//

கரெக்ட்டுதான்...

//அவர் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டது ஏன் தெரியுமா? என் குசேலன் விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். பார்க்கவும். அதற்குப் பிறகு அவர் செய்தது தவறா என்று சொல்லுங்கள்!//

ஹி..ஹி.. படிச்சி பாத்து அழுதுட்டேன். அது ஏன்னு நானும் அங்க பின்னூட்டம் போட்டிருக்கேன். பாத்துகுங்க.. :)

said...

//அட அவனுங்க எல்லாம் சொரணை கெட்டவனுங்கண்ணே. இவன் மன்னிப்பு கேட்டுகிட்டு இருக்குறப்பவே அவன் கடையில பொருள் வாங்குறதுக்கு க்யூல நிப்பானுங்கண்ணே"//

இதுதான் நிஜம். கோவையில் மட்டும் சில தமிழ் உணர்வாளர்கள் இருக்கிறார்கள். ஏனைய இடங்களில் ????

said...

//தாமிரா said...
கலக்கல் வெண்பூ..
//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தாமிரா..

//
என்னதான் மாற்றுக்கருத்தென்றாலும், புக‌ழ்பெற்ற மனிதர்களை விமர்சிக்கலாம், திட்டவேண்டாம்னு நினைக்கிறேன். ஒருமாதிரியா இருக்குது.)
//

எனக்கும் தெரிகிறது தாமிரா.. ஆனால் மனதில் இருக்கும் ஆதங்கம் அதிகமாக இருப்பதால் தவிர்க்க முடியவில்லை. அதுவும் கவுண்ட பெல் மொழி என்பதால் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.

நான் முதலில் எழுதியது இன்னும் மோசமாக இருப்பதால் தங்கமணி கூறியதால் சிறிது திருத்தியிருக்கிறேன். :(

பதிவை டைப் செய்தபோது நேரம் இரவு 11 மணி. சரியாக 20 நிமிடத்தில் டைப் அடித்து முடித்தேன். படித்தவுடன் தங்கமணி கேட்ட முதல் கேள்வி "காலையில இருந்து மனசுக்குள்ள அவனை திட்டிட்டே இருந்தீங்களா? இவ்ளோ சரளமா இவ்ளோ சீக்கிரமா எழுதியிருக்கீங்க?", நிஜம்தான்.

said...

//துளசி கோபால் said...
ஹைய்யோ ஹைய்ய்யோ:-))))
//

வாங்க டீச்சர். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

said...

//வந்தியத்தேவன் said...
இதுதான் நிஜம். கோவையில் மட்டும் சில தமிழ் உணர்வாளர்கள் இருக்கிறார்கள். ஏனைய இடங்களில் ????
//

வாங்க வந்தியத்தேவன்.. என்ன செய்ய? இந்த மாதிரி கேள்வி மட்டும் கேட்டுக்கவேண்டியதுதான். பதில் தேடுனால் கஷ்டம் நமக்குத்தான்.

Anonymous said...

//கோவையில் மட்டும் சில தமிழ் உணர்வாளர்கள் இருக்கிறார்கள். ஏனைய இடங்களில் ????//

எப்படிச் சொல்றீங்கன்னு தெரியல.

ஒரு தீபாவளிக்கு, ரஜினி படம் ரிலீசாகலன்னு ஒர் ரசிகர் தற்கொலை பண்ணிக்கிட்டாரு.

தீவிர ரஜினி ரசிகர்கள் இருப்பது மேட்டுபாளையம் மற்றும் திருப்பூரில்தான்.

said...

கும்மிக்கு ஏதுவாக கமெண்ட் மாடரேஷன் நீக்கப்படுகிறது :)

Anonymous said...

வேள ராசியோட இந்தப் பதிவப் பாருங்க : குழந்தைகள் கற்றுக் கொடுக்கும் பாடம்.

http://velarasi.blogspot.com/2008/07/blog-post_29.html

said...

சூப்பரப்பூ... வெண்பூ

said...

எல்லாரும் காய்ச்சி முடிங்க..!

நாங்க காத்திருந்து ரிவீட்டு அடிக்கறோம்...!

;-)

said...

//சரவணகுமரன் said...
சூப்பரப்பூ... வெண்பூ
//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சரவணகுமரன்.

said...

//இரா. வசந்த குமார். said...
எல்லாரும் காய்ச்சி முடிங்க..!

நாங்க காத்திருந்து ரிவீட்டு அடிக்கறோம்...!

;-)
//

ஆஹா... வசந்த்.. மொட்டையா சொல்றீங்களே! யாருக்கு ரிவீட்டு?? :))

said...

முதல் முறையாக எனது இடுகை தமிழ்மணத்தின் சூடான இடுகையில் இடம் பிடித்துள்ளது. உதவிய அனைவருக்கும் நன்றி.. நன்றி..

Anonymous said...

kalakkiteenga :D

said...

என்னத்த சொல்ல...!
உலகத்துக்கே நாகரிகத்தக் கத்துகொடுத்ததும் நம்ம இனம்தான்,,
உலகத்திலேயே கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் செஞ்சதும் நம்ம இனந்தான்....இப்போ நமீதாவுக்கு கூட கோயில் கட்டியிருக்காங்களாம்...மக்களைக் கவர்வது எப்படி என்று அந்த நடிகருக்கு தெரிகிறது...ஆனால் ஏமாறாமல் இருப்பது எப்படி என்று நம் மக்களுக்குத் தெரியவில்லை....
இந்த இலட்சனத்துல அவரு அடுத்த முதல்வராம்...?????????????!!!!!!!!

said...

நல்ல பதிவு வெண்பூ

said...

"அவன் செவுட்டுலயே அறைய வேண்டியதுதான"
//
அவர செவுட்டுல அறைஞ்சு ஒரு பிரயோஞனமும் இல்லை. செவுட்டுல நாமளே நம்மள அறஞ்சுக்க வேண்டியதுதான்.

said...

வெண்பூ நல்லா செவிட்டுல அறைஞ்ச மாதிரியான பதிவு....
மிக அருமை....இப்படியான பதிவுகள் சூடான இடுகையில் வருவதை வரவேற்கிறேன்....
பட்டையக் கிளப்புங்க....

said...

//Syam said...
kalakkiteenga
//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஸ்யாம்.

said...

//சண் சிவா said...
ஆனால் ஏமாறாமல் இருப்பது எப்படி என்று நம் மக்களுக்குத் தெரியவில்லை....
//

அது தெரிஞ்சாத்தான் நம்ம ஊர்ல ஒரு அரசியல்வாதி பொளைக்க முடியாதே.. எல்லாம் நம்ம தலையெழுத்து.. வேறென்ன சொல்ல??

வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி சண் சிவா..

said...

//jackiesekar said...
நல்ல பதிவு வெண்பூ
//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜாக்கி..

said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
அவர செவுட்டுல அறைஞ்சு ஒரு பிரயோஞனமும் இல்லை. செவுட்டுல நாமளே நம்மள அறஞ்சுக்க வேண்டியதுதான்.
//

அதையேத்தான் நானும் சொல்லியிருக்கேன் அப்துல்லா. வடகரை வேலன் சொன்னமாதிரு ஒண்ணும் இல்லாத ஆட்களைத் தூக்கி மேல வெச்சிட்டு அப்புறம் அவன் சரியில்லைன்னு அழறதே நம்ம வேலையாப் போச்சி.. :(

வருகைக்கு நன்றி அப்துல்லா..

said...

//தமிழ்ப்பறவை said...
வெண்பூ நல்லா செவிட்டுல அறைஞ்ச மாதிரியான பதிவு....
மிக அருமை....இப்படியான பதிவுகள் சூடான இடுகையில் வருவதை வரவேற்கிறேன்....
//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தமிழ்ப்பறவை.

//
பட்டையக் கிளப்புங்க....
//

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

said...

அருமையான பதிவு.

ஆனா, எனக்கு ஒண்ணு மட்டும் புரியல. ‘ரஜினி' என்கிற தனி மனிதனை இவர்களே ஏற்றி விட்டு, பின் ஏன் இவர்களே அவர் மேல் ஏறி நிற்கிறார்கள் எனத் தெரியவில்லை.

மக்களுக்கு சண்டை போட ஒரு காரணம் - இப்போதைக்கு அது ரஜினி. அவ்வளவுதான். :)

said...

வணக்கம் ...
உங்கள் தளம் இன்னும் வளர என் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://loosupaya.blogspot.com

said...

pls check ::

http://kaalapayani.blogspot.com/2008/08/blog-post_05.html

thanks.

said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/