Thursday, August 7, 2008

டிபிசிடி.. சென்னை பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!!

(சரோஜ் நாராயண்சாமி ஸ்டைலில் படிக்கவும்)

நேற்று 6.8.2008 புதன்கிழமை மாலை காந்தி சிலை அருகில் டிபிசிடி அவர்கள் சென்னைப் பதிவர்களை சந்தித்துள்ளார். அப்போது சில திடுக்கிடும் நிகழ்வுகள் நடந்ததாக தெரியவந்துள்ளது.

டிபிசிடியை அனைவரும் வரவேற்று பேசியபின், புதிய பதிவர் ஒருவர் அவரிடம் "உங்க சைட்ல புதசெவின்னு போட்டிருக்கீங்களே! அப்படின்னா என்னா? புரியலயே யவு செஞ்சி விளக்குங்க!!" என்று கேட்டு தனது செவுளில் பொளேர் என்று அடி வாங்கியதாகத் தெரிகிறது. அந்த பதிவர் "அப்படி நான் என்ன கேட்டுட்டேன்னு இவரு இப்படி அடிக்கிறாரு? நான் இனிமே பதிவே எழுத மாட்டான்டா!!" என்று புலம்பியவாறு அந்த இடத்தை விட்டு அகன்றுள்ளார். இது குறித்து நமது நிருபரிடம் பேசிய டிபிசிடி தமிழ் வலையுலகில் ஒரு மொக்கை பதிவர் குறைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

அங்கிருந்த லக்கிலுக்கிடம் பிளீச்சிங் பவுடர் என்ற பதிவர் லக்கிலுக் தனது பின்னூட்டங்களை, முக்கியமாக கலைஞரை திட்டும் பின்னூட்டங்களை ஏன் வெளியிடுவதில்லை என்று கேட்டுள்ளார். தனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 100 பின்னூட்டங்களாவது வருவதாகவும் அதில் ஒரு சிலது இப்படி தவறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் லக்கி தெரிவிக்க அதை ஒத்துக்கொள்ளாத பி.ப மேலும் ஏதோ கேட்க, கடுப்பான லக்கி "அதுதான் ஜெயலலிதாவ திட்டுறதுக்கு உடன்பிறப்பும், கருணாநிதிய திட்ட அதிமுககாரங்களும் சைட் வெச்சிருக்காங்கள்ள.. அங்க போய் திட்டுங்கடா.. என்னை விடுங்கடா.." என்று காட்டுக்கத்தல் கத்தியுள்ளார்.

அவரது கத்தலைக் கேட்டு அந்த பகுதியிலிருந்த அனைவரும் (சிலையாக இருந்த காந்தி உட்பட) லக்கியின் பக்கம் திரும்பிப் பார்த்துள்ளனர். இன்று காலையில் காந்தி சிலை ஏன் தலையை திருப்பிக் கொண்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருப்பது கூடுதல் செய்தியாகும்.

இதற்கிடையே அங்கு வந்த பைத்தியக்காரன் "நான் உன்னைக் கொலை பண்ணப்போறேன்டா" என்று கத்தியவாறே வேகமாக பாலபாரதியின் மீது பாய்ந்து அவருக்கு கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்துள்ளார். இதை சிறிதும் எதிர்பார்க்காத பாபா உடனியாக மயக்கம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த பதிவர்கள் அவருக்கு முதலுதவி செய்து 10 நிமிடம் கழித்து அவரை மயக்கம் தெளிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய பைத்தியக்காரன், தான் மூன்று நாட்களுக்கு முன்பே பல் விளக்கியதாகவும், ஏன் பாபா மயக்கமானார் என்பது தனக்குப் புரியவில்லை எனவும் தெரிவித்தார். அதிர்ச்சியிலிருந்து மீண்ட பதிவுலக சூப்பர் ஸ்டார் பாலபாரதி, தான் எழுதிய, எழுதப்போகும் எந்த புத்தகத்தையும் இனி யாருக்கும் ஓசியில் தரப்போவதில்லை என்றும் தான் இந்த சம்பவத்திலிருந்து ஒரு நல்ல பாடம் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது அங்கு வந்த அதிஷாவிடம் டிபிசிடி, நீங்க ஏன் தலையில ஸ்கார்ப் கட்டியிருக்கீங்க? என்று கேட்க, அதற்கு அவர் கவலையுடன் "வண்டி ஓட்டுறப்ப இருக்குற நாலு முடியும் பறந்துடக் கூடாதுல்ல?" என்று பதில் அளித்துள்ளார். இதைக் கேட்ட அனைவரும் 'கொல்' என சிரிக்க அதிர்ச்சியான அதிஷா, நான் உடனே தற்கொலை பண்ணிக்கப் போறேன் என்று கூறியவாறே லைட் ஹவுஸ் மீது ஏறியுள்ளார்.

ஆஹா.. பதிவு போட சூப்பர் மேட்டர் கிடைச்சிடிச்சிடா என்றவாறே கீழே கூடிய பதிவர்கள் எவ்வளவு கேட்டும் கீழே இறங்காத அதிஷா, அந்த பக்கம் காற்று வாங்க வந்த பத்து பத்து சோனாவை ஏரியல் வியூவில் பார்த்து விட்ட ஜொள்ளில் தானே வழுக்கி படிக்கட்டு வழியாக கீழே வந்து சேர்ந்துள்ளார்.

அவர் பாதுகாப்பாக கீழே வந்ததை சற்றும் எதிர்ப்பாக்காத பதிவர்கள், ஒரு சூடான பதிவு மிஸ்ஸான சோகத்தை காண்டு கஜேந்திரனை பார்த்து தணித்துக் கொள்ள வேளச்சேரி பக்கமாக வண்டிகளை கிளப்பிக் கொண்டு போனதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

******

ஹி...ஹி... நேத்து காந்தி சிலை பக்கமா போக முடியல.. அதனால அங்க என்ன நடந்திருக்கும்னு கற்பனையில யோசிச்சதுல..

52 comments:

said...

கலக்கல் கற்பனைங்கோ!!!

said...

மறந்துட்டேன்...மீ த பஷ்ட்ட்டூ!!!

said...

வெண்பூ நேத்து மாதிரி அல்வா குடுக்காம ஒழுங்கா ஞாயித்து கிழமை வந்துடுங்க

said...

///இதற்கிடையே அங்கு வந்த பைத்தியக்காரன் "நான் உன்னைக் கொலை பண்ணப்போறேன்டா" என்று கத்தியவாறே வேகமாக பாலபாரதியின் மீது பாய்ந்து அவருக்கு கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்துள்ளார். ////

சூப்பரப்பு!!! :-)

said...

ஜூன் மாதம் நெல்லையில் நடந்த தமிழ்மணம் நிகழ்ச்சியில் கலந்து ரிப்போர்ட்,"மூவர் ஏற்றிய தமிழ் விளக்கு" எனும் தலைப்பில் எழுதினேன். படித்து கமென்ட்டுங்களேன்.
சகாதேவன்

said...

இதெல்லாம் ரொம்ப ஓவர்

said...

//விஜய் ஆனந்த் said...
கலக்கல் கற்பனைங்கோ!!!
//

வாங்க விஜய் ஆனந்த்.. வருகைக்கு நன்றி..

said...

//அதிஷா said...
வெண்பூ நேத்து மாதிரி அல்வா குடுக்காம ஒழுங்கா ஞாயித்து கிழமை வந்துடுங்க
//

கண்டிப்பா வருகிறேன் அதிஷா..

said...

//லக்கிலுக் said...

சூப்பரப்பு!!! :-)
//

அட.. லக்கி... வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி லக்கிலுக்..

said...

//சகாதேவன் said...
ஜூன் மாதம் நெல்லையில் நடந்த தமிழ்மணம் நிகழ்ச்சியில் கலந்து ரிப்போர்ட்,"மூவர் ஏற்றிய தமிழ் விளக்கு" எனும் தலைப்பில் எழுதினேன். படித்து கமென்ட்டுங்களேன்.
சகாதேவன்
//

வருகைக்கு நன்றி சகாதேவன். உங்கள் பதிவை படித்தேன், பின்னூட்டமிட்டேன்..

said...

//முரளிகண்ணன் said...
இதெல்லாம் ரொம்ப ஓவர்
//

அச்சச்சோ.. முரளி கண்ணன்.. ஏதோ நமக்கு தெரிஞ்ச நக்கல் மொழியில ஒரு பதிவு போட்டிருக்கேன். யாரையும் காயப்படுத்தலன்னு நெனக்கிறேன்.. அப்படி இருந்தால் மன்னிக்கவும்.

said...

பார்ட்னர்..

கை குடுங்க. பின்னீட்டீங்க!

said...

உங்கள் தமிழன் என்ற பெயரில் வந்த முதுகெலும்பில்லாத அனானிக்கு, உன் பின்னூட்டம் அழிக்கப்படுகிறது...

said...

//பரிசல்காரன் said...
பார்ட்னர்..

கை குடுங்க. பின்னீட்டீங்க!
//

வாங்க பரிசல்.. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..

காலையிலயே உங்க பதிவு படிச்சாச்சி.. ஆனா உங்க மேல கோவம் அதுனாலதான் பின்னூட்டம் போடல.. இப்ப போய் போடுறேன்.. பாத்துகோங்க..

said...

//
அங்கிருந்த லக்கிலுக்கிடம் பிளீச்சிங் பவுடர் என்ற பதிவர் லக்கிலுக் தனது பின்னூட்டங்களை, முக்கியமாக கலைஞரை திட்டும் பின்னூட்டங்களை ஏன் வெளியிடுவதில்லை என்று கேட்டுள்ளார். தனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 100 பின்னூட்டங்களாவது வருவதாகவும் அதில் ஒரு சிலது இப்படி தவறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் லக்கி தெரிவிக்க அதை ஒத்துக்கொள்ளாத பி.ப மேலும் ஏதோ கேட்க, கடுப்பான லக்கி "அதுதான் ஜெயலலிதாவ திட்டுறதுக்கு உடன்பிறப்பும், கருணாநிதிய திட்ட அதிமுககாரங்களும் சைட் வெச்சிருக்காங்கள்ள.. அங்க போய் திட்டுங்கடா.. என்னை விடுங்கடா.." என்று காட்டுக்கத்தல் கத்தியுள்ளார்.//

DID U TALK U LUCKY, B4 POSTING DIS? HOPE SO, THIS IS SHOWING HIS REAL FEELINGS.

TAMIL FONT PROB. SORRY THAMIZHANNAIYE!

said...

//காலையிலயே உங்க பதிவு படிச்சாச்சி.. ஆனா உங்க மேல கோவம் அதுனாலதான் பின்னூட்டம் போடல.. இப்ப போய் போடுறேன்.. பாத்துகோங்க..//

கோவமா? என் மேலயா? அதும் உங்களுக்கா?

ச்சான்ஸே இல்லைங்க!

said...

//பரிசல்காரன் said..
DID U TALK U LUCKY, B4 POSTING DIS? HOPE SO, THIS IS SHOWING HIS REAL FEELINGS.
//

ஆச்சர்யம்.. நான் இதுவரை லக்கியிடம் பேசியதில்லை. இந்த வார இறுதியில் பதிவர் சந்திப்புக்கு காத்திருப்பதே லக்கி, பாலபாரதி, அதிஷா உள்ளிட்ட எல்லா பதிவர்களையும் சந்திப்பதற்காகத்தான்..

said...

// பரிசல்காரன் said...
கோவமா? என் மேலயா? அதும் உங்களுக்கா?
ச்சான்ஸே இல்லைங்க!
//

என்னங்க என்னை நம்ப கூட மாட்டேன்றாரு இவரு??

Anonymous said...

சூப்பரப்பு!!!கலக்கு ராசா...கலக்கு.....:)

said...

//A.ஹக்கீம் said...
சூப்பரப்பு!!!கலக்கு ராசா...கலக்கு.....:)
//

வாங்க ஹக்கீம் பாய்.. பாராட்டுக்கு நன்றி... முதல் வருகை என்று நினைக்கிறேன். மற்ற பதிவுகளையும் நேரம் கிடைக்கும்போது படிக்கவும்..

said...

உங்களது இந்த சிறந்தபதிவை பாராட்டி உங்களுக்கு ஒரு குசேலன் DVDயும் ஜெ.கே.ரித்தீஷ் குமார் ரசிகர்மன்ற உறுப்பினர் அட்டையும் பரிசாக ஞாயிற்றுகிழமை வழங்கப்படும்

வந்து பெற்றுக்கொள்ளவும்

said...

//அதிஷா said...
உங்களது இந்த சிறந்தபதிவை பாராட்டி உங்களுக்கு ஒரு குசேலன் DVDயும் ஜெ.கே.ரித்தீஷ் குமார் ரசிகர்மன்ற உறுப்பினர் அட்டையும் பரிசாக ஞாயிற்றுகிழமை வழங்கப்படும்

வந்து பெற்றுக்கொள்ளவும்
//

"அந்த பக்கம் வந்தே.. அவ்ளோதான்" அப்படின்னு எப்படியெல்லாம் மெரட்டுறீங்க... ஆனாலும் நான் வந்தே தீருவேன்.. வந்தே தீருவேன்..

said...

======
அவரது கத்தலைக் கேட்டு அந்த பகுதியிலிருந்த அனைவரும் (சிலையாக இருந்த காந்தி உட்பட) லக்கியின் பக்கம் திரும்பிப் பார்த்துள்ளனர். இன்று காலையில் காந்தி சிலை ஏன் தலையை திருப்பிக் கொண்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருப்பது கூடுதல் செய்தியாகும்.

இதற்கிடையே அங்கு வந்த பைத்தியக்காரன் "நான் உன்னைக் கொலை பண்ணப்போறேன்டா" என்று கத்தியவாறே வேகமாக பாலபாரதியின் மீது பாய்ந்து அவருக்கு கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்துள்ளார்
======

ஹா ஹா ஹா...

அசத்தல், சூப்பர் கன்னா சூப்பர்.

சும்மா கலக்கிருக்கிறிக்கிங்க...


கூடுதல் தகவல் குரங்கிடம் மட்டும் இருந்து...
இன்னும் காந்தி தலை திருப்பவே இல்லயாம். :( காரணமான லக்கிய என்ன செய்யலாம்?

said...

//கூடுதல் தகவல் குரங்கிடம் மட்டும் இருந்து...
இன்னும் காந்தி தலை திருப்பவே இல்லயாம். :( காரணமான லக்கிய என்ன செய்யலாம்?//

வாங்க குரங்கு.. என்ன செய்ய? ஞாயித்து கிழமை அவர சிலைக்கு முன்னால போயி ஒரு கத்தல் போட சொல்லிடுவோம்.. சரியாய்டும்.. என்ன?

said...

ஹாஹா..... சூப்பர்...:-))))

said...

//ச்சின்னப் பையன் said...
ஹாஹா..... சூப்பர்...:-))))
//

வாங்க ச்சின்னப்பையன்.. பாராட்டுக்கு நன்றி..

said...

சூப்பரா இருக்கு உங்க கற்பனை கமெண்டரி...

said...

//
சரவணகுமரன் said...
சூப்பரா இருக்கு உங்க கற்பனை கமெண்டரி...
//

வாங்க சரவணகுமரன்.. வருகைக்கு நன்றி..

அப்படியே அதோட நிஜ கமெண்ட்ரி புருனோ போட்டிருக்காரு, அதையும் ஒரு எட்டு பாத்துடுங்க.. நிஜமாவே அங்க பல நல்ல விசயங்களப் பத்தி பேசியிருக்காங்க.

said...

\\அச்சச்சோ.. முரளி கண்ணன்.. ஏதோ நமக்கு தெரிஞ்ச நக்கல் மொழியில ஒரு பதிவு போட்டிருக்கேன். யாரையும் காயப்படுத்தலன்னு நெனக்கிறேன்.. அப்படி இருந்தால் மன்னிக்கவும்.
\\
வெண்பூ,
அருமையான கிண்டல் என்று சொல்ல வந்தேன்.

இது எங்கள் வட்டார மொழி வழக்கு

ஞாயிறு அவசியம் வரவும்

said...

சந்திப்புக்குப் போகாமயே இப்படில்லாம் பதிவு போடலாமா? நிறைய பேருக்குத் தெரியாமப் போச்சே :)

நல்லா ஜாலியா ரசிக்கும்படி எழுதியிருக்கீங்க.

said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
சந்திப்புக்குப் போகாமயே இப்படில்லாம் பதிவு போடலாமா? நிறைய பேருக்குத் தெரியாமப் போச்சே :)
//

வாங்க சுந்தர்.. நானும் ஆட்டத்துல இருக்கேன்றத வேற எப்படி காட்டுறது? போயிருந்தா அதப் பத்தி ஒரு சூடான இடுகை போட்டிருக்கலாம். போவாததுனால இப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு :)

//
நல்லா ஜாலியா ரசிக்கும்படி எழுதியிருக்கீங்க.
//

பாராட்டுகளுக்கு நன்றி சுந்தர்.

said...

//முரளிகண்ணன் said...
அருமையான கிண்டல் என்று சொல்ல வந்தேன்.

இது எங்கள் வட்டார மொழி வழக்கு

ஞாயிறு அவசியம் வரவும்
//

கண்டிப்பா வந்துடறேன்.. ஆமா உங்களுக்கு வீட்டில சொல்ல காரணம் கெடச்சுதா???

said...

நீங்க பதிவர் சந்திப்புக்கு போயிட்டு வந்துதான் இத எழுதியிருக்கீங்கன்னு நினைச்சேன், போகமயே இவ்ளோவா? அப்ப ஞாயித்துக்கிழமை போயிட்டு வந்தா ? அப்பா, இப்பவே கண்ணக்கட்டுதே..

said...

//ஜோசப் பால்ராஜ் said...
நீங்க பதிவர் சந்திப்புக்கு போயிட்டு வந்துதான் இத எழுதியிருக்கீங்கன்னு நினைச்சேன், போகமயே இவ்ளோவா? அப்ப ஞாயித்துக்கிழமை போயிட்டு வந்தா ? அப்பா, இப்பவே கண்ணக்கட்டுதே..
//

வாங்க ஜோசப் பால்ராஜ்.. ஞாயித்துக்கிழமை போயிட்டு வந்தா இன்னொரு மொக்க பதிவு போட்டுற மாட்டோம்...

said...

டமாஷூ டமாஷூ... ;)

said...

//Natty said...
டமாஷூ டமாஷூ... ;)
//

வாங்க Natty... வருகைக்கு நன்றி..

said...

:))

said...

pls visit here

http://maraneri.blogspot.com/2008/08/blog-post_08.html#comment-form

said...

excellent..very humorous....'pu.tha.se.vi' sevulla adi vaangunathu super....

said...

sorry for english comment

said...

என்னைப் பற்றிய அவதூறு செய்திக்கு என் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்..

இந்த தகவலை பரப்பும் உங்களை கன்னா பின்னாவென்று கண்டிக்கிறேன்..

நான் எட்டி, உதைத்ததை திரித்து, பொளேர் என்று அறைந்ததாக திரித்துக் கூறுவதில் சில வில்லங்கமான ஆட்களின் கை இருப்பதாக சந்தேகப்படுகிறேன்.

மக்கள் மன்றத்தின் முன் உண்மை வரும் வரை, என் சார்பாக ஆதிஷா உண்ணாவிரதம் இருப்பார் என்று அவர் விருப்பமில்லாமல் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.


ஸ்ப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே...
///
டிபிசிடியை அனைவரும் வரவேற்று பேசியபின், புதிய பதிவர் ஒருவர் அவரிடம் "உங்க சைட்ல புதசெவின்னு போட்டிருக்கீங்களே! அப்படின்னா என்னா? புரியலயே தயவு செஞ்சி விளக்குங்க!!" என்று கேட்டு தனது செவுளில் பொளேர் என்று அடி வாங்கியதாகத் தெரிகிறது. அந்த பதிவர் "அப்படி நான் என்ன கேட்டுட்டேன்னு இவரு இப்படி அடிக்கிறாரு? நான் இனிமே பதிவே எழுத மாட்டான்டா!!" என்று புலம்பியவாறு அந்த இடத்தை விட்டு அகன்றுள்ளார். இது குறித்து நமது நிருபரிடம் பேசிய டிபிசிடி தமிழ் வலையுலகில் ஒரு மொக்கை பதிவர் குறைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
///

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//VIKNESHWARAN said...
:))
//

வாங்க விக்கி.. எங்க இந்த பக்கம் காணோமேன்னு பார்த்தேன்.. :)

said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
pls visit here

http://maraneri.blogspot.com/2008/08/blog-post_08.html#comment-form
//

வாங்க அப்துல்லா... மீண்டும் உங்களை பின்னூட்டங்களில் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி..

said...

// தமிழ்ப்பறவை said...
excellent..very humorous....'pu.tha.se.vi' sevulla adi vaangunathu super....
//
வாங்க தமிழ்ப்பறவை.. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..


//
தமிழ்ப்பறவை said...
sorry for english comment
//
அட இதுக்கெல்லாம் போய் மன்னிப்பு கேட்டுகிட்டு.. லூஸ்ல விடுங்க..

நான் என்ன தமிழ்லயேதான் இருக்கணும்னா சொல்றேன்.. தமிழ்ல இருந்திருந்தா நல்லா இருக்கும்னுதானு சொல்றேன்.. (கமல் ஸ்டைலில் படித்துக் கொள்ளவும்)

said...

//TBCD said...
என்னைப் பற்றிய அவதூறு செய்திக்கு என் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்..

இந்த தகவலை பரப்பும் உங்களை கன்னா பின்னாவென்று கண்டிக்கிறேன்..
//
நான் வேணும்னா ஒரு மன்னிப்பு கடிதம் இல்லை பேட்டி கொடுக்கட்டா?

//
நான் எட்டி, உதைத்ததை திரித்து, பொளேர் என்று அறைந்ததாக திரித்துக் கூறுவதில் சில வில்லங்கமான ஆட்களின் கை இருப்பதாக சந்தேகப்படுகிறேன்.
//
ஓ.. நான் கொஞ்சம் கம்மியாத்தான் கற்பனை பண்ணிட்டேனா??? ஆவ்வ்வ்வ்வ்..

//
மக்கள் மன்றத்தின் முன் உண்மை வரும் வரை, என் சார்பாக ஆதிஷா உண்ணாவிரதம் இருப்பார் என்று அவர் விருப்பமில்லாமல் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
//

தற்சமயம் அந்த உண்ணாவிரதம் அசோக் பில்லர் அஞ்சப்பரில் 3ம் எண் டேபிளில் நடந்து வருவதாகவும், மாலைக்குள் அது தீவிரமடைந்து வடபழனி பொன்னுசாமியின் 6ம் எண் டேபிளுக்கு நகரும் என்றும் அதிஷா ஒரு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்..

said...

இதெல்லாம் ரொம்ப ஓவர்

said...

///இதற்கிடையே அங்கு வந்த பைத்தியக்காரன் "நான் உன்னைக் கொலை பண்ணப்போறேன்டா" என்று கத்தியவாறே வேகமாக பாலபாரதியின் மீது பாய்ந்து அவருக்கு கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்துள்ளார். ////


:))))))))))

said...

:))))))))))))

said...

10.08. 2008 நடந்த
சந்திப்பு குறித்த என் இடுகை இங்கு உள்ளது

said...

கலக்கலா இருக்குது, நல்ல கற்பனை !!!

said...

ஹாஹா.. செம கலக்கல்.. ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க.. :)