Wednesday, July 30, 2008

ஒரு பாடல் உருவாகிறது – பார்ட் 3

ஐயாக்களே..அம்மாக்களே... வலையுலக மகாஜனங்களே!! நான்பாட்டுக்கு ஏதோ எனக்கு இருக்குற அறிவை(?) வச்சி யோசிச்சி, யோசிச்சி(?) அறிவியல் கதையா எழுதி குமிச்சிட்டு(?) இருந்தா, ஒரு மனுசனுக்கு அது அடுக்கலை. நான் அந்த போட்டியில பரிசு வாங்கிட்டாம பண்ணிடனும்ன்றதுக்காக என்னை இந்த மொக்கையில இழுத்து விட்டுட்டு அவரு வேலையை பாத்துக்கிட்டு நல்ல புள்ளன்னு பேரு வாங்கிட்டு இருக்காரு.

அதனால இந்த மொக்கைக்காக திட்டறதா இருந்தா என்னை திட்டாதீங்க.. அவரை திட்டுங்க.. எல்லா புகழும் இறைவனுக்கே அப்படின்ற மாதிரி, எல்லா வசவும் பரிசலுக்கே!!! (சும்மானாச்சிக்கு பரிசல்...உல்லல்லாய்ய்ய்ய்..)

ந‌ம்ம‌ மேட்ட‌ருக்கு போவோம்..

*******

பார்ட் 1
பார்ட் 2

எல்லோரும் தலைதெறிக்க ஓடிவிட...வெண்பூ ஃபோனை எடுத்து எல்லா பதிவர்களுக்கும் கான்ஃப்ரன்ஸ் போடுகிறார்..

“எல்லாரும் மன்னிச்சிடுங்க. என்னையில்ல. பரிசல்காரனை. தெரியாம எழுதிட்டாரு. முடிஞ்சா நான் பார்ட் 3 ல கொஞ்சமாவது காமெடியா எழுதப்பாக்கறேன். ஆனா எப்ப எழுதுவேன்னு தெரியாது. எழுதுவேனா-ன்னே தெரியாது! பை.. பை...”

இனி......

"யாருய்யா இவன்.. நம்ம போனை நம்மள கேக்காம எடுத்து பேசுறான்.. லேண்ட்லைன்ல கான்ஃப்ரன்ஸ் கால்ன்றான்.." என்கிறார் டைரக்டர்.

மீஜிக்.. "அதுகூட பரவாயில்லங்க.. அந்த போன் 3 நாளா டெட். நானே டெலிபோன் டிபார்ட்மென்ட்டுக்கு போன் பண்ணி அலுத்துப் போயிட்டேன். அதுல எடுத்து பேசிட்டு போவுது பைத்தியம்"

"இப்பதான் புரியுது மீஜிக். இவன் எதுனா வலைப்பதிவரா இருப்பான். ஒருத்தருமே படிக்கலைன்னாலும் தினமும் 4 பதிவு போடுவானுங்க. யாருமே பின்னூட்டம் போடுலைன்னா அவனுங்களே அனானியா பின்னூட்டம் போட்டு ஹிட் கவுண்ட் ஏத்துவானுங்க. ரொம்ப முத்திப்போயி இப்படி டெட்டான போன்ல பேசுறான். இவன் பெரும்பதிவரா இருப்பான்னு நினைக்கிறேன்"

'டொக்..டொக்..'

"இவனை விடுங்க, கதவை யாரோ தட்டுறாங்க. யாருன்னு பாருங்க"

கதவைத் திறந்தவுடன் டைரக்டர் டெர்ரராகிறார்.. அங்கே நிற்பது..

கார்த்திக், எஸ்.ஜே.சூர்யாவுடன்..... ஜே.கே.ரித்தீஷ்..

டைரக்டர் மனதிற்குள் 'இன்னிக்கு காலையில ராசிபலன்ல எதிர்பாராத வரவுன்னு போட்டிருந்தப்பவே டவுட் ஆனேன். இப்படி மாட்டிகிட்டேனே' என்றவர் சத்தமா "வாங்க..வாங்க.. நீங்கல்லாம் வருவீங்கன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை, என் பொண்டாட்டியோட சின்ன பாட்டி வயசுக்கு வந்துட்டாங்களாம். இப்பதான் போன் வந்தது.. மன்னிக்கணும் நான் உடனே கிளம்பியாகணும்" என்றவாறே எஸ்ஸாகிறார்.

தப்பிக்க வழியில்லாமல் மீஜிக் நடுங்கி கொண்டே உட்காருகிறார்.

கார்த்திக்: நாங்க.... இங்க... எதுக்கு... வந்தமுன்னா... இப்ப.. எனக்கு அரஷியல்ல... கொஷ்சம்.. ரெஸ்ட் கிடைச்சிருக்கு

மீஜிக் (மனதிற்குள்): 'அதுக்கு மறுபடியும் படத்துல‌ நடிக்கப் போறியா? வேணான்டா த‌மிழ்நாடு தாங்காது'

கார்த்திக்: நான் ஒரு படம்... ப்ரொட்யூஷ்... பண்ணப்போறேன்.. அதை ஸீர்யா டைர‌க்ட்.. பண்றாரு.. ரித்தீஷ் தம்பிதான் ஹீரோவா நடிக்கப்போறாரு..

மீஜிக் : 'உலகம் அழிஞ்சிரும்டா மக்கா' (ச‌த்த‌மாக‌) அதுக்கு...

எஸ்.ஜே: நீங்க‌தான் ம்யூஸிக் போட‌ணும்...

மீஜிக் : 'உன் ப‌ட‌த்துக்கு எதுக்குடா த‌னியா ம்யூசிக்..எதோ ரெண்டு பாரின் சி.டி.யிலருந்து சவுண்ட் எஃபக்ட் காப்பி பண்ணாபோதாதா'.. க‌ண்டிப்பா ப‌ண்ணிட‌லாம் சார்.

ரித்தீஷ்: ப‌ட‌த்துக்கு டைட்டில் "பாட்ஷா" அப்ப‌டின்னு வெச்சிக்க‌லாமா?

மீஜிக் : 'வாடா உன்னைத்தான் எதிர்பாத்துகிட்டு இருக்கேன்! கமல் முடிஞ்சது அடுத்தது ரஜினியா?' சார் டைட்டானிக் அப்ப‌டின்னு வேணும்னா வெக்க‌லாமே?

ரித்தீஷ்: ந‌ல்லாயிருக்கே.. இந்த‌ ப‌ட‌த்துக்கு அப்புற‌ம் ந‌டிக்க‌ப்போற‌ அடுத்த‌ ப‌ட‌த்துக்கு இந்த‌ பேரையே வெச்சிக்கிறேன்..

மீஜிக் : 'ஆஹா.. இன்னும் ஒரு ப‌ட‌மா... நானெல்லாம் இன்னும் கான‌ல் நீர் பாதிப்புல‌ இருந்தே வெளியில‌ வ‌ருல‌'

ரித்தீஷ்: சூர்யா சார்... இந்த‌ ப‌ட‌த்துக்காக‌ நான் எதுனா கெட்‍அப் சேஞ்ச் ப‌ண்ண‌னுமா?

மீஜிக் : 'ப‌ண்ணிட்டாலும்'

சூர்யா : ஆஆ.. அதெல்லாம் தேவையில்ல‌.. நான் ரொம்ப‌ இய‌ற்கையா எல்லாத்தையும் காட்டுவேன்..

மீஜிக் : 'ஆமா.. எல்லா நடிகைகளையும் இவரு ரொம்ப‌ இய‌ற்கையா காட்டுவாரு'

ரித்தீஷ்: இந்த படத்துக்கு எனக்கு ஆஸ்கார் அவார்டு கெடக்கணும். நீங்கதான் பொறுப்பு. என்னா செலவானாலும் பரவாயில்ல..

மீஜிக் : 'அட‌ப்பாவி! அது என்னா அர‌சாங்க‌ அவார்டா! ஆளுங்க‌ட்சி மேடையில‌ எதிர்க‌ட்சிகார‌னை கெட்ட‌வார்த்தையில‌ பேசுனா குடுக்குற‌துன்னு நென‌ச்சியா!'


கார்த்திக்கின் செல்போன் அடிக்கிறது.

கார்த்திக் போனை எடுத்து "ஷொல்லுங்க...நான் கட்சித்தலைவர்தான்... பேசுறேன்..என்னது கட்ஷியில.. சேரப்போறீங்களா..ஒரு நிமிஷம்.." என்றவர் மீஜிக் பக்கம் திரும்பி "என் கட்ஷி பேர் மறந்துட்டேன்.. உங்களுக்கு.. ஞாபகம் இருக்கா?" என்கிறார்.

மீஜிக்: 'உருப்பட்டாப்புலதான்.. எதாவது சொல்லுவோம்.. வெளங்காத வெண்ணை கட்சின்னு சொல்லுவோம்'.. வெ.வெ.க அப்படின்னு ஷொல்லுங்க..ச்சீ.. சொல்லுங்க..

கார்த்திக் போனில்.. "அப்படியா.. உடனே வர்றேன்.." என்றவர் மற்றவர்களிடம் "வாங்க ஸீர்யா..ரித்தீஷ் தம்பி.. போய் அவரை பாத்துட்டு அப்புறமா வரலாம்" என்றவாறு கிளம்புகிறார்.

எல்லாம் சென்றவுடன் "அப்பாடா!! எனக்கு நேரம் நல்லா இருக்கு!! வேற எவனுக்கோதான் சரியில்லன்னு நெனக்கிறேன்.. போன் பண்ணி தனக்கு தானே சூனியம் வெச்சிகிட்டான்" என்றாவாறு உட்கார,

'டொக்..டொக்..'

சென்று கதவைத் திறக்கிறவர் அதிர்ச்சியின் எல்லைக்கே போகிறார். அங்கே..

****

இந்த இடத்திலிருந்து திருப்பூர் தங்கம், நொய்யல் ஆற்றங்கரை நல்லவர், கொங்கு நாட்டு சிங்கம் அண்ணன் பரிசல் தொடர்வாராக...

29 comments:

said...

மீ த பஷ்டு?????

said...

//இப்படி டெட்டான போன்ல பேசுறான். இவன் பெரும்பதிவரா இருப்பான்னு நினைக்கிறேன்//

பதிவுலகத்திலே இதெல்லாம் சாதாரணமப்பா!!!!

said...

//மீஜிக் : 'அட‌ப்பாவி! அது என்னா அர‌சாங்க‌ அவார்டா! ஆளுங்க‌ட்சி மேடையில‌ எதிர்க‌ட்சிகார‌னை கெட்ட‌வார்த்தையில‌ பேசுனா குடுக்குற‌துன்னு நென‌ச்சியா//

:-)))))))))))))))))))))

said...

கடந்த நான்கு நாட்களாக ஆபிஸில் கன்னா பின்னாவென்று உங்க வீட்டு எங்க வீட்டு ஆணியெல்லாம் பிடுங்கிக் கொண்டிருப்பதால் உங்கள் பக்கங்களுக்கு வரமுடியவில்லை. வந்தாலும் பின்னூட்டமிட முடியவில்லை. இன்னும் 2 நாளில் முழு பலத்துடன் திரும்ப வருவேன் மொக்கை பின்னூட்டங்களுடன்..

said...

சீரியஸா சொல்றேன் வெண்பூ...

வேற தலைப்பு வெச்சிருக்கலாம் நீங்க. யாருமே வர பயப்படறாங்க. என்னை எத்தனை பேர் திட்டினாங்க தெரியுமா?

இன்னொண்ணு, இதோட நாலாவது பார்ட்டை நான் எழுதினா என்னை பதிவுலகத்துலேர்ந்து விலக்கி வெச்சுடுவாங்க”ன்னு கேள்விப்பட்டேன். சோ, நான் எஸ்கேப்பூ!

said...

# கார்த்திக் டயலாக் ஷூப்பர்!

# ஜே.கே. ஆர். பார்ட் கலக்கல்!

மொத்தத்துல உங்கள எழுதச் சொன்னது தப்பில்லன்னு நிருப்பிச்சிட்டீங்க!

said...

:-)))....

said...

வெண்பூ, ஒரு விஷயத்த இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த எங்க தலயின் புகழ்பரப்பும் பதிவில் பதிவு பண்ண விரும்பறேன். அதென்னன்னா, இன்னைய தேதிக்கு ஒவ்வொரு பதிவரும் அவர் பேர போட்டாத்தான் ஒரு பதிவ இன்டிரஸ்டிங்கா ஆக்க முடியுங்கற நிலைமை வந்திடுச்சி. இதிலேருந்து என்ன தெரியுதுன்னா, நாங்க 2016இல் கண்டிப்பா ஆட்சிக்கு வருவோம்ங்கரதுதான்

இங்ஙனம்
இராப்
தலைவி
அகில உலக அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

said...

நீங்க எங்க தலயோட தலையெழுத்த திருத்தி ரொம்பச் சரியா எழுதினதால, உங்களுக்கு நாங்க ஆட்சிக்கு வரும்போது ஒரு நல்ல இலாக்காவா ஒதுக்கலாம்னு எங்க மன்றத்தில் முடிவு பண்ணி இருக்கோம்

said...

//ச்சின்னப் பையன் said...
மீ த பஷ்டு?????
//
ஆமா..ஆமா..

//
பதிவுலகத்திலே இதெல்லாம் சாதாரணமப்பா!!!!
//
ஹி.ஹி..

said...

//பரிசல்காரன் said...
மொத்தத்துல உங்கள எழுதச் சொன்னது தப்பில்லன்னு நிருப்பிச்சிட்டீங்க!
//

அவ்வ்வ்வ். என்னை பரிசல் திட்டிட்டாரு... :)

said...

//Vijay Anandh said...
:-)))....
//

வாங்க விஜய் ஆனந்த்..வருகைக்கு நன்றி..

said...

//rapp said...
நாங்க 2016இல் கண்டிப்பா ஆட்சிக்கு வருவோம்ங்கரதுதான்
//

இப்பவே கண்ண கட்டுதே...

//ஒரு நல்ல இலாக்காவா ஒதுக்கலாம்னு எங்க மன்றத்தில் முடிவு பண்ணி இருக்கோம்//

அவ்வ்வ்.. மின்சார இலாகா மட்டும் வேணாம்.. எல்லாரும் கெட்ட வார்த்தையிலேயே திட்டுவாங்க..


என்னையும் இப்பவே உங்க மன்றத்துல சேத்துக்குவீங்களா??? பொருளாளர் பதவி கொடுத்தா உத்தமம்.

said...

பொருளாளர் பதவி ஏற்கனவே அண்ணன் அப்துல்லாவால் செவ்வனே அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் :):):)

said...

வருங்கால நிரந்தர முதலமைச்சர் அண்ணன் ஜேகே வாழ்க!!!

said...

:) நான் படிச்சிட்டேன்...

said...

//ரித்தீஷ்: சூர்யா சார்... இந்த‌ ப‌ட‌த்துக்காக‌ நான் எதுனா கெட்‍அப் சேஞ்ச் ப‌ண்ண‌னுமா?

மீஜிக் : 'ப‌ண்ணிட்டாலும்'
//

LOL!!

that was too funny

said...

//கார்த்திக் போனை எடுத்து "ஷொல்லுங்க...நான் கட்சித்தலைவர்தான்... பேசுறேன்..என்னது கட்ஷியில.. சேரப்போறீங்களா..ஒரு நிமிஷம்.." என்றவர் மீஜிக் பக்கம் திரும்பி "என் கட்ஷி பேர் மறந்துட்டேன்.. உங்களுக்கு.. ஞாபகம் இருக்கா?" என்கிறார்.

மீஜிக்: 'உருப்பட்டாப்புலதான்.. எதாவது சொல்லுவோம்.. வெளங்காத வெண்ணை கட்சின்னு சொல்லுவோம்'.. வெ.வெ.க அப்படின்னு ஷொல்லுங்க..ச்சீ.. சொல்லுங்க..
//

:) :)

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.

Anonymous said...

//வெண்பூ, ஒரு விஷயத்த இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த எங்க தலயின் புகழ்பரப்பும் பதிவில் பதிவு பண்ண விரும்பறேன். அதென்னன்னா, இன்னைய தேதிக்கு ஒவ்வொரு பதிவரும் அவர் பேர போட்டாத்தான் ஒரு பதிவ இன்டிரஸ்டிங்கா ஆக்க முடியுங்கற நிலைமை வந்திடுச்சி. இதிலேருந்து என்ன தெரியுதுன்னா, நாங்க 2016இல் கண்டிப்பா ஆட்சிக்கு வருவோம்ங்கரதுதான்

இங்ஙனம்
இராப்
தலைவி
அகில உலக அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்//

வழி மொழிகிறேன்.

தலைவர் வாழ்க. தலைவி வாழ்க.

said...

//அதென்னன்னா, இன்னைய தேதிக்கு ஒவ்வொரு பதிவரும் அவர் பேர போட்டாத்தான் ஒரு பதிவ இன்டிரஸ்டிங்கா ஆக்க முடியுங்கற நிலைமை வந்திடுச்சி. இதிலேருந்து என்ன தெரியுதுன்னா, நாங்க 2016இல் கண்டிப்பா ஆட்சிக்கு வருவோம்ங்கரதுதான்
//


ரீப்பீட்டேய்..

கொ.ப.செ சார்புல நன்றிங்க வெண்பூ.

said...

//# கார்த்திக் டயலாக் ஷூப்பர்!

# ஜே.கே. ஆர். பார்ட் கலக்கல்!//

இதை நான் இரண்டாக்குகிறேன் :-)

( I mean, I second this)

said...

//rapp said...
பொருளாளர் பதவி ஏற்கனவே அண்ணன் அப்துல்லாவால் செவ்வனே அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் :):):)
//

அடப்பாவிகளா!! எனக்கு முன்னால இத்தனை பேரா தலையின் அருமை தெரிந்தவர்கள்...ம்ம்ம்ம்

said...

//கயல்விழி said...

:) :)

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.
//

வாழ்த்துக்களுக்கு நன்றி கயல்..

said...

//வடகரை வேலன் said...
வழி மொழிகிறேன்.

தலைவர் வாழ்க. தலைவி வாழ்க.

//

வாங்க வடகரை வேலன். மன்றத்துல உங்க பதவி என்னான்னு சொல்லவே இல்லையே????

said...

//வழிப்போக்கன் said...

ரீப்பீட்டேய்..

கொ.ப.செ சார்புல நன்றிங்க வெண்பூ.
//

வாங்க வழிப்போக்கன்.. கொ.ப.செ.பதவியும் ஃபில் பண்ணியாச்சா...

said...

//Syam said...
//# கார்த்திக் டயலாக் ஷூப்பர்!

# ஜே.கே. ஆர். பார்ட் கலக்கல்!//

இதை நான் இரண்டாக்குகிறேன் :-)

( I mean, I second this)
//

நன்றிகளையும் இரண்டாக்குகிறேன்.. I mean, double thanks...:)

said...

//அடப்பாவிகளா!! எனக்கு முன்னால இத்தனை பேரா தலையின் அருமை தெரிந்தவர்கள்...ம்ம்ம்ம்// வெண்பூவைக் கண்டிக்கிறேன். தலயை நக்கல் செய்ததோடல்லாமல், இப்படி வேறு சொல்கிறார். தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி தலைவியை கேட்டுக்கொள்கிறேன். (இதிலிருந்து எனது முந்தைய பதிவுகளை வெண்பூ படித்ததில்லை எனவு தெரிகிறது. போகவும் : பயப்படாதீங்க.. ரெண்டே ரெண்டு வரி விமர்சனம் ‍‍‍-தசாவதாரம்)

said...

//கார்த்திக்: நான் ஒரு படம்... ப்ரொட்யூஷ்... பண்ணப்போறேன்.. அதை ஸீர்யா டைர‌க்ட்.. பண்றாரு.. ரித்தீஷ் தம்பிதான் ஹீரோவா நடிக்கப்போறாரு..//
பண்ணிய பாவம் எல்லாம் அப்போ தான் கழியும் .!

said...

புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க :):):)