Monday, July 14, 2008

நீங்கள் ஒரு பின்நவீனத்துவவாதியா? ஒரு சிறு தேர்வு

வெகுநாட்களாக தமிழ்மணத்தில் சுற்றிவரும் நீங்கள் பின்நவீனத்துவவாதியா என்று ஒரு கேள்வி இருந்தால், கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.

1. பின்நவீனத்துவம் என்றால் நவீன முறையில் 'பின் ஊக்கு' தயாரிக்கும் முறை என்று நினைக்கிறீர்களா?

2. சில பதிவுகளைப் படித்தபின், சுத்தமான தமிழில் எழுதியிருக்கிறார்கள் என்பது தெரிந்தாலும் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று புரியாமல் குழம்பியிருக்கிறீர்களா?

3. அப்படிப்பட்ட பதிவுகளுக்குப் போடப்படும் பின்னூட்டங்களும் உங்களுக்குப் புரிவதில்லையா?

4. ஒரு கவிதைக்கான பின்னூட்டத்தில் 'கவுஜ' என்று எழுதி மறு பின்னூட்டத்தில் திட்டு வாங்கியிருக்கிறீர்களா?

5. இருபது வரியில் இடுகை போடவே நாக்கு தள்ளும்போது இவர்களெல்லாம் எப்படி இரண்டாயிரம் வரியில் பதிவிடுகிறார்கள் என்று வியந்ததுண்டா?

6. இயல்பியல் என்ற சொல்லை Physics என்று மொழி பெயர்க்கிறீர்களா?

7. ஒரு சில பதிவர்களில் கீ போர்டில் iyal, isam என்ற எழுத்துகள் மட்டும் அடிக்கடி பழுதடைவது ஏன் என்று தங்களுக்கு புரியாமல் விழித்ததுண்டா?

8. சுப்பிரமணியபுரம் போன்ற படங்களை பார்த்தபின் "கலையியலின் பகுதியான திரையியலின் படைப்பாக வெளியாகியிருக்கும் சுப்பிரமணியபுரத்தில் அதன் படைப்பாளி பொருளாதாரவியலை அடிப்படையாகக் கொண்ட சமூகவியலின் பேதங்களை சாடுவது நம்..." என்று எழுதாமல் "இயக்குநர் இயல்பாக கதையை நகர்த்துகிறார்" என்று எழுதுகிறீர்களா?

9. முற்றுப்புள்ளியே இல்லாமல் ஐநூறு வார்த்தைகளுடன் ஒரு வாக்கியம் எழுதுவது சாத்தியமே இல்லை என்று சத்தியமாக நம்புகிறீர்களா?

10. "இயல்பாக" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இயல்" என்ற சொல்லையும், "இசக்கிமுத்து" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இச" என்ற எழுத்துகளையும் உபயோகிப்பதில்லையா?

தேர்வு முடிவுகள்:
நீங்கள் ஏழுக்கும் மேல் 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், பொழச்சி போங்க. உங்கள இன்னும் பின்நவீனத்துவ கிருமி கடிக்கவே இல்லை.

நீங்கள் மூன்றிலிருந்து ஆறு கேள்விகளுக்கு 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், நீங்கள் பின்நவீனத்துவவாதியாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். தடுப்பு மருந்தாக தமிழ்மணத்தில் நகைச்சுவை, மொக்கை என்ற லேபிளுடன் வரும் இடுகைகளை ஒரு மண்டலத்திற்கு படித்து வரவும்.

மூன்றிற்கும் குறைவாக என்றால் உங்களுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்..."இருத்தலியலின் முக்கியப் பகுதியான நகைச்சுவையியல் மற்றும் பகடியிசத்தின் இலக்கியமாக இந்த இடுகை தமிழ் வலையுலகில் பதியப்படுகிறது என்பது தங்கள் புரிதலியலுக்கு...
...
...
முடியலடா சாமி...
"

பின்குறிப்பு: மேலும் கேள்விகள் பின்னூட்டத்தில் வரவேற்கப்படுகின்றன.

51 comments:

Anonymous said...

ஹய்.... நான் பத்துக்குமே “ஆம்” -தான் சொன்னேன்! அப்ப நான் எஸ்கேப்பா!!! :-)

பதிவு சூப்பர்!

said...

எட்டாவது கேள்வியை தவிர மற்ற அனைத்திற்கும் ஆம்

வால்பையன்

said...

நான்தான் பர்ஸ்ட்...:-))

said...

//வீரசுந்தர் said...
ஹய்.... நான் பத்துக்குமே “ஆம்” -தான் சொன்னேன்! அப்ப நான் எஸ்கேப்பா!!!
//

ஆமா வீரசுந்தர், சூப்பர் எஸ்கேப்பு...:)))

said...

//எட்டாவது கேள்வியை தவிர மற்ற அனைத்திற்கும் ஆம்

வால்பையன்//

ஹா...ஹா..ஏன் வால்,, இப்படி எதுனா ஏற்கனவே திரைவிமர்சனம் எழுதியிருக்கீங்களா என்ன???

said...

எனக்கு ஒரு கேள்வி கூட புரியல. அப்போ என்ன அர்த்தம் ??

எனக்கொரு சந்தேகம்...

என்னோட பின்னூட்ட அகராதி படிச்சுட்டு அது பின்நவீனத்துவமானு சொல்லுங்க ப்ளீஸ்...

said...

//
வழிப்போக்கன் said...
நான்தான் பர்ஸ்ட்...:-))
//

ஜஸ்ட் மிஸ்...வீரசுந்தர் முந்திகிட்டாரு..

said...

//வழிப்போக்கன் said...
எனக்கு ஒரு கேள்வி கூட புரியல. அப்போ என்ன அர்த்தம் ??//

ஆஹா... இவருகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்கப்பு. இப்படி ஆரம்பிக்கரவுங்கதான் கடைசியில பெரிய எழுத்தாளர வந்து ரத்தம் வர அறுப்பாங்க!!! (இதுல உள்குத்தெல்லாம் ஒண்ணும் இல்லீங்கோ)

// எனக்கொரு சந்தேகம்...

என்னோட பின்னூட்ட அகராதி படிச்சுட்டு அது பின்நவீனத்துவமானு சொல்லுங்க ப்ளீஸ்...
//

அதத்தான் நான் ஏற்கனவே படிச்சிட்டனே. எனக்கு நல்லா அது புரியுதுன்றப்ப அத எப்படி நான் "பின்நவீனத்துவம்"னு சொல்லுவேன்....

said...

//(இதுல உள்குத்தெல்லாம் ஒண்ணும் இல்லீங்கோ)//

சொல்ல வேண்டியத சொல்லிபோட்டு இதுல டிஸ்கி வேறயா ??

:-))

விடாது வழிப்போக்கன்....

said...

அண்ணே ... எப்படீண்ணே!?

said...

//ஹா...ஹா..ஏன் வால்,, இப்படி எதுனா ஏற்கனவே திரைவிமர்சனம் எழுதியிருக்கீங்களா என்ன???//

பின்நவீன ஆராய்ச்சியே பண்ணியிருக்கேன்

வால்பையன்

said...

ஹா ஹா ஹா, நல்ல வேளை என்னை அந்தக் கிருமி தாக்கல. ஆனா சூப்பர் செல்ப் இவாளுவேஷனா இருக்கே. செம செமக் கலக்கல். நீங்க அந்தக் கிருமியால் தாக்கப் பட்டவரா, இல்ல பிழைச்சுக்கிட்டீங்களா?

said...

//இருத்தலியலின் முக்கியப் பகுதியான நகைச்சுவையியல் மற்றும் பகடியிசத்தின் இலக்கியமாக இந்த இடுகை தமிழ் வலையுலகில் பதியப்படுகிறது என்பது தங்கள் புரிதலியலுக்கு//
அவ்வ்வ்வ்வ்வ்......... எனக்கென்னமோ அந்தக் கிருமி உங்கள சீக்கிரமே தாக்கிடும்னு தோணுது

said...

//1. பின்நவீனத்துவம் என்றால் நவீன முறையில் 'பின் ஊக்கு' தயாரிக்கும் முறை என்று நினைக்கிறீர்களா?//

அப்போ இல்லையா? நான் ஏதோ சாப்பாட்டுடைய பெயரா இருக்குமோனு நினைச்சேன். இதுக்கு இல்லை என்பதா, ஆமாம் என்பதா என்று குழப்பமாக இருக்கிறது. முதல் கேள்வியிலேயே சிக்கிக்கொண்டதால், எஸ்கேப்!!!

said...

11. எதுவுமே புரியலேன்னாக்கூட, வேறே வேலை எதுவுமே இல்லாததால், படிச்சதையே திரும்ப திரும்ப படிச்சிட்டு, அதே பதிவிலிருந்து கடைசி நாலு வரிகளை காப்பி செய்து, சூப்பர், அருமை அப்படின்னு போட்டுட்டு எஸ்கேப் ஆயிடுவீங்களா?

said...

டீச்சர் தேர்வு எழுதலாமான்னு தெரியலை.

ஆனால் இந்த 'பின்' நவீனத்துவம் பற்றிச் சரியாத் தெரியலைன்னாலும் எல்லாருக்கும் செய்வது போல உங்களையும் 'ஊக்கு'விக்கின்றேன்:-))))

said...

பின்நவீனத்துவம் குறித்த நிச்சயமற்ற போக்கும், தெளிவான சிந்தனையற்ற பிரளய மீட்சியின் பரிணாம பேதங்களும், பரிமாணப் புரிதலுமில்லாத சில கால இடைவெளியில் இது போன்ற கேள்விகள் நம்மைத் துரத்துவது இயல்பே!

இக் கேள்விகளுக்கு விடைதேடி நாம் செல்கையின் நம் எழுத்து, தெளிவற்ற குட்டை நீரின் அடியிலுள்ள முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட மனிதனாக தவிக்கிறது. ஒற்றைப்புள்ளியாய் தூரதீரத்தில் எரியும் நட்சத்திரத்தின் அகண்ட பகுதிகளுக்கிடையேயான காலபேத இடைவெளியில்.............................................
.........................
.....................???
............................
...................
.....................
.......................!!
.....................
........................
...................
...................!!

ப்ளாங்க்ஸ் ஃபில் அப் பண்ண பின்நவீனத்துவ சக்கரவர்த்தி சென்ஷியை அழைக்கிறேன்!

said...

இவ்ளோ பெரிய பின்னூட்டம் போட்டபிறகும்

நான் பின்நவீனத்துவவாதியா இல்லையா என்று தெளிவுறக் கூறாத இந்தப் பதிவரது எழுத்துகளில் தெறிக்கும் பின்நவீனத்துவத்திற்குச் சமமான பிரளய மீட்சியின் பரிமாண பரிணாமங்களுக்கிடையேயான ரௌத்ரபூதாகார.......

பதில் சொல்றீங்களா இல்லையா?

said...

ஆத்தாடி....நான் எஸ்கேப்பு...

said...

//வளர்மதி said...
அண்ணே ... எப்படீண்ணே!?
//

அதெல்லாம் அப்படித்தான்... பின்நவீனத்துவத்தைப் பத்தி எழுதாம அப்புறம் எப்படி பெரும்பதிவர் ஆகுறதாம்????

said...

//பின்நவீன ஆராய்ச்சியே பண்ணியிருக்கேன்

வால்பையன்//

ஆமா..படிச்சி பார்த்தேன். ரொம்ப பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆராய்ச்சிதான்.. (பாதிதான் படிச்சிருக்கேன். முழுசும் படிச்சி முடிச்சிட்டு சொல்றேன்) :)))

said...

//rapp said...
ஹா ஹா ஹா, நல்ல வேளை என்னை அந்தக் கிருமி தாக்கல.

.
.
அவ்வ்வ்வ்வ்வ்......... எனக்கென்னமோ அந்தக் கிருமி உங்கள சீக்கிரமே தாக்கிடும்னு தோணுது//

ஹைய்யா...நானும் பெரிய எளக்கியவாதி ஆயிடுவேனா?????

said...

//கயல்விழி said...
--1. பின்நவீனத்துவம் என்றால் நவீன முறையில் 'பின் ஊக்கு' தயாரிக்கும் முறை என்று நினைக்கிறீர்களா?--

அப்போ இல்லையா?
//

சரியாப் போச்சி...

//
நான் ஏதோ சாப்பாட்டுடைய பெயரா இருக்குமோனு நினைச்சேன். //

பாத்து.. ரெஸ்டாரண்ட் போயி ப்ரெட் ஆம்லெட் ஒண்ணு, பின்நவீனத்துவம் ரெண்டுன்னு ஆர்டர் பண்ணிடப்போறீங்க... :)))

said...

//ச்சின்னப் பையன் said...
11. எதுவுமே புரியலேன்னாக்கூட, வேறே வேலை எதுவுமே இல்லாததால், படிச்சதையே திரும்ப திரும்ப படிச்சிட்டு, அதே பதிவிலிருந்து கடைசி நாலு வரிகளை காப்பி செய்து, சூப்பர், அருமை அப்படின்னு போட்டுட்டு எஸ்கேப் ஆயிடுவீங்களா?
//

சூப்பர், அருமை :)
.
.
நீங்க மறந்த ஸ்மைலியக்கூட நான் போட்டுடேன் பாருங்க..

said...

//துளசி கோபால் said...
டீச்சர் தேர்வு எழுதலாமான்னு தெரியலை.
//

தாராளமா எழுதலாம்..எந்த தப்பும் இல்ல.. என்ன ரிசல்ட மட்டும் உங்க ஸ்டூடண்ட்ஸ் கிட்ட காட்டீடாதீங்க..

//
ஆனால் இந்த 'பின்' நவீனத்துவம் பற்றிச் சரியாத் தெரியலைன்னாலும் எல்லாருக்கும் செய்வது போல உங்களையும் 'ஊக்கு'விக்கின்றேன்:-))))
//

நீங்கள் தொடர்ந்து 'ஊக்கு'வித்தால் நாங்கள் 'பின்'வாங்க மாட்டோம் என்று உறுதியளிக்கிறேன் டீச்சர்... :)

said...

// பரிசல்காரன் said...
பின்நவீனத்துவம் குறித்த நிச்சயமற்ற போக்கும், தெளிவான சிந்தனையற்ற பிரளய மீட்சியின் பரிணாம பேதங்களும், பரிமாணப் புரிதலுமில்லாத சில கால இடைவெளியில் இது போன்ற கேள்விகள் நம்மைத் துரத்துவது இயல்பே!
//

கரெக்ட்தான்.. அந்த பின்நவீனத்துவ‌ பக்கத்தை தொறந்த உடனே நம்மள துரத்தி விட்டுருதுல்ல‌.

//
இக் கேள்விகளுக்கு விடைதேடி நாம் செல்கையின் நம் எழுத்து, தெளிவற்ற குட்டை நீரின் அடியிலுள்ள முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட மனிதனாக தவிக்கிறது. ஒற்றைப்புள்ளியாய் தூரதீரத்தில் எரியும் நட்சத்திரத்தின் அகண்ட பகுதிகளுக்கிடையேயான காலபேத இடைவெளியில்..

//

அடுத்த பின்நவீனத்துவ எளக்கியவாதி in making... be ready...

//

ப்ளாங்க்ஸ் ஃபில் அப் பண்ண பின்நவீனத்துவ சக்கரவர்த்தி சென்ஷியை அழைக்கிறேன்!
//

ஆஹா... இன்னொருத்தர வேற கூப்புடுறாரே!!!!! வசமா மாட்டுனமா???

said...

//பரிசல்காரன் said...
இவ்ளோ பெரிய பின்னூட்டம் போட்டபிறகும்

நான் பின்நவீனத்துவவாதியா இல்லையா என்று தெளிவுறக் கூறாத இந்தப் பதிவரது எழுத்துகளில் தெறிக்கும் பின்நவீனத்துவத்திற்குச் சமமான பிரளய மீட்சியின் பரிமாண பரிணாமங்களுக்கிடையேயான ரௌத்ரபூதாகார.......

பதில் சொல்றீங்களா இல்லையா?
//

பரிசல்.... போதும், போதும்..

என்ன பண்றது,, ஆபிஸ்ல வேற ஆணி சேந்து போச்சி,, ஊருக்குப் போன தங்கமணி இன்னிக்கு திரும்பி வர்றாங்கன்னு சென்ட்ரல் போனா இன்டர் சிட்டி வேற லேட்.. என்ன பண்ண???

இருந்தாலும் அண்ணன் பரிசல் அவர்களுக்கு "பின்நவீனத்துவ புதையல்", "பின்னூட்டப் புலி", "திருப்பூர் தங்கம்", "கொங்கு நாட்டு சிங்கம்" மற்றும் இன்னபிற பட்டங்களை இந்த நேரத்திலே கொடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

போதுமா சாமி...:))))

said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
ஆத்தாடி....நான் எஸ்கேப்பு...
//

அப்பிடி தப்பிச்சிக்கணும். அதுதான் நல்ல புள்ளைக்கு அழகு :))

said...

எனக்கென்னமோ நான் கொடுத்த 10 கேள்வி மட்டும் இல்லாம ச்சின்னப்பையனோட கேள்வியையும் சேத்து 11 கேள்விக்கும் பரிசல் "இல்லை"ன்னு பதில் கொடுத்திருப்பாருன்னு நெனக்கிறேன்.. என்னா சொல்றீங்க?

said...

என்னை விட்டுவிட்டு அப்படி என்ன இங்கே 'எளக்கியவாதி' சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. அப்படி எந்த 'தாரை' எளக்கி ரோடு போட்டீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன். அத்தனைக் கேள்விகளுக்குமே (ச்சின்னப் பையனோடதும் சேர்த்து) இல்லை என் பதில் சொல்லும் (பரிசலையா நக்கல் பண்ணுகிறீர்கள்?) என்னை என்ன செய்யப் போகிறீர்கள்.? (அண்ணன் சென்ஷி இருக்கும் துணிச்சல்தான்)

said...

//தாமிரா said...
என்னை விட்டுவிட்டு அப்படி என்ன இங்கே 'எளக்கியவாதி' சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது.//

ஆஹா... வாங்க, வாங்க.. அதுதான் வந்துட்டீங்களே, இனிமே என்ன கவல?

// அப்படி எந்த 'தாரை' எளக்கி ரோடு போட்டீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன். அத்தனைக் கேள்விகளுக்குமே (ச்சின்னப் பையனோடதும் சேர்த்து) இல்லை என் பதில் சொல்லும் (பரிசலையா நக்கல் பண்ணுகிறீர்கள்?) என்னை என்ன செய்யப் போகிறீர்கள்.?
//

ஒண்ணும் பண்ண முடியாது.. விஜய்க்கு கொடுத்த மாதிரி டாக்டர் பட்டமோ இல்ல மேல பரிசலுக்கு கொடுத்த மாதிரி உங்களுக்கும் "தாமிரபரணி தந்த தமிழ்பெருந்தகை" அப்படின்னு ஒரு பட்டமோ குடுத்துட வேண்டியதுதான்...

இது என்னா பட்டமளிப்பு வாரமா? வரிசையா வந்து வந்து வாங்கி கட்டிக்கிறாங்க...ச்சீ...வாங்கிட்டு பெருமையா போறாங்க...

//
(அண்ணன் சென்ஷி இருக்கும் துணிச்சல்தான்)
//

ஓ...இன்னும் அவரு வேற வருவாரு போலிருக்கு டோய்..

said...

நல்லா யோசிச்சிருக்கீங்க.. ( நல்லா பாதிக்கப்பட்டிருக்க்கீங்க)

பரிசல் அவர்களுக்கு இந்த நோய் கொஞ்சமாக முற்றிக்கொண்டுவருகிறது..பரணில் இருக்கும் குறிப்புக்கள் காலியாகவுடன் சீக்கிரமே குழப்பமான பதிவுகள் வரும்....

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
( நல்லா பாதிக்கப்பட்டிருக்க்கீங்க)
//

ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்ம் (அழுகாச்சி) நீங்க ஒருத்தர்தான்..ம்ம்ம்.. என்னை...ம்ம்ம்.. நல்லா புரிஞ்சிட்டீங்க...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

said...

:)

நல்லா இருக்குங்க...

said...

// சென்ஷி said...
:)

நல்லா இருக்குங்க...
//

நன்றி சென்ஷி..

said...

முடியலடா சாமி... :)

said...

//SanJai said...
முடியலடா சாமி... :)
//

ஹி...ஹி...என்னாலயும்தான். அதனாலதான் இப்படி ஒரு பதிவு போட வேண்டியதா போச்சி.

வருகைக்கு நன்றி சஞ்சய்..

said...

அஞ்சல குஞ்சல அருவக்கத்தாடி எழுவக்கமைனா எட்டாஸ்கோட்ட தொம்மிதி பேட்ட தொஷ்கிராஜா மொழம் பழம்

மேல இருக்கறத கண்டுக்காதிங்க வெண்பூ,
உங்க சுயபரிசோதனை கையேடு சூப்பர்.

said...

பின்நவினத்துவம் பற்றி சர்ச்சயை ஆரம்பித்துவிட்டீர்கள்.ஆம் நல்ல தொடக்கம் முடிவைப் பார்ப்போம்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

said...

//மோகன் கந்தசாமி said...
அஞ்சல குஞ்சல அருவக்கத்தாடி
//

என்னாது இது...

//
மேல இருக்கறத கண்டுக்காதிங்க வெண்பூ,
உங்க சுயபரிசோதனை கையேடு சூப்பர்.
//

வருகைக்கு நன்றி மோகன்.

said...

//பின்நவினத்துவம் பற்றி சர்ச்சயை ஆரம்பித்துவிட்டீர்கள்.ஆம் நல்ல தொடக்கம் முடிவைப் பார்ப்போம்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com//

வாங்க விஜய்...

நாங்க ஏதோ கும்மியடிச்சிட்டு இருக்கோம். நீங்க சீரியஸா(?) நினைச்சிட்டீங்க போல..

Anonymous said...

:) நீங்க எப்படி? எல்லா கேள்விக்கும் "ஆம்" பதிலா போட்டிங்களா? ;)

said...

//Thooya said...
:) நீங்க எப்படி? எல்லா கேள்விக்கும் "ஆம்" பதிலா போட்டிங்களா? ;)
//

வாங்க தூயா...நாம ரெண்டாவது டைப். அதனாலதான் தேடிப்புடிச்சி மொக்க பதிவா படிச்சிட்டு இருக்கேன்.. :)

said...

என்னாச்சு! பின்நவீனத்துவம் பத்தியெல்லாம் எழுதினா இப்பிடித்தான்.. கொஞ்ச நாளைக்கு வேற பதிவே எழுத முடியாது..

வாங்க வெண்பூ.. மனம் தளராம மொக்கை போடுங்க..

said...

அட என்ன பரிசல்... மொக்க போடுறதுக்கெல்லாம் நாம மனம் தளர்ந்துடுவமா என்ன?? வந்துட்டேன்.. சேத்து வச்ச‌ ஆணியெல்லாம் புடுங்கிட்டு இந்த வாரமே வந்துடறேன்..

said...

1. பின்நவீனத்துவம் என்றால் நவீன முறையில் 'பின் ஊக்கு' தயாரிக்கும் முறை என்று நினைக்கிறீர்களா?

ஆம்

2. சில பதிவுகளைப் படித்தபின், சுத்தமான தமிழில் எழுதியிருக்கிறார்கள் என்பது தெரிந்தாலும் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று புரியாமல் குழம்பியிருக்கிறீர்களா?

ஆமாம்

3. அப்படிப்பட்ட பதிவுகளுக்குப் போடப்படும் பின்னூட்டங்களும் உங்களுக்குப் புரிவதில்லையா?

சுமாராக(இது தமிழ் இல்லை)

4. ஒரு கவிதைக்கான பின்னூட்டத்தில் 'கவுஜ' என்று எழுதி மறு பின்னூட்டத்தில் திட்டு வாங்கியிருக்கிறீர்களா?

No

5. இருபது வரியில் இடுகை போடவே நாக்கு தள்ளும்போது இவர்களெல்லாம் எப்படி இரண்டாயிரம் வரியில் பதிவிடுகிறார்கள் என்று வியந்ததுண்டா?

Yes

6. இயல்பியல் என்ற சொல்லை Physics என்று மொழி பெயர்க்கிறீர்களா?

அமாம்ப்பா

7. ஒரு சில பதிவர்களில் கீ போர்டில் iyal, isam என்ற எழுத்துகள் மட்டும் அடிக்கடி பழுதடைவது ஏன் என்று தங்களுக்கு புரியாமல் விழித்ததுண்டா?

தெர்யாதுபா

8. சுப்பிரமணியபுரம் போன்ற படங்களை பார்த்தபின் "கலையியலின் பகுதியான திரையியலின் படைப்பாக வெளியாகியிருக்கும் சுப்பிரமணியபுரத்தில் அதன் படைப்பாளி பொருளாதாரவியலை அடிப்படையாகக் கொண்ட சமூகவியலின் பேதங்களை சாடுவது நம்..." என்று எழுதாமல் "இயக்குநர் இயல்பாக கதையை நகர்த்துகிறார்" என்று எழுதுகிறீர்களா?

நெல்ல படம்னு தெர்ஞ்சாக்க, அத்தொ பாக்குறதில்லேனு ஒரு வயக்கம்

9. முற்றுப்புள்ளியே இல்லாமல் ஐநூறு வார்த்தைகளுடன் ஒரு வாக்கியம் எழுதுவது சாத்தியமே இல்லை என்று சத்தியமாக நம்புகிறீர்களா?

அட, அமாய்யா.

10. "இயல்பாக" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இயல்" என்ற சொல்லையும், "இசக்கிமுத்து" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இச" என்ற எழுத்துகளையும் உபயோகிப்பதில்லையா?

Yes
நான் என்ன வியாதி?!

said...

பின்நவீனத்துவவாதின்னா என்னங்க அர்த்தம்? அதுவே தெரியாதே எனக்கு?

said...

//யோசிப்பவர் said...
நான் என்ன வியாதி?!//

வாங்க யோசிப்பவர்...

ஏறத்தாழ எல்லா கேள்விக்கும் ஆமாம்னு பதில் சொன்னதால உங்களுக்கு (இன்னும்) வியாதி வரலன்னு லேப்ல இருந்து ரிப்போர்ட் வந்திருக்கு. எஞ்ஜாய்...

said...

//குசும்பன் said... //

வாங்க குசும்பன். முதல் தடவையா வர்றீங்கன்னு நினைக்கிறேன். வருகைக்கு நன்றி..

//
பின்நவீனத்துவவாதின்னா என்னங்க அர்த்தம்? அதுவே தெரியாதே எனக்கு?
//

அப்படி போடு அறுவாள... அதுக்கான விளக்கம்தான் மொத கேள்வியிலயே இருக்கே...ஹி..ஹி..

said...

நான் தான் 50.. அண்னே அப்படியே இந்த பதிவ படிச்சதில பிடிசதுன்னு நாளைக்கு போட போறேன்.. ஓக்கேதானே?

said...

மீ த 50 :)