Thursday, October 2, 2008

சென்னையில் மாபெரும் பதிவர் மாநாடு

சென்னை, அக். 1:
சென்னையில் மாபெரும் பதிவர் மாநாடு நடக்க இருப்பதாக சென்னை பதிவர் சங்க தற்காலிக பொறுப்பாளர் அதிஷா தெரிவித்துள்ளார். இதன் விவரங்கள் பின்வருமாறு:

இன்று சென்னை பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த பதிவர் சங்க பொறுப்பாளர் அதிஷா, சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக பதிவர்கள் சந்தித்து மொக்கை போடாமல் இருப்பதாக கடற்கரை சாலையில் கால்கடுக்க நின்றிருக்கும் காந்தியடிகள் கவலைப்பட்டுள்ளதாகவும், இதை முன்னிட்டு வரும் அக்டோபர் நான்காம் தேதி மாலை மாபெரும் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்க ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து கொண்டு தமிழ் வளர்த்து வரும் அண்ணன் பொட்"டீ"க்கடை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை லக்கிலுக் தலைமையிலான பதிவர் படை இறுதி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த மாநாடு டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதிவர்களிடையே அரசியல் மிகுந்து இருப்பதாகவும் ஆனால் அந்த அரசியலால் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது என்பதால் எந்த டிவியும் கண்டுகொள்ள போவதில்லை என்றும் தெரிவித்தார்.

சென்னையில் இருக்கும் அனைத்து தமிழ் பதிவர்களும் அலைகடலென திரண்டு வந்து இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், மாநாடு முடிந்தபின் டமாரு கொமாருவுடன் காண்டு கஜேந்திரனை சந்திக்க செல்வதாக முடிவு செய்திருப்பதாகக் கூறினார். இந்த செய்தியை அவர் சொன்னதற்கு காரணம் தாமிரா மற்றும் வால்பையனை வரவழைக்கவே என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளன.

மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் பதிவர் முரளிகண்ணன் முழுவீச்சில் ஈடுபட்டிருப்பதால் பெரும் கூட்டம் கூடும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.

திருமணத்திற்கு பிறகு பதிவு எழுதுவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்ட தல பாலபாரதிக்கு மாநாட்டில் கறுப்புக் கொடி காட்ட வெண்பூ உள்ளிட்ட பதிவர்கள் திட்டமிட்டுள்ளதாக வந்த செய்திகளை அடியோடு மறுத்த அவர் இது போன்ற செய்திகளுக்கு வெளிநாட்டு சதியே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேல் தகவல்கள்:

நாள்: அக்டோபர் 4, 2008 (சனிக்கிழமை)

நேரம்: மாலை 6 மணி

இடம்: சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை பின்புறம்

கலந்து கொள்பவர்கள்: சென்னைவாழ் பதிவர்கள் அனைவரும்

எதிர்ப்பார்க்கப்படுபவர்கள்: புதிய பதிவர்கள் மற்றும் இதுவரை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாத பதிவர்கள்

சிறப்பு அழைப்பாளர்: பொட்"டீ"க்கடை

மேலதிக விபரங்களுக்கு..
அதிஷா மின்னஞ்சல் முகவரி - dhoniv@gmail.com
அதிஷா அலைபேசி எண் - 9941611993

சந்திப்பு குறித்த மற்ற பதிவுகள்:
அதிஷா : சென்னை வலைப்பதிவர்சந்திப்பு - 04-10-2008
முரளிகண்ணன் : அக்டோபர் 4 - சென்னை பதிவர் சந்திப்பு

22 comments:

said...

இந்த பதிவர் சந்திப்பில் மது அருந்தும் சிறப்பு நிகழ்ச்சி உண்டா. அது இருந்தால் நான் வர வில்லை. தெளிவுபடுத்தவும். , நன்றி.

இதற்க்கு முன்பு 5 to 6 முறை கடற்கரை அருகில் யாகூ அரட்டை அரங்க நண்பர்கள் மீட்டுகளில் மது அருந்துதலே பிரதான நிகழ்வு ஆக இருந்தது.

said...

YOV YAARUYAA INTHA KUPPAN...

SARAKKU ADIKKARATHILEYE KURIYAA IRUKKAAN...ITHUKKU NAA THAAN SPONSOR VERA PANNANUMAAM...

EZHAVU...SUNDA KANJI VENAA VAANGI THAREN...ADICHUTTU APDIYAE BAY OF BENGAL LA THALAI MUZHUGATTUM

said...

//
குப்பன்_யாஹூ said...
இந்த பதிவர் சந்திப்பில் மது அருந்தும் சிறப்பு நிகழ்ச்சி உண்டா. அது இருந்தால் நான் வர வில்லை. தெளிவுபடுத்தவும். , நன்றி.
//

குப்பன்,

கண்டிப்பாக கிடையாது (அச்சச்சோ.. இல்லைன்னு சொன்னா பாதி பேர் வரமாட்டாங்களே). இதற்கு முந்தைய பதிவர் சந்திப்புகளின் விவரங்களை படித்தால் உங்களுக்கு இது புரியும்.

http://venpu.blogspot.com/2008/08/102008.html
http://payanangal.blogspot.com/2008/08/10082008.html
http://www.luckylookonline.com/2008/06/blog-post_02.html
http://valpaiyan.blogspot.com/2008/08/170808.html

said...

என் தளத்தில் விளம்பரங்களை நான் அனுமதிப்பதில்லை என்பதாலும், பின்னூட்டம் என்பது பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மட்டுமே என்பதாலுல், சிவா சின்னப்பொடி என்ற பதிவரின் பின்னூட்டம் அழிக்கப்படுகிறது :(

said...

சந்திப்பு இனிமையாக நடைபெற வாழ்த்துக்கள்.. :)

said...

இந்த கலக்கல் அழைப்பு பதிவுக்காகவே நான் ஆஜர் தல..
நர்சிம்

said...

சந்திப்பு குஜாலா நடைபெற வாழ்த்துக்கள்....

:-))))..

said...

me the 8th

said...

சகலகலா சம்பந்தி அவர்களே, கொஞ்சம் தாமதித்ததினால் என்னால் மீ த பர்ஷ்டு போட இயலாத பேரிடரை என்னவென்று சொல்வேன்:(:(:(

said...

அன்னைக்கே அதைப் பத்தி ஒரு கலக்கல் பதிவு(இந்தப் பதிவைப் போலவே) பதிய வேண்டுகிறேன்:):):)

Anonymous said...

//மாநாட்டிற்கு தலைமை தாங்க ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து கொண்டு தமிழ் வளர்த்து வரும் அண்ணன் பொட்"டீ"க்கடை //

ம்ம்ம்கும் அவர் அங்கண வந்து தமிழில் பேசினாலே மழை பெய்யும்..இதில இங்கு வளர்க்கிறாரா!!! he is an aussie buddies கிகிகிகி

said...

//சென்ஷி said...
சந்திப்பு இனிமையாக நடைபெற வாழ்த்துக்கள்.. :)
//

வாழ்த்துக்களுக்கு நன்றி சென்ஷி...

said...

//narsim said...
இந்த கலக்கல் அழைப்பு பதிவுக்காகவே நான் ஆஜர் தல..
நர்சிம்
//

கண்டிப்பா வாங்க நர்சிம். சனிக்கிழமை மீட் பண்ணலாம்.

said...

//
விஜய் ஆனந்த் said...
சந்திப்பு குஜாலா நடைபெற வாழ்த்துக்கள்....
//

என்னாது குஜாலாவா? போயிட்டு வந்து சொல்லுறேன். :))))

said...

//
rapp said...
சகலகலா சம்பந்தி அவர்களே, கொஞ்சம் தாமதித்ததினால் என்னால் மீ த பர்ஷ்டு போட இயலாத பேரிடரை என்னவென்று சொல்வேன்:(:(:(
//

வாங்க வெட்டியாப்பீசர்.. மீ த பஷ்டூ போடலைன்னா என்னா? வந்து அட்டன்டன்ஸ் போட்டா போதாதா??? (ஆனாலும் அபி அப்பாட்ட நல்லா வாங்கி கட்டிகிட்டீங்க.. ஹா.ஹா.ஹா)

//
அன்னைக்கே அதைப் பத்தி ஒரு கலக்கல் பதிவு(இந்தப் பதிவைப் போலவே) பதிய வேண்டுகிறேன்:):):)
//

போட்டுட்டா போச்சி..

said...

//Thooya said...

ம்ம்ம்கும் அவர் அங்கண வந்து தமிழில் பேசினாலே மழை பெய்யும்..இதில இங்கு வளர்க்கிறாரா!!! he is an aussie buddies கிகிகிகி
//

ஆஹா.. அவரு அப்படிப்பட்ட ஆளா... கவலைப்படாதீங்க.. நானெல்லாம் பேசுற இங்கிலிபீசு கேட்டா அதுக்கப்புறம் அவரு ஆஸ்திரேலிய பிரதமரே வந்தாலும் தமிழ்லதான் பேசுவாரு :))))

said...

//(ஆனாலும் அபி அப்பாட்ட நல்லா வாங்கி கட்டிகிட்டீங்க.. ஹா.ஹா.ஹா)
//

நீங்க வேற, திட்டினது அவரா இருந்தாலாவது பரவாயில்லை, அண்ணன் கிட்ட வாங்கிக்கட்டிக்கிட்டோம்னு இருக்கலாம். வேற யாரோ தினேஷாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்........என்னையத் திட்டறதுக்கு வேறதாவது சொல்லியிருக்கலாம். ஆனா என்னை கலாய்க்கறதா நெனச்சு வேற வார்த்தை பிரயோகிச்சுட்டார் :(:(:(

said...

சரி சரி வந்து தொலைக்கிறேன்.. 'கவனி'க்கலைன்னா தெரியும் சேதி.!

said...

நான் வராவிட்டாலும் என் ஆதரவு எப்போதும் உண்டு.
நிகழ்ச்சி சிறப்பே நடந்தேற வாழ்த்துக்கள்.
பணிசுமை காரணமாக வர முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.
சந்திப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் ஆளுகொரு பதிவிட்டு என்னை மகிழ்விக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

said...

:-))))))

கண்டிப்பாக சந்திப்புக்கு வருகிறேன் :-)

Anonymous said...

யோவ்... உன்னை போயி நல்லவர், வல்லவர், தயிர் வடை, சாம்பார் சாதம் சாப்பிடுபவர் என எண்ணியிருந்தேன்....

இப்பிடி ஒரு பின்னூட்டம் இட்டு விட்டாயே??

//கலக்கல் கதை ரவி.. அவனுங்க பொது இடத்துல தம் அடிச்சிருக்கானுங்களே! போலீஸ் புடிக்காதா?? :)))//

இந்த பூனையும் பால் மற்றும் இன்ன பிற வகையறாக்களையும் குடிக்கும் என்பது இப்போதுதான் தெரிய வந்தது..

said...

//
இந்த பூனையும் பால் மற்றும் இன்ன பிற வகையறாக்களையும் குடிக்கும் என்பது இப்போதுதான் தெரிய வந்தது..
//

ஹி..ஹி.. ரொம்ப புகழாதீங்க.. எனக்கு வெக்க வெக்கமா இருக்கு.. :))