Saturday, September 20, 2008

என் அன்பு மகனே...



வீட்டிற்குள் நுழைந்ததும்
நாசியை நிறைக்கிறது
மணம்

எந்த அறைக்கு சென்றாலும்
தரையில் காண முடிகிறது
உன் திருவிளையாடலை

படுக்கையில் படுத்து
கண் திறந்தால்
பார்க்காமல் இருக்க‌
முடியவில்லை
நீ தீற்றிய ஓவியங்கள்

நான் அலுவலகம் சென்று
திரும்பும் வரை
நடந்ததெல்லாம்
இப்படி சொல்கிறது
நீ போன‌ உச்சா...


( டிஸ்கி 1: திட்டுவதற்கு முன் லேபிளை பார்க்கவும்.
டிஸ்கி 2: இந்த பதிவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எனவே விக்கியை யாரும் திட்டவேண்டாம் )

66 comments:

புதுகை.அப்துல்லா said...

வாங்க கவுஜர் வெண்பூ :))

புதுகை.அப்துல்லா said...

ஹையா மீ த ஃபர்ஸ்டு

Anonymous said...

உங்களச் சொல்லிக் குத்தமில்ல.
விக்கியப் புடிச்சு ஒதச்சா சரியாகிவிடும்.

anujanya said...

கலக்கல் கவுஜ. அழகான போட்டோ. நீங்க பதிவுக்கு ஒரு 'ஆஜர்' சொன்ன மாதிரி, இங்க பின்னூட்டத்திற்கு ஒரு 'ஆஜர்'.

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

இது ஏதும் எதிர்ப்பதிவா?

Thamiz Priyan said...

அழகா தான் எழுதி இருக்கீங்க... ஆனா வெண்பூ என்பதை இன்னும் கருப்புன்னு மாத்தலைன்னா உச்சா போயி இருப்பான்... ;)

பரிசல்காரன் said...

இதுதான் வீக் எண்ட் லொள்ளா?

(போன கமெண்ட்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிடுச்சு பார்ட்னர்!)

VIKNESHWARAN ADAKKALAM said...

இரசிகர்களின் வேண்டுகோளை நிறைவேற்றிய வெண்பூ வாழ்க...

VIKNESHWARAN ADAKKALAM said...

//இதுதான் வீக் எண்ட் லொள்ளா?//

இல்லை... இதற்கான அர்தத்தை சென்ஷியின் பதிவைக் கண்டு விளக்கம் பெறவும்....

narsim said...

இது எதிர்பதிவா, எதிர்வினையா என்பது தெரியாது.. படித்தவுடன்.. வீட்டிற்கு கிளம்பிவிட்டேன்.. என் மகனை பார்ப்பதற்கு..

அனுபவங்களை வார்த்தைகளாக வடிக்கும் பொழுது கவிதையாகத்தான் இருக்கிறது.. குழந்தைகளைப் போலவே..

நர்சிம்

குசும்பன் said...

@@@###### $$$$$$
@@@##@#@#$@#$@#@
*****@#@#@# #@@@#@@

(திட்டும் முன்பு நீங்கள் சொல்லியது போல் பார்த்துவிட்டேன்)

விஜய் ஆனந்த் said...

அருமையான கவிதை!!!

அற்புதமான சொற்பிரயோகங்கள்!!!!

நெஞ்சைத்தொடும் மையக்கருத்து!!!

மொத்தத்தில்...

கவிதை...

&$&#@&%$#@#$%&!!!!

நல்லாப்போடுறாங்கய்யா அட்டென்டன்ஸூ....

இரா. வசந்த குமார். said...

Really Good to visualise....

மங்களூர் சிவா said...

//

நான் அலுவலகம் சென்று
திரும்பும் வரை
நடந்ததெல்லாம்
இப்படி சொல்கிறது
நீ போன‌ உச்சா...
//

ஹா ஹா
:))))))))))))))))))))

மங்களூர் சிவா said...

வாங்க கவுஜர் வெண்பூ :))

மங்களூர் சிவா said...

//
VIKNESHWARAN said...

இரசிகர்களின் வேண்டுகோளை நிறைவேற்றிய வெண்பூ வாழ்க...
//

என்ன வேண்டுகோள்!?!?
பத்துநாள் ப்ளாக் பக்கம் வராததால என்ன நடக்குதுன்னே தெரியலையே!!!

:))))))

வெண்பூ said...

வாங்க அப்துல்லா.. அப்ப இதுவும் கவுஜன்னு ஒத்துக்குறீங்களா? :))

வாங்க‌ வேல‌ன்.. நான் அதுக்குதான் டிஸ்கி குடுத்துட்டேன். பாவ‌ம் விக்கி விட்டுருங்க‌, தெரியாம‌ ப‌ண்ணியிருப்பாரு :)

வாங்க அனுஜ‌ன்யா.. உங்க‌ ஆஜ‌ருக்கு ஒரு ந‌ன்றி..

வாங்க‌ முர‌ளிக‌ண்ண‌ன்.. என்னாது எதிர்ப‌திவா? நான் என் ப‌திவே போட‌ முடிய‌ல, இதுல‌ எதிர்ப்ப‌திவு வேற‌யா? :)

வெண்பூ said...

வாங்க தமிழ் பிரியன்.. அப்படின்றீங்க.. பேரை நெஜமாவே மாத்திடலாமா?? :))

வாங்க பரிசல்.. வீக் என்ட் லொல்ளா? அதுக்கு விக்கியோட பதிலை பாருங்க.. ஹா..ஹா..ஹா

வெண்பூக்கு வாழ்க சொன்ன விக்கி வாழ்க வாழ்க..

வெண்பூ said...

ஆஹா நர்சிம்.. இந்த மொக்கை கவுஜக்கி ஒரு சீரியஸ் பின்னூட்டமா??

//அனுபவங்களை வார்த்தைகளாக வடிக்கும் பொழுது கவிதையாகத்தான் இருக்கிறது.. குழந்தைகளைப் போலவே..
//

நிஜம். குழந்தைகளை குறித்து எது எழுதினாலும், மொக்கையாகவே இருந்தாலும் அவை கவிதையாவது உண்மையே..

வெண்பூ said...

இரண்டு டிஸ்கிகளையும் படித்து அதன்படி நடந்த குசும்பன் அண்ணாச்சிக்கு எல்லாரும் ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓ போடுங்கப்பா.. :)

ஆஹா.. அடுத்து விஜய் ஆனந்துக்கு இன்னொரு ஓஓஓஓஓஓ போடுங்கப்பா... பின்ன, எங்க காணம்னு கேட்டா ஒரு அட்டன்டன்ஸ் போடுவமில்ல...

வெண்பூ said...

//இரா. வசந்த குமார். said...
Really Good to visualise....
//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வசந்த். இதில் எழுதியிருப்பது நகைச்சுவைக்காக என்றாலும் இது நடந்து கொண்டிருப்பது உண்மை :)

வெண்பூ said...

//மங்களூர் சிவா said...
வாங்க கவுஜர் வெண்பூ :))
//

ஹி..ஹி.. நானும் இனிமே கவுஜர் வெண்பூன்னு போட்டுக்கலாமா? டாக்டர் விஜய் மாதிரி :))))

வெண்பூ said...

//
மங்களூர் சிவா said...

என்ன வேண்டுகோள்!?!?
பத்துநாள் ப்ளாக் பக்கம் வராததால என்ன நடக்குதுன்னே தெரியலையே!!!
//

கல்யாணம் முடிஞ்சி 10 நாள்தானே ஆகுது.. இன்னும் 80 நாளைக்கு அப்படித்தான் இருக்கும். அப்படின்னு அனுபவஸ்தர் ஒருத்தரு சொன்னாரு சிவா.. :))

சின்னப் பையன் said...

சூப்பர் கவிதை... வாழ்த்துக்கள் வெண்பூ!!!

சின்னப் பையன் said...

எங்கே அந்த விக்கி? சும்மா கிடந்த வெண்பூவை - ஐ மீன் சங்கை..... அவ்வ்வ்வ்.....

Jackiesekar said...

நான் அலுவலகம் சென்று
திரும்பும் வரை
நடந்ததெல்லாம்
இப்படி சொல்கிறது
நீ போன‌ உச்சா..// மிக அழகான ரசிக்க தக்க கவிதை, உச்சா மட்டும்தானா?

Syam said...

வருங்கால ஹீரோ....அட்டகாசமா போஸ் குடுத்திட்டு இருக்கார் :-)

Sundar சுந்தர் said...

LOL

வெண்பூ said...

//ச்சின்னப் பையன் said...
சூப்பர் கவிதை... வாழ்த்துக்கள் வெண்பூ!!!
//

நன்றி ச்சின்னப்பையன்...

//ச்சின்னப் பையன் said...
எங்கே அந்த விக்கி? சும்மா கிடந்த வெண்பூவை - ஐ மீன் சங்கை..... அவ்வ்வ்வ்.....
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))

வெண்பூ said...

//jackiesekar said...
மிக அழகான ரசிக்க தக்க கவிதை,
//

நன்றி ஜாக்கி...

//
உச்சா மட்டும்தானா
//

ஆஹா.. போதாதா? அடுத்த கவுஜக்கி மேட்டர் எடுத்து குடுத்த ஜாக்கி வால்க வால்க... :))))

வெண்பூ said...

//Syam said...
வருங்கால ஹீரோ....அட்டகாசமா போஸ் குடுத்திட்டு இருக்கார் :-)
//

வாங்க ஸ்யாம்.. பாராட்டுக்கு நன்றி..

வெண்பூ said...

//Sundar said...
LOL
//

வாங்க சுந்தர். ரசிச்சதுக்கு நன்றி..

rapp said...

ஆஹா, நான் இம்புட்டு லேட்டா, நீங்க ஏன் வீக்டேஸ்ல பதிவு போட மாட்டேங்குறீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............என்னை அப்துல்லா அண்ணே பீட் பண்ணி வெறுப்பேத்துறார் பாருங்க

rapp said...

ஹை நான் முதல் வரி படிச்சவுடன் கண்டுப்பிடிச்சிட்டேனே:):):)

rapp said...

me the 35

rapp said...

me the 35

rapp said...

ஹே வெண்பூ ட்யூட் ஒய் யு இர்ரேச்பெக்ட் மை சன் இன் லா ப்யூச்சர். ஐ த ஆங்கிரி, ஸோ கிவ் ஆதர்ஷ் ஜாங்கிரி, ஆர் ஹி கோயிங் டு பேக்கரி, ஹி நாட் போக்கிரி

rapp said...

புது மாப்பிள்ளை பொதுச் சேவை ஆரம்பிச்சிட்டார் போல:):):)

rapp said...

39

rapp said...

40

வால்பையன் said...

உண்மையில் கவிதை நல்லாருக்கு

திட்டுவதற்கு ஒன்றே ஒன்று தான்
பாசம் இருக்கலாம்
அதற்காக பையனுக்கு கேக்கு கடையையேவா வாங்கி தருவது

tamilraja said...

நான் அலுவலகம் சென்று
திரும்பும் வரை
நடந்ததெல்லாம்
இப்படி சொல்கிறது
நீ போன‌ உச்சா...
/
/
ஒருதடவை தந்தையாகி பாக்கனும்னு தோனுது!

Thamira said...

மீ த டூ லேட்டு.! படிச்சு நாலு நாளாவுது. ஏற்கனவே பின்னூட்டம் போட்டாச்சுன்னு வேற நெனப்பு.! கவிதை நல்லாருந்தது. நான் புலம்ப பலவும் இருந்தாலும் இந்த சப்ஜெக்ட் எழுதறா மாதிரி ஐடியா இப்போதைக்கு இல்லை.

சின்னப் பையன் said...

ஹையா.. மீ த 44த்...

சின்னப் பையன் said...

45

சின்னப் பையன் said...

46

சின்னப் பையன் said...

47

சின்னப் பையன் said...

48

சின்னப் பையன் said...

49

சின்னப் பையன் said...

50..!!!!!

நாமக்கல் சிபி said...

:))

இரா. வசந்த குமார். said...

In this post, the shirt color of junior and the profile picture of senior Venpus are matched....!

Senior's hand section color is in junior's body section color and vice versa...!!

Aaha..! What an Observation..!

;-)))

வெண்பூ said...

//rapp said...
ஆஹா, நான் இம்புட்டு லேட்டா, நீங்க ஏன் வீக்டேஸ்ல பதிவு போட மாட்டேங்குறீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............என்னை அப்துல்லா அண்ணே பீட் பண்ணி வெறுப்பேத்துறார் பாருங்க
//

வாங்க வெட்டியாப்பீஸர், லேட்டானா என்னா? மிஸ்ஸானாதான் பிரச்சினை.. :)

வெண்பூ said...

//வால்பையன் said...
உண்மையில் கவிதை நல்லாருக்கு
//

ஹி..ஹி.. தேங்க்ஸ்ங்க.. இதை கவிதன்னு ஒத்துகிட்டதுக்கு :)))

//
திட்டுவதற்கு ஒன்றே ஒன்று தான்
பாசம் இருக்கலாம்
அதற்காக பையனுக்கு கேக்கு கடையையேவா வாங்கி தருவது
//

நீங்க வேற... இந்த போட்டோ கொடைக்கானல்ல அவனோட பர்த்டே அன்னிக்கு எடுத்தது.. ஆனா பாருங்க ஏற்கனவே மூக்கு ஒழுகுனதுனால அவருக்கு கேக்கே வாங்கித்தரல. கேக்கில்லாமல் ஒரு பர்த்டே :(

வெண்பூ said...

// the new cinema said...
ஒருதடவை தந்தையாகி பாக்கனும்னு தோனுது!
//

தாராளாமா ஆவுங்க.. யாரு வேணாம்னு சொல்றாங்க? ஆனா பாத்துகோங்க ரெண்டு தடவைக்கு மேல தந்தை ஆகாதீங்க.. நாட்டுக்கு நல்லதில்ல, அதுதான் :)))))

முதல் வருகைன்னு நன்றி தல..

வெண்பூ said...

//தாமிரா said...
மீ த டூ லேட்டு.! படிச்சு நாலு நாளாவுது. ஏற்கனவே பின்னூட்டம் போட்டாச்சுன்னு வேற நெனப்பு.!
//

சரி... சரி.. லூஸ்ல விடுங்க.. :)

//
கவிதை நல்லாருந்தது. நான் புலம்ப பலவும் இருந்தாலும் இந்த சப்ஜெக்ட் எழுதறா மாதிரி ஐடியா இப்போதைக்கு இல்லை.
//

இதுக்கு என்னா அர்த்தம்? :)

வெண்பூ said...

//ச்சின்னப் பையன் said...
50..!!!!!
//

இந்த மொக்கைக்கும் 50வது பின்னூட்டம் போட்ட ச்சின்னப்பையன்.... எனக்கு கண்ணுல தண்ணி தண்ணியா வருது :))))

வெண்பூ said...

//நாமக்கல் சிபி said...
:))
//

வாங்க சிபி.. ஸ்மைலிக்கு நன்றி.. :)

வெண்பூ said...

//இரா. வசந்த குமார். said...
In this post, the shirt color of junior and the profile picture of senior Venpus are matched....!
//

ஆஹா.. வசந்த்.. என்னாதிது இப்படியெல்லாம் கவனிக்கிறீங்க. இப்ப நீங்க சொன்னப்புறம்தான் பார்த்தேன்.. அப்படியே பொறுந்துது.. நன்றி.

வெண்பூ said...

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு என் கேள்வியும் அவரது பதிலும் அவரது வலைதளத்தில் உள்ளன‌

http://jeyamohan.in/?p=668

Anonymous said...

:)

தமிழன்-கறுப்பி... said...

அட...

புருனோ Bruno said...

:)

வெண்பூ said...

// Thooya said...
:)
//

//புருனோ Bruno said...
:)
//

வாங்க தூயா.. வாங்க புருனோ..

ரெண்டு பேரும் போட்டிருக்குற ஸ்மைலிக்கு என்ன அர்த்தம்னு தெரியலயே!!! ரசிக்கிற மாதிரி இருக்குன்னு அஸ்யூம் பண்ணிக்கிறேன் :)

வெண்பூ said...

//தமிழன்... said...
அட...
//

வாங்க தமிழன்.. "அட.." அப்படின்னா "அட இவனெல்லாம் கவித எழுதறானேன்னு " வெச்சிக்கலமா... :)))

வருகைக்கு நன்றி..

கயல்விழி said...

குழந்தை ரொம்ப க்யூட் :)