என் மதிப்பிற்குரிய தமிழ் வலையுலக நண்பர்களுக்கு,
கடந்த சில வாரங்களாகவே என்னால் வலைப்பூ உலகில் முற்றிலுமாக இயங்க முடியவில்லை. நான் பதிவு எழுதி ஒன்றரை மாதங்கள் ஆனதே இதற்கு சாட்சி. சில வெளியில் சொல்ல இயலாத காரணங்களால் என்னால் கடந்த இரு வாரங்களாக சக பதிவர்களின் பதிவுகளை படிக்கக் கூட முடியவில்லை.
சிலர் என்னை மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் கேட்டதற்கும் என்னால் சரிவர பதில் சொல்ல முடியவில்லை அல்லது சொல்லத் தெரியவில்லை. தற்போதைய நிலை இன்னும் சில வாரங்களுக்காவது (மாதங்கள்?) தொடரும் என்பதால் என்னை நீங்கள் வலையுலகில் பார்ப்பது அரிதாகவே இருக்கும்.
ஏற்கனவே என்னுடன் மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் தொடர்பிலிருக்கும் நண்பர்கள் அவ்வப்போது அழையுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மறக்காமல் அனைவரின் பதிவுகளையும் படிப்பேன்.
சில நாட்கள் (அல்லது மாதங்கள்) கழித்து மீண்டும் பழைய வேகத்துடன் என்னால் திரும்பி வர முடியும் என்று நம்புகிறேன். அதனால் என் மொக்கையிலிருந்து உங்களுக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டதாக எண்ணி யாரும் மகிழ்ச்சியடைய வேண்டாம். :)))
சென்னையில் பதிவர் சந்திப்பு நடந்தால் கண்டிப்பாக எனக்கு தெரிவிக்கவும். வருவதற்கு முயற்சி செய்கிறேன்.
என் பதிவுகளை வாசித்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி.. நன்றி..
Showing posts with label விடுமுறைக்கடிதம். Show all posts
Showing posts with label விடுமுறைக்கடிதம். Show all posts
Monday, December 15, 2008
Subscribe to:
Posts (Atom)