Monday, December 15, 2008

என் மதிப்பிற்குரிய தமிழ் வலையுலக நண்பர்களுக்கு

என் மதிப்பிற்குரிய தமிழ் வலையுலக நண்பர்களுக்கு,

கடந்த சில‌ வாரங்களாகவே என்னால் வலைப்பூ உலகில் முற்றிலுமாக இயங்க முடியவில்லை. நான் பதிவு எழுதி ஒன்றரை மாதங்கள் ஆனதே இதற்கு சாட்சி. சில வெளியில் சொல்ல இயலாத காரணங்களால் என்னால் கடந்த இரு வாரங்களாக சக பதிவர்களின் பதிவுகளை படிக்கக் கூட முடியவில்லை.

சிலர் என்னை மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் கேட்டதற்கும் என்னால் சரிவர பதில் சொல்ல முடியவில்லை அல்லது சொல்லத் தெரியவில்லை. தற்போதைய நிலை இன்னும் சில வாரங்களுக்காவது (மாதங்கள்?) தொடரும் என்பதால் என்னை நீங்கள் வலையுலகில் பார்ப்பது அரிதாகவே இருக்கும்.

ஏற்கனவே என்னுடன் மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் தொடர்பிலிருக்கும் நண்பர்கள் அவ்வப்போது அழையுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மறக்காமல் அனைவரின் பதிவுகளையும் படிப்பேன்.

சில நாட்கள் (அல்லது மாதங்கள்) கழித்து மீண்டும் பழைய வேகத்துடன் என்னால் திரும்பி வர முடியும் என்று நம்புகிறேன். அதனால் என் மொக்கையிலிருந்து உங்களுக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டதாக எண்ணி யாரும் மகிழ்ச்சியடைய வேண்டாம். :)))

சென்னையில் பதிவர் சந்திப்பு நடந்தால் கண்டிப்பாக எனக்கு தெரிவிக்கவும். வருவதற்கு முயற்சி செய்கிறேன்.

என் பதிவுகளை வாசித்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி.. நன்றி..

36 comments:

said...

//சில நாட்கள் (அல்லது மாதங்கள்) கழித்து மீண்டும் பழைய வேகத்துடன் என்னால் திரும்பி வர முடியும் என்று நம்புகிறேன். //

சீக்கிரம் வாங்க தலை!

Wish you happy new year!!

said...

பரவாயில்ல சகா.. அழைக்கலாம் இல்லையா? பதிவேற்றாவிட்டாலும் நேரம் கிடைக்கும்போது சிறுகதைகள் எழுதி வைக்கவும்..

said...

இன்னா மாம்ஸ் இப்படி சொல்லிட்டீங்க

நீங்க இல்லாட்டி நாங்கல்லாம் இன்னா பண்றது..

ஆனாலும் பொழப்பு முதல்லதான்..

ஜல்தி ஆவோ பையா...

Anonymous said...

வத்தாத நதியெல்லாம் வத்திப்போன அந்த கடலப்பாத்து ஆறுதலடையும்...
அந்தகடலே வத்தி போன ..

பக்தர்கள் தங்களோட குறைகள அந்த கடவுள்கிட்ட சொல்லுவாங்க ஆனா அந்த கடவுளே கலங்கி நின்னா....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வ்

said...

அதானே பார்த்தேன்.. எங்கடா ஆளை காணம்னு.. நானும் ரெண்டு மூணு கதை எழுதிட்டேன்.. ஒண்ணும் பதிலை காணோம்மேன்னு.. சரி தலைவா.. வேலைய பாருங்க.. அதான் முக்கியம்.

said...

இப்ப போங்க, அப்பறம் கண்டிப்பாக வாங்க !

Anonymous said...

:(

said...

சொந்த வேலைகள்..புரிகிறது வெண்பூ. நீங்கள் மறுபடி வரும் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்போம்.

said...

அடடா...இதென்ன கலாட்டா?
அன்புடன் அருணா

Anonymous said...

புரிகிறது வெண்பூ,

காத்திருக்கிறோம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

said...

ஹேய்ய்.. டொண்ட் வர்ரிய்யா! பி ஹேப்பி!

என் பிரதர் மார்க் வாக் பேசினான். கனடால அவனுக்கு இருபது பிளாக் இருக்காம், ஒண்ணுலகூட எழுத நேரமில்லன்னான். இட்ஸ் ஓக்கேயா!

சீரியஸ்லி..

இன்னிக்குதான் நானும் நர்சிம்மும் உங்களை, நம்மளை பத்தி பேசிகிட்டிருந்தோம். அல்லாருமே பிஸியாய்ட்டாங்கப்பான்னு! கரீட்டா போட்டீங்க பதிவு!

said...

மொத்தமா ஆணி கொடுத்துட்டாங்களா

said...

கொஞ்சம் அப்பப்ப எட்டி பாருங்க

said...

//அதனால் என் மொக்கையிலிருந்து உங்களுக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டதாக எண்ணி யாரும் மகிழ்ச்சியடைய வேண்டாம். :)))//

:) :) :)

said...

வேலைன்னு டபாய்க்கிறத ஏத்துக்க முடியாது. வாரம் ஒண்ணுன்னு சண்டே மட்டும் ஒரே ஒரு பதிவு கூட போட முடியாதா? ஏமாற்றாதீர்கள் பிளீஸ்.!

said...

இன்று போய் நாளை வாராய்....

புத்தாண்டு வாந்த்துக்கள் !

பொங்கலுக்காவது ஒரு பதிவு போட்டுடுங்க...

said...

சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வாங்க...

அளவில்லா நேரத்தோடு
ச்சின்னப் பையன்

said...

என்னடா, நம்ம ஆள ரொம்ப நாளாக் காணோமே என்று நினைத்தேன். 'ஆணி' என்றால் பரவாயில்லை. அதைத் தாண்டி ஏதாவது என்றால், எங்களால் ஏதாவது செய்ய முடியும் என்றால், தயவு செய்து தெரியப்படுத்து. சீக்கிரம் திரும்பி வரும் வழியைப் பார். ஏற்கெனவே 'சூப்பர்' பின்னூட்டங்கள் எனக்குக் குறைந்து விட்டன :))

அனுஜன்யா

said...

பொழப்ப பாத்துட்டு வாங்க ஜல்லியடிப்போம்

said...

கவலைப்படாதீங்க. முதலில் குடும்பம் & இன்னபிற. வலைப் பதிவு எங்கே ஓடிறப்போகுது. அது பாட்டுக்கு இருக்கும்.

நீங்க வரும்வரை, மொக்கைகளுக்காப் பஞ்சம்? அதான் நாங்கெல்லாம் இருக்கொம்ல:-))))

said...

அதானே...

நீங்க வார வரைக்கும் எங்க டீச்சர் பத்திரமா மொக்கைகள பார்த்துப்பாங்க...

டு பரிசல்..

மார்க் வாக் ஆஸ்திரேலியாவுல இல்ல இருக்கான் ?

said...

நடந்தவைகள் நடந்தவையாக இருக்கட்டும, நடக்கப்போவது நல்லபடியாக நடக்கட்டும் . உங்கள் பிரச்சனைகளில் இருந்து சீக்கரம் வெளியே வர எல்லாம் வல்ல பரம் பொருளை வேண்டிக்கொள்கிறேன்.

said...

உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்

said...

))))))))))))

said...

me the 25th:):):)

said...

சம்மந்தி இனி நான் பிரியாணி சாப்பிடுவது பற்றி யாருடன் டிஸ்கஸ் செய்வது என நினைத்தால் மனது கலங்குகிறது:):):)

said...

சீக்கிரம் பணிகள் முடிந்து திரும்பி வாங்க சம்மந்தி:):):)

said...

MISSING YOU... HOPE ALL WELL!!!

said...

ரைட் தல

said...

அடடா வலையுலகமே கதிகலங்குது இப்படியெல்லாம் பிரேக் எடுக்ககூடாது...ரொம்ப நாளா உங்க பிளாக் அட்ரஸ் கிடைக்காம, இன்னிக்கு தான் கிடைச்சுது ஆனா இப்படி ஒரு குண்டை போட்டுடீங்க.......

said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் வெண்பூ!

said...

வருத்தமாகத்தான் இருக்கிறது..என்ன செய்ய....நல்ல நட்புக்களையும் நல்ல விஷயங்களையும் ரொம்ப நாளைக்கு விட்டுட்டு இருக்கமுடியாது.
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்...கும்க்கி.

said...

rapp said...
சம்மந்தி இனி நான் பிரியாணி சாப்பிடுவது பற்றி யாருடன் டிஸ்கஸ் செய்வது என நினைத்தால் மனது கலங்குகிறது:):):)

எல்லார்க்கும் ஒரு கவலை......

said...

Hai Venpu...

Hope Everything will become fine and wish u to get the energy back... whatever happened..!!!

This A.D.2K9 will bring good...!!!

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வெண்பூ!

said...

ஏண்ணே... இன்னும் நிலைமை சரி ஆகலயா? கூகுல் ரீடர்ல தினமும் பாக்கும்போது நினச்சுக்குவேன் இன்னிக்காவது புது பதிவு வந்திருக்குமான்னு.... சீக்கிரம் வந்து கலக்க ஆரம்பிங்க.

அண்ணே... நம்ம கடைல ஃபாண்ட் ப்ராப்ளம் சரி பண்ணிட்டேன்... இப்ப படிக்க முடியுதா பருங்க.