Monday, February 22, 2010

கொஞ்சம் சினிமா, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் கோபம்

கடந்த ஒரு மாதத்திற்குள் நான் பார்த்த இரண்டு தமிழ்ப்படங்கள் தமிழ் சினிமா ஒரு தேவையான திருப்பத்தைக் கடந்திருப்பதைக் காட்டுவதாகத் தோன்றியது. இரண்டிலும் பெரிய ஹீரோக்கள் இல்லை, ஆனாலும் பேசப்பட்ட படங்கள்.

முதலில் தமிழ்ப்படம். இத்தனை வருடங்களாக தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து சலித்த அத்தனை விசயங்களையும் அழகாக ஒரு கதைக்குள் கோர்த்து மாலையாக்கி இருக்கிறார்கள். தாலி சென்டிமென்ட் மட்டும் மிஸ்ஸிங், எப்படி மிஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆச்சர்யமான விசயம் நம் மக்கள் அந்த படத்தை எதிர்கொண்ட விதம். தியேட்டருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் சிரிக்கத் தயாராக இருக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு பேராசியர் ஞான சம்பந்தன் குறித்து சுஜாதா சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் பேச ஆரம்பித்தவுடன் நான்கைந்து ஜோக்குகளை சொல்லி தயார்படுத்தி விடுவார். அதன்பின் அவர் "இன்னிக்கு வெள்ளிக்கிழமை" என்று சொன்னாலும் நாம் சிரிப்போம் என்று சொல்வார். இந்த படமும் அதே வகைதான். ஹாட்ஸ் ஆஃப் அமுதன் & டீம்..


அடுத்த படம் நாணயம். தமிழ்ப்படத்திற்கு முற்றிலும் எதிர் வகையான சீரியஸ் டைப் படம். எஸ்.பி.பி தயாரிப்பில் வந்திருக்கும் இந்த படத்தின் ஹீரோ பிரசன்னா உலகின் பாதுகாப்பான வங்கி ஒன்றை வடிவமைக்க அவரை ப்ளாக்மெயில் செய்தே அந்த வங்கியை சிபி கொள்ளையடிக்க முயல்வதுதான் கதை. நல்ல திரைக்கதை, ஆங்காங்கே திடுக்கிடும் திருப்பங்கள் என்று நல்ல திரைப்படம்.

விளம்பரம் சரியாக இல்லாததும், அவ்வப்போது ஸ்பீட் ப்ரேக்கர் போடும் தேவையில்லாத அளவுக்கதிமான பாடல்களும் படத்தின் மைனஸ் பாயிண்ட்ஸ். ஜேம்ஸ் வசந்தன் இசையில் "நான் போகிறேன் மேலே மேலே" பாடல் கலக்கல் மெலடி, லேசான இளையராஜா டச்சுடன் இருக்கும் இந்த பாடலில் எஸ்.பி.பி.யின் குரல்.... ம்ம்ம்ம்... ரோஸ் ஈஸ் எ ரோஸ்..

***

சென்ற வார இறுதியில் வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களுடன் மாமல்ல‌புரம் சென்றிருந்தோம். உலகம் எல்லாம் ரிசஸனில் அடிபட்டாலும் ஈ.சி.ஆர்.ல் மட்டும் வளம் கொழிப்பது கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை. பங்களாக்களும் பண்ணை வீடுகளும் மட்டுமல்ல, மாமல்ல‌புரம் சென்று சேர்ந்த ஒரு மணி நேர பயணத்தில் பார்த்த வாகனங்களில் பெரும்பாலானவை மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ, ஹையர் என்ட் ஹோண்டோ, டொயோட்டோ கார்கள்தான். ஒருவேளை ஈ.சி.ஆர்.க்கு மட்டும் ரிசஸன் இல்லையோ?

***

மாமல்ல‌புரத்தில் ஐந்து ரதம் பகுதிக்கு செல்ல நாங்கள் சென்றிருந்த அதே சமயம் (பிப்ரவரி 20 மதியம்) இரண்டு அரசுப் பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ மாணவிகள் அழைத்து வரப்படிருந்தனர். நாங்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்றிருந்தபோது அவசர அவசரமாக வந்த இருவர் என்னையும் தாண்டிப் போய் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்க முற்பட்டனர். இருவரும் அந்த மாணவர்களுடன் வந்த ஆசிரியர்கள். கடுப்பான நான் "வரிசையில் வாங்க, நீங்க எல்லாம் டீச்சர்ஸ்தான, குழந்தைகளுக்கு நல்ல எக்ஸாம்பிள் செட் பண்ணுங்க" என்று கொஞ்சம் சத்தமாகவே திட்டினேன். என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

ஒருவர் மட்டும் பின்வாங்க இன்னொருவர் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆசிரியருக்கு உண்டான கடமை உணர்ச்சியில், மாணவர்களை வழிநடத்தணும் என்ற உங்க கடமைய ஆத்துலைன்னா கூட பரவாயில்ல, அடுத்தவன் திட்டுறானே என்ற உணர்ச்சி கூடவா இருக்காது? :(

இனிமேல் இங்கிலாந்தில் குடியுரிமை பெற விரும்பும் மற்ற நாட்டவர்கள் 'வரிசையில் நிற்பது' போன்ற இங்கிலாந்து நாட்டவர்களின் அடிப்படை ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம் என்று அந்த நாட்டு அரசு சென்ற வாரம் கூறியிருந்தது முற்றிலும் சரி.

டிக்கெட் வாங்கிக் கொண்டு சிற்பங்களைப் பார்க்கச் சென்றபோது அதைவிட பெரிய அதிர்ச்சி. அங்கே அரசு பள்ளி யூனிஃபார்மில் வந்திருந்த மாணவர்களுடன் பத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களின் கைகளையும் பிடித்துக் கொண்டு கலர் உடையில் அவர்களின் குழந்தைகள். ஒரு ஆசிரியர் கூட மாணவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. இவர்கள் எல்லாம் வருவதே மாணவர்களை கவனித்துக் கொள்ளதான் என்பதுகூடவா தெரியாது இல்லை புரியாது.

அரசு அலுவலர்களுக்கே உண்டான அலட்சியம், அரசு பணத்தில் தங்கள் தேவைகளை கவனித்துக் கொள்வது எல்லாமே ஒரு கட்டத்தில் பழகி விட்டாலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மனப்பான்மை நான் படித்தபோது இருந்ததை விட இன்னும் மோசமாகி இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இது நல்லதல்ல என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

ஒன்று மட்டும் வெட்ட வெளிச்சம். எதிர்கால இந்தியாவின் எந்த நல்ல தூணும் அரசுப் பள்ளிகளில் இருந்து வரப்போவதில்லை, வர வாய்ப்பிருந்தாலும் இந்த மாதிரி ஆசிறியர்கள் விடப்போவதில்லை.

37 comments:

said...

கோபம் நியாயமானது.

said...

அட விடுங்க பாஸு...

கேபிள் சங்கர்

said...

வெண்பூ - வுட்டுத் தள்ளுங்க - இதுக்கெல்லாம் கோபப்படாதீங்க - அரசு ஆசிரியர்கள் படும் பாடு உங்களுக்குத் தெரியாது - வேணாம் வுட்டுடுங்க

Anonymous said...

படங்கள் ரெண்டும் இன்னும் நான் பாக்கலை.
ஆசிறியர்கள் என்று நீங்கள் சொல்லியிருப்பது ரொம்பச்சரி

said...

ஒழுங்கு இதெல்லாம் பெரியவங்க முன்மாதிரியா இருக்கணும் என்ற நினைப்பே இல்லாத ஒரு சமூகத்துலே இருக்கோம்.

நேத்து பாம்புப்பூங்கா, குழந்தைகள் பூங்கா ரெண்டு இடத்துக்கும், நியூஸியில் இருந்து சென்னை விசிட் வந்திருக்கும் மகளுடன் போயிருந்தேன்.

கண்ணாடிக்கூண்டுக்குள் இருக்கும் பாம்புகளை, சுருட்டிவைத்த தினசரியால் தட்டுது ஒரு பெரிய பொண்ணு. 'உம்...டோண்ட் டச்' னு ஒரு சத்தம் போட்டதும் நைஸா நழுவிருச்சு.

குழந்தைகள் பூங்காவிலே 'சாம்பார் மான் வகைகள்' கூண்டுலே சின்னக் கல்லைத் தூக்கி எறிஞ்சு தன்னுடைய ரெண்டு குழந்தைகளுக்கு வெளையாட்டு காட்டுறார் ஒரு 'அப்பா' அவர்மனைவி அவர் ஏதோ உலகமகா வீரர் என்றதுபோல் பெருமை பொங்க பார்க்கிறாங்க.

'வாட் கைண்ட் ஆஃப் ரோல் மாடல் தீஸ் பீப்பிள் ஃபார் தெர் சில்ட்ரன்'

பொண்ணுகிட்டே சொல்வது போலச் சத்தமாகக் கத்துனதும், அசட்டுச்சிரிப்போடு அந்த ஆள் நடந்தார்.

எங்க இவர் உடனே சொன்னதுதான் காமடி.

"உனக்கு வயசாகிப் போச்சும்மா"

"எப்படி? ஏன்?"

'இங்கெல்லாம் இப்படித்தான்னு போய்க்கிட்டே இருக்கணும்"

இது எப்படி இருக்கு?

சிறுமை கண்டு பொங்குனா கிழவியா? பேஷ் பேஷ்

said...

/அரசு ஆசிரியர்கள் படும் பாடு உங்களுக்குத் தெரியாது/

அடப்பாவமே! சீரியஸா இப்படி ஒரு காமெடியா?

அரசு நடத்தும் அல்லது சம்பள உதவி தரும் பள்ளிகளின் ஆசிரியர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே அதாவது தெரியுமா சீனா சார்!

Anonymous said...

நாணயம் நல்ல படம் வெண்பூ.

போதிய விளம்பரமின்மைதான் காரணம்.

மேலும் இனி நல்ல படங்கள் ஓடுவது சந்தேகமே. ஒரு சில குடும்பங்கள் கையில் சினிமாத் தொழில் சிக்கி விட்டது. 10.30 மனிக்கு படம் ரிலீஸ் 10.45 க்கு வெற்றிகரகமாக ஓடும்னு விளம்பரம் பண்ணுறாங்க. இந்த வசதி நல்ல படங்களுக்கு இல்லாததால் சிரமம்தான்.

said...

துளசியம்மா..

ஆத்துக்காரர் கரீக்ட்டாத்தான் சொல்லியிருக்காரு..!

இப்பல்லாம் கோபம் பொத்துக்கிட்டு வர வேண்டிய இளசுகதான் இந்த சேட்டையையெல்லாம் செய்யுதுக..!

பொறுத்துக்க முடியாத உங்களை மாதிரியான பெருசுகதான்..?????????

said...

ஆசிறியர்கள்..


ஆவ்வ்வ்வ்வ்வ்வ்.. பனைமரத்துல தேள்கொகொட்டினனு வற பழமொழி மாதிரி, பரிசல் தலையில் அடிபட்ட, உங்களுக்கு என்னவோ ஆயிடுச்சு சகா

said...

அட விடுங்க பாஸு...

said...

நல்லா எழுதி இருக்கீங்க வெண்பூ..

said...

// எஸ்.பி.பி.யின் குரல்.... ம்ம்ம்ம்... ரோஸ் ஈஸ் எ ரோஸ்..

//

வயசாக வயசாக அந்தாளுக்கு மட்டும் எப்படித்தான் குரல் மெருகேறிக்கிட்டே போகுதோ!!??!?! இந்த லட்சணத்தில் அவர் பண்ணாத சேட்டை இல்லை.எதெல்லாம் குரலுக்கு ஆகாதோ அதைத்தான் முதலில் செய்வார் :)

said...

// மங்களூர் சிவா said...
அட விடுங்க பாஸு...

//

விடலன்னா நீங்க என்ன பண்ணப்போறீங்க?? அத மொதல்ல சொல்லுங்க :))

said...

// ஒரு சில குடும்பங்கள் கையில் சினிமாத் தொழில் சிக்கி விட்டது.

//

சினிமாத் தொழில் துவங்கிய காலத்தில் இருந்தே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில குடும்பங்களின் கையில்தான் இருந்தது.இருக்கின்றது.இருக்கும். இந்தமுறை இவர்கள்.நீங்கள் சொல்வது ஏதோ இப்போதுதான் புதிதாக சிலர் கையில் மட்டும் சிக்கி இருப்பது போல் இருக்கின்றது.

said...

சிலரை வைத்து பொதுவாக இப்படி கருத்துக்கூறலாகாது என்று மனம் சொல்லவிழைந்தாலும் வெண்பூ, துளசி சொல்வதைப்போல பெரும்பான்மையும் இப்படி இருப்பது / ஆகிக்கொண்டுவருவது வருந்தத்தக்கதே.!

said...

//உங்க கடமைய ஆத்துலைன்னா கூட பரவாயில்ல//
உங்கள மாதிரி கொஞ்சம் காபியாவது ஆத்துங்கண்ணு சொல்றீங்களா? :))

said...

ஒங்க கோபம் நியாயமானது. எல்லாரும் அப்படி இல்லைனாலும் இந்த நிகழ்வு வறுத்தமளிக்க கூடியதே.
பகிர்வுக்கு நன்றி.

said...

படிக்கும் போதே கோபமாகத்தான் வருகின்றது... எல்லா இடத்திலேயும் கோபப் முடியலை... சில இடங்களில் சும்மா வேடிக்கை மட்டும் பார்க்கத்தான் முடிகின்றது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

said...

நீங்க அவனுங்க மேல கோவப்பட்டு பிரயோஜனமில்ல.. ஏன்னா அவனுங்களுக்கு சொல்லிக் கொடுத்தத செய்யறாங்க...

said...

வெண்பூ,
பள்ளி ஆசிரியர்கள் பற்றிய உங்கள் கோவம் நியாயமானதே..

உங்கள் கோபத்துக்கு மருந்தாக என் இடுகையையும் படிச்சிடுங்க..

http://seemachu.blogspot.com/2010/02/91-from.html

said...

கும்பல் மனோபாவம் வெண்பூ...
இதையெல்லாம் மாற்ற முடியாது.பெரும்பான்மை எப்படியோ., அது சரி தவறு என்று யோசிக்காமல் போய்க்கொண்டிருக்கும் பாங்கு..

அவர்கள் கற்றுக்கொண்டதை அடுத்த தலைமுறைக்கும் செயல் வழி கற்றுத்தருகிறார்கள் போலிருக்கிறது.

நாணயம் இன்னும் பார்கலை..
தியேட்டர்களில் அதிகமாக அதை கேட்பதால் வேறு வழிதான்.

said...

ராமலக்ஷ்மி மேடம்,
கேபிள்,
சின்ன அம்மிணி,
உண்மைத்தமிழன்,
மங்களூர் சிவா,
நர்சிம்,
ஆதி,
க.ராமசாமி,
அண்ணாமலையான்,
கும்க்கி..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

said...

சீனா ஐயா.. அவர்களுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் (அ) இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் இந்த அடிப்படை ஒழுக்கங்களை எப்படி மீறலாம்? மற்றவர்களை விட ஒரு ஆசிரியர் அதை மீறும்போது என்ன விதமான எடுத்துக்காட்டு அவர்கள் மாணவர்களுக்கு செட் செய்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு மாதம் ஒரு லட்சம் சம்பளம், மாதத்தில் 10 நாட்கள் மட்டும் வேலை அதுவும் 4 மணிநேரம் என்று கூறினால் இந்த மனநிலை மாறியிருக்கும் என்று நினைக்கிறீர்களா?

ஆசிரியர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்று நாம் சொல்வது வேறு, அவர்களே அவ்வாறு நடப்பது வேறு.. உங்களுடன் இந்த கருத்தில் நான் வேறுபடுகிறேன் ஐயா..

said...

வாங்க துளசி டீச்சர்.. நல்லா சொன்னீங்க.. அவ்வப்போது என் வீட்டில் சண்டை வரும்போது கூட நான் என் தங்கமணி இருவருமே என் பையன் எதிரில் சண்டை போட்டுக்கொள்வதை கூடுமானவரை தவிர்க்கிறோம். அதே போல் அவர்கள் எதிரில் பொய் சொல்வது போன்ற சின்ன சின்ன விசயங்களை தவிர்த்தாலே அவர்களை நன்றாக வளர்க்க முடியும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொல்வது போல் இன்று மான் மேல் அப்பா கல் எறிந்தால் நாளை மகன் பஸ் மேல் எறிவான். மக்கள் புரிந்து கொள்ள மறுப்பது ஏன் என்று புரியவில்லை.

said...

வாங்க கிருஷ்ணமூர்த்தி..
//
அரசு நடத்தும் அல்லது சம்பள உதவி தரும் பள்ளிகளின் ஆசிரியர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே அதாவது தெரியுமா சீனா சார்!
//
இதைப்பத்தி தனியா ஒரு பதிவே எழுதலாம்..

said...

அண்ணாச்சி.. நானும் அப்துல்லாவோட உடன்படுறேன். சன்டிவியோ அல்லது கலைஞர் குடும்பம் சினிமாவுல இருக்குறதுனாலதான் நாணயம் மாதிரியான படம் ஓடலைன்னு சொல்றது சரியில்லைன்னு நான் நினைக்கிறேன். மாற்றங்களோட நாம எப்படி அடாப்ட் பண்ணிக்கிறோம்ன்றத பொறுத்துதான் வெற்றி பெற முடியும்.

said...

//
கார்க்கி said...
ஆசிறியர்கள்..
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்.. பனைமரத்துல தேள்கொகொட்டினனு வற பழமொழி மாதிரி, பரிசல் தலையில் அடிபட்ட, உங்களுக்கு என்னவோ ஆயிடுச்சு சகா
//

புரியலையே சகா... விளக்கம் ப்ளீஸ்.

said...

//
வயசாக வயசாக அந்தாளுக்கு மட்டும் எப்படித்தான் குரல் மெருகேறிக்கிட்டே போகுதோ!!??!?!
//

எனக்கும் இதே ஆச்சர்யம்தான் அப்துல்லா.. கடவுள்கிட்ட இருந்து இப்படி ஒரு வரம் வாங்கிட்டு வந்திருக்காங்க அவங்க எல்லாம்.

said...

//
SanjaiGandhi™ said...
உங்கள மாதிரி கொஞ்சம் காபியாவது ஆத்துங்கண்ணு சொல்றீங்களா? :))
//

அந்த வரி டைப் பண்ணுறப்பவே உங்ககிட்ட இருந்து இந்த மாதிரி கமெண்ட்தான் வரும்னு நெனச்சேன். மிஸ் பண்ணலை. :)))

said...

வாங்க ராகவன்.. வேடிக்கை பார்த்தே நாமளும் பழகிட்டோம்கிறதுதான் வருத்தமே..

வாங்க சீமாச்சு.. ஆபிஸில் ப்ளாக் படிக்க முடியாது, ரீடரிலும் உங்கள் இடுகை முழுதாக வரவில்லை. வீட்டில் படித்துவிட்டு சொல்கிறேன். வருகைக்கு நன்றி

said...

ஆசிரியர்கள் பற்றி நீங்கள் எழுதியது சரி தான். பள்ளிகளில் கூட இன்னும் அவர்கள் குழந்தைகளுக்கு தான் முக்கிய துவம். பிற குழந்தைகள் இதனால் மனதளவில் மிக பாதிக்க படுகிறார்கள்.

said...

சபாஷ் ஆ"சிறியர் "

Siva said...

Nanayam is a very good movie.

Nanayam story is stollen from the Englishe move "The Bank Job" ( year 2008) Hero is Jason Statam,

Eppudi Kandupudichom patheengala :)

said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

said...

. ஒரு ஆசிரியர் என்ற முறையில் உங்களின் கோபம் நியாயமானதுதான் .
விடுங்க பார்த்துக்கலாம் !

said...

ஒரு ஆசிரியர் என்ற முறையில் உங்களின் கோபம் நியாயமானதுதான் .
விடுங்க பார்த்துக்கலாம் !

said...

பதிவ படிச்சவுடனே அவசரப்பட்டு கமெண்ட் போட்டுட்டனோ....

ஒரு 6 மாசம் கழிச்சு போட்டிருக்கலாம்...