Monday, August 10, 2009

என்னவோ போங்க சார்!!!

ஏறத்தாழ ரெண்டு மாசமாகுது பதிவு போட்டு. ஜூலை மாசம் முழுசும் ஒரு பதிவு கூட போட முடியலை. முக்கியமான காரணம் ஆபிஸ்ல ப்ளாக்ஸை(Blogs) ப்ளாக்(block) பண்ணிட்டாங்க. ஹி..ஹி.. ரொம்ப ஓவராத்தான் ப்ளாக் படிச்சிருக்கேன் போல, கடுப்பாகிட்டாங்க. அதனால என்னோட ப்ளாக்கையே என்னால படிக்கமுடியல.

இருக்குற ஒரே வழி ரீடர்தான், அதிலயும் பதிவுகளை படிக்க மட்டும்தான் முடியும், பின்னூட்ட முடியாது. கஷ்டம்தான், வீட்டுல என்னோட பர்சனல் லேப்டாப்பும் என் பையன் கைவண்ணத்துல புட்டுகிச்சி, அதனாலதான் கொஞ்சம் லாங் கேப், அப்பப்போ பின்னூட்டம் மட்டும் போட்டுகிட்டு இருக்கேன். பாக்கலாம் மாசம் ஒரு பதிவாவது போட முடியுதான்னு. "போட்டுட்டாலும்...." அப்படின்றீங்களா?? என்னவோ போங்க சார்!!!

***************

பதிவர் முரளிகண்ணனை ரொம்ப நாளா காணோம், கண்டுபிடிச்சி குடுக்குறவங்களுக்கு என்ன பரிசு குடுக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். :)

அதேபோல கொஞ்சம் அதிகமாவே மீள்பதிவுகள் போடுற நண்பர் கார்க்கிக்கு பப்ளிக்கா ஒரு குட்டு.

சமீபத்தில் நான் ரொம்ப ரசிச்ச பதிவு நையாண்டி நைனாவோட எதிர் கவுஜகள். தபூ சங்கர் பாணி நான்கு வரி காதல் கவிதைகளை கிண்டல் அடிச்சி இவர் போடுற பதிவுகள் முற்றிலும் புதிய வகை எதிர்க்கவுஜகள். படிச்சவுடனே வாய்விட்டு சிரிக்க வைக்குது. பாராட்டுகள் அவருக்கு.

அதேபோல் நண்பர் நர்சிம். திரட்டிகளில் இருந்து விலகுன பின்னால இவரோட படைப்புகள்ல ஒரு வேகம், வித்தியாசத்தைக் காட்டுற முனைப்பு எல்லாம் தெரியுது. நடந்த பிரச்சினைகளை ஏணிப்படியா உபயோகிச்சிகிட்ட அவரோட திறமைக்கு ஒரு சல்யூட். அதனால அவரை இனிமே திரட்டிகள் உள்ளாறயே விட வேணாம்னு சொல்றியாடான்னு கேக்குறீங்களா? என்னவோ போங்க சார்!!!

***************

நண்பர் ஓசை செல்லா புதுசா ப்ளாக்சாய் அப்படின்னு ஒரு தளம் ஆரம்பிச்சிருக்காரு. முதல் பார்வையில ஒரு வித்தியாசமான ப்ளாக் அக்ரிகேட்டர் மாதிரி தெரியுது. அவரது முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.

அதுக்காக அவர் அனுப்பிய மெயிலில் தவறுதலாக எல்லா மெயில் ஐடிகளையும் டூ அட்ரஸிலேயே போட்டுவிட அதற்கு எல்லோரும் "ரிப்ளை டூ ஆல்" போட, அந்த அட்ரஸ்களை எடுத்து சிலர் அட்வர்டைஸ்மென்ட் அனுப்ப என்று ஒரே களேபரம். நான் போய் "ரிப்ளை டூ ஆல்" போடாதீங்க, அட்வர்டைஸ்மென்ட் அனுப்பாதீங்கன்னு சொன்னவுடனே "நீ என்ன பெரிய பில்கேட்ஸா?" என்ற ரீதியில் வந்த பதில்களில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை.

அந்த பதிலை அனுப்பிய புத்திசாலிகள் மன்னிக்கவும் அதிபுத்திசாலிகள் இருக்கும் இடத்தில் என்னை போன்ற கோயிந்துகளும் இருப்பார்கள் என்பது புரியாமல் "உன் டவுசரை அமுக்குவேன்" என்ற ரீதியிலான மின்னஞ்சல்கள் அனுப்பினால் நான் பயந்துவிட மாட்டேனா? அது கூடவா சார் உங்களுக்குத் தெரியாது? என்னவோ போங்க சார்!!!

****************

உரையாடல் போட்டியில் வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்ற இருபது கதைகளையும் படிச்சிட்டேன், அதனால தைரியமா வாழ்த்துவேன். :)

எதிர்பார்த்தது போலவே முடிவில் சில ஆச்சர்யங்கள். கண்டிப்பாக பரிசு பெறும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில கதைகள் பரிசு பெறாமல் போனது குறித்த விமர்சனங்கள் எழுகின்றன. நண்பர் ஜமால் அழகாக சொல்லியிருப்பதை இங்கே கோடிட்டுக் காட்டுகிறேன்.

//
நண்பர் பைத்தியக்காரன்-சுந்தரின் முடிவு அறிவிப்பில் குறிப்பிட்டதுபோல, இது ஒரு தேர்ந்தெடுப்பு. இது மதிப்பீடு அல்ல. இதில் குறைநிறைகள் இருக்கும். அது தேர்வாளர்களின் தனிப்பட்ட அனுபவம் மற்றும் பயிற்ச்சி சார்ந்தது.
//

இந்த முறை பரிசு பெற்ற கதைகளில் பொதுவான அம்சமாக எனக்குத் தென்படுவது "கட்டுடைப்பு". சரியா சுந்தர்ஜி & பைத்தியக்காரன்?

ஆமா உன் கதை என்னாச்சின்னு கேக்குறீங்களா? முதல்லயே நடுவர்கள் யாருன்னு தெரிஞ்சிருந்தாலாவது அவங்களை பாத்து "நானெல்லாம் இங்க சிறுகதை எழுத்தாளார்னு ஃபார்ம் ஆயிட்டேன்யா, என்னையும் ஜீப்புல ஏத்திக்குங்கய்யா"ன்னு கெஞ்சி கூத்தாடி ஜீப்ல ஏறியிருக்கலாம், கடைசி வரைக்கும் நடுவர்கள் யார்ன்றத சொல்லாமயே வெச்சிட்டாங்க நம்ம ஆளுங்க, என்னவோ போங்க சார்!!!

****************

ஆமா இது நீ வழக்கமா எழுதுற "துணுக்ஸ்"தானே, தலைப்பை மாத்தி வெச்சு ஏமாத்துறியாடான்னு கேக்குறீங்களா? என்னவோ போங்க சார்!!!

27 comments:

said...

துணுக்ஸ் வேற பேர்ல வந்தாலும் நொறுக்ஸ்..

said...

‘என்னத்த கன்னையா’ போல ‘என்னமோ போங்க வெண்பூ’ன்னு பெயர் எடுக்கிற ஐடியாவா:))? எல்லா சலிப்பும் நல்லாத்தான் இருக்கு:)!

said...

எங்க ஆபிஸ்லேயும், வெள்ளிக்கிழமைலேந்து பிளாக், ரீடர்,மெயில் எல்லாத்துக்கும் வெச்சிட்டாங்க ஆப்பு.

கிடைக்கும் நேரத்தை உருப்படியா செலவழிக்க பழகனும்

said...

:)

Anonymous said...

/ராமலக்ஷ்மி said...

‘என்னத்த கன்னையா’ போல ‘என்னமோ போங்க வெண்பூ’ன்னு பெயர் எடுக்கிற ஐடியாவா:))? எல்லா சலிப்பும் நல்லாத்தான் இருக்கு:)!
//

என்னமோ போங்க வெண்பூ ஆதரவாளர்கள் சங்கம் ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். :)

said...

சின்ன அம்மிணி said...
//என்னமோ போங்க வெண்பூ ஆதரவாளர்கள் சங்கம் ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். :)//

நல்ல ஐடியா, எனக்கும் அதில ஒரு பதவி கொடுங்க:)!

said...

என்னவோ போங்க சார்!!!

said...

என்னவோ போங்க சார்!!!

என்னையும் ரவடி லிஸ்ட்லே சேர்த்து ஜீப்புலே ஏத்திடீங்க.

நன்றி.

said...

அன்பு வெண்பூ,

"உரையாடல் போட்டி முடிவுகள்" இடுகையில் கொஞ்சம் அவசரத்தில் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுக்காமல் நான் போட்ட பின்னூட்டத்திற்கு தவறான அர்த்தம் கொள்ளப்பட்ட வேளையில் அதை சரியாகப் புரிந்து கொண்டது மட்டுமில்லாமல், உங்கள் புரிதலை அங்கேயே பின்னூட்டமாக போட்டதற்கும் நன்றி.

நீங்கள் மீண்டும் களத்திற்கு வந்து "கடைசி ஆசை (Empire of Japan)", "சுழல் கதைகள்" போன்று கலக்கிட வாழ்த்துகள்.

said...

என்னவோ போங்க சார்...

----------------


நான் போட்ட பின்னூட்டமும் கவணிக்கப்படுது -- ஆச்சர்யம் கலந்த சந்தோஷம்.

said...

என்ன மாசத்துக்கு 1 எல்லாம் ஓவர்..பத்து படிக்க நாங்க இருக்கும் கொஞ்சம் கவுண்ட அதிகமாக்க கூடாதா?

said...

அப்பப்ப வாங்க வெண்பூ!

said...

வருக ....வருக

said...

"என்னவோ போங்க சார்!!!இப்பிடில்லாம் சொன்னாக் கூட நாங்க முழுசாப் படிச்சுட்டுத்தான் போவோங்க!"

Anonymous said...

என்னமோ போங்க வெண்பூ அடிக்கடி எழுத மாட்டேங்கிறீங்க.

said...

செம்ம.. செம்ம.. செம்ம.!

said...

என்னவோ போங்க... இது நான் எழுதுன மாதிரியே இருக்கு :( நம்ம கடை திறந்து வாரம் 3 ஆச்சு. :(

said...

துணுக்ஸ் நல்லா இருக்குது சார்...
வாழ்த்துக்கள் ஃபார் கம்பேக்...

said...

///வடகரை வேலன் said...

என்னமோ போங்க வெண்பூ அடிக்கடி எழுத மாட்டேங்கிறீங்க.///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

said...

பிரியாணி டேஸ்டாதான் இருக்கு!

அடிக்கடி விருந்து படைக்கலாமே!

said...

வந்தாச்சா? ரைட்டு..

இனிமேல் மீள்பதிவு கிடையாது சகா.. :)))

ஆனா நான் சொல்றது இந்த மாசம்..

கட்டுடைப்பா? அப்படின்னா? என்னவோ போங்க சகா..

said...

Welcome Back.

முடிந்த போதெல்லாம் எழுதுங்க வெண்பூ. உங்களுக்கு நிறைய வாசகர்கள் இருக்காங்க (என்னையும் சேர்த்து). குறிப்பாக அறிவியல் புனைவுகள்.

அனுஜன்யா

said...

// "ரிப்ளை டூ ஆல்" போடாதீங்க, அட்வர்டைஸ்மென்ட் அனுப்பாதீங்கன்னு சொன்னவுடனே //

தல அது பாட்டுக்கு சும்மா தான் இருந்துது.நீங்க தான் ரிப்ளை டூ ஆல் குடுத்து ஆரம்பிச்சு வெச்சீங்க
ஆனா அதுவும் நல்லாத்தான் இருந்துது
ரிப்ளை டூ ஆல் குடுக்காதிங்கனு சொல்லி நீங்க ஏன் எல்லாருக்கும் ரிப்பளை பண்ணுரீங்கன்னு ஆரம்பிச்சு
நல்லா காமடியாவே போச்சு :-))

அப்பப்போ வந்து தலைய காட்டீட்டு போங்க தல :-))

said...

ரொம்ப நாள் கழிச்சு இப்படி ஒரு பதிவு , என்னவோ போங்க வெண்பூ

said...

வெண்பூ நீங்களும் வந்துட்டீங்க. நானும் வந்துட்டேன்

said...

பாரேன்.. இந்த புள்ளைக்குள்ளயும் என்னவோ இருக்கு.. என்னவோ போங்க சார்.. :)

said...

சலிச்சுகறதில நம்மள மிஞ்சுருவீங்க போல...

என்னத்த எலுதி, என்னத்த படிச்சி...என்னத்த ஆவப்போவுது சொல்லுங்க.....