Thursday, October 30, 2008

பேய் பிடித்தவன் (சிறுகதை)

எனக்கு அவனை பாத்தாலே பயமா இருக்கு. மந்திரவாதியாம், எதிர்ல சடைய விரிச்சி போட்டுகிட்டு நெத்தி நெறய விபூதியோட நடுவுல அம்மாம் பெரிய குங்கும பொட்டு.. அவன் அடிக்கிற உடுக்கை சத்தம் வேற காது டமாரமே கிழிஞ்சிடும் போல இருக்கு..

எனக்கு பேய் புடிச்சி இருக்காம். ஏன்டா.. பேய் உங்கள மாதிரி படிக்காதவனுங்களாதானடா புடிக்கும். நான் படிச்சவன்டா. எங்க ஊர்லயே மொத மொதலா காலேஜ் போய் எம்.எஸ்.சி பயோ டெக் படிச்சவன்டா நானு. என்னை எந்த பேய்டா புடிக்கப்போவுது? யார்றா இப்படி ஒரு புரளிய கெளப்புனது!!

இந்த இடமே ஒரு மாதிரி பயமாத்தான் இருக்கு. என் கைய வேற ரெண்டு பக்கமும் ரெண்டு பேரு இழுத்து புடிச்சிட்டு இருக்கானுங்க. அவனுங்கள பாத்தா இந்த‌ ம‌ந்திர‌வாதியோட‌ சிஷ்ய‌னுங்க‌ மாதிரி ரெண்டு பேர் இருக்கானுங்க‌. ம‌ந்திர‌வாதிக்கு கொஞ்ச‌மும் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ மாதிரி ரெண்டு பேர், அதுல‌ ஒருத்த‌ன் என்னை விட‌ வய‌சு க‌ம்மியா இருந்தான்.

ம‌ந்திர‌வாதி கேக்குற‌ எந்த‌ கேள்விக்கும் ப‌தில் சொல்ல‌க்கூடாது. இவ‌ன் ஏற்க‌ன‌வே என‌க்கு பேய் புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு இருக்கான். நான் பேசுனா அத‌ வெச்சி எதுனா த‌ப்பா புரிஞ்சிகிட்டாலும் புரிஞ்சிக்குவான்.

போன‌ வார‌ம் இப்ப‌டித்தான். டவுனுக்கு போனப்ப ப‌ண்ணையாரோட‌ பொண்ணை பாத்து பேசிட்டு இருந்தேன். சின்ன‌ வ‌ய‌சில‌ இருந்தே என்கூட‌ ப‌டிச்ச‌ பொண்ணு அது. சிரிச்ச‌ முக‌மா அழ‌கா இருக்கும். எங்க‌ பாத்தாலும் பேசிட்டுதான் போகும். எதோ க‌ம்ப்யூட்ட‌ர் சென்ட‌ருக்கு வ‌ந்த‌தாம். அவ‌ங்க‌ அப்பா தீவிர‌மா மாப்பிள்ளை பாத்துட்டு இருக்காராம். ரெண்டு பேரும் பேசிட்டு இருந்துட்டு ப‌க்க‌த்து க‌டையில‌ போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டோம்.

நாதாரிப்பயலுவ, எவனோ இத பாத்துட்டு தப்பா நெனச்சிட்டு பண்ணையார்கிட்டபோய் எதோ சொல்லிட்டான் போல. அந்த ஆளுக்காவது அறிவு வேணாம். ஒண்ணும் விசாரிக்காம கரும்பு காட்டுக்குள்ளாற போட்டு என்னை அடி அடின்னு அடிச்சிட்டானுங்க. மரண அடின்னு கேள்விப்பட்டு இருக்கேன். அன்னிக்குதான் அனுபவிச்சேன். ஊரை விட்டு ஓடிடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.

இன்னிக்கு என்னடான்னா இவன் எனக்கு பேய் புடிச்சிருக்குன்றான். பேய்ன்னு ஒண்ணு இல்லடா, அது மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் அப்படின்னு யார் இவனுங்களுக்கு புரிய வெக்கிறது. எங்க அப்பா அம்மா வேற எங்கன்னு தெரியல. எப்படி தப்பிக்கிறதுன்னும் தெரியலயே!!

அவன் கையில சாட்டையை எடுக்கிறான். அடப்பாவி! அந்த சாட்டையால என்னை அடிக்கப்போறீயா? போனவாரம் வாங்குன அடியே இன்னும் வலிக்குற மாதிரி இருக்கு. இதுல மறுபடியுமா? உடுக்கை சத்தம், சாம்பிராணி புகை, இவன் சொல்ற மந்திரம் இதுக்கு மேல சாட்டை அடியா? இது ஆகறதில்ல. முடிஞ்சவரைக்கும் திமிறி தப்பிக்கணும்.

கைய முறுக்கி, ஒரு கைய விடுவிச்சி, இன்னொரு கைய புடிச்சி இழுத்து, புடிச்சிட்டு இருந்தவனுங்கள விடுவிச்சிட்டு, பக்கத்துல இருந்த டேபிள் மேல காலை வெச்சி ஒரே ஜம்ப். நம்பவே முடியல. நானா இப்படி மேட்ரிக்ஸ் படம் மாதிரி ஜம்ப் பண்ணுறேன். மேல சீலிங் பேன்ல உக்காந்துட்டேன். கீழ பாத்தா யாரோ ஒரு சின்ன பையன எல்லாரும் புடிச்சிட்டு இருக்காங்க. அந்த மந்திரவாதி அந்த பையனை போட்டு அடிச்சிருப்பான் போல. அவனுக்கு விபூதி வெச்சிவிட்டு "இனிமே பிரச்சினை இல்லை" அப்படின்னு சொல்றான்.

என்னவோ! பைத்தியக்காரனுங்க. இனிமே இங்க இருக்கக்கூடாது. வேற எங்கியாவது போக வேண்டியதுதான். எங்க போறது? ஹலோ! உங்க வீட்டுல எனக்கு இடம் இருக்கா?

66 comments:

said...

//உங்க வீட்டுல எனக்கு இடம் இருக்கா?//

சத்தியமா இல்லை.. :-)))

பேயே மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் பத்தி பேசுர முரண் நல்லா இருக்கு வெண்பூ!

said...

:-))))...

said...

ஹாஹாஹா...

எப்படி ஸ்மைலி போட்டேன் பாத்தீங்களா??

மகேஷ் பதிவுல என்ன கலாய்ச்சதுக்கு பழிக்குப்பழி!!!

:-)))))))....

said...

கலக்கல் வெண்பூ!

said...

ஆனா எனக்கும் இப்ப இடமில்லாமல் தவிக்கிறேன்... வாங்க இரண்டு பேரும் சேர்ந்து இடம் தேடலாம்.. ;)))

said...

கதை சூப்பர்!!!

படிச்ச பேய்களும் உண்டு....சினிமாவும் பாக்கும்னெல்லாம் யோசிச்சது கலக்கல்!!!

(எல்லோரும் பாத்துக்குங்க...பதிவை படிச்சுட்டுதான் கமெண்ட்டு (:-))))...)போடுறேன்...நானும் படிக்கிறவன்தான்...நானும் படிக்கிறவன்தான்...)

said...

நாம சாமாதான உடன்படிக்கை செய்துக்களாமா? மிஸ்டர் வெயிட் பிளவர்!!!

said...

// தமிழ் பிரியன் said...
ஆனா எனக்கும் இப்ப இடமில்லாமல் தவிக்கிறேன்... வாங்க இரண்டு பேரும் சேர்ந்து இடம் தேடலாம்.. ;))) //

:-)))...

எல்லாரும் பாத்து உஷாரா இருந்துக்குங்கோ...ரெண்டு பேரு கெளம்பியிருக்காங்க...

said...

அற்புதமான திருப்பம் கொண்ட கதை...

கதை கூட நன்றாக எழுதிகிறீர்களே...

said...

கடைசியில் இப்படிக் கேட்டு எல்லோரையும் அலற விட்டால் எப்படி:))?

NICE STORY.

said...

பாதியிலேயே ஊகிக்க முடிந்தாலும்..உங்கள் நடை அருமை வெண்பூ.. மிக இயல்பாய் இருக்கிறது..

said...

ஆஹா... தாமிரா ஆரம்பிச்சு வைக்க வெண்பூ வளர்த்து விடுறாரா.. மீ தெ எஸ்கேப்பு... அந்தப் பொண்ணு ஃபோட்டோ இல்லைனாலும் அது மாதிரி அழகா ஒரு ஃபோட்டோ போட்டு இருந்தா இன்னொரு தடவ வந்து பார்த்திருப்பேன்

said...

நல்ல கதை நடை வெண்பூ!

said...

நன்றாயிருக்கிறது வெண்பூ. ஆனால் பாதியிலேயே முடிவை நான் ஊகிச்சுட்டேன்!!;-)

said...

நல்ல கதை வெண்

said...

நீங்க தானா அது!!!!!!!!! பயமா இருக்கு

said...

//எனக்கு அவனை பாத்தாலே பயமா இருக்கு. //

எனக்கு இதை படித்தாலே பயமா இருக்கு.

said...

//என்னை எந்த பேய்டா புடிக்கப்போவுது?//

அதுவும் ஒரு படித்த பேயாக இருக்கலாம்

said...

வெண்பூ..

மிக நேர்த்தியாக நகர்த்தி...முடித்த.. விதம் அருமை..

நர்சிம்

said...

//அது மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் அப்படின்னு யார் இவனுங்களுக்கு புரிய வெக்கிறது.//

அவனா நீயி?
(சாரி ஃபார் த மரியாதை குறைச்சல்)

said...

நல்லாவே எழுதுரிங்க கதை

said...

பரிசலின் உடம்புலருந்து ப்ளீச்சிங் பவுடர வெளியெ எடுக்க எதாவது வழி இருக்கா?

said...

ஹை, நான் அந்த மரண அடி வரி படிச்சதுமே கண்டுபிடிச்சிட்டேனே:):):)

said...

//எல்லாரும் பாத்து உஷாரா இருந்துக்குங்கோ...ரெண்டு பேரு கெளம்பியிருக்காங்க//

சொல்றது யார்?கிகிகி (நன்றி தூயா)

said...

me the 25th:):):)

said...

இங்கெ இடம் இல்லேப்பா.... ஏற்கனவே நிறைய பேர் அப்படித்தான் சுத்திக்கிட்டிருக்காங்க....

said...

//கொஞ்சம் கற்பனை.. கொஞ்சம் அனுபவம்..//
இந்த கதை கற்பனையா அல்லது ??????

said...

அண்ணே எனக்கு சில சந்தேகம் இருக்கு.... வேணா,, என்னன்னு சொன்னா என்னைய புடுச்சுக்குவீங்க :)))))

said...

29

said...

மீ த 30

Anonymous said...

எங்க வீட்டுல ஏற்கனவே என்னச் சமாளிக்க முடியலன்னு சொல்றாங்க. சோ சாரி.

said...

அன்பு வெண்பூ...

தங்களது ஈ-மெயில் ஐ.டி.யில் இருந்து ஒரு டெஸ்ட் மெயில் அனுப்ப முடியுமா..?

vasanthfriend.raju@gmail.com

said...

வாங்க வீரசுந்தர், வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..

said...

வாங்க விஜய் ஆனந்த்.. ஹா..ஹா.. எப்படி உங்கள ரெண்டு வரியாவது எழுத வெச்சேன் பாத்தீங்களா???

said...

//
தமிழ் பிரியன் said...
ஆனா எனக்கும் இப்ப இடமில்லாமல் தவிக்கிறேன்... வாங்க இரண்டு பேரும் சேர்ந்து இடம் தேடலாம்.. ;)))
//

அது நான் இல்லீங்க.. வேணும்னா மெசேஜ் பாஸ் பண்றேன்.. :)))

said...

//
விஜய் ஆனந்த் said...
கதை சூப்பர்!!!

படிச்ச பேய்களும் உண்டு....சினிமாவும் பாக்கும்னெல்லாம் யோசிச்சது கலக்கல்!!!
//

பாராட்டுக்கு நன்றி விஜய்.. நீங்க கதைய தப்பா புரிஞ்சிகிட்டீங்கன்னு நெனக்கிறேன். "போன வாரம்" நடந்ததா வர்ற போர்ஷன் உண்மை. அவனை கரும்பு காட்டுல வெச்சி அடிச்சி கொன்னுடுறாங்க. அவனோட ஆவி இப்ப கதை சொல்லுது.. புரியுதா????

said...

//
குசும்பன் said...
நாம சாமாதான உடன்படிக்கை செய்துக்களாமா? மிஸ்டர் வெயிட் பிளவர்!!!
//

முடியாது.. கொஞ்சம் குண்டா இருக்குறதுக்காக என்னை "வெயிட்" ப்ளவர்னு நீங்க சொன்னதுக்காக இன்னும் நாலு கொலைவெறி கதை எழுதியே தீருவேன் குசும்பா..

said...

//
கூடுதுறை said...
அற்புதமான திருப்பம் கொண்ட கதை...
//
பாராட்டுக்கு நன்றி கூடுதுறை..

//
கதை கூட நன்றாக எழுதிகிறீர்களே...
//
ஆஹா.. நான் ஆரம்பத்துல இருந்தே கதை எழுதிட்டுதான் இருக்கேன்.. என்னோட முந்தைய கதைகளையும் படிச்சி பாருங்க கூடுதுறை.. உங்களுக்கு புடிக்கும்னு நெனக்கிறேன்..

said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ராமலக்ஷ்மி, கேபிள் சங்கர்...

//
கார்க்கி said...
ஆஹா... தாமிரா ஆரம்பிச்சு வைக்க வெண்பூ வளர்த்து விடுறாரா..
//
புரியலயே கார்க்கி.. நான் ஆரம்பத்துல இருந்தே கதை எழுதிட்டுதான் இருக்கேன். என்னோட ரெண்டாவது பதிவே ஒரு கதைதான்..:)))

said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர், யோசிப்பவர், ஜாக்கிசேகர்..

said...

//
sindhusubash said...
நீங்க தானா அது!!!!!!!!! பயமா இருக்கு
//

ஹி..ஹி.. நானில்லங்க அது.. பாராட்டுக்கு நன்றி.. :)))

said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நர்சிம்...

வாங்க வால்பையன்.. ரொம்ப பயப்படுறீங்களோ.. ஒரு குவாட்டர் பார்சல்.. :)))

//
rapp said...
ஹை, நான் அந்த மரண அடி வரி படிச்சதுமே கண்டுபிடிச்சிட்டேனே:):):)
//
வாங்க வெட்டியாப்பீசர்.. நீங்க யாரு? உங்களயெல்லாம் யாராவது ஏமாத்த முடியாமா????
25 அடிச்சதுக்கு நன்றி..

said...

//
ச்சின்னப் பையன் said...
இங்கெ இடம் இல்லேப்பா.... ஏற்கனவே நிறைய பேர் அப்படித்தான் சுத்திக்கிட்டிருக்காங்க....
//

ஹி..ஹி.. நீங்க உங்கள சொல்லலன்னு நெனக்கிறேன்..

// இந்த கதை கற்பனையா அல்லது ?????? //
குடும்ப‌த்துல‌ கொழ‌ப்ப‌த்த‌ உண்டாக்கிடாதீங்க‌ப்பா...:)))

said...

//
புதுகை.அப்துல்லா said...
அண்ணே எனக்கு சில சந்தேகம் இருக்கு.... வேணா,, என்னன்னு சொன்னா என்னைய புடுச்சுக்குவீங்க :)))))
//

எல்லாரும் ஒரு குரூப்பாய்த்தான் கிளம்பி இருக்கீங்க!!! :)))

said...

//
புதுகை.அப்துல்லா said...
மீ த 30
//
முப்பது அடிச்ச அப்துல்லாவுக்கு ஒரு தொண்ணூறு குடுங்கப்பா....:))

said...

//
வடகரை வேலன் said...
எங்க வீட்டுல ஏற்கனவே என்னச் சமாளிக்க முடியலன்னு சொல்றாங்க. சோ சாரி.
//
ஹி..ஹி.. வீட்டுக்கு வீடு வாசப்படி.. விடுங்க இப்படி வந்து பப்ளிக்ல புலம்புகிட்டு.. :))))

வருகைக்கு நன்றி வேலன் சார்...

said...

வசந்த்,

இமெயில் அனுப்பி உள்ளேன்.. நன்றி..

said...

கதை நன்றாக இருக்கிறது வெண்பூ...

said...

me the 50:):):)

said...

அடுத்த பி.டி.சாமி இன் தி மேகிங்-ஆ?

said...

நானும் பாதியிலேயே முடிவை யூகிச்சிட்டேன். முந்தைய கதைகளை கம்பேர் பண்ணும்போது இதுல விறுவிறுப்பு கம்மியோன்னு தோணுது:)

said...

வெண்பூ அசத்தலாக வந்திருக்கிறது கதை.

said...

அய்யய்யோ...இப்ப நீங்கள்ளாம் கூட blog எழுத வந்திட்டீங்களா!!!?? முனீஸ்வரா காப்பாத்து.

said...

//பேய் பிடித்தவன் (சிறுகதை)//

உங்களுக்கு எப்போ பேய் பிடித்தது? :(

said...

//இன்னிக்கு என்னடான்னா இவன் எனக்கு பேய் புடிச்சிருக்குன்றான். பேய்ன்னு ஒண்ணு இல்லடா, அது மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் அப்படின்னு யார் இவனுங்களுக்கு புரிய வெக்கிறது. எங்க அப்பா அம்மா வேற எங்கன்னு தெரியல. எப்படி தப்பிக்கிறதுன்னும் தெரியலயே!!//

அப்போ அந்நியன் படத்துல நடிச்சது பேய்தானா? :)

என்னங்கய்யா கலர் கலரா ரீல் விடறிங்க? :))

said...

//உங்க வீட்டுல எனக்கு இடம் இருக்கா? //

உங்களுக்கு இல்லாத இடமா?

said...

நிஜமா நல்லா இருக்கு

said...

பிரமாதம் வெண்பூ. 'சிறுகதைச்செல்வன்' நீங்கதான்.!‌

said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தமிழ்ப்பறவை, மஹேஷ், வெட்டியாப்பீசர், ராஜ், ச‌ஞ்ச‌ய், ப‌ழைமைபேசி, தாமிரா, ஜீவ‌ன்..

வாங்க வித்யா.சி... எல்லா தளத்துலயும் கதை எழுத முயற்சி பண்றேன். ஒரு சிலது இப்படி கொஞ்சம் எதிர்பார்த்த அளவு வரது இல்லை.. :(
வருகைக்கு நன்றி..

said...

அடுத்த பதிவு?

said...

//
பழமைபேசி said...
அடுத்த பதிவு?
//

நாளைக்கே ஷெட்யூல் பண்ணியிருக்கு...

said...

ஹப்பா.. ஏனிந்த கொலை வெறி? பாதியிலேயே ஊகிக்க முடிந்தாலும் கூட, கடைசிவரை சுவாரஸ்யம் குறையாமல் செல்கிறது. நன்று :)

said...

அடடே.. இப்போதான் பாக்கறேன்.. நம்ம கேபிள் சங்கரும் அப்படியே சொல்லியிருக்காரே.. சங்கருக்கு ஒரு same pinch.. :)

Anonymous said...

பேயே பேயப்பத்தி !!!

வெண்பூ...

கலக்கல்...!!!!!!!!!!

said...

வெண்பூ,

சரளமான நடை. சிக் என்னும் கதை. ஏமாற்றவில்லை வெண்பூ. பத்திரிகைகளுக்கு அனுப்பத் தொடங்கியாயிற்றா?

அனுஜன்யா

said...

அண்ணே ”உண்மையான”, “பேப் பிடித்தவன்” தலைப்பு வைத்து நீங்க எழுதிய சிறுகதையை பதிவிடுங்கள்...