1. முதலில் பதிவுலகில் இருக்கும் பெண் பதிவர்கள் அனைவரைப் பற்றிய டேட்டாபேஸ் இருப்பது முக்கியம்
2. புதிதாக எந்த பெண் பதிவர் எழுத வந்தாலும் அவரையும் டேட்டாபேஸில் சேர்த்துக் கொள்ளவும்
3. அனைத்து பெண் பதிவர்களையும் ஃபாலோ செய்யவும். அவர்கள் உங்களை ஃபாலோ செய்யவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம்
4. பெண் பதிவர்களின் பதிவுகள் ரீடரில் தெரிந்த உடனே ஓடிப் போய் முதல் பின்னூட்டம் போட வேண்டும். "அருமை", "பாராட்டுகள்", "உங்கள் எழுத்துக்கு ராயல் சல்யூட்", "எப்படி இப்படி எல்லாம்? :)))" போன்ற டெம்ப்ளேட் பின்னூட்டங்களே போதுமானது
4.1 நீங்கள் பதிவை படிக்க வேண்டியது அவசியம் இல்லை, முதல் பின்னூட்டம் ரெக்கார்ட் ஆவதுதான் முக்கியம்
4.2 நீங்கள் தற்போதுதான் காவலராக முயற்சி செய்பவராக இருப்பின், முதல் பின்னூட்டம் போடுவது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். ஏற்கனவே பொறுப்பில் இருக்கும் சீனியர் காவலர்கள் / ஏட்டைய்யாக்களை தாண்டி முதலிடத்தை பிடிக்க போராட வேண்டி இருக்கும்
5. பாஸிட்டிவ் ஓட்டு போடவும்
5.1 ஒருவேளை அந்த பதிவர் தமிழ்மணத்திலோ, தமிழிஷ்ஷிலோ இன்னும் இணைக்கவில்லை என்றால் நீங்களே இணைத்து ஓட்டு போட வேண்டி இருக்கலாம்.
6. உங்கள் ஜிடாக், யாஹீ மெசன்ஜர், ட்விட்டர், பஸ், ரயில், மாட்டுவண்டி, மூணு சக்கர சைக்கிள் எல்லா இடத்திலும் அந்த பதிவிற்கு லிங்க் குடுக்கவும்
7. எப்பாடு பட்டாவது பெண் பதிவர்களின் இமெயில் முகவரியை கண்டுபிடிக்கவும்.
7.1 அவர்களுக்கு "ஹாய், எப்படி இருக்கீங்க?" என்று மெயில் அனுப்பலாம்
7.2 அவர்களுக்கு சாட் ரிக்வெஸ்ட் அனுப்பலாம்.
7.3 அவர்களிடமிருந்து ரிப்ளை வரவில்லை என்றாலோ, அவர்கள் திட்டி ரிப்ளை செய்தாலோ மனம் தளரமால் மீண்டும் மீண்டும் முயற்சிக்கவும். விக்ரமாதித்தன், கஜினி முகமது கதைகளைப் படிப்பது இதற்கு உதவலாம்.
8. யாராவது, எதாவது, யாரைப் பற்றியாவது சொன்னாலும் "பாருங்க, அவன் உங்களத்தான் கேவலமா பேசுறான்" என்று பெண் பதிவர்களிடம் வத்தி வைக்கலாம். 7.3ஐ மீண்டும் படித்துக் கொள்ளவும்.
9. நீங்க இதை எல்லாம் பண்ணுவது அந்த பெண் பதிவர்களுக்கு அசூசையை ஏற்படுத்தி அவர்களின் நண்பர்கள் உங்களை பிடித்து காச்சு காச்சு என்று காச்சலாம். அமைதியாக கேட்டுக் கொண்டு மீண்டும் மேற்கண்ட அனைத்தையும் தொடரவும். வன்முறை உதவாது என்று காந்தி மகான் சொன்னதை இதற்கு பயன்படுத்துவது சாலச் சிறந்தது.
பினா குனா (அட, பின்குறிப்புங்க)
1. மேலே உள்ள சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரேனும் தனக்கென்று எடுத்துக் கொள்வாராயின் அவரே முழுக் குற்றவாளி,
2. இவற்றை எல்லாம் முயன்று அதன் விளைவாக வெற்றியோ, தோல்வியோ, தர்ம அடியோ எது நடந்தாலும் கம்பேனி பொறுப்பேற்காது
3. இந்த பதிவைப் படித்ததும், if you feel uncomfortable... கைய குடுங்க சார்.. நீங்க ஏற்கனவே தமிழ்ப் பதிவுலகின் பெண்ணுரிமைக் காவலராய்ட்டீங்க.. வாழ்த்துகள்.
Tuesday, June 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
89 comments:
comfort, uncomfort இந்த இரண்டுக்கும் அப்பால் பதிவைப் படித்ததும் ஒரு எரிச்சல் வந்தால் அதற்கு பீனா கூநாவில்(பின் குறிப்பை மட்டும் சொன்னேங்க) எந்த ஆரூடமும் இல்லையே?
:-((
"எப்படி இப்படி எல்லாம்? :)))"
இப்படியெல்லாம்கூட நடக்குதா? :)
அட கிருஷ்ணமூர்த்தி சார்... மொக்கைப் பதிவு எல்லாம் படிச்சா உங்களுக்கு எரிச்சல்தான் வரும்.. அதிலும் இது மரணமொக்கைப் பதிவு.. அதனால மன்னிக்கணும், இது உங்களுக்கான பதிவு இல்லை.. :)))
வாங்க துளசி டீச்சர்.. வருகைக்கு நன்றி.. :))
ராபின்... :))))
ரூம் போட்டு யோசிப்பீங்களோ?
:))
டேட்டாபேஸ் இருப்பது முக்கியம்
//
உங்ககிட்ட இருந்தா மத்தவங்களுக்கு குடுத்து உங்கவுங்கள் சார்
டேட்டாபேஸில் சேர்த்துக் கொள்ளவும்
//
க்கும் ஒரு பிகருகூட மாட்டமாட்டங்குது சார் பிளிஸ் உங்க டேட்டாபேஸில் கடன் குடுங்க :)
எக்ஸ்க்யூஸ் மீ.. மே ஐ கம் இன்?
பெண் பதிவர் என்று நினைத்து பெண் பெயரில் எழுதும் ஆண்களின் பதிவுகளில் பின்னூட்டம் போட்டு பல்பு வாங்கினால் கம்பேனி பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமா ?
:)
அனைத்து பெண் பதிவர்களையும் ஃபாலோ செய்யவும்.
//
இதில் ஒரு சிக்கல் இருக்குங்க
பெண் பெயரில் பிளாக் எழுதி டரியல் ஆக்குறாங்க சார்
நீங்களே கூட ஒரு ஆண் பதிவருக்கு லவ் லட்டர் எழுதி மாட்டிக்கிட்டதா தகவல் ::)
ரீடரில் தெரிந்த உடனே ஓடிப் போய் முதல் பின்னூட்டம் போட வேண்டும்.
//
ரீடர் ரொம்ப ஸ்லோ சார்
நாங்க போறத்துகுள்ள கும்மி அடிச்சி முடிச்சிடுவாங்க :)
உளவு துறை அப்படியா? நான் கூட வெண்பூ பெண் பதிவர் என்றல்லா நினைத்திருந்தேன் :-)
"உங்கள் எழுத்துக்கு ராயல் சல்யூட்", "
நீங்க ஆணா பெண்ணா?
anujanya enbavarai pen pathivar ena ninaithu bulb vaangiya sambavangalum undu
சூப்பர் ரைட்டிங் சார் வாழ்த்துக்கள்
நான் உங்க தீவிர ரசிகை சார்
நிங்க தான் சார் எனக்கு ’எல்லாம்’
சாரு நிவேதிதாவின் வாசகனாக இருந்தால் போதும்
முதல் பின்னூட்டம் ரெக்கார்ட் ஆவதுதான் முக்கியம்
//
லேட் ஆகிவிட்டது கொஞ்சம் அஜெஸ்ட் பண்ணிகொள்ளுங்கள் :)
அனாதி said...
சாரு நிவேதிதாவின் வாசகனாக இருந்தால் போதும்
//
நான் அவருக்கு ரசிகையாக தான் இருந்தேன் வெண்பூ எழுத்துக்கும் முன்பு சாருவெல்லாம் தூசிக்கு சமம்
பெண்பதிவர்களுக்கு சர்ச்சைக்குரிய இடுகைகளை எழுதிக் கொடுத்து வெளியிடச் செய்வதும் பெண்ணுரிமைக் காவலnaது குணாதிசயங்களுள் ஒன்று.
தனி மெயில் அனுப்பி உள்ளேன் பார்க்கவும் !!
:)))
வெண்பூ ஒளியமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது:))
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
பார்யா குசும்பனே வந்து வாழ்த்திட்டு போனா சனி உச்சா போகுது என்று அர்த்தம்
பாஸிட்டிவ் ஓட்டு போடவும்
//
ஓட்டு எப்படி போடுவது??
பிரியாணி குடுப்பாங்களா??
அவர்களிடமிருந்து ரிப்ளை வரவில்லை என்றாலோ,
//
சரிங்க சார்
மண்டபத்துல யாராவது எழுதி கொடுக்கறத போடுவதும் யாராவது வினவினால் சுத்தி சுத்தி வந்து தெவங்க வேண்டாம் என அட்வைஸுவதும் அதி முக்கிய குவாலிவிகேஷன்..
எப்பாடு பட்டாவது பெண் பதிவர்களின் இமெயில் முகவரியை கண்டுபிடிக்கவும்
//
புது பதிவர்களுக்கு உங்க டேட்டாபேஸில் இருந்து எடுத்து குடுக்கலாமே..??
haa haa
:))))))))))
அடேங்கப்பா.. இத்தனை பெண்ணுரிமைக் காவலர்களா.... சார்வாள், நீங்க எல்லாம் உங்க சொந்த பேர்லயே வந்து கருத்து சொல்லலாமே, பெண்ணுரிமை போலீஸா இருந்துட்டு இருந்துட்டு நீங்களே இப்படி அனானி முகமூடியோட வரலாமா? அதுல ஒரு ரகசியம் என்னான்னா நீங்க எந்த பேர்ல வந்தாலும் உங்களை எல்லாருக்கும் தெரியுது பாருங்களேன்.. ஹி..ஹி..
//
கோவி.கண்ணன் said...
பெண் பதிவர் என்று நினைத்து பெண் பெயரில் எழுதும் ஆண்களின் பதிவுகளில் பின்னூட்டம் போட்டு பல்பு வாங்கினால் கம்பேனி பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமா ?
:)
//
//
ramachandranusha(உஷா) said...
உளவு துறை அப்படியா? நான் கூட வெண்பூ பெண் பதிவர் என்றல்லா நினைத்திருந்தேன் :-)
//
இன்னமும் சிரிச்சிட்டே இருக்கேன், உங்க ரெண்டு பேர் கமென்ட்டையும் படிச்சிட்டு.. :)))
//
அருவி said...
பெண்பதிவர்களுக்கு சர்ச்சைக்குரிய இடுகைகளை எழுதிக் கொடுத்து வெளியிடச் செய்வதும் பெண்ணுரிமைக் காவலnaது குணாதிசயங்களுள் ஒன்று.
//
அருவி, இந்த பதிவு போலி பெண்ணுரிமைக் காவலர்களைப் பற்றி மட்டுமே. உங்கள் பின்னூட்டம் பெண் பதிவர்களை காயப்படுத்துவது போல் இருக்கிறது. அதற்கு என் கண்டனங்கள்.
உங்க சொந்த பேர்லயே வந்து கருத்து சொல்லலாமே
//
வெண்பூ சொந்த பேரா..??
அது மாதிரிதான் இதுவும் ::))
//
நாட்டாமை said...
வெண்பூ சொந்த பேரா..??
அது மாதிரிதான் இதுவும் ::))
//
:))))
அடேங்கப்பா...சூப்பர்....
நான் இந்தப் பதிவுக்கு பாசிட்டிவ் ஓட்டு போட்டு இருக்கேன் என்பதற்காக...பெண்ணுரிமை பேனர் குத்திடாதீங்க... : )
"அருமை", "பாராட்டுகள்", "உங்கள் எழுத்துக்கு ராயல் சல்யூட்", "எப்படி இப்படி எல்லாம்?
//
ஓ அதான் இந்த மாதிரி முதுகு சொறிதல் அதிகமா நடக்குதோ.. ::)
/
ஓ அதான் இந்த மாதிரி முதுகு சொறிதல் அதிகமா நடக்குதோ.. ::)
/
முதுகு சொறிஞ்சா பரவாயில்லை அடி மடில கை வச்சிற போறாங்க பாத்து சூதனமா இருந்துக்கப்பு.
முதுகு சொறிஞ்சா பரவாயில்லை அடி மடில கை வச்சிற போறாங்க பாத்து சூதனமா இருந்துக்கப்பு.
//
அப்ப இது எச்சரிக்கை பதிவா??
அப்ப இது எச்சரிக்கை பதிவா??
//
இது போல் பதிவு எழுத எங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு
@கிருஷ்ணமூர்த்தி
பதிவைப் படித்ததும் ஒரு எரிச்சல் வந்தால் uncomfort தான் ::))
தலைவர் வென்பூ வாழ்க..
நம்ம கிஸனமூர்த்தி சார்வாளுக்கு எரிச்சல் தராத பதிவு உலகத்துலையே அவா எழுதறது மட்டும்தான்.. ஆனா அவா எழுதறது உலகத்துக்கே எரிச்சல் தரும்.. :)
பாஸ், இதுல பல பேரோட ஸ்லாங் இருக்கே.. இது ஒரு கூட்டுத் தயாரிப்பா பாஸ்? :)))
யாரோ ஒரு பெண்ணுரிமைக் காவலர் இப்போவே மைனஸ் குத்திட்டாரு போல.
பதிவு கலக்கல். இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம்ன்னு தோணுது. டிப்ஸ் எதுனா வேணுமா?
நடத்துங்கயா.. வம்பு வராம இருந்தா சரிதான். :-))
மாசம் ஒண்ணு எளுதுனாலும் கடை களை கட்டுற மாதிரியே டாபிக் புடிக்கிறியே அது எப்பிடி ராசா.?
ஆதிமூலகிருஷ்ணன் said...
நடத்துங்கயா.. வம்பு வராம இருந்தா சரிதான். :-))
//
அதுகாகவா இப்புட்டு கஷ்ட பட்டோம் :)
மாசம் ஒண்ணு எளுதுனாலும் கடை களை கட்டுற மாதிரியே டாபிக் புடிக்கிறியே அது எப்பிடி ராசா.?
//
அசூசை பிடித்தவர்கள் !!
நீங்க எழுதுங்க சார்
//SanjaiGandhi™ said...
நம்ம கிஸனமூர்த்தி சார்வாளுக்கு எரிச்சல் தராத பதிவு உலகத்துலையே அவா எழுதறது மட்டும்தான்.. ஆனா அவா எழுதறது உலகத்துக்கே எரிச்சல் தரும்.. :)
//
:) அவரு யார் பார்ப்பான் பார்பனியம் என்று எழுதினாலும் அங்கெல்லாம் வந்து உங்களுக்கு வேலையே இல்லையா என்பார், டோண்டு சார் பார்பனப் புராணம் எழுதி இருந்தால் அங்க வந்து கும்மி அடிப்பார்.
//இந்த பதிவைப் படித்ததும், if you feel uncomfortable... கைய குடுங்க சார்.. நீங்க ஏற்கனவே தமிழ்ப் பதிவுலகின் பெண்ணுரிமைக் காவலராய்ட்டீங்க.. வாழ்த்துகள்//
நல்லாயிருக்கு :)
//நல்வரவு
20,000 ஹிட்ஸ் + 50 ஃபாலோயர்ஸ் தொடப்போகும் தமிழின் நானூத்தி நாப்பத்தி ஏழாவது தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள். அவ்வ்வ்வ்வ்வ்வ்...//
அது ரெண்டுமே அச்சிவ்ட்.. டயலாக்க மாத்துங்க மிஸ்டர் வென்ரு.. சாரி.. வெண்பூ..
//
SanjaiGandhi™ said...
பாஸ், இதுல பல பேரோட ஸ்லாங் இருக்கே.. இது ஒரு கூட்டுத் தயாரிப்பா பாஸ்? :)))
//
ஹலோ, ஒரிஜினல் சரக்கு பாஸ்... மண்டபத்துல யாராவது எழுதி குடுத்து அதை நான் என் பேர்ல போட்டுக்குறதுக்கு நான் என்ன..... :)))
//
கபிலன் said...
அடேங்கப்பா...சூப்பர்....
நான் இந்தப் பதிவுக்கு பாசிட்டிவ் ஓட்டு போட்டு இருக்கேன் என்பதற்காக...பெண்ணுரிமை பேனர் குத்திடாதீங்க... : )
//
அய்யய்ய.. கபிலன், உங்களுக்கு விசயமே புரியலை. இந்த பதிவுக்கு நெகட்டிவ் வோட்டு போட்டாத்தான் நீங்க போலீஸு.. பாசிட்டிவ் ஓட்டு போட்டிங்கன்னா அந்த போஸ்ட்டுக்கு நீங்க தகுதி இழக்குறீங்க.. :)))
//
KVR said...
பதிவு கலக்கல். இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம்ன்னு தோணுது. டிப்ஸ் எதுனா வேணுமா?
//
தாராளமா குடுங்க.. டிப்ஸ் அதிகமா இருந்தா கம்முன்னு பார்ட் ரெண்டுன்னு நீங்க பதிவுல கன்டின்யூ பண்ணினாலும் ஓகே.. ஹி..ஹி..
//
ஆதிமூலகிருஷ்ணன் said...
நடத்துங்கயா.. வம்பு வராம இருந்தா சரிதான். :-))
//
யாரு சொல்லுறது அதை... :)))
அது எப்படி சார் நீங்க வலை விரித்தால் மட்டும் இப்படி :) :) hats off . .
ஹலோ, ஒரிஜினல் சரக்கு பாஸ்... மண்டபத்துல யாராவது எழுதி குடுத்து அதை நான் என் பேர்ல போட்டுக்குறதுக்கு நான் என்ன..... :)))
//
எங்கள வச்சி காமெடி கீமெடி பண்ணலையே.
தெனவு, அவங்க டைரக்டா அடிக்கிறாங்கய்யா. வாய்யா ஓடிப் போய்டலாம்.
ஆஹா கருத்துக்கள் மிக அருமை,
பெண் உரிமை பதுகவலனே வாழ்க :)
சிவா, உங்கள மாதிரி சொந்தக்காரர்கள் அனுபவமாம்.
@ஆதி
பிளாக்கர் மட்டும் தான் பின்னுட்டம் போடவேண்டும் என்றால் காத்து வாங்கதான் செய்யும்
பிளாக்கரைவிட அதை படிப்பவர்கள் அதிகம் ::))
அன்பின் வெண்பூ,
இந்த மாதிரி பதிவு எழுதும் போது பின்னூட்டம் மட்டுறுத்தம் அவசியம். நமக்கு ஆதரவான கமெண்ட்டுகள் மட்டுமே வெளியிட வேண்டும். அல்லது யாருக்காவது ஆதரவாய் அவர்கள் வேணுகோளுக்கு இணங்கி பதிவு எழுதவேண்டும். இன்னும் நீ பாலகனாகவே இருக்கிறாயே தம்பி.
விடய்ம் தெரிந்ததால் சொல்கிறேன். சில பெண்ணியவாதிகள் சர்ச்சைக்குரிய் விடயங்களை பெண் பதிவர்களுக்கு எழுதி கொடுப்பது நிஜமான நிஜம்.
இதில் மண்டபத்தில் கொடுத்ததை தன் பெயரில் போட்ட பெண் பதிவர் காயப் பட்டாலும் நல்லதுதானே? இனிமேலாகிலும் அம்மாதிரி விடயங்கள்் நடக்காது அல்லவா?
@கைப்புள்ள......
பெண் ஈயம் உட்பட எந்த ஒரு ஈயத்திற்கும் காவல் காக்க வேண்டிய நிலையில் இல்லை என்பதால் வருவது uncomfort அல்ல!
எங்கேயோ தேள் கொட்டி எங்கேயோ நெறி கட்டிவிடப் போகிறதே என்ற எச்சரிக்கைதான்!
@சஞ்சய் காந்தி!
போகிற போக்கில் எழுதுவதைக் கூட ரசித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.அதற்காக நானும் காண்டி புராணம் வாசிக்க வேண்டியதில்லையே! பதிவுலக காண்டி குடும்பக் காவலர் நீங்கள் என்பது தெரிந்தது தானே!
@ கோவி கண்ணன்!
டோண்டு பதிவில் மட்டுமே இல்லை, உங்களுடைய, வால் பையனுடைய, அப்புறம் இங்கே வெண் பூவின் பதிவில் கூட வந்து பின்னூட்டம் எழுதுகிறேன். பசர்ப்பான், பார்ப்பனீயம் என்பது நான் பின்னூட்டத்திற்கு எடுத்துக் கொள்கிற அளவீடுகளாக எப்போதுமே இருந்ததில்லை.
/அங்கெல்லாம் வந்து உங்களுக்கு வேலையே இல்லையா என்பார்,/
கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன ஒன்றையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதால் வருகிற எரிச்சல் அது!
// ஹலோ, ஒரிஜினல் சரக்கு பாஸ்... மண்டபத்துல யாராவது எழுதி குடுத்து அதை நான் என் பேர்ல போட்டுக்குறதுக்கு நான் என்ன..... :))) // எதுக்கு பாஸ் பயம் .. அது யாருன்னு சொல்லிட வேண்டியது தானே ..
கிருஷ்ணமூர்த்தி சார், கோவி.கண்ணன் & சஞ்சய்,
இது சும்மா ஜாலிக்காக எழுதுன மொக்கைப் பதிவு, இதுல எதுக்கு பின்னூட்ட சண்டை. உங்க விவாதங்கள் எனக்கு வருத்தமா இருக்கு.
//
பெண் ஈயம் உட்பட எந்த ஒரு ஈயத்திற்கும் காவல் காக்க வேண்டிய நிலையில் இல்லை என்பதால் வருவது uncomfort அல்ல!
//
அவரிடம் அடிக்கடி பேசுபவன் என்ற முறையில் அவரது இந்த கருத்தை 100% சரி என்பேன்.
அப்புறம் முக்கியமான விசயத்த மறந்துடிங்களே .. பெண் பதிவரின் பதிவுக்கு எதிர் கருத்து பின்னூட்டம் போட்ட ..பின்னூட்டம் போட்ட ஆளை நல்ல கும்மனும் .. இதுக்கு ஒரு பெரும் கூட்டமே இருக்கும் அதனால நல்ல சத்தமா கூவி கூவி கும்மனும் .. ( எல்லாம் competition பாஸ் )
//
அருவி said...
விடய்ம் தெரிந்ததால் சொல்கிறேன். சில பெண்ணியவாதிகள் சர்ச்சைக்குரிய் விடயங்களை பெண் பதிவர்களுக்கு எழுதி கொடுப்பது நிஜமான நிஜம்.
இதில் மண்டபத்தில் கொடுத்ததை தன் பெயரில் போட்ட பெண் பதிவர் காயப் பட்டாலும் நல்லதுதானே? இனிமேலாகிலும் அம்மாதிரி விடயங்கள்் நடக்காது அல்லவா?
//
அருவி, நீங்கள் சொல்வது நிஜமென்றால் வருத்தமே. அதேநேரம் எல்லா பெண் பதிவர்களின் எல்லா பெண் பதிவுகளையும் இந்த வரையறைக்குள் கொண்டு வர முடியாது அல்லவா? பலர் தங்களுக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கி இருக்கிறார்கள். உதாரணமாக பதிவுலகில் நான் மதிக்கும் சீனியர் பெண் பதிவரான துளசி டீச்சரின் எழுத்துகளை என்னால் பெயரே இல்லை என்றாலும் என்னால் கண்டுபிடித்துவிட இயலும். அதேபோல் வித்யாவின் உணவகங்கள் பற்றிய பதிவுகள், உஷா அவர்களின் சிறுகதைகள், ஸ்ரீமதியின் கவிதைகள் என்று தனித்திறமையுடன் இருப்பவர்களும் பலர்.
உங்களின் முந்தைய பின்னூட்டம் பொதுப்படையான தோற்றத்தை ஏற்படுத்தியதாலேயே என் கண்டனங்களைத் தெரிவித்திருந்தேன். புரிதலுக்கும் விளக்கத்திற்கும் நன்றி.
ங்கொய்யால! சுத்த "பைத்தியகார"தனமா இருக்குதே! நான் டிராப்ட்ல இந்த பதிவை வச்சிருந்ததை எவன்யா என் பாஸ்வேர்டை பயன்படுத்தி எடுத்து போட்டது? ஒரு "குருப்பா" தான் திரியிருயயலா?
ஆனா இது சூப்பர் டூப்பர் ஹிட்!
மேற்கண்ட பத்து பொருத்தத்திலே அவனவன்\அவளவள் பொருத்தம் பார்த்துக்க வேண்டியது தான் பாக்கி:-))
அபிஅப்பா...
ஹி..ஹி..:))))
இதுவரைக்கும் நெகட்டிவ் ஓட்டு போட்ட மூணு பெண்ணியக் காவலர்களுக்கும் நன்றி.. :)
பார்யா குசும்பனே வந்து வாழ்த்திட்டு போனா சனி உச்சா போகுது என்று அர்த்தம்
வெண்பூ இந்த கமெண்ட்டை படிச்சிட்டு சிரிச்சிகிட்டு இருக்கேன்..
நாக்கு தெள்ளிதுங்க சார்..
இதுவரை மொத்தம் ஆறு பெண்ணிய காவலர்கள் தனது மைனஸ் ஓட்டு மூலம் தங்களை வெளிபடுத்தியுள்ளார்கள்!
(ஒரு குருப்பா தான்யா அழையிறானுங்க)
//ஆதிமூலகிருஷ்ணன் said...
மாசம் ஒண்ணு எளுதுனாலும் கடை களை கட்டுற மாதிரியே டாபிக் புடிக்கிறியே அது எப்பிடி ராசா.?//
கம்பெனி சீக்ரெட்ட எல்லாம் கேட்டா எப்படி அண்ணே.....
வெண்பூ---கலக்கல்
You are just awesome.=))
//இதுவரை மொத்தம் ஆறு பெண்ணிய காவலர்கள் தனது மைனஸ் ஓட்டு மூலம் தங்களை வெளிபடுத்தியுள்ளார்கள்!
(ஒரு குருப்பா தான்யா அழையிறானுங்க)//
:) :)
//இதுவரைக்கும் நெகட்டிவ் ஓட்டு போட்ட மூணு பெண்ணியக் காவலர்களுக்கும் நன்றி.. :)//
//அது எப்படி சார் நீங்க வலை விரித்தால் மட்டும் இப்படி :) :) hats off . .//
:) :) :)
டாக்டர்... ஹி..ஹி :))
நானு எதோ மொக்கையாத்தான் எழுதியிருக்கேன், அவங்களுக்கா குத்துது அதனால வந்து நெகட்டிவ் குத்திட்டு போயிருக்காங்க, நாம என்ன பண்ணமுடியும்.. :))
//உங்கள் ஜிடாக், யாஹீ மெசன்ஜர், ட்விட்டர், பஸ், ரயில், மாட்டுவண்டி, மூணு சக்கர சைக்கிள் எல்லா இடத்திலும் அந்த பதிவிற்கு லிங்க் குடுக்கவும்//
இதை படித்து வயறு வலிக்க சிரித்தேன்
ஒரே பதிவில் இத்தனை பெண் பிள்ளை பொறுக்கிகளை அடையாளம் காட்டிய வெண்பூக்காரிக்கு எனது பாராட்டுக்கள்
டாக்டர் புருணோ வெண்பூவுக்கும் நர்சிமுக்கும் கள்ளக்காதல் என்று டிவிட்ட வேண்டாம்... வெண்பூ ஒரு ஆண் என்று கேள்விப்பட்டேன்...
வாங்க அத்திரி.. நீங்க சொன்னதுல ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு.. அது "கம்பேனி" சீக்ரெட்டு... :)))
வாங்க அனானிங்களா, இப்பதான் வழி தெரிஞ்சதா? சரி கடல் கடந்து வரவேணாமா? :)))
ஒரு பெயரைக் குறிப்பிட்டிருக்கும் அனானிமஸுக்கு... பி.கு.1 ஐ மீண்டும் படிக்கவும்..
நீங்க சொல்லியிருக்குற பதிவரை எனக்கு பர்சனலாக தெரியாது என்பதால் நோ கமென்ட்ஸ்... உங்கள் கமென்ட்டை நீக்குறேன். மன்னிக்கவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே
ஒரு முக்கியவேண்டுகோள்.
நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்
என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திர்க்கு எதிராக
ராஜன்+வால்பையன்
இருவரும் நம் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸால்)
அவர்களை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள்ளால்
விமர்ச்சனம் செய்துள்ளார்கள்.
இவர்கள் நாகரிகமான முறையில் பதிவிட்டிருந்தால்
நிச்சயமாக நாம் பதில் சொல்லகடமைப்பட்டிருக்கிரோம்.
ஆர் எஸ் எஸ், பாஜக, விஸ்வஹிந்த் இவர்களைப்போன்று மகா மட்டமான
வார்த்தைகளை உபயோகித்து இருக்கிரார்கள்.
நீங்கள் உண்மையாணவர்களாக இருந்தால் இன்றுடன்
ராஜன்+வால்பையன்மற்றும் அங்கு கூடி இருந்து கும்மி அடிக்கும் அனைவர்களது வலைப்பூவையும் நிராகரியுங்கள்.
நான் கூறுவது சரியா தவரா?
பதில் கூறவும்.
வஸ்ஸலாம்.
http://allinall2010.blogspot.com/2010/07/blog-post.html
தமிழன் என்று ப்ரோபைலில் எந்த விவரமும் இல்லாமல், கிட்டத்தட்ட அனானி தான், பதில் கேட்டிருக்கும் நண்பருக்கு:
வால் பையன், ஆல் இன் ஆல் ராஜனுடைய பதிவுகளில் உபயோகித்திருக்கும் சில வார்த்தைகள் எல்லை மீறியவை தான். அதற்காக அவர்கள் பதிவைத் தடை செய்ய வேண்டும், புறக்கணிக்க வேண்டும் என்ற உங்கள் வேண்டுகோள் அதைவிட எல்லை மீறியதாக இருக்கிறது.
உங்களுடைய பிரசாரத்தை சம்பந்தமே இல்லாத இந்தப் பதிவில் எதற்காக நடத்துகிறீர்கள் என்பதை முதலில் சொல்லுங்கள்!
//நீங்கள் உண்மையாணவர்களாக இருந்தால் இன்றுடன்
ராஜன்+வால்பையன்மற்றும் அங்கு கூடி இருந்து கும்மி அடிக்கும் அனைவர்களது வலைப்பூவையும் நிராகரியுங்கள்.//
நீங்கள் உண்மையானவராக இருந்தால் என்று சொல்லும் போது உங்கள் டங்குவார் கிழிந்து தொங்கிட்டதே தோழரே!
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியல, கோயபல்ஸ் பிரச்சாரம் மட்டும் நன்னா பண்ணுறேள் போங்க!
100% கிருஷ்ணமூர்த்தி அவர்களை வழிமொழிகிறேன். வால் என் நண்பர், ராஜனின் நையாண்டி நான் ரசிக்கும் ஒன்று, அதே நேரம் அவர்களது அந்த பதிவில் எனக்கும் உடன்பாடில்லை. சென்ஷியின் பதிவில் கோவி.கண்ணன் அவர்கள் இட்ட கமென்ட்டிலும் எனக்கு வருத்தமே. அதற்கான கண்டனங்களை கோவி.கண்ணனுக்கு அங்கே உடனேயே தெரிவித்து விட்டேன்.
ஆனால் அதற்காக அவர்களது வலைப்பூக்கள் தடை செய்யப்படவேண்டிய ஒன்று / நிராகரிக்கப் படவேண்டிய ஒன்று என்பதில் நான் உடன்படவில்லை.
உங்கள் சண்டைக்கான தளம் இதுவல்ல. புரிதலுக்கு நன்றி.
Post a Comment