Wednesday, March 25, 2009

துணுக்ஸ் - 2009/03/25

எப்படியோ 33 வருசத்துக்கு அப்புறமா நம்ம துளசி டீச்சர் ஊர்ல ஒரு டெஸ்ட் மேட்ச் ஜெயிச்சாச்சி. எதிர்பார்த்த முடிவுதான்னாலும் எனக்கு ஒரு சின்ன வருத்தம். மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு முன்னால இருந்தே எப்படியாவது இந்தியா முதல் இன்னிங்க்ஸ்ல 535 ரன்னுக்கு மேல அடிக்கணும்னு வேண்டிகிட்டு இருந்தேன், அது நடக்காம போயிடுச்சி. அது என்ன 535? கடைசியா சொல்றேன் :)))

இந்த தொடரையும் ஜெயிச்சா 40 வருசத்துக்கு அப்புறமா நம்ம ஜெயிக்குற தொடரா இருக்கும். செய்வாங்களா?

*****

விகடன்ல இந்த வாரம் ரெண்டு விசயம் ஆச்சர்யப்படுத்துனது. ஒண்ணு கிருஷ்ணா டாவின்சி எழுதுன "அச்சக்காடு" சிறுகதை. அற்புதமான களம், அருமையான நடை, மிஸ் பண்ணாதீங்க.

அடுத்தது "ஹாய் மதன்"ல ஒருத்தர் கேட்ட "காந்திஜி தாஜ் மஹாலை பாத்திருக்காரா?"ன்ற கேள்வி. ரொம்ப சாதாரணமா தெரிஞ்சாலும், இந்தியான்னு சொன்னவுடனே இந்தியர் அல்லாத ஒவ்வொருத்தருக்கும் ஞாபகம் வர்ற ரெண்டு விசயம் காந்திஜியும், தாஜ் மஹாலும்தான். மதனும் அதே பிரமிப்பை தன் பதில்ல காட்டியிருந்தாரு. ரொம்ப வித்தியாசமான கேள்வி இது.

ரெண்டு நல்ல விசயம் இருந்தா ஒரு உறுத்துற விசயமும் இருக்கணும்ல. அது என்ன இப்பவெல்லாம் விகடன் சினிமா மார்க் 43ஐ தாண்டுறதே இல்லை. சிவா மனசுல சக்திக்கு 42, நான் கடவுளுக்கு 43, காஞ்சிவரத்துக்கு 43.. ஒண்ணுமே புரியல, விகடன் மார்க் குடுக்குறத மறுபரிசீலனை பண்ணுறது நல்லதுன்னு நெனக்கிறேன்.

*****

இதோ மறுபடியும் நாடு தழுவிய தேர்தல் திருவிழா. தேதி அறிவிச்ச உடனே உண்ணாவிரதம்னு ஒருத்தர் ஆரம்பிக்கிறாங்க‌, இத்தனை நாளா பிரச்சினைக்காக உயிரையே தருவேன்னு சொன்ன எல்லாருமே அமைதியாகிட்டாங்க. என்ன அரசியலோ ஒண்ணுமே புரியல...

*****

இந்த தேர்தல் களேபரத்துக்கு நடுவுல கிரிக்கெட் வேற. அதுக்கு பாதுகாப்பு தர முடியலன்னு மத்திய அரசு உண்மையை சொன்னா, உடனே "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வித்தியாசம் இல்லையா?"ன்னு பொசக்கெட்டத்தனமா ஒரு கேள்வி கேக்குறாங்க. விட்டா தேர்தலை தள்ளி வைக்க சொல்லுவாங்க போல. ஏன்யா, நாட்டோட அடுத்த பிரதமர் யார்னு முடிவு பண்ணுறத விட, அடுத்த அஞ்சு வருசத்துக்கு நமக்காக திட்டங்களைத் தீட்டப்போற அமைச்சர்கள் யாருன்னு தெரிஞ்சுக்குறத விட, நமக்காக நாடாளுமன்றத்துல பேசப்போற பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்குறத விட விளையாட்டு முக்கியமா போச்சா?

இத்தன நாளா விளையாட்டுலதான் அரசியல் பண்ணிகிட்டு இருந்தீங்க, இப்ப அரசியல்ல விளையாட்டா?

*****

இப்போ ஐ.பி.எல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவுல நடக்குதாம். எல்லா கிரிக்கெட் வீரர்கள், டீமை ஏலம் எடுத்த நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், பி சி சி ஐ நிர்வாகிகள் எல்லாரும் இன்னும் ரெண்டு மாசத்துக்கு தென்னாப்பிரிக்காவுலதான் இருப்பாங்க.

எனக்கு ஒரே ஒரு கேள்வி சாமிகளா? இத்தனை வருசமா "இந்தியா" அப்படின்ற பேர்ல கிரிக்கெட் விளையாண்டு கோடி கோடியா சம்பாதிச்ச எந்த *****ம் ஓட்டு போடப் போறதில்லையா?

*******

அது என்னா 535?

161 + 121 + 99 + 154 = 535

வேற ஒண்ணுமில்லை, இதுக்கு முன்னால 2002 டிசம்பர் மாசம் நியூஸிலாந்துல நம்ம ஆளுங்க ரெண்டு டெஸ்ட் விளையாண்டு ரெண்டுலயும் தோத்தாங்க. அந்த ரெண்டு மேட்சுல நாலு இன்னிங்க்ஸ்லயும் இந்திய அணி அடிச்ச மொத்த ஸ்கோர்தான் இது.. :))))

67 comments:

said...

535 மேட்டர் அருமை

said...

நாந்தான் மொதோ

said...

வாங்க முரளி..

//
முரளிகண்ணன் said...
535 மேட்டர் அருமை
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்ப மத்ததெல்லாம் மொக்கையா?

said...

துணுக்ஸ் தோரணம் அருமை.

தேர்தல் சமயத்தில் தென்னாப்பிரிக்காவில்... நல்லாக் கேட்டீங்க:)!

said...

\\அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்ப மத்ததெல்லாம் மொக்கையா?\\

ஒண்ணு ரொம்ப நல்லாயிருக்குன்னா மத்ததெல்லாம் மொக்கையா?

திரிஷா, நயன், அசின், ஸ்ரேயா, கார்த்திகா, பாவனா எல்லாரும் ஒரு பார்டிக்கு வர்றாங்க.

நயன் ரொம்ப கிளாமரா வர்றாங்க. ஆன்னு பார்க்கிறோம்.

அப்ப மத்ததெல்லாம் மொக்கையா?

said...

//
திரிஷா, நயன், அசின், ஸ்ரேயா, கார்த்திகா, பாவனா எல்லாரும் ஒரு பார்டிக்கு வர்றாங்க.

நயன் ரொம்ப கிளாமரா வர்றாங்க. ஆன்னு பார்க்கிறோம்.
//

ஹி..ஹி.. ஜூப்பர் எக்ஜாம்பிள்.. :)))

said...

வாங்க ராமலக்ஷ்மி மேடம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

said...

//நயன் ரொம்ப கிளாமரா வர்றாங்க. ஆன்னு பார்க்கிறோம்.
//

இந்த பதிவுல வெண்பூ நயன் பத்தி எங்கே சொல்லி இருக்கிறேன்!

மூணு தபா கண்ணுல(கண்ணாடிலயும்தான்) விளக்கெண்ணெய் விட்டு தேடிட்டேன்! இல்லையே1

:(

said...

/// நாமக்கல் சிபி said...

//நயன் ரொம்ப கிளாமரா வர்றாங்க. ஆன்னு பார்க்கிறோம்.
//

இந்த பதிவுல வெண்பூ நயன் பத்தி எங்கே சொல்லி இருக்கிறேன்!

மூணு தபா கண்ணுல(கண்ணாடிலயும்தான்) விளக்கெண்ணெய் விட்டு தேடிட்டேன்! இல்லையே1

:(///

சோகத்துடன் ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

said...

// எனக்கு ஒரே ஒரு கேள்வி சாமிகளா? இத்தனை வருசமா "இந்தியா" அப்படின்ற பேர்ல கிரிக்கெட் விளையாண்டு கோடி கோடியா சம்பாதிச்ச எந்த *****ம் ஓட்டு போடப் போறதில்லையா? //

அதுதான் கச்சிப்பாகுபாடில்லாமா எல்லாத்துக்கும் நிதி குடுத்தாச்சுல்ல அப்புறமென்ன.

ஓட்டெல்லாம் நாம போட்டுக்க வேண்டியதுதான்.

said...

இனி அடுத்தடுத்து பதிவுகளை எதிர்பார்க்கிறோம்..:)

said...

//161 + 121 + 99 + 154 = 535//


வரலாறு முக்கியம்ல?! இஃகிஃகி!!

said...

Welcome back வெண்பூ.

வல்லரசு ஆசைகள் இருந்தா, இரண்டு பெரிய நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் நடத்த முடியாது என்று சொல்வது கையாலாகாத்தனம்தான். ஆனால் உண்மை அது இல்லை. முற்றிலும் அரசியல். லலித் மோடி பா.ஜா.க. முக்கியப் புள்ளிகளுடன் நெருக்கம் கொண்டவர். BCCI பவார் கையில். மகாராஷ்ட்ராவில் பவார் கட்சியுடன்
காங்கிரசுக்கு கூட்டணியில் இழுபறி. இந்த பின்புலத்தில் சிதம்பரம் விளையாடிய அரசியல் boomerang ஆகியது.

போலவே உங்கள் கிரிக்கெட் மற்றும் அவர்களுடன் கூடாரம் அடிக்கவேண்டிய மற்றவர்களின் 'வாக்கு அளிக்காததால் குறையும் நாட்டுப்பற்று' என்பது போன்ற குற்றச் சாட்டு. எல்லாருக்கும் வயிற்றுப்பாடு சாமி. பணம். கிரிக்கெட் வீரர்களை, அவர்கள் சம்பாதிக்கும் பணத்திற்காக எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; அதற்கு எப்போதுமே ஆதரவு கிடைக்கும் என்பதால் ....குத்துங்க எசமான் குத்துங்க.

535 மட்டும் தான் அசத்தல். ஏன் இவ்வளவு காண்டு அப்பிடின்னு கேக்குறியா? 'கவிதை புரியவில்லை' னு எப்பவும் சொன்னா இப்பிடி தான் :)

அனுஜன்யா

said...

Kalakkal thuNuks anna :)))

said...

வெண்பூ விற்கு பதிவு போட நேரம் கிடச்சாச்சு....ஐயாஆஆ

said...

நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் வெண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்பூ.......

said...

கிரிக்கெட் மேட்ச் டீட்டெயிலு சூப்பர்

Anonymous said...

விகடன் மார்க்க் கொடுப்பதற்கு பதிலா குமுதம் மாதிரி சுமார், ஓக்கே, பார்க்கலாம், நன்று இப்படி ஏதாவது டேக் செய்யல்லாம்.

மதன் பதிலின் நேர்மை என்னை ஆச்சர்யப்படுத்தியது.

said...

ஏம்பா, அந்த மதன் பதிலை இங்கே போடக்கூடாதா???? நாங்கல்லாம் எங்கே போய் படிக்கறது?????

said...

// T.V.Radhakrishnan said...
வெண்பூ விற்கு பதிவு போட நேரம் கிடச்சாச்சு....ஐயாஆஆ
//

ஹையாஆஆஆஆஆஆ!!!!!!!!!!

said...

அடடா துணுக்ஸ் நல்லா இருக்கே!

வம்பூ நன்னி நன்னி, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் துணுக்குஸ்!!

said...

பி.எஸ்.செந்தில் குமரன், முதுகுளத்தூர்.

காந்திஜி தாஜ்மஹாலை நேரில் சென்று பார்த்துள்ளாரா?

என்னைத் திகைக்கவைத்த கேள்வி இது! யாரேனும் வாசகர் பதில் சொல்ல முடியுமா?!

said...

ஹ்ம்ம்ம்.. ரொம்ப நல்லா இருக்கு வெண்பூ.

//இதோ மறுபடியும் நாடு தழுவிய தேர்தல் திருவிழா. தேதி அறிவிச்ச உடனே உண்ணாவிரதம்னு ஒருத்தர் ஆரம்பிக்கிறாங்க‌, இத்தனை நாளா பிரச்சினைக்காக உயிரையே தருவேன்னு சொன்ன எல்லாருமே அமைதியாகிட்டாங்க. என்ன அரசியலோ ஒண்ணுமே புரியல...//

புரிஞ்சிட்டே புரியலைனா எப்டி? ;))

said...

//எனக்கு ஒரே ஒரு கேள்வி சாமிகளா? இத்தனை வருசமா "இந்தியா" அப்படின்ற பேர்ல கிரிக்கெட் விளையாண்டு கோடி கோடியா சம்பாதிச்ச எந்த *****ம் ஓட்டு போடப் போறதில்லையா?//

எதுக்கு போடனும்? ஓட்டுப் போடலைனா இவங்களுக்கு என்ன குறைஞ்சிடும். இல்ல மக்கள் தான் கிரிக்கெட் பார்க்கிறதை நிருத்திடுவாங்களா? :)

அந்த ஸ்டார்களை எடுத்துடுங்க. முழு வார்த்தையும் போடுங்க. ஒன்னும் தப்பில்ல.

said...

அனுஜன்யா,
வலல்ரசு ஆசை வேறு. வல்லரசாக இருப்பது வேறு. ஆசை இருப்பதற்காக அதை உயிகளை வைத்து விளையாடக் கூடாது. இரண்டு பெரிய நிகழ்ச்சிகளா? ஒன்று தான் பெரிய நிகழ்ச்சி. அது தேர்தல். அரசாங்கத்தின் முக்கியக் கடமை.

கிரிக்கெட் என்பது ஒரு தனி அமைப்பால் முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடன் நடத்துவது. இதற்கு அரசாங்கம் முக்கியத் துவம் தர வேண்டியதில்லை. பாதுகாப்பு மட்டுமே இங்கு அரசாங்கத்தின் கவலை.

அமெரிக்காவின் பெண்டகன் மீதும இரட்டைக் கோபுரத்தின் மீதும் தாக்குதல் நடைபெற்ற போது அமெரிக்கா ஏழை நாடா? வல்லரசு இல்லயா? ஏன் தடுக்க முடியவில்லை?

ஒரு நாட்டின் ராணுவத்துக்கு கூட சில கட்டுபாடுகள் இருக்கு. ஆனால் தீவிரவாதிகளுக்கு இல்லை. அதனால் தேர்தல் சமயத்தில் அதை சரியாக நடத்த வேண்டும். அதற்கு பாதுகாப்பு படைகள் முழுமையாகப் பயன்படுத்தப் படும். எனவே கிரிக்கெட்டுக்கு பாதுகாப்பு குடுக்க முடியாது. இதில் என்ன கையாலாகத் தனம்?


மோடி என்ன ஆளாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இப்போது பிசிசிஐ பவார் கட்டுபாட்டில் இல்லை என நினைக்கிறேன். ப.சிதம்பரம் கிரிக்கெட்டே விளையாட வேண்டாம் என சொல்லவில்லையே. தேர்தலுக்கு பிறகு வைத்துக் கொள்ளுங்கள் என்று தானே சொன்னார்?

//போலவே உங்கள் கிரிக்கெட் மற்றும் அவர்களுடன் கூடாரம் அடிக்கவேண்டிய மற்றவர்களின் 'வாக்கு அளிக்காததால் குறையும் நாட்டுப்பற்று' என்பது போன்ற குற்றச் சாட்டு. எல்லாருக்கும் வயிற்றுப்பாடு சாமி//

கிரிக்கெட் வீரர்களுக்கு வயிற்றுப் பாடா? :)) நான் என்ன பதில் சொல்ல இதுக்கு?

அது சரி.. தெனாப்பிரிக்காவில் விளையாடினா அது எப்படி இந்தியன் ப்ரீமியர் லீக் ஆகும்?ஒரே குழப்பமபபா.. :))

//முற்றிலும் அரசியல். லலித் மோடி பா.ஜா.க. முக்கியப் புள்ளிகளுடன் நெருக்கம் கொண்டவர். BCCI பவார் கையில். மகாராஷ்ட்ராவில் பவார் கட்சியுடன்
காங்கிரசுக்கு கூட்டணியில் இழுபறி. இந்த பின்புலத்தில் சிதம்பரம் விளையாடிய அரசியல் boomerang ஆகியது. //

இப்படியும் சொல்லலாமா? லலித் மோடி பிஜேபி முக்கியப் பிரமுகர்களுடன் சேர்ந்து வேண்டுமென்றே இப்ப்டி செய்கிறார் என்று?. :))

எல்லாம் நாம் குடுக்கும் ஆதரவால் வரும் திமிர். தொடர்ந்த மேட்ச்களால் விளையாட்டு வீரர்கள் சோர்வடைந்து சொதப்பும் போது தெரியும் இந்த லைத் மோடிக்கு,

ஹாக்கிக்கி கில்
கிரிக்கெட்டுக்கு லலித் மோடி.
இதற்கும் விரைவில் பாடை ரெடி ஆகும் போல.

said...

//முரளிகண்ணன் said...

535 மேட்டர் அருமை//

ரீப்பிட்டு போட்டுகிறேன்

said...

துணுக்ஸ் அருமை!

said...

அன்பின் வெண்பூ - துணுக்ஸ் ரொம்ப அருமை - நல்லாவே இருந்துச்சி -

said...

நீங்க வெண்பூவா? குறிஞ்சிப்பூவா? பதிவெல்லாம் அப்பப்பத்தான் வருது ??

535 சூப்பர் !!

said...

வெண்பூ.. அருமையான துணுக்ஸ்.. எல்லா மேட்டரும் கலக்கல். தாஜ்மகால் விசயம் படிக்கும்பொழுது எனக்கும் அந்த எண்ணம்தான் ஏற்பட்டுச்சு.

துணுக்..மினுக்..மினுக்..

said...

நாமக்கல் சிபி, தமிழ் பிரியன், ஒரு மனுசன் ஒரு மணி நேரம் செலவழிச்சி 2 பக்கத்துக்கு பதிவு போட்டா அதைப் பத்தி பேசாம நயன்தாரான்னு பேர பாத்த உடனே அதைப் பத்தி பின்னூட்டம் போடுறீங்க பாத்தீங்களா!!! உங்கள நினைச்சா புல்லரிக்குது... :)

said...

வாங்க கார்த்திக், நீங்க சொல்றதுதான் நிஜம், ஓட்டு போடறத பத்தி நாமதான் கவலைப்படணும்.. அவங்களுக்கென்ன?

//
தமிழ் பிரியன் said...
இனி அடுத்தடுத்து பதிவுகளை எதிர்பார்க்கிறோம்..:)
//
பாக்கலாம், முடியுதான்னு..

//
பழமைபேசி said...
**161 + 121 + 99 + 154 = 535**

வரலாறு முக்கியம்ல?! இஃகிஃகி!!
//
வாங்க பழமைபேசி.. க.க.க.போ... :))))

said...

வாங்க அனுஜன்யா.. அரசியல் இருக்குன்றது நிஜம். ஆனா நீங்க சொல்ற "வல்லரசு" வாதத்துல எனக்கு உடன்பாடில்லை. வீட்ல கல்யாணம் நடக்குது, உங்க நண்பர் அதே நாள்ல சினிமா டிக்கெட் குடுக்குறாரு.. நீங்க கல்யாணத்தை பாப்பீங்களா? இல்லை சினிமாக்கு போவீங்களா?

என்னதான் வல்லரசு ஆசை இருந்தாலும், நம்ம மக்கள் தொகைக்கு ஒரே நேரத்துல ரெண்டு பெரிய நிகழ்ச்சிகளை பாதுகாப்பா நடத்துறது இயலாத காரியம். அதை தைரியமா ஒத்துகிட்டதுக்காகவே சிதம்பரத்தையும் மத்திய அரசையும் பாராட்டலாம். வீம்புக்கு ஓகே சொல்லிட்டு நாளைக்கு எதுனா பிரச்சினையானா போகப்போறது அவங்க உயிர் இல்லை, நம்ம உயிர்தான் அனுஜன்யா..

கருத்துக்களுக்கு நன்றி..

//
'கவிதை புரியவில்லை' னு எப்பவும் சொன்னா இப்பிடி தான் :)
//
மெய்யாலுமே எனக்கு புரியல அனுஜன்யா. கவிதையில எதோ குறியீடு இருக்குன்னு தெரியுது. ஆனா அது என்னன்னு தான் புரியல.. :)))

said...

நற நற் கர,கர நொறுக்கு துணுக்க்ஸ் குட்.

said...

//
ஸ்ரீமதி said...
Kalakkal thuNuks anna :)))
//

வாங்க ஸ்ரீமதி.. நன்றி..

//
T.V.Radhakrishnan said...
வெண்பூ விற்கு பதிவு போட நேரம் கிடச்சாச்சு....ஐயாஆஆ

அத்திரி said...
நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் வெண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்பூ.......
//
வாங்க டி.வி.ஆர், அத்திரி... உங்க வார்த்தையில லேசா ஒரு சோகம் தெரியுதே "இத்தனை நாள் சந்தோசமா இருந்தோம்... வந்துட்டான்டா"ன்னு :)))

said...

வாங்க குசும்பன், அண்ணாச்சி, ச்சின்னப்பையன்...

ச்சின்னப்பையன், ஜோக் பின்னூட்டத்துல போட்டாச்சி..

said...

வாங்க அபி அப்பா, சஞ்சய்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

said...

வாங்க வால்பையன், சீனா அய்யா, மங்களூர் சிவா, மஹேஷ், நர்சிம்.. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..

said...

வாங்க சங்கர்ஜி... வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..

said...

//
ச்சின்னப்பையன், ஜோக் பின்னூட்டத்துல போட்டாச்சி.. //

ஸாரி.. கேள்வி பதில்னு போடுறதுக்கு பதிலா ஜோக்னு போட்டுட்டேன்..

said...

அனுஜன்யா,

உங்க கருத்தோட அப்படியே ஒத்து போறேன். இங்க நடந்தது முழுக்க முழுக்க அரசியல். கிரிக்கெட் போர்டுக்கு மக்கள் கிட்ட சப்போர்ட் இல்லாம போனதுக்கு முழு காரணம் அவங்க இத்தன நாளா பண்ணின அரசியல். அரசாங்க சப்போர்ட் இல்லாம பயங்கர வெற்றியோட நடக்குது கிரிக்கெட் போர்டு மட்டும் தான் இந்தியாவுல. அதே மாதிரி எவ்வளவோ பேரு வெளிநாட்டுல வேலை பாக்கறோம். நாங்க எல்லாம் தேர்தலுக்கு இந்தியா வந்து வோட்டு போடுகிறோமா ? கிரிக்கெட் விளையாடறவன் மட்டும் எதுக்கு குத்தம் சொல்லணும். வெளிநாட்டுல இருக்கற இந்திய தூதரகத்துள வாக்கு செலுத்தற facility கொண்டு வரலாம். அத விட்டுட்டு இந்த மாதிரி moralistic approach எல்லாம் சரி இல்ல.

சஞ்சய், தேர்தல் தேதி மாத்த சொல்லி கேட்டா BCCI நம்ப திட்டலாம். அது மட்டும் இல்லாம, schedule கூட தேர்தல் அன்னிக்கு இல்லாம ரெண்டு முறை மாத்தி கொடுத்தாங்க. அப்படியும் செக்யூரிட்டி தர மறுத்தது அரசாங்கம் தான். எதுக்கு செக்யூரிட்டி ? தர முடியாதுன்னு சொல்றது வேற. தர கூடிய நிலைமை இல்லன்னு சொல்றது வேற. முதல் முடிவு policy சம்பந்தப்பட்டது. ரெண்டாவது அரசியல் / கையாலாகாத்தனம் சம்பந்தப்பட்டது. இது எல்லாம் ஷரத் பவார் maharastra காரன் பிரதம மந்திரி ஆகனும்ன்னு சொன்னதுல வந்தது. கிரிக்கெட் போர்டுல அரசியல் வாதிங்க வந்தா இப்படி தான் ஆகும் !

எனக்கும் உங்க கவிதை புரியாட்டியும் சூப்பர் சொல்லிக்கிட்டு தான் இருக்கேன்.

said...

முதல் டெஸ்ட் மேட்ச் ஒரே இன்னிங்க்ஸ்ல 535 தாண்டிட்டாங்க !

said...

வாங்க மணிகண்டன்.. வருகைக்கும் உங்க கருத்துக்களுக்கும் நன்றி.

முதல் மேட்ச் முதல் இன்னிங்ஸ்ல 520 தானே அடிச்சாங்க.. இதை பாருங்க..

//
எனக்கும் உங்க கவிதை புரியாட்டியும் சூப்பர் சொல்லிக்கிட்டு தான் இருக்கேன்.
//
ஹி..ஹி..

said...

அனைத்து மேட்டரும் அருமை :) :)

said...

//வெண்பூ said...
//
ச்சின்னப்பையன், ஜோக் பின்னூட்டத்துல போட்டாச்சி.. //

ஸாரி.. கேள்வி பதில்னு போடுறதுக்கு பதிலா ஜோக்னு போட்டுட்டேன்..//

Enga pOtrukkeenga anna?? Am searching... :((

said...

வாங்க புருனோ.. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..

ஸ்ரீமதி , ச்சின்னப்பையன் கேட்டதுக்கு அடுத்து மூணாவது பின்னூட்டமாவே இருக்கே.. கிடைக்கலைன்னா "காந்திஜி"ன்னு தேடுங்க :)))

said...

/எனக்கு ஒரே ஒரு கேள்வி சாமிகளா? இத்தனை வருசமா "இந்தியா" அப்படின்ற பேர்ல கிரிக்கெட் விளையாண்டு கோடி கோடியா சம்பாதிச்ச எந்த *****ம் ஓட்டு போடப் போறதில்லையா?/

:)

said...

கிடைச்சது.. நன்றி அண்ணா.. :)))

said...

me the 50 :):)

said...

Yup. you were right. they scored only 520

Now Aussie Tennis Federation wants to move out the Davis Cup event from chennai to a different place citing the same security reasons !

said...

அந்த பழைய 535 இன்னும் என்னுடைய கண்ணிலேயே நிற்கிறது.

அது முடிந்த கையுடன் வேர்ல்ட் கப் ஆரம்பமானது.

ஆஸ்திரேலியா செயித்தது.

நன்றி - பகிர்தலுக்கு

said...

//இத்தனை வருசமா "இந்தியா" அப்படின்ற பேர்ல கிரிக்கெட் விளையாண்டு கோடி கோடியா சம்பாதிச்ச எந்த *****ம் ஓட்டு போடப் போறதில்லையா?//

சரியான சாட்டையடி...!

அதைவிட இந்தியாவில் பாதுகாப்பு இல்லைன்னு இவனுங்களே கா(கூ)ட்டிக்கொடுக்குறானுங்க!

said...

:-)

said...

வாங்க நிஜமா நல்லவன், மணிகண்டன், சுரேகா, தமிழ்நெஞ்சம், சென்ஷி வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி..

said...

//
புருனோ Bruno said...
அனைத்து மேட்டரும் அருமை :) :)
//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி டாக்டர்..

said...

வாண்ணே!வாண்ணே!வாண்ணே!

பார்ட்னர் கொஞ்சநாளா எழுதாததால நான் எழுதுறதும் ரொம்ப கொறஞ்சுபோச்சு :)

(இதுக்கு முன்னாடி மட்டும் என்ன கிழிச்சோமா!!)

said...

//
எம்.எம்.அப்துல்லா said...
வாண்ணே!வாண்ணே!வாண்ணே!
//
வாங்க அப்துல்லா... எங்கடா நம்ம ஆளக் காணோமேன்னு பாத்தேன்..

//
பார்ட்னர் கொஞ்சநாளா எழுதாததால நான் எழுதுறதும் ரொம்ப கொறஞ்சுபோச்சு :)
//
லூஸ்ல‌ விடுங்க‌ அப்துல்லா.. ந‌ம்ம‌ள‌ மாதிரி பெரிய‌ ம‌னுச‌ங்க‌ளுக்கு ஆயிர‌ம் வேலை இருக்கும்ம்ம்ம்ம் (இருங்க‌ பின்னூட்ட‌த்த‌ முழுசா ப‌டிச்சிக்கிறேன்)

//
(இதுக்கு முன்னாடி மட்டும் என்ன கிழிச்சோமா!!)
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... கம்பேனி ரகசியத்த இப்படிய போட்டு ஒடக்கிறது

said...

ப்ரொஃபைல் ஃபோட்டோ சூப்பர் அப்துல்லா...

said...

உங்க ப்லாக் அருமை

said...

வாங்க சங்கர்.. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.. உங்க ப்ரொஃபைல் பெயர் எனக்கு ரொம்ப பரிச்சயமானது. சேலத்துல சங்கர் பிலிம்ஸ்னே ஒரு கம்பெனி இருந்தது, அது இருந்த ரோடோட பேரே சங்கர் பிலிம்ஸ் ரோடுதான். என் தாத்தா வீடு அந்த ரோட்டில் இருந்தததால் உங்க பெயரை பாத்தவுடனே அவங்க நினைவுகள் வந்துடுச்சி..

said...

எந்தப்பக்கம் போனாலும் கிரிக்கெட்டா.? அடப் போங்கப்பா..

said...

:)

said...

Thunuks Kalakal

said...

:)

said...

சரி சரி அடுத்த பதிவை எழுதுங்கப்பூ :)

said...

நலல பதவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க

said...

ஆனந்த விகடனில் வந்ததிற்கு வாழ்த்துகள். நச் முடிவு:)