"வண்டிய ஃபுல் சர்வீஸ் பண்ணிடுங்க"
"கீ குடுங்க சார்.. வண்டிய செக் பண்ணிடுறேன்"
"ஏங்க, செக் பேங்க்ல போட்டீங்களாங்க?"
"போட்டாச்சும்மா.. சொல்ல மறந்துட்டேன்"
"ஏங்க இந்த சனிக்கிழமை நீங்க ஃப்ரீயா? குசும்பன், தாமிரா, அப்துல்லால்லாம் வருவாங்கன்னு ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாலயே சொன்னீங்களே. இந்த வாரம் எதும் வருவாங்களா?"
"இல்லைமா.. குசும்பன் ஊருக்கு போய்ட்டாரு.. மறுபடியும் வர்றப்ப வருவாரு. ஏன் கேக்குற?"
"இல்ல.. நீங்க ஷீ வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தீங்களே.. வாங்கிட்டு அப்படியே ராணி மெய்யம்மை ஹால்ல பட்டுப்புடவை சேல் போட்டிருக்காங்க, போய்ட்டு வரலாமா?"
"ப்ரேக் ஷீ மாத்தணும் சார்.. ப்ரேக் ரொம்ப கம்மியா இருக்கு. "
"ஆமாங்க.. சர்வீஸ் பண்ணி ஒரு வருஷம் ஆகப்போகுது. மாத்திடுங்க"
"ஃப்ரன்ட்லயும் மாத்திடவா சார்?"
"மாத்திடுங்க"
"பையனுக்கு டாய்ஸ்லாம் பழசாயிடுச்சி. தூக்கி போட்டுட்டு வேற மாத்தணும். அப்படியே நுங்கம்பாக்கத்துல டாய்ஸ் கடைக்கு போகலாங்க. "
"ஏம்மா, இருக்குறத வெச்சி வெளையாண்டுட்டுதான இருக்குறான்"
"அதுக்காக புதுசா எதுமே வாங்கக் கூடாதா? நான் என்ன எனக்கா கேக்குறேன்?"
"கேக்கவே வேணாம். இஞ்சின் ஆயில் மாத்திடுங்க. டாப் அப் பண்ணாதீங்க. கம்ப்ளீட்டாவே மாத்திடுங்க"
"சரிங்க சார். எழுதிக்கப்பா, ப்ரேக் ஷீ, ஃப்ரண்ட், பேக் ரெண்டும், இஞ்சின் ஆயில்.. டூல் கிட் இருக்குது.. பெட்ரோல் அரை லிட்டர் இருக்கு.. பேட்டரி எக்ஸைட்"
"சார் சீட் கவர் சேஞ்ச் பண்ணிடவா?"
"ஒரு சேஞ்சா இருக்கும். ஈவ்னிங் டின்னர் வெளிய பண்ணிக்கலாமா?"
"இந்த வாரம் ஏற்கனவே ரெண்டு தடவை வெளிய வாங்கி சாப்டாச்சுமா"
"வீக் எண்ட் ரெண்டு நாள்தான் வீட்ல இருக்கீங்க. அதுவும் டீவி பாக்குறது போக இருக்குறதே கொஞ்ச நேரம்தான். நாங்க வாரம் ஃபுல்லா வீட்லயேதான இருக்குறோம். வீக் எண்ட்லயாவது எங்கியாவது வெளிய கூட்டிட்டு போங்களேன். அந்த டீவி சவுண்டைதான் கொஞ்சம் குறையுங்களேன். காது கிழியுது.."
"டேங்க் கவர் கிழிஞ்சிருக்கு. மாத்திடுங்க... அப்புறம், ஹெட்லைட் வெளிச்சம் ரொம்ப கம்மியா இருக்கு. எதுனா பண்ண முடியுமா?"
"சார், இது பழைய மாடல் ஸ்பெலென்டர்ல இருக்குற பிரச்சினை. அசெம்ப்ளி ஃபுல்லா மாத்துனும். ஹாலஜென் லாம்ப் போட்டா நல்லா வெளிச்சம் வரும். 500 ரூவா ஆகும் சார். மாத்திடவா"
"மாத்தி மாத்தி எதுனா கேட்டுகிட்டே இருக்கேன்னு நெனக்காதீங்க. நான் ஒண்ணு கேப்பேன் கோச்சுக்க மாட்டீங்களே?"
""
"கல்யாணம் ஆனதுக்கு அப்புறமா நகையே எதுவும் வாங்கல. எதுனா விசேஷம்னா எங்க அம்மா போட்ட நகையேத்தான் போட்டுகிட்டு போறேன். அடுத்த மாசம் என் பர்த்டே வருதுல்ல.. நான் சின்னதா ஒரு செயின் வாங்கிகிட்டுமா?"
"மொத்தம் எவ்ளோ வரும்?"
"சர்வீஸ் சார்ஜ் எல்லாம் சேத்து 1500 ரூபா ஆகும் சார். ஆறு மாசத்துக்கு வண்டி வேற எந்த செலவும் வெக்காது. நான் கியாரண்டி"
"இப்ப எதுக்கு இவ்ளோ பெரிய செலவு?"
"நான் என்ன எப்பவுமேவா கேக்குறேன். இத்தனை வருஷம் கழிச்சி கேட்டாக்கூட வாங்கித் தரலன்னா எப்படி?"
"#$%#%#$%#$%&$%&"
"*(&*(&^%&^%%^%$$&$^$"
"^%(**()&()&()*"
Thursday, February 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
52 comments:
அருமை:))! ரசித்தேன் கதையைப் புனைந்த விதத்தையும்:)!
நகைச்சுவை ஓக்கே.. புனைவு...???
கலக்கல் நடை தல..
வெல்கம் பேக்
கலக்கல் பேக்
மிரட்டல் பேக்
உங்க வீட்ல தான் ப்ளாக் படிப்பாங்களே!
இன்னுமா அடி விழுகல?
வெண்பூ, கலக்கல்
கலக்கிர்கீங்க...
அந்த கண்டியினுட்டி...சூப்பர்...
தங்கமான வண்டிக்கு வேணா நீங்க brake போடலாம்,ஆனா தங்கமணிக்கு brake போடமுடியாது
பாத்துப்பா உன்னை ஓவரால் பண்ணிடப் போறாங்க.
:)))))))))))அருமை அண்ணா :))
கலக்கல்......
/*தங்கமான வண்டியும் தங்கமணியும் */
தங்கமான வண்டிய கூட உதைத்து தான் ஸ்டார்ட் பண்ணனும் சவுண்டு வரதுக்கு ஆனா தங்கமணிய அப்படி இல்லையே.
**********
தங்கமான வண்டியாக இருந்தாலும் சரி தங்க மணியா இருந்தாலும் சரி. நாளாகி போச்சுன்னா சவுண்டு வரத்தான் செய்யும்.
ரெண்டையும் நீங்க மாமனாரு வீட்லே இருந்து கொண்டு வந்தீங்கன்னா, ரெண்டுமே உங்க பேச்சை கேட்காது.
*******
நான் என்ன எப்பவுமேவா கேக்குறேன். இத்தனை வருஷம் கழிச்சி கேட்டாக்கூட வாங்கித் தரலன்னா எப்படி?"
********
ஆமா. வன்மையா கண்டிக்கறேன்.
:)-
:))
நல்லா இருக்கே கதை!
தங்கமணி கேட்டா வாங்கித் தரதில்லையா நீங்க?
லேபிள் போட்டா நம்பிடுவோமா????
//"இல்லைமா.. குசும்பன் ஊருக்கு போய்ட்டாரு.. மறுபடியும் வர்றப்ப வருவாரு. ஏன் கேக்குற?"
"இல்ல.. நீங்க ஷீ வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தீங்களே.. வாங்கிட்டு அப்படியே ராணி மெய்யம்மை ஹால்ல பட்டுப்புடவை சேல் போட்டிருக்காங்க, போய்ட்டு வரலாமா?"//
ச்சே மிஸ் ஆயிட்டே, வரேன்னு எப்படியாவது உங்களுக்கு செய்தி சொல்லி இருந்தா உங்க பர்ஸ் பழுத்திருக்குமே:(((
(அப்துல்லா அண்ணாச்சி கவனிச்சா சரி ஆகிடும்:(
வால்பையன் said...
உங்க வீட்ல தான் ப்ளாக் படிப்பாங்களே!
இன்னுமா அடி விழுகல?//
என்னது எங்க வெண்பூவ தொட முடியுமா? குங்பூ பாண்டாவில் அந்த கரடி போல வெண்பூ (குங்பூவில் என்று சொல்லவந்தேன்).
இப்படிக்கு
வீட்டுல எலி வெளியில் புலியாய்
உதாற் விடுவோர் சங்கம்
//"ப்ரேக் ஷீ மாத்தணும் சார்.. ப்ரேக் ரொம்ப கம்மியா இருக்கு. "//
இதெல்லாம் மாத்துவது இருக்கட்டும் போட்டு இருக்கும் ஷூ சாக்ஸை மாத்துங்கப்பா!
//அதுக்காக புதுசா எதுமே வாங்கக் கூடாதா? நான் என்ன எனக்கா கேக்குறேன்?"//
யக்கோவ் உங்களுக்காகதானே உயிறுள்ள ஒரு பொம்மைய கொடுத்து இருக்கோம், அடிச்சு துவைச்சு ரவுண்டுகட்டி வெளுத்து
விளையாடுங்க.
இப்படிக்கு
குடும்பத்தில் குண்டு வைப்போர் சங்கம்!
//எங்க அம்மா போட்ட நகையேத்தான் போட்டுகிட்டு போறேன்.
"இப்ப எதுக்கு இவ்ளோ பெரிய செலவு?"//
என்னது அப்ப வரதட்சனை வாங்கியது புரூவ் ஆயிடுச்சு இதுக்கு தகுந்த தண்டனையை வாங்கி கொடுப்போம்.
இப்படிக்கு
கேஸ் இல்லாமல் வாழ்கையை ஓட்டும்
வக்கில் சங்கம்
ஹா ஹா ஹா. இன்னும் சிரிப்பு அடங்கவில்லை. நேற்று தாமிரா பதிவு. இன்னிக்கு இது.
வால் சொல்வதுபோல் 'வெல்கம் பேக்'.
ஒரு சேஞ்சுக்கு நர்சிம்/கார்க்கியுடன் ஒத்துப்போகிறேன் :) இது நிச்சயம் புனைவு இல்ல.
அனுஜன்யா
narsim said...
நகைச்சுவை ஓக்கே.. புனைவு...???
என்னா இப்படி கேட்டுபுட்டீங்க தல இன்னுமா உங்களுக்கு இதில் இருக்கும் புனைவு புரியவில்லை.
வண்டின்னா வண்டி இல்லை வண்டி என்பது வெண்பூ, மெக்கானிக்ன்னா மெக்கானிக் இல்லை டாக்டர்.
//டேங்க் கவர் கிழிஞ்சிருக்கு. மாத்திடுங்க... அப்புறம், ஹெட்லைட் வெளிச்சம் ரொம்ப கம்மியா இருக்கு. எதுனா பண்ண முடியுமா?"//
டேங்க் கவர் = சட்டை (டேங்க்= வயிறு) அடிச்ச அடியில் கிழிஞ்சு போச்சு.
ஹெட்லைட்= கண் (பொறி கலங்கி மங்கலா தெரியுது)
//சார் சீட் கவர் சேஞ்ச் பண்ணிடவா//
சீட் கவர்= பேண்ட்
:-))))))))))
போட்டுத் தாக்குங்க...
இப்படி வண்டியை வெண்பூவோடு ஒப்பிட்டு புனைவை படியுங்கள் நர்சிம், அனுஜன்யா! இது புனைவுதான்.
கட்டிய மனைவியை கிண்டல் செய்யும் இது போன்ற பதிவுகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பெண்களை என்ன கிள்ளுக்கீரை என்று நினைத்தீர்களா..
அப்புறம் நாந்தான் 25.!
அண்ணே... ரெண்டு வித்தியாசமான உரையாடல்களை கலக்கி ஒரு கலக்கலா பதிவு !! சூப்பர் !!!!
புனைவுங்கிறத மட்டும்தான் நம்ப முடியல :)))
அண்ணே வெண்பூ...சூப்பரப்பு :)
/தாமிரா said...
கட்டிய மனைவியை கிண்டல் செய்யும் இது போன்ற பதிவுகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பெண்களை என்ன கிள்ளுக்கீரை என்று நினைத்தீர்களா//
ங்கொய்யால.. எல்லா இடத்துலயும் பின்நவீனத்துவமா இன்னைக்கு??????
//அப்புறம், ஹெட்லைட் வெளிச்சம் ரொம்ப கம்மியா இருக்கு. எதுனா பண்ண முடியுமா?"
", இது பழைய மாடல் ஹாலஜென் லாம்ப் போட்டா நல்லா வெளிச்சம் வரும். 500 ரூவா ஆகும் சார். மாத்திடவா"//
ஒழுங்கா உண்மையை சொல்லுங்க.. ரீசண்டா டாக்டரை பார்த்தப்போ அவர் உங்களுக்கு சொன்ன சமாச்சாரம் தானே இதெல்லாம்? :))
//Labels: நகைச்சுவை, புனைவு//
திருத்தம்
Labels: அனுபவம், உண்மை சம்பவம்.
:))
இதுக்குத்தான ப்லோக் எழுத வீட்டுல தடா போட்டாங்க...
(காபி ல்லாம் பொறுமையா ஆத்தி குடுப்பிங்களே..பாவம் உங்கள போய்...இப்ப உடம்புக்கு தேவலையா?)
ஹா ஹா
குசும்பா நீ சொன்ன மாதிரி படிச்சேன் புனைவு புரிந்தது!!
:))))))))
நல்லாத்தான் இருக்கு - கதை செல்லும் விதம் - தொடர்வது நல்லாவெ எஇருக்கு
:-)))...
//என்னது அப்ப வரதட்சனை வாங்கியது புரூவ் ஆயிடுச்சு இதுக்கு தகுந்த தண்டனையை வாங்கி கொடுப்போம்.//
ஒரு குற்றத்திற்கு ஒரு முறைதானே தண்டனை?
:-)))
முதல் முறை படிச்சப்போ ஜூப்பர்... குசும்பன் கமென்ட் படிச்சு புனைவின் பொருள் புரிந்து படிச்சா ஜூப்பரோ ஜூப்பர்... வோய் ப்ளட்! சேம் ப்ளட்... ;)
உங்க புனைவு அருமை.
குசும்பனார் வகுப்பு எடுத்து எல்லோருக்கும் புரிய வைத்ததும் அருமை(பாருங்கப்பா இவரு எவ்வளவு நல்லவருன்னு!! :-)).
நல்லா இருக்கு :-))
தங்கமான பதிவு வெண்பூ!
யோவ்.. ச்சான்ஸே இல்லப்பா! கலக்கல்! மறுபடி சிறுகதை எழுதற ஸ்டைலை தெளிவாப் புரிஞ்சு வெச்சிருக்கற ஆள் நீங்கதான்-னு நான் அடிக்கடி சொல்றத நிரூபிக்கறீங்க...
எழுதற மேட்டர், எல்லாருக்கும் நெருக்கமா இருக்கு பார்த்தீங்களா.. அதுதான் படைப்பின் வெற்றி.
இது நிச்சயமா பத்திரிகைகள்ல வரவேண்டிய படைப்பு. க்ரேட்!!!
“ரசித்தேன்"
பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன்
//பாபு said...
தங்கமான வண்டிக்கு வேணா நீங்க brake போடலாம்,ஆனா தங்கமணிக்கு brake போடமுடியாது//
ரிப்பீட்டேய்...........
ஆஹா..ஆஹா.. இந்த மொக்கைப் பதிவுக்கு இத்தனை வரவேற்பா.. நம் பதிவுலகத்தினர் மொக்கை விரும்பிகள்ன்றத மறுபடியும் ப்ரூஃப் பண்ணிட்டாங்கப்பா..
வாங்க ராமலக்ஷ்மி.. வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி..
நர்சிம்.... ம்ம்ம்ம்.. இது புனைவுன்னு நான் சொன்னாலும் நீங்க நம்பமாட்டீங்கன்றது தெரிஞ்சாலும் இதை புனைவுன்னு நான் போட்டதுனாலயே இது புனைவா ஆகிடுமான்னு நான் யோசிச்சா.. (சரி விடுங்க... பாம்பின் கால் பாம்பறியும்)
ராமலக்ஷ்மி, நர்சிம், வால்பையன், அ.மு.செய்யது, பாபு, வேலன் அண்ணாச்சி, ஸ்ரீமதி தங்கச்சி, மேவீ, நையாண்டி நைனா, மணிகண்டன், அமிர்தவர்ஷினி அம்மா, நாமக்கல் சிபி, கார்க்கி, குசும்பன், அனுஜன்யா, ச்சின்னப்பையன், தாமிரா, மஹேஷ், அப்துல்லா, சஞ்சய், கும்க்கி, சிவா, சீனா அய்யா, விஜய் ஆனந்த், பாலராஜன் கீதா, நாட்டி, பட்டாம்பூச்சி, அமுதா, வெயிலான், பரிசல், டி.வி.ராதாகிருஷ்ணன் ஐயா, அத்திரி, ஜோதி பாரதி... (ஹப்பா.. சொல்லி முடிக்கிறதுகுள்ள மூச்சு வாங்குதுடா சாமி)..
எல்லாருக்கும் நன்றி.. வருகைக்கும், கருத்துக்கும், நக்கலுக்கும்...
ஆனாலும் இந்த குசும்பன் இருக்காரே.. ஐயா.. உன் கால்லயே வுழுந்துடுவேன்.. பாத்துக்க.. இது மெய்யாலுமே புனைவுதான் புனைவுதான் புனைவுதான்.. ஆனா குசும்பன் சொன்ன அர்த்தத்துல இல்ல இல்ல இல்ல...
இரண்டு கதைய ஒரே படத்துல பார்த்த ஃபீலிங் கொடுத்துட்டீங்க...என்னவோ போங்க...கலக்கிட்டீங்க
ஆறு மாசத்துக்கு வண்டி வேற எந்த செலவும் வெக்காது. நான் கியாரண்டி
:))))))))))))
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி விஜயசாரதி & ஸ்ரீதர்கண்ணன்...
ரெண்டுமே நீங்களா தேடிப் போய் வாங்குனதுதானே? அப்பப்போ செலவு வைக்கத்தான் செய்யும். இதுக்குப் போயி... ;-)
hi,ur blog very good-ekambavanan
Post a Comment