Monday, February 9, 2009

உங்களுக்கு "எழுத்தாளர் சுஜாதா"வைப் பிடிக்காதா?

சுஜாதா... இவரை வெறுமனே எழுத்தாளர் என்று குறிப்பிட்டதற்காக என்னை திட்டி ஏற்கனவே பின்னூட்டம் போட்டிருப்பீர்கள் (அ) போடத் தயாராக இருப்பீர்கள். தமிழக அரசியல் வரலாறை பேசும் யாருமே திட்டியாவது கலைஞரைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது என்று உடன்பிறப்புகள் சொல்வது சுஜாதாவுக்கும் அப்படியே பொருந்தும். தமிழ் எழுத்துலகம் குறித்து யாராவது பேசினால் அது இவரைக் குறித்து பேசாமல் முற்றுபெறாது..

இப்ப அதுக்கு என்னடா நாயே? என்று கவுண்டமணி ஸ்டைலில் கேட்பவர்களுக்கு, "கொஞ்சம் பொறுங்க சாமி"

நான் சுஜாதாவின் கதைகளை எப்போது படிக்க ஆரம்பித்தேன் என்பது நினைவில்லை, என் சின்ன வயதிலேயே அவரது நாவல்களை படித்திருக்கிறேன் என்றெல்லாம் சொன்னால் அது "ஈழத்தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பேன்" என்று சொல்லும் அரசியல்வாதிகளின் வார்த்தைகளுக்கு சற்றும் குறையாத கடைந்தெடுத்த அக்மார்க் பொய்.

கற்றதும் பெற்றதும் மூலமாகத்தான் அவரது எழுத்துக்கள் எனக்கு பரிச்சயம். அது மட்டுமல்லாமல் அவ்வப்போது வார இதழ்களில் வரும் அவரது சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். அவரது "ஏன்? எதற்கு? எப்படி?" தொடரின் புத்தகத்தை படித்தபின் பல்வேறு துறைகள் மீதான அவரது அறிவும், ஈடுபாடும் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

அவர் ஒரு சிறந்த அறிவியல் கதை எழுத்தாளர் என்பதை நான் படிக்கும் எழுத்தாளர்களும், சந்திக்கும் நண்பர்களும் அடிக்கடி சொன்னாலும் நான் அவரது அறிவியல் கதைகளை படித்ததே இல்லை என்பதே உண்மை. அதிலும் எனக்கு மிகவும் பிடித்த பிரிவான அறிவியல் புனைகதைகளில் அவர் மன்னர் என்பது தெரிந்திருந்தாலும் நான் அவரது புத்தகங்களை படிக்க எந்த முயற்சியும் எடுக்காதது எனக்கே இன்று வரை ஆச்சர்யம்தான்.

இந்தமுறை சென்னை புத்தக சந்தைக்கு செல்வது என்று முடிவு செய்தவுடனே நான் எடுத்துக்கொண்ட சபதம் இந்த முறை அவரது புத்தகங்களை வாங்கிவிட வேண்டும் என்பதுதான். அவரது புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று வழிகாட்டி உதவிய லக்கிலுக்கிற்கு நன்றி.

முதலில் படித்து முடித்த "என் இனிய இயந்திரா" மற்றும் "மீண்டும் ஜீனோ" பற்றி மற்றொரு சமயம் பதிவிடுகிறேன். இந்த பதிவில் நான் சொல்ல வந்தது அவரது "கறுப்புக் குதிரை" சிறுகதைத் தொகுப்பைப் பற்றி..

விசா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்கும் இந்தத் தொகுப்பில் சுஜாதாவின் 12 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 2000ம் ஆண்டு வாக்கில் ஆனந்த விகடனில் வெளிவந்த "புதிய தூண்டில் கதைகள்" என்ற தொடரின் புத்தக வடிவம் இது.

சிறுகதைத் தொடர்கள் நம் எல்லாருக்குமே பரிச்சயமானதுதான். ஒரே எழுத்தாளரால் வாரம் ஒரு சிறுகதை எழுதப்படுவதை நாம் அடிக்கடி படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். சொல்லப்போனால் சாருவின் குட்டிக்கதைகள், ஜ்யோவ்ராம் சுந்தரின் காமக்கதைகள், லக்கியின் ஜட்டிக்கதைகள் (தமிழ்மணம் கவனிக்க, இந்த ஒரு வார்த்தைக்காக ஸ்டார் போடவேண்டாம்), கார்க்கியின் புட்டிக்கதைகள் என்று நாம் எல்லோருமே விரும்பி படித்து வரும் (அ) வந்த தொடர்கள் கணக்கிலடங்கா..

சுஜாதாவின் இந்தத் தொடர் எப்படி இதிலிருந்து எல்லாம் வேறுபட்டது? நிஜமாகவே அந்த மனிதரை எல்லோரும் புகழும் அளவுக்கு அவரிடம் சரக்கிருக்கிறதா என்ற கேள்விகளுக்கு சரியான விடை இந்த புத்தகத்தை படிப்பதுதான்.

தொகுப்பில் இருக்கும் 12 கதைகளும், நம்புங்கள், 12 வித்தியாசமான தளங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. எந்த இரண்டு கதைகளிலும் ஒரு ஒற்றுமை அல்லது துளிகூட எழுத்தாளனின் சாயல் தெரியவே இல்லை. "கறுப்புக் குதிரை" கிரிக்கெட் சூதாட்டம் என்றால் அதற்கு அடுத்த கதையான "எல்லாமே இப்பொழுதே" முழுக்க முழுக்க மனித இனத்தின் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது, அதற்கடுத்த "கி.பி.2887ல் சில விலாசங்கள்" கட்டுப்பாடுகள் நிறைந்த எதிர்காலத்தில் சட்டத்தை மீறி ஒரு பெண்ணைத் தேடிச்செல்லும் ஒருவனைப் பற்றி. ஒவ்வொரு கதையை படித்து முடிக்கும்போதும் ஒரு சிறுகதையை படித்து முடித்த திருப்தி உங்களுக்கு கிடைக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம்.

சுஜாதா மோஸ்ட் வெர்சடைல் (இதுக்கு தமிழ்ல என்னாபா?) எழுத்தாளர் என்பதற்கு சரியான உதாரணம் இந்தத் தொகுப்பு..

நீங்கள் சுஜாதா ரசிகர் என்றால் இந்தக் புத்தகத்தைப் படியுங்கள். அவர் மீதான உங்கள் அபிமானம் இன்னும் அதிகமாகும். ஒருவேளை நான் தலைப்பில் சொல்லியிருப்பதுபோல், நீங்கள் இணையத்தில் எழுதும் ஒரு சிலரை போல், "அவனெல்லாம் ஒரு எழுத்தாளர்னு கொண்டாடுறானுங்க‌" என்று நினைப்பவராக இருந்தால், நீங்களும் இந்த புத்தகத்தை கண்டிப்பாக படியுங்கள். உங்கள் நினைப்பு தவறு என்பது உங்களுக்கே தெரியும். மொத்தத்தில் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

புத்தகம்: கறுப்புக் குதிரை

வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ் (திருமகள் பதிப்பகம்)

பிரிவு: சிறுகதைத் தொகுப்பு

விலை: ரூ.50/ (நிஜமாத்தான்.. ஒரு கதையின் விலை ஒரு கப் டீயின் விலையை விட குறைவு)

இது மலிவு விலை பதிப்பல்ல. தரமான தாளிலேயே அச்சிட்டு குறைந்த விலைக்கு கொடுத்த பதிப்பகத்தாருக்கு நன்றிகள்.

58 comments:

Anonymous said...

எழுத்தாளர் சுஜாதை//

????????????????

Anonymous said...

வெண்பூ,

அவர் தூன்டில் கதைகள்னு மொதல்ல குமுதத்துலதான் எழுதுனாரு. பாதிக்கதை இந்தவாரமும் மீதி அடுத்த வாரமும் வரும். ஆவலைத் தூண்டிப் படிக்கும் விதமாக இருக்கும்.

மீண்டும் தூண்டில் கதைகள் 12ம் 12 வகை. நல்ல வாசிப்பனுபவம் தரும். அதிலும் கறுப்புக் குதிரை எழுதிய சில நாட்களிலேயே மேட்ச் பிக்ஸிங் ஊழல் வெளியானது ஆச்சரியமானது.

said...

சூரியனுக்கே டார்ச் அடித்த அண்ணன் வெண்பூ வாழ்க.! (உண்மையில் இதுவரை படிக்காததை நேர்மையாக ஒப்புக்கொண்டுள்ளீர்கள். பாராட்டுகள்.!, ஒருமுறை வீட்டுக்கு வந்தால் தலையணை சைஸில் 'விஞ்ஞான சிறுகதைகள்' தொகுப்பு தருகிறேன். எவ்வளவு நாளா கூப்பிட்டு கொண்டிருக்கிறேன். இப்படித்தூண்டில் போட்டாலாவது வர்றீங்களா.. பார்க்கலாம். முதலில் தலைப்பைத் திருத்தவும்)

Anonymous said...

>>சுஜாதா மோஸ்ட் வெர்சடைல் (இதுக்கு தமிழ்ல என்னாபா?) >>

இவ்வளவு எளிதான வார்த்தைக்குக் கூட தமிழில் வார்த்தை கிடைக்கவில்லை என்று சொல்ல வெட்கமாக இல்லையா?

பன்முகத்தன்மை

said...

சுஜாதாவைப் பற்றிய பகிர்வு அருமை!
ஒரே ஒருமுறை 2000 -ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டிற்கு வந்திருந்த போது அவரைச் சந்தித்திருக்கிறேன். பல துறைகளிலும் கோலோச்சியவர்.

said...

வெண்பூ.. கலக்கல்.. அக்மார்க் அரசியல் பொய் என சரளமாக பின்றீங்களே தல.. நல்ல அறிமுகம்(இதுவரை இந்த தொகுப்பை படிக்காதவர்களுக்கு)

அடுத்த பதிவு எப்போ?

said...

வேலன் அண்ணாச்சி..படம் கலக்கல்!!!

said...

வெண்பூ,

மீண்டும் நல்வரவு. (முதலில் வெல்கம் பாக் என்று போட்டேன். பயமாக இருந்ததால் மொழி பெயர்த்து விட்டேன் :))

இவ்வளவு தாமதமாக (லேட் என்று போட வந்து...) சுஜாதாவைப் படிக்கத் துவங்கியதற்கு உன்னை என்ன செய்யாலாம்னு கோவம் வந்தாலும், உனது உண்மை சொல்லும் நேர்மைக்கும், இன்றைய பதிவுலகக் காலகட்டத்தில் சுஜாதாவைப் படிப்பதை, இரசிப்பதை ஒப்புக்கொள்ளும் துணிவை எண்ணி என் சார்பில் தாமிராவிடம் ஒரு சுற்று (ரவுண்ட் என்று...) மிரிண்டா வாங்கிக்கொள்ளவும்.

சுஜாதாவின் பழைய சிறுகதைத் தொகுப்புகளைப் படித்தால் அவற்றின் வீரியும் உன்னை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும்.

அனுஜன்யா

said...

முதலில் சுஜாதா பற்றிய பகிர்வுக்கு நன்றி.

நான் அவரது "கற்றதும் பெற்றதும்" தான் முதலில் வாசித்தேன்.
வேறுபட்ட துறைகளில் அவரது ஈடுபாடு இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
எல்லாவற்றையுமே ஒரு கரை கண்டிருப்பார்.

அவரது அறிவியல்கதைகளை வாசிக்கும் போது ஆச்சரியமாக இருக்கும்.
இவ்வளவு விடயங்கள் தெரிந்திருக்கிறாரே என.

அவரது "நகரம்" சிறுகதை , சுஜாதா ரசிகர்கள் எல்லோரும் அநேகமாக வாசித்திருப்பார்கள்
கசப்பான உண்மையை எவ்வளவு யதார்த்தமாக எழுதியிருப்பார்.

சிறீ ரங்கத்து கதைகள் வாசிக்கும்போது சிரிக்காமல் இருக்கவே முடியாது.
அப்படி ஒரு எழுத்து.

என்னை பொறுத்தவரை "கற்றதும் பெற்றதும்" ஒன்றே போதும் அவரது எழுத்துக்கு அடிமையாக.
எனக்கு பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியதும் அவரது எழுத்துக்கள் தான்.
சுஜாதா இப்போது இல்லை என்றே நினைக்கமுடியவில்லை.
ஒரு நல்ல ஆசிரியராக இப்போதும் அவரது எழுத்துகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

said...

வெண்பூ,
இதுவரை படிக்காதவர்களுக்கு நல்ல அறிமுகம்.

said...

அண்ணன் பேக் வித் அ பேங் !! வாங்க வெல்கம் !! ஜூப்பர் ஜூப்பர் கதை புக்கெல்லாம் படிச்சுருக்கீங்க. அப்பிடியே ஸ்ரீரங்கத்து தேவதைகள், ஆ, பதவிக்காக இதெல்லாமும் ஒரு மூச்சு படிச்சுடுங்க.

said...

விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்!

2009ன் முதல் படைப்பிற்குப் பாராட்டுகள்..

இருங்க ப்டிச்சுட்டு வரேன்...

said...

யப்பா...

என்ன சொல்றதுன்னு தெரியல..

இளையராஜா, சுஜாதா, வாலி இவங்களைப் பத்தி பேசினா பேசிகிட்டே இருப்பேனே...

சரி,, சுருக்கமா சொல்றேன்..

இவரோட கணையாழியின் கடைசி பக்கங்களை வாங்கீட்டீங்களா? நிச்சயமா வாங்கிப் படிங்க.

மத்யமர் கதைகள் தொகுப்பைப் படிங்க..

100 ரூபா பத்திரப் பேப்பர்ல நோட்டரி SIGN போட்டு, திருப்பித்தரதா உறுதியளிச்சீங்கன்னா

பதினெட்டுக் கதைகள்,
ஓலைப்பட்டாசு,
மத்யமர்,
சிறுகதை எழுதுவது எப்படி

இந்த 4 புக்ஸையும் அனுபப்றேன். படிங்க.

இப்போ தடித் தடியா அவரு புக்ஸ் வருது. நான் சொன்ன நாலு தொகுப்புலயும் நீங்க படிச்ச தூண்டில் கதைகள் மாதிரி குறைந்த பட்சக் கதைகள் இருக்கும். ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்.


கணையாழியின் கடைசி பக்கங்கள் ரெண்டு, மூணு பாகமா (க.க.ப. நீர்க்குமிழிகள், புதிய பக்கங்கள்) இருக்கு.

திருப்பூர் வர்றீங்களா? இல்ல கொரியர்ல அனுப்பவா?

said...

சுஜாதா...ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

said...

//
Anonymous said...
எழுத்தாளர் சுஜாதை//

????????????????
//

மூணு தடவை பதிவை படிச்சி ப்ரூஃப் பாத்த நான் தலைப்பை பாக்காம விட்டதுக்கு மன்னிக்கவும். சரி செஞ்சுட்டேன்.

said...

//
வடகரை வேலன் said...
அதிலும் கறுப்புக் குதிரை எழுதிய சில நாட்களிலேயே மேட்ச் பிக்ஸிங் ஊழல் வெளியானது ஆச்சரியமானது.
//

ஆமா, அண்ணாச்சி.. ஆச்சர்யப்படுத்திட்டாரு..

said...

சுஜாதாவைப் பற்றிய மிக மிக ஊதப்பட்ட பிம்பமே இங்கு கட்டமைக்கப்படுகிறது. அதுவும் அவரது மரணத்திற்குப் பிறகு இவ்வேலை அதிகமாகிவிட்டது.

அவரது அறிவியல் கட்டுரைகள், கேள்வி பதில்கள் எல்லாம் ஒரு குழுவாக (உதவி ஆசிரியர்கள்) தேடிக் கொடுத்து அதை அவரது மொழியில் எழுதினார் என்பது பலருக்குத் தெரிந்ததே (அவரது துறை சார்ந்த சில கணினி தொடர்பான கட்டுரைகள் தவிர்த்து). ஆனாலும் இந்தப் பிம்ப உருவாக்கல் தொடர்ந்து நடைபெறுகிறது.

இன்னொரு பிம்பம் அறிவியல் புனைகதைகளுக்கு அவர்தான் அத்தாரிட்டி என்பதுபோல எழுதுவது. ஜனவரி மாதம் உன்னதம் பத்திரிகை
இயன்றால் பாருங்கள்.

என்னளவில் அவர் வெகுஜன அளவில் தொடர்ந்து எழுதியர்; ஒரு சில நல்ல சிறுகதைகளையும் (பதினெட்டு கதைகள் தொகுதியிலிருப்பது போன்று). அவ்வளவே.

said...

//
தாமிரா said...
சூரியனுக்கே டார்ச் அடித்த அண்ணன் வெண்பூ வாழ்க.!
//

சின்னப்புள்ளத்தனமா எழுதிட்டியேடான்னு திட்டிட்டீங்க.. ஹி..ஹி.. பரவாயில்ல..

//
'விஞ்ஞான சிறுகதைகள்' தொகுப்பு தருகிறேன்
//
இந்த புத்தக சந்தையில நான் வாங்கினதுல பாதி அவரோட கதைகள்தான். அதையெல்லாம் படிச்சு முடிச்சிட்டு உங்ககிட்ட வாங்கிக்கிறேன். அதுக்கும் உங்க வீட்டுக்கு வர்றதுக்கும் சம்பந்தம் இல்லை, கண்டிப்பா வருகிறேன்.

said...

//
Anonymous said...
>>சுஜாதா மோஸ்ட் வெர்சடைல் (இதுக்கு தமிழ்ல என்னாபா?) >>

இவ்வளவு எளிதான வார்த்தைக்குக் கூட தமிழில் வார்த்தை கிடைக்கவில்லை என்று சொல்ல வெட்கமாக இல்லையா?

பன்முகத்தன்மை
//

என்ன அனானி இது? எனக்கு தெரியலன்றத தெரியலன்னு ஒத்துக்குறதுல எனக்கு எந்த வெட்கமும் இல்லை.

மொழிபெயர்த்ததற்கு நன்றி.

said...

//
ஜோதிபாரதி said...
சுஜாதாவைப் பற்றிய பகிர்வு அருமை!
ஒரே ஒருமுறை 2000 -ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டிற்கு வந்திருந்த போது அவரைச் சந்தித்திருக்கிறேன். பல துறைகளிலும் கோலோச்சியவர்.
//

முற்றிலும் உண்மை. பல்துறை வித்தகர் அவர்..

said...

//narsim said...
வெண்பூ.. கலக்கல்.. அக்மார்க் அரசியல் பொய் என சரளமாக பின்றீங்களே தல.. நல்ல அறிமுகம்(இதுவரை இந்த தொகுப்பை படிக்காதவர்களுக்கு)
//

மொத்தத்துல இந்த புத்தகத்தை கடைசியா படிச்சது நாந்தான்னு தெரியுது.. பரவாயில்ல, இப்பவாவது படிச்சனே..

//
அடுத்த பதிவு எப்போ?
//
கூடிய சீக்கிரமே..

said...

//
அனுஜன்யா said...
இவ்வளவு தாமதமாக (லேட் என்று போட வந்து...) சுஜாதாவைப் படிக்கத் துவங்கியதற்கு உன்னை என்ன செய்யாலாம்னு கோவம் வந்தாலும், உனது உண்மை சொல்லும் நேர்மைக்கும், இன்றைய பதிவுலகக் காலகட்டத்தில் சுஜாதாவைப் படிப்பதை, இரசிப்பதை ஒப்புக்கொள்ளும் துணிவை எண்ணி என் சார்பில் தாமிராவிடம் ஒரு சுற்று (ரவுண்ட் என்று...) மிரிண்டா வாங்கிக்கொள்ளவும்.
//

இதில் எந்த தவறும் இல்லையே அனுஜன்யா.. சிறு வயதில் என் வாசிப்பு விகடன், குமுதம், தினத்தந்தி, தினமலர் என்பதோடு சரி. அவ்வப்போது ராஜேஷ்குமார், சுபா, பி.கே.பி என்று துப்பறியும் நாவல்களை விரும்பி படித்திருக்கிறேன். ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஒரு நல்ல வேலையில் செட்டில் ஆனபின் படிக்க ஆரம்பித்தபோது ஆங்கில நாவல்களின் பக்கம் பார்வை போனதால் தமிழின் நல்ல எழுத்தாளர்கள் பக்கம் என் பார்வையே படவில்லை. வலைப்பூக்கள் படிக்க ஆரம்பித்தபின்தான் தமிழ் மொழியின் புத்தகங்களும் இலக்கியங்களும் நான் படிக்காமல் இருப்பதே புரிந்தது. அந்த விசயத்தில் உங்கள் அனைவருக்கும்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

சுஜாதாவின் பழைய சிறுகதைத் தொகுப்புகளைப் படித்தால் அவற்றின் வீரியும் உன்னை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும்.

said...

//
வாசுகி said...
என்னை பொறுத்தவரை "கற்றதும் பெற்றதும்" ஒன்றே போதும் அவரது எழுத்துக்கு அடிமையாக.
//

நிஜம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாசுகி..

said...

//
முரளிகண்ணன் said...
வெண்பூ,
இதுவரை படிக்காதவர்களுக்கு நல்ல அறிமுகம்.
//

வாங்க முரளிகண்ணன்.. இதை படிக்காதவர்கள் என்னைப் போல் இன்னும் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்களை என் விமர்சனம் படிக்கத் தூண்டும் என்று நினைக்கிறேன்.

said...

//
Mahesh said...
அண்ணன் பேக் வித் அ பேங் !! வாங்க வெல்கம் !! ஜூப்பர் ஜூப்பர் கதை புக்கெல்லாம் படிச்சுருக்கீங்க. அப்பிடியே ஸ்ரீரங்கத்து தேவதைகள், ஆ, பதவிக்காக இதெல்லாமும் ஒரு மூச்சு படிச்சுடுங்க.
//

ஒண்ணொண்ணா படிச்சுட்டு வருகிறேன். கண்டிப்பாக நீங்க குறிப்பிட்ட புத்தகங்களையும் படிக்கிறேன். நன்றி..

said...

வாங்க பரிசல்...

இந்த முறை நான் வாங்கின 30+ புத்தகங்கள்ல குறைந்தது 15 சுஜாதாவோடதுதான். அதையெல்லாம் படிச்சு முடிச்சிட்டு உங்ககிட்ட வர்றேன்.

// 100 ரூபா பத்திரப் பேப்பர்ல நோட்டரி SIGN போட்டு, திருப்பித்தரதா உறுதியளிச்சீங்கன்னா //

நீங்களும் என்னை மாதிரியேவா? என்னோட எத்தனை எத்தனை புத்தகங்கள் இரவல் கொடுத்து திரும்பி வராம போயிருக்கு தெரியுமா? அதேபோல நான் அவ்வளவு சீக்கிரம் நான் அடுத்தவங்ககிட்ட வாங்கி படிக்கிறதில்லை, ஒரு எழுத்தாளருக்கு நாம் செய்யும் குறைஞ்சபட்ச மரியாதை அவரோட புத்தகத்தை காசு குடுத்து வாங்கி படிக்கிறதுதான் அப்படின்றது என்னோட எண்ணம்.

said...

//
கார்க்கி said...
சுஜாதா...ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
//

என்னாச்சு கார்க்கி..

said...

//
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
சுஜாதாவைப் பற்றிய மிக மிக ஊதப்பட்ட பிம்பமே இங்கு கட்டமைக்கப்படுகிறது.
//

வருகைக்கு நன்றி சுந்தர்.. மற்றவர்களை குறித்து நான் விமர்சிக்க முடியாது, ஆனால் அவர் குறித்த எந்த பிம்பத்தையும் உருவாக்க நான் முயலவில்லை. படித்ததும் நான் வியந்தது இந்த கதைகளின் வித்தியாசமான களங்களும் எதிர்பாராத முடிவுகளும்தான். அதை பகிர்ந்து கொள்ளவே ஆசைப்பட்டேன்.

//
என்னளவில் அவர் வெகுஜன அளவில் தொடர்ந்து எழுதியர்; ஒரு சில நல்ல சிறுகதைகளையும் (பதினெட்டு கதைகள் தொகுதியிலிருப்பது போன்று).
//
100% ஒத்துக்கொள்கிறேன்..

said...

'இங்கு' எனச் சொன்னது இணையத்தில் என்ற பொருளில்தான். உங்களைக் குறிக்கவில்லை :)

said...

//
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
'இங்கு' எனச் சொன்னது இணையத்தில் என்ற பொருளில்தான். உங்களைக் குறிக்கவில்லை :)
//

நானும் அந்த பொருளில் எடுத்துக் கொள்ளவில்லை சுந்தர்.. :)

//
இன்னொரு பிம்பம் அறிவியல் புனைகதைகளுக்கு அவர்தான் அத்தாரிட்டி என்பதுபோல எழுதுவது.
//
இதை ஒத்துக்கொள்ளவும் முடியாது மறுக்கவும் முடியாது சுந்தர்ஜி.. அவரை விட சிறந்த அறிவியல் புனைகதைகளை எழுதியவர்கள் அவரை விட புகழ் அடையவில்லையே. நான் அவரது இரண்டே இரண்டு நாவலகளை மட்டுமே (அதுவும் அவரது மாஸ்டர் பீஸாக கருதப்படும் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ) படித்துள்ளேன். அதை வைத்து பார்க்கும்போது அதற்கு இணையான அறிவியல் புனைகதைகளை தமிழில் காண்பது அரிது என்றே தோன்றுகிறது.

அவருக்கு போட்டியாளராகக்கூட வேறு யாரும் அடையாளம் காணப்படாதது வருத்தமே.

said...

யாருக்கு தான் சுஜாதாவை பிடிக்காது?
”கரையெல்லாம் செண்பகப்பூ” இன்னைக்கும் மாறா நினைவில் இருக்கு.

அவரோட எழுத்து ஸ்டைலே இனிமை,எளிமை மற்றும் புதுமை.

said...

//என் சின்ன வயதிலேயே அவரது நாவல்களை படித்திருக்கிறேன் என்றெல்லாம் சொன்னால் அது...... கடைந்தெடுத்த அக்மார்க் பொய்.//

ஹை ஸ்கூலில் இருந்தே அவரது வார இதழ்களில் வந்த சுஜாதாவின் அத்தனை தொடர்களும் படித்திருக்கிறேன் என்றால் அது நிஜமாவே மெய்:)! ’கறுப்புக் குதிரை’ வாங்குகிறேன்.

பரிசல் காரர் சொன்ன ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’ சமீபத்தில் பெங்களூர் புத்தகச் சந்தையில் வாங்கிப் படித்தேன். நீங்களும் படியுங்கள் வெண்பூ.

said...

அட தூங்குன சிங்கம் முழுச்சு ஒரு பதிவும் போட்டுருச்சு போல :)


அண்ணே நீங்க இல்லாததால நான் எந்தக் கும்மிலயும் கலந்துக்கல :(

said...

///என் சின்ன வயதிலேயே அவரது நாவல்களை படித்திருக்கிறேன் என்றெல்லாம் சொன்னால் அது "ஈழத்தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பேன்" என்று சொல்லும் அரசியல்வாதிகளின் வார்த்தைகளுக்கு சற்றும் குறையாத கடைந்தெடுத்த அக்மார்க் பொய்.////

சாருவை படிக்காதீர்கள் என்றால் கேட்டீர்களா? பாருங்கள் அவரது கிண்டல் உங்களுக்கும் வந்துவிட்டது!

மத்தபடி சுஜாதாவை நான் அதிகம் படிக்கவில்லை! ஒன்றிரண்டு குப்பை கதைகளே எனக்கு படிக்க வாய்ப்பு ஏற்ப்பட்டதால் நிறுத்திவிட்டேன்! சுஜாதா கக்கிய கருத்துகளுக்கு பல எதிரிகள் இருந்தனர், அவரது கருத்து எனக்கும் பிடிக்காது!
முடிந்தால் இந்த தொடுப்பை பாருங்கள்! http://karmegarajas.blogspot.com/2007/05/blog-post.html

said...

யோவ் வெண்பூ, இனிமேல் சுஜாதா படித்து, பிடித்தும் இருந்தால், பேசாமல் ஒரு போன் போடு. பரிசலைக் கான்பரன்சில் கூப்பிட்டு, 'காதும் காதும்' (உண்மையிலேயே) வைத்தாற்போல் விஷயத்தை மூடிவிடலாம். எல்லோருக்கும் நேர விரயம் மிச்சம் :))

அனுஜன்யா

said...

மீண்டும் நல்வரவு....

அடுத்த பதிவு எப்போ?????

said...

//ஒரு எழுத்தாளருக்கு நாம் செய்யும் குறைஞ்சபட்ச மரியாதை அவரோட புத்தகத்தை காசு குடுத்து வாங்கி படிக்கிறதுதான் அப்படின்றது என்னோட எண்ணம்.//

உங்களை மாதிரியே எல்லாரும் நெனைச்சாங்கன்னா என்னை மாதிரி பலபேர் தப்பிப்பாங்க..


@ அனுஜன்யா

//இனிமேல் சுஜாதா படித்து, பிடித்தும் இருந்தால், பேசாமல் ஒரு போன் போடு. பரிசலைக் கான்பரன்சில் கூப்பிட்டு, 'காதும் காதும்' (உண்மையிலேயே) வைத்தாற்போல் விஷயத்தை மூடிவிடலாம். எல்லோருக்கும் நேர விரயம் மிச்சம் :)//

சார் என்னைக் கிண்டல் பண்றாரா.. பாராட்டராறான்னே தெரியலியே...

said...

பரிசல்,

இரண்டும் இல்லை. நம்ம 'feel good' பார்ட்டியில் 'kill joy' என்று வேறு யாரும் புகுந்து பாழ் பண்ண முடியாது அல்லவா? கவலையே இல்லாமல் வாத்தியார் புகழ் பாடலாம் :). அது தான் நான் முதலிலேயே சொன்னேன் 'இன்றைய பதிவுலகுச் சூழலில் சுஜாதாவை இரசிப்பதைச் சொல்ல தைரியம் வேண்டும்' என்று.

அனுஜன்யா

said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி sindhusubash..

//
ராமலக்ஷ்மி said...
பரிசல் காரர் சொன்ன ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’ சமீபத்தில் பெங்களூர் புத்தகச் சந்தையில் வாங்கிப் படித்தேன். நீங்களும் படியுங்கள் வெண்பூ.
//

வாங்க ராமலக்ஷ்மி மேடம்.. நான் வாங்கியிருக்கும் புத்தகங்களில் இதுவும் அடக்கம்.. அடுத்ததாக படிக்க வேண்டும்..

said...

//
எம்.எம்.அப்துல்லா said...
அட தூங்குன சிங்கம் முழுச்சு ஒரு பதிவும் போட்டுருச்சு போல :)
//

ஹி..ஹி.. என்னது சிங்கமா? எதும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகல இல்லையா?

//
அண்ணே நீங்க இல்லாததால நான் எந்தக் கும்மிலயும் கலந்துக்கல :(
//

ஆமா அப்துல்லா.. கும்மி நண்பர்கள் நெறய பேர் ஆக்டிவா இல்லை போல தெரியுது..

said...

ரொம்ப நாளைக்கு அப்பறம் பதிவு போட்டுருக்கிறீர்கள்,welcome back

said...

//
karmegaraja said...
சாருவை படிக்காதீர்கள் என்றால் கேட்டீர்களா? பாருங்கள் அவரது கிண்டல் உங்களுக்கும் வந்துவிட்டது!
//

இதை நான் பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன்... :)))

//
மத்தபடி சுஜாதாவை நான் அதிகம் படிக்கவில்லை! ஒன்றிரண்டு குப்பை கதைகளே எனக்கு படிக்க வாய்ப்பு ஏற்ப்பட்டதால் நிறுத்திவிட்டேன்! சுஜாதா கக்கிய கருத்துகளுக்கு பல எதிரிகள் இருந்தனர், அவரது கருத்து எனக்கும் பிடிக்காது!
முடிந்தால் இந்த தொடுப்பை பாருங்கள்! http://karmegarajas.blogspot.com/2007/05/blog-post.html
//
படித்தேன். இது மட்டும் இல்லை கார்மேக ராஜா.. அவரது சினிமா கதை வசனங்களையும் விமர்சித்து பல பதிவுகள் ஏற்கனவே படித்திருக்கிறேன்.. மன்னிக்கவும், பெரும்பாலானவை அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலயே சொல்லப்படுவதாகக் கருதுகிறேன். அது சரியா, தவறா என்ற விவாதத்திற்குள் போக விரும்பவில்லை. தங்கள் கருத்துக்கு நன்றி.

said...

நான் இந்தியா வர்றப்போ எனக்கு கொடுக்கப்போற பரிசுகள் பத்தி இப்டி பதிவாவே போட்டது ரொம்ப சந்தோஷம்ங்க சம்பந்தி:):):)

said...

//
ச்சின்னப் பையன் said...
மீண்டும் நல்வரவு....

அடுத்த பதிவு எப்போ?????
//

வருகைக்கு நன்றி.. சீக்கிரமே போட்டுடுவோம்...

said...

அனுஜன்யா.. நீங்க‌ சொல்றதுதான் கரெக்ட்.. நான் ஏதோ ஒரு புத்தகத்தை விமர்சனம் பண்றேன் பேர்வழின்னு பதிவு போட்டா, பின்னூட்டம் போடுறவங்க எல்லாரும் அதை படிச்சிருக்காங்க.. ம்ம்ம்ம்ம்.. சுஜாதா கொஞ்சம் அதிகமாவே பிரபலம்தான் போல.. :))))

பரிசல்... இந்த சந்தேகமே வரக்கூடாது, நமக்கு புரியலன்னா அத பாராட்டாவே எடுத்துக்கணும்.. :)))

said...

//
பாபு said...
ரொம்ப நாளைக்கு அப்பறம் பதிவு போட்டுருக்கிறீர்கள்,welcome back
//

வாங்க பாபு.. நன்றி..

said...

//
rapp said...
நான் இந்தியா வர்றப்போ எனக்கு கொடுக்கப்போற பரிசுகள் பத்தி இப்டி பதிவாவே போட்டது ரொம்ப சந்தோஷம்ங்க சம்பந்தி:):):)
//

அவ்ளோதான சம்பந்தி.. கண்டிப்பா எடுத்துகுங்க.. எந்த பிரச்சினையும் இல்லை..

நீங்க எங்க காணாம போய்ட்டீங்க? பயங்கர பிஸியா?

said...

நல்ல பதிவு. சுஜாதாவைத் தெரியாதவர்களுக்கு நல்ல அறிமுகம். நன்றி.

said...

சிறுகதை எழுதப்படுவதை நாம் அடிக்கடி படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். சொல்லப்போனால் சாருவின் குட்டிக்கதைகள், ஜ்யோவ்ராம் சுந்தரின் காமக்கதைகள், லக்கியின் ஜட்டிக்கதைகள் (தமிழ்மணம் கவனிக்க, இந்த ஒரு வார்த்தைக்காக ஸ்டார் போடவேண்டாம்),“

இந்த நக்கல்தானே வேண்டாம்ன்றது..

said...

கணையாழி யின் கடைசி பக்கங்கள், கொலை உதிர் காலம், நிர்வாண நகரம், கற்றதும் பெற்றதும் நான்கு பகுதிகள் எல்லாம் படிக்காமலேயே பதிவு போட எப்படி மனது, தில் வந்தது என்று புரிய வில்லை.

கமலின் நாயகன், பதினாறு வயதினிலே, மூன்றாம் பிறை, சலங்கை ஒலி பார்க்காமலேயே கமல் பற்றி பதிவு எழுதுவது போல இது.

இணைய மொழியில் சொன்னால் தமிழகத்தின் கூகிள் அவர்.

குப்பன்_யாஹூ

said...

வெண்பூ.. பரிசலுக்கு எதுக்கு கொரியர் செலவு.. உங்களுக்கு எவ்வளவு புக்கு வேணும் நம்ம தலையோடது.. அத்தனையும் என்கிட்ட இருக்கு.. பக்கதிலேயேஇருக்கோம்.. திரும்ப கொடுத்திடமாட்டீங்களா என்ன..?

said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதன், ஜாக்கி...

//
எல்லாம் படிக்காமலேயே பதிவு போட எப்படி மனது, தில் வந்தது என்று புரிய வில்லை.
//
வாங்க குப்பன்_யாஹூ... அப்படியெல்லாம் பாத்தா நான் எதைப்பத்தியுமே பதிவு போட முடியாது. கற்றது கையளவுதான் சர்ஜி...

said...

//
Cable Sankar said...
வெண்பூ.. பரிசலுக்கு எதுக்கு கொரியர் செலவு.. உங்களுக்கு எவ்வளவு புக்கு வேணும் நம்ம தலையோடது.. அத்தனையும் என்கிட்ட இருக்கு.. பக்கதிலேயேஇருக்கோம்.. திரும்ப கொடுத்திடமாட்டீங்களா என்ன..?
//

ஆஹா.. நீங்களுமா??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

முதல்ல நான் என்கிட்ட இருக்குற புக்ஸையெல்லாம் படிச்சு முடிக்கிறேன். அதுக்கப்புறமா உங்ககிட்ட வர்றேன்.

இதுவாவது பரவாயில்ல நேத்து ஒரு பெரிய மனுசன் போன் பண்ணி அடுத்த பதிவு என்ன, "திருக்குறள் புத்தக விமர்சனமா"ன்னு கேட்டுட்டாரு.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

இந்த பதிவு போட்டதுல ஒண்ணு விளங்கிடுச்சி.. பின்னூட்டம் போட்ட 23 பேரும் (அனானி) உட்பட எல்லாருமே இந்த புக்கை படிச்சிட்டீங்க.. நாந்தான் கடைசி.. பரவாயில்ல.. இனிமே புத்தக விமர்சனம் போடுறதா இருந்த நாலு பேர்ட்ட விசாரிச்சிட்டு போடணும்..

மனதுக்குள்.. நல்ல வேளைடா வெண்ட்ரூ(ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை)... நீ மொதல்ல நெனச்சிட்டு இருந்த மாதிரி "என் இனிய இயந்திரா"க்கு விமர்சனம் போடல.. தப்பிச்ச.. அவ்வ்வ்வ்வ்

said...

சுஜாதா பத்தி இதுக்கு முன்னாடி பரிசல் பதிவுலையே தேவையானளவுக்கு அலசிட்டதாலையும் இந்த பதிவப்பத்தி விவாதிக்க நீங்க விரும்பாதனாலையும் ஒரு விசயம் மட்டும் சொல்லிகுக்ரேங்க.

இப்படி தனித்தனியா வாங்காதீங்க.
விஞ்ஞானச் சிறுகதைனு ஒரு தொகுப்பே உயிர்மெய்ல விட்டிருக்காங்க.
அதை வாங்கிப்படிங்க.

// கமலின் நாயகன், பதினாறு வயதினிலே, மூன்றாம் பிறை, சலங்கை ஒலி பார்க்காமலேயே கமல் பற்றி பதிவு எழுதுவது போல இது.//

என்னங்க குப்பன் முன்னப்பின்ன செத்தா தான் சுடுகாடு போகனும்ன்னு சொல்லுவீங்க போல :-))

God Father 1 st part பாருங்க அதுல மர்லின் பிராண்டோ வர்ர முதல் காட்சியத்தான் நாயகன்ல கமல் அச்சு அசலா பன்னிருப்பாரு.

அந்தவகைல பாத்தா மர்லின் பிராண்டோவ ரசிக்காதவிங்க கமல ரசிக்ககூடாதுதான்

said...

எனக்கு அறிவியல் சிறுகதைகள் அந்த அளவு பிடிக்காது. ஆனா "மத்யமர்" சிறுகதைகள் (ஒரு சில) ரொம்பவே சூப்பர்.

நான் சுஜாதாவ பி கே பி, சுபா மாதிரி கண்ணோட்டத்துல வச்சி தான் "என் இனிய இயந்திரா", "மீண்டும் ஜுனோ" படிச்சு இருக்கேன் (சின்ன வயசுல). பிடிச்சி இருந்தது.

பட், இப்ப கொஞ்ச நாள் முன்னாடி கணையாழியின் கடைசி பக்கங்கள் படிச்சேன் ! பிரமாதம்.

சுந்தர் ஜி, அறிவியல் சிறுகதை விட்டுத்தள்ளுங்க.(ஏன்னா எனக்கு பிடிக்காது) பத்தி எழுத்துல கூடவா சுஜாதா உங்கள கவரலை ?

said...

வாங்க கார்த்திக்

//
இந்த பதிவப்பத்தி விவாதிக்க நீங்க விரும்பாதனாலையும்
//
அச்சச்சோ அப்படியெல்லாம் நெனச்சிடாதீங்க.. நான் சின்னபுள்ளத்தனமா இந்த பதிவ போட்டாலும் இத்தனை பேர் வந்து அவரைப் பத்தி பேசியிருக்கீங்களே.. அதுலயே எனக்கு சந்தோசம்தான்..

said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணிகண்டன்..