சென்ற வாரத்தில் ஒருநாள் நானும் தங்கமணியும் உட்கார்ந்து தாமிராவின் தங்கமணி பற்றிய புலம்பல்களை படித்து சிரித்தபின் தங்கமணி கிச்சனுக்கு சென்றார். அதன்பின் நடந்த உரையாடல்..
தங்கமணி: என்னங்க?
நான் (ஹாலில் இருந்து சத்தமாக): என்னம்மா?
தங்கமணி: அடுத்தது நீங்க என்ன பதிவு போடப் போறீங்க?
நான்: ஒரு சிறுகதை போடலாம்னு இருக்கேன்.
தங்கமணி: என்ன? நீங்களும் என்னை வெச்சி எதுனா புலம்பப் போறீங்களா?
நான் (சரியாக அவர் சொன்னதை காதில் வாங்காமல்): தலைப்பு "பேய் பிடித்தவன்" அப்படின்னு வெக்கலாம்னு இருக்கேன்.
"டிடங்க்..." (ஹி..ஹி.. அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல லேண்ட் ஆன சத்தம் அது)
*******
பலமுறை நான் யோசித்ததுண்டு, பிரபலங்களை விளம்பரத்துக்கு உபயோகப்படுத்துவதால் எந்த அளவுக்கு மக்களை கவரமுடியும் என்று. இதுகுறித்து லக்கி கூட ஏற்கனவே ஒருமுறை பதிவெழுதியிருக்கிறார். ஆனால் சிலநாட்களுக்கு முன் எனக்கு பிராக்டிகலாக அதை உணரும் வாய்ப்பு கிடைத்தது.
என் பையனுக்கு இரண்டு வயது ஆவதால், அவனை ப்ளே ஸ்கூலில் சேர்க்கலாம் என்று முடிவெடுத்தோம். நாங்கள் இருக்கும் வீட்டிற்கு அருகில் அவனுக்கு விளையாட வேறு குழந்தைகள் இல்லை. மேலும் நாங்கள் குடியிருக்கும் ஏரியாவும் சிறிது மோசமாக இருப்பதால் அவன் அடிக்கடி நினைத்தபோதெல்லாம் வெளியே விளையாட செல்ல முடிவதில்லை.
ஆனால் என் தங்கமணிக்கு இந்த ஏரியாவில் நல்ல ப்ளேஸ்கூல் கிடைக்காது என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. அதற்காகவே மற்ற நல்ல பகுதிகளுக்கு வீடு மாற்றவேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பார். நெட்டில் தேடியபோது அருகில் ஒரு நல்ல ப்ளேஸ்கூல் செயின் இருப்பது தெரிந்தது. ஏற்கனவே நான் அந்த ப்ளேஸ்கூல் பெயரை அறிந்திருந்தேன். கொஞ்சம் பணம் அதிகம் என்றாலும் குழந்தைக்கு நல்ல இடமாக இருக்கும், மேலும் எனக்கும் ஆபிஸ் அருகில் என்பதால் அவனை கொண்டு விட, அழைத்து வர என்று சுலபமாக இருக்கும் என்பதால் அங்கேயே அவனை சேர்த்தோம்.
முதல் இரண்டு நாள் தங்கமணியும் அவனுடன் சென்று வந்தார். என்ன செய்வாங்க தெரியலயே? நாம பாத்துக்குறமாதிரியே பாத்துகுவாங்களா? என்ற கவலைகள் வேறு அவருக்கு.
இரண்டாம் நாள் திரும்பி வந்தவுடன் தங்கமணி என்னிடம் "என்னங்க.. உங்களுக்கு தெரியுமா? இந்த ஸ்கூல்லதான் ***** நடிகை கூட அவங்க குழந்தையை சேத்திருக்காங்க. இன்னிக்கு கூட்டிட்டு போக வந்திருந்தாங்க" என்று சின்னத்திரையில் கோலம் போடும் நாயகி பெயரை கூறினார்.
இப்போதெல்லாம் என் தங்கமணிக்கு அந்த ஸ்கூல் நல்லதா என்பது பற்றி எந்த சந்தேகமும் எழுவதில்லை. யாரிடமாவது பையனை ஸ்கூலுக்கு அனுப்பவதைப் பற்றி சொல்லும்போதும் "நல்ல ஸ்கூல்தான்.. ***** கூட அவங்க குழந்தையை அங்கதான் போட்டிருக்காங்க" என்கிறார்..
*******
என் அலுவலகத்தின் பார்க்கிங் லாட் அருகே புகைபிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. எப்போதுமே குறைந்தது ஐந்து பேராவது அங்கே நின்று ஊதிக்கொண்டு இருப்பார்கள். தடை வந்தவுடன் அலுவல வளாகம் முழுவதும் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
விடுவார்களா நம் ஆட்கள்!! அலுவலகத்தின் அருகில் இருந்த ஒரு முட்டுச்சந்து (20 அடி அகலம் இருக்கும்) உள்ளே ஒரு டீக்கடை இருக்கும். அங்கே சென்று தம் அடிக்க ஆரம்பித்தனர். மெயின் ரோடில் இருந்து கொஞ்சம் உள்வாங்கி இருப்பதால் அவ்வளவு சீக்கிரம் போலீஸார் கண்ணை ஈர்க்காது என்பதால் அங்கு எப்போதும் கூட்டம்தான்.
அங்கே டீ நன்றாக இருக்கும் என்பதால் அவ்வப்போது நானும் செல்வதுண்டு (டிஸ்கி: டீ மட்டும்தான்). சென்ற வாரத்தில் ஒருநாள் மாலை நேரம் அங்கே டீ குடித்துக் கொண்டிருந்தபோது மெயின் ரோடில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு கான்ஸ்டபிள் திரும்பி பார்த்துவிட்டு எங்களை நோக்கி வர ஆரம்பித்தார்.
அந்த நேரம் ஒரு 10 பேர் அங்கே தம் அடித்துக் கொண்டிருந்தார்கள். என்னைப் போல் சிலர் டீ மட்டும் குடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தோம். எனக்கா வயிற்றைக் கலக்குகிறது, வருகிறவன் இங்கிருக்கும் எல்லோரையும் பிடித்துக் கொண்டு போய்விட்டால் என் மானமும் கப்பலேறி விடுமே! ஒரு நல்ல டீ குடிக்க ஆசைப்பட்டது தப்பா!! என்று மனதிற்குள்ளேயே புலம்பல்.
தம் அடிப்பவன்களும் அதே மனநிலைதான் போல. எல்லோரும் 'தம்'மை வெளியே தெரியாதவாறு மறைத்துக்கொண்டு ஓரக்கண்ணால் அந்த கான்ஸை பார்த்துக்கொண்டிருந்தனர். வந்த கான்ஸ் சுற்றியும் பார்த்துவிட்டு கடைக்காரனை பார்த்து மெல்லிய குரலில் கேட்டார்.. "ஒரு கோல்ட் ஃப்ளேக் குடு"
*********
இரண்டு, மூன்று வாரத்திற்கு முன்னால் நானும் தங்கமணியும் வெளியே சென்றுவிட்டு மதியம் சாப்பாடு வெளியே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். வீட்டில் தங்கமணியின் தம்பியும் இருந்ததால் பார்சல் வாங்க அந்த உயர்தர சைவ உணவகத்துக்கு சென்றோம். சென்னையில் மிக மிக பிரபலமான அந்த உணவகத்தில் பார்சல் ஆர்டர் செய்தோம். இரண்டு சாம்பார் சாதம், ஒரு தக்காளி சாதம், ஒரு தயிர் சாதம் என்று நான்கு ப்ளேட் ஆர்டர் செய்தால் பில் 130 ரூபாய் வந்தது.
அடப்பாவிகளா! இவ்ளோ காசா! ஆவரேஜா ஒரு ப்ளேட் விலை ரூபாய் 32.50 என்று மனதிற்குள் திட்டினாலும், சரி, பரவாயில்ல குவாலிட்டியும் டேஸ்டும்தான முக்கியம், அதுக்குதான தேடி புடிச்சி இங்க வரோம் என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டு பார்சலை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
வீட்டிற்கு வந்து பார்சலை பிரித்தப்புறம்தான் கிளைமேக்ஸே!!! படுபாவிகள், வைத்திருந்த சாப்பாட்டின் அளவு ஒவ்வொரு பாக்ஸிலும் இரண்டு கரண்டி அளவில்தான் இருந்தது. இரண்டு வயதாகும் என் மகனுக்கே கண்டிப்பாக அந்த அளவில் இரண்டு ப்ளேட் சாப்பாடு வேண்டும். நாங்களோ வெளியே சுற்றிவிட்டு பசியோடு வந்திருக்கிறோம்.
அந்த அளவு சாப்பாடு போடுவதுபோல் அளவாக பிளாஸ்டிக் டப்பா வேறு. தட்டில் அந்த சாப்பாட்டை கொட்டினால் இருக்கும் இடமே தெரியவில்லை. இதில் சாம்பார் சாதத்தில் இரண்டு பெரிய சைஸ் காய்கறி வேறு. அதை எடுத்துவிட்டால் ஒரு கரண்டி அளவுக்கு மட்டுமே சாப்பாடு இருந்தது.
வந்த கோபத்திற்கு என் வீட்டில் உட்கார்ந்து கொண்டே மானசீகமாக அவன்களை நன்றாக திட்டிவிட்டேன், சாபமிட்டேன் என்பது சாலப் பொருத்தமான வார்த்தை. ஒரு நாளைக்கு எத்தனை ஆயிரம் பேர் இது போல் பார்சல் வாங்கிப்போய் ஏமாந்து சாபமிடுவார்கள்!! அந்த உணவக அதிபருக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போனது ஏன் என்று புரிந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
162 comments:
மீ த ஃபர்ஸ்டு :)
ஹையா நெசமாவே நாந்தான் மீ த ஃபர்ஸ்டு. இந்த வாட்டி உங்க சம்பந்திய நான் முந்திட்டேன்.
very nice sharing. Atleast post this kind of experiances once in a week
me the 4th
ஆமா அப்துல்லா.. நீங்கதான் ஃபர்ஸ்ட்.. ச்சின்னப்பையன் ப்ளாக்ல நாந்தான் எப்பவும் மீ த பஸ்ட் போடுவேன். நான் ஆபிஸ்ல ஆணி புடுங்குறதுல பிஸியா இருந்ததால போன தடவை என்னை முந்திகிட்டு அவங்க போட்டுட்டாங்க.. ஹா.ஹா. இப்ப நீங்க பழிவாங்கிட்டீங்க.. :))))
நீங்க சொல்வது உண்மைதான் வெண்பூ அண்ணே. நானும் இதே விஷயத்தை பலமுறை நினைத்து இருக்கிறேன். நீங்க நினைச்ச இடம் அசோக் நகர். நான் நினைச்ச இடம் ராதாகிருஷ்ணன் ரோடு. சற்று நேரம் அந்த ஹோட்டலின் வாசலில் நின்று பாருங்க. வெளியில் வரும் பலரும் திட்டிக் கொண்டே செல்வதைக் காணலாம்.
//
முரளிகண்ணன் said...
very nice sharing. Atleast post this kind of experiances once in a week
//
பாராட்டுக்கு நன்றி முரளி.. ஆஹா.. நானே வாரத்துக்கு ஒரு பதிவுதான் போடுறேன். நீங்க என்னடான்னா இதே மாதிரி வாரம் ஒண்ணு போடுன்றீங்க.. அப்ப என்னோட மத்த டைப் பதிவெல்லாம் மொக்கையா இருக்கா?? ஆவ்வ்வ்வ்வ்!!!!
//
rapp said...
me the 4th
//
அங்க பாருங்க.. அப்துல்லா நின்னுகிட்டு ஒங்களுக்கு பழிப்பு காட்டிகிட்டு இருக்காரு.. என்னை முந்திகிட்டு ச்சின்னப்பையன் ப்ளாக்ல மீ த பஷ்டு போட்டிங்கல்ல... அதுக்குதான்.. :))))
பிரியாணிக்குள்ளேயே போய் சாப்பிடுபவர் வெண்பூ என அவர்களுக்கு எப்படித் தெரியும் சகா?
//(ஹி..ஹி.. அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல//
ஹாலில்தான் நீங்கள் இருந்தீர்கள்.. அதனால் உங்கள் மேல் லேண்ட் ஆனதை ஹாலில் என்று சொல்லிவிட்டீரோ?
//வந்த கோபத்திற்கு என் வீட்டில் உட்கார்ந்து கொண்டே மானசீகமாக அவன்களை நன்றாக திட்டிவிட்டேன், சாபமிட்டேன் என்பது சாலப் பொருத்தமான வார்த்தை//
அதோட நிறுத்தினா எப்டி? அப்புறம் நீங்க மணக்க மணக்க சமைச்சு பரிமாரினதை பத்தி ஒன்னும் எழுதக் காணோமே சம்மந்தி:):):)
//(ஹி..ஹி.. அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல//
சரி, ஓகே. டிடிங் சத்தத்தாலே உங்க மண்டையில ஒரு பகுதி ரொம்ப வலிச்சதாமே:):):)(ஆமாம், சத்தம்னாலே எனக்கு தலைவலிக்கும்னு நீங்க சொல்லி சமாளிக்கத்தான் இந்தப் பின்னூட்டம்.சம்மந்திங்கன்னா விட்டுக்கொடுத்துத்தானே போகணும்:):):))
அப்ப என்னோட மத்த டைப் பதிவெல்லாம் மொக்கையா இருக்கா?? ஆவ்வ்வ்வ்வ்!!!!
//
வெண்பூண்ணே மொக்கையா இருக்கான்னு வேற கேக்குறீங்களே???? மனசாட்சியே இல்லையாண்ணே உங்களூக்கு :)
:-)))...
// "டிடங்க்..." (ஹி..ஹி.. அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல லேண்ட் ஆன சத்தம் அது) //
நல்ல வேள...ஹால்ல லேண்ட் ஆச்சே!!!!
சம்மந்திங்கன்னா விட்டுக்கொடுத்துத்தானே போகணும்:):):))
//
அவர் பையனுக்கு உன்கிட்ட வரதட்சனை கேக்காம விட்டுக் குடுக்க இப்படி ஒரு பிட்டா??? நடத்து...நடத்து...
////
rapp said...
me the 4th
//
அங்க பாருங்க.. அப்துல்லா நின்னுகிட்டு ஒங்களுக்கு பழிப்பு காட்டிகிட்டு இருக்காரு.. என்னை முந்திகிட்டு ச்சின்னப்பையன் ப்ளாக்ல மீ த பஷ்டு போட்டிங்கல்ல... அதுக்குதான்.. :))))
//
அடப்பாவி மக்கா, காலங்கார்த்தாலே ஆறரை மணிக்கு இங்க எழுந்திருச்சி உக்காந்து பின்னூட்டம் போட்டா என்னா நக்கல், கொண்டாட்டம் :):):)
விஜய் ஆனந்த் said...
நல்ல வேள...ஹால்ல லேண்ட் ஆச்சே!!!!
//
விஜய் ஆனந்த் அண்ணே நீங்க இம்புட்டு அப்பாவியாண்ணே :))
நீங்களும் அசோக்நகரா?????????????????? அது எங்க குடும்பங்களை பொறுத்தவரை ஒரு கண்ணிவெடி ஏரியாவாச்சே:):):)
அடப்பாவி மக்கா, காலங்கார்த்தாலே ஆறரை மணிக்கு இங்க எழுந்திருச்சி உக்காந்து
//
நான் இன்னைக்கு காலையில 6 மணிக்கு தாமிரா அண்ணன் வீட்டில் முழிச்சேன். எழுப்பிப் பார்த்தேன் ஆளு எந்திரிக்கிற மாதிரி தெரியல. அப்படியே விட்டுட்டு வந்துட்டேன். :)))
நீங்களும் அசோக்நகரா??????????????????
//
உங்க சம்பந்தி இருக்கது சைதாப்பேட்டை. ஆனா அவரு அசோக் நகர் ஒட்டலுக்குத்தான் போயிருப்பாரு
//நீங்க நினைச்ச இடம் அசோக் நகர். நான் நினைச்ச இடம் ராதாகிருஷ்ணன் ரோடு. சற்று நேரம் அந்த ஹோட்டலின் வாசலில் நின்று பாருங்க. வெளியில் வரும் பலரும் திட்டிக் கொண்டே செல்வதைக் காணலாம்.
//
அதுல முன்ன நான்கூட இருந்திருக்கேன். ராதாகிருஷ்ணன் ரோடு கிளையில் தான் தயிர்வடை அடிக்கடி வாங்குவோம். அவ்ளோ குட்டியா வடை செய்ய முடியும்ங்கற உன்னதக் கலையை அங்கதான் தெரிஞ்சுக்கிட்டேன். இதுல திமிர் புடிச்ச ஒரு கேள்வி வேற. ஒரு வடையா, ரெண்டு வடயான்னு
பதிவர் பொடிப்பொண்ணு அந்த ஒட்டல் வடையின் சைஸ் பத்தி வடை ஒன்று போலோ ஆனதேன்னு( அதாவது போலோ சைஸ்தான் இருக்குன்னு) நக்கல் அடிச்சு இருந்தாங்க
//அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல லேண்ட் ஆன சத்தம் அது//
அது எப்படி, எப்பொழுதும் கரெக்டா ஹாலிலேயே லேண்ட் ஆகுது? ஏதோ சூட்சுமம் இருக்குது பாஸு!!;-)
அந்த ஹோட்டல் ல ஸ்வீட் அப்படின்ற பேர்ல ஒரு லட்டு வைப்பாங்க பார்த்திருக்கீங்களா,எலந்த பழ சைஸ் ல இருக்கும்
உண்மையை சொன்னால் ,நாம் திட்டிகொண்டே திரும்பி அங்கே போவோம் என்ற தைரியத்தில் அப்படி செய்கிறார்கள்.அவர்களை புறக்கணிப்பதே நாம் செய்ய வேண்டியது
me the 25th:):):)
//என்னங்க?
//
இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குங்க சம்மந்தி:):):)
rapp said...
//என்னங்க?
//
இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குங்க சம்மந்தி:):):)
//
ஹா....ஹா...ஹா...
//"டிடங்க்..." (ஹி..ஹி.. அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல லேண்ட் ஆன சத்தம் அது)//
பதிவைப்படிச்ச அத்தனை பேரும் இத நம்பீட்டாங்கன்னு நினைக்கிறீங்களா :)
//rapp said...
//என்னங்க?
//
இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குங்க சம்மந்தி:):):)
//
ஹா....ஹா...ஹா...
// அப்துல்லா என்ன நடக்குது இங்கே , இப்படி சிரிச்சுகிட்டு இருக்கீங்க
பாவி மக்கா, நீங்க யாரும் ஹோட்டல் அபூர்வா சங்கீதால சாப்பிட்டதில்லை போலிருக்கு. உடனடியா சங்கீதாவுல (குறிப்பா கிரீம்ஸ் ரோடு) சாப்பிடுங்க. நீங்க சொல்ற ஹோட்டல் ஓனருக்கு கோயில் கட்டுவீங்க.
// அப்துல்லா என்ன நடக்குது இங்கே , இப்படி சிரிச்சுகிட்டு இருக்கீங்க
//
ச்சின்ன அம்மிணி ராப் சொன்னதுல வெண்பூவுக்கு ஒரு உள்குத்து இருக்கு...அத நினைச்சு சிரிச்சேன். அது என்னன்னு பப்ளிக்ல போட்டு உடைக்க வேணாணு பாக்குறேன் :)
//சென்ற வாரத்தில் ஒருநாள் நானும் தங்கமணியும் உட்கார்ந்து தாமிராவின் தங்கமணி பற்றிய புலம்பல்களை படித்து சிரித்தபின் தங்கமணி கிச்சனுக்கு சென்றார்//
தாமிரா அவர்களை, தப்பித்தவறிக்கூட வீட்டுப்பக்கம் வந்துற வேணாம்னு, என்ன அழகா எச்சரிக்கை பண்ணியிருக்கீங்க சம்மந்தி:):):)
//ச்சின்ன அம்மிணி ராப் சொன்னதுல வெண்பூவுக்கு ஒரு உள்குத்து இருக்கு...அத நினைச்சு சிரிச்சேன். அது என்னன்னு பப்ளிக்ல போட்டு உடைக்க வேணாணு பாக்குறேன் :)//
அண்ணே, இதுக்கு நீங்க வெளிப்படையாவே சொல்லிருக்கலாம்:):):)
//தலைப்பு "பேய் பிடித்தவன்" அப்படின்னு வெக்கலாம்னு இருக்கேன்//
:-)
//எல்லோரும் 'தம்'மை வெளியே தெரியாதவாறு மறைத்துக்கொண்டு //
அப்பவும் கீழே போடவில்லையா?
யோவ் அப்துல்.. காலையிலேயே ஏதோ ஒரு முக்கியமான வேலையிருக்குதுனு நழுவிட்டு இங்க வந்து கும்மியடிச்சுக்கிட்டிருக்கிறீரா?
ராப் :அவ்ளோ குட்டியா வடை செய்ய முடியும்ங்கற உன்னதக் கலையை அங்கதான் தெரிஞ்சுக்கிட்டேன். இதுல திமிர் புடிச்ச ஒரு கேள்வி வேற. ஒரு வடையா, ரெண்டு வடயான்னு// ROTFL..
வடை ஒன்று போலோ ஆனதே// தலைப்பே என்ன சூப்பரா இருக்குது..
யாரெல்லாம் லைன்ல இருக்கிறீங்க? கும்மி போட்டுறலாமா?
நல்லவேளையா வெண்பூவோட தங்கமணி பிளாக் படிக்கிறாங்க.. இல்லைன்னா இந்த ஆள்கூட நம்ப சப்ஜெக்ட்ல போட்டி போட முடியாது போல தெரியுதே. குட்லக்.!
நா வந்தாச்சுன்னா ஓடிருவானுங்களே.. தனியா புலம்ப வுட்ருவானுங்களே.. சே..!
சமையலுக்கு அகப்பை பாவிப்பது எல்லா விதத்திலும் சிறந்தது.
வெண்பூ..
எல்லாமே அசத்தல் என்றாலும், பி.சி., சிகரெட் கேட்ட சம்பவத்தை நீங்கள் விவரித்திருந்த விதம், இன்னுமொருமுறை நீங்களொரு அசத்தலான சிறுகதை எழுத்தாளரென்பதை உறுதிப்படுத்தியது.
Hello Venpu,
Excellent job! I loved all the "Thunukks" u have given....u have proved urself once again..i'm a bid fan of your writing! I never ever missed ur post....but this is the fist time i'm commenting for u.
Annani...
நைஸ் துணுக்ஸ்:)))!
//
கார்க்கி said...
பிரியாணிக்குள்ளேயே போய் சாப்பிடுபவர் வெண்பூ என அவர்களுக்கு எப்படித் தெரியும் சகா?
//
ஹி..ஹி..ஹி..
//
//(ஹி..ஹி.. அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல//
ஹாலில்தான் நீங்கள் இருந்தீர்கள்.. அதனால் உங்கள் மேல் லேண்ட் ஆனதை ஹாலில் என்று சொல்லிவிட்டீரோ?
//
குறும்புக்கார புள்ள.. ரகசியத்த எல்லாம் வெளிய சொல்லிகிட்டு.. (இருக்குடி.. உனக்கும் ஒருநாள் கல்யாணம் ஆகுமுல்ல.. அப்ப தெரிஞ்சிக்குவ)
//
rapp said...
//வந்த கோபத்திற்கு என் வீட்டில் உட்கார்ந்து கொண்டே மானசீகமாக அவன்களை நன்றாக திட்டிவிட்டேன், சாபமிட்டேன் என்பது சாலப் பொருத்தமான வார்த்தை//
அதோட நிறுத்தினா எப்டி? அப்புறம் நீங்க மணக்க மணக்க சமைச்சு பரிமாரினதை பத்தி ஒன்னும் எழுதக் காணோமே சம்மந்தி:):):)
//
நீங்க வேற சம்மந்தி.. அதுக்கும் வழி இல்ல.. உடனே வெளிய கிளம்ப வேண்டி இருந்தது.. அதனாலதான் வெளிய வாங்கினோம். அன்னிக்கு இருந்தத கால் வயித்துக்கு சாப்பிட்டு வெளியே கிளம்பிட்டோம்.. :(
//வந்த கான்ஸ் சுற்றியும் பார்த்துவிட்டு கடைக்காரனை பார்த்து மெல்லிய குரலில் கேட்டார்.. "ஒரு கோல்ட் ஃப்ளேக் குடு"//
வெகுவாக ரசித்தேன். :))
//சின்னத்திரையில் கோலம் போடும் நாயகி பெயரை கூறினார்.//
தேவயானி பத்தி கிசுகிசு சொல்றாராமாம்.. :)
அந்த ஹோட்டல் மேட்டர்... செண்ட்ரலில் அவசரமாக பார்சல் வாங்கி வந்து ரயிலில் உக்காந்து பிரிக்கும் போது அந்த முதலாளியின் டோட்டல் குடும்பமும் டேமேஜ் ஆவதை பல முறை பார்த்திருக்கிறேன்.. சரியான கொள்ளை.. :(
//
rapp said...
சரி, ஓகே. டிடிங் சத்தத்தாலே உங்க மண்டையில ஒரு பகுதி ரொம்ப வலிச்சதாமே:):):)(ஆமாம், சத்தம்னாலே எனக்கு தலைவலிக்கும்னு நீங்க சொல்லி சமாளிக்கத்தான் இந்தப் பின்னூட்டம்.சம்மந்திங்கன்னா விட்டுக்கொடுத்துத்தானே போகணும்:):):))
//
சாரி.. நோ கமெண்ட்ஸ்..
இப்படிக்கு
தலையில் வலியுடன்
ஒரு ரங்கமணி :)))
//
புதுகை.அப்துல்லா said...
அப்ப என்னோட மத்த டைப் பதிவெல்லாம் மொக்கையா இருக்கா?? ஆவ்வ்வ்வ்வ்!!!!
//
வெண்பூண்ணே மொக்கையா இருக்கான்னு வேற கேக்குறீங்களே???? மனசாட்சியே இல்லையாண்ணே உங்களூக்கு :)
//
ஹி..ஹி.. தெரியும்.. இருந்தாலும் பப்ளிக்கா ஒருத்தரு அப்படியே அசாம சொல்லிட்டாரேன்னுதான் ஒரு ஆவ்வ்வ்வ்வ்வ்வ்.. :)))
//
விஜய் ஆனந்த் said...
:-)))...
// "டிடங்க்..." (ஹி..ஹி.. அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல லேண்ட் ஆன சத்தம் அது) //
நல்ல வேள...ஹால்ல லேண்ட் ஆச்சே!!!!
//
இத சொல்லிட்டா உங்களுக்கு இந்த மாதிரி எந்த அனுபவமும் இல்லைன்னு நாங்க நம்பிடுவோமா??? கரண்டியை பாக்காத கல்யாணம் ஆனவங்களும் உண்டா??? :)))
//"டிடங்க்..." (ஹி..ஹி.. அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல லேண்ட் ஆன சத்தம் அது)//
அடி வாங்கி வாங்கி களிமண்ணு கெட்டி ஆயிடிச்சி போல.. மண்டைல விழுந்தது அங்க இருந்து எகிறி ஹால்ல தரைல விழுந்திருக்கு.. :))
//
புதுகை.அப்துல்லா said...
நான் இன்னைக்கு காலையில 6 மணிக்கு தாமிரா அண்ணன் வீட்டில் முழிச்சேன். எழுப்பிப் பார்த்தேன் ஆளு எந்திரிக்கிற மாதிரி தெரியல. அப்படியே விட்டுட்டு வந்துட்டேன். :)))
//
இதுல இருந்து என்னா மெசேஜ் சொல்றீங்க அப்துல்லா?? :))))
//
புதுகை.அப்துல்லா said...
உங்க சம்பந்தி இருக்கது சைதாப்பேட்டை. ஆனா அவரு அசோக் நகர் ஒட்டலுக்குத்தான் போயிருப்பாரு
//
என்னா கால்குலேஷன்!! என்னா கால்குலேஷன்!! கரெக்டாத்தான் சொல்லியிருக்கீங்க..
//
rapp said...
அதுல முன்ன நான்கூட இருந்திருக்கேன்.
//
இருந்திருக்கேன் அப்படின்னா என்னா அர்த்தம்? நோ.. நோ.. காசில்லாம டேபிள் தொடச்சத எல்லாம் இப்படி பப்ளிக்ல சொல்லக்கூடாது..
//
ராதாகிருஷ்ணன் ரோடு கிளையில் தான் தயிர்வடை அடிக்கடி வாங்குவோம். அவ்ளோ குட்டியா வடை செய்ய முடியும்ங்கற உன்னதக் கலையை அங்கதான் தெரிஞ்சுக்கிட்டேன். இதுல திமிர் புடிச்ச ஒரு கேள்வி வேற. ஒரு வடையா, ரெண்டு வடயான்னு
//
ஹா.. ஹா.. ஹா.. சான்ஸே இல்லை.. இந்த கமெண்ட்டுக்கு இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன்.. :)))
//
யோசிப்பவர் said...
அது எப்படி, எப்பொழுதும் கரெக்டா ஹாலிலேயே லேண்ட் ஆகுது? ஏதோ சூட்சுமம் இருக்குது பாஸு!!;-)
//
தப்பு நம்ம மேலதான் யோசிப்பவர். நான் மட்டும் அவங்க சொன்னதை காது குடுத்து கேட்டிருந்தா கரண்டியில இருந்து தப்பிச்சிருக்கலாம்.. விதி வலியது.. :)))))
//
பாபு said...
அந்த ஹோட்டல் ல ஸ்வீட் அப்படின்ற பேர்ல ஒரு லட்டு வைப்பாங்க பார்த்திருக்கீங்களா,எலந்த பழ சைஸ் ல இருக்கும்
//
வாங்க பாபு.. இந்த பதிவு போட்டதுல எனக்கு ரெண்டு சந்தோசம்..
1. நெறய பேருக்கு அந்த ஹோட்டல் மேல காண்டு
2. ஏறத்தாழ எல்லா ரங்கமணிகளுமே ஹி..ஹி... கரண்டி கண்ட காத்தவராயன்கள்தான்.. நான் மட்டும் இல்லை அப்படின்னு நெனக்கிறபோது. அட..அட. அட.. :)))
//
பாபு said...
உண்மையை சொன்னால் ,நாம் திட்டிகொண்டே திரும்பி அங்கே போவோம் என்ற தைரியத்தில் அப்படி செய்கிறார்கள்.அவர்களை புறக்கணிப்பதே நாம் செய்ய வேண்டியது
//
கண்டிப்பாக.. நான் ஏற்கனவே அந்த முடிவை எடுத்துவிட்டேன்..
//
rapp said...
//என்னங்க?
//
இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குங்க சம்மந்தி:):):)
//
ஹி..ஹி.. எழுதும்போது இதெல்லாம் ஜகஜம்தானே..
//
சின்ன அம்மிணி said...
//"டிடங்க்..." (ஹி..ஹி.. அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல லேண்ட் ஆன சத்தம் அது)//
பதிவைப்படிச்ச அத்தனை பேரும் இத நம்பீட்டாங்கன்னு நினைக்கிறீங்களா :)
//
வாங்க சின்ன அம்மிணி.. ஹி..ஹி.. நான் அதுதான் உண்மைன்னு சொன்னா நீங்க மொதல்ல நம்புவீங்களா?? எழுதும்போது கொஞ்சம் கூட்டி குறைச்சி எழுதுறதுதான்.. அதுக்காக.. :)))
//
கிழஞ்செழியன் said...
பாவி மக்கா, நீங்க யாரும் ஹோட்டல் அபூர்வா சங்கீதால சாப்பிட்டதில்லை போலிருக்கு. உடனடியா சங்கீதாவுல (குறிப்பா கிரீம்ஸ் ரோடு) சாப்பிடுங்க. நீங்க சொல்ற ஹோட்டல் ஓனருக்கு கோயில் கட்டுவீங்க.
//
வாங்க கிழஞ்செழியன்.. ஆஹா.. இதுமாதிரி இன்னும் பல ஹோட்டல் இருக்கும்போல.. நான் கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் எதிரே "ப்ளானட் யம்"மில் இருக்கிற சங்கீதாவில் சாப்பிட்டு இருக்கிறேன். அங்கே இப்படி இல்லையே..
//
rapp said...
//ச்சின்ன அம்மிணி ராப் சொன்னதுல வெண்பூவுக்கு ஒரு உள்குத்து இருக்கு...அத நினைச்சு சிரிச்சேன். அது என்னன்னு பப்ளிக்ல போட்டு உடைக்க வேணாணு பாக்குறேன் :)//
அண்ணே, இதுக்கு நீங்க வெளிப்படையாவே சொல்லிருக்கலாம்:):):)
//
சந்தோசமா உங்க ரெண்டு பேருக்கும்.. நடத்துங்க.. நடத்துங்க.. :)))
//
சரவணகுமரன் said...
//எல்லோரும் 'தம்'மை வெளியே தெரியாதவாறு மறைத்துக்கொண்டு //
அப்பவும் கீழே போடவில்லையா?
//
வாங்க சரவணகுமரன்.. அட நீங்க வேற.. அதை கீழே போட்டா நம்மளே போலிசுக்கு எவிடன்ஸ் குடுத்த மாதிரி ஆயிடும்னு நெனச்சாங்களோ என்னவோ.. யாருமே கீழ போடல..
//நான் கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் எதிரே "ப்ளானட் யம்"மில் இருக்கிற சங்கீதாவில் சாப்பிட்டு இருக்கிறேன். அங்கே இப்படி //
ஓ... ப்ளானட் எம் ல இப்போ சோறு கூட போடறாங்களா? பாட்டு மட்டும் தான் போடுவாங்கன்னு இல்ல நெனைச்சேன்..
( ஆமா .. அப்டியே தெரிஞ்சாலும் தினமும் போய் சாப்ட போறென்.. நமக்கெல்லாம் கையேந்திபவன் தான் கரெக்ட்:D )
//
தாமிரா said...
நல்லவேளையா வெண்பூவோட தங்கமணி பிளாக் படிக்கிறாங்க.. இல்லைன்னா இந்த ஆள்கூட நம்ப சப்ஜெக்ட்ல போட்டி போட முடியாது போல தெரியுதே. குட்லக்.!
//
வாங்க தாமிரா..
ஆனாலும் இந்த விசயத்துல உங்கள மிஞ்ச முடியாது. நீங்க நம்மள மாதிரி ரங்கமணிகளோட ஒட்டு மொத்த ரெப்ரசென்டேட்டிவ் ஆச்சே.. :)))
//
ஆட்காட்டி said...
சமையலுக்கு அகப்பை பாவிப்பது எல்லா விதத்திலும் சிறந்தது.
//
வாங்க ஆட்காட்டி.. இதை படிச்சிட்டு ரொம்ப நேரம் சிரிப்பை அடக்கவே முடியல.. ஆனாலும் நல்ல யோசனைதான்.. :))
//
பரிசல்காரன் said...
வெண்பூ..
எல்லாமே அசத்தல் என்றாலும், பி.சி., சிகரெட் கேட்ட சம்பவத்தை நீங்கள் விவரித்திருந்த விதம், இன்னுமொருமுறை நீங்களொரு அசத்தலான சிறுகதை எழுத்தாளரென்பதை உறுதிப்படுத்தியது
//
வாங்க பரிசல்.. பாராட்டுக்கு நன்றி..
//
Anonymous said...
Hello Venpu,
Excellent job! I loved all the "Thunukks" u have given....u have proved urself once again..i'm a bid fan of your writing! I never ever missed ur post....but this is the fist time i'm commenting for u.
Annani...
//
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அனானி.. இன்னும் நன்றாக எழுத முயற்சி செய்கிறேன்..
//
ராமலக்ஷ்மி said...
நைஸ் துணுக்ஸ்:)))!
//
வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி ராமலக்ஷ்மி மேடம்..
//
பொடியன்-|-SanJai said...
கிசுகிசு சொல்றாராமாம்.. :)
//
வாங்க சஞ்சய்.. அது கிசு கிசு இல்லை.. ஒரு வெளம்பரம்.. :)))
//
அந்த ஹோட்டல் மேட்டர்... செண்ட்ரலில் அவசரமாக பார்சல் வாங்கி வந்து ரயிலில் உக்காந்து பிரிக்கும் போது அந்த முதலாளியின் டோட்டல் குடும்பமும் டேமேஜ் ஆவதை பல முறை பார்த்திருக்கிறேன்.. சரியான கொள்ளை.. :(
//
கரெக்டா சொன்னீங்க...
நான் வரிசையா ரிப்ளை போட்டுகிட்டு இருக்குறப்ப ஊடால பூந்து 50 போட்ட சஞ்சய்க்கு ஒரு ஜே போடுங்கப்பா எல்லாரும்.. :)))
நமக்கு எல்லாம் மெஸ் தான் லாயக்கு. உள்ள போனமா. ஒரு அன்லிமிடெட் மீல்ஸ் சாப்டமான்னு இருக்கணும்.
எல்லாமே ரொம்ப ரசிக்கும் படி எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
//
பொடியன்-|-SanJai said...
ஓ... ப்ளானட் எம் ல இப்போ சோறு கூட போடறாங்களா? பாட்டு மட்டும் தான் போடுவாங்கன்னு இல்ல நெனைச்சேன்..
//
சஞ்சய்.. நீங்க சொல்றது Planet M.. நான் சொன்னது Planet Yumm.. இது ஒரு ஃபுட் மால்.. எல்லா ரெஸ்டாரண்ட்டும் ஒரே இடத்துல இருக்கும். கோயம்பேடு Planet Yummல சங்கீதா, மேரி ப்ரவுன், அடையார் ஆனந்த பவன் அப்புறம் இன்னும் ரெண்டு மூணு ரெஸ்டாரண்ட் இருக்கு...
//நான் (சரியாக அவர் சொன்னதை காதில் வாங்காமல்): தலைப்பு "பேய் பிடித்தவன்" அப்படின்னு வெக்கலாம்னு இருக்கேன்.//
அடைப்புக்குறிக்குள் இருப்பது பதிவுக்காகப் போட்டதுதானே..?!
'தேவயானி'ன்னு நினைச்சேன் ,ஆனா 5 ஸ்டார் இருக்குறதுனால கன்ஃபுயூசன் ஆயிடுச்சி...
அட இந்த ஹோட்டல் காரணுங்க பண்ற அலும்பு.. இதுக்குன்னு தனிப் பதிவே போடணுங்க வெண்பூ சார்...
//தட்டில் அந்த சாப்பாட்டை கொட்டினால் இருக்கும் இடமே தெரியவில்லை. //
ஏதாச்சும் லென்ஸ் வச்சுப் பார்க்கணும் போல...
'துணுக்ஸ்' நல்லா இருந்தது வெண்பூ...
இதே போல் இன்னும் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்க்கிறேன்
//"டிடங்க்..." (ஹி..ஹி.. அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல லேண்ட் ஆன சத்தம் அது)//
அப்படியா. சரி. நம்பியாச்சி.
:)
//
SK said...
நமக்கு எல்லாம் மெஸ் தான் லாயக்கு. உள்ள போனமா. ஒரு அன்லிமிடெட் மீல்ஸ் சாப்டமான்னு இருக்கணும்.
//
வாங்க எஸ்.கே.. சரியா சொன்னீங்க.. 25 டூ 35 ரூபாய்ல திருப்தியா இருக்கும்..
//
எல்லாமே ரொம்ப ரசிக்கும் படி எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
//
வருகைக்கும் வாழ்த்திற்கும் பாராட்டுக்கும் நன்றி..
//
பொடியன்-|-SanJai said...
அடி வாங்கி வாங்கி களிமண்ணு கெட்டி ஆயிடிச்சி போல.. மண்டைல விழுந்தது அங்க இருந்து எகிறி ஹால்ல தரைல விழுந்திருக்கு.. :))
//
சரிதான்.. பாக்கத்தானு போறோம் அங்க என்ன ஆகுதுன்னு :)))
//தமிழ்ப்பறவை said...
//
வாங்க தமிழ்ப்பறவை.. ஸ்டார் கணக்கெல்லாம் பாக்காதீங்க.. உங்க கணிப்பு சொன்னது சரிதான்..
எனக்கென்னமோ சென்னைக்கு வெளியில எங்கியும் ஹோட்டல்காரனுங்க இந்த மாதிரி "அளவு"ல ஏமாத்துறது இல்லன்னு தோணுது. (வேற மாதிரி ஏமாத்துவாங்கன்றது வேற விசயம்). ஆனா சென்னையில ரொம்ப மோசம்..
//
'துணுக்ஸ்' நல்லா இருந்தது வெண்பூ...
இதே போல் இன்னும் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்க்கிறேன்
//
பாராட்டுக்கு நன்றி.. முயற்சி செய்கிறேன்.
//
வீரசுந்தர் said...
//"டிடங்க்..." (ஹி..ஹி.. அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல லேண்ட் ஆன சத்தம் அது)//
அப்படியா. சரி. நம்பியாச்சி.
:)
//
வாங்க வீரசுந்தர்.. அப்பாடா.. நீங்களாவது நம்புனீங்களே.. ஒருத்தருமே நம்ப மாட்டேங்குறாங்க.. :)))
நல்லா இருக்குங்க....
//வாங்க வீரசுந்தர்.. அப்பாடா.. நீங்களாவது நம்புனீங்களே.. ஒருத்தருமே நம்ப மாட்டேங்குறாங்க.. :)))//
நான் நம்பியாச்சின்னு சொன்னத நீங்க நம்பீட்டீங்களா!? அவ்வளவு நல்லவரா நீங்க!!? அவ்வ்.. :-)
//
பழமைபேசி said...
நல்லா இருக்குங்க....
//
வாங்க பழமைபேசி.. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..
//
வீரசுந்தர் said...
நான் நம்பியாச்சின்னு சொன்னத நீங்க நம்பீட்டீங்களா!? அவ்வளவு நல்லவரா நீங்க!!? அவ்வ்.. :-)
//
கொஞ்ச நேரம் சந்தோசப்படுக்க விட மாட்டீங்களே.. அவ்வ்வ்வ்வ்!!!
சம்மந்தி, அவங்க பெருமைப்பட்டுக்கிறது இருக்கட்டும். நீங்க நைசா எங்கக்கிட்டயெல்லாம் என் பையன், தேவயானி பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல படிக்கிறான்னு சொல்லி பீத்திக்கிறது மட்டும் சரியா:):):)
//இதுல இருந்து என்னா மெசேஜ் சொல்றீங்க அப்துல்லா??//
வரவர அண்ணன் தமிழ்ப்பட டைரடெக்கர் கணக்கா உங்கக் கண்ணுக்கெல்லாம் தெரியிறாரா? ஆளாளுக்கு அவர் ஒரு வார்த்தை பேசினாலே மெசேஜ் தேடுறீங்களே:):):)
//காசில்லாம டேபிள் தொடச்சத எல்லாம் இப்படி பப்ளிக்ல சொல்லக்கூடாது..
//
அதை சொல்லக்கூடாதுன்னா, நீங்க அங்க டிஷ் வாஷரா மாறுன கதையையும் ரகசியமா வெச்சுக்கணுமா சம்மந்தி:):):)(இப்போ நிரந்தர டிஷ்வாஷர் ஆகினதே, உங்களோட அந்த திறமையைப் பார்த்துத்தானே:):):))
// rapp said...
சம்மந்தி, அவங்க பெருமைப்பட்டுக்கிறது இருக்கட்டும். நீங்க நைசா எங்கக்கிட்டயெல்லாம் என் பையன், தேவயானி பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல படிக்கிறான்னு சொல்லி பீத்திக்கிறது மட்டும் சரியா:):)://
அட.. என் அப்பாவித் தலைவியே.. இதுவா இப்போ முக்கியம்? ... உஷாரா இருங்க.. அப்புறம் உங்களுக்கு பதில் தேவயானி சம்பந்தி ஆய்ட போறாங்க.. :)))
//
rapp said...
சம்மந்தி, அவங்க பெருமைப்பட்டுக்கிறது இருக்கட்டும். நீங்க நைசா எங்கக்கிட்டயெல்லாம் என் பையன், தேவயானி பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல படிக்கிறான்னு சொல்லி பீத்திக்கிறது மட்டும் சரியா:):):)
//
ஹி..ஹி.. ஒரு வெளம்பரம்.. :)))
//
அதை சொல்லக்கூடாதுன்னா, நீங்க அங்க டிஷ் வாஷரா மாறுன கதையையும் ரகசியமா வெச்சுக்கணுமா சம்மந்தி:):):)(இப்போ நிரந்தர டிஷ்வாஷர் ஆகினதே, உங்களோட அந்த திறமையைப் பார்த்துத்தானே:):):))
//
சரி..சரி.. சம்மந்தி சண்டைல ரெண்டு குடும்ப ரகசியம்லாம் வெளிய வரவேணாம்.. அப்படியே அப்பீட்டு ஆகிடலாம்.. :)))
//
rapp said...
//இதுல இருந்து என்னா மெசேஜ் சொல்றீங்க அப்துல்லா??//
வரவர அண்ணன் தமிழ்ப்பட டைரடெக்கர் கணக்கா உங்கக் கண்ணுக்கெல்லாம் தெரியிறாரா? ஆளாளுக்கு அவர் ஒரு வார்த்தை பேசினாலே மெசேஜ் தேடுறீங்களே:):):)
//
இப்ப அந்த வரியில மெசேஜ் இல்லைன்னு அவரு சொல்லட்டும் அப்புறமா பேசிக்கலாம்.. சரியா அப்துல்லா??? :))))
//
பொடியன்-|-SanJai said...
அட.. என் அப்பாவித் தலைவியே.. இதுவா இப்போ முக்கியம்? ... உஷாரா இருங்க.. அப்புறம் உங்களுக்கு பதில் தேவயானி சம்பந்தி ஆய்ட போறாங்க.. :)))
//
ஆனாலும் உலக கற்பனா சக்திய்யா உமக்கு.. சும்மா சொல்லக்கூடாது.. :))
ஆஹா நேத்து தாமிரா சார் வீட்ல பார்ட்டியா?
இதைத்தான்யா பதிவுன்றது... நான் வந்துதான் ஒரு 90 கட்டிங் போடவேண்டியிருக்கு...
கரண்டி மட்டும்தான் வந்தாங்களா? அவங்களோட சகோதர சகோதரிங்கல்லாம் வரலியா?????????????
//நாங்கள் இருக்கும் வீட்டிற்கு அருகில் அவனுக்கு விளையாட வேறு குழந்தைகள் இல்லை. //
இதுக்குப் போய் 'மத்தவங்கள' குத்தம் சொல்ல முடியுமா????????????????
//அனுப்பவதைப் பற்றி சொல்லும்போதும் "நல்ல ஸ்கூல்தான்.. ***** கூட அவங்க குழந்தையை அங்கதான் போட்டிருக்காங்க" என்கிறார்..//
'அவங்க'கிட்டே கேட்டு இனிமே அடுத்தடுத்த வாரத்துக்கு கதையை முன்னாடியே இங்கே போட்டுடுங்க... ஹிட்ஸ் பிச்சிக்கிட்டு போகும்...
//அங்கே டீ நன்றாக இருக்கும் என்பதால் அவ்வப்போது நானும் செல்வதுண்டு (டிஸ்கி: டீ மட்டும்தான்). //
தினத்தந்தியில் மடிச்சி சாப்பிட பஜ்ஜியோ, மசால்வடையோ கூடவா இல்லே..... ஷேம் ஷேம்...
//திட்டினாலும், சரி, பரவாயில்ல குவாலிட்டியும் டேஸ்டும்தான முக்கியம், அதுக்குதான தேடி புடிச்சி இங்க வரோம்//
அப்போ வீட்லே இந்த இரண்டும் இல்லேன்றீங்களா?????????
நான் 90 போட்டதாலே, வேறே யாராவது வந்து 100 போடுங்கப்பா...!!!!!!!!!
//
rapp said...
ஆஹா நேத்து தாமிரா சார் வீட்ல பார்ட்டியா?
//
அப்டியா வெட்டியாப்பீஸர்? எனக்கு தெரியாதே!!! :)))
//
ச்சின்னப் பையன் said...
கரண்டி மட்டும்தான் வந்தாங்களா? அவங்களோட சகோதர சகோதரிங்கல்லாம் வரலியா?????????????
//
ஹி..ஹி.. உங்களயே அறியாம ஒரு சில உண்மைகள் வெளிய வந்துடிச்சி பாருங்க...:)))
//
ச்சின்னப் பையன் said...
'அவங்க'கிட்டே கேட்டு இனிமே அடுத்தடுத்த வாரத்துக்கு கதையை முன்னாடியே இங்கே போட்டுடுங்க... ஹிட்ஸ் பிச்சிக்கிட்டு போகும்...
//
நாங்களே அந்த சீரியல் பாக்குறதில்லை.. அதனால இதுக்கெல்லாம் சான்ஸே இல்லை..
//
ச்சின்னப் பையன் said...
இதுக்குப் போய் 'மத்தவங்கள' குத்தம் சொல்ல முடியுமா????????????????
.
.
.
அப்போ வீட்லே இந்த இரண்டும் இல்லேன்றீங்களா?????????
//
சான்சே இல்லை ச்சின்னபையன்.. இதை படிச்சிட்டு இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்..
அப்பாடா.. என்னோட பதிவுக்கு முதல் முறையா 100 கமெண்ட்டு.. அதுவும் 100வது கமெண்ட்டும் நானே போட்டுகிட்டு இருக்கேன்.. கலக்குடா வெண்பூ..
கரண்டி எங்கே லேண்டாச்சுன்னு சொல்லவே இல்லையே
பின்னாளில் ப்ரும் எழுத்தாளர் வெண்பூவின் மகன் கூட என் கூட தான் படித்தார் என்றூ பலர் சொல்லிகொள்ளலாம்
//கான்ஸ் சுற்றியும் பார்த்துவிட்டு கடைக்காரனை பார்த்து மெல்லிய குரலில் கேட்டார்.. "ஒரு கோல்ட் ஃப்ளேக் குடு"//
எங்கள் அலுவகம் அருகேயும் இதே கதை தான்.
உங்கள் சாபம் யாரையும் ஒன்றும் செய்யாது.
எங்கேயும் பார்சல் வாங்காதீற்கள்
நல்ல வேலை ஹால்ல லேண்ட் ஆச்சு, இல்லேன்னா அண்னணனோட மூஞ்சி லேண்டாயிருக்கும்.
இதுனாலே சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் 106_வது நாந்தாங்கோ!!
வாங்க வால்பையன்.. நீங்க் சொல்றது சரி, நாம அந்த ஹோட்டல்களை புறக்கணிக்கறதுதான் ஒரே வழி.. :(
வாங்க விலெகா.. வருகைக்கும் 106 அடிச்சதுக்கு நன்றி..
//
விலெகா said...
நல்ல வேலை ஹால்ல லேண்ட் ஆச்சு, இல்லேன்னா அண்னணனோட மூஞ்சி லேண்டாயிருக்கும்.
//
ரொம்ப அப்பாவிங்க நீங்க.. :))))
:)))
/// இதில் சாம்பார் சாதத்தில் இரண்டு பெரிய சைஸ் காய்கறி வேறு. அதை எடுத்துவிட்டால் ஒரு கரண்டி அளவுக்கு மட்டுமே சாப்பாடு இருந்தது.///
:-)))))
நல்ல துனுக்ஸ்.
அன்பு வெண்பூ...
அண்ணாச்சி இது தெரியாம கோர்ட்டு, கேசுன்னுல அலைஞ்சிட்டு இருந்தாரு...
உண்மைதான்..விலைக்குத் தகுந்த அளவு, சாப்பாட்டின் அளவு இருப்பதில்லை..
சூப்பரா இருக்கு அண்ணா உங்க துணுக்ஸ்..:)) எப்பவாவது போடாம அடிக்கடி இப்படி அண்ணிகிட்ட அடிவாங்கரத பத்தி போடுங்க.. படிக்க நல்லா இண்ட்ரஸ்டிங்கா இருக்கு... ;))))))))))))
குடும்பத்தோட உக்காந்து கும்மாங்குத்து குத்தறாமாரி இருக்கு..
இங்ஙன நமக்கு வேளை இல்ல சாமியோவ்....மியாவ்.
வருகைக்கும் ரசிச்சதற்கும் ஸ்மைலிக்கும் நன்றி ஜி, தமிழ் பிரியன் & T.V.Radhakrishnan..
வாங்க வருங்கால முதல்வர்.. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..
//
இரா. வசந்த குமார். said...
அன்பு வெண்பூ...
அண்ணாச்சி இது தெரியாம கோர்ட்டு, கேசுன்னுல அலைஞ்சிட்டு இருந்தாரு...
//
வாங்க வசந்த்.. நான் என்ன சொல்றேன்னா அவரு கோர்ட்டு, கேசுன்னு அலையறதுக்கு காரணமே எல்லாரும் விடற சாபம்தான் (சாபத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இவ்ளோ கொள்ளை அடிக்கிறவனுக்கு இந்த அளவுக்காவது தண்டனை கிடைக்குதேன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்)..
//
பாச மலர் said...
உண்மைதான்..விலைக்குத் தகுந்த அளவு, சாப்பாட்டின் அளவு இருப்பதில்லை..
//
வாங்க பாச மலர்.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
//
ஸ்ரீமதி said...
சூப்பரா இருக்கு அண்ணா உங்க துணுக்ஸ்..:)) எப்பவாவது போடாம அடிக்கடி இப்படி அண்ணிகிட்ட அடிவாங்கரத பத்தி போடுங்க.. படிக்க நல்லா இண்ட்ரஸ்டிங்கா இருக்கு... ;))))))))))))
//
வாம்மா பாசக்கார தங்கச்சி.. நான் அடி வாங்குறது உனக்கு இன்டரெஸ்டிங்கா இருக்கா... அவ்வ்வ்வ்வ்வ்... :)))
//
கும்க்கி said...
குடும்பத்தோட உக்காந்து கும்மாங்குத்து குத்தறாமாரி இருக்கு..
இங்ஙன நமக்கு வேளை இல்ல சாமியோவ்....மியாவ்.
//
வாங்க கும்க்கி... சரி சரி விடுங்க.. இதெல்லாம் எழுதறதே சக ரங்கமணிகள் பாத்து ஆறுதல் பட்டுக்கிறதுக்குதான்.. :))))
நல்லா எழுதறிங்க அண்ணே...
125
இப்ப அந்த வரியில மெசேஜ் இல்லைன்னு அவரு சொல்லட்டும் அப்புறமா பேசிக்கலாம்.. சரியா அப்துல்லா??? :))))
//
என்ன மெசேஜீன்னுதான் உங்களுக்குப் புருஞ்சுருச்சுல்ல... அப்புறம் ஏன் அதை ஊரக் கூட்டிக் கேக்குறீங்க??? :)
துணுக்ஸ் நச்சென்று இருந்தது.
:))))))))))))))
வெண்பூ..
மிக சுவாரஸ்யமான துணுக்ஸ்.. மிகவும் ரசித்து படித்தேன்..
(லைட்டா லேட்ட வந்தா 120 பேருக்கு மேல குத்திட்டாங்களே எஜமான்..)
நர்சிம்
me the 129
//
"டிடங்க்..." (ஹி..ஹி.. அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல லேண்ட் ஆன சத்தம் அது)
//
மேடம் ஒரு ஸ்மால் ரெக்கொஸ்ட் உங்க கைல இருக்கிற கரண்டி அடிக்கடி இப்படி லேண்ட் ஆகட்டும் ஆனா இவர் தலைல
:)))))))))))))))))
//
இப்போதெல்லாம் என் தங்கமணிக்கு அந்த ஸ்கூல் நல்லதா என்பது பற்றி எந்த சந்தேகமும் எழுவதில்லை.
//
:)))))))
//
இரண்டு வயதாகும் என் மகனுக்கே கண்டிப்பாக அந்த அளவில் இரண்டு ப்ளேட் சாப்பாடு வேண்டும்
//
இதுக்கு பதிலா ரெடிமேட் இட்லி மாவு பேக்கட் வாங்கி இன்ஸ்டன்டா தோசை போட்டு சாப்பிட்டிருக்கலாம்
:))))))))))
/
யோசிப்பவர் said...
//அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல லேண்ட் ஆன சத்தம் அது//
அது எப்படி, எப்பொழுதும் கரெக்டா ஹாலிலேயே லேண்ட் ஆகுது? ஏதோ சூட்சுமம் இருக்குது பாஸு!!;-)
/
:))))))))))))))
ROTFL
/
சின்ன அம்மிணி said...
//"டிடங்க்..." (ஹி..ஹி.. அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல லேண்ட் ஆன சத்தம் அது)//
பதிவைப்படிச்ச அத்தனை பேரும் இத நம்பீட்டாங்கன்னு நினைக்கிறீங்களா :)
/
:))))))))))))))))))
நான் தனியாள் இல்ல
அடேங்கப்பா... இவளோ கும்மி....
//சாபமிட்டேன் என்பது சாலப் பொருத்தமான வார்த்தை.//
அந்த ரணகளத்துலயும் ஒரு டைமிங்கான ரைமிங்... கலக்கறிங்க வெண்பூ...
ஊட்டுக்கு வந்த மச்சான வெரட்ட என்னா டெக்னிக்லாம் யூஸ் பண்றாங்கையா...
//"டிடங்க்..." (ஹி..ஹி.. அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல லேண்ட் ஆன சத்தம் அது)//
SAIL விளம்பரத்துக்கு நல்ல கான்செப்டா இருக்கே!!?
//"நல்ல ஸ்கூல்தான்.. ***** கூட அவங்க குழந்தையை அங்கதான் போட்டிருக்காங்க" //
அவங்கதான் அந்தப் பள்ளியோட பிராண்ட் அம்பாசடரா?
//அங்கே டீ நன்றாக இருக்கும் என்பதால் அவ்வப்போது நானும் செல்வதுண்டு (டிஸ்கி: டீ மட்டும்தான்)//
நம்பிட்டோம்.
//அந்த அளவு சாப்பாடு போடுவதுபோல் அளவாக பிளாஸ்டிக் டப்பா வேறு. தட்டில் அந்த சாப்பாட்டை கொட்டினால் இருக்கும் இடமே தெரியவில்லை. இதில் சாம்பார் சாதத்தில் இரண்டு பெரிய சைஸ் காய்கறி வேறு. அதை எடுத்துவிட்டால் ஒரு கரண்டி அளவுக்கு மட்டுமே சாப்பாடு இருந்தது.//
அதுல உப்பு இருக்கா உரைப்பு இருக்கான்னு பாகதுகுள்ள தீர்ந்து போயிடுது.
நெல்லை மாவட்டதுக் காரனான எனக்கெல்லாம் அவங்கடையில ஒரு பொங்கல் சாப்பிட்டா லேசா எறும்பு கடிச்சது மாதிரி இருக்கும். ஆட்டொவில போகும்போது கூட புளூக் கலர் போர்டப் பார்த்டா கண்ண மூடிக்குவேன்.
இதுல சில பேரு ட்ரீட்டுன்னு அந்த ஓட்டலுக்கு கூட்டீட்டுப் போவாங்க, அழுது வெம்பிடுவேன்.
இதுக்குத்தாங்க நான் சென்னை வந்தா திருவல்லிக்கேனி பக்கமா இருக்க மெஸ்ஸுல ஒரு பிடி பிடிச்சுர்றது.
வாங்க தமிழன் (கறுப்பி), புதுகைத்தென்றல், நர்சிம், மங்களூர் சிவா.. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..
வாங்க ரோஜா காதலன், நந்து... நன்றி.. நன்றி..
வாங்க வேலன் சார் செய்ல்கிட்ட இந்த கான்செப்ட வித்துரட்டா? :))))
நல்ல ஐடியா.. அந்த போர்டை பார்த்ததும் கண்ணு மூடிக்கிறது. ஆனா நான் அத செய்ய முடியாது, ஏன்னா வண்டி ஓட்டுறதே நாந்தானே..
//"டிடங்க்..." (ஹி..ஹி.. அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல லேண்ட் ஆன சத்தம் அது)//
தரையில் லேண்ட் ஆனாதால் தானே இந்த சத்தம் வந்தது.
இல்லை ”சொத்” என்றல்லவா சத்தம் வந்திருக்க வேண்டும் :) :)
//இரண்டு வயதாகும் என் மகனுக்கே கண்டிப்பாக அந்த அளவில் இரண்டு ப்ளேட் சாப்பாடு வேண்டும். நாங்களோ வெளியே சுற்றிவிட்டு பசியோடு வந்திருக்கிறோம்.//
எந்த ஹோட்டல் என்று ஊகிக்க முடிகிறது !!!
இது தானா என்று பாருங்கள்
http://www.payanangal.in/2008/08/06062008.html
எழும்பூரில் உள்ள சரவணபவன் உணவகம் குழந்தைகளுக்கான சிறப்பு உணவகமா என்று தெரியவில்லை. எல்லா உணவு பண்டங்களுமே சிறிய அளவிலேயே உள்ளன. (விலை மட்டும் தான் பெரிதாக இருக்கிறது)
unga sabam palichuttutha saravana bhavan ownerai arrest pannitungalame
shankar
//"டிடங்க்..." (ஹி..ஹி.. அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல லேண்ட் ஆன சத்தம் அது)//
இதெல்லாம் அரசியல்ல சக்ஜமப்பா..
வெண்பூ சார்.. உங்கள் கருத்துக்களை அறிய இந்த பதிவு காத்திருக்கிறது..
http://cablesankar.blogspot.com/2008/11/blog-post_09.html
வெண்பூ,
பரிசலும் முரளி கண்ணனும் சொன்னதுதான். சுவாரஸ்யம் எல்லாருக்கும் எளிதில் வராது. ஒரு அவியல், கதம்பம் போல துவங்கலாம். யோசி. (என்ன கும்மி அடிக்கறாங்கப்பா! )
அனுஜன்யா
///அடப்பாவிகளா! இவ்ளோ காசா! ஆவரேஜா ஒரு ப்ளேட் விலை ரூபாய் 32.50 என்று மனதிற்குள் திட்டினாலும், சரி, பரவாயில்ல குவாலிட்டியும் டேஸ்டும்தான முக்கியம், அதுக்குதான தேடி புடிச்சி இங்க வரோம் //
கொஞ்சம்கூட கூச்சப்படாம அளவுக்கதிகமான காசு வாங்கறாங்க.
கையேந்திபவன் தான் பெஸ்ட், மத்ததெல்லாம் வேஸ்ட்.
romba
Nalla
Irunthuthu
:::)))))
5 Vote Potuirukean, 150 vanthucha.........................
Very good thunuks, Nice sharing of your experience.
Keep posting.
- Siva.
Very good thunuks, Nice sharing of your experience.
Keep posting.
- Siva.
Hey,
I need your help. I am trying to add my post into tamilmanam. but somehow i am getting an error. can you guide me on this. Thanks
Aalavandhan,
you should first add your blog to tamilmanam. I don't see your blog in blog listing.
Go to "பதிவுகள்" in the top menu. in that select "பட்டியலில் சேர்க்க".
After 2 or 3 days you will get a mail from Tamilmanam admin stating that your blog is added. after that you can start adding your posts.you should have atleast 3 posts to in your blog to add to tamilmanam.
Hey,
Sorry to bother, I tried. but its saying..
உங்களின் இந்தப் பதிவு ஏற்கனவே தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு உள்ளது
and i couldnt add any of my post. can you give me your emailid or something to discuss abt this. thanks
Kindly post your mail id.. comments are moderated. I won't publish it.. thanks.
:))))))
எங்க தல ஆளையே காணோம்.. நம்ம பக்கம் வந்துட்டு போங்க..
nice nice...
keeep blogin...
congrad::::::
//என் அலுவலகத்தின் பார்க்கிங் லாட் அருகே புகைபிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.
அலுவலகத்தின் அருகில் இருந்த ஒரு முட்டுச்சந்து (20 அடி அகலம் இருக்கும்) உள்ளே ஒரு டீக்கடை இருக்கும். அங்கே சென்று தம் அடிக்க ஆரம்பித்தனர். மெயின் ரோடில் இருந்து கொஞ்சம் உள்வாங்கி இருப்பதால் அவ்வளவு சீக்கிரம் போலீஸார் கண்ணை ஈர்க்காது என்பதால் அங்கு எப்போதும் கூட்டம்தான்.
அங்கே டீ நன்றாக இருக்கும் என்பதால் அவ்வப்போது நானும் செல்வதுண்டு (டிஸ்கி: டீ மட்டும்தான்). .
வந்த கான்ஸ் சுற்றியும் பார்த்துவிட்டு கடைக்காரனை பார்த்து மெல்லிய குரலில் கேட்டார்.. "ஒரு கோல்ட் ஃப்ளேக் குடு"//
நீங்கள் ஈக்காட்டுத்தாங்கலில் இருக்கும் Virtusa வில் வொர்க் பண்ணுகிறீர்களா?
//
ராம்சுரேஷ் said...
நீங்கள் ஈக்காட்டுத்தாங்கலில் இருக்கும் Virtusa வில் வொர்க் பண்ணுகிறீர்களா?
//
ஆமாம் ராம்சுரேஷ்..
//ஆமாம் ராம்சுரேஷ்
நானும் தான். :)
நெல்லை மாவட்டதுக் காரனான எனக்கெல்லாம் அவங்கடையில ஒரு பொங்கல் சாப்பிட்டா லேசா எறும்பு கடிச்சது மாதிரி இருக்கும். ஆட்டொவில போகும்போது கூட புளூக் கலர் போர்டப் பார்த்டா கண்ண மூடிக்குவேன்.
இதுல சில பேரு ட்ரீட்டுன்னு அந்த ஓட்டலுக்கு கூட்டீட்டுப் போவாங்க, அழுது வெம்பிடுவேன்.
இதுக்குத்தாங்க நான் சென்னை வந்தா திருவல்லிக்கேனி பக்கமா இருக்க மெஸ்ஸுல ஒரு பிடி பிடிச்சுர்றthy
brother venpoo.
chennaila u have to go to kanagadurga mess( andra mess) @ natesan street corner upstairs . a very biggggggggggggg unlimited andra meals 35 rs. athai oru parcel vangi blue colour board hotellil 10 perukku poduvanga? anga hotelkarar enga area pakkam endu solla vekkamaa irukku
appavi arun
Post a Comment