Saturday, July 12, 2008

ஒரு ஆங்கில வலைத்திரட்டி அலுவலகத்தில்...

டிஸ்கி 1: இந்த இடுகையில் வரும் எல்லா பாத்திரங்களும் கற்பனையே. கண்டிப்பாக உண்மையில்லை

டிஸ்கி 2:....

டிஸ்கி 3:...

டிஸ்கி 4: இடுகையின் தலைப்பிலோ அல்லது முதல் 3 வரிகளிலோ சாமம், சட்டி போன்ற தவிர்க்கப்படவேண்டிய போன்ற வார்த்தைகள் வரவில்லை.

இனி இடுகைக்குப் போவோம்..

அது ஒரு ஆங்கில வலைத்திரட்டி அலுவலகம். வடிவேலு அமர்ந்திருக்க வேக வேகமாக ஓடி வருகிறார் ஒரு அடிப்பொடி.

"அண்ணே, அண்ணே, அந்த ஜ்யோலட்சுமண கந்தர் மறுபடியும் சாமக்கதைகள போட்டிருக்காரு"

விருட்டென எழுகிறார் வடிவேலு.

"அந்த சைடுநவீனத்துவ கும்பலுக்கு இதுவே வேலயா போச்சி, உடனே கிளம்புறேன்"

வழியில் பார்க்கும் ஒருவர்....

"கால்புள்ள கோவமா கிளம்பிட்டான் போல இருக்கு, இன்னிக்கு எத்தன பதிவர்கள் தலை உருளப்போவுதோ?"

வடிவேலு வருகிறார். அங்கே ஜ்யோலட்சுமண கந்தர், பைத்தியம் தெளிந்தவன், களர், லக்கியில்லாத லுக் எல்லாம் நிற்கின்றனர்.

"டாய் கந்தர்...எதுக்குடா அதைப் போட்ட?"

"ம்ம்ம்ம்ம்ம்... என்ன சொல்றன்னு புரியல... உன் டெர்ம்ஸ் அன்ட் கண்டிஷன் ரொம்ப சின்ன எழுத்துல இருக்கு.. கொஞ்சம் பெரிய ஃபான்ட்ல போடு"

"டாய் கந்தர், நீ ஒரு கீ போர்டுல டைப் பண்ற ஆளா இருந்தா இன்னொரு இடுகை போடுறா பாக்கலாம்"

அதற்குள் லக்கியில்லாத லுக் "சட்டி சுட்டதடா, கை விட்டதடா" என்று ஒரு பதிவிடுகிறார்.

"ஒத்துக்கறேன்.. நீங்க எல்லாம் ஒரே கீ போர்டுல டைப் பண்றவங்கன்றதான்கறத‌ ஒத்துக்குறேன்.. நெக்ஸ்ட் மீட் பண்றேன்"

திரும்பி நடக்கிறார். எல்லோரும் சுற்றி நிற்கிறார்கள்.

"உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு. இதுவரைக்கும் யாரும் என்னை கும்முனதில்ல"

"போன மாசம்தான ஆங்கிலச்சி விசயத்துல உன் டவுசர கிழிச்சோம்"

"அது போன மாசம் நான் சொன்னது இந்த மாசம்..."

பைத்தியம் தெளிந்தவர் ஒரு பதிவிடுகிறார் "ஆங்கில ஸ்மெல்லுக்கு ஒரு விண்ணப்பம்" என்ற தலைப்பில்.

"வேணாம்"

லக்கியில்லாத லுக் "ஆங்கில ஸ்மெல்லுக்கு ஒரு அவசர கடிதம்" என்ற தலைப்பில் அடுத்த பதிவிடுகிறார்.

"வலிக்குது"

எல்லோரும் பின்னூட்டமிட ஆரம்பிக்க,

"அழுதுடுவேன்... அழுதுடுவேன்..."

அங்கே இருப்பவர்கள் மட்டுமில்லாமல் எல்லாரும் வரிசையாக பின்னூட்ட கும்மியை ஆரம்பிக்கிறார்கள்.

18 comments:

said...

:-)))))))))))

said...

வாத்தியார் ஐயா... எதிர்பார்த்தேன் நீங்கள் தான் முதல் பின்னூட்டமிடுவீர்கள் என்று..:)

said...

உங்கள் டவுசரும் உருவப்படலாம். டவுசர்கள் படைக்கப்படுவது உருவப்படுவதற்கே!

said...

வாங்க லக்கி. நாம நாடா போட்டு டவுசர‌ இறுக்கி கட்டிட்டுதான் களத்துல இறங்குறோம்,,, பாக்கலாம் என்ன நடக்குதுன்னு :))))

Anonymous said...

என்னுடைய சமீபத்திய வாந்திக்கும் பினாயில் ஊற்றப்பட வில்லை, செந்த் அடிக்கப்பட வில்லை. இப்போது கெட்டுப் போன டாஸ்மாக்கை முதல் மூன்று கிளாஸ்களில் அடித்ததால் அப்படி என்கிறார்கள் அவர்களது நறு மண புரோட்டாக் கடையில். இந்த விளக்கம் முதலில் ஏத்தி கொண்ட போது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டே வருவார்கள் போல

ஆனால் என்னுடைய கிளாசை கவுத்தியவுடனேயே கவனித்தேன், கடலைக் கொட்டையைக் காணவில்லையே என்று. கிளாசைத் தூக்கும்போதே அவர்களது அடியாளுக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ !!

இன்று வேறு ஒருவரின் டேபிளில் வாந்திக்கு பினாயில் ஊற்றப்பட்டிருந்தது - அதிலும் நான் எடுத்ததைப் போலவே வாந்தி... பிச்சைக்காரன் வாந்தியும் என் வாந்தியும் ஒன்றா என்ன?

இப்படியெல்லாம் செய்வதற்கு பதில் வெளிப்படையாகவே சொல்லலாம், உன்னுடைய வாந்திக்குப் பினாயில் இல்லை என்று. அப்படிச் சொன்னால் மட்டும் என்ன செய்து விட முடியும்? அவர்களுக்கு ஊரிலேயே பெரிய டாஸ்மாக் பார் என்ற பெயரும் வேண்டும் அதே சமயத்தில் சர்வாதிகாரமாகச் செயல்படவும் வேண்டும்... நல்ல கதைதான்.. இந்த வாந்தியையே தினசரி தொடராக எடுக்கலாமா என யோசிக்கிறேன்

பாருங்க மக்கா இந்த வாந்தி முழுக்க ஐயர் கடை மெதுவடையால ஆன வாந்தி. முழுக்க அந்த கவுச்சி எதையும் திங்கவே இல்லை. இனி அதைப் பற்றி கனவுகூட காண மாட்டேன் என உறுதி கூற ஆசை தான்... ஆனால் என்ன செய்ய, குடிகாரன் பேச்சு விடிஞ்சாத் தான் போச்சே!

கடைசிக் குறிப்பு : இதை எழுதிக் கொண்டிருக்கும் இச் சமயத்தில் பார்த்தேன் - படுக்கையறைக் காட்சியில் பின்னியெடுத்த நடிகை என்ற போஸ்டருக்கு அடியில் ஒருவன் எடுத்த வாந்திக்கு பினாயில் சப்ளை நடக்கிறது!!! பலான படங்கள் மேல் எடுக்கப்பட்ட அந்த வாந்தியால் மட்டும் பாருக்கு தவறான அடையாளத்தை நிச்சயம் தராது என நம்புகிறேன். ஏதோ செய்யுங்க எசமானர்களே, ஏழை குடிகாரன் உங்களைப் போன்றவர்களை நம்பித் தானே இருக்கான்.

என்ன இருந்தாலும் கொஞ்சம் கவுரமாக வெளியே போகச் சொல்லலாம்... இப்படி நாறடித்தது தான் சங்கடமாக இருக்கிறது.

said...

அனானி,

எல்லோருக்கும் அவரவர் நினைப்பதைச் சொல்ல‌ கருத்துச் சுதந்திரம் உண்டு. அதே நேரம்,

// ஐயர் கடை மெதுவடையால ஆன வாந்தி//

போன்ற சம்பந்தமே இல்லாத மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குமான முடிச்சுகளை தவிர்ப்பது நல்லது. தனிமனித‌ வசவுகளற்ற‌ ஆரோக்கிய‌மான‌ விவாத‌ங்க‌ளுக்கு எப்போதுமே த‌னி ம‌ரியாதை உண்டு.

said...

ROTFL....

//நாம நாடா போட்டு டவுசர‌ இறுக்கி கட்டிட்டுதான் களத்துல இறங்குறோம்//

கிழிக்கப்படலாம் சாக்கிரதை :-)

said...

கும்மி இப்பவே ஆரம்பம்.... யப்பா இங்க ஒருத்தர் மாட்டி இருக்காரு ரொம்ம்ம்ம்ம்ம்பபபபப நல்லவர்ராகவும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறவர் மாதிரியும் தெரியுறாரு வாங்க வாங்க

said...

//கிழிக்கப்படலாம் சாக்கிரதை//

ஆஹா.. லேசா பயம் இப்பதான் வருது.. கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டனோ? அடங்கி இருந்திருக்கலாமோ?

said...

//கும்மி இப்பவே ஆரம்பம்.... யப்பா இங்க ஒருத்தர் மாட்டி இருக்காரு ரொம்ம்ம்ம்ம்ம்பபபபப நல்லவர்ராகவும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறவர் மாதிரியும் தெரியுறாரு வாங்க வாங்க//

ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்...

said...

ஹாஹா. போட்டுத் தாக்குங்க....:-)))))

said...

//ச்சின்னப் பையன் said...
ஹாஹா. போட்டுத் தாக்குங்க....:-)))))
//

வாங்க ச்சின்னப்பையன்...வருகைக்கு நன்றி.

said...

ரசித்துப் படித்தேன் வெண்பூ.

என் இடுகையைக் கிண்டல் செய்து எழுதியிருந்த அனானி காஞ்சல் பார்ட்டியின் பின்னூட்டத்தையும் ரசித்தேன் :)

said...

//ரசித்துப் படித்தேன் வெண்பூ.//

நன்றி சுந்தர். இதுவும் ஒருவகை எதிர்ப்புதான். நம்மால் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க கையாலாகாமல் போகும்போது வழக்கமான‌ இந்தியன் செய்யும் "இடுக்கண் வருங்கால் நகுக" டைப் கிண்டல்தான் இது. (மோசமான அரசியல்வாதிகள், லஞ்ச அதிகாரிகள் இவர்களை எதிர்க்க முடியாமல் இவர்களை வைத்து ஜோக் எழுதுவது போல்)

// என் இடுகையைக் கிண்டல் செய்து எழுதியிருந்த அனானி காஞ்சல் பார்ட்டியின் பின்னூட்டத்தையும் ரசித்தேன் :) //

அந்த அனானி கடுப்பாயிடப்போறாரு, நம்ம கிண்டல் அடிச்சா அதையும் ரசிக்கிறானுங்கன்னு :)))))

said...

பின்னீட்டீங்க...

said...

//வழிப்போக்கன் said...
பின்னீட்டீங்க...
//

வருகைக்கு நன்றி வழிப்போக்கன்.

said...

இதுதான் அவன் ஆப்பைப் புடுங்கி அவனுக்கே வெக்கறதா???

சூப்பரப்பு!

(வெண்பூ, செட்டிங்க்ஸ் போய் கமெண்ட்ஸ்ல Comments form placement-ல pop up window வை செலக்ட் பண்ணிருக்கீங்க, அத மாத்தி, full page செலக்ட் பண்ணுங்க. ஏற்கனவே சென்ஷி ஒரு தடவை எல்லாரையும் கெஞ்சினாரே.. இதுக்குதான். ஏன்னா, கமென்ட்ஸ் அடிக்கும்போதே உங்க போஸ்ட்டையும் சைடுல ஓப்பன் பண்ணி படிச்சு ப்டிச்சு கமெண்ட்ஸ் போடலாம்...)

said...

வருகைக்கு நன்றி பரிசல்.

//வெண்பூ, செட்டிங்க்ஸ் போய் கமெண்ட்ஸ்ல Comments form placement-ல pop up window வை செலக்ட் பண்ணிருக்கீங்க, அத மாத்தி, full page செலக்ட் பண்ணுங்க.//

Done. thanks.