Wednesday, July 23, 2008

புது ப்ராஜக்ட் (சின்னக் கதைகள் - 1)

"உங்களையெல்லாம் நான் எதுக்கு கான்ஃப்ரன்ஸ் ரூமுக்கு கூப்டிருக்கன்னா, ஒரு புது ப்ராஜக்ட் வருது, ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான ப்ராஜக்ட், டெக்னிகலி சேலஞ்சிங்..

அதுக்காக கம்பெனியில இருக்குற உங்களை மாதிரி திறமையான ஆளுங்களை எல்லாம் அசைன் பண்ண சொல்லி மேலிடத்துல இருந்து ஆர்டர். உங்களுக்கெல்லாம் சந்தோசம்ன்றது உங்க முகத்துல இருந்தே தெரியுது..

பல‌ வருசம் போகபோற இந்த ப்ராஜக்டுக்கு வருசத்துக்கு 10 மில்லியன் டாலர்னு கான்ட்ராக்ட் சைன் ஆகியிருக்கு..

சொல்றேன்..சொல்றேன்.. நம்ப மாட்டீங்க.. இந்த ப்ராஜக்ட் சித்திரகுப்தனோட பிரம்மச்சுவடிய மேனேஜ் பண்ண வேண்டிய 'சொர்க்கலோகம் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்' ப்ராஜக்ட்தான். நேத்துதான் சித்திரகுப்தன் வந்து நம்ம மார்க்கெட்டிங் ஹெட் கூட பேசி ஆர்டர் கன்ஃபர்ம் பண்ணிட்டு போயிருக்காரு..

குட்.. ரொம்பவும் ரியல் டைம் டேட்டா இருக்கப்போறதால செக்யூர்டாவும் அதே நேரம் டைம் கிரிட்டிகலா இருக்கறதுனால பெர்ஃபார்மென்ஸும் நல்லா இருக்கணும்...

ஓகே.. இப்ப ரொம்ப முக்கியமான விசயம்.. போன அப்ரைசல்ல யாரெல்லாம் ஆன்சைட் வேணும்னு கேட்டீங்க?"

42 comments:

said...

//ஓகே.. இப்ப ரொம்ப முக்கியமான விசயம்.. போன அப்ரைசல்ல யாரெல்லாம் ஆன்சைட் வேணும்னு கேட்டீங்க?"//

ஆஹா.. ஒஹோ... பேஷ்..பேஷ்!!

said...

// (சின்னக் கதைகள் - 1)"//

வாங்க வாங்க.. நீங்களும் களத்துல குதிச்சுட்டீங்கள்ல?

said...

//ஓகே.. இப்ப ரொம்ப முக்கியமான விசயம்.. போன அப்ரைசல்ல யாரெல்லாம் ஆன்சைட் வேணும்னு கேட்டீங்க?" //

இது டாப்பு டக்கரு... :-)

said...

ஆகா, ஆன்சைட்ல எமலோகத்துக்கு அனுப்புறீங்களா?????
ஆன்சைட்னா, வேலை முடிஞ்சதும் திரும்பி வந்துடலாம்ல, இல்லை அப்டியே உங்க கிளையன்ட் கிட்ட விட்ருவீங்களா?

said...

இப்போதான் பாத்தேன்..

என்ன வெண்பூ இத தமிழ்மணத்துல நகைச்சுவை-ன்னு வகைப்படுத்தியிருக்கீங்க?

நல்லாத்தானே இருக்கு? சிறுகதைன்னே குடுத்திருக்கலாமே?

said...

வாங்க பரிசல்...

//வாங்க வாங்க.. நீங்களும் களத்துல குதிச்சுட்டீங்கள்ல?//

பின்ன.. அதுதானே இப்போ லேட்டஸ்ட் ட்ரெண்ட்...:))

said...

வாங்க ஸ்யாம், சரவணகுமரன்... வருகைக்கு நன்றி...

said...

//ஜோசப் பால்ராஜ் said...
ஆகா, ஆன்சைட்ல எமலோகத்துக்கு அனுப்புறீங்களா?????
ஆன்சைட்னா, வேலை முடிஞ்சதும் திரும்பி வந்துடலாம்ல, இல்லை அப்டியே உங்க கிளையன்ட் கிட்ட விட்ருவீங்களா?
//

போனா திரும்ப வரமுடியாத இடம் அது ஒண்ணுதான.. அதுதான் பல வருசம் போற ப்ராஜக்ட் ஆச்சே.. அதனால கவலப்பட்வே தேவையில்ல. :))

said...

//பரிசல்காரன் said...
இப்போதான் பாத்தேன்..

என்ன வெண்பூ இத தமிழ்மணத்துல நகைச்சுவை-ன்னு வகைப்படுத்தியிருக்கீங்க?

நல்லாத்தானே இருக்கு? சிறுகதைன்னே குடுத்திருக்கலாமே?
//

ஆபீஸ்ல இருக்குற ஃபயர்வால் அந்த "இடுகைகளை அளி" வின்டோக்கே போக விடலை. அதனால இது "வகைப்படுத்தாதவை"லதான் சேர்ந்திருக்கு. ஆனா தமிழ்மணம் இடுகையோட லேபிளயும் எடுத்துக்கறதுனால அது "நகைச்சுவை", "சிறுகதை" ரெண்டு தலைப்பிலயும் வந்திருக்கு. "சிறுகதை"ல எனக்கப்புறம் பல பேர் அவங்க கதைகள சேத்துட்டதுனால என்னோடது முதல் பக்கத்துல வரல (சோ... நகைச்சுவைய விட சிறுகதை நெறய எழுதுறாங்க..)

said...

ஹாஹா... சூப்பர்...:-))))))

said...

நேத்திக்கு சிறில் முடிச்சாமாதிரி நீங்களும் சொல்லியிருக்கலாம்.. "இந்த இடத்திலேதான் நீங்க வர்றீங்க....".... :-))

said...

//ச்சின்னப் பையன் said...
நேத்திக்கு சிறில் முடிச்சாமாதிரி நீங்களும் சொல்லியிருக்கலாம்.. "இந்த இடத்திலேதான் நீங்க வர்றீங்க....".... :-))
//

வாங்க ச்சின்னப்பையன். சிறில் கதையில ரொம்ப உயர்வா ஒருத்தர பத்தி (எதிலயும் சேராத சாதாரணமான வாழ்க்கை வாழ்றவர்) எழுதியிருப்பாரு. நம்ம கொல்றத பத்தியில்ல பேசிட்டிருக்கோம். படிக்கிறவங்கள எல்லாம் கொன்னுடவோம்ன்றீங்களா? ஏற்கனவே நானெல்லாம் ப்ளாக் எழுதி அதத்தான் பண்ணிட்டிருக்கேன். ஒண்ணும் புரியலயே????? :))

said...

அதேதான். அந்த கம்பெனியிலே இருக்கறவங்க யாரும் தயாரா இருக்கமாட்டாங்க. அதனாலே, இதை பொறுமையா படிக்கற 'உங்களை' தேர்ந்தெடுக்கறதா இருக்காங்க... அப்படின்னும் சொல்லலாம்னு சொன்னேன்...

மத்தபடி - நீங்க முடிச்சதே நல்லா இருந்தது...

said...

எனக்கு சாப்ட்வேர் கம்பெனிகளைப் பற்றி பெரிதாகத் தெரியாது.அது நம்ம ஏரியா இல்ல. எல்லாருடைய பின்னூட்டத்தைப் பார்க்கும் போது நல்ல மேட்டரா தெரியுது :)

said...

ஆஹா, சூப்பர். எல்லா எடத்திலயும் நாலு பேர் உங்கள மாதிரி எக்கச்சக்க விவகாரமான ஐடியாக்கள கொட்டி துறுதுறுன்னு வேலை செய்வீங்களே :):):)
டாக்டர் விஜய் மென்பொருள் நிபுணரானால் உங்கள் யோசனைகளை எக்கச்சக்கமா பலரால வரவேற்கப்படும்

said...

முதலில் இந்த மேனேஜருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று நினைத்தேன், கடைசியில் வரியை இரண்டுமுறை படித்த பிறகு தான் பொருள் புரிந்தது. :) :)

நல்ல கதை, தொடர்ந்து இது போன்ற கதைகள் எழுதவும்.

said...

// புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
எனக்கு சாப்ட்வேர் கம்பெனிகளைப் பற்றி பெரிதாகத் தெரியாது.அது நம்ம ஏரியா இல்ல. எல்லாருடைய பின்னூட்டத்தைப் பார்க்கும் போது நல்ல மேட்டரா தெரியுது :)
//

வருகைக்கு நன்றி அப்துல்லா..

said...

//rapp said...
ஆஹா, சூப்பர். //

நன்றி வெட்டி..

// எல்லா எடத்திலயும் நாலு பேர் உங்கள மாதிரி எக்கச்சக்க விவகாரமான ஐடியாக்கள கொட்டி துறுதுறுன்னு வேலை செய்வீங்களே :):):)//

நீங்க எதை சொல்றீங்க? ஸ்மைலியப் பாத்தா இப்படி விவகாரமான ஐடியாக்கள கொட்டி ப்ளாக் எழுதுறியே, வேலையிலயும் அதேமாதிரி இருப்பியான்னு கேக்குற மாதிரு இருக்குது.. ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்...

//
டாக்டர் விஜய் மென்பொருள் நிபுணரானால் உங்கள் யோசனைகளை எக்கச்சக்கமா பலரால வரவேற்கப்படும்
//

இந்த கருத்து ச்சின்னப்பையனின் மேலான பார்வைக்கு அனுப்பப்படுகிறது..:)))

said...

//கயல்விழி said...
முதலில் இந்த மேனேஜருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று நினைத்தேன், //

கயல், மேனேஜர்களை திட்டாதீங்க. நான் கூட ஒரு ப்ராஜக்ட் மேனேஜர்தான்... ஆஆஆஆவ்வ்வ்வ்வ்..

//
கடைசியில் வரியை இரண்டுமுறை படித்த பிறகு தான் பொருள் புரிந்தது. :) :)
//

அப்பாடா..அப்ப நீங்க திட்டலயா?

//
நல்ல கதை, தொடர்ந்து இது போன்ற கதைகள் எழுதவும்.
//

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.. நன்றி கயல்.

said...

//இந்த கருத்து ச்சின்னப்பையனின் மேலான பார்வைக்கு அனுப்பப்படுகிறது..:)))//

பரிசீலிக்கப்படுகிறது...:-)))))

said...

//கயல், மேனேஜர்களை திட்டாதீங்க. நான் கூட ஒரு ப்ராஜக்ட் மேனேஜர்தான்... //
நீங்களும் ஒரு டேமேஜரா? முன்பே தெரிந்திருந்தால் கதை மேனேஜரை திட்டும் சாக்கில் திட்டி இருக்கலாம், சான்ஸ் மிஸ்! :)JK

said...

//நீங்களும் ஒரு டேமேஜரா? முன்பே தெரிந்திருந்தால் கதை மேனேஜரை திட்டும் சாக்கில் திட்டி இருக்கலாம், சான்ஸ் மிஸ்! :)JK//

அவ்வ்வ்வ்வ்வ்......

said...

ஹா ஹா ஹா ஹா ஹா

said...

//முரளிகண்ணன் said...
ஹா ஹா ஹா ஹா ஹா
//

வருகைக்கு நன்றி முரளிகண்ணன்..

said...

//ஆகா, ஆன்சைட்ல எமலோகத்துக்கு அனுப்புறீங்களா?????
ஆன்சைட்னா, வேலை முடிஞ்சதும் திரும்பி வந்துடலாம்ல, இல்லை அப்டியே உங்க கிளையன்ட் கிட்ட விட்ருவீங்களா?//

கண்டவர் விண்டிலர்
விண்டவ்ர் கண்டிலர்

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//கண்டவர் விண்டிலர்
விண்டவ்ர் கண்டிலர்

தி.விஜய்//

சரியா சொன்னீங்க விஜய்.. :)

said...

வலைச்சரத்தில் பதிவர்

said...

ஏறக்குறைய இது நிஜக்கதைதான். ஸா.:ப்ட்வேர் மட்டுமல்ல, சர்வீஸ், என்ஜினியரிங் உட்பட‌ எல்லா துறைகளிலுமே இப்படித்தான் இருக்குமென எண்ணுகிறேன். Nice.

said...

//தமிழ் பிரியன் said...
வலைச்சரத்தில் பதிவர்
//

நன்றி தமிழ் பிரியன்..

said...

//தாமிரா said...
ஏறக்குறைய இது நிஜக்கதைதான். ஸா.:ப்ட்வேர் மட்டுமல்ல, சர்வீஸ், என்ஜினியரிங் உட்பட‌ எல்லா துறைகளிலுமே இப்படித்தான் இருக்குமென எண்ணுகிறேன். Nice.
//

வருகைக்கு நன்றி தாமிரா..

said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கையா...
அவ்வ்வ்

said...

//VIKNESHWARAN said...
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கையா...
அவ்வ்வ்
//

வாங்க விக்கி.. ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். வருகைக்கு நன்றி.

said...

புதுப் பதிவு போட்டிருக்கேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க

Anonymous said...

//ஓகே.. இப்ப ரொம்ப முக்கியமான விசயம்.. போன அப்ரைசல்ல யாரெல்லாம் ஆன்சைட் வேணும்னு கேட்டீங்க?"//

நல்ல ட்விஸ்ட்

said...

வருகைக்கு நன்றி வடகரை வேலன்.

said...

கொஞ்சம் லேட்டாயிடுச்சே!!!வட போச்சே!!!

சூப்பருங்கோ!!!எனக்கு onsite வேணாம்...onsite வேணாம்...onsite வேணாம்...வேணவே வேணாங்கோ....என்ன வுட்டுங்கோ!!!!!!!

said...

நண்பர் வெண்பூ அவர்களுக்கு,
அருமையான ஒரு நகைச்சுவை சிறுகதையை படைத்ததற்கு வாழ்த்துக்கள்.

நண்பனின் மின்னஞ்சல் வழியாக பெற்ற இந்த கதையை படித்ததும் மனம் விட்டு சிரித்தேன்.

அதனால் தான் என்னுடைய வலைப்பூவில் பதிவு செய்தேன்.

உங்களின் கருத்துப்படி உங்கள் வலைப்பூவின் இணைப்பை புகுத்தி உள்ளேன்.

நன்றி.

said...

/
ஓகே.. இப்ப ரொம்ப முக்கியமான விசயம்.. போன அப்ரைசல்ல யாரெல்லாம் ஆன்சைட் வேணும்னு கேட்டீங்க?"
/

ஏன்பா இந்த கொலவெறி????

said...

கொலைவெறி கதைகள் V 3.07a அப்படின்னு தலைப்பு வெச்சிருக்கலாம்!!

said...

மிக்க நன்றி கார்த்தி.. வாழ்த்துக்கும் இணைப்புக்கும்.. :)

said...

//
மங்களூர் சிவா said...

ஏன்பா இந்த கொலவெறி????

கொலைவெறி கதைகள் V 3.07a அப்படின்னு தலைப்பு வெச்சிருக்கலாம்!!
//

ஆஹா... இந்த தலைப்பு ரொம்ப நல்லாவே இருக்கே..

said...

ஹா ஹா .. ரசித்து சிரித்தேன்..

இப்ப ரொம்ப முக்கியமான விசயம்.. தான் அந்த அப்பரைசல் கேட்டவராமே?