Sunday, June 22, 2008

வலைப்பதிவர்களுடன் விஜயகாந்த்

டிஸ்கி: இந்த பதிவில் ஒரு சில மிகச்சிறந்த பதிவர்களின் பெயர்களை உபயோகப்படுத்தி உள்ளேன். சம்பந்தப்பட்டவர்கள் கோபப் பட மாட்டார்கள் என நினைக்கிறேன். அவர்களின் பெயர்களை நான் சொல்லவில்லை. நீங்கள் கண்டுபிடிக்க முடிந்தாலே எனக்கு வெற்றிதான்.

மதுரை செல்லும் டெக்கான் ஏர்வேஸ் விமானத்துக்குள் ஏறுகிறார் விஜயகாந்த். "வெல்கம் சார்" என்ற விமானப் பணிப்பெண்ணிடம் "ஏதாவது அரசியல்வாதிகள் இருக்காங்களா?" என்று செக் செய்து கொள்கிறார். பணிப்பெண் "இருக்காங்க சார், அது மட்டும் இல்ல, இந்த தடவை வலைப்பதிவர் மாநாடு மதுரையில நடக்குதாம். அதனால கொஞ்சம் வலைப்பதிவர்களும் இருக்காங்க" என்கிறார். "அவங்களால நமக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை" என்று நினைத்துக் கொண்டே சென்று காலியான ஒரு சீட்டில் உட்கார்கிறார் விஜயகாந்த் வரவிருக்கும் பிரச்சினைகள் குறித்து தெரியாமல்.

அருகில் இருப்பவர் "வணக்கம் சார்" என்கிறார், பார்த்தால் பண்ருட்டி ராமச்சந்திரன்.

வி: நீங்க எப்படி சார் இங்க?

ப.ரா: நீங்க வரதா சொன்னாங்க, அதுதான் நானும் ஒரு டிக்கெட் போட்டுட்டேன். ஒரு முக்கியமான விசயம். 2011ல் நம்ம ஜெயிச்ச உடனே துணை முதலமைச்சர்னு ஒரு பதவிய ஏற்படுத்தி, அதுல ஒங்க கூடவே இருக்குற ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிய போடுங்க, அது உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்

வி: (மனதுக்குள்) நானே ராமு வசந்தன கழட்டி விட்டுட்டு நெம்பர் 2 இடத்துல சுதீஷ ஒக்கார வெக்க படாத பாடு பட்டுட்டு இருக்கேன். இதுல இவரு வேற (சத்தமாக) இந்த சீட் செரியில்ல, நான் பின்னால உக்காந்துக்கிறேன்..

எழுந்து பின்னால் அமர்கிறார், அருகில் பார்த்தால் சுதீஷ்..

சு: மாமா 2011 நம்ம ஜெயிச்ச உடனே பதவியேற்பு விழாவ எங்க வெச்சுக்கலாம்? மெட்றாஸ் யுனிவர்சிட்டி ஆடிட்டோரியத்திலயா? இல்ல நேரு ஸ்டேடியத்திலயா?

வி: (மனதுக்குள்) இப்பதான் குழந்தை பொறந்து தவழவே ஆரம்பிச்சிருக்கு, அதுக்குள்ள வயசுக்கு வர சடங்குக்கு வளையல் என்ன டிசைன்ல போடறதுன்னு இவனுக்கு கவலை. திட்டவும் முடியாது, உடனே அவங்க அக்காட்ட வத்தி வெச்சுடுவான் (சத்தமாக) எது நல்லா பெருசா இருக்கோ அதிலயே வெச்சுக்கலாம் மாப்ளே.

எழுந்து வேறு ஒரு சீட்டில் அமர்கிறார். அருகில் வெள்ளை வேட்டி சட்டையில் இருப்பவர் திரும்புகிறார்...ஓ.பி.எஸ். விஜயகாந்த் சுதாரித்து எழுவதற்குள் ஓ.பி.எஸ் விஜயகாந்த் கையை பிடித்துக்கொண்டு தனது துண்டை எடுத்து இருவரின் கையயும் மூடுகிறார்.

வி: சார்... சார்... என்ன பண்றீங்க? ஏன் என்னோட ஒரு விரல மட்டும் புடிச்சி இந்த அழுத்து அழுத்துறீங்க?

ஓ.பி.எஸ்: உஷ்.. கூட்டணி பத்தி பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்குறப்ப சத்தம் போடாதீங்க. இதுக்கு ஒத்துக்குறீங்களா இல்லயா?

வி: (மனதுக்குள்) ஒத்துக்கலன்னா விட மாட்டான் போல இருக்கே இந்த ஆளு, கை வேற இந்த வலி வலிக்குதே (சத்தமாக) ஒத்துக்கிறேன் சார், கைய விடுங்க.

கையை விடுகிறார் ஓ.பி.எஸ்.
சிரித்துக்கொண்டே ஓ.பி.எஸ்.: அப்பாடா வர்ற நாடாளுமன்ற தேர்தல்ல ஒரு தொகுதிக்கே ஒத்துகிட்டீங்க. நான் அம்மாட்ட பேசிடறேன், உங்களுக்கு பொட்டி வந்துரும். எந்த தொகுதின்னு முடிவு பண்ணி அம்மா சொல்வாங்க, நீங்க உடனே தமிழகம் முழுசும் சூறாவளி சுற்றுப்பயணம் ஆரம்பிச்சிடுங்க.. அனேகமா உங்களுக்கு பாண்டிச்சேரி தொகுதிய அம்மா கொடுப்பாங்கன்னு நினக்கிறேன்...

விஜயகாந்த் டெரர்ராகி வேறு சீட்டில் அமர்கிறார். அருகில் இருப்பவர் புதிய முகமாக ஜெர்மானிய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்க தைரியமாக பேச ஆரம்பிக்கிறார்.

வி: வணக்கம் சார். அரசியல்வாதிங்கள பாத்தாலே பயமா இருக்கு.

அவர்: கவலையே படாதீங்க. வரலாறுல எல்லாருக்கும் இந்த மாதிரி ஒரு நிலம வரும். இப்படித்தான் 1972ல இஸ்ரேலுக்கு ஒரு பிரச்சின வந்தது, உடனே அவங்க அமெரிக்காகிட்ட ஆலோசனை கேட்டாங்க. அதே மாதிரி நீங்களும் என்கூட வாங்க "சோ" சார்கிட்ட போய் ஆலோசனை கேப்போம். என்ன சொல்றீங்க?

வி: (என்னாது சோ கிட்ட போய் ஆலோசனையா? விளங்குனா மாதிரிதான்) பரவாயில்ல சார், நான் அந்த சீட்ல போய் உக்காந்துக்கிறேன்.

உட்கார்ந்த பின்புதான் கவனிக்கிறார், அருகில் சுப்பிரமணிய சாமி.

சு.சாமி: இங்க பாருங்கோ.. நான் ஜெயலலிதாட்ட பேசிட்டேன், அவா உங்களுக்கு 2 சீட் தர சம்மதிச்சுட்டா. இப்படியே நாம கோயமுத்தூர் போயி அங்க இருந்து கார்ல கொடநாடு போயிறலாம். ஃப்ளைட் மதுரைக்கு போகுதேன்னு கவலப்படாதேள், இந்த ஏர் டெக்கான் பைலட் ஜெட் ஏர்வேஸ்ல இன்டர்வியூ அட்டென்ட் பண்ணினதோட சி.டி. எங்கிட்ட இருக்கு, அதை சொல்லி அவாள மிரட்டி கோயமுத்தூருக்கு போக சொல்லலாம்.

வி: நான் யோசிச்சி சொல்றேன்

சு.சாமி: இதுக்கு நீங்க ஒத்துக்கலேன்னா, ஒபாமாவ தோக்கடிக்கறது எப்படின்னு உங்க மச்சான் சுதீஷ், பி.ஜே.பி வட்டச் செயலாளர்கிட்ட பேசிட்டு இருந்த சி.டி. இருக்கு, ஆதாரத்தோட வெளிய விட்டுடுவேன், பாத்துகோங்க.

(கொல்றானுங்களே) என்று நினைத்துக் கொண்டு வேறு சீட்டில் அமர்கிறார்.

அருகிலிருப்பவர்: நீங்க என்கிட்டதான் வருவீங்கன்னு தெரியும். மதுரை போனதும் அஞ்சா நெஞ்சன போயி பாத்துடுவோம். அப்படியே கிளம்பி சென்னை வந்தீங்கன்னா, மடிப்பாக்கத்துல ஒங்களுக்கு ஒரு வார்டு கவுன்சிலர் பதவி உறுதி. தேர்தல்ல நான், நம்ம உடன்பிறப்புங்க எல்லாம் உங்களுக்கு வேலை செய்றோம். உண்மைத்தமிழன்ட மட்டும் போயிடாதீங்க, அவரு அம்மா கட்சிக்காரரு..

வி: (என்னது வார்டு கவுன்சிலரா? இதுக்கு அவனுங்களே பரவாயில்லயே) ஆமா யாரு நீங்க?

அருகிலிருப்பவர்: கட்சியல உப்புமா போஸ்ட்ல இருக்குறானே இவன் வந்து கூட்டணி பத்தி பேசுறானேன்னு நினைக்காதிங்க. நான் மடிப்பாக்கத்துலயே ரொம்ப லக்கியான ஆளு..

வி: யேய் அவனா நீயி....

அலறியடித்துக் கொண்டு போய் வேறு சீட்டில் அமர்கிறார். அருகில் அ.இ.நா.ம.க கார்த்திக். (ஆஃப் ஆன லேப்டாப்பையே கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்)

கா: அது.. வந்து... நீங்களும்... நானும்... கூட்டணி வெஷ்ஷா...நாமதான் ஜெயிப்போம்... என்...கட்சிக்காரங்க 190... தொகுதியில நிக்கறதுக்கு....ரெடியா இருக்காங்க...மீதியில ... உங்க ஆளுங்கள....நிறுத்துங்க...

வி: அது என்னா 190 கணக்கு?

கா: அது... வந்து.. கட்ஷியில... இது...வரைக்கும்... 190.... பேர்தான்.... சேர்ந்திருக்காங்க. அதுதான்....

வி: (இன்னிக்கு யார் மொகத்துல முழிச்சேன்னே தெரியலயே)

ஃப்ளைட் முழுக்கத் தேடி சாந்தமான ஒருவர் அருகில் அமர்கிறார்.

அவர்: நீங்க யாரு?

வி: (லேசான ஏமாற்றத்துடன்) நாந்தான் விஜயகாந்த், நல்லா ஆக்சன் படம்லாம் நடிப்பேன், இப்பதான் கட்சி ஆரம்பிச்சிருக்கேன். நீங்க?

அவர்: நான் ஒரு வாத்தியார், ரொம்ப நாளா நம்ம பசங்களுக்கு பாடம் எடுத்துட்டு இருக்கேன். என் கையில பிரம்பு எல்லாம் இல்ல. அடிச்சு சொல்லிக் குடுக்காம அன்பா சொல்லிக் கொடுப்பேன். ஆமா இன்னும் 3 வருசத்தில நீங்க என்னாவா ஆகப் போறீங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?

வி: (இவரும் அதயே நோண்டுராறே) அது வந்து..நான் சி.எம்.மா இருப்பேன்

அவர்: அது எப்படி நீங்க சொல்றீங்க? உங்க ஜாதகத்தைப் பாத்தீங்களா?

வி: அத எதுக்கு நான் பார்க்கணும்?

அவர்: எல்லாருமே அவங்கவங்க ஜாதகத்தை நல்லா மனப்பாடம் பண்ணிக்கனும். ஜோசியம் அப்படின்றது ஒரு கடல் மாதிரி, நான் அதுல உங்கள ஒரு பயணம் அழைச்சிட்ட்டுப் போறேன்.

வி: நீங்க எதுக்கு என்னை அழைச்சிட்டுப் போறீங்க?

அவர்: உங்களுக்கு விருப்பமில்லேன்னா வேண்டாம், கரையிலயே நின்னுக்கங்க, விருப்பம் இருக்கறவங்க மட்டும் வந்தா போதும். அலோ எங்க போறீங்க?

வி: அது... எல்லார்கிட்டயும் பேசுனதுல எனக்கு வயித்த கலக்குது, நான் பாத்ரூம் போயிட்டு வந்துர்றேன்.

வேக வேகமாக நடக்கிறார். பக்கத்திலிருந்து ஒரு குரல்

அவர்: வாங்க கேப்டன் வந்து என் பக்கத்தில உக்காரதுக்கு நன்றி

வி: நாந்தான் உங்க பக்கத்திலேயே உக்காரவே இல்லயே

அவர்: ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நானே ஒரு சின்னப் பையன்ங்க. இப்பிடியே பின்னூட்டம் போட்டு போட்டு பழக்கமாயிடுச்சி. வருத்தப்படாதீங்க

"ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேடேய்" என்று ஒரு ஐம்பது, அறுபது குரல்கள் கேட்க திடுக்கிடுகிறார்,

வி: என்னங்க இப்படி கத்துறாங்க?

அவர்: அவங்கள்லாம் என்னோட கருத்த வழிமொழியுறாங்களாம், இதெல்லாம் உங்களுக்கு புரியாது. விடுங்க.

வி: (எனக்கு இன்னிக்கு சனி உச்சத்துல இருக்குன்னு நெனக்கிறேன்)

பாத்ரூம் அருகில் இருவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருவர்: கவலப்படாதீங்க அய்யா. அந்த ஆளூ இந்த வண்டியிலதான் வராரு. ஏரோப்ளேன் ஸ்டேன்ட்லயே அவனைத் தூக்குறோம்.

மற்றவர்: என்ன சொல்ற குரு, ஏரோப்ளேன் ஸ்டேன்டா?

முதலாமவர்: ஆமாங்கய்யா, பஸ் நிக்கற இடம் பஸ் ஸ்டேன்ட். அதே மாதிரி ஏரோப்ளேன் நிக்கற எடம் ஏரோப்ளேன் ஸ்டேன்ட்தான. அங்கதான் நம்ம பசங்க சுமோவோட நிக்கறாங்க. தூக்கிட்டு தோட்டத்துக்கு கொண்டாந்துறோம்.

"எங்க போனாலும் விட மாட்டேன்றானுங்களே" என்று புலம்பியபடி பயத்துடன் கதவைத் திறக்கிறார் விஜயகாந்த். அது பாத்ரூம் இல்லை, பாராசூட் ரேம்ப்.

"ஆகா, இதுதான்டா இவங்க எல்லார்கிட்ட இருந்து தப்பிக்க நல்ல வழி. கீழப்போயி ஒரு லாரியோ, ஷேர் ஆட்டோவோ புடிச்சி மதுரைக்கு போயிட வேண்டியதுதான்" என்று நினைத்துக் கொண்டு ஒரு பாராசூட்டை எடுக்கிறார்.

அப்போது பின்னாலிருந்து ஒரு குரல்,

"எங்க கூட கூட்டணி வெச்சீங்கன்னா நாம கண்டிப்பா ஜெயிக்கறோம். நீங்கதான் துணை முதலமைச்சர்"

"ஆகா, காலையில இருந்து இப்பதான் ஒரு நல்ல வார்த்தையை காதில் கேக்குறேன்" என்று நினைத்தவாறு திரும்புகிறவர் அதிர்ச்சியில் சிலையாகிறார்.

அங்கே நிற்பது விஜய டி.ராஜேந்தர்..

"நீ வேணான்ற தி.மு.க
உன்ன வேணான்னுது அ.தி.மு.க.
ஆனா உனக்காகவே காத்திருக்குயா ல.தி.மு.க

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
சிம்பு செட் பண்றான்டா ட்ரெண்ட்

எல்லா கம்பெனியிலயும் இருப்பாங்க ஜி.எம்.மு
என் கூட நீ கூட்டணி வெச்சா நாந்தாங்க சி.எம்.மு"

விஜயகாந்த்: என்னா சொன்னீங்க?

டி.ஆர்: 2011ல நாந்தாங்க சி.எம்.மு

விஜயகாந்த்: (அழுகிற குரலில்) இன்னொரு தபா சொல்லுங்க?

டி.ஆர்: (தலையை ஸ்டைலாகக் கோதியபடி) 2011ல நாந்தாங்க சி.எம்.மு

விஜயகாந்த் பாராசூட் இல்லாமலேயே வெளியே குதிக்கிறார்.

24 comments:

said...

////டி.ஆர்: (தலையை ஸ்டைலாகக் கோதியபடி) 2011ல நாந்தாங்க சி.எம்.மு

விஜயகாந்த் பாராசூட் இல்லாமலேயே வெளியே குதிக்கிறார். /////
:-)))))

Anonymous said...

//டி.ஆர்: (தலையை ஸ்டைலாகக் கோதியபடி) 2011ல நாந்தாங்க சி.எம்.மு
//

:-))))) ROFL

சரவணன்

said...

:-)))))))))))))

said...

நான் யாரென்றே தெரியாமல், ஏன் பெயரையும் labels-ல் சேர்த்ததற்கு நன்றி...

said...

வாங்க வாங்க பின்விளைவுகள் பலமா இருக்க போகுது

said...

கடைசி வரி.. சூப்பர்!! சிரிப்பை அடக்க முடியவில்லை!

said...

ஹி. ஹி. ஹி...

said...

சூப்பரப்பு..........

said...

சான்சே இல்லைங்க. நெம்ப நெம்ப சூப்பர். இதைபோலவே மற்றொரு பதிவை மிக விரைவில் ரொம்ப எதிர்பார்க்கிறேன்.

said...

அவ்வ்வ்வ்... சூப்பர்...

said...

அடுத்த பதிவுலே என் கேரக்டர் இன்னும் கொஞ்சம் பெரியதா இருக்கணும். கண்டிப்பா வெளி நாட்டிலே எனக்கும், ஹீரோயினுக்கும் ஒரு பாட்டு (பாட்டி இல்லீங்க) இருக்கணும். உடனே ஏற்பாடு பண்ணுங்க...

said...

சொல்லவேணாமுன்னு பார்த்தால்..... முடியலை.

ஏன் ஒரு லேடி கேரக்டர் கூட இல்லை?

ஒரு ஏர்ஹோஸ்டஸ் கூட இல்லையே!

பிரேமலதா சொல்லி அனுப்புனாங்களா?

(-:

said...

வந்து ரசிச்ச எல்லாருக்கும் - சுப்பையா வாத்தியார், சரவணன், துளசி கோபால், நையாண்டி நைனா, அதிஷா, தமிழ்மாங்கனி (என்ன ஒரு அழகான தமிழ்ப் பெயர்), தூக்கணாங்குருவி, அறிவன், ராப், ச்சின்னப் பையன் எல்லாருக்கும் நன்றி.

ஆனா பாதி பேரு ஸ்மைலிய மட்டும் போட்டிருக்குறதப் பாத்தாத்தான் லேசா டெர்ரர் ஆகுது...

// வாங்க வாங்க பின்விளைவுகள் பலமா இருக்க போகுது
//

பயப்படுத்தாதீங்க, சமயத்தில இதை விட மோசமா (கேவலமா) எல்லாம் யோசிப்பேன்

// சான்சே இல்லைங்க. நெம்ப நெம்ப சூப்பர். இதைபோலவே மற்றொரு பதிவை மிக விரைவில் ரொம்ப எதிர்பார்க்கிறேன்.//

குடுத்துடுவோம், கவலையேப்படாதீங்க

// அடுத்த பதிவுலே என் கேரக்டர் இன்னும் கொஞ்சம் பெரியதா இருக்கணும். கண்டிப்பா வெளி நாட்டிலே எனக்கும், ஹீரோயினுக்கும் ஒரு பாட்டு (பாட்டி இல்லீங்க) இருக்கணும். உடனே ஏற்பாடு பண்ணுங்க...
//

தசாவதாரம் கமல் மாதிரி 10 வேஷத்துக்கு வேணா ரெடி பண்ணட்டுமா? யாராவது சிக்கமாட்டாங்களான்னு கொலை வெறியோட அலைஞ்சிட்டு இருக்கேன்.

said...

// ஏன் ஒரு லேடி கேரக்டர் கூட இல்லை?
//

நம்ம கேப்டன் மீட் பண்ற முதல் கேரக்டரே விமானப் பணிப்பெண்தானே மேடம்..

-----விமானத்துக்குள் ஏறுகிறார் விஜயகாந்த். "வெல்கம் சார்" என்ற விமானப் பணிப்பெண்ணிடம்----

said...

ஹா.... ஜஸ்ட் மிஸ்டு(-:

said...

// ஹா.... ஜஸ்ட் மிஸ்டு //

ஆனாலும் 33 சதவீத இட ஒதுக்கீடு இல்லைன்றது உண்மைதான்.. :-)

said...

/
டி.ஆர்: (தலையை ஸ்டைலாகக் கோதியபடி) 2011ல நாந்தாங்க சி.எம்.மு

விஜயகாந்த் பாராசூட் இல்லாமலேயே வெளியே குதிக்கிறார்.
/

:-))))))))))))))))))

said...

வாங்க சிவா..ரசிச்சதுக்கு நன்றி..

said...

சூப்பர்...

Anonymous said...

that GERMAN book reader is dondu.

that madippaakkam guy is lucky look.

is it correct?

do you want "AAPPU" from all sides?

said...

சீக்கிரம் உங்க கற்பணை குதிரைய தட்டி விடுங்க. அடுத்த பதிவெப்போங்க?

said...

சூப்பரப்பு :-D

said...

ராப்..ஆபிஸ்ல கொஞ்சம் ஆணி சேர்ந்துருச்சி... அதை முதல்ல புடுங்கணும்,,,அதனால கற்பனை குதிரைய லகான் இழுத்து கட்டி வெச்சிருக்கேன்.. கூடிய சீக்கிரமே அடுத்தப் பதிவைப் பார்க்கப் போறீங்க.keep your fingers crossed :))))

வாங்க உதயகுமார்...ரசிச்சதுக்கு நன்றி...

said...

மீண்டும் ஒருமுறை ரசித்து படித்தேன். அபாரம்