Showing posts with label பிறந்தநாள். Show all posts
Showing posts with label பிறந்தநாள். Show all posts

Wednesday, August 27, 2008

இன்று (ஆகஸ்ட் 27, 2008) என் செல்லத்தின் பிறந்தநாள்...

இன்று எங்கள் சந்தோசத்தின் மொத்த உருவம் பிறந்த நாள்.. நான் கணவன் என்ற வேலையில் அடிஷனலாக அப்பா என்ற பொறுப்பையும் சுமக்கத் துவங்கிய நாள்..

ஆம்.. எங்கள் வீட்டின் கொண்டாட்டம் ஆரம்பித்து இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகின்றன.

எங்கள் செல்லம் ஆதர்ஷ் இன்றோடு இரண்டு வயதை முடித்து மூன்றாவது வயதில் அடியெடுத்து வைக்கிறான்.

இதோ அவனது ஆல்பம்....















பின்குறிப்பு: இந்த முறை அவன் பிறந்த நாளுக்கு எங்களின் நான்கு நாட்களை அவனுக்கே அவனுக்காக பரிசளிக்க இருக்கிறோம். அலுவலக வேலை, வீட்டு வேலை, கணினி, இணையம், வலைப்பூ எல்லாவற்றிலிருந்தும் நான்கு நாட்கள் விலகி அவனுடன் கொடைக்கானலில் தங்கியிருக்கலாம் என்று திட்டம். இந்த பதிவுகூட சனிக்கிழமையே பதிவிடப் பட்டு 27ம் தேதி பப்ளிஷ் ஆவதுபோல் செட் செய்யப்பட்டுள்ளது.

அதனால்தான் இந்த வாரம் முழுவதும் என்னை நீங்கள் வலையில் பார்த்திருக்க மாட்டீர்கள். புரிதலுக்கு நன்றி.