Thursday, March 1, 2012

2012ல் நான் எதிர்பார்க்கும் ஆங்கில‌ ப‌ட‌ங்க‌ள்

ஆங்கில‌ திரைப்ப‌ட‌ங்க‌ளை ரொம்ப‌ எதிர்பார்த்து காத்திருந்து பார்க்கிற‌ ப‌ழ‌க்க‌ம் எல்லாம் இல்லை. ஆனால் ஏற்க‌ன‌வே நான் பார்த்த‌தில் என்னைக் க‌வ‌ர்ந்த‌, வெற்றிய‌டைஞ்ச‌ திரைப்ப‌ட‌ங்க‌ளோட அடுத்த‌ பாக‌ங்க‌ள் வ‌ர்ற‌ப்ப‌ என்னோட‌ எதிர்பார்ப்பு அதிக‌மாகுற‌து ஆச்ச‌ர்ய‌ம் இல்ல‌. அந்த‌ மாதிரி இந்த‌ வ‌ருச‌ம் நான் ஆவ‌லோட‌ எதிர்பார்க்குற‌ சில‌ ப‌ட‌ங்க‌ள் இங்கே. இது உங்க‌ளோட‌ லிஸ்டோட‌ ஒத்துப்போனா நீங்க‌ளும் என் இன‌ம்தான் :)

ஸ்பைட‌ர் மேன் 4 (The Amazing Spider-Man)
ஸ்பைட‌ர்மேன் சீரிஸ் ப‌ட‌ங்க‌ளைப் ப‌த்தி சொல்ல‌வே வேணாம். குழ‌ந்தைக‌ளைக் க‌வ‌ர்ந்த‌ காமிக்ஸ் ஹீரோவா இருந்தாலும் எல்லா வ‌ய‌தின‌ரையும் ஸ்பைட‌ர்மேன் சீரிஸோட‌ முத‌ல் மூணு பாக‌ங்க‌ள் க‌வ‌ர்ந்த‌து. ஹீரோ டோபே & ஹீரோயின் கிறிஸ்ட‌ன் ட‌ன்ஸ்ட் (ம்ம்ம்) ரெண்டு பேரோட‌ கெமிஸ்ட்ரி அட்ட‌காச‌மா இருந்த‌தும் இந்த‌ பாக‌ங்க‌ளின் வெற்றிக்கு கார‌ண‌ம். இந்த‌ நாலாவ‌து பாக‌த்துல‌ இந்த‌ சீரிஸை ரீபூட் அடிக்குறாங்க‌, அதாவ‌து ம‌றுப‌டியும் ஆர‌ம்ப‌த்துலேர்ந்து ஸ்பைட‌ர் மேன் ஏன் அப்ப‌டி ஆகுறான்ற‌துல‌ இருந்து ஆர‌ம்பிக்க‌ப்போறாங்க‌. முற்றிலும் புது ந‌டிக‌ர், ந‌டிகைக‌ள். உண்மையை சொல்ல‌ணும்னா இந்த‌ பாக‌த்தோட‌ ட்ரெய்ல‌ர் என‌க்கு ரொம்ப ஏமாற்ற‌மா இருந்த‌து. இருந்தாலும் இந்த‌ ப‌ட‌த்தை நான் எதிர்பார்த்துட்டுதான் இருக்கேன்

The Amazing Spider-Man
Release Date : July 3, 2012
Released in - 3D and IMAX 3D
http://en.wikipedia.org/wiki/The_Amazing_Spider-Man_%282012_film%29

பேட்மேன் : தி டார்க் நைட் ரைஸைஸ் (Batman - The Dark Knight Rises)
இதுவும் இன்னொரு சூப்ப‌ர் ஹீரோ ப‌ட‌ம்தான். இன்செப்ஷ‌ன் ப‌ட‌ம் மூல‌மா பெரும்பாலான‌ த‌மிழக‌ ர‌சிக‌ர்க‌ளிட‌ம் பிர‌ப‌ல‌மான‌ டைர‌க்ட‌ர் கிறிஸ்டோஃப‌ர் நோல‌னோட‌ அடுத்த‌ பட‌ம் + ஏற்க‌ன‌வே பெரிய‌ அள‌வில் வெற்றி பெற்ற‌ இரு பாக‌ங்க‌ளின் அடுத்த‌ & கடைசி பாக‌ம்ன்ற‌தா ஒட்டுமொத்த‌மாவே இந்த‌ ப‌ட‌த்துக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கு. இர‌ண்டாவ‌து பாக‌த்தோட‌ முடிவில் ம‌க்க‌ளோட‌ ந‌ம்பிக்கையை சிதைக்காம‌ இருக்க‌ணும்ன்ற‌துக்காக‌ கெட்ட‌ பேரோட‌ காணாம‌ போற‌ பேட்மேன் (அ) டார்க் நைட் மீண்டும் வெளியில் வ‌ந்து வில்ல‌ன்க‌ளை அழிக்குற‌ க‌தை.

இதுவ‌ரைக்கும் இல்லாத‌ வ‌கையில் ப‌ட‌த்தின் பெரும்ப‌குதி, ஏற‌த்தாழ‌ 55 நிமிட‌ அள‌வுக்கு, நேர‌டியா ஐமேக்ஸ் கேமிராவில‌யே ப‌ட‌மாக்கியிருக்காங்க‌. மிஷ‌ன் இம்பாஸிபிள் ப‌ட‌த்துக்கு போன‌ப்ப‌ இந்த‌ ப‌ட‌த்தோட‌ முத‌ல் 6 நிமிச‌த்தை காட்டுனாங்க‌. ஆகாய‌த்துல‌ ஒரு விமான‌த்துல‌ இருந்து இன்னொரு விமான‌த்துக்கு ஆட்க‌ள் க‌யிறு மூல‌மா ஏற‌ங்குற‌ ஆக்ச‌ன் சீக்வ‌ன்ஸ். ப‌ட‌ம் பாத்துட்டு இருக்குற‌ ந‌ம்ம‌ உக்காந்திருக்குற‌ சேர் ஆகாய‌த்துல‌ ப‌ற‌ந்த‌ மாதிரி உண‌ர்வு. அதுக்க‌ப்புற‌ம் இந்த‌ ப‌ட‌த்துக்கான‌ எதிர்பார்ப்பு எகிறிடுச்சி.

The Dark Knight Rises
Release Date : July 20, 2012
Released in - Regular & IMAX screens
http://en.wikipedia.org/wiki/The_Dark_Knight_Rises

அமெரிக்க‌ன் ரீயூனிய‌ன்
அமெரிக்க‌ன் பை ப‌ட‌ங்க‌ளை புடிக்க‌லைன்னு யாரும் சொல்ல‌வே முடியாது. டீன் காமெடின்னு வ‌கைப்ப‌டுத்த‌ப்ப‌டுற‌ ப‌ட‌ங்க‌ள்ல‌ டாப் ஸ்பாட் இந்த‌ சீரிஸ்க்கு ச‌ந்தேக‌மில்லாம‌ குடுக்க‌லாம். முத‌ல் மூணு பார்ட்டுக்கு அப்புற‌ம் வ‌ந்த‌ நாலு பார்ட்டும் டைர‌க்ட் டூ டிவிடி. அத‌னால‌ இந்த‌ சீரிஸ்ல‌ பெரிய‌ திரைக்கு வ‌ர்ற‌ நாலாவ‌து பார்ட் அப்ப‌டிங்குற‌தும், முத‌ல் மூணு பார்ட்ல‌ இருந்த‌ அதே ந‌டிக‌ர், ந‌டிகைக‌ள் ம‌றுப‌டியும் இதுல‌யும் ந‌டிக்குற‌தும் ஹைலைட்ஸ்.

காலேஜ் ப‌டிக்குற‌ ப‌ச‌ங்க‌ பொண்ணுங்க‌ளை க‌ரெக்ட் ப‌ண்ண‌வும் செக்ஸ்க்காக‌வும் அலையுற‌தையும், அது ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ செலிப்ரேஷ‌ன்ஸ், பார்ட்டின்னு நாம பொறாமைப்ப‌டுற‌ அள‌வுக்கு அமெரிக்க‌ டீனேஜ் ப‌ச‌ங்க‌ளோட‌ வாழ்க்கையை காட்டுன‌ ப‌ட‌ங்க‌ள் இவை. இந்த‌ பாக‌த்துல‌ அதே க்ரூப் ம‌றுப‌டியும் காலேஜ் ரீயூனிய‌னுக்காக‌ ஒண்ணு சேர்ற‌தை க‌தையாக்கி இருக்காங்க‌ போல‌. பாக்க‌லாம், எப்ப‌டி இருக்குன்னு..

American Reunion
Release Date : April 6, 2012
http://en.wikipedia.org/wiki/American_Reunion

ஸ்கைஃபால் (ஜேம்ஸ் பான்ட் 23)
இந்த‌ வ‌ருச‌ம் நான் எதிர்பார்க்குற‌ மிக‌ப்பெரிய‌ ப‌ட‌ம் இது. ஜேம்ஸ் பான்ட்டோட‌ தீவிர‌ ர‌சிகர்க‌ளுக்கு போன‌ வ‌ருச‌ம் பெரிய‌ அதிர்ச்சி, அடுத்த‌ ப‌ட‌ம் ட்ராப் ஆன‌து. அதுக்க‌ப்புற‌ம் நான் இது ப‌த்தி ஃபாலோ ப‌ண்ண‌வே இல்ல‌. ரெண்டு நாள் முன்னால‌ இந்த‌ ப‌திவு எழுத‌லாம்னு தோணின‌ப்ப‌ "என்ன‌த்த‌ எழுதுற‌து, இந்த‌ வ‌ருச‌த்தோட‌ மிக‌ப்பெரிய‌ ஏமாற்ற‌ம் பான்ட் ப‌ட‌ம் இல்லாத‌து"ன்னு ப‌ஞ்ச் வெச்சி முடிக்க‌லாம்னு தோணின‌து. ச‌ரின்னு இது ப‌த்தி எதுக்கும் தேட‌லாமேன்னு தேடின‌ப்ப‌தான் தெரிஞ்ச‌து போன‌ ந‌வ‌ம்ப‌ர்ல‌யே அடுத்த‌ ப‌ட‌ம் அறிவிச்சிட்டாங்க‌ன்னு.

நாலு வ‌ருச‌ம் முன்னால‌ டேனிய‌ல் க்ரைக் ந‌டிச்சி வ‌ந்த‌ ப‌ட‌ம் இந்த‌ சீரிஸோட‌ ரீபூட். முத‌ல்ல‌ ப‌ட‌ம் சுத்த‌மா புடிக்க‌வே இல்லை, ஆனா க‌தை புரிஞ்சிகிட்டு ச‌ப் டைட்டிலோட‌ ப‌ட‌ம் பார்த்த‌ப்ப‌ என்னை ரொம்ப‌ க‌வ‌ர்ந்த‌து. இதுவ‌ரைக்கும் நான் அதிக‌ முறை பார்த்த‌ ப‌ட‌ம்னு கேஸினோ ராய‌லை சொல்ல‌லாம். எத்த‌னை த‌ட‌வை பார்த்தாலும் போர் அடிக்குற‌தில்லை. அடுத்த‌தா வ‌ந்த‌ க்வாண்ட‌ம் ஆஃப் சோல‌ஸ் ஓகேன்ற‌ டைப்தான். இருந்தாலும் இந்த‌ வ‌ருச‌ம் என் எதிர்பார்ப்பு லிஸ்ட்ல‌ இந்த‌ ப‌ட‌த்துக்குதான் முத‌லிட‌ம்னு ச‌ந்தேக‌மே இல்லாம‌ சொல்ல‌ முடியும்.

Skyfall
Release Date : October 26, 2012
Released in - Regular & IMAX screens (IMAX தியேட்ட‌ர்க‌ளில் ரிலீஸ் ஆக‌ப்போகும் முத‌ல் ஜேம்ஸ்பாண்ட் ப‌ட‌ம்)
http://en.wikipedia.org/wiki/Skyfall

5 comments:

said...

என் பிள்ளைகளும் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்களாம்...

said...

வெண்பூ,

எதிர்ப்பார்த்து பார்க்கிறாப்போல தமிழ்ப்படங்கள் வருவதில்லைனு முடிவு செய்திட்டிங்க போல,அதான் ஆங்கிலப்படங்களை எதிர்ப்பார்க்கிறிங்களா :-))

மனச தளரவிடாதிங்க தமிழ்லவும் எதிர்ப்பார்த்து காத்திருக்காப்போல படம் வரும், நான் கல்கியின் பொன்னியின் செல்வன் படம் வருமானு எதிர்ப்பார்க்கிறேன் :-))ஆனால் ரிலீஸ் டேட் தான் எப்போனு தெரியலை!வெண்பூ,

எதிர்ப்பார்த்து பார்க்கிறாப்போல தமிழ்ப்படங்கள் வருவதில்லைனு முடிவு செய்திட்டிங்க போல,அதான் ஆங்கிலப்படங்களை எதிர்ப்பார்க்கிறிங்களா :-))

மனச தளரவிடாதிங்க தமிழ்லவும் எதிர்ப்பார்த்து காத்திருக்காப்போல படம் வரும், நான் கல்கியின் பொன்னியின் செல்வன் படம் வருமானு எதிர்ப்பார்க்கிறேன் :-))ஆனால் ரிலீஸ் டேட் தான் எப்போனு தெரியலை!

said...

@ராஜ‌ராஜேஸ்வ‌ரி
@வ‌வ்வால்

ந‌ன்றி..

said...

துரை,

இங்கிலிபீசு படமெல்லாம் பார்க்குது

said...

பியர்ஸ் பிரஸ்னன் பாத்தே பழகியாச்சு,
இந்த கிரேக்க பாண்டா பாக்க முடியல தல :-(((