Friday, October 21, 2011

துணுக்ஸ் - 2011/10/21

ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது, தமிழ் பதிவர்களுக்கு கூகுள் பஸ் சர்வீஸ் ஆரம்பித்ததும் பதிவுகளின் மீதான நாட்டம் அப்படியே குறைந்துவிட்டது. பஸ் ஆரம்பித்து ஏறத்தாழ ஒன்றரை வருடம் ஆகி இருக்கிறது. இதில் கடந்த ஒரு வருட காலத்தை திரும்பிப் பார்த்தால் மிகச்சில பதிவர்களைத் தவிர பெரும்பாலானோர் பதிவு எழுதுவதை வெகுவாக குறைத்துக் கொண்டனர் அல்லது அடியோடு நிறுத்தி விட்டனர். என் பதிவை எடுத்துப் பார்த்தால் ஏப்ரலுக்குப் பிறகு ஏறத்தாழ ஆறுமாத காலம் எந்த பதிவும் இல்லை.

ஆனால் இந்த காலகட்டத்தில் பஸ்ஸில் முழு வீச்சுடன் இயங்கிக் கொண்டிருந்திருக்கிறேன். என்னைப் போன்றே பலரை பஸ்ஸில் பார்க்க முடிகிறது. இதில் பிரச்சினை என்னவென்றால் பதிவைப் போன்று நீண்டகால சேமிப்பாக (படைப்பு, தகவல், மொக்கை எல்லாவற்றையும்) பஸ்ஸை கொள்ள முடியாது. மிகச்சிறந்த உதாரணம் குசும்பன். பஸ் வந்ததும் அவரது நகைச்சுவை உணர்வு எந்தவிதத்திலும் குறைந்து விடவில்லை, ஆனால் அதை எல்லாம் மீண்டும் பஸ்ஸில் படித்துப் பார்த்து ரசிக்க முடியுமா என்ன?

கார்க்கி, பரிசல்காரன் போன்றவர்கள் ட்விட்டரில் இணைந்து மொக்கை போட்டதும் இதே போன்றே. ரைட்டர் பேயோன் போன்று ட்விட்டர் மூலம் புகழ் பெற்று ட்விட் தொகுக்கப் பெறும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது என்றே நினைக்கிறேன். முடிந்த வரை இனிமேல் பதிவிலும் அவ்வப்போது எழுதலாம் என்று இருக்கிறேன். மற்ற பதிவர்களும் பதிவுகளை எழுதினால் மகிழ்வேன்.

*******

”அமெரிக்காவுல எல்லாம் என்னா சுத்தம் தெரியுமா? நம்ம ஆளுங்களும் இருக்கானுங்களே, எங்க பாத்தாலும் குப்பை போட்டுகிட்டு.. இங்க பாரு எங்க போனாலும் பிச்சைக்காரனுங்க” என்ற ரீதியில் எவனாவது இனிமே பேசினால் அவன் குமட்டுலயே குத்தலாம்.

நான் இங்கே வந்து ஒரு மாதம் ஆகிறது. நம் ஆட்களே பரவாயில்லை எனும்படி இந்த ஊர் ஆட்களின் நடத்தை இருக்கிறது. தெருவில், சாலையில், நடைபாதையில் என்று அங்கிங்கெனாதபடி எங்கும் எந்த நெருடலும் இல்லாமல் எச்சில் துப்புகிறார்கள். பக்கத்தில் எவனாவது இருக்கிறானா இல்லையா என்ற கவலை இன்றி சிகரெட்டை புகைக்கிறார்கள். கொஞ்சம் விலை கம்மியான அபார்ட்மெண்ட்களுக்குச் சென்றால் வித்தியாசமான சிகரெட் நெடி மூக்கை அரிக்கிறது, சாலை ஓர கற்களுக்கு பீர்பாட்டில் அபிஷேகம் எல்லாம் சாதாரணம்.

எல்லாவற்றையும் விட மோசமான விசயம் பிச்சைக்காரர்கள். சாலையில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் “டூ யூ ஹேவ் அ டாலர்?” என்று கேட்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது, இத்தனைக்கும் அவனோ / அவளோ ஓரளவு நாகரிகமாக உடை உடுத்திக்கொண்டு, செல்ஃபோன் எல்லாம் வைத்திருக்கிறார்கள். ஒரே ஒரு முறை ஒருவன் கேட்டது காதில் விழாதது போல நான் நகர்ந்து போக அவன் கெட்ட வார்த்தைகளால் சத்தமாக திட்ட ஆரம்பித்துவிட்டான். நம்மை தாக்கக்கூட தயங்கமாட்டான்கள் என்பதால் இப்போதெல்லாம் ஒரு டாலர் நோட்டு சட்டைப்பையில் இல்லாமல் வெளியில் வருவதில்லை.

நான்கு வருடங்களுக்கு முன் பஃபல்லோவில் இருந்ததற்கும் இப்போது இங்கே நாஷ்வில்லில் இருப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாட்டை உணர முடிகிறது

அமெரிக்கா சார்.. அமெரிக்கா...

******

டென்னஸி மாகாணத்தின் தலைநகரான நாஸ்வில் நகரம் “ம்யூசிக் சிட்டி” என்றழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் திரும்பிய பக்கமெல்லாம் இசை, இசை, இசை.. கண்ட்ரி ம்யூசிக் என்று இவர்கள் அழைக்கும் இவர்களின் நாட்டுப்புற இசை இங்கே பிரபலம். இசைக்கான பெரிய ம்யூசியம், இசை மகான்கள் குறித்த குறிப்புகளுடன் “வாக் ஆஃப் ஃபேம்”, ஆங்காங்கே தெருவில் சின்ன சின்ன ஸ்பீக்கர்களை வைத்து எஃப் எம்மில் இசை ஒலிபரப்பு என்று அருமையான உணர்வைக் கொடுக்கிறார்கள்.

ஒருமுறை டாக்ஸியில் போய்க்கொண்டிருந்தபோது ட்ரைவரிடம் “எஃப் எம்ல உங்க கண்ட்ரி ம்யூசிக் போட முடியுமா?” என்று கேட்க, “தாரளமா, ஆனா உங்களுக்கு புடிக்காது” என்றார். “ஏன்”என்று கேட்க அவர் சொன்ன பதில் “நீங்க இந்தியர்கள்தானே, இந்த ம்யூசிக்ல பெரும்பாலும் ஒரு மாதிரி சோகமாவே இருக்கும், நாய் செத்து போச்சி, பொண்டாட்டி ஓடிப்போயிட்டா.. இப்படி, இந்தியர்களுக்கு இது அதிகமா புடிக்கறதில்லை” என்றார். சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஆனால் பாடலைக் கேட்டதும் அவர் சொன்னது சரி என்று உணர்ந்தாலும் அவர் சொன்ன காரணம் தவறென்று தோன்றியது. பின்ன என்னங்க? இங்கிலீஷ் படத்தை சப்டைட்டிலோட பாத்தாலே புரியாதவங்க நாம, வெள்ளைக்காரனோட மீட்டிங்ல பேசுறப்ப பாதி புரிஞ்சி பாதி புரியாம தலைய ஆட்டிட்டு வந்து ஆஃப்ஷோர் மக்களோட உசுர எடுக்குற நமக்கு அவனுங்க உச்சஸ்தாயில அதிரடி ம்யூசிக்குக்கு நடுவுல பாடுற பாட்டு புரிஞ்சிடுமா என்ன? :)

25 comments:

said...

முதல் முறைவாசல் பண்ணியாச்சு . மொய் அனுப்பவும்

said...

ரெண்டாவது மொறவாசல்

said...

அமெரிக்கா பற்றிய என் கனிப்பு போகாமலேயே மிகச்சரியாக கணித்து இருக்கின்றேன். நன்றாக இருந்தது தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்... என் பதிவின் முதல் பின்னுட்டகாரரை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்...??

said...

@ஜாக்கி, அமெரிக்காவின் எல்லா ஏரியாவும் இப்படி இருப்பதா தெரியலை.. ஆனா இப்படிப்பட்ட ஏரியாக்களும் இருக்குங்குறதுதான் உண்மை...

@விஜி, @அப்துல்லா... நீங்க எல்லாம் ஏன் இன்னும் பிரபல பதிவர் ஆகலைன்னு மூணாவது பின்னூட்டத்தைப் பாத்தாவது தெரிஞ்சிக்கோங்க.. :))))

said...

உங்கள் எழுத்தின்
நகைசுவை -அபாரம் !
வாழ்த்துக்கள் ....
நிரம்ப எழுதுங்கள் ...
அன்புடன்
யானைக்குட்டி

said...

உங்கள் எழுத்தின் நகைசுவை -அபாரம் !
வாழ்த்துக்கள் ....
நிரம்ப எழுதுங்கள் ...
அன்புடன்
யானைக்குட்டி

said...

நன்றி ஞானேந்திரன்...

said...

பஸ் பற்றி நீங்கள் சொன்னதை முழுமையாக வழிமொழிகிறேன். நமக்கு ஆபிசில் பஸ் பாக்க முடியாது. இதனாலேயே பஸ் பிடிக்கிறதில்லை :)))

நான் சாப்ட்வேர் சைடில் இல்லை. ஆனால் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்கள் பெயரும் ரொம்பவே அத்துப்படி. எங்கள் கம்பெனிக்கு அனைத்து மாநிலங்களிலும் லைசன்ஸ் register/ renew செய்ய வேண்டி உள்ளதால்.

அமெரிக்காவின் மறுபக்கம் சுவாரஸ்யம் தொடர்ந்து எழுதுங்கள்

said...

நீங்க அமெரிக்காலயா இருக்கீங்க. நான் மெட்ராஸ்ல இருக்கீங்கன்னு இவ்வளவு நாளா நினைச்சிட்டு இருக்கேன்.

said...

நியூயார்க் சொர்க்கம்யா.. :))

said...

ஹாய் வெண்பூ

said...

அமெரிக்காலயும் இந்த மாதிரி ஊர் இருக்கா... அப்பாடா... கேட்கவே நல்லா இருக்கு...

//இங்கிலீஷ் படத்தை சப்டைட்டிலோட பாத்தாலே புரியாதவங்க நாம//

உண்மை உண்மை.. பாதி படம் புரியாது...

நாய் செத்த துக்கெல்லாம் பாட்டா..
என்ன கொடுமை சார் இது..?

said...

@மோகன்குமார்.. நன்றி.. தொடர்ந்து எழுதுறதுதான் திட்டம்.. பாக்கலாம். :)

@உலகநாதன் சார்... நான் இவ்வளவு நாளா சென்னையிலதான் இருந்தேன். இப்பதான் ஒரு மாசமா இங்க..

@முகிலன்: நானும் இதேத்தான் நினைச்சிட்டு இருக்கேன். நியூயார்க் ஸ்டேட்டுக்கும் இங்கக்கும் ஏணி வெச்சாலும் எட்டாது...

@ரமேஷ் வைத்யா: வணக்கம்ணே...

@ஸ்வர்ணரேக்கா... அமெரிக்கர்களுக்கு பெட் அனிமல்ஸ் ரொம்ப உயிர்.. அதையும் குடும்பத்துல ஒருத்தர் மாதிரி நடத்துவாங்க...

said...

Nice :)Thanks for sharing. Keep more coming up !

said...

வெண்பூ!,

//ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது, தமிழ் பதிவர்களுக்கு கூகுள் பஸ் சர்வீஸ் ஆரம்பித்ததும் பதிவுகளின் மீதான நாட்டம் அப்படியே குறைந்துவிட்டது. பஸ் ஆரம்பித்து ஏறத்தாழ ஒன்றரை வருடம் ஆகி இருக்கிறது. இதில் கடந்த ஒரு வருட காலத்தை திரும்பிப் பார்த்தால் மிகச்சில பதிவர்களைத் தவிர பெரும்பாலானோர் பதிவு எழுதுவதை வெகுவாக குறைத்துக் கொண்டனர்//

எனக்கு தெனாலி ராமன் கதை தான் நியாபகம் வருது!ஆமாம் நீங்க சொன்ன பஸ் எந்த பஸ் ஸ்டாண்டுல நிக்கும்? பஸ் பாஸ் செல்லுபடியாகுமா> மஞ்ச போர்ட் அல்லது வெள்ளைப்போர்டு? டீலக்ஸ், அல்லது எக்ஸ்பிரஸ்ஸா?

//”அமெரிக்காவுல எல்லாம் என்னா சுத்தம் தெரியுமா? நம்ம ஆளுங்களும் இருக்கானுங்களே, எங்க பாத்தாலும் குப்பை போட்டுகிட்டு.. இங்க பாரு எங்க போனாலும் பிச்சைக்காரனுங்க” என்ற ரீதியில் எவனாவது இனிமே பேசினால் அவன் குமட்டுலயே குத்தலாம்.//

ஹி..ஹீ உங்களுக்கு இப்போத்தான் குமட்டில் குத்த ஐடியா வருது, 3-4 வருடம் முன்னரே இதே பதிவுலகில் அமெரிக்காவில என்னா சுத்தம் என்னா சுத்தம்னு பதிவுப்போட்ட ஒருவருக்கு குமட்டில் நான் குத்தி அனுப்பியுள்ளேன்.அங்கே பேக் ஸ்ட்ரீட் பகுதிகளில் எல்லா குப்பையுமே கிடக்கும்!

நீங்கள் சொல்வது போல அங்கும் அசுத்தம் எல்லாம் இருக்கு தான் நம்மாளுங்களுக்கு அதெல்லாம் கண்ணில் தெரிவதில்லை, அல்லது ஒத்துக்கொள்வதில்லை. நீங்கள் நியாஸ்தன் போல தெரியுது உண்மைய சொல்லிட்டிங்க, இதை அங்கே இருந்து ரிடர்ன் ஆகிர மக்களுக்கு சொல்லி அனுப்புங்கோ!

இப்போ கூட வேலை வாய்ப்பின்மைக்கு காரணம் கார்ப்பரேட்கள் தான் என்று வால்ஸ்ட்ரீட் மூட சொல்லி போராட்டம் நடந்துள்ளது. அதெல்லாம் நம்மாட்களுக்கு கண்ணில படாது! 8% வேலை வாய்ப்பின்மையாம் அங்கே.

//ஒருமுறை டாக்ஸியில் போய்க்கொண்டிருந்தபோது ட்ரைவரிடம் “எஃப் எம்ல உங்க கண்ட்ரி ம்யூசிக் போட முடியுமா?” என்று கேட்க, “தாரளமா, ஆனா உங்களுக்கு புடிக்காது” என்றார். “ஏன்”என்று கேட்க அவர் சொன்ன பதில் “நீங்க இந்தியர்கள்தானே, இந்த ம்யூசிக்ல பெரும்பாலும் ஒரு மாதிரி சோகமாவே இருக்கும், நாய் செத்து போச்சி, பொண்டாட்டி ஓடிப்போயிட்டா.. இப்படி, இந்தியர்களுக்கு இது அதிகமா புடிக்கறதில்லை” என்றார். சிரிப்பை அடக்க முடியவில்லை.//

நம்ம ஊரு நாட்டுப்புற பாட்டெல்லாம் கேட்டு இருப்பிங்களோ? இங்கேயும் பொண்டாட்டி செத்துட்டா , ஏன் பொண்டட்டி ஓடிப்போயிட்டாவுக்குலாம் பாட்டு இருக்கு. கானாப்பாட்டெல்லாம் கேட்டுப்பாருங்க எல்லா சிச்சுவேஷனுக்கும் பாட்டு இருக்கு. ஹி..ஹி இதெல்லாம் கேட்டா ரசமட்டம்னு நினைப்பாங்களோனு குழாப்போட்ட சீமான்கள் கேட்பதில்லை!

நான் முன்னர் "மீச வச்ச பேராண்டி ஏன் பொண்ணு மேல ஆச வச்சனு ..."பரவை முனிம்மா பாட்ட ரிங் டோனாக வைத்தேன் எல்லாம் என்னை ஜந்துவைப் பார்ப்பது போல பார்த்தார்கள்! எவனோ ரிங்க் டோன் வச்சு ஒருத்தன் கேரக்டர் சொல்லலாம்னு சொல்லி வச்சுப்புட்டு போய்டான்(அல்லது தமன்னா எபெக்டோ)

//நான்கு வருடங்களுக்கு முன் பஃபல்லோவில் இருந்ததற்கும் இப்போது இங்கே நாஷ்வில்லில் இருப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாட்டை உணர முடிகிறது//

பபெல்லோவில் இருக்கையில் " வடுகப்பட்டி அய்யாத்துரை வாராண்டி கதவை தொற எறுமை மாட்டு மேல ஏறி வறான் ரோட்டு மேலனு பாடிக்கொண்டு இருந்தீர்களோ... ஹி..ஹி! டமாசு!

said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

said...

வெண்பூ அடிச்சு ஆடுங்க

said...

பதிவுகள் தான் காலப்பெட்டகமாக இருக்கும். பஸ்கள் மொத்த சாட் சேவை .
பதிவர்களுக்கான படைப்பாற்றல் பஸ் வந்த பிறகு அழிந்தே போகிறது..

எழுதுங்கள் வெண்பூ, பதிவுகள் வாயிலாக..

said...

@கார்த்திக் பாலா.. நன்றி

@வவ்வால்... எவ்ளோ பெரிய பின்னூட்டம்... நன்றி நன்றி நன்றி.. :)

@முரளி.. ஆடிடுவோம், காசா பணமா :)

@காவேரிகணேஷ்.. தொடர்ந்து எழுதணும்கிறதுதான் ப்ளான்.. பாக்கலாம்.

said...
This comment has been removed by the author.
said...

ஐ வெண்பூ அண்ணா :)))

said...

ஐ! பார்ட்னர்.............!!!

said...

Welcome back...

said...

நீங்க எழுதியது ரொம்ப சரி.கூகுள்
பஸ்-ம் ட்வீடரும் வந்த பின் பதிவர்கள் நிறையபேர் ப்ளாக் எழுதுவது குறைந்து
விட்டது.தொடர்ந்து எழுதுங்கள்.

said...

நீங்க சொன்ன மாதிரியே நன்றி என்ற வார்த்தையை எழுதிவிட்டு நகர்கின்றேன்.
பஸ்ஸில் பகிர்ந்துள்ளேன்.