Monday, October 5, 2009

மரண மொக்கை ஃப்ரம் டான் பிரவுன்

டான் பிரவுன் (DAN BROWN)... பெயரைச் சொன்னவுடனே நம் நினைவுக்கு வரும் டாவின்சி கோட் மற்றும் ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ் நாவல்கள். அதைத்தவிர‌ அவர் இன்னும் இரண்டு நாவல்கள் (டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் மற்றும் டிசப்ஷன் பாய்ண்ட்) எழுதியிருந்தாலும் அவரை உலகப்புகழ்ப் பெற வைத்தது டாவின்சி கோட் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.

டாவின்சி கோட் வெளிவந்து ஏறத்தாழ ஆறு வருடங்கள் கழித்து வெளிவந்திருக்கும் அவரது அடுத்த நாவல் இன்னும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. சுமார் ஐந்து வருடங்கள் டான் பிரவுன் ஆராய்ச்சி செய்து "தி சாலமன் கீ" என்ற பெயரில் எழுத ஆரம்பித்த இந்த நாவல் "தி லாஸ்ட் சிம்பல் (The Lost Symbol)" என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

டான் பிரவுனின் எழுத்துகளின் பலமே வரலாறின் மறைக்கப்பட்ட பக்கங்க‌ளை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் மூலம் வெளிக்கொண்டு வருவதுதான். ஏஞ்சல்ஸ் & டீமன்ஸில் நாம் அதிகம் அறிந்திராத சர்ச் வெர்சஸ் சயின்ஸ் (Church Vs Science) பற்றியும், டாவின்சி கோடில் ஏசுநாதர் திருமாணமானவர் என்பது பற்றியும் எழுதியிருந்ததும் அந்த நாவல்கள் பெருமளவு பேசப்படக் காரணமாக அமைந்தன.

லாஸ்ட் சிம்பல் கதையிலும் ஹீரோ முதல் சொன்ன இரண்டு கதைகளில் வந்த ராபர்ட் லாங்டன் (Robert Longdon). ஹார்வேர்ட் பல்கலைகழகத்தில் ப்ரொஃபசராக இருக்கும் புகழ் பெற்ற சிம்பாலஜிஸ்ட். தன் பணக்கார நண்பரான பீட்டர் சாலமன் அழைப்பின் பேரில் வாஷிங்டனில் ஒரு உரை நிகழ்த்தச் செல்லும் லாங்டன் அங்கு சென்றபின் அந்த அழைப்பே ஒரு பொய் என்பதை அறிகிறார்.

ஃப்ரீமேசன்ஸ் (Freemasons) என்ற அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவரது நண்பரை கடத்தியிருக்கும் வில்லன், ஃப்ரீமேசன்ஸ் நூற்றாண்டுகளாக பாதுகாத்து வரும் ரகசியத்தை கண்டுபிடிக்க லாங்டன் உதவி செய்தால் அவரை விடுவிப்பதாகச் சொல்கிறான். இதற்கிடையே அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு உதவ வேண்டும் என்றும் கூறிக்கொண்டு சி.ஐ.ஏ.வின் முக்கிய அதிகாரி ஒருவரும் லாங்டனை நெருக்க, அவர்களிடமிருந்து தப்பிக்க, சி.ஐ.ஏ.வின் துரத்தல்களுக்கு நடுவே பீட்டர் சாலமனின் தங்கையுடன் வாஷிங்டன் நகரில் தப்பி ஓடும் லாங்டன் ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறாரா, அவரது நண்பர் மீட்கப்பட்டாரா, வில்லன் என்ன ஆனான், அது என்ன ஃப்ரீமேசன்ஸ் ரகசியம் என்பதை சொல்லும் கதைதான் "லாஸ்ட் சிம்பல்".

கதைச்சுருக்கம் அருமையாகத் தெரிந்தாலும், கதை கொஞ்சமல்ல நிறையவே இழுவை. ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான அத்தனை அம்சங்களும் இருக்கும் கதையில் (முக்கியமாக கதை முழுவதும் 12 மணிநேரத்திற்குள் நடக்கிறது) டான் பிரவுன் முடிந்தவரை சொதப்பியிருக்கிறார்.

ராபர்ட் லாங்டனின் மற்ற நாவல்களைப்போல அழுத்தமான காரணம் இந்த கதையில் இல்லை. ஏஞ்சல்ஸ் & டீமன் கதையில் புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க உலகின் அனைத்து கார்டினல்களும் வாடிகனில் கூடியிருக்க அந்த இடத்தில் அணுகுண்டிற்கு இணையான அழிவை ஏற்படுத்தும் குண்டு வைக்கப்பட்டிருக்கும். ஒருவேளை அது வெடித்தால் கிறித்துவ மதத்திற்கே அது ஒரு பேரிழப்பாக இருக்கும். அதை லாங்டன் முறியடிக்க ஒவ்வொரு சர்ச்சாக அவர் செல்லும்போது நமக்கும் அந்த பரபரப்பு இருக்கும்.

அதே போல் டாவின்சி கோட் நாவலிலும் ப்ரையாரி ஆஃப் சயின் குழுவால் பாதுகாக்கப்படும் "ஏசு திருமணமானவர்" என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்தால் கிறித்துவ மத நம்பிக்கை அசைக்கப்படும். அந்த சூழ்நிலையில் நடக்கும் கதையும் நம்மை பரபரக்க வைக்கும்.

அதுபோன்ற எந்த அழுத்தமான காரணமும் இதில் இல்லை. சி.ஐ.ஏ. வருவதற்கு அவர்கள் கூறும் காரணமே கதை 80% போனபின்தான் சொல்லப்படுகிறது. அதுவரை "எதுக்குதான் அவனுங்க வந்திருக்காங்க? சொல்லித் தொலையுமைய்யா" என்று சலிப்புதான் தோன்றுகிறது. அதன்பின் அவர்கள் சொல்லும் காரணமும் சப்பையாக இருப்பது ஏமாற்றத்தின் உச்சகட்டம்.

அதைவிட பெரிய ஏமாற்றம், கதையின் முடிவு நடைபெறும் இடத்தை "விண்ணை முட்டும் பிரமிட்" என்று கதையின் ஆரம்பத்தில் லாங்டன் தேட ஆரம்பிக்கும்போதே நம்மால் யூகிக்க முடிவதுதான். ஓரளவு வாஷிங்டன் டிசி நகரத்தைப் பற்றி தெரிந்தாலே "பெரிய பிரமிட், விண்ணை முட்டும் கல்" என்ற விளக்கங்களுக்கு பொருந்தும் கட்டிடத்தை உங்களால் யூகிக்க முடிவதும், கதையின் முடிவில் அதே இடத்தில் ஃப்ரீமேசன்ஸ் ரகசியம் இருப்பதையும் படித்தால் "வாஷிங்டனைப் பாக்காத எனக்கே தெரியுது, எல்லாம் தெரிஞ்ச லாங்டனுக்கு இதைக் கண்டுபிடிக்க 500 பக்கமா?" என்ற சலிப்பே ஏற்படுகிறது.

எல்லாவற்றையும் விட, ஃப்ரீமேசன்ஸ் ரகசியமாக பாதுகாத்து வரும் அற்புதம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது என்ற அவநம்பிக்கையுடனேயே கடைசி அத்தியாயம் வரை லாங்டன் செல்ல்லும்போது அவருடன் செல்லும் நம்மை ஈர்க்காமல் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

படமாக வந்தாலும் இந்த கதை வெற்றிபெறப்போவது இல்லை. காரணம் கதையும் நடக்கும் இடமான வாஷிங்டன் டிசியும், வெற்றிப்படமான நேஷனல் டிரசர் முதல் பாகத்தின் ரீமேக் போல் இருக்கும்.மொத்தத்தில் என்னைப் பொறுத்தவரை ஆறு வருடங்கள் கழித்து டான் பிரவுன் பெரிய அளவில் ஏமாற்றியிருக்கிறார் என்றே சொல்வேன்.

இது டான் பிரவுனின் ஐந்தாவது புத்தகம். காலவரிசையில் மட்டுமல்ல, தரவரிசையிலும் கூட‌.

19 comments:

Anonymous said...

இந்த புத்தகம் கடைகள்ல பாத்தேன். சேல் போடுவான் அப்ப வாங்கிக்கலாம்னு விட்டாச்சு.
லேங்டன் ஒரு ப்ரொபசர் டான் பிரவுனுக்கு உதவியிருக்கார். அவருக்கு நன்றி சொல்லும் விதமாத்தான் ராபர்ட் லேங்டன் பெயர் வந்துச்சு.

said...

சூப்பர் இடுகை... ஃப்ரம் வெண்பூ !!!!

said...

"ஆறு வருடங்கள் கழித்து டான் பிரவுன் பெரிய அளவில் ஏமாற்றியிருக்கிறார்"

தகவலுக்கு நன்றி.

said...

Mahesh said...
சூப்பர் இடுகை... ஃப்ரம் வெண்பூ !!
//

இங்க்லீஸ் படிக்கிற பயபுள்ளைக.. இவுங்களோடு இனி சேரப்பிடாதுபா..

said...

ஏமாற்றம் டான் பிரவுன் எழுதினதில் இல்லை.முந்தைய கதைகளை வைத்து, எக்கச்சக்கமாக எதிர்பார்த்துப் படிக்க ஆரம்பிப்பதில் வரும் கோளாறு இது!

said...

வாங்க சின்ன அம்மணி.. சேல் போட்டாலும் அவசரப்படாம பொறுமையா வாங்கலாம். லாங்டன் பத்தி உங்க செய்தி எனக்கு புதுசு, நன்றி..

வாங்க மஹேஷ்.. பாராட்டுக்கு நன்றி.

வாங்க மாதேவி.. வருகைக்கு நன்றி..

வாங்க ஆதி.. உங்க அளவுக்கு படிப்பாளியா இல்லைன்னாலும் நானும் கொஞ்சம் கொஞ்சம் படிக்கிறவன்னு வேற எப்படித்தான் காட்டுறதாம்?? :)))

said...

வாங்க கிருஷ்ணமூர்த்தி.. நீங்க சொல்றது ரொம்ப சரி. ஆனா அந்த எதிர்பார்ப்பை கிளப்புறது அவங்களேதானே. டாவின்சி கோடுக்கு அடுத்ததா வர்ற புத்தகத்துல இது மாதிரி எதிர்பார்ப்புகள் தவறில்லையே. அந்த எதிர்பார்ப்பு இருந்ததாலதானே முதல் பிரிண்டே 6.5 மில்லியன் ஆகுது. நம்ம எதிர்பார்ப்பை அவங்க காசாக்கும்போது, அதை பூர்த்தி செய்யுற கடமையும் அவங்களுக்கு இருக்குன்னு நான் நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

said...

டமில்லே இந்த புத்தகம் எப்போ வரும்ணே?

said...

Recently I bought this book, I am reading ..Last two line s nach

said...

வெண்பூ பதிவு போடணுமின்னா கமல்ஹாசன், டான் பிரவுன் மாதிரி ஆளுங்க்ளோட படைப்பு வெளியாகணும் போலையே?

said...

வாங்க ச்சின்னப்பையன்.. இங்கிலீஸ்லயே படிக்க முடியலன்னு சொல்றேன், தமிழ்ல வேற கேக்குறீங்க??? ஏன்னு தெரியல, டா வின்சி கோட் மாதிரி ரொம்ப பிரபலமான புத்தகங்களே தமிழில் இன்னும் மொழிபெயர்க்கப்படலை. நாம ஆரம்பிப்போமா? :)

வாங்க அக்னிப்பார்வை.. பாராட்டுக்கு நன்றி. புக்கை படிச்சி முடிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க.

ஆஹா.. வாங்க முரளிகண்ணன்.. லாங் டைம் நோ சீ.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

/நம்ம எதிர்பார்ப்பை அவங்க காசாக்கும்போது, அதை பூர்த்தி செய்யுற கடமையும்/

இந்த இடத்துல தான் பிரச்சினையே வருது. ஏற்கெனெவே நாம் ஒரு மாதிரி கற்பனை செய்து வைத்திருக்கும் எதிர்பார்ப்பின்படி இல்லையென்றால், உடனே வருவது ஏமாற்றம் தான் இல்லையா?

இந்தப் புத்தகம் கைக்கு வந்தாயிற்று. ஆனால், படிக்க ஆரம்பிக்கவில்லை. இவரது புத்தகங்கள்,மற்ற எல்லாவற்றையும் படித்த அனுபவத்தில் தான் சொல்கிறேன், எதையும் கொஞ்சம் திறந்த மனதோடு,
கதைக்களமாக எடுத்துக் கொண்டிருப்பதைக் கொஞ்சம் புரிந்து கொள்கிற விதத்தில் படிக்க ஆரம்பித்தால் இத்தனை ஏமாற்றம் இருக்காது.

எடுத்துக் கொண்ட கதைக் களத்தை, ஏகப்பட்ட ஆராய்ச்சிக் குறிப்புக்களின் அடிப்படையில், ஒரு புதினமாகச் சொல்ல முனைந்திருக்கிறார். அடுத்தடுத்து ஒரே மாதிரிப் பார்க்க, படிக்க நேரிடும்போது இந்த மாதிரி சலிப்பு ஏற்படுவது இயற்கைதான்.

கொஞ்ச நாள் கழித்து நிதானமாக இன்னொருதரம் படித்துப்பாருங்கள், நிச்சயமாக, வேறு விதமாக உணர்வீர்கள்!

said...

மறுவருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி கிருஷ்ணமூர்த்தி.. புத்தகத்தைப் படித்துவிட்டு உங்கள் விமர்சனத்தையும் சொல்லுங்கள்.

said...

நேற்றுமுதல் தினம் தான் இதை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். கொஞ்சம் மொக்கை தான்!

என்னுடைய ஒப்புதல் வாக்குமூலம் இங்கே பதிவாக:

http://consenttobenothing.blogspot.com/2009/10/blog-post_17.html

said...

வாங்க கிருஷ்ணமூர்த்தி.. சொன்ன மாதிரியே விமர்சனம் போட்டுட்டீங்க, படிச்சிட்டு பின்னூட்டமும் போட்டாச்சு.. நன்றி..

said...

பதிவு போட்டு எங்களை எல்லாம் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றிங்க வெண்பூ....

said...

முதல் வருகைக்கு நன்றி ஸ்வர்ணரேக்கா. யான் பெற்ற துன்பம் வேற யாரும் பட வேணாம்னுதான் இந்த பதிவே.. :)

said...

எனது முதல் வருகையே நன்றி சொல்லத்தான்,வெண்பூ.

ரொம்ப நாள் தள்ளிப் போன டான் ப்ரௌனை இனி ஆர அமரப் படித்தால் போதும் என்றாக்கியதற்கு நன்றி.

நேரத்தையும்,ஏமாற்றத்தையும் ஒருசேரக் காத்தருளி இருக்கிறீர்கள்.மகிழ்ச்சி.

said...

வாங்க ஷண்முகப்பிரியன்.. வருகைக்கும் நன்றிக்கும் நன்றி.. மேலே பதிவர் கிருஷ்ணமூர்த்தி கொடுத்திருக்கும் லிங்க்கில் அவரது விமர்சனத்தையும் படித்துவிடுங்கள்.. அவருக்கும் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.

அதே நேரம், ஆற அமர அவசரமில்லாமல் ஒரு முறை இந்த புத்தகத்தைப் படிக்கலாம்.