Monday, February 16, 2009

நினைவுகளை மீட்டெடுத்த‌ விப‌த்து

விபத்துகள்... இன்றைய இயந்திர உலகின் தவிர்க்க முடியாமல் போன அம்சம். ஒருத்தர் செத்தால் சாவு, நூறு பேர் செத்தால் புள்ளிவிவரம் என்று சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் ஒரு சில விபத்துகள் நம்மை உலுக்கும், ஒரு சில நம் பழைய நினைவுகளை கிளறும். இந்த வாரம் 50 பேரை பலிகொண்ட அமெரிக்காவில் நடந்த விமான விபத்தும் என்னை கொஞ்சம் பாதித்தது உண்மை, காரணம்... விபத்து நடந்த இடம்.. நியூயார்க் மாநிலத்தின் பஃபலோ நகரம் (Buffalo). என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒன்றரை வருடங்களை கழித்த இடம்.

முதல் வெளிநாட்டுப் பயணம், கேரியர் கிராஃப் 90 டிகிரியில் ஏறிய காலகட்டம், எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நான் நானாக இருந்த / இருக்கவிட்ட‌ சூழல், தங்கமணியுடன் பூசல்களே இல்லாமல் இருந்த நாட்கள் (அ) மாதங்கள், முதல் குழந்தையின் முதல் விநாடிகளும் முதல் ஸ்பரிசமும், முதல் கார், அளவில்லாத பயணங்கள் என்று என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை பஃபல்லோ எனக்கு அளித்தது என்றால் மிகையில்லை.

***

புவியியல் ரீதியாக பஃபல்லோ அமைந்திருக்கும் இடமும் அதன் முக்கியத்துவத்துக்கு ஒரு காரணம். உலகின் மிகப்பெரிய அருவி + உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றான நயாகாரா அருவியின் மிக அருகில் உள்ள பெரிய நகரம். நியூயார்க் மாகாணத்தின் மேற்கு எல்லையில் நியூயார்க் நகரில் இருந்து 8 மணி நேர தொலைவில் இருந்தாலும், நயாகராவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் வந்து இறங்க வேண்டிய விமான நிலையம் பஃபல்லோ நயாகரா சர்வதேச விமான நிலையம்தான். எழுத்தாளர் சுஜாதா கூட தனது நயாகரா பயண அனுபவங்களில் இங்கே தங்கியிருப்பதை குறிப்பிட்டிருப்பார்.

நியூயார்க், நேவார்க், டெட்ராய்ட், வாஷிங்டன், சிகாகோ என்று எல்லா பெரிய நகரங்களில் இருந்தும் வரும் விமானங்கள் சுற்றுலா பயணிகளாலும், புகழ்பெற்ற பஃபல்லோ பல்கலைக்கழக மாணவர்களாலும் நிரம்பி வழியும். நயாகராவின் பிரமாண்டத்தை ரசிக்கவும், தன் மேல் படிப்புக்கான ஆர்வத்துடனும் பயணம் செய்த எத்தனை பேர் இந்த விபத்தில் இறந்திருப்பார்கள் என்று நினைக்கவே மனம் பதறுகிறது.

விபத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?

இன்று உலகம் முழுதும் கிடைக்கும் ப‌ஃபல்லோ சிக்கன் விங்ஸ், நியூயார்க் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரம், நயாகரா நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் இருக்கும் அமெரிக்க நகரம், பஃபல்லோ பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மிக அதிகமான எண்ணைக் கொண்ட நெடுஞ்சாலை (I 990) என்று பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் இந்த நகரின் இன்னொரு பிரபலமான‌ அடையாளம் குளிர்.

நான் முதல் முதலில் அங்கே சென்றபோது வெயில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்க, எங்கு நோக்கினும் சாலை பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. என் கிளையண்டிடம் கேட்க, அவர் சிரித்துக் கொண்டே, "ஒரு வருசத்தோட நான்கு சீசன்ஸ் என்னன்னு தெரியுமா" என்று கேட்க, "ஏன் தெரியாமல், சம்மர், ஃபால், வின்ட்டர், ஸ்ப்ரிங்" என்றேன். "அது மத்த ஏரியாக்களுக்கு, இந்த ஏரியாவை பொறுத்தவரைக்கும், அல்மோஸ்ட் வின்ட்டர், வின்ட்டர், ஸ்டில் வின்ட்டர், கன்ஷ்ட்ரக்ஷன்" என்றார். பனி இல்லாத 5 மாதங்களை அடுத்து வரும் பனிக்காலத்திற்கு தயார் படுத்திக் கொள்ள உபயோகப்படுத்திக் கொள்ளும் அவர்களின் அறிவு இந்தியனான என்னை ஆச்சர்யப்படுத்தியதில் வியப்பில்லை.

அமெரிக்காவின் 5 பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றான எர்ரீ ஏரியின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் இந்த நகரில் வருடத்தின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டிருக்கும். சமயத்தில் மைனஸ் 20 டிகிரி ஃபார்ன்ஹீட் வரைகூட வெப்பநிலை செல்லும் என்றால் புரிந்து கொள்ள முடியும்.

இந்த விபத்திற்கும் காரணம் விமானத்தின் இறக்கைகளில் பனி உறைந்தது காரணமாக இருக்கலாம் என்று வரும் செய்திகளை படிக்கும்போது பனிப்பொழிவில் இரண்டு மூன்று அடி பனிகுவியலுக்குள் சிக்கிக் கிடக்கும் காரும், அதை சரி செய்ய ஐஸ் ஸ்கார்ப்பர், டீ ஐசிங் உப்பு, நான்‍ஃப்ரீஸ் வின்ஷீல்ட் வாட்டர் என்று ஒவ்வொரு கார் ஓனரும் தயாராய் இருக்க, விமானத்திற்கு எவ்வளவு முன்னேற்பாடுகள் தேவைப்பட்டிருக்கும், அதில் யார் செய்யத்தவறிய ஒன்றால் விபத்து ஏற்பட்டது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

எப்படியோ, 50 பேரை பலி கொண்ட இந்த விபத்து என் பசுமையான நினைவுகளை மீட்டெடுத்தது என்று சொல்லலாம்..

ஐ மிஸ் யூ பஃபல்லோ..

57 comments:

Anonymous said...

நல்ல நினைவுப் பகிர்வு வெண்பூ.

said...

சுத்துங்க.. சுத்துங்க..

said...

உங்கள ஒரு வரியா delete பண்ண சொன்னா என் பின்னூட்டத்தையே delete பண்ணிடீங்க,ஏன்???

said...

ம்ம், வருத்தமாகத் தான் இருக்கும்.

மற்றபடி நல்ல பதிவு. அமெரிக்க வாழ்க்கையை ஒரு மூன்று/நாலு பதிவுகளாகப் போடலாமே!

அனுஜன்யா

said...

//இன்றைய இயந்திர உலகின் தவிர்க்க முடியாமல் போன அம்சம். ஒருத்தர் செத்தால் சாவு, நூறு பேர் செத்தால் புள்ளிவிவரம் என்று சொல்வது //

:(((((((((

said...

இப்போதைக்கு விமானம் ஆட்டோ பைலட்டில் இருந்ததாக செய்தி வந்துள்ளது.வெள்ளை அறிக்கை வரும் போது விபரங்கள் தெரியக்கூடும்.

said...

அப்போ எடுத்த படங்கள்ல இன்னும் அழகா இருக்கீங்க.

said...

மீட்டெடுத்து ஒரு நல்ல பதிவு குடுத்திருக்கீங்க...
@ வடுவூர்குமார்
அது என்ன ஆட்டோபைலட்லயா அய்யோ ...

said...

இறந்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் :(

said...

//நயாகராவின் பிரமாண்டத்தை ரசிக்கவும் //

எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நமீதாவோட பிரம்மாண்டத்த இரசிக்கிறதுதான் :)))

said...

நாங்க நயாகரா போகும்போதும் அந்த ஊர் வழியாத்தான் போனோம்... இந்தியாவில் இந்த செய்தி பரவுனது மாதிரி இங்க ஏனோ பரவல.. ஊர்ல இருந்து ஃபோன் பண்ணி என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது.. :((

said...

ஒரு சோக சம்பவத்தால், வேறு பல இனிய நிகழ்வுகளை நினைவுகூர்ந்துள்ளீர்கள். முரண். அந்த புரொபைல் போட்டோவில் இருப்பது நம்ப வெண்பூதானா? (அட தொப்பை கூட இல்லாமல்..) நானும் கூட யாரோ முதுகுப்புறம் காட்டிக்கொண்டிருப்பதைப்போன்ற நெட்டில் சுட்ட படம்னு நெனைச்சுட்டேன்.

நான் அதிகபட்சமாய் தமிழ்நாட்டைத் தாண்டி ஹைதராபாத் வரைதான் சென்றுள்ளேன்.(இன்னிக்கு சாய்ந்திரம் கிளம்புகிறேன்.. ஹைதராபாத் வாசகர்கள் சந்திக்க விரும்பினால், தோழர் கார்க்கியை அணுகி அப்பாயிண்ட்மென்ட் பெறவும்) அங்கே ஏதாவது பனிவிழும் இடம் இருந்தால் கூறவும். போட்டோ எடுக்கவேண்டும்.

said...

மன்னிக்கவும் பாபு.. நீங்க பின்னூட்டத்தை அழிக்கச் சொன்னதால் அழித்துவிட்டேன். என்னால் ஒரு வரியை மட்டும் மாற்ற முடியாது என்று நினைக்கிறேன்..

said...

வாங்க வேலன் அண்ணாச்சி & கார்க்கி.. வருகைக்கு நன்றி..

said...

வாங்க அனுஜன்யா..

//
மற்றபடி நல்ல பதிவு. அமெரிக்க வாழ்க்கையை ஒரு மூன்று/நாலு பதிவுகளாகப் போடலாமே!
//
கண்டிப்பாக.. அவ்வப்போது மற்ற பதிவுகளுக்கு இடையே இதுவும் வரும்..

said...

வாங்க குசும்பன், வடுவூர்குமார்.

ஐ எல் எஸ் எனப்படும் இன்டக்ரேட்டட் லேண்டிங் சிஸ்டம் இருக்கும் ரன்வேயில் இறங்கும் விமானங்கள் ஆட்டோ பைலட்டில்தான் லேண்ட் ஆகும் என்று நினைக்கிறேன். அதிலும் பனி, மழை போன்ற விசிபிலிட்டி குறைவாக இருக்கும் நேரங்களில் அதுவே பாதுகாப்பானதும்கூட..

said...

//
முரளிகண்ணன் said...
அப்போ எடுத்த படங்கள்ல இன்னும் அழகா இருக்கீங்க.
//

ஹி..ஹி.. சரி சரி.. கூச்சமா இருக்கு முரளி..

said...

//
முத்துலெட்சுமி-கயல்விழி said...
மீட்டெடுத்து ஒரு நல்ல பதிவு குடுத்திருக்கீங்க...
@ வடுவூர்குமார்
அது என்ன ஆட்டோபைலட்லயா அய்யோ ...
//

வாங்க முத்துலெட்சுமி-கயல்விழி.. வருகைக்கு நன்றி..

நான் மேலேயே சொன்ன மாதிரி லேண்டிங் மட்டும் இல்லை பெரும்பாலான நேரங்களில் ஆட்டோ பைலட்தான் சேஃப்.. கிடைத்தால் மைக்கேல் கிரிக்டனின் "AirFrame" படித்துப் பாருங்கள். அருமையாக விளக்கியிருப்பார்..

said...

//
எம்.எம்.அப்துல்லா said...
இறந்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் :(
//

ஆமாம் அப்துல்லா.. ஏறத்தாழ மூன்று வருடம் கழித்து அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கும் கமர்சியல் விமான விபத்து இது, அது பஃபல்லோவில் நடந்தது எனக்கு கூடுதல் சோகம்..

said...

//
எம்.எம்.அப்துல்லா said...
எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நமீதாவோட பிரம்மாண்டத்த இரசிக்கிறதுதான் :)))
//

பிரம்மாண்டத்தின் மறுபெயர் நமீதாதானே.. ஹி..ஹி.. நயாகரால்லாம் எந்த மூலைக்கு..

said...

//
ஜி said...
நாங்க நயாகரா போகும்போதும் அந்த ஊர் வழியாத்தான் போனோம்...
//
அமெரிக்காவின் எந்த பகுதியில இருந்தும் நயாகரா போகும்னா ஒரே வழி ஐ 90தான், அதுல ஈஸ்ட், வெஸ்ட் எதுல வந்தாலும் பஃபல்லோவை தொடாம போக முடியாது. கனடா வழியாக வந்தால் வேண்டுமானால் பஃபல்லோவை மிஸ் செய்வது சாத்தியம்.

//
இந்தியாவில் இந்த செய்தி பரவுனது மாதிரி இங்க ஏனோ பரவல.. ஊர்ல இருந்து ஃபோன் பண்ணி என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது.. :((
//
ஏன்? நானே நிறைய விசயங்கள் சி என் என் சைட்டில்தான் பார்த்தேன்..

said...

வாங்க தாமிரா.. போட்டோவில் இருப்பது நானேதான்.. அப்பவும் கொஞ்சம் தொப்பை இருந்தது, ஆனா போட்டோ எடுக்கும்போது அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம்.. ஹி..ஹி..

முதல் முதல்ல எழுத ஆரம்பிச்சப்ப முகம் காட்டவேணாம்னு நெனச்சதால இந்த போட்டோல முகத்தை மட்டும் கருப்படிச்சி போட்டேன், அதுவேதான் இன்னும் தொடர்கிறது.

ஹைதராபாத்தில் டாங்க் பன்ட் ரோடில் ஸ்நோ வேர்ல்ட் இருக்கிறது. நன்றாக இருக்கும், முயற்சித்துப் பாருங்களேன்..

said...

பத்தாயிரத்துக்கு வாழ்த்துக்கள்

said...

:)))))))))))

said...

.(இன்னிக்கு சாய்ந்திரம் கிளம்புகிறேன்.. ஹைதராபாத் வாசகர்கள் சந்திக்க விரும்பினால், தோழர் கார்க்கியை அணுகி அப்பாயிண்ட்மென்ட் பெறவும்) //
:))))
அங்கே ஏதாவது பனிவிழும் இடம் இருந்தால் கூறவும். போட்டோ எடுக்கவேண்டும்//

tank bund ல் ஸ்நோ சிட்டி இருக்கு தாமிரா... :))))))

said...

டார்டாய்ஸ் கொசுவத்தி தரும் வாசனை கஷ்டம்.

நம் நினைவுகள் தரும் கொசுவத்தி வாசனை இஷ்டம்.

என்ன ஒரு கஷ்டம்னா அது எல்லோருக்கும் தொத்திக்கும். வேற யாருகொசுவத்தி சுத்தறாங்கன்னு பாப்போம்.

அருமையான கொசுவத்தி.

said...

வெண்பூ said...
முதல் முதல்ல எழுத ஆரம்பிச்சப்ப முகம் காட்டவேணாம்னு நெனச்சதால இந்த போட்டோல முகத்தை மட்டும் கருப்படிச்சி போட்டேன், அதுவேதான் இன்னும் தொடர்கிறது.//

ஹி ஹி எங்களுக்கு எல்லாம் இந்த கருப்படிக்கிறவேலையே இருக்காதுங்கோவ்வ்வ்வ்வ்!!! முகத்துக்கு நேரா டார்ச் லைட் அடிச்சாதான் தெரிவோம்!

said...

//
பாபு said...
பத்தாயிரத்துக்கு வாழ்த்துக்கள்
//


வாழ்த்துகளுக்கு நன்றி பாபு..

வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி ஸ்ரீமதி..

said...

வாங்க‌ புதுகைத் தென்றல்.. அட, நம்ம மக்கள் எழுதுறதுல பாதி மொக்கை, பாதி கொசுவத்திதான, அதனால வத்தி எப்பவும் சுத்திகிட்டேதான் இருக்கும்..:)))

said...

//
குசும்பன் said...
ஹி ஹி எங்களுக்கு எல்லாம் இந்த கருப்படிக்கிறவேலையே இருக்காதுங்கோவ்வ்வ்வ்வ்!!! முகத்துக்கு நேரா டார்ச் லைட் அடிச்சாதான் தெரிவோம்!
//

ஹி..ஹி.. இந்த ஃபோட்டோ ஃப்ளாஷ் வெச்சி எடுத்தது, அதனாலதான் கருப்படிக்கிற வேலை.. :)))

said...

// ஐ மிஸ் யூ பஃபல்லோ.. //

அட அதுக்கென்னங்க கம்பனில சொல்லி இனொரு ரவுண்டு போயிட்டு வாங்க.

Anonymous said...

நல்ல பதிவு வெண்பூ.

பஃபல்லோ... ஏதாவது பெயர்க் காரணம்?

said...

நல்ல நினைவுப் பகிர்வு வெண்பூ

said...

//பனி இல்லாத 5 மாதங்களை அடுத்து வரும் பனிக்காலத்திற்கு தயார் படுத்திக் கொள்ள உபயோகப்படுத்திக் கொள்ளும் அவர்களின் அறிவு இந்தியனான என்னை ஆச்சர்யப்படுத்தியதில் வியப்பில்லை//

ஹிஹி.. அந்த பழக்கமே நம்மகிட்டே இல்லீங்கோ....

said...

FrYday the 13th.............

said...

வாங்க கார்த்திக்..

//
கார்த்திக் said...
அட அதுக்கென்னங்க கம்பனில சொல்லி இனொரு ரவுண்டு போயிட்டு வாங்க.
//
ஹி..ஹி.. நாமதான் இப்ப கம்பெனி மாறிட்டமுல்ல..

said...

//
வெயிலான் said...
நல்ல பதிவு வெண்பூ.
//
நன்றி வெயிலான்..

//
பஃபல்லோ... ஏதாவது பெயர்க் காரணம்?
//
இங்கே பாருங்கள்..

said...

//
ச்சின்னப் பையன் said...
//பனி இல்லாத 5 மாதங்களை அடுத்து வரும் பனிக்காலத்திற்கு தயார் படுத்திக் கொள்ள உபயோகப்படுத்திக் கொள்ளும் அவர்களின் அறிவு இந்தியனான என்னை ஆச்சர்யப்படுத்தியதில் வியப்பில்லை//

ஹிஹி.. அந்த பழக்கமே நம்மகிட்டே இல்லீங்கோ....
//

வாங்க ச்சின்னப்பையன்.. அதனாலதான் ஆச்சர்யமாயிடுச்சி..

said...

//
ஆகாயமனிதன்.. said...
FrYday the 13th.............
//

வாங்க ஆகாயமனிதன்.. சரியா சொன்னீங்க.. இதுக்கு முன்னால அங்க நடந்த பெரிய டிஸாஸ்டர்னா அது நாங்க இருக்குறப்ப அடிச்ச அக்டோபர் 12, 13 பனிப்புயல்தான் (2006ம் வருசம்). அதுலயும் 13ம் தேதி வெள்ளிக்கிழமைதான்.. :(

அதுபத்தி இன்னொரு பதிவுல எழுதுறேன்..

said...

நான் ஓர் ஈழத்து தமிழ் பெண். இனம் மதம் மொழி நாடு என்பவற்றை கடந்தது மனிதம். ஒரு உயிரின் மதிப்பும் இழப்பும் உரியவர்களுக்குத்தான் புரியும் என்பதில்லை உங்களுக்கும் எனக்கும் புரிகின்றதே! இதுதான் மனித நேயம் என்பது.
நன்றாக எழுதினீர்கள் தொடர்ந்தும் வருகின்றேன்.

said...

தல, ஃபோட்டோ கலக்கல்..


நான் நெவார்க் ஏர்போர்ட் வரைக்கும் போயிருக்கேன். ஆனா ஃபஃபலோ போனதில்லை.. :)

said...

படங்கள் அருமை.
உங்கள் பதிவும்தான் என்பதை சொல்ல வேண்டுமா என்ன?
அனுபவ பகிர்தலுக்கு நன்றி.

said...

வாங்க பூபதி.. இனம், மதம், தேசம் இப்படி எந்த வேறுபாடும் இல்லாமல் கண்டிப்பா உயிரின் மதிப்பு ஒன்றேதான்.. உங்கள் மனதில் இருப்பது புரிகிறது.. நல்லது நடக்கும் என்று நம்புவோம்.. கருத்துக்களுக்கும், தொடர்தலுக்கும் நன்றி..

said...

//
ராம்சுரேஷ் said...
தல, ஃபோட்டோ கலக்கல்..
//
ஹி..ஹி.. நன்றி..

//
நான் நெவார்க் ஏர்போர்ட் வரைக்கும் போயிருக்கேன். ஆனா ஃபஃபலோ போனதில்லை.. :)
//
இப்ப என்ன? பஃபல்லோ போகலன்னு வருத்தப்படுறீங்களா இல்ல அந்த ஃப்ளைட்ல போகலைன்னு சந்தோசப்படுறீங்களா? :))

said...

//
Pattaampoochi said...
படங்கள் அருமை.
உங்கள் பதிவும்தான் என்பதை சொல்ல வேண்டுமா என்ன?
அனுபவ பகிர்தலுக்கு நன்றி.
//

வாங்க பட்டாம்பூச்சி.. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..

said...

வசந்தமான நினைவுகளுக்கிடையே ஒரு வருத்தமான நிகழ்வு.

//அதில் யார் செய்யத்தவறிய ஒன்றால் விபத்து ஏற்பட்டது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.//

உண்மைதாங்க வெண்பூ. இது போன்ற பெரும்பாலான விபத்துக்கள் ஒரே ஒரு தனி மனிதக் கவனக் குறைவாலும் நிகழ்கின்றன:(!

said...

//
ராமலக்ஷ்மி said...
வசந்தமான நினைவுகளுக்கிடையே ஒரு வருத்தமான நிகழ்வு.
//
நிஜம்தான் ராமலக்ஷ்மி மேடம்...

//
உண்மைதாங்க வெண்பூ. இது போன்ற பெரும்பாலான விபத்துக்கள் ஒரே ஒரு தனி மனிதக் கவனக் குறைவாலும் நிகழ்கின்றன:(!
//
இனிமேல்தான் தெரியவரும்.. 50 பேரை பலிகொள்ளக் காரணமான கவனக்குறைவு எது என்று...

said...

பயண குறிப்புகளுடே விபத்து குறித்த அறிவியல் புரிந்துணர்வும், என்னை போன்ற குண்டுசட்டிகளுக்கு உதவியாக இருக்கும்.

said...

ஐ மிஸ் யூ பஃபல்லோ..//

இங்கே பார்த்ததே இல்லையா?

நான் கேட்ட பஃபல்லோ வேற

said...

50 க்கு வாய்பளித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி

said...

வாங்க வால்... வருகைக்கும் 50 அடிச்சதுக்கும் நன்றி..

Anonymous said...

Hi

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

said...

வெண்பூ.. இந்த பஃபல்லோ.. பஃபல்லோன்னு சொல்றீங்களே.. அப்படின்னா எருமைமாடா, காட்டெருமையா..?

Anonymous said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

said...

nalla pathivu nanba, nanum pathivu potu ullan ungala mathiri makkalin asirvathathudan, padithu pidithal potunga vote :-)

said...

பதிவு நன்றாக உள்ளது ..