Tuesday, September 2, 2008

காணாமல் போனவை: சைக்கிள், நண்பர்கள் அப்புறம் .... நேர்மை

"கால ஓட்டத்தில் காணாமல் போனவை" என்ற தலைப்பில் பதிவர் சுரேகா ஆரம்பித்த தொடரில் என்னையும் இணைத்த நண்பர் பரிசலுக்கு நன்றி.

கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் ஒவ்வொருவருக்குமே கால ஓட்டத்தில் காணாமல் போன ஒரு விசயமாவது நினைவுக்கு வரும் என்பதும் அது இல்லாமல் போனது குறித்த பெருமூச்சும் வெளிப்படுவது நடக்கக் கூடியதே. இந்த தொடருக்காக நான் திரும்பிப் பார்த்த போது என்னை பெருமூச்சு விட செய்த மூன்று விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.


சைக்கிள்:
என் பால்ய பருவத்தில் நாங்கள் இருந்தது பாப்பிரெட்டிபட்டி வனத்துறை க்வார்ட்டர்ஸில். அந்த கொஞ்சம் பெரிய கிராமத்தில் / சிறு நகரத்தில், மொத்தமாக ஒரு 3 ஏக்கர் பரப்பளவில் பெரிய க்வார்ட்டர்ஸ். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக 7 வீடுகள். க்வார்ட்டர்ஸின் நட்ட நடுவில் பெரிய கட்டிடத்தில் வன அலுவலகம் என்று அற்புதமான சூழ்நிலை. அவ்வளவு பெரிய இடமுமே எங்களுக்கான விளையாட்டு மைதானம்தான். அதிலும் அப்போது அருகில் வாணியாறு அணை கட்டப்பட்டு வந்ததால் அங்கு வெட்டப்பட்ட சிறிய, பெரிய மரங்களும் (சில மரங்களின் விட்டம் 10 அடிக்கு மேல்) அங்கே அடுக்கப்பட்டிருக்கும். (டிராக் மாறி போறேனோ..)

அங்கேதான் நான் முதல் முதலாக சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தது. அப்பாவின் சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் குரங்கு பெடல் போட கற்றது, கீழே விழுந்து சிராய்த்துக் கொண்டது (எப்போதுமே கால் முட்டியில் ஒரு காயம் இருந்து கொண்டே இருக்கும்), பூட்டிய சைக்கிளின் பெடலை பின்னால் சுற்றி விரல் செயினில் மாட்டிக் கொண்டு அலறியது என்று மறக்க முடியாத நினைவுகள்

இப்போது நினைத்துப் பார்த்தால் இன்று எனக்கு பயணத்தின் மீது இருக்கும் நாட்டம் அப்போதே வெளிப்பட்டிருக்கிறது போல் தோன்றுகிறது.

அதன்பின் அங்கிருந்து இராசிபுரம் வந்து இரண்டு வருடங்களில் அப்பா டிவிஎஸ் 50 வாங்கிய பிறகு அவரது சைக்கிள் அண்ணனுக்கும் அண்ணனின் கொஞ்சம் குட்டையான சிவப்பு சைக்கிள் எனக்கும் வந்தது. அதை எடுத்துக்கொண்டு சில பல வருடங்களுக்கு நான் சுற்றாத இடமே இராசிபுரத்தில் இல்லை. எங்கு செல்வதென்றாலும் சைக்கிள்தான் (காலை கடனுக்கு மட்டும்தான் நடந்து, திரும்பி வரும்போது சைக்கிளில் உட்கார முடியாது என்பதால்)

அதன்பின் சேலத்தில் வேலையில் சேர்ந்தது, ஹைதரபாத் போய், முதல் வாகனமாக என் வருமானத்தில் ஸ்பெலன்டர் பைக் வாங்கி, அமெரிக்கா போனபோது ஃபோர்டு கார் வாங்கி, சென்னை திரும்பி வந்து என்று எல்லாமே நல்லவிதமாகவே நடந்தாலும் சைக்கிளை கண்டிப்பாக நான் மிஸ் செய்கிறேன்.

இதோ கடந்த வாரம் கொடைக்கானல் போனபோது அங்கே ஏரியை சுற்றி வர சைக்கிள் வாடகைக்கு எடுத்து முன்னால் என் குழந்தையை அமர வைத்து ஓட்டியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. (என் தங்கமணியிடமும் அதே விளைவு என்பது நானே எதிர்பாராதது).

கண்டிப்பாக சொந்த வீட்டிற்கு மாறியவுடன் மீண்டும் சைக்கிள் வாங்கத்தான் போகிறேன்..


நண்பர்கள்:
கால ஓட்டத்தில் ஒவ்வொரு பகுதியுமே ஒரு இரயில் பயணம் போலதான். அதில் ஒரு சில நண்பர்கள் நெருங்கியவர்களாகவே இருந்தாலும் தொடர்பற்று போவது நடக்கும். அப்படிப்பட்ட தொடர்பறுந்த என் நண்பர்கள் இங்கே. இவர்களில் ஒருவராவது தொடர்பு கொண்டால் சந்தோசம‌டைவேன்.

சுபாஷ்: என் நினைவு தெரிந்து என் முதல் நண்பன். பாப்பிரெட்டிபட்டி செல்வதற்கு முன் என் 5 வயது வரை நாங்கள் சேலம் ஹவுசிங் போர்டில் குடியிருந்த போது இவன் என் நண்பன் (1982, 83 இருக்கும்). 25 வருடம் கழித்தும் இவனது முகம் நினைவில்லாத போதும் இவன் பெயர் நினைவிருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

குருபிரசாத்: பாப்பிரெட்டிபட்டியில் என்னுடன் துவக்கப்பள்ளியில் படித்தவன். அப்பா அங்கே டீக்கடை வைத்திருந்தார். பள்ளி இடைவேளைகளில் இவனது கடைக்கு சென்று பஜ்ஜி சாப்பிட்டது நன்றாக நினைவிருக்கிறது (இவனது முகம் சுமாராத்தான் ஞாபகத்துல இருக்குன்றது வேற விசயம்)

ராம்குமார்: என்னுடன் இராசிபுரத்தில் ஒன்பதாவது வரை படித்தவன். மிக நெருக்கமானவனாக இருந்தாலும், அதன்பின் அவன் கோவைக்கு இடம் பெயர்ந்த பிறகு தொடர்பற்று போய்விட்டது. அங்குள்ள பீளமேடு சர்வஜீன மேல்நிலைப்பள்ளியில் இவன் படித்ததாக நினைவு.

அதற்கு பிறகு என்னுடன் பழகியவர்களையெல்லாம் முடிந்தவரை தொடர்பில் வைத்திருக்கிறேன் என்பது நல்ல விஷயம்தான்.

திருட்டு விசிடி:
எனக்கு பிடிக்காத விஷயம் புதிய படங்களை திருட்டு விசிடியில் பார்ப்பது. மென்பொருள் துறையில் இருப்பதால் "பைரசி"யின் நஷ்டங்களையும் வேதனைகளையும் நன்கு அறிவேன். நான் சிடியில் படம் பார்க்கும் தருணங்கள்,

* அந்த படத்தை தியேட்டரில் பார்க்கத் தவறியிருப்பேன், வேறெங்கும் ஓடிக் கொண்டிருக்காது
* நீண்ட தூர பயணங்களில் பஸ்களில் ஒளிபரப்படும்போது (வேறு வழியில்லாமல் பார்க்க வேண்டியிருக்கும். எனக்கு அமைதியான இருட்டான சூழல் இல்லாவிட்டால் தூக்கம் வராது)

எனது இந்த பார்வை / செயல்பாடு கடந்த மூன்று வருடங்களில் மாறியிருக்கிறது என்பது கேவலமான உண்மை. அமெரிக்காவில் நாங்கள் இருந்த பஃபல்லோ நகருக்கு எந்த தமிழ் படமும் வராது. இந்தியன் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் தயவால் இந்தி படங்கள் மட்டுமே அவ்வப்போது ஓட்டப்படும். தங்கமணிக்கு இந்தி தெரியாததால் அதற்கும் போக முடியாது.

அதை விட்டால் 2 மணிநேரம் + 160 கி.மீ பயணம் செய்து டொரொன்டோ போக வேண்டும். போனாலும் கைக்குழந்தையுடன் படத்தை மனம் ஒன்றி பார்க்க முடியாது. கேஸினோ ராயல் படத்திற்கு சென்றுவிட்டு குழந்தை அழ ஆரம்பித்ததால் தங்கமணி முக்கால்வாசி படத்தை பார்க்க முடியாமல் வெளியே உட்கார்ந்த அனுபவத்திற்கு அப்புறம் ஆங்கில படமும் கட்.

அதனால் இணையத்தில் இருந்து டவுன்லோட் பண்ணி பார்க்க ஆரம்பித்தோம். காரணங்கள் சரியாக இருந்தததால் குற்ற உணர்வு இல்லை (அல்லது குறைவாக இருந்தது).

ஆனால் மிக சமீபத்தில் பலமுறை முயன்றும் தசாவதாரம் பார்க்க முடியவில்லை. (சத்யம் தியேட்டருக்கு சென்று டிக்கெட் இல்லாமல் திரும்பி வந்தது, பணம் செலுத்திய பிறகு இன்டெர்நெட் டிரான்ஸாக்ஷன் ஃபெய்லியர் ஆனது என்று பல தடங்கல்கள்). முடிவாக இன்டர்நெட்டில் தங்கமணி தேடிக் கொடுத்த முகவரியில் இருந்து படத்தை டவுன்லோட் செய்து சென்ற வார இறுதியில் பார்த்தோம்.

படத்தின் விமர்சனம் எப்படி இருந்தாலும் அந்த படத்திற்காக கமல் போட்டிருக்கும் உழைப்பு அபரிமிதமானது என்பது உணர முடிந்தது. நாங்கள் இருவரும் அந்த படத்தை இணையத்தில் பார்த்தததால் அவருக்கு பைசா பிரயோஜனமில்லை என்பதும் என்னை வேதனைப்படுத்தியது. ஸாரி கமல்.

அதனால்தான் படம் குறித்து எந்த பதிவையும் இடவில்லை. நான் ஏன் இப்படி மாறினேன் அல்லது எது இப்படி மாற்றியது என்று பதில் எனக்கு தெரியவில்லை.

பார்க்கலாம். இனி மேலாவது இது போன்ற நேர்மையற்ற செயல்களை நான் செய்யாமல் இருக்கிறேனா என்று. :(

78 comments:

said...

மீ த பஷ்ட்ட்ட்டூடூ!!!

said...

சைக்கிள் சூப்பர்!!!

நண்பர்கள் - கிடைச்சுடுவாங்க...

நேர்மை - no comments (சீரியஸா சொன்னா, நேர்மையோட அளவுகோல் ஆளாளுக்கு மாறுபடுது, அதனாலதான்)

said...

me the third?

said...

சைக்கிள் பற்றிய நினைவுகள் சூப்பர். எனக்கு சின்ன வயசில் குரங்கு பிடல் அடிக்கனும்னு ஆசை. ம்ஹூம் கடைசிவரை முடியவில்லை. அப்புறம் டிஆர் விசிறியாகிட்டேன்:):):)

said...

எனக்கு முதல் தடவை திருட்டு விசிடியில் படம் பார்த்த பொது செம த்ரில்லிங்கா இருந்திச்சி, அப்புறம் எல்லாரும் காரித்துப்பி ஆசை விட்டுப்போச்சு

said...

//அது இல்லாமல் போனது குறித்த பெருமூச்சும் வெளிப்படுவது நடக்கக் கூடியதே. //

பாத்து விடுங்க சூறாவளி கீது வந்துற போகுது

said...

//எப்போதுமே கால் முட்டியில் ஒரு காயம் இருந்து கொண்டே இருக்கும்//

இப்போதுமா

said...

//பூட்டிய சைக்கிளின் பெடலை பின்னால் சுற்றி விரல் செயினில் மாட்டிக் கொண்டு அலறியது என்று மறக்க முடியாத நினைவுகள்//

அட சிப்பு சிப்பா வருதுப்பா

said...

//அவரது சைக்கிள் அண்ணனுக்கும் அண்ணனின் கொஞ்சம் குட்டையான சிவப்பு சைக்கிள் எனக்கும் வந்தது. //

உங்களுக்கு கீழே வாரும் இல்லையா! கொடுத்து வைச்சவர் தான் போங்க

said...

//காலை கடனுக்கு மட்டும்தான் நடந்து, திரும்பி வரும்போது சைக்கிளில் உட்கார முடியாது என்பதால்//

மாலை யாருக்காவது கடன் கொடுத்தாலும் நடந்து தான் வருவிங்களா

said...

//சைக்கிளை கண்டிப்பாக நான் மிஸ் செய்கிறேன்.//

ஒண்டியா விட்டா இப்படித்தான் ஆவும், அதுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வையுங்க அது மிஸ்ஸெஸ் ஆகிடும்

said...

//என் தங்கமணியிடமும் அதே விளைவு என்பது நானே எதிர்பாராதது//

அண்ணாமலை ஞாபகம் வந்துருச்சோ

said...

//கண்டிப்பாக சொந்த வீட்டிற்கு மாறியவுடன் மீண்டும் சைக்கிள் வாங்கத்தான் போகிறேன்..//

ட்ரைவர் வச்சிபிங்க்களா

said...

//கால ஓட்டத்தில் ஒவ்வொரு பகுதியுமே ஒரு இரயில் பயணம் போலதான்.//

வித்அவுட் டிக்கெட் அலவ்டா

said...

//இவர்களில் ஒருவராவது தொடர்பு கொண்டால் சந்தோசம‌டைவேன்.//

உங்க நண்பர்கள் உங்கள மாதிரி இல்லாம, ரொம்ப நல்லவங்கள அதாவது பிளாக் பக்கமே வராம இருந்தா என்னை பண்ணுவிங்க

said...

//25 வருடம் கழித்தும் இவனது முகம் நினைவில்லாத போதும் இவன் பெயர் நினைவிருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது.//

எங்கயாது ரெண்டு பேரும் சேர்ந்து அஜால் குஜால் வேலை பண்ணியிருப்பிங்க
அதனால தான் மறக்க முடியல

said...

//பள்ளி இடைவேளைகளில் இவனது கடைக்கு சென்று பஜ்ஜி சாப்பிட்டது நன்றாக நினைவிருக்கிறது //

காசு கொடுத்தா கொடுக்காமலா,

said...

//என்னுடன் பழகியவர்களையெல்லாம் முடிந்தவரை தொடர்பில் வைத்திருக்கிறேன் என்பது நல்ல விஷயம்தான்.//

உங்களுக்கு நல்ல விஷயம், அவுங்களுக்கும் அதே தானான்னு கேட்டு பார்த்திங்களா!

said...

//இணையத்தில் இருந்து டவுன்லோட் பண்ணி பார்க்க ஆரம்பித்தோம். காரணங்கள் சரியாக இருந்தததால் குற்ற உணர்வு இல்லை//

இவ்ளோ கஷ்டப்பட்டு தமிழ் படம் பார்க்கனுமா!

said...

//இன்டர்நெட்டில் தங்கமணி தேடிக் கொடுத்த முகவரியில் இருந்து படத்தை டவுன்லோட் செய்து சென்ற வார இறுதியில் பார்த்தோம்.//

சத்யத்துல மட்டும் தான் பார்ப்பேன்னு சொன்னா என்ன பண்றது.
இதுக்கு நீங்க திருட்டு வி.சி.டியிலே பார்த்திருக்கலாம், ஒரு தமிழனுக்கு ஒரு வேளை சோறு கிடைத்திருக்கும்

said...

//படத்தின் விமர்சனம் எப்படி இருந்தாலும் அந்த படத்திற்காக கமல் போட்டிருக்கும் உழைப்பு அபரிமிதமானது//

காணாம போனது பத்தி எழுத சொன்னாங்களா, படத்துக்கு விமர்சனம் எழுத சொன்னாங்களா

said...

//இனி மேலாவது இது போன்ற நேர்மையற்ற செயல்களை நான் செய்யாமல் இருக்கிறேனா என்று.//

ஒரேடியா நல்லவனா மாறினா தமிழகத்துல வாழ முடியாது,
தலைவர் ரித்தீஷ் படத்தை மட்டும் எந்த தடங்கள் வந்தாலும் தியேட்டரில் பார்த்திருங்க

Anonymous said...

அடே... வெங்கட்டு... நீயாடா நண்பா?

Anonymous said...

எங்க பஜ்ஜி கடைக்கு 15.50 பாக்கி வெச்சுட்டு போன வெங்கடாஜலபதியா நீ?

Anonymous said...

I Miss you my friend!!!

said...

எல்லோருக்கும் இருக்கும் காணாமல் போனவை நினைவுகளில் இவை இடம் பெறுகின்றன.... :)

said...

வேலை செய்யும் இடங்களில் எவ்வளவு தான் நண்பர்கள் கிடைத்தலும் சிறு வயதில் உடன் படித்தவர்களின் நினைவுகளே அலாதியானது.. :)

said...

மொத்தத்தில் நேர்மையான பதிவு.

said...

அருமையான நேர்மையான பதிவு.
//எப்போதுமே கால் முட்டியில் ஒரு காயம் இருந்து கொண்டே இருக்கும்//
வீரத்தழும்புகள் பல எனக்கும் உண்டு. சில நேரம், ஒவ்வொரு தழும்பாக பார்த்து மலரும் நினைவுகளில் ஆழ்வதும் உண்டு. இனி இந்த வாய்ப்பு குறைவு தான். என் தங்கமணிக்கு குழந்தை அடிப்படக்கூடாது என்பதில் கவனம் அதிகம். கை முட்டி, கால் முட்டி, தலை என்று எல்லாவற்றுக்கும் கவசம் போட்டு தான் குட்டி சைக்கிள் பக்கமே விடுவாள். நானும் சொல்லி பார்ப்பதுண்டு - அடிப்படுவதிலும் ஒரு ஆனந்தம் உண்டு என்று. அவள் பதில் பார்வை அந்த ஆனந்தம் வேண்டுமா என்பது போல இருக்கும் ;)

said...

வருகைக்கு நன்றி விஜய் ஆனந்த். //சீரியஸா சொன்னா, நேர்மையோட அளவுகோல் ஆளாளுக்கு மாறுபடுது, அதனாலதான்// கண்டிப்பாக.

வாங்க ராப்ப்... ஆனாலும் குரங்கு பெடலுக்கும் டி.ஆருக்கும் நீங்க கொடுத்திருக்கிற இணைப்பு சூப்பர். //அப்புறம் எல்லாரும் காரித்துப்பி// ஆச்சரியம், நான் பார்த்த வரை பெரும்பாலானோர் திருட்டு விசிடியை தவறு என்று நினைப்பதே இல்லை. மேலே விஜய் ஆனந்த் சொன்னது போல் ஆளாளுக்கு மாறுப‌டுது

வாங்க‌ வால்பைய‌ன். இன்னிக்கு கும்மி இங்க‌யா?? க‌ல‌க்க‌லான‌ க‌மெண்ட்ஸ். ந‌ன்றி.

said...

//
சுபாஷ் said...
குருப்ரசாத் said...
RAMKUMAR said...
//


இது மூணும் யாரு? ம‌ங்க‌ளூர் சிவாவா? ந‌ன்றி...:)

said...

//தமிழ் பிரியன் said...
வேலை செய்யும் இடங்களில் எவ்வளவு தான் நண்பர்கள் கிடைத்தலும் சிறு வயதில் உடன் படித்தவர்களின் நினைவுகளே அலாதியானது.. :)
//

வாங்க தமிழ்ப்பிரியன். சரியா சொன்னீங்க... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

//குடுகுடுப்பை said...
மொத்தத்தில் நேர்மையான பதிவு.
//

வாங்க குடுகுடுப்பை. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..

said...

//Sundar said...
என் தங்கமணிக்கு குழந்தை அடிப்படக்கூடாது என்பதில் கவனம் அதிகம். கை முட்டி, கால் முட்டி, தலை என்று எல்லாவற்றுக்கும் கவசம் போட்டு தான் குட்டி சைக்கிள் பக்கமே விடுவாள்.
//
கண்டிப்பாக நம் குழந்தைகள் நாம் சிறுவயதில் என்ஜாய் பண்ணிய சில விஷயங்களை மிஸ் செய்வார்கள்...


//
நானும் சொல்லி பார்ப்பதுண்டு - அடிப்படுவதிலும் ஒரு ஆனந்தம் உண்டு என்று. அவள் பதில் பார்வை அந்த ஆனந்தம் வேண்டுமா என்பது போல இருக்கும் ;)
//
ஹா..ஹா..ஹா..

said...

நண்பர்க்ள்ல பசங்க பேரு மட்டும் எழுதிட்ட உஷாரா!! ரொம்ப நல்லவந்தான்பா நீ ஒத்துக்கறோம்!!

:)))

said...

/
வால்பையன் said...

//எப்போதுமே கால் முட்டியில் ஒரு காயம் இருந்து கொண்டே இருக்கும்//

இப்போதுமா
/

@வால்
இப்போதும் இருக்கிறதாம் தங்கமணி பூரிகட்டையால் முட்டியிலேயே போடுவதாலாம்!!

:)))

said...

//கண்டிப்பாக சொந்த வீட்டிற்கு மாறியவுடன் மீண்டும் சைக்கிள் வாங்கத்தான் போகிறேன்..//

ஆமா இப்ப இருக்க வீட்டுல பார்க் பண்ண இடம் இல்லையோ!?!?

said...

வாங்க சிவா...

//

//கண்டிப்பாக சொந்த வீட்டிற்கு மாறியவுடன் மீண்டும் சைக்கிள் வாங்கத்தான் போகிறேன்..//

ஆமா இப்ப இருக்க வீட்டுல பார்க் பண்ண இடம் இல்லையோ!?!? //

நிஜம் அதுதான் :(

said...

//மங்களூர் சிவா said...

@வால்
இப்போதும் இருக்கிறதாம் தங்கமணி பூரிகட்டையால் முட்டியிலேயே போடுவதாலாம்!!

:)))
//

தெரிஞ்சிருச்சா எல்லாருக்கும்.... :)

said...

திருட்டு விசிடி இங்கயும் சேம் ப்ளட் தமிழ்படம் ரிலீஸ் ப்ராப்ளம் இருக்கு!

said...

//எப்போதுமே கால் முட்டியில் ஒரு காயம் இருந்து கொண்டே இருக்கும்//
வீரத்தழும்புகள் பல எனக்கும் உண்டு. சில நேரம், ஒவ்வொரு தழும்பாக பார்த்து மலரும் நினைவுகளில் ஆழ்வதும் உண்டு. இனி இந்த வாய்ப்பு குறைவு தான்.அருமையான பதிவு.

said...

வெண்பூ, நல்ல பதிவு. நண்பர்கள் மாறுவது வாழ்க்கையின் கட்டாயம்.


சில படங்களை திருட்டு விசிடியில் தானே பார்க்க முடிகிறது :-)))))))))))

said...

எல்லாத்தையும் தான் வால்பையன் வரிக்குவர் சொல்லிட்டாரே!!!!தனியா என்னத்த சொல்றது...சூப்பர் :)

said...

//மங்களூர் சிவா said...
திருட்டு விசிடி இங்கயும் சேம் ப்ளட் தமிழ்படம் ரிலீஸ் ப்ராப்ளம் இருக்கு!
//

வாங்க சிவா... தமிழ்நாட்டுகுள்ள மட்டும்தான் படம் ரிலீஸ் ப்ராப்ளம் இல்லாம இருக்கு அதுவும் ஹீரோ எந்த அரசியல்வாதியயும் பகைச்சுக்காம இருந்தா... :)

said...

// Nithya A.C.Palayam said...
//எப்போதுமே கால் முட்டியில் ஒரு காயம் இருந்து கொண்டே இருக்கும்//
வீரத்தழும்புகள் பல எனக்கும் உண்டு. சில நேரம், ஒவ்வொரு தழும்பாக பார்த்து மலரும் நினைவுகளில் ஆழ்வதும் உண்டு. இனி இந்த வாய்ப்பு குறைவு தான்.அருமையான பதிவு.
//

வாங்க நித்யா.. இன்னிக்கு ரொம்ப பேரோட கொசுவத்தி சுத்த வெச்சிட்டேன் போல...

said...

//முரளிகண்ணன் said...
சில படங்களை திருட்டு விசிடியில் தானே பார்க்க முடிகிறது :-)))))))))))
//

அதெல்லாம் விதிவிலக்கு முரளிகண்ணன். ஹவுஸ்புல்லா இருக்குன்னா காத்திருந்து பாக்குறதுல தப்பில்லை. அதே மாதிரி படம் எங்கயும் ஓடலன்னா வேற என்ன வழி???

said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
எல்லாத்தையும் தான் வால்பையன் வரிக்குவர் சொல்லிட்டாரே!!!!தனியா என்னத்த சொல்றது...சூப்பர் :)
//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அப்துல்லா...

said...

//இது மூணும் யாரு? ம‌ங்க‌ளூர் சிவாவா? ந‌ன்றி...:)//

இந்தக் காலத்துல ஒருத்தனுக்கு போய்ச்சேரவேண்டிய பாராட்டு இன்னொருத்தருத்தருக்குப் போறது சாதாரணமாகிடுச்சு!:-(

said...

நான் சத்தியமாக திருட்டு வி.சி.டி.பார்ப்பதில்லை!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
திருட்டு டி.வி.டி.தான்!

said...

உங்கள் சைக்கிள் பற்றிய நினைவு அத்தனைக்கும் ரிப்பீட்டு!

நாந்தான் 50!

said...

உங்க பதிவுலயாவது ஃபிஃப்டி அடிக்க விட்டீங்களே! நன்றி!

said...

வெண்பூ..

நல்ல பதிவு..

சைக்கிள் தான திரும்பி முக்கியமான வாகனமா மாறிடும்.. Petrol விலை அப்படி,,

நர்சிம்

said...

//
பரிசல்காரன் said...
/இது மூணும் யாரு? ம‌ங்க‌ளூர் சிவாவா? ந‌ன்றி...:)/

இந்தக் காலத்துல ஒருத்தனுக்கு போய்ச்சேரவேண்டிய பாராட்டு இன்னொருத்தருத்தருக்குப் போறது சாதாரணமாகிடுச்சு!:-(
//

ஆஹா... நீங்களா அது??? எப்பவுமே சிவாதான் இப்படி போடுவாருன்றதால கொஞ்சம் மிஸ்ஸாயிடுச்சி. மன்னிச்சிகோங்க பார்ட்னர்.

//
பரிசல்காரன் said...
உங்க பதிவுலயாவது ஃபிஃப்டி அடிக்க விட்டீங்களே! நன்றி!
//

லேட்டா வந்துட்டு பேச்ச பாரு!!! :)))

said...

கலக்கல் பதிவு!!!

said...

//narsim said...
வெண்பூ..

நல்ல பதிவு..
//

வாங்க நர்சிம். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

//
சைக்கிள் தான திரும்பி முக்கியமான வாகனமா மாறிடும்.. Petrol விலை அப்படி,,

நர்சிம்
//

கரெக்டா சொன்னீங்க நர்சிம். ஏற்கனவே லீவு நாள்ல வெளியே நான் தனியா போற வேலை எதுனா இருந்தா முடிஞ்சவரைக்கும் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் உபயோகப் படுத்த ஆரம்பிச்சிட்டேன். :)

said...

//ச்சின்னப் பையன் said...
கலக்கல் பதிவு!!!
//

வாங்க ச்சின்னப்பையன்.. சிங்கத்துக்கு நம்ம குகைக்கு வரதுக்கெல்லாம் நேரம் இருக்குமோன்னு நெனச்சேன்.. மிஸ் பண்ணாம வந்துட்டீங்க.. நன்றி :)

said...

//அவருக்கு பைசா பிரயோஜனமில்லை என்பதும் என்னை வேதனைப்படுத்தியது. ஸாரி கமல்.

நான் ஏன் இப்படி மாறினேன் அல்லது எது இப்படி மாற்றியது என்று பதில் எனக்கு தெரியவில்லை.

பார்க்கலாம். இனி மேலாவது இது போன்ற நேர்மையற்ற செயல்களை நான் செய்யாமல் இருக்கிறேனா என்று. :(//

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது...இப்போ கூட இப்பிடில்லாம் சிந்திக்கிறவர்கள் இருக்கிறார்கள் என்னும் நினைப்பே
ரொம்ப நம்பிக்கையை அளிக்கிறது.
அன்புடன் அருணா

Anonymous said...

வெண்பூ,

ஆண்களுக்கு, பால்யத்தின் நினைவுகள், சைக்கிளைச் சுற்றியே இருக்கும். எனக்கும் உங்களப் போலத்தான்.

உங்கள் நண்பர்களுடன் நட்பு மீண்டும் தொடர வாழ்த்துக்கள்.

படம் வெளியாகும் அன்றே டி வி டி வெளியானால் என் போன்றோருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

பிராயசித்தமாக, திருட்டு விசிடியில் பார்த்த படங்களின் ஒரிஜினல் விசிடி வந்ததும் வாங்கி விடுவேன். வேறென்ன செய்ய?.

said...

தொடர்ந்ததற்கு நன்றிங்க!

சைக்கிள் - ஆமாம் . எல்லாரும் தொலைத்த ஒரு அற்புதமான பொருள்.
நான் வளைகுடாவில் இருந்தபோது, காரை எடுக்காமல் அருகிலிருக்கும்
இடங்களுக்கு சைக்கிளைப்பயன்படுத்தி வந்தேன்.

ஆனால் இப்பல்லாம்....ம்ஹூம். அழுத்தவே முடியாது போல இருக்கு!

நேர்மை!

நீங்க ஒண்ணும் காணாம அடிச்சுடலை!
தப்பு செஞ்சா ஒத்துக்குறதுதான் சார் நேர்மை..!
அந்த விதத்தில் நீங்க சூப்பர்!

said...

//Aruna said...
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது...இப்போ கூட இப்பிடில்லாம் சிந்திக்கிறவர்கள் இருக்கிறார்கள் என்னும் நினைப்பே
ரொம்ப நம்பிக்கையை அளிக்கிறது.
அன்புடன் அருணா
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா..

said...

வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி வடகரை வேலன், சுரேகா.

பின்னூட்டமிட்டிருக்கும் பெரும்பாலோர் சைக்கிளை மிஸ் செய்வது அறிந்து மகிழ்ச்சி.

எனக்கு தெரிந்தே 7 கி.மீ சைக்கிளில் சென்று படம் பார்த்து திரும்பியிருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் கஷ்டம்தான்.

Anonymous said...

வெண்பூ

உடனே பரிசலை தொலைபேசியில் அழைத்து அவரது அதர் ஆப்ஷனை திறக்க சொல்லவும்.

மேட்டர் வெரி அர்ஜண்ட். அங்கே உடனடியாக நான் நாப்பது கமெண்ட் போட்டாவனும்.

said...

ரவி, அவர் பதிவில் சொல்லியபடி இன்று அவர் வெளியூரில் ஒரு NGO சம்பந்தமான வேலையில் இருக்கிறார். திரும்பி வந்தவுடன் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறார். நன்றி.

Anonymous said...

அவர் உடனே வந்து அதர் ஆபஷனை திறக்குமாறு தகர நெடுங்குழைகாதனை வேண்டிக்கொள்கிறேன்.

said...

திருட்டு சிடி குறித்த உங்களின் பார்வைதான் எனக்கும். நல்லப் படங்களை தியேட்டரில் மட்டுமே பார்ப்பேன். கடைசியா நான் தியேட்டர்ல பார்த்த படம் தசாவதாரம். கமலோட நகைச்சுவை படங்களான பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா அப்றம் நளதமயந்தி போன்ற படங்களோட ஒரிஜினல் டிவிடி வாங்கி வைச்சுருக்கேன். அதயெல்லாம் போரடிக்கிறப்ப பார்க்குறது. கடைசியா சுப்ரமண்யபுரம் தியேட்டர்ல போயி பார்க்கனும்னு நினைச்சேன் ஆனா நேரம் இல்லாம போக முடியல. இன்னும் இணையத்துல கூட பார்க்கல அந்த படத்த. சிங்கப்பூர்ல இப்ப தியேட்டர்லயும் அந்த படம் ஓடல. ஒரிஜினல் டிவிடி வந்ததும் பார்த்துக்கலாம்னு இருக்கேன்.

சைக்கிள் முதல்ல ஓட்ட ஆரம்பிச்சப்ப ரொம்ப சந்தோஷமான விஷயம். ஆனா இப்பயெல்லாம் சைக்கிள் ஓட்ட கடியாயிடுச்சு. கார் இல்லன்னா பைக்கு தான். சைக்கிள் ஓட்ட முயற்சி செய்யணும்.

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

said...

வாங்க ஜோசப் பால்ராஜ். வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

said...

மீ த டூ லேட்டு. (ஏற்கனவே படிச்சுட்டேன், பின்னூட்டம்தான் லேட்டு)

சைக்கிளும், நண்பர்களும் அனைவரையுமே கொசுவத்தி சுத்தவைக்கும் பகுதிகள்.
திருட்டு விசிடி : நான் நான் பார்க்கவேண்டும் என நினைக்கும் / நல்ல படங்களை / நான் ரசிப்பவர்கள் இருக்கும் படங்களை தியேட்டரில்தான் பார்க்கிறேன். ஆனால் மொக்கைப்படங்களைத்தான் விசிடியில் ட்ரை பன்ணுகிறேன் (அப்பிடி என்னதான் பிளேடு போடுறாங்கனு பார்க்க). ஆனால் பெரும்பாலான சமயங்களில் அவற்றின் தரம் நம்மை சாவடித்துவிடுகிறது. ஆகவே கிட்டத்தட்ட நிறுத்திவிட்டேன் என்றே சொல்லலாம்.

said...

நான் கூட ஒரு புது சைக்கிள் வாங்கும் ஐடியா-வில் இருக்கிறேன்.
ஆரம்பத்தில் எல்லாம் திருட்டு v.c.d பார்க்கும்போது இருந்த ஒரு குற்ற உணர்வு இப்போது இல்லை என்பது உண்மை

said...

கொடைக்கானல் போனபோது அங்கே ஏரியை சுற்றி வர சைக்கிள் வாடகைக்கு எடுத்து//

போனவருடம் நான், அயித்தான், குழந்தைகள் இருவரும் ஆளுக்கு ஒரு சைக்கிளை வாடகை எடுத்துகிட்டு கொடைக்கானலைச் சுத்தினோம் பாருங்க. உங்க சுத்து எங்க சுத்து இல்ல அது. :)

அம்மாம் பெரிய ரவுண்டுன்னு தெரியாம நானும் மகனும் மாத்திரம் முன்னால போயிக்கினு இருக்கொம்.
அயித்தானையும் அம்ருதாவையும் காணோம். :(

அம்ருதாவையும், அந்த சைக்கிளையும், தன் சைக்கிளில் வெச்சுகிட்டு மிதிக்க முடியாம அயித்தான் வந்து சேர்ந்த கொசுவத்தியை சுத்தி விட்டிடிச்சு உங்க பதிவு.

said...

Cycle super :)))))

Enjoyed the post...

said...

வெண்பூ,

சூப்பர் பதிவு. நல்ல, சரளமான நடை. Sci-fi எல்லாம் வெளுத்துக்கட்டிய உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறேன். எனது கணிப்பில், லக்கி, பரிசல், நீங்கள், அதிஷா, நர்சிம், வேலன் ஆகியோர் நிச்சயம் பெரிய பத்திரிகைகளில் எழுதி, dominate செய்ய முடியும். Think you should seriously start working on that.

அனுஜன்யா

said...

//தாமிரா said...
மீ த டூ லேட்டு. (ஏற்கனவே படிச்சுட்டேன், பின்னூட்டம்தான் லேட்டு)
//
வாங்க தாமிரா...

//அவற்றின் தரம் நம்மை சாவடித்துவிடுகிறது. ஆகவே கிட்டத்தட்ட நிறுத்திவிட்டேன் என்றே சொல்லலாம்.
//
ரொம்ப சரி. நம்ம ஊர் திருட்டு விசிடிகளில் பெரும்பாலானவை ஸ்கிரீன் பிரிண்ட்கள். அதை எப்படிதான் உட்கார்ந்து பார்க்கிறார்களோ???

said...

//பாபு said...
நான் கூட ஒரு புது சைக்கிள் வாங்கும் ஐடியா-வில் இருக்கிறேன்.
ஆரம்பத்தில் எல்லாம் திருட்டு v.c.d பார்க்கும்போது இருந்த ஒரு குற்ற உணர்வு இப்போது இல்லை என்பது உண்மை
//

வாங்க பாபு.. நர்சிம் சொன்ன மாதிரி பெட்ரோல் விக்கிற விலைக்கு நாம எல்லாருமே சைக்கிள் வாங்க ஆரம்பிச்சிடுவோம்..

said...

வாங்க புதுகை தென்றல்,

எங்களுக்கு அந்த தூரம் கஷ்டமாகவே தெரியவில்லை. காரணம் இரண்டு பேரும் இரண்டு சைக்கிள் எடுத்துக்கொண்டு, பேசி கொண்டே சென்றது ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம் அது வார நாள் ஆதலால் கூட்டமே இல்லாமல் இருந்தது. ஒரு சுற்றிற்கு (5 கி.மீ) 45 நிமிடம் எடுத்தது, நடுவில் டீ ப்ரேக் உடன்.

கொடைக்கானலில் நான்கு நாட்கள் இருந்ததிலேயே எங்கள் இருவருக்கும் (கண்டிப்பாக எங்கள் குட்டிக்கும்) பிடித்தது சைக்கிள் பயணம்தான் :)

said...

//Karthik said...
Cycle super :)))))

Enjoyed the post...
//

நன்றி கார்த்திக், வருகைக்கும் பாராட்டுக்கும்..

said...

//அனுஜன்யா said...
வெண்பூ,

சூப்பர் பதிவு. நல்ல, சரளமான நடை. Sci-fi எல்லாம் வெளுத்துக்கட்டிய உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறேன். எனது கணிப்பில், லக்கி, பரிசல், நீங்கள், அதிஷா, நர்சிம், வேலன் ஆகியோர் நிச்சயம் பெரிய பத்திரிகைகளில் எழுதி, dominate செய்ய முடியும். Think you should seriously start working on that.

அனுஜன்யா
//

மிக மிக நன்றி அனுஜன்யா.. நீங்கள் குறிப்பிட்ட மற்ற பதிவர்கள் அளவுக்கெல்லாம் நான் இல்லை அனுஜன்யா. அவர்கள் "எழுத்தை தவமாக நினைக்கிறார்கள்" வகையை சேர்ந்தவர்கள் :) கண்ணில் காணும் எல்லாவற்றையும் சுவையாக கோர்வையாக எழுதுகிறார்கள்.

நான் என் பணிக்கு நடுவே நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். கண்டிப்பாக ஊடகங்களுக்கு அனுப்ப முயற்சி செய்கிறேன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

said...

காணமல் போனவற்றில் சைக்கிளை அடுத்து தொடர்பு விட்டுப் போன நெருங்கிய நண்பர்களை நினைவு கூர்ந்திருப்பது அருமை. பெரும்பாலும் அவர்கள் பள்ளி நண்பர்களாக இருப்பார்கள். இந்த அனுபவம் எல்லோருக்கும் இருக்கும். கல்லூரி நண்பர்களுடன் இன்றும் தொடர்பில் உள்ளேன்.

மூன்றாவதாக நேர்மையைக் கூறிய உங்கள் நேர்மையைப் பாராட்டியே ஆக வேண்டும் வெண்பூ. வாழ்த்துக்கள்!

said...

தொலைத்த நேர்மையை தேடி எடுக்கிறீர்கள் போலிருக்கிறது, அருமையான பதிவு இது வெண்பூ :)