Saturday, June 28, 2008

வெறும்பயல் விமர்சனங்கள் (2)

செய்தி: ஜெய்ப்பூரில் இருந்து மும்பை வந்த விமானத்தில் பைலட்கள் தூங்கியதால் பரபரப்பு.

வெறும்பயல்: அதுக்குதான் ஃப்ளைட்ல 'குருவி' படம் போடாதீங்கன்னு சொன்னேன். கேட்டாங்களா!!

--------

செய்தி: பூரண மதுவிலக்கை கொண்டுவரக் கோரி பா.ம.க.வினர் டாஸ்மாக் கடைகளின் முன் ஆர்பாட்டம் நடத்துவார்கள்.

வெறும்பயல்: கலந்துக்குற தொண்டர்களுக்கு பிரியாணி கிடைக்குதோ இல்லையோ குவாட்டர் பாட்டில் கிடைக்கிறதுல பிரச்சினை இருக்காது

--------

செய்தி: விலைவாசி உயர்வுப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசிப்பதற்காக கூடிய கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ முடிவெடுக்காமல் கலைந்தது. மீண்டும் 29ம் தேதி கூடப் போவதாக அறிவிப்பு.

வெறும்பயல்:கண்டிப்பா 29ம் தேதி முடிவை அறிவிச்சிடுவாங்க - மறுபடியும் எப்ப பொலிட் பீரோவ கூட்டறதுன்ற முடிவை !!

-------

செய்தி: பணவீக்கம் இன்னும் அதிகரித்துள்ளது. சில வாரங்களுக்குத் தொடரும் என நிபுணர்கள் கருத்து

வெறும்பயல்: மொத்தத்துல பர்ஸ் வீக்கம் இன்னும் கம்மியாயிடும்ன்றீங்க. சரிதான். ஏற்கனவே ஆரஞ்சு மாதிரி இருந்த பர்ஸ் இப்ப சுருங்கி எலுமிச்சம்பழம் ரேஞ்க்கு ஆயிடுச்சி. அத எலந்த பழம் ரேஞ்சுக்கு கொண்டு வந்துடுவீங்க போல.

----------

அமெரிக்க துணைத் தூதர்: உயர் படிப்பிற்காக இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

வெறும்பயல்: நம்ம ஊர் மெடிக்கல் காலேஜ்லயும் இஞ்சினியரிங் காலேஜ்லயும் கேக்கற டொனேசன விட அமெரிக்கா போய் படிக்க கம்மியாத்தான் செலவாவுன்றது படிக்கற பசங்களுக்குத் தெரியாதா என்ன?

11 comments:

said...

:-)))

செய்தியும் விமர்சனமும் நல்லாருந்துது

said...

;-)))))

said...

விமர்சனம் அனைத்துமே சூப்பர்...

said...

வாங்க அதிஷா, வாங்க வெட்டி.... ரசிச்சதுக்கு நன்றி...

said...

ஆட்டோ.. ஆட்டோ. வாப்பா... வெண்பூ வீட்டு வரைக்கும் போகணும்...

said...

எல்லா செய்திகளின் விமர்சனமும் நல்லா இருக்கு அதிலும் இந்த படிக்க அமெரிக்கா போற மேட்டரும் பொலிட் பீரோ மேட்டரும் ரொம்ப அருமை

said...

சூப்பர்ங்ஙன்னா.....

said...

// ஆட்டோ.. ஆட்டோ. வாப்பா... வெண்பூ வீட்டு வரைக்கும் போகணும்...//

நீங்க வேற பயப்படுத்தாதீங்க ச்சின்னப்பையன். இப்போல்லாம் அரசியல் தலைவர்களப் பத்தி தப்பா எழுதுனா உடனே போலீஸ் கூகுள கான்டாக்ட் பண்ணி ஐ.பி. அட்ரெஸ் வாங்கி, வீட்டுக்கே வந்து அரஸ்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. நீங்க எல்லாம் பரவாயில்ல, ஃபாரின்ல இருக்குறதால ஆட்டோ மட்டும் இல்ல அரஸ்ட்ல இருந்து கூட தப்பிச்சிடலாம்... :)

said...

நன்றி புரட்சித்தமிழன். அப்புறம் உங்க ஃப்ரொஃபைல் ஃபோட்டோ நல்லா கவர்ச்சியா இருக்கு....:)))))))))))))

வருகைக்கும் ரசிச்சதுக்கும் நன்றி கல்கிதாசன்..

said...

செமக் கலக்கல். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது பா.மா.காவின் போராட்டம், இடதுசாரிகளின் முடிவு, அமெரிக்க படிப்பு. உங்களுக்கு என்னப் பரிசு வேணும்னு சொல்லுங்க கானல்நீர் பட dvdயா? இல்ல குருவி பட dvdயா?

said...

வாங்க rapp

//உங்களுக்கு என்னப் பரிசு வேணும்னு சொல்லுங்க கானல்நீர் பட dvdயா? இல்ல குருவி பட dvdயா?//

இனிமே இந்த மாதிரி எழுதாதடா அப்பிடின்னு ஆர்டர் போடுங்க!!! ஒத்துக்குறேன். அதுக்கு பதிலா இப்படி ஒரு தண்டனையா? உங்க கட்சி கா :)))