Tuesday, June 17, 2008

நான் ஏன் எழுதுகிறேன்?

எல்லாருக்கும் வணக்கமுங்க.

ஏறத்தாழ 6 மாசமா தமிழ் வலைப்பூக்களை படிச்சிட்டு இருந்தாலும், இதுவரைக்கும் நான் எந்த பதிவுமே போடாம இருக்கிறதுக்கு ரொம்ப முக்கியமான காரணம் ஒண்ணு இருக்கு, அதை நான் கடைசியா சொல்றேன்.

முதல்ல என்னை எது இந்த பக்கம் இழுத்ததுன்னு சொல்லியே ஆகணும். வார வாரம் எது நடந்தாலும், எனக்கு விகனட படிச்சிடனும். அந்த விகடன்ல அப்பிடி என்ன இருக்குன்னு எப்ப பாத்தாலும் அதை தொறந்து வச்சிக்கிட்டு உக்காந்துகிட்டு இருக்கீங்கன்னு தங்கமணி கத்துனாலும், நம்ம அதை கண்டுகிறது இல்ல.

ஏற்கனவே ப்ளாக் பத்தி தெரிஞ்சிருந்தாலும், அதுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லன்னு, கூட்டணிய பத்தி கவலப்படாத குரு கணக்காத்தான் இருந்தேன். ஒரு தடவ விகடன்ல இட்லிவடைய பத்தி போட்ருந்தாங்க. சாப்பாட்டு மேல இயல்பாவே இருக்குற ஒரு ஈர்ப்பு என்ன இந்த ப்ளாக் பக்கம் இழுத்திச்சி. படிச்சி பாத்தா நக்கல், நையாண்டி எல்லாமே இருக்க, அதை தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன்.

அப்படியே பின்னூட்டம் வழியா மத்த வலைஞர்கள் (ஐ... இந்த வார்த்தை நல்லா இருக்கே) அறிமுகம் கெடச்சது. லக்கிலுக், ச்சின்னப்பையன், டோண்டு சார், பரிசல்காரன், லதானந்த் இப்படி.... நாம ஒண்ணும் பெரிய இலக்கியவாதி இல்லன்றதாலும் (அது புரியாததாலும்) நெறய முக்கியமான பேர்லாம் நம்ம லிஸ்ட்ல விட்டு போயிருக்கும். திட்டாதீங்க...

இது வரைக்கும் படிச்சதுலயே என்ன ரொம்ப கவர்ந்தது...

இட்லிவடை - நக்கலும், நையாண்டியும் (முக்கியமா மஞ்ச கலர்ல பட்டையடிச்சு குடுக்கிற எல்லாமே 'டவுட் தனபாலு' ரேஞ்சுக்கு இருக்கும்)

லக்கிலுக் - நகைச்சுவை கலந்த எழுத்து நடை (மறக்கமுடியாத பதிவு - 'கிளிஞ்சது போ')

ச்சின்னப்பையன் - சின்ன சின்ன ஐடியாக்கள் (சென்னையை சிங்காரச் சென்னையா ஆக்கறது எப்படின்ற மாதிரி)

டோண்டு ராகவன் - நான் இப்படித்தான் அப்படின்னு டோன் செட் செய்றது - இது இந்த காலத்துல ரொம்ப முக்கியம். அப்புறம் ரசிக்கிற மாதிரி உலக விசயங்கள சொல்றது..

பரிசல்காரன் - நல்ல புரியுறமாதிரி அதே சமயம் சீரியஸான கதை, கவிதை..

லதானந்த் - குறுகிய காலத்தில தனக்குன்னு ஒரு இடம் புடிச்சது. ஆச்சரியமா இருக்கு, எப்படித்தான் இவ்ளோ எழுதுறாருன்னு, கவர்மென்ட் ஆபிஸ்ல வேலைன்றதால நெறய டைம் கிடைக்குதா அங்கிள்? கோச்சுகாதிங்க :) என்னோட அப்பாவும் உங்க டிபார்ட்மென்ட்ல வேலை செஞ்சு ரிடயர் ஆனவர்தான்

இனிமே நானும் ரெகுலரா எழுதலாம்னு இருக்கிறேன் (வாரத்துக்கு ஒரு பதிவாவது), பாக்கலாம் முடியுதான்னு. படிச்சிட்டு நல்லா இருக்கா, மொக்கயான்னு பின்னூட்டம் போடுங்க, இம்ப்ரூவ் பண்ணிக்கிறேன்.

முடிக்கிறதுக்கு முன்னால, இத்தனை நாளா எழுதாம இருக்கிறதுக்கு காரணம் சொல்றதா சொல்லியிருந்தேனே, சொல்றேன்..... வேறென்ன..... சோம்பேறித்தனம்தான்...

12 comments:

said...

வாங்க வாங்க... நல்வரவு... என் பேரை வேறே போட்டுத் தாக்கிட்டீங்க... அவ்வ்வ்வ்வ்வ்....

Anonymous said...

//நான் ஏன் எழுதுகிறேன்? //
ம்.. அதத்தான் நானும் கேக்கிறேன்.

said...

// ம்.. அதத்தான் நானும் கேக்கிறேன். //

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

ஏன் சினிமாவில நடிக்கிறன்னு விஜய டி.ராஜேந்தர்கிட்ட யாராவது கேட்டீங்களா? அரசியல்ல என்ன கழட்டுறன்னு கார்த்திக்கிட்ட யாராவது கேட்டீங்களா?

ஆனா, ஒரு அறியா புள்ள, பச்ச மண்ணு ஏதோ நாலு வரி கிறுக்கலாம்னு வந்தா மட்டும் இப்படி கலாய்கிறீங்களே நியாயமா அனானி?

Anonymous said...

//
// ம்.. அதத்தான் நானும் கேக்கிறேன். //

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

ஏன் சினிமாவில நடிக்கிறன்னு விஜய டி.ராஜேந்தர்கிட்ட யாராவது கேட்டீங்களா? அரசியல்ல என்ன கழட்டுறன்னு கார்த்திக்கிட்ட யாராவது கேட்டீங்களா?

ஆனா, ஒரு அறியா புள்ள, பச்ச மண்ணு ஏதோ நாலு வரி கிறுக்கலாம்னு வந்தா மட்டும் இப்படி கலாய்கிறீங்களே நியாயமா அனானி?
//
ம்.. இதெல்லாம் புதுசா வரவங்களுக்கு நாங்க வைக்கிற டெஸ்ட். பரவாயில்ல தேறிட்டீங்க. தாராளமாக வாங்க. வந்து நீங்களும் கழட்டுங்க Sorry.. கலக்குங்க. வாழ்த்துகள்.

ஆனா நீங்க உதாரணமா இவங்கள சொல்றத பாத்தா தான் பீதியா இருக்கு... என்னமோ பாத்து செய்யுங்க. நாங்களும் பாவம்ல.

பி.கு: சென்னைங்கிறீங்க, பொட்டி தட்டுற வேலைங்குறீங்க, ஆனா ல, ள தகராறு இல்லாம சரியா எழுதி இருக்கீங்க. அதுக்காக ஸ்பெசல் வாழ்த்துகள். நிறைய எழுதுங்க.

said...

// ஸ்பெசல் வாழ்த்துகள். நிறைய எழுதுங்க.//

வாழ்த்துக்களுக்கு நன்றி அனானி...

said...

நல்வரவு.

said...

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்

said...

உங்க அப்பா எங்கே என்னவா இருந்தார்? எனது ஈமெயிலுக்கு எழுதுங்களேன்?

said...

// உங்க அப்பா எங்கே என்னவா இருந்தார்? எனது ஈமெயிலுக்கு எழுதுங்களேன்? //

உங்களுக்கு இ-மெயில் அனுப்பி உள்ளேன். நன்றி.

said...

எழுதுறதுக்கு இத்தனை காரணமா... அப்டி போடுங்க அறிவாளை..

said...

தாமதமாக வந்ததற்கு நன்றி!

என்னைப் பிடிப்பதாய் சொன்னதற்கு..

பாவம் நீங்க.. வேறென்ன சொல்ல??

said...

// பாவம் நீங்க.. வேறென்ன சொல்ல??//

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தன்னடக்கம் பரிசல்...