"மச்சான், ஒரு குட் நியூஸ்டா" என்ற குமாரின் குரலில் வழக்கத்துக்கு மாறான ஒரு உற்சாகம் தெரிந்தது.
"என்னடா.. ரொம்ப சந்தோசமா இருக்குற மாதிரி இருக்கு"
"இல்ல மகேஷ்... ஒரு பட்சி மாட்டிருக்குடா" என்றவனின் குரலில் லேசான வெட்கம்.
"என்னது.. லவ் பண்ண ஆரம்பிச்சிட்டியா?"
"டேய்.. நான் சொன்னது வேற.. மேட்டருக்கு ஒரு பட்சி மாட்டிருக்குடா"
"தெளிவா சொல்லுடா, ஒண்ணும் புரியலை"
"நீதான் திட்டுவியே, நான் நெட்ல எப்ப பாத்தாலும் சேட்ல இருக்குறேன்னு, இப்ப அதுமூலமா ஒரு கான்டாக்ட் கிடைச்சிருக்குடா.. இன்னிக்கு அவங்க வீட்டுக்கு போறேன்"
"சரி"
"என்ன சரி.. நான் சொல்றது இன்னமும் புரியலையா.. ஒரு பொண்ணோட கான்டாக்ட் கிடைச்சிருக்கு.. சேட்ல இருந்து அப்படியே டெவலப் ஆகி போன் எல்லாம் பண்ணி பேசி, இன்னிக்கு மத்தியானம் நான் அவ வீட்டுக்கு போகப்போறேன்டா.. எல்லாம் மேற்படி விசயத்துக்குதான்"
"அடப்பாவி.. உனக்குள்ள இவ்ளோ பெரிய திறமையா.. கலக்கு" என்ற மகேஷின் குரலில் சந்தோசமா வருத்தமா என்று தெரியாத ஒரு கலவையான உணர்வு.
"சரி.. இந்த விசயம் உனக்கு மட்டும்தான் சொல்லியிருக்கேன், பாத்து வேற எவனுக்கும் பரப்பி விட்டுடாத"
"ச்சீ.. சொல்ல மாட்டேன்.. ஆமா பொண்ணு எப்படி, மேட்டர் மட்டுமா, இல்ல லவ், கல்யாணம் எல்லாமுமா"
"ஹி..ஹி.. கல்யாணமா.. அவ ஏற்கனவே கல்யாணம் ஆனவடா"
"அடப்பாவி, அப்புறம் அவ புருசன் சந்தேகப்பட மாட்டானாடா?"
"அவனுக்கு அவன் ஆபிஸை கட்டிட்டு அழவே நேரம் பத்தலை. மனுசன் ஊர் ஊரா சுத்துற வேலை வேற போல, இவளை அவன் சரியா கவனிச்சிகிட்டா அவ ஏன் என்னை கூப்பிடப்போறா"
"ம்ம்ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும். அப்புறம் ட்ரீட் எப்ப"
"இன்னிக்கு மத்தியானம் போயிட்டு வர்றேன், ராத்திரியே நாம மீட் பண்ணலாமாடா?"
"நீ வேறடா.. ஆபிஸ்ல வேலை கொல்லுறானுங்க.. போன வாரமே அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு மூணு நாள் லீவு போட்டுட்டு ஊருக்கு போனதுல வேலை சேந்து போச்சிடா, வர்ற சனிக்கிழமை கூட வேலை செய்யணும். என் பொண்டாட்டி தாளிச்சி எடுக்குறா.. ச்சே.. விடு ரெண்டு வாரம் கழிச்சி பாக்கலாம்டா"
"ஓகே.. நீ வேலைய பாரு மகேஷ்.. உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். நான் சாயங்காலம் கூப்பிடுறேன்.."
குமாரின் லைனை கட் செய்துவிட்டு ஒரு சின்ன புன்னகையுடன், மீண்டும் கம்ப்யூட்டரில் இருந்த அன்றைய பென்டிங் வேலைகளை பார்க்க ஆரம்பித்த மகேஷ் இரண்டு நிமிடங்கள் கழித்து ஃபோனை எடுத்து "ஹனி" என்று இருந்த பெயரை செலக்ட் செய்து பச்சை பட்டனை அழுத்தினான். மறுமுனையில் "தூது வருமா தூது வருமா" என்ற பாடலுடன் ரிங் போய் எடுத்தவுடன்
"ஹேய் ஹனி"
"ஹேய் என்னப்பா, வேலை நேரத்துல என் ஞாபகம் எல்லாம் கூட வருதா உனக்கு" என்றாள் அவன் தர்மபத்தினி..
"ஒண்ணுமில்லடா, தலை கொஞ்சம் வலிக்குது, இன்னிக்கு ஹாஃப் டே லீவு போட்டுட்டு வீட்டுக்கு வர்றேன், இன்னும் அரைமணி நேரத்துல வீட்டுல இருப்பேன்" என்றான்.
********
Thursday, October 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
sema boss
இதெல்லாம் எப்படிப்பா தோணுது உங்களுக்கு? கலக்குங்க
Post a Comment