தமிழ் பதிவுலகின் சமீபத்திய வளர்ச்சியைத் தன் விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் டுபாக்கூர் எஃப் எம், பதிவர் ஒருவரை வைத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறது. நிகழ்ச்சிக்கு "யூத்தான பதிவர் தேவை" என்ற விளம்பரம் பார்த்து சென்றவர்களில் கார்க்கி தேர்வு செய்யப்படுகிறார். முதல் நாள் மாலையில் இருந்தே காத்திருந்து தேர்வு ஆகாதததால் கோபத்துடன் அங்கிருந்து செல்கின்றனர் யூத் கேபிளும், நைஜீரியா ராகவனும்.
இதோ நிகழ்ச்சி ஆரம்பம்:
கார்க்கி: இது உங்க...ள் டுபாக்கூஊஊஊஊஊஊஊர் எஃப் எம்மின் "ஃபோனைப் போட்டு, கேளு பாட்டு" நிகழ்ச்ச்ச்ச்ச்ச்ச்சி.. உடனே உங்க ஃபோனை எடுத்து சிங்கிள் சீரோ டபுள் சீரோ ட்ரிபுள் சீரோ அடிங்க, எங்கிட்ட பேசுங்க, உங்களுக்கு புடிச்ச பாட்டை கேளுங்க
ட்ரிங்.. ட்ரிங்
ஹலோ.. இது டுபாக்கூர் எஃப் எம், நீங்க யாரு?
நானு விருகம்பாக்கத்துல இருந்து குர்சிம் பேசுறேங்க..
சொல்லுங்க குர்சிம், நீங்க என்ன பண்ணுறீங்க?
என்னத்த பண்ணுறது, ஒண்ணும் பண்ணாம சும்மாத்தான் இருக்கேன்.
ஏங்க இவ்ளோ சலிச்சிக்கிறீங்க? நல்ல விசயமே எதுவும் இல்லையா என்ன?
குடும்பத்தோட செலவு பண்ண நிறைய டைம் கிடைக்குது, நானும் சந்தோசமா இருக்கேன், என் ஃபேமிலியும் சந்தோசமாத்தான் இருக்கு
நல்ல விசயம்.. சரி சொல்லுங்க, உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?
"நான் செத்துப் பொழச்சவன்டா, எமனைப் பாத்து சிரிச்சவன்டா"
என்னது நீங்க சிரிக்கிறீங்களா? எத்தனை பேர் வயிறெரியப் போறாங்களோ!! அதெல்லாம் பழைய பாட்டு, இப்ப போட முடியாது.. அடுத்த காலரை பாப்போம்.
ட்ரிங்.. ட்ரிங்..
ஹலோ, யார் பேசுறீங்க?
நானு கோயமுத்தூர்ல இருந்து தென்கரை சூலன் பேசுறேங்க..
சொல்லுங்க சூலன், ஆயிரத்தில் ஒருவனைத் தவிர வேற எந்த படத்துல இருந்து வேணும்னா பாட்டு கேளுங்க, போடுறோம்.
எனக்கு சிம்லா ஸ்பெஷல்ல இருந்து
ஆப்பிள் வேணுமா?
யோவ் முழுசா கேளுய்யா, "உனக்கென்ன மேலே நின்றாய், ஓ நந்தலாலா" பாட்டு போடுங்க..
உங்களுக்கு ஏன் அந்த பாட்டு புடிக்கும் சூலன்?
அதுல ரெண்டு வரி வரும் பாருங்க..
யார் யாரோ நண்பன் என்று, ஏமாந்த நெஞ்சம் உண்டு
பால் போல கள்ளும் உண்டு, நிறத்தாலே ரெண்டும் ஒன்று
அப்படின்னு, அதுக்காகத்தான்
இருங்க.. தேடிப்பாக்குறேன், அட அந்த பாட்டும் இல்லைங்க.. இருங்க அடுத்த காலரை பாப்போம்.
ஹலோ இது டுபாக்கூர் டிவிங்களா?
இல்லைங்க, எஃப் எம்...
அப்படிங்களா, மாத்தி கூப்பிட்டுட்டேன் போல, கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு.
நீங்க எங்க இருந்து பேசுறீங்க?
நான் கீழ்பாக்கத்துல ஆஸ்பிட்டல்ல இருந்து பேசுறேன்.
(கார்க்கி மனதுக்குள்): அடப்பாவிங்களா, இதை எல்லாம் கண்பார்வையிலயே வெச்சுக்கமாட்டாங்களா, குறைஞ்சது ஃபோனையாவது கைக்கு எட்டாம வெக்க மாட்டாங்களா? (சத்தமாக) நீங்க ஃபோனை பக்கத்துல யாராவது அட்டென்ட்டர் இல்ல டாக்டர் இருந்தா குடுங்க..
நாம அடுத்த காலரை பாக்கலாம்.
ஒரு நிமிசம் இருங்க, எனக்கு ஒரு கால் வருது..
செல்ஃபோனில் "ஹா.. சொல்லு செல்லம்.. சாயங்காலம் மீட் பண்ணலாம்.. ஓகே. ஓகே.. ம்ம்ம்"
பேசி முடித்து மீண்டும் நிகழ்ச்சியில்,
சொல்லுங்க.. நீங்க யார் பேசுறீங்க?
நான் குப்துல்லா பேசுறேன்
சந்தோஷங்க! என்ன பாட்டு வேணும் உங்களுக்கு?
பாட்டெல்லாம் வேணாங்க. அதை நானே பாடி அடுத்தவங்களை கொன்னுக்குறேன்.ஒரே ஒரு வசனம் மட்டும் போடுங்க.
என்ன வசவுங்க.. ச்சீ.. வசனங்க??
இறைவா! என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று.எதிரிகளை நான் பாத்துக்குறேன்
ம்க்ம்.. இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல..
எல்லாம் ஆம்பளைங்களா கூப்பிடுறாங்கப்பா.. இதோ ஒரு பெண்ணோட குரல்
சொல்லுங்க மேடம், உங்க பேர் என்ன?
நான் மதுரையில இருந்து பேசுறேங்க, பேரு மஞ்சுளாங்க..
நல்ல மங்களகரமான பேருங்க.. சொல்லுங்க என்ன பாட்டு வேணும்?
எனக்கு "புதுமைப்பெண்" படத்துல இருந்து "ஒரு தென்றல் புயலாகி வருதே" பாட்டு போடுங்க
(சிறிது நேரத் தேடலுக்குப் பின்) அடடா அந்த பாட்டு இல்லைங்க, நன்றிங்க.. அடுத்த நேயரைப் பாக்குறேன்.
(கரடு முரடான ஒரு குரல்) டேய் ஒரு பெண் நேயர் கேக்குறப் பாட்டைப் போடாத பார்ப்பனப் பொறுக்கி தடியா?
ஹலோ என்னங்க, இப்படி பேசுறீங்க, நீங்க யாரு?
நான் தெனவு பேசுறேன்..
என்னது தெனவா? யேய்... நீதான கொஞ்ச நேரத்துக்கு முன்னால கீழ்பாக்கத்துல இருந்து பேசுன, இப்ப எதுக்கு வேற வாய்ஸில பேசுற..
அதெல்லாம் தெரியாது நீ ஒரு பொறுக்கி, உன் வீட்டுக்கு நாங்க வந்து ரகளை பண்ணுவோம்.
திடீரென அடுத்த குரல்... ச்சீ த்தூ.. ஆணாத்திக்க சமூகத்தின் நீட்சிதான் இந்த நிகழ்ச்சியே, ஒரு பெண் கேட்கும் பாடலைக் கூட ஒலிபரப்பாத நீங்கள் எல்லாம் நாய்களை விட கீழானவர்கள்.. த்தூ.. த்தூ.. த்தூ.. த்தூ..
ஏங்க, எதுக்கு இப்ப நாய்னெல்லாம் சொல்றீங்க, இந்த ப்ரோக்ராம் ரெக்கார்ட் ஆகிட்டு இருக்கு, போலீஸ்க்கு போவோம் தெரியும்ல?
க்ழ்லாஜ்டஜ்ட்ஃப அஜ்க்ல்த்ஃபாட் அட்ஃப்க்ஹடிஹ்
ஹலோ, ரீசீவரை தொடச்சிட்டு பேசுங்க, நீங்க துப்புன எச்சி ரிசீவர்ல ரொம்பி எனக்கு ஒண்ணுமே சரியா கேக்குல,
நாய் என்று நான் என்னையே சொல்லிகிட்டேன்
இன்னிக்குதான்யா நீ கரெக்டா பேசியிருக்க..
(குரல் மாறுகிறது) விடுங்க அங்கிள், நீங்க என்ன சொன்னாலும் சில பன்னிங்களுக்கு புரியாது
இதுக்கு அந்த ஆளே பரவாயில்ல, நாய்ன்னு மட்டும் சொன்னாரு, நீ என்னமோ பன்னின்ற, இன்னிக்கு என்ன எல்லாரும் கண்ணாடி முன்னால நின்னு பேசிட்டு இருக்கீங்களா?
இன்னிக்கு எனக்கு டைம் சரியில்ல.. அடுத்த காலரை பாப்போம்..
ஹலோ.. பேர சொல்லுங்க சார்..
டேய்.. நாதாரி..&*&^%$.
சார்.டீசண்ட்டா பேசுங்க.
எங்க வீட்டுக்கு நீ கால் போட்டா டீசண்ட்டா பேசனுமா?
சாரி. நீங்கதான் கால் பண்ணியிருக்கிங்க.
நீ முதல்ல பண்ணத பார்த்துட்டுதான் நான் பேசறேன்டா பேமானி
பேர் சொல்லுங்க சார்
நான் நெருப்பு நீலமேகம் பேசறேன்டா.
யாரு? வடிவேலு தீப்பொறி திருமுகமா வர்ற படத்துல சிங்கமுத்து வருவாரே, அந்த கேரக்டரா சார்?
உங்க ஸ்டூடியோவுக்கே வர்றேன்டா..
என்ன பாட்டு சார் வேணும்?
பாட்டா? உனக்கு வேட்டு வைக்க போறேன்டா.
(கார்க்கி சலிப்புடன் மனதிற்குள்) இன்னிக்கு எவன் முகத்துல விழிச்சேன்னு தெரியலையே.. அட சட்.. அந்த புது கண்ணாடிய பெட்டுக்கு நேரா மாட்டாதன்னு சொன்னேன், கேட்டாங்களா..
ஏதோ ஒரு எஸ்.டி.டீ கால் வருகிறது.
சொல்லுங்க சார் உங்க பேர்?
நான் பெங்களூர் பவா பேசுறேன்.
என்ன வேணும் சார்?
நியாயம் வேணும். ஆதாரம் வேணும்.
சார். அதெல்லாம் கிடைக்காது, என்ன பாட்டு வேணும்னு மட்டும் சொல்லுங்க..
போடா என் வென்ட்ரு.. என்னை ஒருத்தன் திட்டுறான்னு சொல்லிட்டு இருக்கேன், நீ பாட்டு கேக்குற..
நிகழ்ச்சி இயக்குனர் அவசர அவசரமாக உள்ளே வருகிறார். கையில் ஒரு நீளமான துணி..
என்னது இது? அடுத்த காலர் எங்க?
இதாண்டா அடுத்த காலர்.. வெளில இந்த நிகழ்ச்சியை கண்டிச்சும் ஆதரிச்சும் சட்டையக் கிழிச்சுட்டு சண்டை போட்டத சமாதானப்படுத்தப்போய் கிழிஞ்ச என்னோட சட்டை காலர்தான் இது, இந்தா வெச்சுக்க. மொதல்ல சீட்டை விட்டு எந்திரிச்சு ஓடிப்போய்டு.. ஆமா.
கார்க்கி எழும்முன் ஃபோன் அடிக்கிறது.. தெரியாமல் கை பட்டு அடுத்த முனையில் இருப்பவர் பேச ஆரம்பிக்கிறார்.
ஹலோ, நான் காதி பேசுறேங்க
(கார்க்கி மனதுக்குள்) நல்ல வேளை பேதின்னு சொல்லாம போனாரு..
சொல்லுங்க காதி, என்ன பாட்டு வேணும்?
பாட்டெல்லாம் வேணாங்க, ஒரு பேட்டி மட்டும்...
"மறுபடியும் ஆரம்பத்திலேர்ந்தா" என்ற அலறலுடன் பீதியாகி கார்க்கி, டைரக்டர் எல்லாம் பின்னங்கால் புடனியில் அடிக்க ஓடுகிறார்கள்.
Monday, July 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
51 comments:
கார்க்கி டோட்டல் டேமேஜ்...
அட்டகாசம் சிரிச்சு வயித்த வலிக்குது...
கடைசிவரைக்கும் யாருக்கும் பாட்டே போடுலியே??
:))
//முதல் நாள் மாலையில் இருந்தே காத்திருந்து தேர்வு ஆகாதததால் கோபத்துடன் அங்கிருந்து செல்கின்றனர் யூத் கேபிளும், நைஜீரியா ராகவனும்.//
நிரந்தர யூத்துகளை பகடி செய்யும் இந்த வரிகளை கண்டிக்கிறேன். //சொல்லுங்க காதி, என்ன பாட்டு வேணும்?
பாட்டெல்லாம் வேணாங்க, ஒரு பேட்டி மட்டும்... // இது ஜூப்பர்
நான் கீழ்பாக்கத்துல ஆஸ்பிட்டல்ல இருந்து பேசுறேன்.
//
உங்களுக்கு அங்க என்ன வேலை??
ஆஹா...... அண்ண தேர இழுத்து தெருவில விட்டுட்டாரு.............
பாட்டெல்லாம் வேணாங்க. அதை நானே பாடி அடுத்தவங்களை கொன்னுக்குறேன்.
//
ஹா ஹா அவ்வளவு டெரர் ஆளா அவரு??
:-))))
:))))
hospital eppadi pokanum?
லேபில் புனைவுனு இருக்கு ஒகே தான்
ஆனா பொற்சித்திரமா இது??
பொற்சித்திரங்கள் வேற மாதிரி இருக்காது??
நான் தெனவு பேசுறேன்..
//
பேச மாட்டாங்க
எழுத மட்டும் தான் தெரியும் ::))
ஆதியில் இருந்து தானா பிரச்சனை ஸ்டார்ட்டு :)
மனுசன் எஸ்கேப் ஆயி.... இருப்பாரே :)
:))))
வாரா வாரம் வலை விரிக்குறீங்களே.... வரிசையா வந்து மாட்டுவாங்களே......
நத்திங் பட் கலக்கல்
நல்ல பொருத்தமான பாட்டுக்கள்தான்.
நல்ல எழுத்தோவியம்.
நான் இதை ஒத்துக்க மாட்டேன்.
அட்டகாசம்..
பகடி, சொற்சித்திரம், புனைவு, கூட சிறுகதை, பேட்டின்னு கூட சேர்த்துக்கங்க.. ஹி..ஹி..
கேபிள் சங்கர்
நான் இதை ஒத்துக்க மாட்டேன்.
அட்டகாசம்..
பகடி, சொற்சித்திரம், புனைவு, கூட சிறுகதை, பேட்டின்னு கூட சேர்த்துக்கங்க.. ஹி..ஹி..
கேபிள் சங்கர்
//பேச மாட்டாங்க
எழுத மட்டும் தான் தெரியும் ::))//
அது கூட மண்டபத்துல யாராவது எழுதி கொடுத்தா அவங்க எழுதினதா போட்டுப்பாங்க..
அது கூட மண்டபத்துல யாராவது எழுதி கொடுத்தா அவங்க எழுதினதா போட்டுப்பாங்க
//
kalakkal
::)))
என்றாவது பதிவு போடுவது அதுவும் யாரையாவது சீண்ட வேண்டியது ::)
ஆஹா...... அண்ண தேர இழுத்து தெருவில விட்டுட்டாரு............
//
தேரு தெருவில் போகாமல்..
வெண்பூ தலையிலையா போகும்???
கடைசிவரைக்கும் யாருக்கும் பாட்டே போடுலியே??
//
அதான் டுபாகூரு என்று தெரிஞ்சிடுச்சே போய் போய் வேலையை பாருங்க ::)
புனைவை எழுதியவர் வீட்டிற்கு ஆட்டோ அனுப்பும் முயற்சி தடுக்கப்பட்டது. நன்றி அந்தப் பத்திரிக்கையாளாருக்கு.
புனைவை காப்பி எடுத்து தமிழின் அத்தனை முண்ணனிப் பத்திரிக்கைகளுக்கும் அனுப்பிய அந்தப் பதிவருக்கு நன்றி.
இதை எழுதலைன்னா வரலாறு என்னை மன்னிக்காது.
டோட்டல் டேமேஜ்.. எனக்கும் கூட
பகடியான இடுகையில் சீரியசான மறுமொழிக்கு மன்னிக்கவும்.
நண்பர் வடகரை வேலனின் மறுமொழி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இரண்டாவதாக அவர் குறிப்பிட்டது உண்மையானால், அந்த பத்திரிகையாளரை வன்மையாக கண்டிக்கிறேன். இதுபோன்ற செய்கைகளை ஆதரிப்பது பாசிசத்துக்கே அழைத்துச் செல்லும்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
//
வடகரை வேலன் said...
புனைவை காப்பி எடுத்து தமிழின் அத்தனை முண்ணனிப் பத்திரிக்கைகளுக்கும் அனுப்பிய அந்தப் பதிவருக்கு நன்றி.
//
எனக்குத் தெரிஞ்சு நம்ம நர்சிம் பி.ஆர்.ஓ. வேலைக்கு யாரையும் அப்பாயின்ட் பண்ணலையே. வாலன்டியரா வந்து இந்த சேவை எல்லாம் செய்யுறாங்களா அண்ணாச்சி?
இவனுங்க எல்லாம்தான் இலக்கியத்தையும், தமிழையும் வளர்க்கப் போறாங்களாக்கும்.
followup
எங்க பத்திரிக்கைக்கு அந்த புனைவு வரவில்லை, நிதியின் புனைவுதான் வந்துச்சு, அதுமாதிரி ஏதும் இருந்தா அனுப்பவும்.
//புனைவை எழுதியவர் வீட்டிற்கு ஆட்டோ அனுப்பும் முயற்சி தடுக்கப்பட்டது. நன்றி அந்தப் பத்திரிக்கையாளாருக்கு.
//
அண்ணாச்சி இப்ப எல்லாம் பிளாக் வெச்சிருக்கும் எல்லாரும் புனைவு எழுதுறாங்க, இதில் நீங்க சொல்வது எந்த பிளாக்கரை?
//இவனுங்க எல்லாம்தான் இலக்கியத்தையும், தமிழையும் வளர்க்கப் போறாங்களாக்கும்.//
ஆத்தா ஆடு வளத்துச்சு கோழி வளத்துச்சு ஆனா தமிழை வளக்கவில்லையே:(((
// மங்களூர் சிவா said...
கடைசிவரைக்கும் யாருக்கும் பாட்டே போடுலியே??
:))
//
அட நீங்க வேற சிவா, போன வாரம் சென்னையில் பிட்டு படத்துக்கு போனா, கடைசி வரை பிட்டே போடவில்லை. கேபிள் சங்கர் தான் இதுக்கு ஏதும் ஏற்பாடு செய்யனும், ச்சே ச்சே அப்படி இல்ல... எந்த படத்தில் பிட்டு நல்லா இருக்கு எங்க தியேட்டரில் பிட்டு ஒழுங்கா போடுவாங்க என்று சொல்லனும்.
16 வயதினிலே கமல் said...
//இவனுங்க எல்லாம்தான் இலக்கியத்தையும், தமிழையும் வளர்க்கப் போறாங்களாக்கும்.//
ஆத்தா ஆடு வளத்துச்சு கோழி வளத்துச்சு ஆனா தமிழை வளக்கவில்லையே:(((//
:)))))
சிம்ப்ளி சூபர்ப்...
//நிகழ்ச்சி இயக்குனர் அவசர அவசரமாக உள்ளே வருகிறார். கையில் ஒரு நீளமான துணி..
என்னது இது? அடுத்த காலர் எங்க?
இதாண்டா அடுத்த காலர்.. வெளில இந்த நிகழ்ச்சியை கண்டிச்சும் ஆதரிச்சும் சட்டையக் கிழிச்சுட்டு சண்டை போட்டத சமாதானப்படுத்தப்போய் கிழிஞ்ச என்னோட சட்டை காலர்தான் இது, இந்தா வெச்சுக்க. மொதல்ல சீட்டை விட்டு எந்திரிச்சு ஓடிப்போய்டு.. ஆமா.
//
மொத்தப் பதிவிலும் இந்த இடம்தான் பாயாசத்தில் முந்திரி போல, ஐஸ்க்ரீமில் செர்ரி போல, முதல் காதலியின் முதல் முத்தம்போல சிறப்பாய் இருக்கிறது. சூப்பர்..!
மஹேஷ் வழங்கும் "பின்னூட்டம் போடு... உடு ஜூட்டு"
:))))))))))))))))))))))))
//மொத்தப் பதிவிலும் இந்த இடம்தான் பாயாசத்தில் முந்திரி போல, ஐஸ்க்ரீமில் செர்ரி போல, முதல் காதலியின் முதல் முத்தம்போல சிறப்பாய் இருக்கிறது. சூப்பர்..///
:)))
வாயில நல்லா வருது.. சிரிச்சிட்டு போறேன்
//இதுபோன்ற செய்கைகளை ஆதரிப்பது பாசிசத்துக்கே அழைத்துச் செல்லும்./
ங்கொய்யால.. வீட்டுக்கு ஆள் அனுப்புவோம்னு எழுதியது என்ன இசமாம்?
வெண்பூ, நோட் பண்ணிக்கொங்க. அடுத்த வருஷம் ஒரு பிரச்சினை வரும்.அப்போ ”பதில்கள்” பதிவுல இவர் எழுதுவார் “வெண்பூ என்பவர் ஒரு வருடமாகவே பிரச்சனை செய்பவர்”னு..
காமெடி பதிவு என்பதால் “ஹிஹிஹி”போட்டுக்கிறேன்
.
பரிசல், நிஜமாவே அந்த இடம்தான் பிடிச்சிருக்கா? அப்ப இதை குறும்படமா எடுக்குறப்ப உங்கள அந்த ரோலுக்கு ஃபிக்ஸ் பண்ணிடலாமா? :))))
கலக்கல் !!!
நீங்களும் டெரர் ஆகலாமுனு பாக்குறீங்க ஒன்னும் நடக்க மாட்டங்குது :)
அன்பின் சிவராமன்,
நர்சிம் வீட்டிற்கும், கார்க்கி வீட்டிற்கும் ஆட்டோவில் ”தடி”யர்களை அனுப்ப ஏற்பாடு நடந்தது; செய்தவர் சென்னையைச் சேர்ந்தவர் அல்ல. வெளியூரில் இருந்து இது ஏற்பாடு செய்யப்படது. ஆனால் பத்திரிக்கை உலக நண்பர் ஒருவர்,”வேண்டாம்ங்க, கதைகள் கட்டுரைகள் என எழுதி பிரசுரமாகி உள்ளதால் நர்சிம்முக்கு விகடன் குழுமத்தில் கொஞ்சம் வாய்ஸ் இருக்கு. ஜூ வி யில் எழுதினார் என்றால் உங்கள் வேலை பறிபோகும் அபாயம் இருக்கிறது” என்று எச்சரித்தபின் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
பிறகுதான் அதே நபர் இரண்டாம் வேலையைச் செய்திருக்கிறார். இது என்ன விதமான எதிர்வினை?
அவர், இந்த விவகாரத்தில் உங்களுடன் கைகோர்த்து தீவிர எதிர்வினை ஆற்றியவர் என்பது இங்கே கூடுதல் தகவல்.
அண்ணாச்சி,
நீங்கள் எழுதியிருப்பவை உண்மை என்றால் வெட்கப்படுகிறேன், அதை விட அதிகமாக ஆத்திரப்படுகிறேன்.
அதேநேரம், பத்திரிக்கைகளின் பெயர்களை இங்கே எழுதுவது பிரச்சினையை திசை திருப்ப ஏதுவாகும் என்பதால் உங்கள் பின்னூட்டத்தை அழிக்கிறேன். மன்னிக்கவும்.
:-))))))))
:-))))))))
:-))))))))
:-))))))))
Simply Superr venpu.....
Parisal,
krrrrrrrrrrr..
@ப்ரியமுடன் வசந்த் : டேமேஜ் கார்க்கிக்கு மட்டும்னா நினைக்குறீங்க? :))
@பெங்களூர் சாரி மங்களூர் சிவா: எதுக்கு பாட்டு, அதுதான் எ(ச்)சப்பாட்டு பாடுறாங்களே, போதும் போதும்ன்ற அளவுக்கு
@தராசு: நான் எங்க கேபிளையும், நைஜிரியா ராகவனையும் பகடி பண்ணுறேன், அவங்க ரெண்டு பேரும்தான் யூத்துன்னு சொல்லி நம்மள எல்லாம் பகடி பண்ணிட்டு இருக்காங்க.. :)
@ங்கொய்யா: யார்ப்பா நீயி? உன் ஐடியிலயே வரலாமே...
@கிரி, @டிவிஆர்.. நன்றி
@கார்க்கி: எந்த ஆஸ்பிட்டல் சகா??? ஜெனரல் ஆஸ்பிட்டல்னா விஜயாக்கு போங்க, கீழ்பாக்கம்னா, ஸாரி ஐம் நாட் தெ ரைட் பர்சன்.. ஹி..ஹி..
@கண்ணா: என்ன வலை, என்ன வரிசை, புரியலையே.. :)
@ராகவன் @கேபிள் @வெடிகுண்டு முருகேசன்: ரசிச்சதுக்கு நன்றி..
@நக்கீரன் பசுபால் மற்றும் அடுத்த மூணு அனானிகள்.. ரசிச்சதுக்கு நன்றி
@சென்ஷி: பின்னூட்டத்தையும் படிச்சி ரசித்ததுக்கு நன்றி
@மஹேஷ்: நீங்கதான் தலைப்புக்கு எதுகை மோனையா சரியா பின்னூட்டியிருக்கீங்க.. நன்றி
@கார்க்கி: நானும் "ஹி..ஹி.." போட்டுக்குறேன்.
@தமிழ்ப்பறவை: ???
@மின்னல்: உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா.. ஹி..ஹி.. :)
@ச்சின்னப்பையன் @சந்தோஷ்.. நன்றி
@இரும்புத்திரை: சொற்சமாதி, கலக்கல் வார்த்தை, பார்க்கலாம் யூஸ் பண்ணிக்க முடியுதான்னு..
இடையில நான்வேற ஊறுகாயா?!?!
:)))))
ROFL...oru tamashuthaan ponga
செமையான பதிவு. இதுக்கு இவ்ளோ தாமசமாகவா பின்னூட்டுகிறேன்? அவ்வ்..
Post a Comment