Wednesday, March 31, 2010

சங்கம்: சில(ர்) சொல்ல தயங்கும் கருத்துகள்

மதிப்பிற்குரிய வலையுலக நண்பர்களுக்கு,

சென்னை வலைப்பதிவர் சங்கம் (அ) குழுமம் ஆரம்பித்தல் தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் நிகழும் எந்த விச‌ய‌மும் த‌மிழ் வ‌லையுல‌க‌ எதிர்கால‌த்திற்கு ந‌ல்ல‌தாக‌ப் ப‌ட‌வில்லை. புதிதாக‌ பார்ப்ப‌வ‌ர்க‌ள் / வருபவர்கள் "இவ்வ‌ள‌வு அர‌சிய‌லா இங்கே?" என்று நினைத்து வில‌க‌க்கூடிய‌ அள‌வுக்கு பிர‌ச்சினைக‌ள் பேச‌ப்ப‌டுகின்ற‌ன‌, எதிர்வினையாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌, ப‌தில‌ளிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. பெரும்பாலானோருக்கு ஏன் இவ்வ‌ள‌வு பிர‌ச்சினை என்றே புரிய‌வில்லை. பிர‌ச்சினைக்குக் கார‌ண‌ம் தெரிந்த‌வ‌ர்க‌ள் க‌றுப்பும் வெள்ளையுமாக‌ ப‌திவிட‌வும் முன்வ‌ர‌வில்லை.

த‌ற்போதைய‌ பிர‌ச்சினைக‌ள் குறித்த‌ என் பார்வையே இந்த‌ ப‌திவு. அதே நேர‌ம் விவ‌ர‌ம் அறிந்த‌ ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ளின் மன‌திலும் இதே எண்ண‌ ஓட்ட‌ங்க‌ள் இருக்கும் என்ப‌தையும் அறிந்தே இருப்ப‌தால் இந்த‌ ப‌திவு எழுதுவ‌து அவ‌சிய‌மாகிற‌து.

பின்புலம்:
வலைப்பதிவுகள் முன் எப்போதையும் விட அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களாலும், திரைத்துறையினராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருவது உண்மை. சமீபத்தில் லீனா மணிமேகலை பிரச்சினை குறித்து ஜூனியர் விகடனில் வந்த கட்டுரையும், அதிக அளவில் கதை, கவிதைகளை அச்சு ஊடகங்களில் பார்க்க முடிவதும், "கம்ப்யூட்டர் இருந்தா என்ன வேணும்னா சினிமாவைப் பத்தி எழுதுறாங்க" என்ற ரீதியில் வரும் பேட்டிகளுமே இதற்கு அத்தாட்சி.

சமீபத்திய கேபிள் சங்கர் & பரிசல் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த இயக்குனர் சி.எஸ்.அமுதன் "என் படத்தோட முதல் ரிசல்ட்டை நான் தெரிஞ்சுகிட்டதே பரிசல்காரனோட வலைதளத்துல இருந்துதான்" என்று சொல்லியதில் இருந்தே வலைப்பூக்களின் வீச்சையும், திரைத்துறையினர் அதற்கு தரும் முக்கியத்துவத்தையும் உணரலாம்.

இது மட்டுமின்றி, வலைப்பூக்களின் வளர்ச்சி இன்னும் அபரிதமாக இருக்கும் என்பதில் இதை எழுதும் எனக்கோ அல்லது படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கோ எந்த சந்தேகமும் இருக்கப் போவதில்லை. ஆகவே ஊடகங்களும், திரைத்துறையினரும் வலைப்பதிவர்களின் மீது இன்னும் அதிக அளவில் கவனிப்பை செலுத்தப் போகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்வோம்.

தற்போதைய நிகழ்வுகளை இந்த பின்புலத்துடனேயே அணுக வேண்டி இருக்கிறது.

சில கேள்விகளும், என் கருத்துகளும்:
இப்போது பொதுவான சில கேள்விகள் எல்லோருக்கும் இருக்கின்றன.

1. வலையுலக சூழ்நிலை இப்படி இருக்கிறது, சரி. இப்போது சங்கம் ஆரம்பிக்க வேண்டிய தேவை / நோக்கம் என்ன?
2. இவ்வளவு அவசர அவசரமாக கூட்டத்தைக் கூட்டி, முடிவெடுப்பதாகக் காட்டி, ப்ளாக்கர் ஃப்ரொஃபைல் உருவாக்கி, வலைப்பூவை உருவாக்கி, அதில் எழுத்துப் பிழைகளைக் கூட சரி செய்யாமல் அவசரமாக பதிவிட வேண்டிய நிர்பந்தம் என்ன?
3. பதிவுலகில் மிகவும் மதிக்கப்படும் / அனைவரும் அறிந்த / மூத்த பதிவர்களே இது குறித்து கேள்விகள் எழுப்புவது ஏன்?
4. ஏன் ஒரு ஒருமித்த கருத்து ஏற்படுத்த முன் நிற்பவர்கள் முயலவில்லை? அல்லது அப்படி ஒரு கருத்து ஏற்படும் வரை பொறுத்திருக்க முடியவில்லை?

இந்த எல்லா கேள்விகளுக்கும் என்னைப் பொறுத்தவரை ஒரே காரணம்தான் தோன்றுகிறது. இந்த சங்கம்/குழுமம் பதிவர்களுக்காகவோ அல்லது பதிவர் நலனுக்காகவோ ஏற்படுத்தப்படவில்லை. முற்றிலும் முன்னெடுத்துச் செல்பவர்களின் சொந்த நலனுக்காவே துவங்கப்படுகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எப்படி?

1. சமீபத்திய லீனா மணிமேகலை குறித்த ஜூவி கட்டுரையையே எடுத்துக் கொள்வோம். அது குறித்து சம்பந்தப்படவர்கள் மட்டுமின்றி பலதரப்பட்டவர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டன. ஒரு எழுத்தாளர், அரசியல்வாதி, பெண்ணியல்வாதி, பதிவர் என்ற ரீதியில். தற்சமயம் சங்கம் என்ற ஒன்று இல்லாத நிலையில் ஒரு வலைப்பதிவர் என்ற முறையில் நண்பர் அப்துல்லாவிடம் கேட்கப்பட்டிருந்தது. ஒரு உறுதியான சங்கம் அமைந்தால் "சென்னை வலைப்பதிவர் சங்கத் தலைவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்" என்ற ரீதியில் அவர்களிடம்தான் கருத்து கேட்க எல்லா ஊடகங்களும் விரும்பும்.

2. திரைத்துறையைச் சேர்ந்த இயக்குனர்கள், கலைஞர்கள் வலைப்பதிவர்களை வெகுசுலபமாக அடைய இந்த சங்கத்தின் நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதையே விரும்புவார்கள்.

3. சென்னை மாரத்தான் (அ) எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழா போன்ற பொது விழாக்களில் வலைப்பதிவர்களின் பிரதிநிதியாக இந்த சங்கத்தின் தலைவரோ நிர்வாகிகளோ மேடையேற்றப்படுவார்கள்.

எப்படிப் பார்த்தாலும் வலைப்பதிவர்கள் அனைவருக்குமான ஒட்டுமொத்த பிரதிநிதியாக இந்த சங்க நிர்வாகிகள் முன்நிறுத்தப்படுவார்கள். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இதைவிட வேறு நல்ல வழிமுறை இல்லையென்றே தோன்றுகிறது.

இந்த சங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் யாருக்கும் சங்கத்தின் நிர்வாகி ஆகும் எண்ணம் இல்லை என்று யாரும் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அன்றைய கூட்டத்தில் நடந்ததும், அதன் பின்னான பின்னூட்ட பதில்களும், பதிவுகளும் அவர்களுக்கு தங்களை நிர்வாகிகளாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற அளவு கடந்த ஆசையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

உண்மையில் இந்த சங்கத்திற்கு நிர்வாகிகளாக தகுதி பெற்றவர்கள் யார்? நம் ஒவ்வொரு பதிவுகளையும் உலகிற்கு கொண்டு சேர்க்கும் தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகளை நடத்துபவர்களும், தன் கைக்காசைப் போட்டு பதிவர்களின் எழுத்துகளை அச்சில் கொண்டு வரும் பதிப்பாளர்களும் (உதாரணம் அகநாழிகை வாசு, கிழக்கு பத்ரி, நாகரத்னா குகன்) மற்றும் அவ்வப்போது போட்டிகளையும் பட்டறைகளையும் நடத்தி பதிவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் உரையாடல் நண்பர்களும்தான்.

ஆனால் இவர்கள் யாரையும் முன்னிறுத்தாமல் தங்களை முன்னிறுத்திக் கொள்ள விழைவது மட்டுமில்லாமல் "இந்த சங்கம் ஆரம்பிப்பதில் உரையாடல் குழுவினருக்கு விருப்பமில்லை / மாசம் ஒரு படம் காட்டுங்க போதும்" என்ற ரீதியிலான வசைகளையும் பொழியும் சோ கால்டு சங்க நிறுவனர்கள் சாதிக்கப் போவதுதான் என்ன?

ஆதார‌ங்க‌ள்:
சரி, இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளதான் சங்கம் ஆரம்பிக்கிறார்கள் என்று எப்படி சொல்கிறாய், ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, இவர்கள் போட்ட பின்னூட்டங்களையும் பதிவுகளையும் ஒருமுறை படியுங்கள். அதே போல் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ப்ளாக்கர் ப்ரொஃபைலையும் ஒரு முறை பாருங்கள்.

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்

அக்டோபர் 2009ல் இருந்து இந்த ப்ரொஃபைல் இருக்கிறது. ஏன் இதுவரை யாருடனும் விவாதிக்கப்படவில்லை, யார் இதை உருவாக்கியது, ஏன் இத்தனை நாட்களாக இது குறித்து மவுனமாக இருந்தார்கள், இப்போது ஏன் திடீரென்று ஒரே வாரத்தில் எல்லாவற்றையும் செய்ய நினைக்கிறார்கள், அப்படி என்றால் யாருக்கும் தெரியாமல் இத்தனை நாட்களாக திரைமறைவு வேலைகள் நடந்து வந்ததா?

நான் ஏன் இதை எழுதுகிறேன்?
அமைதியாக சிறு சிறு ஊடல்களுடன் மட்டுமே சென்று கொண்டிருக்கும் தமிழ் வலைப்பதிவுலகை இந்த நிகழ்வு சுக்கு நூறாக சிதைத்துவிடும் என்று நான் அஞ்சுவது முதல் காரணம்.

பைத்தியக்காரனுக்கும் வாசுவுக்குமே உரசல் வந்திருப்பதும், லக்கியின் இன்றைய பதிவுமே அத‌ற்கு உதார‌ண‌ம்.

அடுத்தது, இந்த சங்கம் ஆரம்பிப்பது குறித்த மாற்றுக் கருத்துகளை அவர்கள் எதிர்கொண்ட விதம், முக்கியமாக பைத்தியக்காரன் அவர்கள் மீதான வசை. ஒரு மூத்த பதிவரையே இப்படி நடத்துபவர்கள் சங்க நிர்வாகிகளாக இருந்தால் ம‌ற்ற‌ இளைய‌, புதிய‌ ப‌திவ‌ர்க‌ள் எப்ப‌டி ந‌ட‌த்த‌ப்ப‌டுவார்க‌ள் என்று எழுந்த‌ ப‌ய‌ம்.

பெரும்பாலான பதிவர்களின் மனதிலும் இதே இருப்பதாக நான் கருதுகிறேன், ஆனால் ஏனோ அவர்கள் சொல்லத் தயங்குவதாகப் படுகிறது. அப்பட்டமான உண்மைகளைப் பேசுவதன் மூலம் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையே முக்கிய காரணம்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக காரணம், எனக்கு பைத்தியக்காரனும் நண்பர், கேபிள் சங்கரும் நண்பர், லக்கிலுக்கும் நண்பர். இவர்களுடன் சில விசயங்களில் மாற்றுக் கருத்து கொண்டிருந்தாலும் அது கருத்து அளவில் மட்டுமே. இந்த பிரச்சினையின் மூலம் இவர்கள் யாருடனான நட்பும் முறிவதை நான் விரும்பவில்லை என்பதே இதை எழுதத் தூண்டியது.

எழுதுவதற்கான தகுதி:
இவ்ளோ பேசுறியே நீ இதை எழுதுறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு? என்று கேட்பார்களேயானால், "தமிழ் வலைப்பதிவர்கள்" என்ற வார்த்தை குறிக்கும் குழுவில் நானும் ஒரு சிறு பகுதி. அவர்கள் தங்களைப் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொள்ள முயல்வது என்னையும் உள்ளிட்ட குழுவிற்குதான். என்னை மற்றவர்கள் தங்களின் நலனுக்காக உபயோகப்படுத்திக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை என்பதாலும் என் கருத்துகளை மிக நீண்ட யோசனைக்குப் பின் வெளியிடுகிறேன்.

கடைசியாக, உங்களை சுய விளம்பரப் படுத்திக் கொள்ள வலைப்பதிவர்களாகிய எங்களை உபயோகித்துக் கொள்ளாதீர்கள். வலைப்பதிவர்களிடையே கருத்துப் பரிமாற்றம் (அ) அவர்கள் மூலம் சமூகத்திற்கு நல்லது செய்தல் (அ) வலைப்பதிவர்கள் சிறப்பாக செயல்பட உதவுதல் போன்ற காரணங்களுக்காக யார் என்ன குழுமம் / சங்கம் துவங்கினாலும் நான் என்னை இணைத்துக் கொள்வது மட்டுமல்ல, ஆக்கப்பூர்வமாக செயல்படவும் ஆயத்தமாகவே இருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

86 comments:

said...

+1

வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன் வெண்பூ...

said...

arumai nanbare

said...

அன்பின் வெண்பூ,

நண்பர் வாசுவுக்கும் எனக்கும் உரசல் எதுவுமில்லை என்பதை அழுத்தமாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

உங்கள் இடுகையுடன் முழுக்க உடன்படுகிறேன்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

said...

எல்லா கருத்துகளையும் ஒத்துக்கொள்ள முடியல.. அந்த ப்ரோபைல் யாரிடமோ இருந்து இருக்கலாம்...இப்ப இவங்க எடுத்து இருக்கலாம்.

ஆனா மத்தபடி ஒரு பதிந்த சங்கம் நமக்குள் சண்டைகளை அதிகமாக்கும் போன்ற கருத்துக்கள் உடன் உடன்படுகிறேன்..

said...

சரவெடி !

வெண்பூவிற்குள் ஒரு பூகம்பம் !

:-)

said...

+1

வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன் வெண்பூ...

said...

வெண்பூ..,
தமிழ் வலைப்பதிவர்கள் சங்கம் என்ற பொது பெயரை சென்னையில் இருக்கும் ஒரு சிலர் மட்டும் எப்படி பயன்படுத்தலாம்...?

அப்போது தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளில் இருக்கும் எல்லா பதிவர்களின் பிரதிநிதிகளாக அவர்களின் சம்மதமின்றி சென்னைவாழ் பதிவர்களே தங்களைதாங்களே முன்னிலைப்படுத்திக்கொள்ளலாமா..?

என்ன அரசியலோ....
காந்தி பெயரை நேரு குடும்பம் பயனபடுத்திவருவதைப்போல...

said...

//தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளில் இருக்கும் எல்லா பதிவர்களின் பிரதிநிதிகளாக அவர்களின் சம்மதமின்றி சென்னைவாழ் பதிவர்களே தங்களைதாங்களே முன்னிலைப்படுத்திக்கொள்ளலாமா..?//

அப்ப தமிழ்நாடு, இந்தியா தாண்டி அமீரகம், வளைகுடா, அமேரிக்கா, ஐரோப்பாவுல இருக்குற தமிழ்ப் பதிவர்கள் தமிழ்ல எழுதலையா? ;)

said...

//பெரும்பாலானோருக்கு ஏன் இவ்வ‌ள‌வு பிர‌ச்சினை என்றே புரிய‌வில்லை. //

இந்தப் பெரும்பாலோர்களில் அடியேனும் ஒருவன்.

said...

தெளிவாகவும், நிதானமாகவும் யோசித்து இருக்கிறீர்கள் வெண்பூ. இந்தப் பக்குவத்தோடு அனைவரும் சிந்தித்தால், நல்ல விளைவுகள் ஏற்படும் என எண்ணுகிறேன்.

said...

மிக நல்ல பதிவு. நிச்சயம் தேவையான பதிவு..
மற்றும் சில விளக்கங்கள். வெண்பூ

அந்த ஐடி அக்டோபர் 2009 ல் இருப்பதற்கு காரணம். அது என்னுடய ஐடி.. அதனால்.

அதன பிறகு எனக்கும் பைத்தியக்காரனுக்குமோ, அல்லது லக்கியிடமோ, மற்றும் யாருடனோ..ஏதும் உரசல்கள் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.

பதிவர்களுக்காக யார் எதை செய்தாலும் நானும் அதை மனமார்ந்து இணைந்து பணியாற்றுவேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

said...

//அந்த ஐடி அக்டோபர் 2009 ல் இருப்பதற்கு காரணம். அது என்னுடய ஐடி.. அதனால்.
//

கேபிள்,
உங்களுடைய ஐடி அக்டோபர் 2006ல இருந்து இருக்குது ஆனா இந்த ஐடி 2009ல இருந்து காட்டுது...

said...

நல்ல கருத்துகள் வெண்பூ.

said...

100% உண்மை

said...

// வெட்டிப்பயல் said...

//அந்த ஐடி அக்டோபர் 2009 ல் இருப்பதற்கு காரணம். அது என்னுடய ஐடி.. அதனால்.
//

கேபிள்,
உங்களுடைய ஐடி அக்டோபர் 2006ல இருந்து இருக்குது ஆனா இந்த ஐடி 2009ல இருந்து காட்டுது...//

ஒருவரே ஒன்றிற்கு மேற்பட்ட பதிவர் கணக்குகள் வைத்திருக்க முடியும். வேறு பெயரில் இருந்திருக்கலாம். அது இப்பொழுது அது பெயர் மாற்றம் பெற்று விளம்பரப்படுத்தப்பட்டியிருக்கலாம்.

பிரச்சனை குவியும் மையம் இதுவல்ல !

சங்கம் தன் கடமையை செய்யும் said...

வெண்பூ உங்களை சங்கத்திலிருந்து உடனடியாக நீக்குகிறோம்.

said...

என்னது அந்த பிளாக் அக்டோபர் மாசமே ஓப்பன் பண்ணிட்டாங்களா..

said...

ஹலோ அடிக்கடி பதிவு போடுங்க..

said...

கருத்து ஏதும் சொல்லாமல் போனால்.. நான் விளக்கப்படுவேனோ என்ற அச்சத்தில் இதில் பின்னூட்டமிருகிறேன்.

1. சென்ஷின் பதிவுக்கு விடை இங்கே கிடைச்சது.

2. வெண்பூ மொக்கை போடுவதில் சிறந்தவர் என்று தெரியும்.. பதிவு சிந்திக்க தூண்டுகிறது.

3. என் பின்னூட்டத்தை வைத்து இங்கும் மற்றவர்கள் பாகச - கடையை திறக்காமல் இருக்கவேணும் என்ற பயம் உள்ளது.

said...

வலைப்பதிவாளர்களுக்கு திரட்டியே அதிகம், சங்கமெல்லாம் தேவையா என்று இன்னும் எனக்குப்புரியல

said...

@ பாலபாரதி

ஓரு நாளைக்கு ஓரு கருத்துதான் சொல்லணும்ங்கற சங்கத்து விதிய மீறி 3 கருத்து பாய்ண்ட் போட்டு சொன்னதால சங்கத்த விட்டு விலக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்..

@ அனைவருக்கும்

எல்லாரும் இந்த பிரச்சினையை தட்டையாக அணுகுவதுதான் பிரச்சினையே..

said...

ம்ம்..

சங்கத்து சிங்கத்து மேலயே கை வைக்கிறீங்க...:))

said...

வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன் ! :)

ரிபிட்டே சொல்லுவோர் சங்கம்.. said...

//ஒருவரே ஒன்றிற்கு மேற்பட்ட பதிவர் கணக்குகள் வைத்திருக்க முடியும். வேறு பெயரில் இருந்திருக்கலாம். அது இப்பொழுது அது பெயர் மாற்றம் பெற்று விளம்பரப்படுத்தப்பட்டியிருக்கலாம்.

பிரச்சனை குவியும் மையம் இதுவல்ல !//

ரிப்பிட்டே..

said...

//பிரச்சனை குவியும் மையம் இதுவல்ல !//

அப்ப எதுன்னு சொல்லிட்டா சரியா அங்கேயே போய் கும்மலாம் :)

சாப்பிடுவோர் சங்கம் said...

@ கண்ணா

//எல்லாரும் இந்த பிரச்சினையை தட்டையாக அணுகுவதுதான் பிரச்சினையே..//

இனிமேல் எல்லோரும் தட்டையாக அணுகாமல்.. முறுக்கு, சீடை, அதிரசமாக அணுகும் படி வேண்டப்படுகிறார்கள்.

மொக்கை விரும்புவோர் சங்கம் said...

@ நீ ஆதவன்

//சரியா அங்கேயே போய் கும்மலாம் :)//

இன்றைய கும்மல் இங்கே தான்.. கும்மவும்... :)

said...

ஓக்கே டன் :)

said...

// ஆயில்யன் said...

வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன் ! :)//

எப்படி பாஸ்? பதிவு படிக்கும் போது ஒவ்வொரு வார்த்தைக்கும் ‘ஆமாஞ்சாமி’ன்னு தலைய ஆட்டிகிட்டே இருந்தீங்களா?

said...

//☀நான் ஆதவன்☀ said...

//பிரச்சனை குவியும் மையம் இதுவல்ல !//

அப்ப எதுன்னு சொல்லிட்டா சரியா அங்கேயே போய் கும்மலாம் :)//

lol ;))))

said...

//
3. என் பின்னூட்டத்தை வைத்து இங்கும் மற்றவர்கள் பாகச - கடையை திறக்காமல் இருக்கவேணும் என்ற பயம் உள்ளது.//

குசும்பரே கமான்........

said...

//இன்றைய கும்மல் இங்கே தான்.. கும்மவும்... :)//

குசும்பன், சென்ஷி உள்ளிட்ட நண்பர்களே... சீக்கிரமாக ஒரு கும்மி இடுகையை போட்டு, இந்த இடுகையை காப்பாற்றவும் :)

said...

சங்கம்’ன்னு பேரு வச்சா போட்டியா பத்மம், ரூபம்னு ஆரம்பிக்க போறாங்கப்பா.

said...

மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்கள், அதுவரை சரி.

சங்கம் அமைப்பதையே கேள்விக்கு உள்ளாக்கி விட்டு, அப்புறம் அதற்கு நிர்வாகிகளாக இருப்பதற்கு இன்னார் இன்னாருக்குத் தான் தகுதி இருக்கிறது என்று ஒரு பட்டியல் சொல்லியிருப்பது நெருடுகிறதே!

அதைவிட, இந்த முயற்சியை முற்றிலும் முன்னெடுத்துச் செல்பவர்களின் சொந்த நலனுக்காவே துவங்கப்படுகிறது என்று சொல்லியிருக்கிறீர்கள்.

அதே சொந்த நலன்களுக்காகத் தான் அங்கே சிலர் எதிர்க்கவும் செய்தார்களோ?

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று சொல்வார்கள்! நீங்கள் குற்றங்களை அடுக்கியிருக்கும் விதத்தைப் பார்த்தால், எழுத்துப் பிழைகளுக்காகத் தூக்கு தண்டனையே விதித்துவிட சிபாரிசு செய்வீர்கள் போல இருக்கிறது!

கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள், குற்றம் மட்டுமே பார்க்கப் போகிறீர்களா? அல்லது சக வலைப் பதிவர்களைச் சுற்றமாகவும் பார்க்கப் போகிறீர்களா?

said...

//
ஒருவரே ஒன்றிற்கு மேற்பட்ட பதிவர் கணக்குகள் வைத்திருக்க முடியும். வேறு பெயரில் இருந்திருக்கலாம். அது இப்பொழுது அது பெயர் மாற்றம் பெற்று விளம்பரப்படுத்தப்பட்டியிருக்கலாம்.

பிரச்சனை குவியும் மையம் இதுவல்ல !

//

ஏற்றுக் கொள்கிறேன்...

said...

//குசும்பன், சென்ஷி உள்ளிட்ட நண்பர்களே... சீக்கிரமாக ஒரு கும்மி இடுகையை போட்டு, இந்த இடுகையை காப்பாற்றவும் :)//

எனக்கென்னவோ அதை போட்டதே குசும்பர் தான்னு ஒரு டவுட்டு இருக்குது :)

said...

//1. சென்ஷின் பதிவுக்கு விடை இங்கே கிடைச்சது.
//

நான் எப்ப கேள்வி கேட்டேன் தல :)

said...

//3. என் பின்னூட்டத்தை வைத்து இங்கும் மற்றவர்கள் பாகச - கடையை திறக்காமல் இருக்கவேணும் என்ற பயம் உள்ளது.//

சாரி தல.. உங்களுக்குன்னு தனிக்கடை தொறக்க வேண்டியிருக்குது.

நம்ம தலயோட சங்கம் எந்தக் குடைக்கு கீழும் போகாதுன்னு நம்பறேன் :)

said...

//சென்ஷி said...

நான் எப்ப கேள்வி கேட்டேன் தல //

தலய எதுக்கு பேசுனதால சென்ஷியை சங்கத்த விட்டு தூக்குங்க...

ராஸ்கல் சின்னபுள்ளத்தனமா குறுக்க குறுக்க பேசிட்டு.....

said...

// கண்ணா.. said...

//சென்ஷி said...

நான் எப்ப கேள்வி கேட்டேன் தல //

தலய எதுக்கு பேசுனதால சென்ஷியை சங்கத்த விட்டு தூக்குங்க...

ராஸ்கல் சின்னபுள்ளத்தனமா குறுக்க குறுக்க பேசிட்டு.....//

இப்படி எல்லாம் பேசினா உம்மை சங்கத்துல சேர்த்துப்பாங்கன்னு நினைக்காதப்பா... சங்கத்துல சாதாரணமாவெல்லாம் சேர முடியாது.

said...

ஒரு தென்றல் புயலாகி வருதே....


//அக்டோபர் 2009ல் இருந்து இந்த ப்ரொஃபைல் இருக்கிறது. //

அடங்கொக்கமக்கா! :-(

said...

@ நான் ஆதவன்

சங்கத்துல சேர என்னென்ன பேஸிக் குவாலிபிகேஷன் வேணும்னு சொன்னீங்கன்னா... உங்களுக்கு புண்ணியமா போவும் சாமியோவ்....

said...

//சங்கத்துல சேர என்னென்ன பேஸிக் குவாலிபிகேஷன் வேணும்னு சொன்னீங்கன்னா... உங்களுக்கு புண்ணியமா போவும் சாமியோவ்....

//

இப்படி கேள்வி எல்லாம் கேட்க கூடாது. அது தான் முதல் குவாலிபிகேஷன்...

said...

//சங்கத்துல சேர என்னென்ன பேஸிக் குவாலிபிகேஷன் வேணும்னு சொன்னீங்கன்னா... உங்களுக்கு புண்ணியமா போவும் சாமியோவ்....//

கண்ணா.. எந்த சங்கத்தை பற்றி கேக்குறன்னு தெரியலையேப்பூ.. ஏன்னா.. என் ரத்தத்தை உறிஞ்சி எடுக்க ஒரு கும்பல் அலையுது.. :(

தெளிவா சொல்லீடு சாமீ!

said...

எனக்கு ஒரிரு கருத்து மாறுபாடு இருந்தாலும் பெரும்பாலானவை உடன்பாடுதான்.

நான் பிரச்சனைகளாக நினைப்பது

-இதில் அப்துல்லா முனைப்பாக இருக்கின்றான் என்று சிலர் நினைத்தால் அவர்கள் மனதில் இது திமுக சங்கமாக தோன்ற வாய்ப்புண்டு. அதே சஞ்சய் என்ரால் காங்கிரஸ் சங்கமாகவோ வினவு நண்பர்களில் எவரேனும் ஒருவராக இருந்தால் கம்யூனிஸ்ட் சங்கமாகவோ தோன்றிவிடும்.எனவே சங்கமாக இல்லாமல் நண்பர்களாகவே கூடிக் கலைவது நல்லதோ எனத் தோன்றுகின்றது.


- பத்திரிக்கையாளர்களுக்கெல்லாம் சங்கம் இருப்பதுபோல் பதிவர்களுக்கு இருந்தால் என்ன என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகின்றது. பத்திரிக்கைகள் வணிக அமைப்பு. நிருபர்கள் வேலையாட்கள். முதல் நாள் விகடனில் இருந்துவிட்டு மறுநாள் குமுதத்தில் வேலை செய்யமுடியும். ஒரு வணிக அமைப்பாக அவர்களது நலமும்,தொழிலும் பாதுகாக்கப்பட அவர்களுக்கு சங்கம் அவசியம்.ஆனால் நம் பிளாக் வணிகமும் அல்ல. நாம் நம்ம பிளாக்கைவிட்டு அடுத்த பிளாக்கில் எழுதும் வேலையாட்களும் அல்ல.இங்கு இருப்பது தனித்தனி ராஜ்யங்கள்தான். அவரவர் பிரச்சனையை அவரவர் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். பிரச்சனை விரும்பாதவர் சமையல் குறிப்போ, வாகன பராமரிப்போ எழுதிவிட்டு போக வேண்டியதுதான்.

எனது முடிவாக நான் சொல்வது சென்னையில் இருக்கும் அத்தனை பிளாக்கர்களும் ஒரு மெயில் ஃபோரம் வைத்துக்கொள்வோம். யாருக்கேனும் உதவிகள்,ஆலோசனைகள் தேவையெனில் அதன் மூலம் செய்து கொள்வோம். ரெஜிஸ்டர்ட் சங்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

said...

ககக போ!

said...

வெண்பூ லேட்டா வந்தாலும் தெளிவாதான் இருக்கிங்க போல...

said...

எனக்கு ஒரிரு கருத்து மாறுபாடு இருந்தாலும் பெரும்பாலானவை உடன்பாடுதான்.

நான் பிரச்சனைகளாக நினைப்பது

-இதில் அப்துல்லா முனைப்பாக இருக்கின்றான் என்று சிலர் நினைத்தால் அவர்கள் மனதில் இது திமுக சங்கமாக தோன்ற வாய்ப்புண்டு. அதே சஞ்சய் என்ரால் காங்கிரஸ் சங்கமாகவோ வினவு நண்பர்களில் எவரேனும் ஒருவராக இருந்தால் கம்யூனிஸ்ட் சங்கமாகவோ தோன்றிவிடும்.எனவே சங்கமாக இல்லாமல் நண்பர்களாகவே கூடிக் கலைவது நல்லதோ எனத் தோன்றுகின்றது.


- பத்திரிக்கையாளர்களுக்கெல்லாம் சங்கம் இருப்பதுபோல் பதிவர்களுக்கு இருந்தால் என்ன என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகின்றது. பத்திரிக்கைகள் வணிக அமைப்பு. நிருபர்கள் வேலையாட்கள். முதல் நாள் விகடனில் இருந்துவிட்டு மறுநாள் குமுதத்தில் வேலை செய்யமுடியும். ஒரு வணிக அமைப்பாக அவர்களது நலமும்,தொழிலும் பாதுகாக்கப்பட அவர்களுக்கு சங்கம் அவசியம்.ஆனால் நம் பிளாக் வணிகமும் அல்ல. நாம் நம்ம பிளாக்கைவிட்டு அடுத்த பிளாக்கில் எழுதும் வேலையாட்களும் அல்ல.இங்கு இருப்பது தனித்தனி ராஜ்யங்கள்தான். அவரவர் பிரச்சனையை அவரவர் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். பிரச்சனை விரும்பாதவர் சமையல் குறிப்போ, வாகன பராமரிப்போ எழுதிவிட்டு போக வேண்டியதுதான்.

எனது முடிவாக நான் சொல்வது சென்னையில் இருக்கும் அத்தனை பிளாக்கர்களும் ஒரு மெயில் ஃபோரம் வைத்துக்கொள்வோம். யாருக்கேனும் உதவிகள்,ஆலோசனைகள் தேவையெனில் அதன் மூலம் செய்து கொள்வோம். ரெஜிஸ்டர்ட் சங்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

said...

இங்கும் கும்மியா? நகைச்சுவையுணர்வு அற்புதம்.

மிக வெளிப்படையான நல்ல வாதங்களைக் கொண்ட பதிவில்.. வாதங்களை முன்னெடுத்துச் செல்வதை விட்டு கும்ம ஆரம்பித்ததில், ஸாரி வெண்பூ, விடை கிடைக்கப்போவதில்லை என்றே தோன்றுகிறது.

said...

தம்பி அப்துல்லா.. ஏன் ரெண்டு தரம் சொல்லி இருக்கீங்க..!

இதுக்குப் பெயர் தான் அழுத்தமா சொல்லுவதா?

said...

பாபாஜி,

நான் என்ன ரஜினியா “ஒருதடவை சொன்னா நூறுதடவை சொன்னமாதிரி” ஆகுறதுக்கு?!?!

நான் ஒருதடவை சொன்னா ஒரேதடவை சொன்ன மாதிரிதான்.அதுனால ஒரு எஃபெக்ட்டுக்கு ரெண்டாவதுவாட்டி சொன்னேன் :))

said...

'பதவி மற்றும் புகழ்' ஆசைதான் பின்னணி என்று சொல்லியிருக்கிறீர்கள். முன்னிற்பவர்கள் நம் நண்பர்களாச்சே என்று நான் அதை நம்பத்தயாராக இல்லை எனினும்.. அப்படியான சூழலே அது யாராக இருந்தாலும் வந்து சேரும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் சங்கத்தின் நோக்கமாக உண்மைத்தமிழன் எழுதியிருக்கும் பதிவு மிகுந்த சோர்வைத்தருகிறது.

ஆணியே புடுங்க வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது, லக்கியைப்போல.!

said...

arumai venpoo.

said...

அன்புள்ள வெண்பூ

பதிவு பலவிதத்திலும் யோசிக்கச் செய்தது. நீங்கள் குறிப்பிட்டது போல் சிவராமன் (பைத்தியக்காரன்) அவர்களுக்கும் எனக்கும் எந்த உரசலும் இல்லை. அவருடைய பதிவில் நான் அளித்திருக்கும் பின்னூட்டம் எதற்கு என்பதை வாசித்தால் தெரியும். புறப்படும் போது நான் இல்லை என்ற தனது ஆதங்கத்தை அவர் தெரிவித்திருந்தார், அதற்கான பதில்தான். அது மேலும் அவரைப் போலவே அங்கே என்ன நடக்கிறது என்பதை காணும் ஆவலில்தான் வந்திருந்தேன்.


//March 31, 2010 9:15 AM
பைத்தியக்காரன் said...
அன்பின் வெண்பூ,

நண்பர் வாசுவுக்கும் எனக்கும் உரசல் எதுவுமில்லை என்பதை அழுத்தமாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

உங்கள் இடுகையுடன் முழுக்க உடன்படுகிறேன்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்//

நன்றி சிவராமன்.

said...

உண்மையார் பதிவில் என் பின்னூட்டம் :

////இது 'நண்பர்கள் குழுமம்' போல வேறு பெயரில் சில நண்பர்கள் இணைந்து மட்டுமே செய்யவிருக்கும் காரியங்கள் எனில் நண்பன் என்ற முறையில் கண்டிப்பாக நானும் இணைவேன்.

ஆனால் இந்த நோக்கங்களுக்காக ஒரு பதிவராக என்னால் குழுமத்தில் இணைய முடியாது. மேலும் பதிவர் என்ற முறையில் 'தமிழ் வலைப்பதிவர் குழுமம்' என்ற பெயரைப் பயன்படுத்தவும் என் எதிர்ப்பைத் தெரிவிப்பேன். ////

said...

உங்களுடைய கருத்தை தெளிவா சொல்லி இருக்கீங்க வெண்பூ.

Very nice...

said...

என் blog delete ஆகி ரொம்ப நாளா ஆச்சு, அப்ப நான் அபிப்ராயம் சொல்லலாமா கூடாதா?

said...

வெண்பூ ! யாராச்சும் என்னை கிள்ளுங்களேன்:)

said...

//குசும்பன் said...
வெண்பூ ! யாராச்சும் என்னை கிள்ளுங்களேன்:)//

இடுகையும் சரி
இந்த மறுமொழியும் சரி

சரி டைமிங்

said...

ஒரு மைனஸ் ஓட்டு கூட விழாமல் இருப்பது, சங்க அமைப்பளார்களின் நல்லெண்ணத்தை காட்டுகிற்து. எனவே நான் சங்கத்திற்கு ஆதரவளிக்கிறேன்..ஹிஹிஹி

said...

இங்கு கும்மி அடித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சொல்லிக்க விரும்புவது, மொக்கை, டம்மி பதிவில் கும்முவது வேறு, இதுபோல் பிரச்சினையினை நடுநிலையோடு சொல்லும் பதிவில் கும்முவது வேறு.
உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்யாமல் இருக்கனும் கும்மி நண்பர்களே.

இப்படிக்கு
சாத்தான் வேதம் ஓதுகிறது.

(நான் பல பதிவுகளில் கும்மி அடிச்சிருக்கிறேன்,ஆனால் பதிவினை நீர்த்துபோகசெய்ததில்லை)

said...

டேய் செவப்பு சட்ட....(அடங்கொன்னியான்..ஏரியா மாறி வந்துட்டோம் போலருக்கு....இவனுங்க வேற என்ன பேசுரானுங்கன்னே புரியலியே...சோத்துக்கு ஆசப்பட்டு வந்தது தப்பா போச்சே!)

said...

///கருத்து ஏதும் சொல்லாமல் போனால்.. நான் விளக்கப்படுவேனோ என்ற அச்சத்தில் இதில் பின்னூட்டமிருகிறேன். ///

விலக்கறதுக்கு சின்ன ல போடனும் தல. தலையிலே கொட்டிப்புடுவேன்.

செ.ரவி,
பாகச பழைய மெம்பர்.

வெண்பூ +5.

நல்ல இடுகை !!!!

said...

http://tamilbloggersforum.blogspot.com/ - திடீர்னு காணலை. அய்யய்யோ. அப்படின்னா சங்கமெல்லாம் இல்லையா?

Jeevan - Non Blogger said...

உண்மை .. சிலர் தங்களின் விளம்பரத்துக்காகவே சங்கம் ஆரம்பிபதகவே படுகிறது..
இங்கே பல கட்சி ஆதரவாளர் , பல நடிகர் ரசிகர்கள். பல கருத்துக்களில் முரண்பாடு எல்லாம் இருக்கும் போது.. தலைவர் என்ற பெயரில் ஒருவர் ஊடகத்தில் தன் கருத்தை அனைத்து பதிவர் கருத்தாக கூறிடும் போது , நிச்சயம் அது பதிவர்கள் இடத்தில் பெரிய பிளவை ஏற்படுத்தும்..
நாளையே கூகிள் பிளாக்க்கு காசு வாங்கினால் பதிவர்கள் பலர் காணமல் போய்விடுவர்.. அப்புறம் சங்கம் என்னவாகும்?
இன்று போலவே, பதிவர் கூட்டம் என்று இருத்தலே போதும்

திரு truetamil தன் என்பவர் பதிவின் மூலம் தான் தலைமை பண்பு இல்லை என்பதை நிருபித்துவிட்டார்

said...

Dear Narsim,
I don't think anyone would have answered venpoos questions even if there isn't any gummi. Even I have asked similar questions in sivaraman's blog and in my blog.

said...

/
சென்ஷி said...

//தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளில் இருக்கும் எல்லா பதிவர்களின் பிரதிநிதிகளாக அவர்களின் சம்மதமின்றி சென்னைவாழ் பதிவர்களே தங்களைதாங்களே முன்னிலைப்படுத்திக்கொள்ளலாமா..?//

அப்ப தமிழ்நாடு, இந்தியா தாண்டி அமீரகம், வளைகுடா, அமேரிக்கா, ஐரோப்பாவுல இருக்குற தமிழ்ப் பதிவர்கள் தமிழ்ல எழுதலையா? ;)
/

REPEAT

said...

நண்பர்களே,

வெளிப்படையாக பேசுவதன் மூலம் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையிலேயே இந்த பதிவை எழுதினேன், இந்த முயற்சி பலன் அளித்திருப்பதாகவே எண்ணுகிறேன்.

இங்கே பின்னூட்டத்தின் மூலம் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ள அனைத்து பதிவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிவை எழுதியபோதே இதிலிருந்து எழும் பின்னூட்டக் கேள்விகளுக்கு பதில் சொல்வது பிரச்சினையை திசை திருப்பக்கூடும் என்பதால் பதில் சொல்வது இல்லை என்று முடிவெடுத்திருந்தேன். அதனால் இங்கே சில கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தாலும் அவற்றிற்கு நான் பதில் அளிக்கப் போவதில்லை.

மிக வருத்தத்துடனேயே இந்த பதிவை எழுதிய எனக்கு இந்த பதிவின் மூலம் கிடைத்த மிகப் பெரிய மகிழ்ச்சிகள்
1. தங்களுக்குள் எந்த உரசலும் இல்லை என்று அகநாழிகை வாசு அவர்களும், பைத்தியக்காரன் அவர்களும் சொல்லியிருப்பது
2. யாருடனும் பிணக்குகள் இல்லை என்று கேபிள் சங்கர் அவர்கள் சொல்லியிருப்பது

நட்புடன்,
வெண்பூ

Anonymous said...

யாரோ ஒரு அநாமதேயம்!!!

ஏம்பா எங்களுக்குளார ஜண்டயே லேதன்டின்னு சிவராமன்,வாசு, சங்கரநாயரணகாரு இவங்கல்லாம் இங்க எய்திட்டா.. அது இன்னா ஸ்டே வாங்க முடியாத சுப்ரீம் கோர்ட் இன்ஜெக்சனா? இல்ல எங்களுகுள்ளார லடாய் கீதுன்னு சொல்லி உங்க இடுகையை உன்மையின்னு நிரூபிக்க ஆராச்சும் மின்னால வருவாங்களா.. அருமையா பதிவெழுதிட்டு டுபாக்கூர் மேரி பின்னூட்டமெ போட்டீங்களே பூவு!!!

யாரோ ஒரு அநாமதேயம்!!!

said...

உங்கள் கருத்துகளுக்கும் நன்றி அனானி.. உண்மையில் நான் ஒரு மொக்கை பதிவர்தான் (உங்கள் மொழியில் டுபாக்கூர்). எவ்வளவுதான் மறைக்க நினைத்தாலும் பின்னூட்டத்தின் வாயிலாகவது அந்த மொக்கைத்தனம் வெளிவந்து விடுகிறது அவ்வளவே. நன்றி.

said...

வெண்பூ, தங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.

ஒரு விஷயம் நாம் யோசிக்க வேண்டும்.. நாம் சங்கத்தில் சேரவில்லை என்றாலும்.. "தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்" முன்னெடுத்துச் செல்லப்படும் போது.. இந்த சங்க நிர்வாகிகளின் வெளியிடப் போகும் கருத்துக்கள் ஒட்டுமொத்த வலையுலகின் கருத்துக்களாக பார்க்கப்படும் அபாயம் இருக்கிறது...

எதைப் பேசினாலும் சங்க உறுப்பினர்களின் கருத்துக்களை அறிந்து பேச நிர்வாகிகள் தயாராக இருப்பார்களா? ஒரு வேளை அப்படி தயாராக இருந்தாலும் ஒரு பதிவராக இவர்களுடைய கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுமே..?

Anonymous said...

சங்கம் அமைத்தால்... ப்ளாக் என்பதன் கான்செப்டையே குலைத்துவிடும் என்று கருதுகிறேன். உங்கள் இடுகை முழுக்க முழுக்க சரியானதே.

பதிவுலகம் குறித்த விழிப்பு உணர்வு
பதிவுக்கு மிக்க நன்றி.

(இந்த இடுகைக்கு தமிழிஷில் இதுவரை (இந்திய நேரப்படி காலை 8.50, ஏப்.1,2010) வெறும் 2 ஓட்டுகளே விழுந்துள்ளது வருத்தத்துக்குரியது.)

- சிரவணன்

- சிரவணன்

said...

என்ன நடக்குது இங்கே?

வாட் ஈஸ் ஹேப்பனிங் ஹியர்?

- லேட்டா வந்த மேஜர் சுந்தர்ராஜன்

said...

+1

said...

//+1//

வெட்டிப்பயல்,

+2,+3 எல்லாம் கூட போட முடியுமா?

த.செ.சொ.த©

இறைவன் said...

இப்படியே ஒருத்தர ஒருத்தர் குறை சொல்லிக்கொண்டே போனால் நஷ்டம் நமக்குதான்..

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டட்டமம்

அதனால் இந்த விசயத்தை இத்தோடு விட்டு விட்டு நடந்த அனைத்தையும் மறந்துவிட்டு நடக்க வேண்டியதை கவனியுங்கள்.

மீண்டும் அனைவரும் ஒன்று கூடி பதிவர்களுக்கு சங்கம் அவசியமா? இதனால் என்ன என்ன சாத்திய கூறுகள் இருக்கிறது போன்றவற்றை பொறுமையாக விவாதியுங்கள்

ஊர் கூடி உலக தமிழ் பதிவர்களோடு தேர் இழுப்போம்

வாழ்த்துக்கள்
இறைவன்

said...

இந்தச் சிறு சிறு பிணக்குகளைத் தாண்டி, இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.

said...

//http://tamilbloggersforum.blogspot.com/ - திடீர்னு காணலை. அய்யய்யோ. அப்படின்னா சங்கமெல்லாம் இல்லையா?///

நீங்க நெனைச்சமாதிரியே !!!

said...

///செந்தழல் ரவி said...

//http://tamilbloggersforum.blogspot.com/ - திடீர்னு காணலை. அய்யய்யோ. அப்படின்னா சங்கமெல்லாம் இல்லையா?///

நீங்க நெனைச்சமாதிரியே !!!
///
இருக்கிறதே
துபாயில் வருகிறதே
துபாய் நேரம் :11.15PM

said...

உண்மை தமிழன் முருகன் கிட்ட சொல்லி உங்களுக்கும் ஒரு வடை வாங்கி கொடுப்பருங்க. சங்கத்துல சேருங்க.

said...

ஆளாளுக்கு இப்புடி பேசிக்கிட்டே இருந்தா எப்புடிப்பா? இப்ப சங்கம் இருக்கா இல்லையா?

said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

http://www.thalaivan.com/button.html


Visit our website for more information http://www.thalaivan.com

Anonymous said...

ஓ... இம்பூட்டு மேட்டர் நடந்துட்டு இருக்கா? இது தொடர்பாக நான் படிக்கும் மொத பதிவு இது தான்.. ஒரு வாரம் ஆள் இல்லைனா பயம் விட்டு போய்டுது.. :)

//மேலும் சங்கத்தின் நோக்கமாக உண்மைத்தமிழன் எழுதியிருக்கும் பதிவு மிகுந்த சோர்வைத்தருகிறது.//

தோடா, பெரிசா கண்டு பிடிச்சிட்டார் தொர.. அவர் பதிவு படிச்சி டயர்ட் ஆகாதவங்க ஒலகத்துல வேற யாரும் இருக்காங்களாக்கும்.. :)

Anonymous said...

ஓ... இம்பூட்டு மேட்டர் நடந்துட்டு இருக்கா? இது தொடர்பாக நான் படிக்கும் மொத பதிவு இது தான்.. ஒரு வாரம் ஆள் இல்லைனா பயம் விட்டு போய்டுது.. :)

//மேலும் சங்கத்தின் நோக்கமாக உண்மைத்தமிழன் எழுதியிருக்கும் பதிவு மிகுந்த சோர்வைத்தருகிறது.//

தோடா, பெரிசா கண்டு பிடிச்சிட்டார் தொர.. அவர் பதிவு படிச்சி டயர்ட் ஆகாதவங்க ஒலகத்துல வேற யாரும் இருக்காங்களாக்கும்.. :)

சஞ்சய்

Anonymous said...

tamil chemozhi manathuku alupudika intha sangam use agalam in future oru MP post sangathu alugku kidkalam

said...

இரண்டாவது முறையாக வருகை.இப்படியான விவாத பக்கங்கள் கூட இருப்பது இப்பொழுதுதான் தெரிய வருகிறது.

ஆதிமூல கிருஷ்ணன்,நர்சிம் போன்றவர்களின் கருத்துகளையும் படித்தேன்.

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.அதென்ன சென்னைன்னா அரசியல்,சினிமா,பத்திரிகைன்னு எல்லாமே குழம்பிய குட்டையிலேயே மீன் பிடிக்கற மனோபாவம்:)

உதாரணத்துக்கு சட்டக்கல்லூரி கலாட்டாக்கள்,சட்டமும்,காவல்துறையும் மோதிக்கொண்டவை.இயக்குநர்களுக்கும் பெப்சிக்கும் சண்டை.தி.மு.க வலது பக்கம் போனால் அ.தி.மு.க நான் இடது பக்கம்தான் போவேன் என்னும் வீம்பு,ஈழத்தில் எல்லா கட்சிகளும் ஒன்றாக இணைகிறதா பிரிக்கிறேன் பார் சூழ்ச்சி.

முதல் வேலையா தலைநகர தூக்கி வேற எந்த இடத்திலியாவது உட்கார வச்சாத்தான் எல்லாம் சரியாகும் போல இருக்குது:)

(மருத்துவர் ராமதாஸ் பக்கத்துல இருக்காரா!இரண்டா பிரிச்சிடலாமுன்னு முன்னாடியே ஐடியா வச்சிகிட்டு சுத்திகிட்டு திரியறார்)