Monday, October 19, 2009

இரண்டு புத்தகங்கள் + இரண்டு திரைப்படங்கள் + ஒரு தத்துவம்

புத்தகம் 1: எரியும் பனிக்காடு:
நாம் தினமும் குடிக்கும் தேநீரின் பின்னால் இருக்கும் கறுப்பு சரித்திரத்தை சொல்லும் ரெட் டீ (Red Tea) என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழ் வடிவம்தான் இந்த புத்தகம். ஆங்கிலத்தில் பி.எச்.டேனியல் அவர்களால் எழுதப்பட்டு, தமிழில் இரா.முருகவேள் அவர்களால் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த புத்தகம், 1920களில் மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டம் அமைக்க இந்திய ஏழைகளின் வாழ்க்கையை சூறையாடிய வெள்ளையர்கள் + இந்தியர்களின் வாழ்க்கையை சொல்லும் இரத்தம் தோய்ந்த வரலாறு.

தமிழகத்தில் நடக்கும் கதை, ஆங்கிலத்தில் எழுதப்பட்டு மீண்டும் தமிழில் மொழிபெயர்ப்பது சவாலான விசயம். அந்த பகுதி மக்கள் அந்த காலகட்டத்தில் பேசிய மொழியை எழுத்தில் கொண்டுவந்திருக்கும் முருகவேள் பாராட்டப்பட வேண்டியவர்.

அவசியம் படிக்கப்பட வேண்டிய புத்தகங்களின் வரிசையில் முதல் சில இடங்களில் இருக்கும் புத்தகம் இது என்று சொன்னால் அது மிகையில்லை.

இந்த புத்தகம் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் விமர்சனம் இங்கே.

திரைப்படம் 1: Hangover:
சமீபத்தில் நான் பார்த்து ரசித்த சிறந்த பொழுதுபோக்கு படங்களில் ஒன்று. படத்தின் நான்கு ஹீரோக்களில் ஒருவனது பேச்சிலர் பார்ட்டியை கொண்டாட லாஸ் வேகாஸ் நகருக்கு செல்பவர்கள், தாங்கள் தங்கும் ஹோட்டலின் மொட்டைமாடியில் உட்கார்ந்து தண்ணியடிக்க ஆரம்பிக்கிறார்கள். காலையில் தங்கள் அறையில் விழித்து எழுந்தால் முதல் நாள் நடந்தது எதுவும் நினைவில் இல்லை என்ற நிலையில், அறையில் பாத்ரூமில் ஒரு புலி உறும, கப்போர்டில் குழந்தை அழ, இவர்கள் கார் என்று ஒரு போலீஸ் காரை கொண்டு வந்து ஹோட்டல் சிப்பந்தி நிறுத்த என்று குழப்பத்தின் மேல் குழப்பமாக ஆரம்பித்து அனைத்தும் சுபமாக முடிவதுதான் கதை.

தமிழில் உல்டா பண்ண அருமையான திரைக்கதை. யார் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

எனக்கு இந்த படத்தை அறிமுகப்படுத்திய கேபிள் சங்கரின் விமர்சனம் இங்கே.

புத்தகம் 2: Pirate Latitudes:
ஜுராஸிக் பார்க் எழுதிய மைக்கேல் கிரிக்டன் போன வருடம் இறந்த பிறகு அவரது கணிணியை நோண்டிக் கொண்டிருந்த அவரது உதவியாளர் கண்டுபிடித்த இதுவரை வெளிவராத இரண்டு நாவல்களில் ஒன்று "பைரேட் லாட்டிட்யூட்ஸ்". கிரிக்டனால் முழுவதுமாக‌ எழுதி முடிக்கப்பட்டிருந்த இந்த நாவல் நவம்பர் இறுதியில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கிடைத்துள்ள இன்னொரு முடிக்கப்படாத நாவலை எழுதி முடிக்க எழுத்தாளரை தேடிக்கொண்டிருக்கிறாராம் பதிப்பாளர். ஒரு அப்ளிகேஷன் போடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். :)

சுஜாதாவோட கணிணியையும் யாராவது நோண்டுங்கப்பா, உங்களுக்கு புண்ணியமா போகட்டும்.

திரைப்படம் 2: 2012:
உலகின் மிகப்பெரிய அழிவு எது நடந்தாலும் அல்லது நடக்கப்போவதாக தெரிந்தாலும் அதை படமாக்குவது ஹாலிவுட் இயக்குனர்களுக்குக் கை வந்த கலை. டைட்டானிக், 9/11, உலகப்போர்கள் என்ற பெரிய அழிவுகளை வெற்றிப்படங்களாக்கியவர்கள் அவர்கள். இன்டிபென்டன்ஸ் டே, காட்ஸில்லா, டே ஆஃப்டர் டுமாரோ ஃபேன்டஸி படங்களின் இயக்குனர் ரோலன்ட் எம்மரிக் இயக்கி நவம்பர் 13ல் வெளிவர இருக்கும் 2012 படம், 2012ல் உலகம் அழியும் என்ற கருத்தை ஒட்டி எடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனரின் முந்தைய படங்களைப் போலவே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் ட்ரைலரே மிரட்டுகிறது. சும்மாவா பின்ன, 260 மில்லியன் டாலர் பட்ஜெட்டாச்சே (சுமாராக 1300 கோடி ரூபாய்). ஏறத்தாழ தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியின் ஐந்து வருட பட்ஜெட்டை விட இந்த ஒரு படத்தின் பட்ஜெட் கொஞ்சம் அதிகம்தான்.

நான் அதிகம் எதிர்பார்க்கும் படம் இது.

தத்துவம்:
நான் தற்போது படித்துக்கொண்டிருக்கும் சன்ஸ் ஆஃப் ஃபார்சூன் (Sons Of Fortune) கதையில் எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் (Jeffrey Archer) கொடுத்திருக்கும் ஆலிவர் ஹோம்ஸ்(Oliver Wendell Homes)ன் ஒரு தத்துவம் இன்றைய பதிவுலகத்திற்கு பொருத்தமாக தோன்றியது.

'Beat a man with the strength of your argument, not the strength of your arm'

26 comments:

said...

மேட்டர் நல்லா இருக்கே...

said...

அட... மீ தெ பஷ்டூ......

said...

தகவல்களுக்கு நன்றி.

Hangover பார்த்துவிட்டேன் நீங்கள் கூறியது போல "ரசித்த சிறந்த பொழுதுபோக்கு படங்களில் ஒன்று".

said...

தோட்டத் தொழிலாளர்களைப் பற்றிய கதையை பற்றிய விமரிசனம் நன்றாக இருந்தது. எஸ்.ராவுக்கு நன்றி!

ஆலிவர் ட்விஸ்ட் நாவலின் முதல் அத்தியாயமே, தொழிற்புரட்சிக்குப் பின் லண்டனின் அன்றைய கொடூர முகத்தை, கிராமங்களிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு, தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளான மக்களைப் பற்றிய ஒரு சரியான அறிமுகமாகத் தான் ஆரம்பிக்கும். படித்திருக்கிறீர்களா?

/'Beat a man with the strength of your argument, not the strength of your arm'/

மூக்கு உடைபடுவதற்கு முன்னால் சொல்லியிருந்தால், கவனிக்கப்படாமலேயே போயிருந்திருக்கக் கூடிய எத்தனையோ மேற்கோள்களில் இதுவும் ஒன்றாக இருந்திருக்குமோ:-(

said...

/'Beat a man with the strength of your argument, not the strength of your arm'//

situational தத்துவம்..:)

said...

ஹேங்க் ஓவர் பார்த்தாச்சு. நல்லா சிரிக்க வைச்ச படம் :)

//சுஜாதாவோட கணிணியையும் யாராவது நோண்டுங்கப்பா, உங்களுக்கு புண்ணியமா போகட்டும்.//

வழிமொழிகிறேன்...!

said...

கடைசியில போட்ட தத்துவம் ரொம்ப சோக்கா இருக்கு வெண்பூ...

said...

வாங்க மஹேஷ்.. பாராட்டுக்கு நன்றி..

வாங்க மாதேவி.. பாராட்டுக்கு நன்றி..

வாங்க கிருஷ்ணமூர்த்தி.. ஆலிவர் ட்விஸ்ட் இன்னும் படித்ததில்லை. அறிமுகத்திற்கு நன்றி.

வாங்க கேபிள்.. அதை படிச்சவுடனே எனக்கும் இதேதான் தோணியது, அதனால்தான் எழுதினேன்.

வாங்க சென்ஷி.. கண்டிப்பா சுஜாதாவும் எதாவது எழுதியிருப்பார். எப்போது வெளிவரும் என்று தெரியவில்லை.

வாங்க ஜாக்கி.. பாராட்டுக்கு நன்றி..

said...

ரைட்டு.. ஆர்க்யுமெண்ட்ட தொடங்குவோமா சகா?

said...

ஆஹா... இந்த மாசத்துல மூணு பதிவு வெண்பூ போட்டிருக்காரு... என்னாச்சு, உடம்பு சரியில்லையா :) :) :)

said...

//
கார்க்கி said...
ரைட்டு.. ஆர்க்யுமெண்ட்ட தொடங்குவோமா சகா?
//

தாராளமா.. ஆனா பேச்சு பேச்சாத்தான் இருக்கணும், பாத்துக்கோ சகா.. அப்புறம் இன்னொரு விசயம், ஆர்க்யூமென்ட் நடக்கப்போற இடம் பார் இல்லையே? ஹி.ஹி.. ஒரு சேஃப்டிக்குத்தான் கேக்குறேன் :)))

said...

வாங்க சுந்தர்ஜி... எனக்கென்ன, நல்லா இருக்கேன்.. நேரம் கிடைக்கிறப்ப, பதிவுகள் படிச்சது போக மீதி நேரத்துல பதிவு போடுறேன். இந்த மாசம் கொஞ்ச அதிக நேரம் கிடைச்சதுனால மூணு பதிவு. மாசம் முடியறதுகுள்ள இன்னொன்னும் போடுவேன்னு நினைக்கிறேன் :)

said...

அருமை...வெண்பூ..சுஜாதா மேட்டர் தூள்.

said...

தூள்.. ஹேங்க் ஓவர் பார்க்கணும்னு ட்ரை பண்ணேன்.. ப்ச்ச்.. முடியல..

said...

க‌ல‌வையான‌ க‌ல‌க்க‌ல் ப‌திவு.. ப‌ட‌ம் + புத்த‌க‌ அறிமுக‌த்திற்கு ந‌ன்றி, வெண்பூ.

-Toto
www.pixmonk.com

said...

2012 படத்தை நானும் அதிகம் எதிர்பார்க்கின்றேன். இந்த படத்தின் உத்தியோகபுர்வ இணையத்தளம் சுப்பரா இருக்கு. அதன் முகவரி :- http://whowillsurvive2012.com/

said...

சுஜாதாவின் கணிணியை நோண்டச்சொன்னது நல்ல சிந்தனை.

தேசிகனுக்கு சொல்லவேண்டும்...!!!

அப்படி நோண்டும்பட்சத்தில் கிடைக்கப்போவதை நினைத்து இப்போதே பரபரவென்று இருக்கிறது...

said...

Interesting post. Do you still like Archer?

Hangover பார்க்கவில்லை; எரியும் பனிக்காடு படிக்கவில்லை; அதனால் வேறொன்றும் சொல்ல முடியவில்லை :)

அடிக்கடி இப்படி ஏதாவது எழுதவும்.

அனுஜன்யா

said...

வாங்க நர்சிம்.. சுஜாதான்னு சொன்னாலே தூள்தானே..

வாங்க கணேஷ்.. சான்ஸ் கிடைச்சா பாருங்க.. ரெண்டு மணிநேர என்டர்டெய்ன்மென்ட் கேரண்டீட்... :)

வாங்க டோட்டோ.. முதல் வருகைன்னு நினைக்கிறேன். நன்றி.

வாங்க வேந்தன்.. நானும் ட்ரைலரை அந்த வெப்சைட்டில்தான் பார்த்தேன்.

வாங்க செந்தழல் ரவி.. கண்டிப்பா சுஜாதா மாதிரியான ஆக்டிவ் எழுத்தாளர் எதுவாவது எழுதிட்டு இருந்திருப்பாரு. கிடைச்சா நமக்கு அதிர்ஷ்டம்தான்..

வாங்க அனுஜன்யா.. ஆர்ச்சரை ரொம்ப பிடிக்கும்னு சொல்ல முடியாது. ஆனா வித்தியாசமான ரீடிங் கிடைக்குது. அவரோட "ஷெல் வீ டெல் தெ ப்ரெசிடென்ட்?" எனக்குப் பிடிச்சிருந்தது. "சன்ஸ் ஆஃப் ஃபார்ச்சூன்" கதையும் போர் அடிக்காமல் செல்கிறது. பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் கதைகளுக்கு மத்தியில் இந்த மாதிரி கதைகளை தினம் 20 (அ) 30 பக்கமாக ஒரு மாசத்திற்கு படிப்பது அவ்வப்போது ஒரு ப்ரேக் கொடுக்கிறது.

said...

///தமிழில் உல்டா பண்ண அருமையான திரைக்கதை. யார் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
//

கோவான்னு ஒரு படம் வெங்கட் பிரபு எடுத்துக்கிடிருக்காரு

said...

வாங்க அக்னி பார்வை.. கோவா இந்த கதைன்னு நீங்க சொல்றது புது செய்தி எனக்கு. நன்றி..

Anonymous said...

எரியும் பனிக்காடு படிக்க வேண்டிய புத்தகம்போல இருக்கு. அடுத்த விஸிட்ல வாங்கிட வேண்டியதுதான்.

said...

வெண்பூ..

ரிட்டர்னுக்கு வாழ்த்துக்கள்..!

ஹேங்க்ஓவர் படம்தான் கோவா என்று உறுதியாகச் சொல்கிறது கோடம்பாக்கம். காத்திருப்போம்..

எரியும் பனிக்காடு வாங்க வேண்டும். அறிமுகத்திற்கு நன்றிகள்..!

said...

வாங்க சின்ன அம்மிணி.. அவசியம் படிங்க.. நிறைய புரிஞ்சுக்க முடியும்..

வாங்க உண்மைத் தமிழன்.. இந்த படம் தமிழில் ரீ மேக் செய்யப்படுவது சந்தோசமே.. தகவலுக்கு நன்றி..

said...

சுஜாதாவோட கணிணியையும் யாராவது நோண்டுங்கப்பா, உங்களுக்கு புண்ணியமா போகட்டும்.//

ஏதாவது மிச்சமிருந்தால் எப்பிடியிருக்கும் நினைச்சுப்பாருங்க வெண்பூ..

said...

வாங்க ஆதி.. மைக்கேல் கிரிக்டனின் நாவல் பற்றி படித்த உடனே எனக்கு தோன்றியதும் "அட, சுஜாதாவோடதும் கிடைச்சா எப்படி இருக்கும்?" என்பதே. நினைக்கவே பரபரப்பாக இருக்கிறது.