"உங்களோட சீரியஸ் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைவதாகத் தெரியவில்லையே. இது பற்றி?" கொஞ்சம் தைரியம் அதிகமான ஒரு ரிப்போர்ட்டர் கமலிடம் சில வருடங்களுக்கு முன் கேட்டிருந்தார்.
"ஒவ்வொரு சீரியஸ் படம் பண்ணினதும் அடுத்ததாக கமல் ஒரு காமெடி படம் பண்ணுவாரு, அதைப் பாத்துக்கலாம்னு மக்கள் நினைக்குறாங்களோ என்னவோ" என்ற அவரின் பதில் இன்னமும் எனக்கு நினைவில் இருக்கக் காரணம் அவர் சொன்ன வகை சினிமா ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதுதான்.
"ஹே ராம்" பார்க்கவில்லை. "காதலா காதலா" பலமுறை பார்த்தாலும் சலிக்கவில்லை. "மகாநதி" கிளிப்பிங் வந்தாலும் சேனல் சேஞ்ச். "அவ்வை சண்முகி" பத்து தடவையாவது பார்த்தாச்சு. இதே ட்ரீட்மெண்ட்தான் கமலின் ஒவ்வொரு சீரியஸ் படங்களும் நான் கொடுத்து வந்திருக்கிறேன்.
"உன்னைப்போல் ஒருவன்" படத்தின் விளம்பரத்தை முதல்முறை பார்த்தபோதே இது எனக்குப் பிடிக்கும் என்று தோன்றியது. காரணம் பெரிதாக ஏதுமில்லை என்ற போதும் கமலின் கெட்டப்பும், மோகன்லாலின் வசன உச்சரிப்புகளும் ஈர்த்தன.
அதேநேரம் கமல் தன்னுடன் நடிக்கும் பெரிய நடிகர்களை சரியாக உபயோகப்படுத்துவதில்லை (அ) அவர்களை விட தன் கதாபாத்திரத்தை சிறப்பாகக் காட்டுகிறார் என்பது என்கருத்து. உதாரணம் குருதிப்புனல், ஹே ராம், பஞ்சதந்திரம் போன்ற படங்கள். அதிலும் இது அவரது சொந்தத் தயாரிப்பு. அதனால் இந்த படத்திலும் மோகன்லாலை மட்டம் தட்டியிருப்பார், தன் மகளின் இசைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்று எதிர்ப்பார்ப்புடனேயே படம் பார்க்கச் சென்ற என்னை நடு மண்டையில் "நச்"சென்று அடித்திருக்கிறார் கமல்.
படத்தில் ஹீரோ என்று யாரும் இல்லை. லீட் ரோலில் கமல் + மோகன்லால். மோகன்லாலுடன் தொடங்கும் படம் அவருடனே முடிகிறது. கமலுக்கு ஒரே கெட்டப். எந்த இடத்திலும் யாரும் ஓவர் ஆக்ட் செய்யவில்லை. தேவை இல்லாத வசனங்கள் இல்லை, படத்தின் கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு ஷாட் கூட இல்லை. எல்லாமே "ஜஸ்ட் ரைட்".... எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மட்டுமே, கூடவும் இல்லை, குறைவும் இல்லை.
தெளிவான கதை, அதை முழு வேகத்தில் நகர்த்தும் திரைக்கதை, தனித்துத் தெரியாமல் கதையின் ஓட்டத்திற்கு துணைபுரியும் இசை, அற்புதமான கேமிரா, அந்தந்த கேரக்டர்களில் அச்சாக பொருந்தும் நடிக நடிகைகள், வார்த்தைக்கு வார்த்தை பின்னி எடுக்கும் இயல்பான வசனங்கள், நிஜம் என்று நம்ப வைக்கும் செட்கள் என்று பட்டாசு கிளப்பி இருக்கிறார்கள்.
படம் பார்த்து இவ்வளவு நேரமாகியும் இது தமிழ்ப்படம், கமல் படம் என்பதை நம்ப முடியாமல் இருக்கிறேன். ஹேட்ஸ் ஆஃப் டு யூ கமல்..
******************
பின்குறிப்பு 1: இவ்வளவு அற்புதமான படத்தின் இரண்டு பெரிய சறுக்கல்கள். ஒன்று சென்னையில் நடக்கும் கதை, ஆனால் சென்னையில் எடுக்கப்படவில்லை, காரணத்தை கமல் மட்டுமே சொல்ல முடியும்.
சென்னையில் எடுத்திருந்தால் படம் இன்னமும் ஆதன்டிக்காக இருந்திருக்கும். படம் பார்க்கும் போது என் தங்கமணிக்கும் எனக்கும் நடந்த உரையாடல்:
தங்கமணி: ஏங்க, கமல் அஞ்சு பாமும் சென்னையிலதானே வெச்சதா சொல்றாரு...
நான்: ஆமா.. ஏன் கேக்குற?
தங்கமணி: அப்புறமா ஏன் போலீஸ் போய் ஹைதராபாத்ல இருக்குற ப்ரசாத்ஸ் மல்டிப்ளக்ஸ்ல பாமை தேடுறாங்க?
நான்: ஙே...
மற்றொரு விசயம், படத்தின் ட்விஸ்டே பாம் வைப்பவரை முதலில் தீவிரவாதியாக படம் பார்க்கவர்கள் நினைக்க அதை முடிவில் மாற்றுவதுதான். ஆனால் கமல் அந்த பாத்திரத்தை செய்வதால் "நிச்சயமா இதுக்கு எதுனா நியாயமான காரணம் இருக்கும்" என்று நாம் நம்புகிறோம், அதன்படியே நடக்கிறது. ஒருவேளை மோகன்லாலும் கமலும் கதாபாத்திரங்களை மாற்றிச் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?
பின்குறிப்பு 2 : சாதரணமாக நான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை ('கொய்யால, முதல்ல நீ பதிவே எழுதுறதில்ல, அப்படி எழுதுனாத்தானே என்னத்தை எழுதுறன்னு கவலைப்படுறதுக்கு' என்று கத்தும் கார்க்கி, ஆதி, கேபிள், பரிசல் வகையறாக்கள் அமைதி கொள்க). ஆனால் இந்தப் படம் பார்த்து இன்னமும் பிரமிப்பு நீங்காமல் யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இந்தப் பதிவு.
Monday, September 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
44 comments:
என்னண்ணே இது? மழை கிழை வந்துரப்போவுது. நீங்க பதிவு பக்கமெல்லாம் வந்திருக்கீங்களே.. அதச்சொன்னேன். அப்புறம் கமல், மோகன்லால் காரெக்டர் மாற்றிச்செய்திருந்தால்.? நல்ல ஐடியா.. இன்னும் சூப்பரா இருந்திருக்கும். என்ன.. அப்புறம் லீட் ரோல் அவரே பண்ணிட்டார்ம்பீங்க.. ஹிஹி..
அய்ய...!!!
நல்ல விமர்சனம்.
/ சென்னையில் நடக்கும் கதை, ஆனால் சென்னையில் எடுக்கப்படவில்லை, காரணத்தை கமல் மட்டுமே சொல்ல முடியும். //
இந்த படம் தமிழ், மற்றும் தெலுங்கில் எடுக்கப்ப்ட்ட படம் தெலுங்கில் மோகன்லால் வேஷத்தில் வெங்கடேஷ் நடித்திருப்பார்.. அதனால் தான் சில ஷாட்டுகள் ஹைதையில் இருக்கும்
உங்களுக்கும், எனக்கும் மிகச்ச் சில பேருக்கே அது பிரசாத் மல்டிப்ள்க்ஸ் என்று தெரியும்.. வேண்டுமென்றே தெரிய கூடாதென வைட் ஆங்கிளில் வைத்திருப்பார்கள்..தமிழ் நாட்டில் பெரும்பாலருக்கு அது தெரியாது. வெண்பூ
அதே போல் கமல் ஏதாவது காரியம் செய்தால் நல்லதாய் தான் இருக்கும் என்று நினைக்கிற அளவுக்கு அவர் ஒன்றும் நெகட்டிவ் கேரக்டர்கள் பண்ணாதவர் கிடையாது.. நெகட்டிவ் கேரக்டர்கள் நிறைய செய்தவர்.. என்ன ஒரு யோசனை வேண்டுமானால் வரும். ஏதாவது காரணம் இருக்கும் என்று வேண்டுமானால் தோன்றும்.
//
மழை கிழை வந்துரப்போவுது. நீங்க பதிவு பக்கமெல்லாம் வந்திருக்கீங்களே.. அதச்சொன்னேன்
//
வாங்க ஆதி.. ஹி..ஹி.. நம்ம புண்ணியத்துலயாவது சென்னையில மழை வரட்டும்.. :))
//
Mahesh said...
அய்ய...!!!
//
என்னாச்சு மஹேஷ்? :)
நன்றி butterfly Surya..
வாங்க கேபிள்..
//
Cable Sankar said...
இந்த படம் தமிழ், மற்றும் தெலுங்கில் எடுக்கப்ப்ட்ட படம் தெலுங்கில் மோகன்லால் வேஷத்தில் வெங்கடேஷ் நடித்திருப்பார்..
//
இது எனக்கு புதிய செய்தி.. தெலுங்கில் ரிசல்ட் என்ன என்று அறிய ஆவலாய் இருக்கிறேன்.
//
அதனால் தான் சில ஷாட்டுகள் ஹைதையில் இருக்கும்
//
எனக்கென்னவோ படம் முழுவதுமே ஹைதையில் எடுத்ததுபோல் தோன்றுகிறது. மிகச்சில ஷாட்கள் மட்டுமே சென்னை (உ.ம்) கலைஞர் வீடு. மற்றபடி கமல் இருக்கும் கட்டிடத்தின் பேக்கிரவுண்ட் கூட ஹைதை போல்தான் தெரிகிறது. சென்ட்ரல், ஜெமினி, கத்திப்பாரா என்று லாங் ஷாட்டில் சில வினாடிகள் மட்டுமே சென்னை தெரிந்தது.
//
உங்களுக்கும், எனக்கும் மிகச்ச் சில பேருக்கே அது பிரசாத் மல்டிப்ள்க்ஸ் என்று தெரியும்.. வேண்டுமென்றே தெரிய கூடாதென வைட் ஆங்கிளில் வைத்திருப்பார்கள்..தமிழ் நாட்டில் பெரும்பாலருக்கு அது தெரியாது. வெண்பூ
//
கரெக்ட்.. இதே பதில்தான் நானும் என் தங்கமணிக்குச் சொன்னேன்.
//
அதே போல் கமல் ஏதாவது காரியம் செய்தால் நல்லதாய் தான் இருக்கும் என்று நினைக்கிற அளவுக்கு அவர் ஒன்றும் நெகட்டிவ் கேரக்டர்கள் பண்ணாதவர் கிடையாது.. நெகட்டிவ் கேரக்டர்கள் நிறைய செய்தவர்.. என்ன ஒரு யோசனை வேண்டுமானால் வரும். ஏதாவது காரணம் இருக்கும் என்று வேண்டுமானால் தோன்றும்.
//
நானும் அதேதான் சொல்கிறேன் கேபிள். படம் பார்க்கும் யாருக்குமே கதாசிரியர் எதிர்பார்த்த "பாராடியம் சேஞ்ச்" கடைசி டிவிஸ்டில் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.
உன்னைப் போல பலருக்கு....
காட்டாமணக்கு என்னும் பதிவர் காட்டமாக.... ஹி ஹி
கமல் மாதிரி நீயும் வருசத்துக்கு ஒரு பதிவா? :))))
அனுஜன்யா
என்னை ஏமாற்றிய வெண்பூ
தலைப்பை பார்த்து வந்தவனை ஏமாத்திட்டீங்களே.நல்ல படத்தை நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்களே.
//என்னண்ணே இது? மழை கிழை வந்துரப்போவுது.//
மெட்ராஸுல தான் பிச்சிக்கிட்டு பெய்யுதே!
வெல்கம் பேக்!
வெண்பூவிடமிருந்து பதிவா?
உன்னைப்போல் ஒருவனின் வெற்றி என்று நீங்கள் பதிவெழுதியதைக் குறிப்பிடலாம்!
வெண்பூவைப் பதிவெழுத வைத்த கமல் வாழ்க.
அப்பாடா..
வெண்பூவையும் இழுத்திட்டு வந்துட்டாருப்பா கமல்..
கமல் அண்ணன் வாழ்க..!
//
அனுஜன்யா said...
உன்னைப் போல பலருக்கு....
காட்டாமணக்கு என்னும் பதிவர் காட்டமாக.... ஹி ஹி
//
வாங்க அனுஜன்யா.. படம் பார்த்தபின் ஏறத்தாழ எல்லா விமர்சனங்களையும் படித்து விட்டேன். ஒவ்வொருவரின் பார்வையும் வேறு வேறாய் இருப்பதில் தவறில்லை என்பது என் எண்ணம். அவரைப் போலவே எல்லாரும் நினைக்கவேண்டும் என்பது அவர் எண்ணம்.. can't help :)))
வாங்க அறிவிலி.. அப்படி ஏமாத்தி இழுக்கத்தான் தலைப்பே இப்படி வெச்சேன் :))
வாங்க வெங்கிராஜா.. வாழ்த்திற்கு நன்றி
வாங்க பரிசல், அண்ணாச்சி, உண்மைத்தமிழன்.. என்னைப் பொறுத்தவரை இந்த படம் வெற்றி பெற வேண்டிய ஒன்று. அதற்கான என்னால் முடிந்த ஒரு சிறு விளம்பரம்தான் இந்த பதிவு.. அவ்வளவே.
நல்லாருக்கு. விமர்சனம்...
//அதேநேரம் கமல் தன்னுடன் நடிக்கும் பெரிய நடிகர்களை சரியாக உபயோகப்படுத்துவதில்லை (அ) அவர்களை விட தன் கதாபாத்திரத்தை சிறப்பாகக் காட்டுகிறார் என்பது என்கருத்து. உதாரணம் குருதிப்புனல், ஹே ராம், பஞ்சதந்திரம் போன்ற படங்கள்//
இதுவும் வெறும் தோன்றல் மட்டுமே... தேவர்மகன் மட்டுமே போதும் அதற்கு உதாரணம்.
வாங்க நாஞ்சில் பிரதாப்.. பாராட்டுக்கு நன்றி..
//
இதுவும் வெறும் தோன்றல் மட்டுமே... தேவர்மகன் மட்டுமே போதும் அதற்கு உதாரணம்.
//
புரிதலுக்கு நன்றி.. அது என்னுடைய கருத்து (அ) தோன்றல் மட்டுமே. அதையும் இந்த படத்தில் கமல் நொறுக்கி விட்டார் என்பதே உண்மை.
ethu ven pu ella kurize pu
அப்போ பதில் “ஙே” இல்லையா?
பதிவில் உண்மையை சொல்லிவிட்டு கேபிளாருக்கு ஆமாம் போட்டா சரியா?
படத்தில் ப்ரசாத்ஸ் மல்ட்டிப்ளெக்ஸ் என்று எங்கேயும் பெயர் காண்பிக்கப்படவில்லையே.....
//படத்தில் ஹீரோ என்று யாரும் இல்லை. லீட் ரோலில் கமல் + மோகன்லால். மோகன்லாலுடன் தொடங்கும் படம் அவருடனே முடிகிறது. கமலுக்கு ஒரே கெட்டப். எந்த இடத்திலும் யாரும் ஓவர் ஆக்ட் செய்யவில்லை. தேவை இல்லாத வசனங்கள் இல்லை, படத்தின் கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு ஷாட் கூட இல்லை. எல்லாமே "ஜஸ்ட் ரைட்".... எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மட்டுமே, கூடவும் இல்லை, குறைவும் இல்லை.
//
karikttu
என்ன இடு சின்னபிள்ள தனமா!
ஒரு கொசு பறந்ததுன்னு கண்ணுல விளக்கெண்ணைய ஊத்தி படம் விமர்சனம் எழுதிகிட்டு இருக்காங்க! நீங்க என்னடான்னா சென்னையில எடுக்கலைன்னு கவலைப்பட்டுகிட்டு!
//
chidambararajan said...
ethu ven pu ella kurize pu
//
எப்படி படிச்சாலும் புரியலையே தல.. தமிழ்ல சொல்ல முடியுமா? அல்லது இங்கிலீஷ்ல..
//
கும்க்கி said...
அப்போ பதில் “ஙே” இல்லையா?
பதிவில் உண்மையை சொல்லிவிட்டு கேபிளாருக்கு ஆமாம் போட்டா சரியா?
//
வாங்க கும்க்கி.. ஏன் இவ்வளவு நுணுக்கமா பாக்குறீங்க, ஜோக்கு சொன்னா ரசிக்கணும், ஆராயக்கூடாது :))))
வாங்க அக்கினிப்பார்வை, வால்பையன்..
//
வால்பையன் said...
என்ன இடு சின்னபிள்ள தனமா!
ஒரு கொசு பறந்ததுன்னு கண்ணுல விளக்கெண்ணைய ஊத்தி படம் விமர்சனம் எழுதிகிட்டு இருக்காங்க! நீங்க என்னடான்னா சென்னையில எடுக்கலைன்னு கவலைப்பட்டுகிட்டு!
//
ஹி..ஹி...
WEDNESDAY பாத்து தமிழில்சொதப்பாம இருக்கணுமேன்னு நினைச்சேன். உங்க பதிவு பாத்தா நல்லாத்தான் வந்திருக்கு போல இருக்கு. தெலுங்கில் கமல்-வெங்கி நடிச்சு ஈனாடுன்னு படம் வந்திருக்கு பாத்துட்டு அதுக்கும் பதிவு போடறேன்.
:)))))
பதிவு எப்பவோ படிச்சாலும் படம் பார்த்துட்டு போடலாம்ன்னு இருந்தேன்.
/படத்தின் கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு ஷாட் கூட இல்லை//
இதெல்லாம் எய்ட் மச்.. ட்ரெயினில் பயந்து பயந்து ஒரு காலி பைய வச்சாரே. அது எதுக்காம்? சம்பந்தமே இல்லாமல் ஒரு நடிகரின் காரெகட்ர் வச்சு கிண்டலடிச்சாரே அது எதுக்காம்? அது விஜயாக இருந்தாலும், இல்லையென்றாலும் அந்த பகடி தேவையே இல்லாதது.
அதே போல் கோடிகணக்கில் பிசினஸ் செய்யும் சந்தானபாரதி கேரக்டர் காமெடியனை போல் காட்டியது எரிச்சல். அதிலும் மூனு பொண்டாட்டி ஜோக்குக்கு அரங்கில் யாருமே சிரிக்கவில்லை.
நல்ல படம்தான்.
//அதே போல் கமல் ஏதாவது காரியம் செய்தால் நல்லதாய் தான் இருக்கும் என்று நினைக்கிற அளவுக்கு அவர் ஒன்றும் நெகட்டிவ் கேரக்டர்கள் பண்ணாதவர் கிடையாது.. நெகட்டிவ் கேரக்டர்கள் நிறைய செய்தவர்..//
கடைசியாக செய்த நெகடிவ் கேரக்டர் எது பாஸ் (ப்ளெட்சர் தவிர்த்து)
வாங்க புதுகைத் தென்றல்... எனக்கென்னவோ மோகன்லாலை வெங்கடேஷ் மேட்ச் செய்திருப்பாருன்னு தோணலை. நாகர்ஜீன் போல ஒரு கமாண்டிங் பெர்சனாலிட்டி பெட்டராக இருந்திருப்பார் என்று தோன்றுகிறது. படம் பார்த்துட்டு சொல்லுங்கள்.
கார்க்கி.. கூல்டவுன் கூல்டவுன்... லெஸ் டென்ஷன் மோர் வொர்க்.. மோர் வொர்க் லெஸ் டென்ஷன்... :)))
உங்க கேள்விகளுக்கும் விளக்கமா பதில் சொல்லலாம். ஆனா ஏற்கனவே நம்ம பதிவர்கள் பிச்சி கெடாசிட்டாங்க படத்த.. அதனால உங்ககூட ஒத்துப்போறேன் :))
இந்த வீக் எண்ட் சென்னையில இருந்தா கூப்புடுங்க, பேசி ரொம்ப நாளாச்சி..
வாங்க புருனோ.. எனக்குத் தெரிஞ்சு இந்தியன்.. கேபிள் என்ன சொல்றாருன்னு பாக்கலாம். :)
எது எப்படியோ நீங்களும் பார்ப்பனர் என்பதை தெரிந்துகொள்ள உன்னைபோல் ஒருவன் படம் உதவியது
ஹா..ஹா..ஹா.. வாங்க ஆரிஃப்.. உங்க கண்டுபிடிப்புக்கு உங்களுக்கு ஒரு நோபல் பரிசே குடுக்கலாம். மறுக்காம வாங்கிக்கணும்.. :)
பதிவு எப்படி இருக்குன்னு பாக்காம, பதிவு எழுதுனவன் என்ன ஜாதின்னு பாக்குற உங்கள எல்லாம்...............
இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே.. நான் பதிவுலகத்துல இருக்குறதே பொழுது போக்கவும், கிடைக்கிற ஓய்வை ஒழுங்கா உபயோகப்படுத்தவும்தான். என்னை இழுக்காதீங்க உங்க பார்ப்பனீய ஆதரவு, எதிர்ப்பு சண்டையில (முதல் எழுத்து நல்லா பாருங்க "ச"தான்)..
காக்ககாக்க தெலுங்கு பதிப்பு கர்ஷணாவில் வெங்கி கலக்கிருந்தார்.
நாகிக்கு வயசாகிடுச்சு. :))) பாஸ் மாதிரி படங்கள்தான் சரி வரும்.
வெங்கியும் நல்ல சாய்ஸ்னுன்னுதான் தோணுது. பதிவு வரும்
Good post, Thanks-
Murugan's dialogues, Kamal, Mohanlal's perfroamnce made me to see whether the film has shooted in Chennai or Hyderabad or Pollachi.
Even if it is shooted in Pollachi or Trivandrum I would have enjoyed.
we can write so many immaterial questions like how that terrorist speak Tamil, how TV reporter reaches chozaavaram very soon, How the terrorist came from Blore jail to airport, meenambakkam to chozaa varam in 1 hour etc...
//arif said...
எது எப்படியோ நீங்களும் பார்ப்பனர் என்பதை தெரிந்துகொள்ள உன்னைபோல் ஒருவன் படம் உதவியது
//
வெண்பூண்ணே யார் இந்த லூசு???
மிஸ்டர்.ஆரிப் உங்களுக்கு வெண்பூ ஜாதி என்னன்னு தெரியனும் அவ்வளவுதானே?? அதை நானே சொல்றேன். ஒரு தீபாவளி அன்று பேச்சிலரான எனக்கு சாப்பாடு கிடைக்காது என்று வீட்டுக்கு வர்புறுத்தி அழைத்து சோறு போட்ட “மனித ஜாதி”.
கமல் ஒரு படத்தில் சொன்ன அதே வசனத்தை இங்க சொல்றேன்
“யாரா இருந்தாலும் போய் புள்ள குட்டிங்களைப் படிக்க வைங்க”.
//
புதுகைத் தென்றல் said...
வெங்கியும் நல்ல சாய்ஸ்னுன்னுதான் தோணுது. பதிவு வரும்
//
பதிவுக்காகக் காத்திருக்கிறேன்..
வாங்க ராம்ஜி.யாஹூ... வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி..
வாங்க அப்துல்லா.. கரெக்டா சொன்னீங்க..
//தேவை இல்லாத வசனங்கள் இல்லை, படத்தின் கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு ஷாட் கூட இல்லை//
ஏனுங்க்ணா, வோட்டர் லிஸ்ட்ல பேர் இல்லாதது தேர்தல் ஆணையத்தின் தவறு என்பது போல் ஒரு சீன் வந்துச்சே. அது கதைக்குத் தேவையா? :) நீங்க என்னைவிட பெரிய கமல ரசிகனா இருக்கிங்களே.. :))
வெண்பூ, பதிவுலகின் ஆரோக்கியம் கெட அனானி வைரஸ் தான் முக்கியக் காரணம். உங்கள் வலைப்பூவில் அந்த வைரசை அழிக்க முடியுமா?
இப்போது தான் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய பேர் இந்த கதாபாத்திரத்திற்கு கமல் தேவையில்லை என்று கூறியிருந்தனர். இதில் கமலை ஒரு காமன் மேனாக பார்க்க முடியவில்லைதான், ஆனால் அவர்கள் கூறுவது போல பிரகாஸ்ராஜுக்கும் இது பொருந்தாது. நாசருக்கு நச்சென்று பொருந்தும். ஏனென்றால் காமன் மேனாக இருந்தாலும் ஒரு ஜீனியஸ் தோற்றம் இந்த கதாபாத்திரத்திற்கு தேவைப்படுகிறது. பிரகாஷ்ராஜை போட்டிருந்தால் ஜெயம் ரவிக்கு ஒருபடத்தில் பாக்ஸிங் கோச்சாக நடித்திருப்பாரே அது போல பொருந்தாமல் போயிருக்கும். இது கமலின் சொந்த படமாக இருப்பதால் ஒருவேளை காசு மிச்சம் பண்ண அவரே நடித்திருக்கலாம்.
படம் சிறப்பாக வந்துள்ளது.
வாங்க சஞ்சய்.. ஹி..ஹி.. படம் பாத்த பிரமிப்புல அதெல்லாம் கண்ணுக்கு படாம போயிருக்குமோ? :)))
பிரச்சினை வர்ற வரைக்கும் அனானி இருக்கட்டும்னுதான் விட்டு வெச்சிருக்கேன் சஞ்சய். அனானியா வந்து தப்பா எதுனா சொன்னாலும் நாம அதுக்கு என்ன மதிப்பு தர்றோம்ன்றதுலதான் இருக்கு. அனானி ஆப்ஷன் இல்லைன்னா புதுசாம் ஒரு ப்ளாக்கர் ப்ரொஃபைல் ஓபன் பண்ணி அதே கமெண்ட்டைப் போடத்தான் போறாங்க, இங்கியே மேல பாத்தீங்கள்ல?
வாங்க அனானி.. உங்க கருத்துகளோட ஒத்துப்போறேன்.. வருகைக்கு நன்றி.
Post a Comment