"ரொம்ப சந்தோசம்மா"
"எனக்கு உன் சந்தோசம்தான்டா முக்கியம். ஊரு என்னவோ சொல்லிட்டுப் போகுது. அந்த பொண்ணுதான் உனக்கு நல்ல துணையா இருப்பான்னு நெனச்சா நான் ஏன் தடை சொல்லப்போறேன். எனக்கு என்ன.. இன்னும் ஒரு அஞ்சு வருசமோ பத்து வருசமோ, அதுக்கப்புறம் உன்னைப் பாத்துக்கப்போறது அவதானே"
"ச்சீ... கம்முனு இரு.. எதெதோ பேசிகிட்டு"
"டேய், எனக்கு ஒரு ஆசைடா, சொன்னா கோவிச்சுக்க மாட்டியே"
"சொல்லும்மா.."
"உன்னோட கல்யாணம் முடிச்சதும் நம்ம வீட்டை கொஞ்சம் மராமத்து பண்ணிடலாம்டா. ஓடெல்லாம் ரொம்ப பழசாயிடுச்சி, எல்லாத்தையும் எடுத்துட்டு புதுசா போட்டுடலாம்டா"
"அம்மா.. அம்மா.. மேஸ்திரி அண்ணன்ட்ட ஏற்கனவே பேசிட்டேன். ஓட்டை எடுத்துட்டு தார்சு போட்டுடலாம்மா. நீயி கவலையே படாத. அப்புறம், வர்ற வழியில சங்கர் மாமாவைப் பாத்தேன். ஐப்பசி மாசம் காசிக்குப் பதினஞ்சு நாள் டூர் போட்டிருக்காராம். நீயும் சொல்லிட்டே இருக்குறியே. இந்த முறை போயிட்டு வந்துடு. சரிம்மா, நான் போயி அவ அப்பாட்ட பேசிட்டு வந்துடறேன்"
"சாப்புடுறதுக்கு வீட்டுக்கு வந்துடுறா, உனக்குப் புடிச்ச கருவாட்டுக் கொழம்பு செஞ்சி வெக்கிறேன்"
************
"உண்மையச் சொல்லணும்னா நீங்க இவ்வளவு ஈஸியா சம்மதிப்பீங்கன்னு நாங்க ரெண்டு பேருமே நெனக்கலை மாமா"
"ஏன் மாப்பிள்ள, அந்தஸ்தை காரணம் காட்டி வேணாம்னு சொல்லிடுவேனோன்னு நெனச்சீங்களா?"
""
"இந்த சொத்தெல்லாம் நானே சொந்தமா சம்பாசித்ததில்ல, எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்து சொத்து இது. சொல்லப்போனா நானெல்லாம் இதுக்கு ஒரு வாட்ச்மேன் மாதிரிதான். அதை என்னிக்குமே நானோ என் குடும்பமோ மறக்குறதே இல்ல"
"ஆச்சர்யமா இருக்கு மாமா"
"அது புரிஞ்சதுனாலதான் சின்ன வயசுலயே உங்க அப்பா மாதிரி நல்ல மனுசங்க ஃப்ரெண்ட்ஸா கிடைச்சாங்க. உங்களப் பத்தியும் உங்க குடும்பத்தைப் பத்தியும் முழுசா தெரிஞ்சதுனால உங்களவிட என் பொண்ணுக்கு நல்ல பையன் கிடைக்கமாட்டான்னு நம்புனதுனாலதான் இந்த கல்யாணத்துக்கு உடனே ஓகே சொல்லிட்டேன்"
"ரொம்ப நன்றி மாமா"
"பையனும் அமெரிக்காவுல செட்டில் ஆகிட்டான். பொண்ணுக்கு வரப்போறவன் என்கிட்ட இருக்குற காசுக்காக வர்றவனா இருந்துட்டா அவ வாழ்க்கை நரகம் ஆகிடும் மாப்பிள்ள. என்னால அதைத் தாங்க முடியாது. அவளை நல்லா புரிஞ்சுகிட்ட உங்களாலதான் அவளை காலம் முழுக்க நல்லா வெச்சிருக்க முடியும்னு நம்புறேன் நானு"
"கண்டிப்பா மாமா.. கவலையே படாதீங்க.. உங்க பொண்ணு கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராம நான் பாத்துக்குறேன். போதுமா?"
"அந்த நம்பிக்கை உங்கள விட எனக்கு அதிகம் மாப்பிள்ள.. அவ மேலதான் இருக்கா, போய் பேசிட்டு இருங்க. நான் கடை வரைக்கும் போயிட்டு வந்துடறேன்"
*******
"அப்புறம் உங்க அம்மாவும் எங்க அப்பாவும் குழந்தை பத்தி ஒண்ணுமே சொல்லைலியா? சொல்லியிருப்பாங்களே, கல்யாணம் ஆகி பத்து மாசத்துல ஒரு பேரன் வேணும்னு"
"ஒனக்கெல்லாம் நக்கலா இருக்கு, ஏன் கேட்டா என்ன தப்பு? கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்குது, இப்பவே ஆரம்பிச்சா கல்யாணம் முடிஞ்சு எட்டு மாசத்துலயே அவங்களுக்கு ஒரு பேரனோ பேத்தியோ குடுத்துடலாம்ல"
"ஏய் ச்சீ, கைய எடு... கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் கழிச்சிதான் குழந்தையெல்லாம். முதல்ல நாம நம்ம வாழ்க்கையை வாழலாம்டா, காஷ்மீர்ல ஹனிமூன், சொந்தகாரங்க வீட்டுக்கெல்லாம் ஒரு வீடு விடாம விருந்து, நல்ல பெளர்ணமி நிலா வெளிச்சத்துல உன் தோள்ல சாஞ்சிட்டே தாஜ்மஹால் தரிசனம், கோவா பீச் ஹாலிடேஸ், அந்தமான் செல்லுலார் ஜெயிலுக்குள்ள உன்னை வெச்சி ஒரு ஃபோட்டோ, லட்சத்தீவுல ஸ்கூபா டைவிங்.."
"ஹேய்.. ஹேய்... இரு இரு.. நீ இன்னமும் கோடீஸ்வரர் வீட்டுப் பொண்ணுல்ல, ஒரு சாதாரண சென்ட்ரல் கவர்மென்ட் வேலைக்காரனோட பொண்டாட்டி. அதுக்குத் தகுந்த மாதிரி ஆசைப்படும்மா"
"அதுக்கென்னா? எங்க அப்பாவோட பாதி சொத்து எனக்குத்தான. குடுக்க மாட்டேன்னு சொன்னா எங்க அண்ணன் மேல கேஸ் போட்டுடலாம் கவலைப்படாத"
"அடிப்பாவி... உன்னையும் உங்க அண்ணன் நம்புறானே, அவனைச் சொல்லணும்"
"ஹா..ஹா.. சும்மாச் சொன்னேன். எனக்குன்னு கேட்டா மொத்த சொத்தையும் கூட அண்ணனும் அண்ணியும் குடுத்துடுவாங்க. நான் இதுக்கு முன்னால எடுத்த எல்லா ஜென்மத்துலயும் புண்ணியம் பண்ணிகிட்டே இருந்திருக்கணும்டா.. இப்படி ஒரு அப்பா, அண்ணன், அண்ணி, எல்லாத்தையும் விட என்னா நல்லா புரிஞ்சுகிட்ட உன்கூடயே கல்யாணம்....."
"ஹேய்.. என்னாது இது? எதுக்கு அழுவுற? திடீர்னு உனக்குள்ள இருக்குற பட்டிக்காடு இப்படி வெளிய வந்துடுச்சி..."
"ச்சீய்.. போடா...."
"அம்மா... மாப்பிள்ள தம்பிக்கு ஃபோன்.. அவங்க அம்மா பேசுறாங்க"
*****
"உன் வெக்கேஷனைக் கட் பண்ணி அவசரமா கூப்டதுக்கு ஸாரிப்பா"
"பரவாயில்லைங்க சார்.. நானே வெக்கேஷனைக் கட் பண்ணுற ப்ளான்லதான் இருந்தேன். கல்யாணத்துக்கு நல்ல நாள் ரெண்டு மாசம் கழிச்சிதான் கிடைச்சிருக்கு. அதனால அப்ப வெக்கேஷன் எடுத்துக்கலாம்னு இருந்தேன். நீங்க கூப்பிடலைன்னாலும் மே இருவத்தஞ்சாம் தேதி நானே வந்திருப்பேன்"
"குட்..குட்.. நான் உன்னைக் கூப்பிட்டது ரொம்ப முக்கியமான விசயத்துக்காக. இந்த மாசம் முழுக்கவே நமக்கு ரொம்ப வேலை அதிகம். எல்லா வி.வி.ஐ.பி.ங்களும் தீவிரமான பிரச்சாரத்துல இருக்காங்க. சமாளிச்சடலாம்னுதான் நெனச்சி உனக்கு லீவு குடுத்தேன். பட் ரெண்டு ஹையர் ஆபிஸர்ஸ் ஆஸ்பிடல்ல படுத்துட்டாங்க. இன்னும் ஒரு வாரத்துக்கு லீவு. அதனாலதான் உன்னைக் கூப்பிட வேண்டியதா போச்சி"
"ஓ.. ஓகே."
"ரெண்டாவது, நீ டிபார்ட்மென்ட்ல சேந்ததுல இருந்து உன்னைக் கவனிச்சுட்டு வர்றேன். உன்னோட நேர்மை, வேலை மேல உனக்கு இருக்குற டெடிகேஷன், புது விசயங்களைக் கத்துக்குற ஆர்வம் எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்கு அப்புறம் இந்த போஸ்டுக்கு வர்ற தகுதி இருக்குற ஆட்களா நான் நினைக்குற ஒரு சிலர்ல நீயும் ஒருத்தன். இந்த மாதிரி டஃப் சிச்சுவேஷன் எல்லாம் ஹேண்டில் பண்ணினாத்தான் உனக்கும் பின்னால உதவியா இருக்கும்"
"ரொம்ப நன்றி சார். இப்ப என்னோட அஸைன்மென்ட் என்ன?"
"வர்ற செவ்வாய்க்கிழமை மட்டும் ஒரு வி.வி.ஐ.பி.யோட பாதுகாப்பை நீ கவனிக்க வேண்டி இருக்கும். ப்ளான்படி அவரு செவ்வாய்க்கிழமை சாயங்காலம் ஏர்போர்ட்டுக்கு வர்றாரு. அங்க இருந்து நம்ம டீம் சார்ஜ் எடுத்துக்குது. ஏர்போர்ட்ல இருந்து அன்னிக்கு ராத்திரி அவர் கூட்டம் முடிக்கிற வரைக்கும் நீதான் இன்சார்ஜ்"
"கவலையேப்படாதீங்க சார். அவர் சென்னைல வந்து இறங்குனதுல இருந்து மறுபடியும் ஃப்ளைட் ஏறுற வரைக்கும் அவரைவிட்டு நகர மாட்டேன். சென்னைய பொறுத்தவரைக்கும் நாந்தான் அவரோட நிழல்னு வெச்சிக்குங்களேன்"
"ஹ..ஹ..ஹ..ஹ.."
"நைட் பொதுக்கூட்டம் எங்க சார்?"
"ஸ்ரீபெரும்புதூர்"
******
'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
Monday, June 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
ஏலே மக்கா ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க விடாம போட்டு முடிச்சிட்டியா?
நல்லா இருய்யா!
:)))))))))))))))
மீ தி பர்ஸ்ட்டா???
நல்ல புனைவு!!!
வெற்றி பெற வாழ்த்துக்கள் வெண்பூ
ரொம்ப நல்லா இருக்குது வெண்பூ.. வெற்றி பெற வாழ்த்துக்கள் :-)
என்னங்க வெண்பூ அறிவியல் புனைவை விட்டுட்டு வெளியே வந்துட்டீங்க...
எனி ஹவ் நல்லா இருந்தது கதை... உரையாடல்கள் ரொம்ப பாசிட்டிவா பாலகுமாரன்,விக்ரமன் மாதிரி இருந்தது.
வாழ்த்துக்கள்...
குட் தாட்..
குட் ஒன் லைன்..
குட் ஸ்டோரி..
குட் ஸ்கிரீன்பிளே..
குட் டயலாக்ஸ்..
பெஸ்ட் ஆஃப் லக்..
வழக்கம் போலவே நல்ல ட்விஸ்ட் முடிவில். வெற்றி பெற என் வாழ்த்துக்கள் வெண்பூ!
இப்படி முடிச்சிடிங்களே தல!
:(
சுஜாதா சிறுசிறுகதைகள் என்ற நூலில் ஒரு கதையை மொழிபெயர்த்து போட்டிருந்தார். அதன் சுருக்கம்:
நர்ஸ்: நீங்கள் புண்ணியம் செய்திருக்கிறீர்கள். உங்கள் உயிரை மயிரிழையில் இழந்திருப்பீர்கள். நம் நாட்டில் நிலைமை மோசமாகிவிட்டது.
நோயாளி: என்ன சொல்றீங்க? என்னாச்சு?
நர்ஸ்: உங்க ஊர்ல குண்டுவெடிப்பு நடந்து பல ஆயிரம் பேர் செத்துட்டாங்க. பயப்படாதீங்க, உங்களை காப்பாத்தி இங்க கூட்டி வந்திருக்காங்க.
நோயாளி: நான் இப்போ எங்கிருக்கிறேன்?
நர்ஸ்: நாகசாகி.
வெற்றிபெற வாழ்த்துக்கள் வெண்பூ
அன்பு வெண்பூ...
ஜப்பான் பேரரசு கதை ஞாபகத்திற்கு வந்தது. எப்படியோ நீங்களும் அறிவியல் கதை விட்டு வெளிய வந்திட்டீங்க...!!
வாழ்த்துக்கள்.
கதை நல்லா இருக்கு
பரிசு கிடைத்ததா....
வெற்றி பெற வாழ்த்துகள்.
எனக்கில்லை... எனக்கில்லை.... எனக்கில்லை.... தனியாப் பொலம்பற அளவுக்கு கொண்டாந்துட்டாங்களே....
நல்லாருண்ணே... .நல்லாரு :(
எதிர் பாராத முடிவு...........அருமை வாழ்த்துக்கள்
நல்லா இருக்கு தலை
உரையாடலாகவே அமைச்சிருக்கீங்க. நல்லா இருக்கு கதை. கதா பாத்திரங்கள் பெயர் எதுவும் வைக்காமல் இறுதியில் வரும் ஒரே பெயராக ஸ்ரீபெரும்புதூர் என்று முடித்திருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது :)
ஸ்ரீபெரும்புதூர்ல நடந்த கூட்டத்தை முடித்துக்கொண்டு விவிஐபி டெல்லிக்கு திரும்பிவிட நமது கதாநாயகன் இரண்டு மாதத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்துவந்தானோ என்னவொ :))
பின்னால் வீட்டுக்கு ஓடு மாற்றும்போது ஏணியிலிருந்து தவறி விழுந்துவிட்டானோ என்று கூட யோசனையாக இருக்கிறது.
வெற்றி பெற வாழ்த்துக்கள்
இயல்பான நடை - எளிமையான நீரோட்டம் = நச்சென்ற முடிவு - திருப்பம்
நன்று நன்று - நல்வாழ்த்துகள் வெண்பூ
இன்னும் வெய்ட்டா எதிர்பார்த்தோம்.....
இதுவும் நல்லாத்தானிருக்கு.
ஆனா ”போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்”ன்னு கர்ஜிக்கவேண்டாமா?
கலக்கல்.
சூப்பர்!
சரி.. கோவிச்சுக்காதீங்க..
உரையாடல் சிறுகதைப் போட்டின்னத தப்பா புரிஞ்சுட்டீங்களோ? வெறும் உரையாடலாவே அமைச்சுட்டீங்களே?
:-)))
இது நல்ல கதை. ஆனா வழக்கமா இருக்கு. நேத்து ஒரு பிரபலம் என்கிட்ட பேசும்போது சொன்னார்.. கதைகள் கம்மிதான். அதைச் சொல்றவிதம்தான் புதுசுபுதுசா இருக்கணும். அதுலதான் வெற்றி நிச்சயிக்கப்படுதுன்னு.
போட்டிக்குன்னு சொல்லும்போது... நீங்க இதைவிட பெட்டரா தரமுடியும்ன்னு எனக்குத் தோணுது.
ஹலோ... இவன்கிட்ட ஏண்டா கேட்டோன்னு திட்டக்கூடாது.. ஓகே? கூல்....
வெண்பூ.. நல்ல கதை.
அருமையான நடைல அழகான கதை.
ட்விஸ்ட் சூப்பர்.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்
ஹை மீ த 25த்
கதையின் போக்கு இயல்பா நல்லா இருக்கு அண்ணா..
எல்லாரும் ஏதோ டுவிஸ்ட்டு.. டுவிஸ்ட்டுன்றாய்ங்களே அது எங்க அண்ணா..
அந்த வெக்கேசன கட்பண்ணிட்டு டியுட்டிக்கு வந்ததையா..?
டியுட்டிய ஒழுங்காமுடிச்சுட்டு கல்யாணம் பண்ணினாய்ங்களா இல்லையா..?
கதையே புரியாம பின்னூட்டிருக்கனோனு நெனச்சுபுடாதிங்க..
ஆ.வி யில் வந்த கதையுடன் ஒப்பிடும்பொழுது இது மிக சுமார் ராகம். உங்கள் வலைப்பூவில் சமீபகாலமாக நிறைய வாசித்திருக்கிறேன். பிடிக்காத ஒரே கதை இதுவாகத்தான் இருக்கக்கூடும்
வெற்றி பெற என் வாழ்த்துக்கள் வெண்பூ
வெண்பூ
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அடுத்த பதிவ போடுங்க. ஒரு வாரம் ஆச்சு
கும்க்கி said...
இன்னும் வெய்ட்டா எதிர்பார்த்தோம்.....
இதுவும் நல்லாத்தானிருக்கு.
ஆனா ”போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்”ன்னு கர்ஜிக்கவேண்டாமா?
//
ripeetu..
நிறைய இடத்தில் உங்கள் பின்னூட்டம் பார்க்கிறேன். எப்போ பதிவு போடுவீங்க அடுத்தாப்ல ?
enaku pidichuruku indha kadhai! :-)
பின்றிங்க வெண்பூ..
கதை நன்றாக இருப்பதாக பாராட்டியவர்களுக்கும், இன்னும் நல்லா எழுதியிருக்கலாமே என்று குட்டியவர்களுக்கும், அனைவருக்கும் கொஞ்சம் லேட்டான நன்றிகள்..
அருமையான கதை!
அவசியம் பத்திரிக்கைகளுக்கு அனுப்பவும். வாழ்த்துக்கள்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அங்கிள்...
Post a Comment