Sunday, June 29, 2008

இரண்டாவது மூளை

"சொல்லுங்க மாமா. நீங்க என்ன சொன்னாலும் கேட்குறேன். இந்த போட்டித்தேர்வில நான் முதல் 3 இடத்துகுள்ள வரணும்" என்றேன் நான்.

என்னால் மாமா என்றழைக்கப்பட்ட மருதமூர்த்தி அறுபதுகளின் தொடக்கத்தில் இருந்தார். என் அப்பாவும் அவரும் பால்ய காலத்து நண்பர்கள் என்பதாலும், என் அப்பா அகால மரணமடைந்த பின்னர் தாயும் இல்லாமல் தனி மரமாக நான் நின்ற போது என் படிப்பிற்கான முழு செலவையும் செய்தவர் அவர் என்பதாலும் அவர் மீது எனக்கு முழு மரியாதை உண்டு. மற்றவர்கள் அவரை அங்கிள் என்று விளித்தபோதும் மாமா என்று கூப்பிடுவது என்னவோ எனக்கு அவரை மிக நெருக்கமாக உணர்த்தியதால் எனக்கு மாற்றத் தோன்றவில்லை.

மருதமூர்த்தி மாமா ஒரு சராசரி அறிவியல் ஆராய்ச்சியாளனுக்குரிய எல்லா இயல்புகளையும் கொண்டிருந்தார்; சரியான உடை உடுத்தாதது, முக்கியமான விசயங்களை மறந்து போவது என்று. அவரது சகா கிருஷ்ணகுமாருடன் இணைந்து ஏதோ ஒரு ராணுவ தளவாடங்களைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார் என்பதாக நினைவு. கிருஷ்ணகுமார் அங்கிளும் அப்பாவின் நண்பர்தான்.

நான் மருதமூர்த்தி மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தது அடுத்த வாரம் நடக்க இருக்கும் முக்கியமான போட்டித் தேர்வைப் பற்றி. அதில் வெற்றி பெற்றால் எனக்கு மேற்படிப்புக்கான அமெரிக்க நுழைவு சுலபமாக இருக்கும், அதன்பின் என் கனவான நாசாவில் நுழைவதற்கு எனக்கு எந்த தடையும் இருக்காது. ஆனால் அந்த தேர்வுக்கு நான் படித்த முதுகலை இன்சினியரிங் மிகக் குறைந்த அளவே உதவப் போகிறது. அது பற்றி ஏற்கனவே அவரிடம் சொல்லியிருக்க, அது பற்றி பேச என்னை பார்க்கிற்கு அழைத்திருந்தார்.

"ஒரு வழி இருக்குப்பா. ஆனா அது 100% இல்லீகல்" என்றார்.

"என்ன வழி மாமா?" அவ‌ரை அவ‌ச‌ர‌ப்ப‌டுத்தினேன்.

"நான் என்ன‌ ஆராய்ச்சி ப‌ண்ணிட்டு இருக்கேன்னு உன‌க்குத் தெரியுமா?"

"ஏதோ ராணுவத்துக்காக‌ அதிந‌வீன‌ க‌ருவிக‌ள் ச‌ம்ப‌ந்த‌மான்ற‌ அள‌வுக்கு தெரியும் மாமா. ராணுவ‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌தா இருக்குற‌தால‌ நான் இதைப்ப‌த்தி மீரா கிட்ட‌க் கூட‌ எதுவும் கேட்கிற‌தில்லை" மீரா அவ‌ர‌து அழ‌கான‌ திரும‌ணமாகாத‌ மகள். என் சிறுவ‌ய‌துத் தோழி. அவ‌ள்தான் ஆராய்ச்சியாள‌ர்க‌ள் இருவ‌ருக்குமான‌ ஒரே உத‌வியாளினி. நான் அவ‌ரை மாமா என்ற‌ழைப்ப‌த‌ற்கு அவ‌ளும் ஒரு கார‌ண‌ம்.

"அந்த‌ ஆராய்ச்சி நான், கே.கே.கூட‌ சேர்ந்து ப‌ண்ற‌து. அடிப்ப‌டையில‌ நான் உயிரிய‌ல் விஞ்ஞானின்ற‌தால‌ மூளையைப் ப‌த்தியும் ஆராய்ச்சிப் ப‌ண்ணிட்டிருக்கேன். இது வெளிய‌ யாருக்கும் தெரியாது. கே.கே.க்குக் கூட‌ முழு விவ‌ர‌ம் தெரியாது"

"ஓ.."

"ஒரு மனுசனோட மூளையோட திறனை அதிகரிக்கறது எப்படின்றதுதான் என்னோட ஆராய்ச்சி, மூளைக்கு ரெண்டு விதமான திறமைகள் இருக்கு, கம்ப்யூட்டர் மாதிரியே, ஒண்ணு தகவல்களை சேமிச்சிக்குற மெமரி பவர், இன்னொன்னு சேமிச்சத் தகவல்கள தேடற ப்ராசசிங் பவர், கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் மாதிரின்னு வெச்சிக்கேன்"

"ம்"

"என்னோட ஆராய்ச்சியின் மூலமா நான் இது ரெண்டையுமே அதிகப்படுத்தறதுல வெற்றியடைஞ்சிட்டேன்னுதான் சொல்லணும்"

"வாவ்...க்ரேட்"

"இத வெளிய சொல்றதா வேணாமான்னு இன்னும் முடிவு பண்ணல. ஏன்னா இது எவ்வளவுக்கு எவ்வளவு நல்லதோ அவ்வளவுக்கு அவ்வளவு கெட்டதும் கூட"

அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"நீ படிச்சி முடிச்ச உடனே என்கூட என் ஆராய்ச்சியில சேர்ந்துடுவன்னு நெனச்சேன். ஆனா உன்னோட லட்சியம் வேறயா இருக்கு. பரவாயில்ல. இந்த புதுகருவியின் மூலமா உனக்கு நல்லது நடந்தா எனக்கு சந்தோசம்தான். ஆனா நீ ஒரு விசயத்தை மறந்துடக்கூடாது"

கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்தேன்.

"என்னோட இந்தக் கருவி இப்போதைக்கு 100% சரியா வேலை செய்யுது. ஆனா இதுவரைக்கும் நான் மனுசங்ககிட்ட உபயோகிச்சதில்லை. குரங்குகள்கிட்ட மட்டும்தான் உபயோகிச்சிருக்கேன். அதனால நான் என்னோட ஆராய்ச்சிக்கு உன்னை பயன்படுத்திக்கிறேன்னு நினைச்சிடக் கூடாது."

"புரியுது மாமா. நான் இந்த விசயத்துல எந்த அளவுக்கும் ரிஸ்க் எடுக்கத் தயாரா இருக்கேன். இது எப்படி வேலை செய்யுது மாமா?"

"நான் இந்த கருவியை உன் தலைக்குள்ள ஆபரேசன் பண்ணி பொருத்திடுவேன். இது தனியா செயல்படுற சின்ன கம்ப்யூட்டர் மாதிரின்றதால வெளிய இருந்து எந்த சிக்னலும் இதுக்குத் தேவை இல்ல. இதோட அளவும் ரொம்ப சின்னதா இருக்குறதால ஸ்கல்ல ஓபன் பண்ண வேண்டிய அவசியமே இல்லை. சின்னதா ஒரு ஓட்டையிலயே வேலை முடிஞ்சிடும், ஒரு மணி நேர ரெஸ்ட்க்கு பின்னால நீ எல்லா வேலையும் செய்யலாம். இதுல 6 GB அளவுக்கு மெமரி இருக்கு அது மட்டும் இல்லாம ஒரு சின்ன ப்ரோகிராமும் இருக்கு. டெஸ்ட்டுக்கு முதல் நாள் நான் இதை உன் தலையில வெச்சிடுவேன், உன் டெஸ்ட்டுக்குத் தேவையான எல்லா விசயங்களோட‌."

"அது மறுபடியும் எப்ப எடுப்பீங்க மாமா?"

"தேவையே இல்லை. இது சரியா 24 மணிநேரம்தான் வேலை செய்யும், அதுக்கப்புறம் தானா கரைஞ்சிடும், கரையாத பாகங்கள் எல்லாம் உன்னோட கழிவுகள் வழியா வெளியேறிடும். அதுக்கப்புறம் நீயே சத்தியம் பண்ணி சொன்னாலும் எந்த கொம்பனாலயும் நிரூபிக்க முடியாது"

"அட்டகாசம் மாமா. என்னால நம்பவே முடியலை"

அமைதியா சிரித்தார் மருதமூர்த்தி மாமா.

"மாமா, நான் ஒரு விசயம் சொல்லணும். உங்க கூட இருக்குற எங்களுக்குத்தான் தெரியும் நீங்க எவ்வளவு உழைக்கிறீங்க, எவ்வளவு திறமையானவர்னு. ஆனா உங்களோட பல வெற்றிகள் கே.கே. அங்கிளுக்குத்தான் போகுது. நீங்க வேலை செய்றீங்க ஆனா அவர் பேர் தட்டிட்டுப் போறாரு. "

மாமாவின் முகம் மாறியது, கண்டிப்பாக அவர் இதை எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவர் முகத்தில் இருந்தே தெரிந்தது.

"மன்னிக்கணும் மாமா. அப்பா இருந்தவரைக்கும் பலதடவை இதைப்பத்திப் பேசியிருக்காரு, நீங்க ரெண்டு பேருமே அவருக்கு நல்ல நண்பர்களா இருந்தாலும். ஏதோ சொல்லணும்னு தோணுனது அவ்வளவுதான் மாமா"

"ஹே..மை பாய்... இதெல்லாம் பத்திக் கவலைப்படாதே. வர வியாழக்கிழமை சாயங்காலம் என் ஆய்வுக்கூடத்துக்கு வந்துடு. அதுக்கு முன்னால இன்னிக்கு வீட்டுக்குப் போன உடனே எனக்கு உன்னோட ஸ்டடி மெட்டீரியல் எல்லாத்தையும் மெயில் அனுப்பிடு"

"கண்டிப்பா மாமா. மீராவை கேட்டதா சொல்லுங்க. பை"

எல்லாம் எதிர்பார்த்தபடி சென்றது. எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆபரேசன் முடிந்தது. அங்கேயே ஒருமுறை சாம்பிள் டெஸ்ட் எழுத எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் வந்து விழுந்தது, மந்திரத்தில் மாங்காய் விளைந்தது போல.

மறுநாள் போட்டித்தேர்விலும் அட்டகாசமாக எழுதினேன். கண்டிப்பாக முதல் இடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வெளியே வந்து முதல் வேலையாக மாமாவிற்கு போன் செய்தேன். மாலை வந்து பார்க்குமாறு கூறினார்.

சந்தோசமாக வந்து பைக்கை எடுத்த போது கண்கள் இருண்டது.. எல்லாமே இருட்டாக மயங்கி விழ ஆரம்பித்தேன்.

******

கண் விழித்த போது ஏதோ ஒரு அழுக்கான எட்டுக்கு எட்டு அறையின் கட்டாந்தரையில் மல்லாந்து இருந்தேன். ஒன்றும் புரியாமல் சுற்றும் முற்றும் பார்க்க அதிர்ந்தேன். அது ஒரு லாக்‍‍ அப்.

தட்டுத் தடுமாறி எழுந்து அமர, கம்பிக்கு வெளியே வந்து நின்ற கான்ஸ்டபிள்

"ங்கொய்யா... உன்னப் பத்திதான்டா இன்னிக்கு பேப்பர்ல முதல் பக்கத்துல போட்டிருக்கு. படி. ஒழுங்கு மரியாதையா ஏன் பண்ணினன்னு சொல்லு"

என்றவாறே அன்றைய நாளிதழை எறிந்தார். நடுங்கும் விரல்களால் அதை பிரிக்க, அதில் இருந்த உண்மை முகத்தில் அறைந்தது.

"கல்லூரி மாணவனால் விஞ்ஞானி கிருஷ்ணக்குமார் கொலை: கொலைக்கான காரணத்தைப் போலீஸ் துப்புத் துலக்குகிறது"


*** சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான முதல் இடுகை ***

36 comments:

said...

சூப்பரப்பு!

said...

நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

said...

வருகைக்கு நன்றி பரிசல் & மணிவண்ணன்.

said...

நல்ல இருக்கிறது

வாழ்த்துகள்

said...

அன்பு வெண்பூ...

கடைசி லைன்ல திக்குனு ஆகிடுச்சு.. நல்லா இருக்கு...!

said...

வருகைக்கு நன்றி வசந்த குமார்.

said...

கதை நன்று. கடைசி லைன் ட்விஸ்ட் பிரமாதம். உண்மையில் யோசிக்க வைத்தது!!;-)

நடையை இன்னும் கொஞ்சம்கூட மெருகேற்றலாம் என்பது எனது கருத்து.

said...

// யோசிப்பவர் said...
கதை நன்று. கடைசி லைன் ட்விஸ்ட் பிரமாதம். உண்மையில் யோசிக்க வைத்தது!!;-)
//

ஆஹா.. யோசிப்பவரையே யோசிக்க வெச்சிட்டேனே..:))

// நடையை இன்னும் கொஞ்சம்கூட மெருகேற்றலாம் என்பது எனது கருத்து.//


கண்டிப்பாக..இதுதான் எனது மூன்றாவது கதை. சித்திரமும் கைப்பழக்கம்தானே..போகப் போக மெருகேரும் என்று நம்புகிறேன்.

said...

//திகழ்மிளிர் said...
நல்ல இருக்கிறது

வாழ்த்துகள்
//

வருகைக்கு நன்றி திகழ்மிளிர்.

நீங்கள் தவறாக நினைக்கவில்லையெனில் ஒன்று கேட்கலாமா? உங்கள் பெயருக்கு என்ன அர்த்தம்?

said...

சூப்பர் கதைங்க... பரிசு பெற வாழ்த்துக்கள்!!!

said...

//சூப்பர் கதைங்க... பரிசு பெற வாழ்த்துக்கள்!!!//

வாழ்த்துக்களுக்கு நன்றி ச்சின்னப்பையன்..

said...

:-( puriyalayey

said...

aha.. ipo thaan news-la irukura perai paarkuraen..

said...

நல்ல கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

said...

புதுப் பதிவு போட்டு இருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க

said...

கதை நல்லா இருக்கு. இப்படி பாதியில் முடிவடைகிறதே கதை தொடருமா?

said...

நல்லாயிருக்குது. கதை சொல்லும் விதம் கொஞ்சம் பழைய ஸ்டைல் அறிவியல் தகவல்களை கொஞ்சம் துல்லியமாக்கியிருக்கலாம்.

போட்டி கடுமையா இருக்கும்போலிருக்குதே..

:)

said...

வருகைக்கு நன்றி ராப்.

//புதுப் பதிவு போட்டு இருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க//

அது என்னா பதிவா? டெஸ்க்ல உக்காந்து தனியா வாய் விட்டு சிரிச்சிட்டு இருந்தேன்.

said...

// யாத்திரீகன் said...
aha.. ipo thaan news-la irukura perai paarkuraen..
//

ஹா..ஹ்ஹா...ஹா..குழம்பிட்டீங்களா..யாத்திரீகன்

said...

// கயல்விழி said...
கதை நல்லா இருக்கு. இப்படி பாதியில் முடிவடைகிறதே கதை தொடருமா?
//

என்ன கயல் இப்படி சொல்லிட்டீங்க. கடைசி வரிகளை மறுபடியும் படிச்சிப்பாருங்க. கதை முடிஞ்சிடுச்சி.

said...

// சிறில் அலெக்ஸ் said...
நல்லாயிருக்குது. கதை சொல்லும் விதம் கொஞ்சம் பழைய ஸ்டைல் அறிவியல் தகவல்களை கொஞ்சம் துல்லியமாக்கியிருக்கலாம்.
//

மேலே யோசிப்பவருக்கு சொன்ன பதிலேதான் உங்களுக்கும் சிறில்.
---
கண்டிப்பாக..இதுதான் எனது மூன்றாவது கதை. சித்திரமும் கைப்பழக்கம்தானே..போகப் போக மெருகேறும் என்று நம்புகிறேன்.
--

//போட்டி கடுமையா இருக்கும்போலிருக்குதே..
//

நாந்தான் ஏற்கனவே ஜெயிச்சடனே.. நீங்க உட்பட பெரிய பதிவர்கள என்னோட பதிவை படிக்க வெச்சதே எனக்கு வெற்றிதானே சிறில்.

ஜெயமோகன் என்னோட எழுத்தைப் படிக்கப் போறாருன்றத நெனைக்கும்போதே எனக்குள்ள என்னவோ ஒண்ணு சிலு சிலுன்னு ஓடுது...

said...

அன்பு வெண்பூ...

நீங்க தாராளமாகவே உங்க கதையைத் தொடரலாம். நான் தான் அந்த கதைல டைம் மெஷினையே கொண்டு வரலையே...!

உங்க 'திடுக்'காக காத்திருக்கிறேன்.... ;-)

போட்டி கடுமையா இருந்தாத் தானே சுவாரஸ்யமா இருக்கும்...

கமான்.....!!!!

said...

நல்லா இருக்கு. All the best.

அனுஜன்யா

said...

வருகைக்கு நன்றி அனுஜன்யா.

said...

நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

said...

//
நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
//

நன்றி கவிநயா...

said...

நல்லாயிருக்கு கதை.. வாழ்த்துகள்.

said...

//
PPattian : புபட்டியன் said...
நல்லாயிருக்கு கதை.. வாழ்த்துகள்.

//

வாழ்த்துக்களுக்கு நன்றி புபட்டியன்.

said...

ரொம்ப நல்லா இருக்குதுங்க :))

said...

//சென்ஷி said...
ரொம்ப நல்லா இருக்குதுங்க :))
//

நன்றி சென்ஷி....

said...

:)))) kalakkalaana kadaisi vari... vaazththukkal

said...

//ஜி said...
:)))) kalakkalaana kadaisi vari... vaazththukkal
//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜி...

Anonymous said...

Super

said...

//xavier said...
Super
//

வருகைக்கு நன்றி சேவியர். முதல் வருகை என்று நினைக்கிறேன். மற்ற கதைகளையும் நேரம் கிடைக்கும்போது படிக்கவும்.

said...

அருமை ! புரிந்து கொள்ள 2, 3 முறை படிக்க வேண்டி வந்தது :)

said...

//ரவிசங்கர் said...
அருமை ! புரிந்து கொள்ள 2, 3 முறை படிக்க வேண்டி வந்தது :)
//

பாராட்டுக்கு நன்றி ரவிசங்கர்.. இரண்டு மூன்று முறை படித்ததற்கு ஸ்பெஷல் நன்றிகள் :)