வெறும்பயல்: நாங்க அப்ப ஒரு வார்த்தை இப்ப ஒரு வார்த்தை சொல்லவே மாட்டோம். 8% ஆனப்ப என்ன சொன்னமோ அதேதான் இப்பவும் சொல்றோம், நாளைக்கு 15% ஆவுறப்பவும் சொல்வோம்
-----
ராமதாஸ் : தி.மு.க. கூட்டணியில் இருந்து எங்களை கழட்டி விட்டது நியாயமற்றது
வெறும்பயல்: பின்ன என்ன? தேர்தல் கிட்ட வரும்போது நியாயமான முறையில அவரா எதிரணி கூட போய் சேருவதற்குள் தி.மு.க.விற்கு என்ன அவசரமுன்னு கேக்குறாரோ?
------
கருணாநிதி: குரு பேசியது 6 மாதங்களுக்கு முன்பே முடிந்து போன விசயம், அதை இப்போது ஏன் பேச வேண்டும் என்கிறார் ராமதாஸ். நான் கேட்கிறேன் 6 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலையை இப்போது விசாரித்து தீர்ப்பு கொடுக்கக்கூடாதா?
வெறும்பயல் : யாருப்பா அது, ஒரு வருசத்துக்கு முன்னால தினகரன் ஆபிஸ்ல நடந்த 3 கொலையவே இன்னும் விசாரிக்கலன்னு சொல்றது?
------
ஞாநி: மகளிர் மாநாட்டில் முதல் முறையாக கருணாநிதி இரு மனைவிகளுடனும் மேடையேறியுள்ளதன் மூலம், கணவன் என்ன செய்தாலும் மனைவி பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று தவறான கருத்தை வலியுறுத்தி உள்ளார்.
வெறும்பயல் : இருக்கப்பட்ட மவராசன் அள்ளி முடியுறாரு. நம்ம எதுக்கு சார் வயிறெரியணும்? அது சரி இப்பல்லாம் அவரு எது பண்ணினாலும் உங்களுக்கு தப்பாவே தோணுதே, ஏன்னு யோசிச்சி பாத்தீங்களா சார்?
--------
செய்தி : ஜெயலலிதா கோடநாடு எஸ்டேட்டிலேயே 2 மாதங்களாக ஓய்வில் உள்ளார். இது அ.தி.மு.க வளர்ச்சியை பாதிக்கும் என விசுவாசிகள் கவலை.
வெறும்பயல் : அவங்களும் கார்த்திக் மாதிரி லேப்டாப்லயே எல்லாத்தையும் கவனிச்சிட்டு இருக்காங்களோ என்னவோ?
-----
குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி : சட்டமன்றத் தேர்தலையும் உடனே நடத்தி விட கருணாநிதி ஆலோசனை
வெறும்பயல் : அவர் ஒரு சாணக்யன் அப்படின்றதுக்கு இதுதான் நல்ல உதாரணம். பின்ன எல்லாரும் 2011ல் நாங்கதான் ஜெயிப்போம்ன்றாங்க, 2011ல எலக்சனே நடக்குலன்ன எப்படி ஜெயிப்பீங்க? எப்படி ஜெயிப்பீங்க? ஐ.. டனக்குனக்கா நக்கா,, டனக்குனக்கா நக்கா,,
-------
செய்தி : நடிகர் (டாக்டர்) விஜய் மன்றக் கொடியை அறிமுகப் படுத்துகிறார். இது அவர் அரசியலுக்கு வருவதற்கான முதல் படி என அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி.
வெறும்பயல் : 2016ல் நாந்தான் முதலமைச்சர்னு சொல்வாரோ? குருவியோட பிரம்மாண்டமான(!) வெற்றியை பார்த்து இப்படி ஒரு ஆக்சனில் இறங்கிட்டாரோ?
16 comments:
கடைசி செய்தி குறித்த கருத்துக்கள் குவியும் ஐயா. மற்றவை பதிவர்கள் கண்ணில் படாது. உமக்கு சில பதிவர்களின் கும்மாங்குத்து காத்திருக்கு.
// உமக்கு சில பதிவர்களின் கும்மாங்குத்து காத்திருக்கு.
//
இங்க வந்தப்புறம் கும்மாங்குத்துக்கு பயந்தா ஆகுமா?
எல்லாமே நல்லா இருக்கு.
//2011ல எலக்சனே நடக்குலன்ன எப்படி ஜெயிப்பீங்க?// இது சூப்பர் :-)
வாங்க சுரேஷ்..ரசிச்சதுக்கு நன்றி
வலைப்பூ ஆரம்பிச்சு குறுகிய காலத்துலயே ஆட்டோ வரவெச்சுடுவிங்க வெண்பூ..
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. மிகவும் ரசிச்சேன். இது ரொம்ப நல்லா இருக்கு அது இதவிட நல்லா இருக்குன்னு சொல்லவே முடியாதபடிக்கு எல்லாமே கலக்கல்.
வாங்க பரிசல்காரன்... ஆனாலும் ரொம்ப புகழுறீங்க நீங்க, வெக்க வெக்கமா இருக்கு..
வாங்க ராப்..ரசிச்சதுக்கு நன்றி
அவ்வ்வ்வ்வ்வ்... தினமலர்-லே 'டவுட் தனபாலு'ன்னு ஒரு பகுதி வரும்... .அது நீங்கதானா????
ஆகா...நீங்க பாராட்டுறீங்களா..கலாய்க்கிறீங்களான்னே புரியலயே ச்சின்னப்பையன்.. சேஃபர் சைட் பாராட்டாவே எடுத்துக்கிறேன்.
மிக நகைச்சுவையாக விமர்சனம் செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களுக்கு நன்றி அமுதா.
வெண் வெறும்பயல் அற்புதம் அதுவும் ஞானிக்கு கொடுத்த பஞச் ரோமப் சூப்பர்
வெண்பூ!
இந்த விமர்சன முறை நல்லாருக்கு. வாரத்துக்கு ஒரு முறை முக்கியச் செய்திகளை இதுமாதிரி விமர்சிக்கலாம். தொடர்ந்து பதிவுகள் எழுதவும்.
நன்றி ஜாக்கிசேகர்...
நன்றி லக்கி. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.
அழகிய அரசியல் நையாண்டி..பகடி செய்யும் நிலையில் தான் தற்போதைய அரசியல் நிலை உள்ளது..
பிரியமுடன்
லேகா
http://yalisai.blogspot.com/
வருகைக்கு நன்றி லேகா... என்னுடைய புதிய பதிவை பார்க்கவில்லையா?
வெறும்பயல் விமர்சனங்கள் (2)
Post a Comment