"சார், இப்பவாவது எனக்கு இதை எப்படி சாதிச்சீங்கன்னு சொல்லக் கூடாதா சார்?" என்றான் அசோக் ஏக்கத்துடன்.
"அசோக், கண்டிப்பா சொல்றேன். ஒரு செகண்ட் அப்படின்றத எப்படி அளக்கறதுன்னு தெரியுமா?"
"நீங்க கேக்கறது புரியலயே சார். காலத்த வெச்சிதான் மத்த எல்லாத்தயும் அளக்குறோம், ஒலி மற்றும் ஒளியோட வேகம், உங்களுக்கும் எனக்கும் எத்தனை வயசு எல்லாமே?"
"அதுதான் தப்பு அசோக். ஒளியோட வேகத்த காலத்த வெச்சி அளக்குறதில்ல, காலத்ததான் ஒளியோட வேகத்த வச்சி அளக்குறோம், புரியற மாதிரி சொல்றேன், ஒரு செகண்ட் அப்படின்னா ஒளி 3 லட்சம் கி.மீ கடக்க ஆகற நேரம்"
"அதுதான் 8வது படிக்கிற பசங்களுக்குக் கூட தெரியுமே சார்"
"கரெக்ட். ஆனா, நீ ஒரு செகண்டுக்கு ஒன்றரை லட்சம் கி.மீ. வேகத்துல ட்ராவல் பண்றதா வச்சிக்குவோம், இப்ப உனக்கு ஒளியோட வேகம் எவ்வளவு?"
"நான் ஒன்றரை லட்சம் கி.மீ. வேகத்துல போறதுனால, என்னோட ராக்கெட் உள்ளாற ஒளி ஒன்றரை லட்சம் கி.மீ, வேகம்தான் இருக்கும், சரியா?"
"தப்பு.....என்ன பார்க்கிற...அப்பவும் ஒளியோட வேகம் கான்ஸ்டன்ட்தான். உன்னோட வேகத்துல, உன் ராக்கெட் உள்ளாற 3 லட்சம் கீ.மீ கடக்க ஒளிக்கு 2 செகண்ட் தேவைப்படும், ஏன்னா நீ ஏற்கனவே ஒன்றரை லட்சம் கி.மீ வேகத்துல போயிட்டு இருக்குற. சரியா? "
"சரி மாதிரிதான் தோணுது"
"இப்போ ராக்கெட் வெளியில இருக்குறவங்களுக்கு 2 செகண்ட் ஆகியிருக்கும், ஆனா உனக்கு ஒரு செகண்ட்தான் ஆகியிருக்கும், அதுதான் தியரி, அதாவது, நீ அந்த ராக்கெட்ல 5 வருசம் சுத்திட்டு கீழ இருங்குனா உனக்கு 5 வயசுதான் கூடி இருக்கும் ஆனா எனக்கு 10 வயசு கூடியிருக்கும் - அதாவது நீ எதிர்காலத்துல நுழைஞ்சு இருப்ப, யு வுட் ஏவ் ட்ராவல்டு இன் டு த ஃபியூச்சர்"
"ஆச்சரியமா இருக்கு சார், அப்ப ஒளி வேகத்துல ட்ராவல் பண்ணா எனக்கு வயசே ஆகாது இல்லயா?"
"யு காட் த பாயிண்ட். ஆனா இயற்கை எல்லாத்துக்கும் ஒரு லிமிட் வெச்சிருக்கறதால நம்மால அதையெல்லாம் கற்பனை பண்ண மட்டும்தான் முடியும். ஒரு மணி நேரத்துக்கு 30,000 கி.மீ அப்படின்ற அளவுக்குத்தான் மனுசனால இப்ப ராக்கெட்லாம் செய்ய முடியுது"
"ஆனா நீங்க எப்படி சார் சாதிச்சீங்க?"
"சொல்றேன். நான் பண்ணியிருக்கிறது எதிர்காலத்துக்கு போற மெஷின் இல்ல, இறந்த காலத்துக்கு போறது"
"வாவ்....எப்படி சார்?"
"இன்னும் கொஞ்சம் தியரி இருக்கு பரவாயில்லயா? 2 அல்லது 3 வழிமுறைகள் இருக்கு, முதல் வழி ஒளியை விட வேகமா ட்ராவல் பண்றது, இதுக்கு வாய்ப்பே இல்ல, இன்னொன்னுதான் லேசர் உபயோகப்படுத்துறது, அதுலதான் எனக்கு வெற்றி கிடச்சிருக்கு"
"அதுக்குதான் லேசர்ல பி.எச்டி. வாங்கின என்ன புடிச்சி போட்டுடீங்களா சார்?"
"கரெக்ட். லேசர் நேர்க்கோட்ல பயணிக்கும் அப்படின்றது எல்லார்க்கும் தெரியும். ஆனா லேசர் கதிர்கள் வளைக்கப்பட்டா அது இறந்த காலத்துக்கு போகும்ன்றது தியரி. எலக்ட்ரோ மேக்னடிக் சக்திய வச்சி நான் அதை சாதிச்சிட்டேன்"
"ப்ரில்லியண்ட் சார்"
"இதன் மூலமா நாம இறந்த காலத்துக்கு ட்ராவல் பண்ண முடியாது, ஆனா செய்தி அனுப்ப முடியும், ஆப்டிகல் ஃபைபர் மூலமா டேட்டா ட்ரான்ஸ்பர் பண்ற மாதிரி"
"அட்டகாசம் சார்"
"அப்படின்னா ஜெயிக்கப் போற லாட்டரி நெம்பர், எந்த ஷேர் விலை ஏறும் இதெல்லாம் நாமே ஃபியூச்சர்ல இருந்து அனுப்பி நெறய பணம் சம்பாதிச்சிரலாம், இல்லாயா சார்?"
"ஒருவேளை நானும் 30 வயசுக்காரனா இருந்தா இப்படித்தான் யோசிப்பேனோ என்னமோ? என்னோட கனவெல்லாம் இந்த மெஷின் ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் உபயோகப்படணும். இயற்கை சீற்றங்கள், தீர்க்க முடியாத வியாதிகளுக்கு மருந்து இதெல்லாம் எதிர்காலத்தில் இருந்து வந்தா எவ்வளவு நல்லது நடக்கும்"
"கரெக்ட் சார்"
"என்னோட இந்த 10 வருஷ ஆராய்ச்சியில் உன்னோட கடந்த 2 வருஷ உதவிய என்னால மறக்கவே முடியாது. நீதான் என்கூட இருந்து இதை உபயோகிக்க உதவி பண்ணனும்."
"கண்டிப்பா சார்"
"என்னோட ஆராய்ச்சியோட எல்லா விவரமும் இந்த கம்ப்யூட்டர்ல இருக்கு. உனக்குத்தான் ஏற்கனவே பாஸ்வேர்டு தெரியுமே. சரி பேசுனது போதும், எனக்கு பின்னால இருக்குற ஏ21 போர்ட்ல 24 ஆம்ப்ஸ் கரண்ட் செட் பண்ணு"
செய்தான்...
"இப்ப நான் இதை ஆன் செய்யப் போறேன், பார்க்கலாம் எதிர்காலத்தில இருந்து நானோ, நீயோ என்ன மெஸெஜ் அனுப்புறோம்னு" - நீலகண்டன் உற்சாகமாக கத்திக்கொண்டிருந்தார்.
கம்ப்யூட்டர் செய்திகளை வரி வரியாகக் காட்டிக் கொண்டிருந்தது.
-எதிர்காலத்தில் இருந்து ஒரு செய்தி
-தேதி 18 ஜூன் 2018-அனுப்புனர் - அசோக்
"இன்னயில இருந்து சரியா 10 வருஷம் கழிச்சி நீ மெசேஜ் அனுப்பிட்டு இருக்க அசோக்"
- இன்றைய டைரிக் குறிப்பு
- இன்று எனக்கு நியூயார்க் லாட்டரியில் 360 மில்லியன் டாலர் பரிசு அடித்துள்ளது.
அதிர்ந்தார் நீலகண்டன், அவரது கண்களில் ஆத்திரம் மின்னியது. கம்ப்யூட்டர் தொடர்ந்து செய்தியை கொடுத்துக் கொண்டே இருந்தது.
- அது தவிர ஒரு முக்கியமான கூட்டம் வேறு.
- 10 வருசத்துக்கு முன்னால் தனது ஆராய்ச்சிக்கூடத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட எனது புரபசர் நீலகண்டனின் 10வது நினைவு நாள் கூட்டத்தில் வேறு கலந்து கொள்ளவேண்டி இருந்தது.
திடுக்கிட்டு திரும்பினார் நீலகண்டன். கையில் துப்பாக்கியுடனும் வாய் நிறைய புன்னகையுடனும் நின்றிருந்தான் அசோக்,
"மன்னிச்சிடுங்க புரபசர், இப்படிப்பட்ட அரிய கண்டுபிடிப்ப கோட்டை விடாம இருக்க எனக்கு இதைத்தவிர வேறு வழி தெரியல" என்று கூறிக்கொண்டே ட்ரிக்கரை அழுத்தினான்.
11 comments:
நாந்தான் முதல் போணின்னு நினைக்கிறேன்...
விரிவான கருத்துக்கள் சற்று நேரத்துக்கு பிறகு...
(காலங்கார்த்தாலே கொஞ்சம் வேலை பாக்கணும்றாங்க!!!)
வாங்க ச்சின்னப்பையன்... நம்ம ப்ளாக்குக்கே நீங்கதான் முதல் போணி..வரவேற்கிறேன்
மறுபடியும் விசிட் பண்ற மாதிரி க்வாலிட்டியா எழுதியிருக்கேன்னுதான் நினைக்கிறேன்..
கதை ந்ல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...
கதை ந்ல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...
வந்து வாழ்த்தியதற்கு நன்றி விக்னேஷ்வரன்...
superaa explain pannirukeenga Venboo.. aana kadaisi climax twist thaan konjam ethirpaartha maathiriye vanthirukuthu :)))
ஹாய் வெண்பூ, இந்த கதை ரொம்ப நல்லா இருக்கு.
ஹாய் வெண்பூ, இந்த கதை ரொம்ப நல்லா இருக்கு.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கீதா கிருஷ்ணன். நேரம் கிடைக்கும்போது மற்ற கதைகளையும் படியுங்கள்.
//ஜி said...
superaa explain pannirukeenga Venboo.. aana kadaisi climax twist thaan konjam ethirpaartha maathiriye vanthirukuthu :)))
//
ரொம்ப நன்றி ஜி.. (ஒரு மாசம் கழிச்சி சொல்றேனேன்னு கோச்சுகாதீங்க...)
நன்றி
Post a Comment