முன்குறிப்பு: இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே.
இனி கதை...
வணக்கமுங்க. நாந்தான் வெண்பூ. இந்த உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு ஒரு சிறுகதைப் போட்டி நடத்துறாங்களாம். அனுப்பலாம்னா புதுசா ஒண்ணும் தோண மாட்டேங்குது. மூணு வருசத்துக்கு முன்னால ஒரு கதை எழுதி வெச்சிருந்தேன். அதை எங்கியும் அனுப்பவே இல்லை. சரி அதை உபயோகப் படுத்திக்கலாம்னு பரண்மேல ஏறி எலி கூடவெல்லாம் சண்டை போட்டு எடுத்திருக்குறேன். கீழ இருக்குறதுதான் அந்த கதை. படிச்சுட்டு சொல்லுங்க, அனுப்பலாமான்னு..
******
கி.பி. 1885
சென்னை நகரின் நடுவே நவீனமாக தோற்றமளித்த அந்த இரண்டடுக்கு கட்டிடத்தின் முதல் மாடியில் அமர்ந்து வேக வைத்த கோழித்தொடையை கடித்துக் கொண்டிருந்த அவன் முன் வந்து அமர்ந்தான் பீட்டர்.
இரண்டு பேருமே அந்த சூழ்நிலைக்கு சிறிதும் பொருந்தாதவர்களாக தோற்றமளித்தனர். இருவரும் வெள்ளையர்கள் என்றாலும் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது.
"ஜேம்ஸ். என்ன சொல்லுது சிக்கன்? காரம் போடாம ஒழுங்கா சமைக்கிறானா?"
"ஏதோ.. ஆனாலும் நம்ம ஊர் ருசி வரல"
"ம்ம்ம்ம் சகிச்சிக்க வேண்டியதுதான்"
"அது இருக்கட்டும், க்ரோவர் க்ளீவ்லேன்ட் எதுனா செய்வாரா? இருபது வருசம் கழிச்சி டெமாக்ரட்ஸ் ஜெயிச்சி இருக்காங்க"
பீட்டர் பதில் சொல்ல வாயெடுக்கும் முன், அவசர அவசரமாக உள்ளே நுழைந்தான் அவன்.
"ஹே.. ரெண்டு பேருமே இருக்கீங்களா நல்லது. கடல் உயிரினங்கள் பத்தின ஆராய்ச்சில நம்ம ஆளுங்க ஒரு முக்கியமான விசயம் கண்டுபிடிச்சி இருக்காங்க. மெட்றாஸ்லயிருந்து 250 கி.மீ தெற்கில கரையிலிருந்து சுமார் 5 கி.மீ உள்ளாற நம்ம கப்பல் நங்கூரம் அடிச்சிருக்கு. இன்னிக்கு கடலோட தரை மட்டத்துல பவளப்பாறை மாதிரி ஏதோ ஒண்ணு கிடைக்க அதை எடுத்துட்டு வந்திருக்காங்க. அதை உடைச்சப்ப அதுக்குள்ள என்ன இருந்ததுன்னு தெரியுமா?"
"என்ன பில்? எதுனா மீன் கிடைச்சதா?"
"இல்லை. கிடைச்சது ஒரு மனித விரல்"
திடுக்கிட்டுப் போய் எழுந்து நின்றனர் இருவரும்.
"உட்கார்ங்க. அது எப்படி அங்க கிடைச்சதுன்றது இன்னும் புரியல. எடுத்துட்டு வரச் சொல்லி இருக்கேன். தேவைப்பட்டா உடனடியா அதை அமெரிக்காவுக்கு அனுப்பலாம். எனக்கென்னவோ இது இந்த உலகத்தையே மாத்தப்போற ஏதோ ஒண்ணுன்னு தோணுது. நீங்க ரெண்டு பேரும் உடனடியா இதுல இறங்குங்க." என்றார் பில் என்றழைக்கப்பட்ட வில்லியம்.
"கண்டிப்பா" என்றனர் இருவரும் ஒரு சேர.
****
இரண்டு மாதங்கள் கழித்து, லேசாக மழை தூறிக் கொண்டிருந்த மதிய வேளையில் அவர்கள் மீண்டும் கூடி இருந்தனர்.
"இப்ப என்ன முன்னேற்றம் ஜேம்ஸ்?"
"கிடைச்சிருக்குறது மனித விரல் அப்படின்றதுல எந்த சந்தேகமும் இல்லை. என்ன ஆகி இருக்கும்ன்னா ஏறத்தாழ 700 வருசத்துக்கு முன்னால அந்த மனுசன் கடல்ல மூழ்கி இறந்துட்டாரு. நாளாக நாளாக அவரோட உடல் சிதைய ஆரம்பிச்சிடுச்சி. அந்த சமயத்துல அவரோட விரல் தனியா கழண்டு விழுந்து இருக்கு. அதை சுத்தி பவளப்பாறைகள் வளர இந்த விரலை சுத்தி ஒரு வேக்வம் உருவாகி இருக்கு. அதனால இது அதிகமா சிதைவடையாம நமக்கு கிடைச்சிருக்கு. ஆனா.."
"என்ன பிரச்சினை?"
பீட்டர் தொடர்ந்தான்.. "இதை வெளியே எடுத்தப்புறம் சரியா பாதுகாக்கலை. அதனால இதிலிருந்து டி என் ஏ சரியா கிடைக்கலை. 1869ல டி என் ஏ வை தனியா முதல் முதலா பிரிச்ச ஃப்ரெடரிக் மேஷர் டீம்ல இருந்த நாங்க எல்லாம் தனியா வந்து இந்த ஆராய்ச்சிய ஆரம்பிச்சோம்ன்றது உங்களுக்கு தெரியும். ஆனா அதற்கப்புறம் இத்தனை வருசமா நாங்க என்ன பண்றோம்றது வெளி உலகத்துக்கு தெரியாது. இந்த நிலைமைல இந்த ஒரு டி என் ஏவை வைச்சி ஒரு முழு மனுசன உருவாக்க நாங்க முயற்சி செய்யப்போறோம். ஒரு நல்ல டி என் ஏ சாம்பிளை வெச்சி இந்த ஆராய்ச்சி பண்றதை விட இது போல முழுமை பெறாத டி என் ஏ வை வெச்சி ஆராய்ச்சி பண்ணினா இதுல இருக்குற எல்லா பிரச்சினைகளும் தெரிய வரும், ஆராய்ச்சியும் முழு வெற்றி அடையும். இது பத்தி ஒரு சின்ன தகவல் கூட வெளிய போகாம நீங்கதான் பாத்துக்கணும்"
"கண்டிப்பா பாத்துக்குறேன். இது ரொம்ப முக்கியமான ஆராய்ச்சி மட்டுமில்லை ரொம்ப பிரச்சினையானதும். அதனால முழு முடிவும் தெரியற வரை நாம இதைப் பத்தி வெளிய பேசவே வேணாம். உங்களுக்கு தேவையான பணம் வந்துகிட்டே இருக்கும். பிரசிடன்ட் கிட்ட நான் பேசிக்கிறேன். உடனே ஆரம்பிங்க"
*****
கொஞ்சம் வேகமாவே ஃபாஸ்ட் ஃபார்வேட்...
1972ன் இறுதியில்..
சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்த அந்த அமெரிக்க நிறுவனத்தின் நான்காவது மாடியில் அவர்கள் கூடி இருந்தனர்.
"இப்ப என்ன சாக்கு போக்கு சொல்லப்போறீங்க விக்டர்?"
"இங்க இருக்குற எல்லாருமே இந்த திட்டம் பத்தி தெரிஞ்சவங்களா இருந்தாலும் பெரும்பாலான ஆட்களுக்கு இதன் வரலாறு தெரியாது. அமெரிக்க அரசாங்கம் ஒவ்வொரு வருசமும் உயிரியல் ஆய்வுகளுக்காக பல பில்லியன் டாலர்களை செலவழிக்குது. நம்ம ஆராய்ச்சி அதில் ஒரு பகுதிதான். ஒரு டி என் ஏ ல இருந்து ஒரு முழு மனுசனையும் உருவாக்குறது மட்டுமே இல்லை இந்த ஆராய்ச்சி, அப்படி உருவாக்கப்பட்டா க்ளோனிங் மூலமா பல உயிர்க்கொல்லி வியாதிகளுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியும். இதயம், சிறுநீரகம் மாதிரி ஒரு உறுப்பை மட்டுமே ஆய்வகத்துல வளர்த்துக்க முடியும்.
இப்போ கணினித்துறையில நடந்து வர்ற வளர்ச்சிகளையும் இது கூட இணைச்சி இனிமே எதிர்காலத்துல வரப்போற எத்தனையோ வியாதிகளையும், குறைபாடுகளையும் களைய முடியும். இப்படி பலப்பல பயன்களும் அது மூலமா டிரில்லியன் கணக்கான பணமும் எதிர்பார்க்கப்படுற ஆராய்ச்சி இது.."
"எல்லாம் சரி.. ஆனா இன்னும் எத்தனை நாளைக்கு இதையே நாம சொல்லிட்டு இருக்கப்போறோம்? ரிசஸ்சன், டிப்ரஸன், கென்னடி கொலை, இப்ப வாட்டர் கேட் ஊழல்னு ஒவ்வொருமுறை எதாவது ஒரு பிரச்சினை வர்றப்பவும் நம்ம பிரச்சினையில மாட்டுறோம். ஏறத்தாழ 80 வருசமா இந்த ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு. இப்ப மறுபடியும் பட்ஜெட் ஒதுக்குங்கன்னு கேட்டுப் போறதுக்கு நம்ம எதாவது முடிவுகளை காட்டணும் விக்டர்"
விக்டர் புன்னகைத்தான். "இந்த முறை கண்டிப்பாக முடிவை காட்டலாம் டீம்"
"என்ன சொல்றீங்க?"
"இதுவரைக்கும் நம்ம 8 தடவை தோத்திருக்கோம். முதல் முதல்ல ப்ரொஃபசர் பீட்டரும் ப்ரொஃபசர் ஜேம்ஸும் கிடைச்ச டி என் ஏ வை முழுமையடைய வெக்க என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க. கிடைச்ச டி என் ஏ ல மிஸ் ஆன சில ந்யூளியோடைட்ஸை அவங்க வேறு மனிதர்களோட டி என் ஏ ல இருந்து எடுத்து நிரப்புனாங்க. அந்த விரல் ஒரு பெண்ணோடதா இருக்கலாம்னு நெனச்சி அதற்கு தகுந்த மாதிரி டி என் ஏ வோட மாதிரிகளை உபயோகப் படுத்துனாங்க. நமக்கு அந்த பொண்ணு கிடைச்சாலும் அவங்களால முழுமையான பொண்ணா இருக்க முடியல. முக்கியமா மூளை வளர்ச்சி இல்லை.
அதுக்கப்புறம் நடந்த ஆய்வுகள்ல அது ஆணாத்தான் இருக்கணும் அப்படின்னு முடிவு தெரிஞ்சதுக்கப்புறம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிரச்சினை. ஒரு தடவை உயரம் அதிகமா போயிடுச்சி, ஒரு தடவை நிறம் வெளுத்துப் போச்சி இப்படி எட்டு தடவையுமே எதாவது ஒரு பிரச்சினை. அது எல்லாத்தையும் இப்ப உருவாக்கி இருக்கிற இந்த ஒன்பதாவது கருவுல சரி செஞ்சாச்சு. பிறந்து 2 மாசம் ஆன அந்த குழந்தை நம்மோட எல்லா பரிசோதனைகளிலும் பாசிட்டிவ் ரிசல்ட்தான் குடுத்திருக்கு"
"இப்ப அந்த குழந்தை எங்க இருக்கு?"
"ஒவ்வொரு முறையுமே நாம அந்த கருவை உருவாக்கியதும் பரிசோதனைக்கூடத்திலயே வெச்சிக்கறதில்லை. அதை ஏதோ ஒரு பெண்ணோட கருப்பையில செலுத்திடுவோம். அது பரிசோதனைக் குழந்தை அப்படின்றதே அந்த பொண்ணுக்கு தெரியாது. மருத்துவர்களோட நமக்கு இருக்கும் நல்ல உறவு மற்றும் பணபலம் மூலமா இதை சாதிக்க முடியுது. சொல்லப்போனா ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான பின்புலத்துல பிறந்து வளர்ந்தது. ஒரு சில குழந்தைகள் வெளிநாடுகள்லயும் பிறந்தது. அது மட்டுமில்லாம இந்தியா மாதிரி வளரும் நாடுகள்ல இதையெல்லாம் பத்தி கவலைப்பட ஆள்கிறவர்களுக்கும் நேரம் இல்லை, பொது மக்களுக்கும் தெரியறதில்லை.
இந்த குழந்தையும் அதே மாதிரி இதே மெட்றாஸ்ல ஒரு குடும்பத்துலதான் பிறந்து வளந்துட்டு வருது. இதுவரைக்கும் பார்த்ததுல அதோட உடல்நிலை, மனநிலை எல்லாமே ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. சொல்லப்போனா கொஞ்சம் அதிகமாவே இருக்கு. உங்க முன்னால இருக்குற ஃபைல்ல இது பத்தின எல்லா தகவல்களும் இருக்கு"
பதினைந்து நிமிடங்களுக்கு ஃபைல் புரட்டல்கள், குசுகுசு பேச்சுகளுக்கு பிறகு,
"ரொம்ப நல்லது விக்டர். இந்த தகவல்கள் எல்லாமே நமக்கு அடுத்த பட்ஜெட் கிடைக்க உதவியா இருக்கும். ஒரு முக்கியமான விசயம்."
'என்ன?' என்பது போல் பார்த்தான் விக்டர்.
"மத்த எல்லாருமே இன்னும் உயிரோட இருந்தாலும் நாம அவங்கள கண்காணிக்கிறதில்லை. ஒரு அஞ்சு வருசம் மட்டும் ஃபாலோ பண்ணி டேட்டா கலெக்ட் பண்ணிட்டு அப்புறம் மறந்துடுறோம். இப்ப அவங்க எங்க இருக்காங்க, எப்படி இருக்காங்க எதுவுமே நமக்குத் தெரியாது. இந்த கேஸ்ல அந்த மாதிரி ஆகக் கூடாது. அந்த பையனை எப்பவும் நம்ம கண்காணிப்பிலயே வைங்க.. ஓரளவு வளர்ந்ததும் அவனை எப்படியாவது ஸ்காலர்ஷிப் ஆசை காட்டி அமெரிக்காவுக்கு இழுத்துடலாம். அதுக்கப்புறம் அவனை கண்காணிக்கிறது சுலபமாகிடும். இதுதான் அந்த விரலை வெச்சி நாம உருவாக்கிற கடைசி உயிரா இருக்கணும்."
"நல்லா புரிஞ்சது" என்றான் விக்டர்..
****
ஹலோ.. நாந்தாங்க வெண்பூ.. கதை இன்ட்ரெஸ்டா படிச்சிட்டு இருக்குறப்ப இவன் எதுக்குடா தொந்தரவு பண்றான்னு திட்டாதீங்க. ஸாரி.
அந்த கடலுக்குள்ள கிடைச்ச விரலோட சொந்தக்காரன் எப்படி கடலுக்குள்ள போனான், அப்புறம் அதனால என்ன நடக்குது அப்படின்றது மட்டுமில்லாம இப்ப உயிரோட இருக்குற ஒன்பது க்ளோன்களும் சந்திக்கிற மாதிரி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைய எழுதி வெச்சிருந்தேன். அந்த பேப்பர்லாம் எங்க போனிச்சின்னு தெரியலயே.
ஆங்.. இப்ப ஞாபகம் வந்திருச்சி. இந்த கதைய எழுதி முடிச்ச அன்னிக்கு என்னை பாக்குறதுக்காக கமலஹாசனும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் வந்திருந்தாங்க. பாதிக் கதைய இங்க படிச்சவங்க மீதி கதையவும் படிச்சு பாத்துட்டு தரேன்னு வாங்கிட்டு போனாங்க. அதுக்கப்புறம் அவங்கள பாக்கவே முடியல. நானும் கல்யாணம், குழந்தை, வேலைன்னு செட்டில் ஆகிட்டேன்.
இப்ப அந்த மீதி பக்கங்கள் இல்லாம கதைய அனுப்ப முடியாதே!! அவங்கள பாத்தா நான் அந்த கதையோட பேப்பர்களைக் கேட்டேன்னு சொல்றீங்களா? ப்ளீஸ்.
Showing posts with label புனைக்கதை. Show all posts

Monday, June 1, 2009
Sunday, July 27, 2008
மாயா..மாயா..எல்லாம் மாயா.. (அறிவியல் சிறுகதை)
2008 ஆகஸ்ட் 15, நேரம் மாலை 6.45 மணி
தன்னைச் சுற்றிலும் இருந்த பெரிய பெரிய இரும்பு பெட்டிகளையும் அதற்குள்ளே செல்லும் பலவண்ண வயர்களையும் பார்த்து வியந்து நின்று கொண்டிருந்த நாதனின் தோளில் தட்டினான் கிருஷ்ணா.
"என்ன புரொபசர், திகைச்சி போய் நின்னுட்டீங்க போலிருக்கு"
"கண்டிப்பா கிருஷ். நீ ஐ.ஐ.டி.ல படிச்சப்ப நான் உன்னோட புரொபசர். ரொம்ப ப்ரைட்டா இருந்ததால எல்லாருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும். நீ உன்னோட பி.எச்.டிக்கு என்னை கைடா செலக்ட் பண்ணினதுக்கு உன்னை விட நான் ரொம்ப சந்தோசப்பட்டேன். இதோ 13 வருசம் கழிச்சி இப்ப உன்னை ஏர்போர்ட்ல பாத்தப்ப எனக்கே உன்னை அடையாளம் தெரியல. என்னை பாத்தவுடனே சின்னக்குழந்தை மாதிரி என்னை கட்டிபிடிச்சி சீன் கிரியேட் பண்ணிட்டே. உன்கூட வந்தே ஆகணும்னு ஒரே அடம்பிடிச்சி என்னை இங்க கூட்டிட்டு வந்தே. இங்க வந்து பாத்தா இந்த லேப் என்னோட கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டதா இருக்கு. என்ன பண்ணிட்டு இருக்க நீ கிருஷ்?"
"புரொபசர், உங்களுக்கே தெரியும்.. எனக்கு கம்ப்யூட்டர்னா உயிர்னு. அதனாலதான் சூப்பர் கம்ப்யூட்டர் பத்தி பி.எச்.டி. பண்ணினேன். அது முடிஞ்சதும் அமெரிக்காவில வேலை கிடைச்சி போனதும் உங்களுக்குத் தெரியும். அங்க போயி கொஞ்ச நாள்லயே எனக்கு அது போரடிக்க ஆரம்பிச்சிடுச்சி. அதனாலதான் இந்தியா திரும்பி வந்து இந்த லேப் ஆரம்பிச்சேன்"
"அதுவும் எனக்கு தெரியும் கிருஷ். உன்னைப் பத்திதான் எல்லா மீடியாவும் பேசிட்டிருக்கே"
"நான் உங்களை இங்க கூட்டிட்டு வந்தது என்னோட புது கண்டுபிடிப்பைப் பத்தி உங்களுக்கு சொல்றதுக்காகதான். இதுபத்தி இன்னும் யாருக்கும் சொல்லவேயில்லை. நீங்கதான் முதல்ல தெரிஞ்சிக்கப் போறீங்க"
"சொல்லு கிருஷ்" என்றார் நாதன் சிறிதும் கலப்படமில்லாத நிஜமான ஆர்வத்துடன்.
"இப்ப இருக்கிறதுலயே அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் எதுன்னு சொல்லுங்க"
"ஐ.பி.எம். மூணு மாசத்துக்கு முன்னால அறிவிச்ச ரோடுரன்னர் (IBM RoadRunner). சரியா? அதோட வேகம் கூட 1 பீட்டா ஃப்ளாப்க்கு (Peta Flops - Floting Point Operations Per Second) மேலன்னு ஞாபகம்"
"ரொம்ப சரி புரொபசர். சாதாரண கம்ப்யூட்டரோட வேகம் சில மெகா ஃப்ளாப்ல இருக்குறப்ப இந்த ரோடுரன்னர் அதை விட லட்சக்கணக்கான மடங்கு வேகத்துல செயல்படுது"
"ரொம்ப சரி கிருஷ். அவங்க அடுத்த ப்ராஜக்ட் கூட ஆரம்பிச்சிட்டதா கேள்விப்பட்டேன். அது இதை விட ரெண்டு அல்லது மூணு மடங்கு வேகம் கொண்டதா இருக்கும்னும் அது 2010ல வந்துடும்னும் பேசிக்கிறாங்க"
பதில் சொல்லாமல் லேசான புன்னைகையுடன் தீர்க்கமாக பார்த்தான் கிருஷ்ணா.
"என்ன கிருஷ்.. அப்படி பாக்குற?"
"நீங்க நம்பமாட்டீங்க புரொபசர். நான் அதை விட பல மடங்கு சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கிட்டேன்"
"என்னப்பா சொல்றே?" ஆச்சரியம் + அதிர்ச்சியுடன் கேட்டார் நாதன்.
"ஆமா சார். நீங்க இப்ப அதுக்கு நடுவுலதான் நிக்கிறீங்க"
ஆச்சரியம் விலகாமல் சுற்றி இருந்த அனைத்தையும் பார்த்தார் நாதன்.
"எங்கப்பா எனக்காக விட்டுட்டு போன ஆயிரக்கணக்கான கோடிகள்ல பாதிக்கும் மேல விழுங்கிட்டு இதோ இங்க 8 ஏக்கர் பரப்பளவில நிக்குதே இதுதான் என்னோட கண்டுபிடிப்பு. இதோட ஸ்பெசிஃபிகேஷன் சொல்றேன் கேக்குறீங்களா புரொபசர்?
மொத்தம் இதுல 2048 சப்சிஸ்டம் (sub-system) இருக்கு. ஒவ்வொரு சப்சிஸ்டத்திலயும் 1024 யூனிட், ஒவ்வொரு யூனிட்லயும் 64 க்வாட் கோர் ப்ராசஸர் (quad core processor). மொத்தம் 2048 * 1024 * 64 = 134 மில்லியன் ப்ராசஸர்ஸ் இருக்கு. நம்ப முடியல இல்லை. அது மட்டுமில்ல. இந்த எல்லா சப்சிஸ்டமும் அதி நவீன ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலமா இணைக்கப்பட்டிருக்கு. இதுல இருக்குற மொத்த மெமரி பவர், கூகுள் கம்பெனி வெச்சிருக்கிற எல்லா சர்வர்கள்லயும் இருக்குறத விட அதிகம்."
"வாவ்"
"இன்னிக்கு உலகத்தில பயன்பாட்டில இருக்கிற அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரைவிட இது ஏறத்தாழ 3,000 மடங்கு சக்தி வாய்ந்தது. என்ன ஒண்ணு, சின்ன நகரத்துக்கு ஒரு மாசத்துக்குத் தேவைப்படுற மின்சாரம் இதுக்கு ஒவ்வொரு நாளும் தேவை"
"நீ சொன்னது நிஜம்தான் கிருஷ்.. என்னால நம்பவே முடியல"
சிரித்தான் கிருஷ்ணா.
"ஆனா உன்னை நான் பாராட்டணும் கிருஷ். உனக்குள்ள இருந்த அந்த வேகம் வெறியா மாறிடுச்சின்னுதான் சொல்லுவேன். ஆனா அதை நீ சரியான திசையில செலுத்தியிருக்க. அதுதான் இன்னிக்கு இப்படி உருமாறி நிக்குது"
"நன்றி புரொபசர்"
"ஆமா இதை எதுக்காக உபயோகப்படுத்தப் போற?"
"சாதரணமா சூப்பர் கம்யூட்டர்கள் ஒரு சில குறிப்பிட்ட வேலைகளுக்குத்தான் உபயோகப்படுத்தப்படுது. உதாரணமா காலநிலை மாற்றங்கள், அணுகுண்டு ஆராய்ச்சி இப்படி. நான் செய்யப் போறது முற்றிலும் வேற மாதிரி"
"என்ன கிருஷ்?"
"இந்த உலகத்தில முதல் முதல்ல உயிரினம் எப்படி தோன்றிச்சி அப்படின்றதப் பத்திதான் என்னோட இந்த குழந்தை ஆராய்ச்சி பண்ணப் போகுது"
"எப்படி?"
"அணுகுண்டுகளை வெடிக்காம ஆனா அதே நேரத்தில அது வெடிச்சா எப்படி இருக்கும் அப்படின்றத பத்திதான் இன்னிக்கு பெரும்பாலான சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கு. என்ன பண்ணுவாங்கன்னா அணுகுண்டு வெடிக்கிறதுக்கு முன்னால இருக்குற எல்லா விசயங்களையும் சூப்பர் கம்ப்யூட்டர்ல ஏத்திடுவாங்க. அதுக்கப்புறம் தன்னோட ப்ராசஸிங் பவரை வெச்சி குண்டு வெடிச்சா என்ன ஆகும், எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும், கதிர்வீச்சு எந்த அளவில இருக்கும் அப்படின்றத சூப்பர் கம்ப்யூட்டர் கணக்கிடும்.
நான் அதேமாதிரி, இந்த பூமி உருவானப்ப எப்படி இருந்தது, அதோட இயல்புகள் என்ன அப்படின்றத என்னோட கம்ப்யூட்டர்ல ஏத்திட்டு இருக்கேன். அது முடிஞ்சதும் என்னோட கம்ப்யூட்டர் எப்படி உயிர்கள் தோன்றியது அப்படின்னு கணக்கிடப் போகுது. இதுக்குப் பேர் சிமுலேசன் (Simulation).
எல்லாம் சரியா நடந்தா மனுசன் எப்படி உருவானான் அப்படின்ற குழப்பமான கேள்விக்கும் கூட விடை தெரிய வாய்ப்பு இருக்கு புரொஃபசர்"
"அற்புதம் கிருஷ். நீ எது செஞ்சாலும் அதுல வெற்றியடையத்தான் போற. எனக்கு இன்னும் ஒரு சில டீடெய்ல்ஸ் தெரிஞ்சிக்கணும்"
***
கி.பி.2908 ஆகஸ்ட் 15, மாலை 7.00 மணி
"மிஸ்டர் கே89. என்னை எதுக்காக அவசரமா கூப்பிட்டீங்க?"
"இதோ இதைப் பாருங்க" என்றவாறே எதிரில் இருந்த 30 அடி நீள சுவர் மீதிருந்த மானிட்டரைத் தொட்டான். அது உலக வரைபடத்தைக் காட்ட அதில் இந்தியாவை தொட அது இந்தியாவை மட்டும் பெரிதாக்கிக் காட்டியது. அப்படியே தொடர்ந்து நான்கைந்து தொடல்களுக்குப் பிறகு நாதனையும், கிருஷ்ணாவையும் காட்டியது.
"அவங்க பேசுறதை கேளுங்க ஜே40"
இருவரும் பேசிக் கொள்வது தெள்ளத் தெளிவாகக் கேட்டது.
சரியாக 30 நிமிடங்களில் அவர்கள் ஒரு அறையில் குழுமியிருந்தார்கள். நாட்டின் அதிபர், முக்கிய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அமர்ந்திருக்க ஜே40 பேச ஆரம்பித்தார்.
"அதிவேக கம்ப்யூட்டர்கள் மூலமா இந்த சிமுலேசன் ஆரம்பிக்கப்பட்டு இன்னியோட 140 வருசம் ஆச்சு. இந்த உலகத்துல முதல் ஒரு செல் உயிரினம் தோன்றுனதுல இருந்து பரிணாமத்தோட ஒவ்வொரு கட்டத்தையும் இந்த சிமுலேசன் மூலமா நாம தெரிஞ்சிட்டு வந்திருக்குறோம். மனுசன் எப்படி தோன்றுனான் அப்படின்றது உட்பட பல விடை தெரியாத கேள்விகளுக்கு நமக்கு இந்த ப்ராஜக்ட் விடை தந்திருக்கு.
இப்ப இந்த சிமுலேசனோட முக்கியமான கட்டத்துல இருக்கோம். கோடிக்கணக்கான வருசத்தப் பத்தி தெரிஞ்சிட்ட நாம இப்ப கி.பி.2008ம் வருசத்துல இருக்கோம். இன்னும் அடுத்து வரப்போற 400 வருசங்களைப் பத்தியும் தெரிஞ்சிட்டாதான் இன்னிக்கு உலகத்துல நாம எதிர்கொண்டிருக்குற கடுமையான வியாதிகள், காலநிலை மாறுபாடுகள் மாதிரியான பல விதமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
ஆனா இப்ப நாம பாக்கிற இந்த கிருஷ்ணான்ற என்டிட்டி (Entity) சூப்பர் கம்ப்யூட்டரை கண்டுபிடிச்சியிருக்குறதாகவும், அது மூலமா சிமுலேசனை ஆரம்பிக்கப் போறதாகவும் சொல்லுது. இது நமக்கு தலைவலிதான்.
ஏன்னா, ஏற்கனவே இவங்க இருக்கிறது சிமுலேசன்ல. அதுல இருந்து இன்னொரு சிமுலேசன் ரிகர்ஸிவா (recursive) ஆரம்பிக்கறதுன்றது தேவையில்லாதது மட்டுமில்ல, நிறைய எனர்ஜி மற்றும் ரிசோர்ஸ் தேவைப்படுற ஒண்ணு.
இதனால நம்ம இப்ப எதிர்பார்க்கறமாதிரி 2923ம் வருசத்துக்குள்ள கி.பி.2500ம் வருசத்த தொட முடியாமக் கூட போகலாம்."
சிறிது நேரம் அந்த அறையில் மயான அமைதி நிலவியது.
"சரி..இப்ப என்ன பண்ணலாம்னு சொல்றீங்க ஜே40?" என்றார் அதிபர்.
*******
2008 ஆகஸ்ட் 16, நேரம் காலை 7.00 மணி
டி.வி.யில் அழகான அந்த பெண் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தாள்.
"இந்தியாவின் பிரபல கணிப்பொறி விஞ்ஞானி கிருஷ்ணா நேற்று இரவு அவரது ஆராய்ச்சிக்கூடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி மரணமடைந்தார். மின்கசிவின் காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் அவரது கல்லூரி விரிவுரையாளார் நாதன் உள்ளிட்ட மேலும் ஆறு பேரும் பலியானர்கள் என்றும் மருத்துவமனையில் படுகாயத்துடன் பலர் அனுமதிக்கப்பட்டிருப்பதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகவும் ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன"
*** சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான மூன்றாவது இடுகை ***

Wednesday, July 2, 2008
கடைசி ஆசை
கி.பி. 2058 ல் ஒருநாள். அவன் இருந்தது சென்னை அதி பாதுகாப்பு சிறைச்சாலையின் தலைமை பொறுப்பாளருடன்.
"நண்பரே, உங்கள் கடைசி ஆசையை நிறைவேற்றுவதில் நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார் த.பொ. அவனிடம். அவன் மரணதண்டனைக் கைதி. அவன் செய்த குற்றம் நமது கதைக்கு தேவையற்றது என்பதால் நேரடியாக அவனது கடைசி ஆசைக்கு செல்வோம்.
"அரசிடம் இருந்து ஒப்புதல் வந்துவிட்டதா?" என்றான் அவன்.
"ஆம் நண்பரே, இன்னும் 1 மணிநேரத்தில் தங்களது தண்டனை நிறைவேற்றப்படப் போகிறது. எனவே உங்கள் கடைசி ஆசையை நிறைவேற்றச் செல்வோமா?"
"கண்டிப்பாக" என்றான் மனதெங்கும் மகிழ்ச்சியுடன்.
*********
அடுத்த அறையில்...
"நண்பரே, இதுதான் கால இயந்திரம். உங்கள் கடைசி ஆசையின்படி நீங்கள் இதில் பயணம் செய்யப்போகிறீர்கள்...ஆனால் ஒரு சில நிபந்தனைகளுடன்"
அவன் அமைதியாக இருந்தான்.
"முதலில், நீங்கள் இறந்த காலத்திற்குத்தான் செல்ல முடியும், எதிர்காலத்திற்கு அல்ல, நீங்கள் மரணதண்டனை குற்றவாளி என்பதால். அடுத்தது உங்களுக்கு கொடுக்கப்படும் நேரம் 55 நிமிடங்கள் மட்டுமே, அதன்பின் நீங்களாகவே திரும்பிவிட வேண்டும், 1 நிமிட தாமதம் கூட பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது. மூன்றாவது ஏதேனும் ஒரே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் செல்ல முடியும், அங்கேயிருந்து வேறு ஒரு காலத்திற்கு உங்களால் செல்ல முடியாது, திரும்பி இங்கே வருவது மட்டுமே சாத்தியம். புரிகிறதா?"
"புரிகிறது"
"எந்த காலகட்டத்திற்கு செல்ல விரும்புகிறீர்கள்?"
"நூறு ஆண்டுகளுக்கு முன்னால்"
"நல்ல தேர்வு, மாசுபடாத காற்று, சுத்தமான நீர், அபரிமிதமான இயற்கை வளம் எல்லாம் அனுபவிக்க முடியும்."
மறுபுறம் திரும்பி அங்கே இருந்த க்வான்டம் கணினியில் ஒரு சில உள்ளீடுகளைச் செய்தார்.
"உலகின் எந்த பகுதிக்கு செல்ல விரும்புகிறீர்கள்? இந்தியாவின் ஏதோ ஒரு பகுதிக்கா? கிழக்கு அல்லது மேற்கு பகுதிக்கா?"
அவன் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவன். காதலியுடன் ஐரோப்பா முழுவதையும் ரசித்தவன். எனவே
"கிழக்காசிய நாடுகளில் ஏதேனும் ஒன்று"
"கண்டிப்பாக நண்பரே"
மீண்டும் ஏதோ உள்ளீடுகளைச் செய்தார்.
"அனைத்தும் தயார். இதை அணிந்து கொள்ளுங்கள். இது இன்னும் எத்தனை நிமிடங்கள் மீதி உள்ளன என்று காட்டும். இதோ இந்த கதவில் உள்ளே செல்லுங்கள். கடைசியாக சில அறிவுரைகள், நீங்கள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்துக்குச் செல்லப் போகிறீர்கள். இந்த கால இயந்திரம் நவீன க்வாண்டம் கணிணியின் உதவியுடன் உங்களை குறிப்பிட்ட காலத்திற்கு அனுப்ப உதவும். சரியாக கிளம்பிய 55 நிமிடத்தில் நீங்கள் மீண்டும் இதற்குள் வந்து இந்த சிவப்புப் பொத்தானை அழுத்தினால் நீங்கள் இங்கேயே திரும்பி வந்து சேருவீர்கள். மீண்டும் சொல்கிறேன். கால தாமதம் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. மேலும் இது 16 மெகா பிட் நீளமுள்ள பாதுகாப்புத் தகவலுடன் இயங்குகிறது, தற்போதுள்ள அதிவேக க்வாண்டம் கணினியால் இதை உடைக்கவே 16 பில்லியன் ஆண்டுகள் ஆகும். எனவே உங்களுக்கு இருக்கும் 55 நிமிடத்தில் முயற்சி செய்யாதீர்கள்."
"நான் தயார்" என்றான் அவன்.
"உற்சாகமான பயணத்திற்கு வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்."
த.பொ. மீண்டும் அனைத்தையும் சரி பார்த்த பின் பச்சை நிறத்தில் இருந்த ஒரு பொத்தானை அழுத்தினார்.
********
அவன் சடாரென உள்ளிழுக்கப்பட்டான் அல்லது பட்டதாக உணர்ந்தான். அடுத்த வினாடி அவனது கால் மற்றும் கை விரல்களில் ஆரம்பித்த வலி உடலெங்கும் பரவ ஆரம்பித்தது. அவன் உடல் வெப்பநிலை திடீரென்று உயர்ந்தது.
'என்ன இது.. நான் ஏமாற்றப்பட்டேனா? எனது மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதா?'
அவன் வலியால் கத்த ஆரம்பித்த நேரம் அவன் பனி வெள்ளத்திற்குள் விழுந்தது போல் உணர்ந்தான். வலி முற்றிலும் இல்லாமல் காற்றில்லா தளத்தில் மிதப்பது போல். அவன் மனதை அதுவரை அவன் கடந்த மகிழ்ச்சியான தருணங்களால் நிரப்பினான்.
பத்து வயது சிறுவனாக அம்மா மடியில் தலை வைத்து படுத்தான். பதினைந்து வயதில் சக தோழியிடம் இருந்து முதல் முத்தம் பெற்றான். கைத்தட்டல்களுக்கு நடுவே பல்கலை கழகத்தின் மேடையில் தங்கப்பதக்கம் பெற்றான். காதலியுடன் ஐரோப்பிய தங்கும் அறைகளில் கட்டிப் புரண்டான்.
அவன் நினைவு தடைபட்டது. எதன் மீதோ மோதி பிடிமானமில்லாமல் விழுந்தான். மெல்ல கண்களைத் திறந்து, சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லாம் அதனதன் இடத்தில் இருந்தன. கால இயந்திரம் ஏதோ ஒரு அழகான பூங்காவின் பச்சைப் புல்வெளியில் நின்றிருந்தது.
மணிக்கட்டைப் பார்த்தான். இன்னும் 54 நிமிடங்கள் இருப்பதாகக் காட்டியது. கதவைத் திறந்து வெளியே வந்து சுதந்திரக்காற்றை சுவாசித்தான்.
'இதோ இங்கே இரண்டாயிரம் காவலர்களின் பாதுகாப்பு இல்லை. கதவுகளைத் திறக்க இருநூற்று ஐம்பத்தாறு எழுத்துகளை அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உணவு மாத்திரைகள் இல்லை. தப்பிச் செல்லாமல் இருக்க பதினாறு வளைய சுற்றுச் சுவர்கள் இல்லை. வான் வழித் தப்புதலைத் தடுக்க கண்ணிற்குத் தெரியாத லேசர் படலங்கள் இல்லை. சுரங்கம் தோண்டி அதன் வழியாக தப்பிக்க நினைப்போரை பொடிப் பொடியாக்கிக் கரைக்கும் அமிலக் குழாய்கள் இல்லை.
நினைக்கும் போதெல்லாம் நாவிற்கு சுவையான உணவு, சுதந்திரமான சுற்றுப்புறம், அபரிமிதமான பெட்ரோல், அழகான பெண்கள்.
இல்லை. நான் திரும்பிப் போவது இல்லை. இங்கேயே நிரந்தரமாக தங்கப் போகிறேன். முதலில் இங்கேயிருந்து தொலைவில் செல்ல வேண்டும், மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு. ஒருவேளை அவர்கள் என்னைத் தேடி வந்தாலும், என்னைப் பிடிப்பது அவர்களுக்கு சுலபமாக இருக்கக் கூடாது. திரும்பிச் சென்றால் உடனடியாக நான் லேசர் அறைக்குள் அனுப்பப்பட்டு என் சாம்பல் கடலில் கரைக்கப்படும். இங்கேயே இருப்பதன் மூலம் அவர்கள் வந்து என்னைப் பிடித்தாலும் குறைந்தது எனது ஆயுள் ஒரு மணிநேரமாவது நீட்டிக்கப்படும்.
ஒருவேளை அவர்கள் வராமலே போனால் புதிய வாழ்க்கையை தொடங்குவேன். ஆம் அதுதான் சரி'
நினைத்துக்கொண்டே கால இயந்திரத்தை விட்டு நகரம் தெரிந்த திசையை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
******
அங்கே....
"இவர் திரும்பி வருவார் என்று நம்புகிறீர்களா?" என்றார் உதவிக்காவலர்.
பதில் சொல்லாமல் புன்னகைத்தார் த.பொ.
******
அது ஒரு அற்புதமான காலை நேரம். சூரியன் லேசாக மேலே எழும்பிக் கொண்டிருந்தது. வழியில் பார்த்த எல்லா முகங்களும் ஒரே மாதிரி இருப்பதாக பட்டது அவனுக்கு. எல்லோரும் அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்தனர்; தெருவை சுத்தப்படுத்திக் கொண்டும், பள்ளிக்கு சென்று கொண்டும், தினப் பத்திரிக்கைகளை விற்றுக் கொண்டும், இரு சக்கர மிதிவண்டிகளில் அலுவலகங்களுக்குப் போய்க் கொண்டும்....
'ம்ம்ம்ம் நூறு ஆண்டுகளில் உலகம் எவ்வளவுதான் மாறிவிட்டது'
அவனுக்கு அப்பொழுது ஒரே பிரச்சினை, தான் எங்கே இருக்கிறேன், எந்த தேதியில் இருக்கிறேன் என்று தெரியாதது. எல்லா அறிவிப்புப் பலகைகளிலும் சித்திர எழுத்துகளே பிரதானமாக இருந்தது. எந்த நாடு என்பதைக் கூட யூகிக்க முடியவில்லை.
எதிப்பட்டவர்களிடம் "இங்கிலீஷ்" என்றான். எல்லோரும் அவனை ஒருமாதிரி பார்த்துவிட்டு தலையை இட வலமாக அசைத்தனர்.அரை மணி நேர நடைக்குப் பின்னர் நகரத்தின் முக்கிய வீதியை வந்தடைந்தான். மற்ற இடங்களை விட இது பரபரப்பாக இருந்தது. மணிக்கட்டை பார்த்தான் 22 என்று காட்டியது.
வீதியில் நடக்க ஆரம்பித்தான். வழியிலிருந்த தண்ணீர் குழாயில் குளிர்ந்த நீரை உடலெல்லாம் வழிய வயிறு முட்டக் குடித்தான். சின்ன சின்னதாக கால்களை ஆட்டியவாறு நடைபாதையிலேயே குட்டி ஆட்டம் ஆடினான்.
எதிர்ப்பட்டவர்களிடம் ஆட்களைத் தேர்ந்தெடுத்து "இங்கிலீஷ்" என்றான், வெகு நேரத்திற்கு வெற்றி இல்லாமல். கடைசியாக ஒருவன் "யெஸ்" என்றான்.
மனம் நிறைந்த மகிழ்வுடன் ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்தான்.
"இது எந்த நாடு?"
"ஆச்சரியமான கேள்வி. நீங்கள் என்னை சோதிக்கிறீர்களா? நீங்கள் இருப்பது எம்பயர் ஆஃப் ஜப்பான்"
'அற்புதம், சரியான இடத்தில்தான் இருக்கிறேன். ஜப்பானின் வேகமான வளர்ச்சியில் நானும் பங்கு கொள்ளப் போகிறேன், தொண்ணூறுகளில் பொருளாதார தாழ்நிலை ஏற்படும்போது நான் இயற்கையாகவே மரித்திருப்பேன்'
*******
அங்கே....
"இன்னும் 2 நிமிடங்கள்தான் இருக்கின்றது" என்றார் உதவிக்காவலர் தவிப்புடன்.
"காத்திருப்போம்" என்றார் த.பொ.
*******
"நீங்கள் எப்படி ஆங்கிலம் பேசுகிறீர்கள்?"
"என் பணி நிமித்தமாக நான் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதனால்தான். நீங்கள்?"
"நான் அமெரிக்காவில் படித்தவன்"
அவர் முகம் மாறியது.
"இந்தியன். ஆனால் படித்தது மட்டும் அமெரிக்காவில். இனி பிழைக்கப் போவது இந்த ஜப்பானில்"
அவர் சிரித்துக் கொண்டே "நல்வரவு" என்றார்.
*******
அங்கே...
உதவிக்காவலர் பதறினார் "55 நிமிடங்களிக்கு மேலே 15 வினாடிகள் ஆகிவிட்டன. அவர் திரும்பி வருவதாகத் தெரியவில்லை. இன்னும் கால இயந்திரம் திரும்புவதற்காக ஆரம்பிக்கப்படவே இல்லை. அவர் திரும்பி வரப் போவதில்லை"
த.பொ. எந்த உணர்ச்சியும் காட்டாமல் எழுந்து சுவரிலிருந்த தகவல் பலகைக்குப் போனார். அங்கே அவன் புகைப்படத்திற்கு நேராக இருந்த 'தண்டனை நிறைவேற்றப்பட்டது' என்ற பொத்தானை அழுத்தினார்.
*******
அவன் உற்சாகமாக அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.
"இன்றைய தேதி என்ன?"
"ஹா..ஹா..ஹா..நீங்கள் என்னவோ வேறு கிரகத்தில் இருந்து வந்தவரைப் போல் கேட்கிறீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். இன்று திங்கட்கிழமை ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி, 1945ம் வருடம், நேரம் காலை 8.14 மணி. நீங்கள் நின்று கொண்டிருப்பது நகரின் பிரபலமான ஷிமா மருத்துவமனை வாசலில். போதுமா தகவல்கள்?"
ஏதோ நெருடியது...'06 ஆகஸ்ட் 1945, காலை 8.14 மணி'
நடுங்கும் குரலில் கேட்டான் "இது என்ன நகரம்?"
அவர் உற்சாகமாக பதிலளித்தார் "ஹிரோஷிமா"
32,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் ஓசை அவன் காதில் கேட்டது.
*** சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான இரண்டாவது இடுகை ***

Sunday, June 29, 2008
இரண்டாவது மூளை
"சொல்லுங்க மாமா. நீங்க என்ன சொன்னாலும் கேட்குறேன். இந்த போட்டித்தேர்வில நான் முதல் 3 இடத்துகுள்ள வரணும்" என்றேன் நான்.
என்னால் மாமா என்றழைக்கப்பட்ட மருதமூர்த்தி அறுபதுகளின் தொடக்கத்தில் இருந்தார். என் அப்பாவும் அவரும் பால்ய காலத்து நண்பர்கள் என்பதாலும், என் அப்பா அகால மரணமடைந்த பின்னர் தாயும் இல்லாமல் தனி மரமாக நான் நின்ற போது என் படிப்பிற்கான முழு செலவையும் செய்தவர் அவர் என்பதாலும் அவர் மீது எனக்கு முழு மரியாதை உண்டு. மற்றவர்கள் அவரை அங்கிள் என்று விளித்தபோதும் மாமா என்று கூப்பிடுவது என்னவோ எனக்கு அவரை மிக நெருக்கமாக உணர்த்தியதால் எனக்கு மாற்றத் தோன்றவில்லை.
மருதமூர்த்தி மாமா ஒரு சராசரி அறிவியல் ஆராய்ச்சியாளனுக்குரிய எல்லா இயல்புகளையும் கொண்டிருந்தார்; சரியான உடை உடுத்தாதது, முக்கியமான விசயங்களை மறந்து போவது என்று. அவரது சகா கிருஷ்ணகுமாருடன் இணைந்து ஏதோ ஒரு ராணுவ தளவாடங்களைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார் என்பதாக நினைவு. கிருஷ்ணகுமார் அங்கிளும் அப்பாவின் நண்பர்தான்.
நான் மருதமூர்த்தி மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தது அடுத்த வாரம் நடக்க இருக்கும் முக்கியமான போட்டித் தேர்வைப் பற்றி. அதில் வெற்றி பெற்றால் எனக்கு மேற்படிப்புக்கான அமெரிக்க நுழைவு சுலபமாக இருக்கும், அதன்பின் என் கனவான நாசாவில் நுழைவதற்கு எனக்கு எந்த தடையும் இருக்காது. ஆனால் அந்த தேர்வுக்கு நான் படித்த முதுகலை இன்சினியரிங் மிகக் குறைந்த அளவே உதவப் போகிறது. அது பற்றி ஏற்கனவே அவரிடம் சொல்லியிருக்க, அது பற்றி பேச என்னை பார்க்கிற்கு அழைத்திருந்தார்.
"ஒரு வழி இருக்குப்பா. ஆனா அது 100% இல்லீகல்" என்றார்.
"என்ன வழி மாமா?" அவரை அவசரப்படுத்தினேன்.
"நான் என்ன ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்னு உனக்குத் தெரியுமா?"
"ஏதோ ராணுவத்துக்காக அதிநவீன கருவிகள் சம்பந்தமான்ற அளவுக்கு தெரியும் மாமா. ராணுவம் சம்பந்தப் பட்டதா இருக்குறதால நான் இதைப்பத்தி மீரா கிட்டக் கூட எதுவும் கேட்கிறதில்லை" மீரா அவரது அழகான திருமணமாகாத மகள். என் சிறுவயதுத் தோழி. அவள்தான் ஆராய்ச்சியாளர்கள் இருவருக்குமான ஒரே உதவியாளினி. நான் அவரை மாமா என்றழைப்பதற்கு அவளும் ஒரு காரணம்.
"அந்த ஆராய்ச்சி நான், கே.கே.கூட சேர்ந்து பண்றது. அடிப்படையில நான் உயிரியல் விஞ்ஞானின்றதால மூளையைப் பத்தியும் ஆராய்ச்சிப் பண்ணிட்டிருக்கேன். இது வெளிய யாருக்கும் தெரியாது. கே.கே.க்குக் கூட முழு விவரம் தெரியாது"
"ஓ.."
"ஒரு மனுசனோட மூளையோட திறனை அதிகரிக்கறது எப்படின்றதுதான் என்னோட ஆராய்ச்சி, மூளைக்கு ரெண்டு விதமான திறமைகள் இருக்கு, கம்ப்யூட்டர் மாதிரியே, ஒண்ணு தகவல்களை சேமிச்சிக்குற மெமரி பவர், இன்னொன்னு சேமிச்சத் தகவல்கள தேடற ப்ராசசிங் பவர், கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் மாதிரின்னு வெச்சிக்கேன்"
"ம்"
"என்னோட ஆராய்ச்சியின் மூலமா நான் இது ரெண்டையுமே அதிகப்படுத்தறதுல வெற்றியடைஞ்சிட்டேன்னுதான் சொல்லணும்"
"வாவ்...க்ரேட்"
"இத வெளிய சொல்றதா வேணாமான்னு இன்னும் முடிவு பண்ணல. ஏன்னா இது எவ்வளவுக்கு எவ்வளவு நல்லதோ அவ்வளவுக்கு அவ்வளவு கெட்டதும் கூட"
அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
"நீ படிச்சி முடிச்ச உடனே என்கூட என் ஆராய்ச்சியில சேர்ந்துடுவன்னு நெனச்சேன். ஆனா உன்னோட லட்சியம் வேறயா இருக்கு. பரவாயில்ல. இந்த புதுகருவியின் மூலமா உனக்கு நல்லது நடந்தா எனக்கு சந்தோசம்தான். ஆனா நீ ஒரு விசயத்தை மறந்துடக்கூடாது"
கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்தேன்.
"என்னோட இந்தக் கருவி இப்போதைக்கு 100% சரியா வேலை செய்யுது. ஆனா இதுவரைக்கும் நான் மனுசங்ககிட்ட உபயோகிச்சதில்லை. குரங்குகள்கிட்ட மட்டும்தான் உபயோகிச்சிருக்கேன். அதனால நான் என்னோட ஆராய்ச்சிக்கு உன்னை பயன்படுத்திக்கிறேன்னு நினைச்சிடக் கூடாது."
"புரியுது மாமா. நான் இந்த விசயத்துல எந்த அளவுக்கும் ரிஸ்க் எடுக்கத் தயாரா இருக்கேன். இது எப்படி வேலை செய்யுது மாமா?"
"நான் இந்த கருவியை உன் தலைக்குள்ள ஆபரேசன் பண்ணி பொருத்திடுவேன். இது தனியா செயல்படுற சின்ன கம்ப்யூட்டர் மாதிரின்றதால வெளிய இருந்து எந்த சிக்னலும் இதுக்குத் தேவை இல்ல. இதோட அளவும் ரொம்ப சின்னதா இருக்குறதால ஸ்கல்ல ஓபன் பண்ண வேண்டிய அவசியமே இல்லை. சின்னதா ஒரு ஓட்டையிலயே வேலை முடிஞ்சிடும், ஒரு மணி நேர ரெஸ்ட்க்கு பின்னால நீ எல்லா வேலையும் செய்யலாம். இதுல 6 GB அளவுக்கு மெமரி இருக்கு அது மட்டும் இல்லாம ஒரு சின்ன ப்ரோகிராமும் இருக்கு. டெஸ்ட்டுக்கு முதல் நாள் நான் இதை உன் தலையில வெச்சிடுவேன், உன் டெஸ்ட்டுக்குத் தேவையான எல்லா விசயங்களோட."
"அது மறுபடியும் எப்ப எடுப்பீங்க மாமா?"
"தேவையே இல்லை. இது சரியா 24 மணிநேரம்தான் வேலை செய்யும், அதுக்கப்புறம் தானா கரைஞ்சிடும், கரையாத பாகங்கள் எல்லாம் உன்னோட கழிவுகள் வழியா வெளியேறிடும். அதுக்கப்புறம் நீயே சத்தியம் பண்ணி சொன்னாலும் எந்த கொம்பனாலயும் நிரூபிக்க முடியாது"
"அட்டகாசம் மாமா. என்னால நம்பவே முடியலை"
அமைதியா சிரித்தார் மருதமூர்த்தி மாமா.
"மாமா, நான் ஒரு விசயம் சொல்லணும். உங்க கூட இருக்குற எங்களுக்குத்தான் தெரியும் நீங்க எவ்வளவு உழைக்கிறீங்க, எவ்வளவு திறமையானவர்னு. ஆனா உங்களோட பல வெற்றிகள் கே.கே. அங்கிளுக்குத்தான் போகுது. நீங்க வேலை செய்றீங்க ஆனா அவர் பேர் தட்டிட்டுப் போறாரு. "
மாமாவின் முகம் மாறியது, கண்டிப்பாக அவர் இதை எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவர் முகத்தில் இருந்தே தெரிந்தது.
"மன்னிக்கணும் மாமா. அப்பா இருந்தவரைக்கும் பலதடவை இதைப்பத்திப் பேசியிருக்காரு, நீங்க ரெண்டு பேருமே அவருக்கு நல்ல நண்பர்களா இருந்தாலும். ஏதோ சொல்லணும்னு தோணுனது அவ்வளவுதான் மாமா"
"ஹே..மை பாய்... இதெல்லாம் பத்திக் கவலைப்படாதே. வர வியாழக்கிழமை சாயங்காலம் என் ஆய்வுக்கூடத்துக்கு வந்துடு. அதுக்கு முன்னால இன்னிக்கு வீட்டுக்குப் போன உடனே எனக்கு உன்னோட ஸ்டடி மெட்டீரியல் எல்லாத்தையும் மெயில் அனுப்பிடு"
"கண்டிப்பா மாமா. மீராவை கேட்டதா சொல்லுங்க. பை"
எல்லாம் எதிர்பார்த்தபடி சென்றது. எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆபரேசன் முடிந்தது. அங்கேயே ஒருமுறை சாம்பிள் டெஸ்ட் எழுத எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் வந்து விழுந்தது, மந்திரத்தில் மாங்காய் விளைந்தது போல.
மறுநாள் போட்டித்தேர்விலும் அட்டகாசமாக எழுதினேன். கண்டிப்பாக முதல் இடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வெளியே வந்து முதல் வேலையாக மாமாவிற்கு போன் செய்தேன். மாலை வந்து பார்க்குமாறு கூறினார்.
சந்தோசமாக வந்து பைக்கை எடுத்த போது கண்கள் இருண்டது.. எல்லாமே இருட்டாக மயங்கி விழ ஆரம்பித்தேன்.
******
கண் விழித்த போது ஏதோ ஒரு அழுக்கான எட்டுக்கு எட்டு அறையின் கட்டாந்தரையில் மல்லாந்து இருந்தேன். ஒன்றும் புரியாமல் சுற்றும் முற்றும் பார்க்க அதிர்ந்தேன். அது ஒரு லாக் அப்.
தட்டுத் தடுமாறி எழுந்து அமர, கம்பிக்கு வெளியே வந்து நின்ற கான்ஸ்டபிள்
"ங்கொய்யா... உன்னப் பத்திதான்டா இன்னிக்கு பேப்பர்ல முதல் பக்கத்துல போட்டிருக்கு. படி. ஒழுங்கு மரியாதையா ஏன் பண்ணினன்னு சொல்லு"
என்றவாறே அன்றைய நாளிதழை எறிந்தார். நடுங்கும் விரல்களால் அதை பிரிக்க, அதில் இருந்த உண்மை முகத்தில் அறைந்தது.
"கல்லூரி மாணவனால் விஞ்ஞானி கிருஷ்ணக்குமார் கொலை: கொலைக்கான காரணத்தைப் போலீஸ் துப்புத் துலக்குகிறது"
*** சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான முதல் இடுகை ***

Subscribe to:
Posts (Atom)