Tuesday, August 9, 2016

கேம் ஆஃப் த்ரோன்ஸ் : Game of Thrones (GoT) : கதைத்திருப்பங்கள்

Spoiler Alert
இதுவரை கேம் ஆஃப் த்ரோன்ஸ் பார்க்காதவர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது அல்ல. வந்திருக்கும் ஆறாவது சீசனின் கடைசி பகுதியில் இருக்கும் கதைச்சுருக்கம் பற்றி பேசுவதால் உங்களுக்கு கதையின் சஸ்பென்ஸ் போய்விடும். ஆறு சீசன்களும் பார்த்தவர்கள் மட்டும் படிக்கவும்.

************

ஆறாவது சீசனோட மிக முக்கியமான ப்ளாட் ட்விஸ்ட் / கதைத்திருப்பம்னு ஜான் ஸ்நோவோட பெற்றோரைப் பத்தி சொல்லப்படுறதை சொல்லலாம்.

ப்ரான் ஸ்டார்க் தன்னோட விஷன் மூலமா இறந்தகாலத்துக்கு போயி, தன் அத்தை லியான் ஸ்டார்க் சாகுறதைப் பார்க்குறான்.

லியான் ஸ்டார்க், நெட் ஸ்டார்க்கோட சகோதரி. லியானை ராபர்ட் பராத்தியனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்க நிச்சயம் பண்ணியிருக்குறப்ப, அப்போதைய இளவரசனான ரிகர் டைகேரியன் அவளை கடத்திட்டு போயிடுறான்.

அதனால கடுப்பாகுற ராபர்ட் பராத்தியன், ஏற்கனவே கிறுக்கு அரசன் மேல மக்களுக்கு இருக்குற வெறுப்பை உபயோகப்படுத்தி உள்நாட்டு கலகத்தை உருவாக்கி எல்லா டைகேரியன்ஸையும் கொன்னு அரசன் ஆகிடுறான்.

அதன் பின், தன் சகோதரிய தேடிப்போற நெட் ஸ்ட்ராக், அவ குழந்தை பெத்து சாகக்கிடக்குறப்ப பாக்குறான். அவ, நெட் காதுல ரகசியமா எதோ சொல்லிட்டு "ராபர்ட் கிட்ட இருந்து குழந்தைய காப்பாத்து"ன்னு சொல்லிட்டு செத்துடுறா. அதை தனக்கும் யாரோ ஒரு பொண்ணுக்கும் பிறந்ததுன்னு நெட் சொல்லி ஜான் ஸ்நோவா வளர்த்துட்டு வர்றான்.

இதன்படி, ஜான் ஸ்நோ உண்மையில் ஒரு டைகேரியன், அதாவது டேனேரியஸோட அண்ணன் மகன், அவனும் அரியணைக்கு உரிமை உள்ளவன். இதுதான் நமக்கு சொல்லப்படுறது.

நிற்க.. ஏன், இதுக்கு மேலயும் நமக்கு சொல்லப்படாத கதை இருக்கக்கூடாது?



**********

Chances are that, Jon Snow is Baratheon and not Targaryen

ஜான் ஸ்நோ எதோ ஒரு பராத்தியன் (முக்கியமா ஸ்டானிஸ்) ஆணுக்கும், லியான் ஸ்டார்க்குக்கும் பிறந்தவனா இருக்க வாய்ப்பிருக்கு.

இதற்கான கண்ணிகள் கதை முழுக்கவே இருக்குறதா தோணுது.

1. ஜான் ஸ்நோவோட உருவம்
முதல் சீசன்ல செர்சி லானிஸ்டரோட மூணு குழந்தைகளும் ராபர்ட் பராத்தியனுக்கு பிறந்தது இல்லைன்னு நெட் ஸ்டார்க் கண்டுபிடிக்குறது அவங்களோட முடி நிறத்தை வெச்சி. பராத்தியன் குடும்பத்தில் எல்லாருக்கும் கருப்பு முடி, லானிஸ்டர்ஸ் எல்லாருக்கும் தங்கநிற முடி. அதனால அந்த குழந்தைகள் செர்சிக்கும், ஜேமிக்கும் பிறந்ததுன்னு முடிவுக்கு வருவாரு.

இந்த லாஜிக் படியே பார்த்தா, டாகேரியன் எல்லாருக்கும் தங்கநிற முடி, ஸ்டார்க் குடும்பத்துக்கும் தங்கநிற முடி. இந்த ரெண்டும் க்ராஸ் ஆகுற ஜான் ஸ்நோவுக்கு எப்படி கருப்பு சுருட்டை முடி இருக்க முடியும்?

2. ரெட் வுமனின் குழப்பம்
ஆரம்பத்தில் இருந்து மந்திரவாதியான ரெட் உமன் சொல்றது நடக்குது. அவளே சொல்ற மாதிரி, ஸ்டானிஸ் பராத்தியன் வின்டர்ஃபெல் போர்ல ஜெயிக்குறதையும், ஐயர்ன் த்ரோன்ல உக்கார்றதையும் பார்க்குறா. ஆனா, அதை சரியா புரிஞ்சிக்கலைன்னு சொல்றா. அவ பார்த்தது நிஜம், ஆனா அவ பார்த்தது ஸ்டானிஸை இல்லை, அவரோட மகன் ஜான் ஸ்நோவையா இருக்கலாம்.

3. ஸ்டானிஸ் & ஜான் ஸ்நோ சந்திப்பு
ஸ்டானிஸ்க்கு ஜான் ஸ்நோ தன்னுடைய மகன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னுதான் தோணுது. ஆனா அவனை பார்த்து பேசுறப்ப, இவன் தனக்கும் லியானுக்கு பிறந்தவளா இருக்கலாம்னு ஸ்டானிஸ் புரிஞ்சிகிட்டு இருக்கலாம். அதன் தொடர்ச்சியாத்தான் அவனை தன் படைக்கு தலைமை தாங்க கூப்பிடுறது, நீ ஸ்நோ இல்ல உன்னை "ஸ்டார்க்"ன்னு அறிவிக்குறேன்னு சொல்றது,  சர் டேவோஸ் "ஸ்டானிஸ் உன்கிட்ட எதையோ பார்க்குறாரு"ன்னு ஜான் ஸ்நோகிட்ட சொல்றது எல்லாமேன்னு தோணுது



4. லியானின் ரகசியம்
லியான் ஸ்டார்க்குக்கும் டாகேரியனுக்கும் பொறந்ததுதான் அந்த குழந்தைன்றது வெளிப்படையா தெரியுது, அப்ப லியான் மரணப்படுக்கையில நெட் ஸ்டார்க் காதுல சொல்ற ரகசியம் என்ன? அதை யோசிச்சாலே நமக்கு புரியும், அவங்க காட்டுறதுக்கும் மேல கதையில ட்விஸ்ட்கள் இருக்குன்னு

***********
என்ன நடந்திருக்கக்கூடும்னு யோசிச்சா,

ராபர்ட் பராத்தியனுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தாலும், லியான் ஸ்டார்க்குக்கு பிடிச்சது ராபர்ட்டோட தம்பி ஸ்டானிஸ் பராத்தியன். அவங்க ரெண்டு பேரும் லவ்ல இருந்திருக்கலாம். இதெல்லாம் நடக்குறப்ப டாகேரியன் அரசாட்சி கீழ பராத்தியன் ஸ்டார்க் எல்லாமே இருந்திருக்காங்க. ஸ்டானிஸ்க்கு உதவுறதுக்காக நல்ல மனசுக்காரனான ரீகர் டைகேரியன் லியானை காப்பாத்தி வெச்சிருக்கலாம். நினைவிருக்கட்டும், டைகேரியனுக்கு எதிரான போர்ல ஸ்டானிஸ் அடிபட்டு சாகக்கிடக்குறப்ப சர் டேவோஸ்தான் அவரை காப்பாத்துறாரு. அதனால ஸ்டானிஸ்னால உடனே லியானை பார்க்க போக முடியலை.

அடுத்து, லியான் "ராபர்ட் பராத்தியன்கிட்ட இருந்து குழந்தைய காப்பாத்து"ன்னு சொல்றதுக்குக் காரணம், லியான் மேல ராபர்ட்க்கு அளவு கடந்த காதல், அந்த கலகத்தை அவர் ஆரம்பிக்க காரணமே லியானை டாகேரியன் கடத்திட்டு போயிட்டான்றதுனாலதான். அவனுக்கு தன் தம்பி மூலமா லியானுக்கு குழந்தை பிறந்ததுன்னு தெரிஞ்சா அந்த குழந்தைய கொல்ல வாய்ப்பு அதிகம்.

அநேகமா ஸ்டேனிஸ் சாகுறதுக்கு முன்னால தன்னை கொல்ற ப்ரைய‌ன் ஆஃப் டார்த்கிட்ட இந்த உண்மையை சொல்லியிருக்க வாய்ப்பு இருக்கு. ரான்லி பராத்தியனுக்கு உண்மையா இருப்பேன்னு சொன்ன ப்ரையன் இதன் மூலமா மறுபடி ஒரு பராத்தியனை அரியணை ஏற்ற வாய்ப்பிருக்குன்னு ஜான் ஸ்நோவுக்கு உதவக்கூடும்

**********

அடுத்து என்ன நடக்கக்கூடும்?

மொத்தமே எட்டு சீசன்தான்னு சொல்லியிருக்குறதால, ஏழாவது சீசனோட கடைசியில ஜான் ஸ்நோ ஸ்டானிஸோட மகன்னு கதைய திருப்பலாம், எட்டாவது சீசன்ல பராத்தியன் வாரிசான ஜான் ஸ்நோவும், டகேரியன் வாரிசான டேனரியஸும் சண்டையிடக்கூடும்.

********

1 comments:

said...

stark களின் தலைமுடி நிறம் கருப்புதான் தங்க நிறம் இல்லை. நெட் போலவே தோற்றம், முடி எல்லாம் Jon க்குதான் அதிகம் இருப்பதைக் கண்டு லேடி stark க்கு Jon மேலே வெறுப்பு. இதனை தொலைக்காட்சித் தொடரின் ஒப்பனையில் கூடக் காணலாம். 6வது season இல் Jon இன் உடைகள் நெட் போலவே இருக்கும். நீங்கள் நூல் படிப்பவராக இருந்தால்: Jon was never out of sight, and as he grew, he looked more like Ned than any of the true born sons she bore him. Somehow that made it wrong. (Game of Thrones, pg. 66) ஒரு வேளை நீங்கள் சொல்வது போல stannis இன் மகனாக இருந்தால், எதற்காக ரெகார் அவரைக் காப்பாற்ற வேண்டும், தன் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர்களை (செர் ஆர்தர் டுவெய்ன் முதலானோர்) அனுப்ப வேண்டும் ? லியானாவுக்கு மலர் கொடுக்க வேண்டும் ? பொருத்தம் இல்லையே ?