Wednesday, July 21, 2010

ப்ராஜ‌க்ட் மேனேஜ‌ரை குத்து விட‌ நினைக்கும் ப‌த்து த‌ருண‌ங்க‌ள்

1. காலையில‌ இருந்து சும்மாவே இருக்கோம், இன்னிக்கு அஞ்சு ம‌ணிக்கு கிள‌ம்பிட‌லாம்னு நினைக்குற‌ப்ப‌ 4:58க்கு வ‌ந்து ஒரு நாள் முழுக்க‌ செய்யுற‌ வேலையை குடுப்பாங்க‌ளே, அப்ப‌

2. அப்ப‌டி க‌டைசி நேர‌த்துல‌ குடுக்குற‌ வேலைய‌ முடிக்க‌ நேர‌மாயிடுச்சின்னா "வீட்டுக்கு போக‌ க‌ம்பெனியோட‌ கார் புக் ப‌ண்ணிக்க‌லாமா?"ன்னு கேட்டா, ச‌ரின்னும் சொல்லாம‌ வேணாம்னும் சொல்லாம‌ ஒரு பார்வை பாப்பானுங்க‌ளே, அப்ப‌

3. வேலைய‌ முடிச்ச‌வுட‌னே அதை ச‌ரி பாக்காம‌ அதை அப்ப‌டியே க்ளைய‌ன்ட்டுக்கு அனுப்பிட்டு அவ‌ன் திட்டுறான்னு ந‌ம்ம‌ள‌ காச்சுவாங்க‌ளே, அப்ப‌

4. ந‌ல்ல‌தா எவ்வ‌ள‌வு வேலை செஞ்சாலும் க‌ண்டுக்க‌வே செய்யாம‌, எதாவ‌து சின்ன‌ த‌ப்பு செஞ்சாலும் மொத்த‌ டீமும் இருக்குற‌ப்ப‌ ப‌ப்ளிக்கா திட்டுவாங்க‌ளே, அப்ப‌

5. ஜீன்ஸ் பேன்ட்டும், தோல் செருப்பும் போட்டுட்டு வ‌ந்துட்டு, ந‌ம்ம‌கிட்ட‌ "வொய் யூ ஆர் நாட் ஃபாலோயிங் ட்ரெஸ் கோட்"ன்னு கேப்பானுங்க‌ளே, அப்ப‌

6. ரொம்ப‌ நாள் க‌ழிச்சி ந‌ம்ம‌ க்ளோஸ் ஃப்ர‌ண்ட் ஃபோன் ப‌ண்ணி பேசிட்டு இருக்குற‌ப்ப‌, "ஹேய், இங்க‌ வா, நீ க‌ம்ப்ளீட் ப‌ண்ணுன‌ வேலையில‌ ஒரு ட‌வுட்" அப்ப‌டின்னு க‌த்துவானுங்க‌ளே,அப்ப‌

7. டெய்லி 11 ம‌ணிக்குதானு வ‌ருவாங்க‌ன்னு நினைச்சி ஒரே ஒரு நாள் கொஞ்ச‌ம் லேட்டா 10 ம‌ணிக்கு ஆபிஸ் போனா அன்னிக்கு ம‌ட்டும் 9 ம‌ணிக்கே வ‌ந்துட்டு "வொய் ஆர் யூ க‌ம்மிங் லேட் எவ்ரி டே?"ன்னு கேப்பானுங்க‌ளே, அப்ப‌

8. ல‌ஞ்ச் முடிச்ச‌ப்புற‌ம் மொத்த‌ டீமையும் கான்ஃப்ர‌ன்ஸ் ரூமுக்கு கூப்புட்டு "க‌ம்பெனியோட‌ எதிர்கால‌த் திட்ட‌ம்"னு புரியாத‌ பாஷையில‌ ஒண்ணே முக்கா ம‌ணி நேர‌ம் ப்ளேடு போடுவாங்க‌ளே, அப்ப‌

9. ரெண்டு வ‌ருச‌ம் பிர‌ச்சினை இல்லாம‌ வேல‌ செஞ்சிட்டு, க‌ரெக்டா நாம‌ லோன் எடுத்து காரோ, வீடோ வாங்கின‌ அடுத்த‌ நாளே கூப்பிட்டு, "கிளைய‌ன்ட் ப்ராஜ‌க்ட் டீம் சைசை குறைக்க‌ச் சொல்லிட்டான். உங்கள‌ இந்த‌ மாச‌த்தோட‌ ப்ராஜ‌க்ட்ல‌ இருந்து ரிலீஸ் ப‌ண்ணுறேன்"ன்னு சொல்லி வ‌ய‌த்துல‌ புளிய‌ க‌ரைப்பாங்க‌ளே, அப்ப‌

10. ஆறு மாச‌ம் இர‌வு ப‌க‌லா உழைச்சிட்டு, அப்ரைச‌ல் டிஸ்க‌ஷ‌னுக்கு போனா நாம ப‌ண்ணுன‌ எல்லா த‌ப்பையும் (ம‌ட்டும்) பேசிட்டு "நீ இன்னும் இம்ப்ரூவ் ப‌ண்ண‌ணும், உன‌க்கு ரேட்டிங் 3க்கு மேல‌ குடுக்க‌ முடியாது, உன‌க்கு என்ன‌ உத‌வி வேணும்னாலும் கேளு"ன்னு சிரிச்சிட்டே சொல்லுவானுங்க‌ பாரு, அப்ப‌ வ‌ர்ற‌ கோவ‌த்துக்கு...

35 comments:

said...

:-)))...

said...

கலக்கல்

Anonymous said...

kalakkal

said...

mமீண்டும் சிரிக்க வந்திருக்கும் விஜய் ஆனந்தை வருக வருகவென வரவேற்கிறேன்..

குத்துங்க எசமான் குத்துங்க.. இந்த பிராஜெக்ட் மேனேஜ்ர்ஸே இபப்டித்தான்

said...

தலைவா .... மீட்டிங் ரூம் மட்டர் சூப்பர். எப்படித்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறதோ ?

said...

உங்களுக்கு கீழே நிறைய பேர் வேலை செய்வதால் உங்களை தான் மத்தவங்க குத்தனும் ::))

said...

எட்டாவது டாப்.

இப்பதாம் முதல் கமெண்டைப் பார்க்கறேன். சிரிக்கப்பிறந்தவன் வந்துட்டார்யா...

said...

ஆமா..


நீங்க ஒரு ப்ராசக்டு மேனேசர் தானே?

said...

அவ்வ்வ்வ்


எனக்கு நாளைக்கு லஞ்ச் முடிச்சிட்டு
தான் மீட்டீங் இருக்கு
மீட்டீங் நடத்துறது லேடி
குத்துனா பெண்ணுரிமை காவலர்கள்
பிரச்சனை பண்ணமாட்டாங்களா ::))

said...

வித்தியாசமா திங்க் பண்ண விடமாட்டீங்களே. இத மாதிரிதான் ஒண்ணு எழுதலாம்னு இப்பதான் யோசிச்சேன். யோசிச்சு முடிக்குறதுக்குள்ள பதிவு. போங்கையா.!

said...

இங்கே ப்ராஜெக்ட் மானேஜருக்குக் குத்து விட நினைப்பு, அங்கே கூகிள் பஸ்ஸில், ஹோட்டல் மானேஜருக்கு குத்து விடப் பத்துத் தருணங்களுக்கான யோசனை!

என்ன இன்றைக்குப் பத்தும் குத்துமாகவே இருக்கிறது!

:-))

said...

இந்த பிராஜக்ட் டேமேஜர்களே இப்படித்தான் எசமான் நல்லா நாலு குத்துவிடுங்க.. முக்கியமா apprisal discussionக்காகவே ஸ்பெஷலா ஒரு ஊமை குத்து குத்தலாம்..

இன்னொரு பாயிண்டு

நாம் எப்பவாச்சும் தான் லீவே எடுப்போம்.. அப்ப பாத்து இல்ல ப்ராஜக்ட் டெட்லைன் அது இதுன்னு அதை கேன்சல் பண்ணுவாங்க அப்ப...

said...

11. உங்க ப்ராஜக்ட் மேனேஜருக்கு இந்த பதிவை பார்வார்ட் பண்ணட்டுமானு கேட்டா...
ஹி..ஹி.. ரொம்பவும் ரசித்தேன்...

said...

//
அப்ப‌ வ‌ர்ற‌ கோவ‌த்துக்கு...
//

வேற என்ன பண்ணுறது.. இந்த மாதிரி பதிவ போட்டு மனச தேத்திக்க வேண்டியதுதான்...

said...

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர் - தொடர் பதிவு எழுத அழைப்பு வச்சுருக்கேன். முடிஞ்சா எழுதுங்க. சரியா.

said...

:))

said...

:))) hahaha. same kind of story in my blog also.

said...

சூப்பரோ சூப்பர்!

said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
வித்தியாசமா திங்க் பண்ண விடமாட்டீங்களே. இத மாதிரிதான் ஒண்ணு எழுதலாம்னு இப்பதான் யோசிச்சேன். யோசிச்சு முடிக்குறதுக்குள்ள பதிவு. போங்கையா.!
//

ஆதி அளவுக்கு யோசிக்க ஆரம்பிச்சிங்களா வெண்பூ:(((
கழுதை தேஞ்சு கட்டெறும்பா மாறுவது என்பது இதுதான்:(((

said...

ஹி...ஹி...

கலக்கறீங்க...

said...

பிரியாணி பிரியர்களை எப்படி தல குத்துறது

said...

//வீட்டுக்கு போக‌ க‌ம்பெனியோட‌ கார் புக் ப‌ண்ணிக்க‌லாமா?"//

இப்படி எல்லாம் எழுதி கடுப்பேத்தினீர்கள் என்றால் உங்களை குத்து விட தோன்றுகிறது :)

said...

சொ. செ.சூ????

said...

நிறைய எடத்துல அந்த ஒன்பதாவது பாயிண்ட்தான் நடக்குது...

said...

நல்லதொரு பிளாஸ்டராக எடுத்துக்கொண்டு நம் தளத்துக்கு வரவும்.

http://www.aathi-thamira.com/2010/07/blog-post_856.html

said...

:)

said...

lol!!!

said...

"7. டெய்லி 11 ம‌ணிக்குதானு வ‌ருவாங்க‌ன்னு நினைச்சி ஒரே ஒரு நாள் கொஞ்ச‌ம் லேட்டா 10 ம‌ணிக்கு ஆபிஸ் போனா அன்னிக்கு ம‌ட்டும் 9 ம‌ணிக்கே வ‌ந்துட்டு "வொய் ஆர் யூ க‌ம்மிங் லேட் எவ்ரி டே?"ன்னு கேப்பானுங்க‌ளே, அப்ப‌"

Funny. :-)

The comment about appraisal time is very true.

said...

@விஜ‌ய் ஆன‌ந்த்: வாய்யா ராசா.. அப்ப‌ப்ப‌ வ‌ந்துட்டு அப்ப‌ப்ப‌ காணாம போயிடுறீரு..

@த‌ராசு
@அண்ணாச்சி
@கார்க்கி
: ந‌ன்றி

@கார்த்திக் சித‌ம்ப‌ர‌ம்: ந‌ல்ல‌ வேளை ஃபோட்டோ போட்டீங்க‌, நானு அவ‌ரோன்னு நினைச்சேன் :))

said...

@வெடிகுண்டு முருகேச‌ன் @ப‌ரிச‌ல்: ஏன் ஏன்... க‌ம்பேனி சீக்ரெட்ட‌ ப‌ப்ளிக்ல‌ சொல்லிட்டு

@வெடிகுண்டு முருகேச‌ன்: பெண்ணுரிமைக் காவ‌ல‌ர்க‌ள் பிர‌ச்சினை ப‌ண்ண‌ மாட்டாங்க‌, அவ‌ங்க் ட்ரேட் மார்க்கான‌ த்தூ த்தூன்னு துப்புவாங்க‌. :)))

@ஆதி: ஆமா நீரு யோசிச்சிகிட்டே இரும்.. ஆனா இதை விட‌ உங்க‌ குத்து ந‌ல்லாத்தான் இருக்கு

@கிருஷ்ண‌மூர்த்தி: ப‌த்து பெரிசான‌துக்கு கார‌ண‌ம் ந‌ம்ம‌ ப‌ரிச‌ல்தான்.. அவ‌ரைக் கேளுங்க‌

@ச‌ந்தோஷ்: ஆமால்ல‌.. லீவை ம‌ற‌ந்துட்டேன்.. ந‌ன்றி

@சுகுமார் சுவாமிநாத‌ன்: ஹி..ஹி.. மேல‌ வெடிகுண்டுவும் ப‌ரிச‌லும் சொல்லியிருக்குற‌த‌ ப‌டிச்சீங்க‌ளா? :)

@வ‌ழிப்போக்க‌ன்: க‌ரெக்டா சொன்னீங்க‌, நாமெல்லாம் காகித‌ப் புலிக‌ள் ஹி..ஹி..

said...

@விதூஷ்: தொட‌ர்ப‌திவுக்கு கூப்பிட‌த்துக்கு ந‌ன்றி. இந்த‌ வார‌ம் முடியாது, ரெண்டு நாள் டிரைனிங்ல‌ போயிடும். அடுத்த‌ வார‌ம் முடியுமான்னு அடுத்த‌ வார‌ம்தான் தெரியும்.. முய‌ற்சி செய்யுறேன்.

@வித்யா
@த‌க்குடுபாண்டி
ந‌ன்றி

@குசும்பா: ஆதி சொல்ல‌ வ‌ந்த‌து என்ன‌ன்னா "நான் எங்க‌ அப்பாவுக்கு உத‌வியா இருக்கேன், அவ‌ரு சும்மாத்தான் இருக்காரு"ன்ற மாதிரியான‌ திங்கிங்.. உன்னை மாதிரி பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ளுக்கு எல்லாம் புரியாது.. ஹி..ஹி.. :)))

said...

@ராக‌வ‌ன் நைஜீரியா
@வால்பைய‌ன் (ஏன் பொறாமை :)))
@புருனோ :)
@ஜோச‌ப்
@ஜாக்கி
@ம‌ங்க‌ளூர் சிவா
@தெய்வ‌சுக‌ந்தி
@நாடோடிப் பைய‌ன்

அனைவ‌ருக்கும் ந‌ன்றி..

said...

:)))

said...

:)))

said...

superb!!!!!!!!oho??நீங்களும் தானா??