Thursday, April 7, 2011

இது ப்ளாக்கிலீக்ஸ் / உண்மைக‌ள் சுடும் ப‌திவு அல்ல‌ :(

இந்த‌ ப‌திவின் த‌லைப்பு நிச்ச‌ய‌மாய் உங்க‌ளை க‌வ‌ர்ந்து இழுப்ப‌த‌ற்காக‌ ம‌ட்டுமே வைக்க‌ப்ப‌ட்ட‌ தலைப்பு அல்ல‌. அதே போல் இந்த‌ முக‌மூடிக‌ள் பெய‌ர்க‌ளில் எழுதுவ‌து நான் அல்ல‌ என்று அறிவிக்க‌ எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌திவும் அல்ல‌ இது.

சில‌ நாட்க‌ளாக‌ ஏன் சில‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்த‌ ப‌திவுல‌கில் மறைக்க‌ப்ப‌ட்டிருக்கும் ஒரு விச‌ய‌ம் குறித்து பேச‌ ம‌ட்டுமே இந்த‌ ப‌திவு.

இதை வேறொரு முக‌மூடி அணிந்து அனானி பெய‌ரில் எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என‌க்கு என்றும் இருந்த‌தில்லை. என்னை ந‌ன்க‌றிந்த‌வ‌ர்க‌ளுக்கு தெரியும், ச‌ரியென்றால் உட‌ன‌டியாக‌ வெளிப்ப‌டையாக‌ பாராட்ட‌வும், த‌வ‌றென்றால் முக‌த்திற்கு நேராக‌ சொல்ல‌வும் கூடிய‌ ஆண்மை என‌க்கு உண்டு. அத‌னாலாயே இந்த‌ ப‌திவை என் ப‌திவிலேயே எழுதுகிறேன்.

மூன்று வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் நான் ப‌திவெழுத‌ ஆர‌ம்பித்து இந்த‌ ப‌திவுல‌கில் என் அலைவ‌ரிசையுட‌ன் ஒத்துப்போன‌ சில‌ருட‌ன் நான் நெருக்க‌மாக‌ ப‌ழக‌ ஆர‌ம்பித்தேன். ப‌ரிச‌ல், அப்துல்லா, கார்க்கி, கேபிள், ஆதி (அப்போது தாமிரா) போன்ற‌வ‌ர்க‌ளுட‌ன் இய‌ல்பாக‌வே நெருங்க முடிந்த‌து. இந்த‌ குழுவுட‌ன் எந்த‌ பிர‌ச்சினைக‌ள் குறித்தும் வெளிப்ப‌டையாக‌ பேசிக் கொள்ள‌, உத‌விக‌ள் கேட்டுப் பெற‌ முடிந்த‌து.

அந்த‌ சூழ்நிலையில் எங்க‌ளுக்கு அறிமுக‌ம் ஆன‌வ‌ர்தான் அந்த‌ குறிப்பிட்ட‌ ப‌திவ‌ர். "எதாச்சும் செய்ய‌ணும் பாஸ்" என்று இற‌ங்கிய‌வ‌ர் என்னுட‌ன் நெருக்க‌மாக‌ ப‌ழ‌க‌ ஆர‌ம்பித்த‌ அவ‌ரின் ட‌வுன் டூ எர்த் ம‌ன‌ப்பான்மை பிடிந்திருந்த‌து. அவ‌ரின் பின்புல‌ம் குறித்து தெரிய‌வ‌ந்த‌போது "அட‌ இவ‌ரெல்லாம் ந‌ம்ம‌ கூட‌ எல்லாம் எப்ப‌டி ப‌ழ‌குறாரே?" என்று ஆச்ச‌ர்ய‌ம் அடைந்தேன்.

ஐ ஐ எம் அக‌ம‌தாபாத்தில் எம் பி ஏ.. ஒரு பெரிய‌ அமெரிக்க‌ கார் நிறுவ‌ன‌த்தில் வைஸ் பிர‌சிட‌ன்ட்..

இர‌ண்டுமே என் க‌ன‌வு என‌லாம். ஒரு சாதார‌ண‌ குடும்ப‌த்தில் பிற‌ந்து டிப்ள‌மோ ப‌டித்து சிறிய‌ வேலைக்கு போய் மேல்ப‌டிப்பையே க‌ர‌ஸ்ஸில் செய்த‌ என் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு ஐ ஐ எம் என்ப‌து எவ்வ‌ள‌வு பெரிய‌ க‌ன‌வு என்ப‌து உங்க‌ளுக்கு புரியும். இப்போதும் எதாவ‌து ஒரு சிறிய‌ இடைவெளி (+ ப‌ண‌ம் ) கிடைத்தால் அங்கே எக்சிக்யூடிவ் ப்ரோக்ராம் ப‌டிக்க‌ வேண்டும் என்ப‌து என் ஆசை. அதேபோல் ஒரு எம் என் சியில் வைஸ் பிர‌சிட‌ன்ட் என்ப‌தும் என் கேரிய‌ர் க‌ன‌வு.
இர‌ண்டையும் ஒருங்கே சாதித்த‌ ஒருவ‌ரை நான் அண்ணாந்து பார்த்து பிர‌மித்த‌தில் விய‌ப்பேதும் இல்லை.

பீரிய‌ட்...

அவ‌ரைப் பார்த்து பிர‌மித்த‌ இன்னொரு விச‌ய‌ம் அவ‌ர‌து உத‌வி செய்யும் ம‌ன‌ம்.

1. சென்னையைச் சேர்ந்த‌ ப‌திவ‌ர் மிக‌ அதிக‌ ப‌ண‌த்தேவையில் இருந்த‌ போது அவ‌ருக்காக‌ இவ‌ர் சில‌ ல‌ட்ச‌ங்க‌ளில் கொடுத்த‌தாக‌ சொல்லியிருக்கிறார் (அத‌ற்கு நானும் ஒரு சிறு அள‌வு ப‌ண‌ம் கொடுத்திருக்கிறேன்). அந்த‌ ப‌திவ‌ர் பிர‌ச்சினையில் இருந்து மீண்டு வ‌ர‌ இவ‌ர‌து ப‌ண‌ உத‌வி முக்கிய‌மான‌தாக‌ இருந்த‌தாக‌ இவ‌ரே என்னிட‌ம் சொல்லியிருக்கிறார்

2. ஒரு வெளிநாட்டு ப‌திவ‌ரின் ம‌ருத்துவ‌ உத‌விக்காக‌ ப‌ண‌ம் திர‌ட்டிய‌தில் இவ‌ர‌து ப‌ங்கு முக்கிய‌மான‌து. மிக‌ப்பெரிய‌ ப‌ண‌த்தை ஆளுக்கு கொஞ்ச‌ம் என்று கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ கொடுக்க‌லாம் என்ற‌ ஐடியா நிறைய‌ பேரை ப‌ங்கெடுக்க‌ வைத்த‌து க‌ண்கூடு. இவ‌ரே சில‌ரிட‌ம் ப‌ண‌ம் திர‌ட்டி அனுப்பிய‌தும் தெரிந்த‌தே.

3. ம‌ற்றொரு சென்னை ப‌திவ‌ரின் குழ‌ந்தை உட‌ல்நிலை ச‌ரியில்லாம‌ல் ம‌ருத்துவ‌ம‌னையில் இருந்த‌ போது, இவ‌ர் த‌ன‌து டெபிட் கார்டை கொடுத்துவிட்டு வ‌ந்த‌தாக‌ என்னிட‌ம் சொல்லியிருக்கிறார். என்னால் நினைத்துக்கூட‌ பார்க்க‌ முடியாத‌ உத‌வி இது.

4. ஒரு சென்னை ப‌திவ‌ரின் த‌ந்தையார் இற‌ந்த‌ போதும், இதே போல் த‌ன‌து டெபிட் கார்டை கொடுத்த‌தாக‌ சொல்லியிருக்கிறார்.

பீரிய‌ட்...

சென்ற‌ வ‌ருட‌ம் ஒரு பெண்ப‌திவருட‌ன் அவ‌ருக்கு ஏற்ப‌ட்ட‌ ம‌ன‌க்க‌ச‌ப்பு நிக‌ழ்வுக‌ள் ப‌திவுல‌கில் யாரும் ம‌றுக்க‌வோ ம‌றைக்க‌வோ முடியாத‌ விச‌ய‌ம். அந்த‌ நிக‌ழ்வில் நிச்ச‌ய‌ம் ந‌ண்ப‌ர்க‌ளாக‌ நாங்க‌ள் அவ‌ர் பின் நின்றிருக்கிறோம். அவ‌ருக்கு ஆத‌ரவாக‌ எங்கும் நான் பேச‌வில்லை என்ப‌தைப் போல‌வே அவ‌ரை எதிர்த்தும் எங்கும் பேசிய‌தில்லை.

அவ‌ர் மீது என‌க்கிருந்த‌ பிர‌மிப்பு + ம‌ரியாதையே அத‌ற்கு கார‌ண‌ம்

*****************

க‌ட‌ந்த‌ செப்ட‌ம்ப‌ரில் ஒருநாள் அவ‌ர் என்னிட‌ம் வ‌ந்தார். "எங்க‌ கார் க‌ம்பெனியே ஒரு கார் ரென்ட‌ல் க‌ம்பெனி ஆர‌ம்பிக்குது. நான் அங்க‌யே பெரிய‌ வேலையில‌ இருக்குற‌தால‌ என்னால‌ ஈஸியா ஃப்ரான்ச்சைஸ் வாங்க‌ முடிஞ்ச‌து. நீங்க‌ளும் கொஞ்ச‌ம் இன்வெஸ்ட் ப‌ண்ணுங்க‌" என்றார். இவ‌ர் மீதிருந்த‌ ந‌ம்பிக்கையில் என் ம‌னைவியின் பெய‌ரிலிருந்த‌ சில‌ முத‌லீடுக‌ளை எடுத்து இவ‌ரிட‌ம் கொடுத்தேன்.

அதற்கான‌ அக்ரீமென்ட் கொடுத்தார். ப‌டித்துக்கூட‌ பார்க்காம‌ல் கையெழுத்திட்டு அனுப்பினேன். பின்ன‌ர் அத‌ன் காப்பி மெயிலில் வ‌ந்த‌போதுதான் விப‌ரீத‌ம் புரிந்த‌து. அந்த‌ அக்ரீமென்ட் முழுக்க‌ முழுக்க‌ அவ‌ர‌து க‌ம்பெனிக்கு சாத‌கமாக‌வே என் த‌ர‌ப்பில் மிக‌ மிக‌ ப‌ல‌வீன‌மாக‌ இருந்த‌து. அதிர்ச்சியில் கேட்ட‌வுட‌ன் "அது வென்டாருங்க‌ளுக்கான‌து, உங்க‌ளுக்கு த‌ப்பா அனுப்பிட்டேன்" என்று ம‌றுப‌டியும் வேறொரு அக்ரீமென்ட்டை கொடுத்தார். அதை ப‌டித்துப் பார்த்துவிட்டு கையெழுத்திட்டு அனுப்பினேன்.

அத‌ன் பின்ன‌ர்தான் என‌க்கு ச‌னி ஆர‌ம்பித்த‌து. ஒவ்வொரு மாத‌மும் என‌க்கு ஸ்டேட்மென்ட்டும் ப‌ண‌மும் முத‌ல் இர‌ண்டு வார‌ங்க‌ளில் வ‌ரும் என்று கூறிய‌வ‌ர், இழுத்த‌டிக்க‌ ஆர‌ம்பித்தார். ஒவ்வொரு மாத‌மும் முந்தைய‌ மாத‌ ஸ்டேட்மென்ட் வ‌ருவ‌தே க‌டைசி வார‌த்தில்தான் என்றான‌து.

இத‌ற்கிடையில் அவ‌ரைப் ப‌ற்றின‌ ம‌ற்ற‌ உண்மைக‌ள் தெரிய‌ வ‌ந்த‌ன‌. இது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய‌து

1. அவ‌ர் ஐ ஐ எம் ல் ப‌டித்த‌வ‌ர் அல்ல‌. த‌மிழ்நாட்டில் எதோ ஒரு அஆஇஈ க‌ல்லூரியில் எதோ ஒரு டிகிரி ப‌டித்த‌வ‌ர்(இதுவும் உண்மையா என்று தெரிய‌வில்லை)
2. அவ‌ர் சொன்ன‌ கார் நிறுவ‌ன‌த்தில் வைஸ் பிர‌சிட‌ன்ட் அல்ல‌. எதோ ஒரு கார் வாட‌கை நிறுவ‌ன‌த்தில் மேலாள‌ர் ம‌ட்டுமே (இதுவும் உண்மையா என்று தெரிய‌வில்லை)
3. ப‌திவ‌ர் ம‌ருத்துவ‌ உத‌விக்காக‌ இவ‌ரால் திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ பண‌ம் அவ‌ருக்கு உட‌ன‌டியாக‌ அனுப்ப‌ப்ப‌ட‌வே இல்லை
4. ப‌திவ‌ர்க‌ளின் இக்க‌ட்டான‌ சூழ‌லில் அவ‌ர்க‌ளிட‌ம் டெபிட் கார்டு கொடுத்த‌தாக‌ இவ‌ர் சொன்ன‌து பொய். இவ‌ர் மேலோட்ட‌மாக‌ கேட்க‌ அவ‌ர்க‌ள் வேண்டாம் என்று ம‌றுத்திருக்கிறார்க‌ள்.

அவ‌ர் எங்கு ப‌டித்தால் என்ன‌, எங்கு வேலை செய்தால் உன‌க்கென்ன‌ என்று எதிர்கேள்வி கேட்ப‌வ‌ர்க‌ளுக்காக‌ இந்த‌ ப‌த்தி. அவ‌ர் யார் என்ன‌ என்று எதைப்ப‌ற்றியும் என‌க்கு க‌வ‌லை இல்லை. எங்க‌ள் ந‌ட்பு வ‌ட்ட‌த்திலேயே மிக‌ உய‌ர்ந்த‌ பொறுப்பில் இருப்ப‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள், வெற்றிக்கான‌ வாச‌லைத் தேடி போராடிக் கொண்டிருக்கிற‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள். ஆனால் ந‌ட்பின் அடிப்ப‌டை ந‌ம்பிக்கை. அது பொய் சொல்வ‌தால் வ‌ர‌ப்போவ‌தில்லை. இந்த‌ ப‌திவு அவ‌ரை அம்ப‌ல‌ப்ப‌டுத்த‌ அல்ல‌, அவ‌ர் சொன்ன‌ பொய்க‌ளால் அம்ம‌ண‌ப்ப‌ட்டு நிற்கும் அவ‌ர் மீதான‌ என் ந‌ட்பிற்கு ஒரு கோவ‌ண‌ம் க‌ட்டும் முய‌ற்சி அவ்வ‌ள‌வே.

ப‌திவ‌ரின் ம‌ருத்துவ‌ செல‌விற்காக‌ திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ப‌ண‌ம் குறித்து ஏற்க‌ன‌வே ஜோச‌ப் விள‌க்கி விட்டார். அவ‌ர் அந்த‌ ப‌ண‌த்தை அனுப்பிய‌த‌ற்குக் கார‌ண‌மே உண்மைக‌ள் சுடும் என்ற‌ அனானி அவ‌ருக்கு அனுப்பிய‌ மெயில்தான். யார் அந்த‌ உண்மைக‌ள் சுடும் என்று தெரிய‌வில்லை, ஆனால் அந்த‌ அனானி "ப‌ண‌ம் ஏன் அனுப்பாம‌ வெச்சிட்டு இருக்கீங்க‌" என்ற‌ ரீதியில் அவ‌ருக்கு மெயில் அனுப்பிய‌தும்தான் இவ‌ர் அதை அனுப்ப‌ முய‌ற்சி எடுத்தார் என்ப‌தே உண்மை.

இந்த‌ பிர‌ச்சினை ஓடிக்கொண்டிருந்த‌போது, என‌க்கு இவ‌ரைப் ப‌ற்றிய‌ உண்மைக‌ள் தெரியாது. நான் இவ‌ரிட‌ம் "நீங்க‌தான் ஏற்க‌ன‌வே ஸ்டேட்மென்ட் ப‌ண‌ம் எல்லாம் அனுப்பிட்டீங்க‌ளே?" என்று கேட்க‌ "இல்ல‌ ஜோச‌ப்தான் ப‌ண‌ம் என்கிட்ட‌யே இருக்க‌ட்டும், அப்புற‌ம் அனுப்புங்க‌ன்னு சொன்னாரு" என்றார். ஆனால் பின்னால் பிர‌ச்சினை பெரிதாகி ஜோச‌ப் விள‌க்க‌ம் கொடுத்த‌து இவ‌ர் என்னிட‌ம் சொன்ன‌த‌ற்கு எதிராக‌ இருந்த‌துதான் இவ‌ர்மீது என‌க்கு விழுந்த‌ முக்கிய‌ ச‌ந்தேக‌ப்புள்ளி.

இது குறித்து பேசிக் கொண்டிருந்த‌ போது ஒரு முறை "என்னோட‌ ப்ளாக் பேரை வெச்சி என்னோட‌ உண்மையான‌ பேரு ந‌ர‌சிம்ம‌ன்னு எல்லாரு நினைச்சிட்டு இருக்காங்க‌, என் பேர் அதில்லை, வேற‌" என்றார். அதிர்ந்தேன். மூன்று வ‌ருட‌ம் நெருங்கிய‌ ந‌ட்புட‌ன் இருக்கும் ஒருவ‌னிட‌ம், பிர‌ச்சினைக‌ளின் போது த‌ன் பின் நிற்கும் ஒருவ‌னிட‌ம், ம‌ற்ற‌வ‌ருக்கு உத‌வ‌ ப‌ண‌ம் வாங்கும் ஒருவ‌னிட‌ம், த‌ன் புதிய‌ பிசின‌ஸில் முத‌லீடு செய்யும் அள‌வுக்கு ந‌ம்பிக்கை இருக்கும் ஒருவ‌னிட‌ம் எப்ப‌டி த‌ன் பெய‌ரைக்கூட‌ சொல்லாம‌ல் ம‌றைக்க‌ முடியும்? எந்த‌ அள‌வு அழுத்த‌ம் வேண்டும்?

**********

இது எல்லாம் தெரிந்த‌ பின், நான் அவ‌ரிட‌ம் பிசின‌ஸில் இருந்து வெளிவ‌ந்துவிடுவ‌தாக‌ சொல்ல‌, ஒப்புக் கொண்டார். நிச்சய‌ம் என்னைப் பொறுத்த‌வ‌ரை அது ஒரு ந‌ல்ல‌ முத‌லீடே, மிக‌ச் சிற‌ந்த‌ ரிட‌ன்ஸ் கொடுத்த‌து. ஆனால் என்னை ந‌ம்பி த‌ன் பெய‌ரைக் கூட‌ சொல்லாத‌, த‌ன் பெய‌ரை பெரிதாக்கிக் காட்ட வார்த்தைக்கு வார்த்தை பொய் பேசும் ஒருவ‌ரால் என‌க்கு கோடி ரூபாய் வ‌ருமென்றாலும் என‌க்கு அது தேவை இல்லை.

ஒரு வார‌ம் டைம் கேட்டு, இப்போது மூன்று வார‌ங்க‌ள் க‌ழித்து என‌க்கு ப‌ண‌ம் கிடைத்துவிட்ட‌து. இனி இவ‌ர் தொட‌ர்பான‌ ம‌ன‌ உளைச்ச‌ல் குறையுமென்றாலும், ந‌ண்ப‌ர்க‌ளை தேர்வு செய்வ‌தில் நான் ம‌ற்றொரு முறை தோற்று விட்ட‌தின் வ‌லி நான் சாகும் வ‌ரை இருக்கும் என்ப‌தில் ஐய‌மில்லை.

**********

இந்த‌ ப‌திவு வெளிவ‌ந்த‌தும் என்னைப் ப‌ற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌ம் அவ‌ர் என்ன‌ சொல்வார் என்ப‌தும் என‌க்கு தெரியும். அவ‌ரிட‌ம் அதைக் கேட்ப‌வ‌ர்க‌ள் என‌க்கு தொலைபேச‌வும், அட்ச‌ர‌ம் பிச‌காம‌ல் வ‌ரிக்கு வ‌ரி அவ‌ர் என்ன‌ சொன்னார் என்ப‌தை நான் சொல்கிறேன். என்னைப் ப‌ற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌ம் அவ‌ர் சொல்ல‌ப்போகும் பொய்க‌ள் குறித்து என‌க்கு கிஞ்சிந்தும் க‌வ‌லை இல்லை.

இத‌ற்கெல்லாம் அவ‌ர் சொல்ல‌க்கூடிய‌ எந்த‌ விள‌க்க‌மும் என‌க்குத் தேவை இல்லை. இங்கே நான் சொன்ன‌வை அவ‌ர் என்னிட‌ம் சொன்ன‌ பொய்க‌ளில் ஒரு சிறு துளி அள‌வே. இன்னும் நான் எழுதாம‌ல் விட்ட‌ ம‌லைய‌ள‌வு பொய்க‌ளை அவ‌ர் என்னிட‌ம் கூறியிருக்கிறார் (அடிக்க‌டி அவ‌ர் சொல்லும் "ம‌றைமலை ந‌க‌ர் ஃபேக்ட‌ரியில‌ இருக்கேன்" என்ப‌து. ரென்ட‌ல் க‌ம்பெனி மேனேஜ‌ருக்கு கார் உற்ப‌த்தி செய்யும் ஃபேக்ட‌ரியில் என்ன‌ வேலை என்ப‌து என் சிற்ற‌றிவுக்கு எட்ட‌வில்லை). என்னைப் போல‌வே அவ‌ருட‌ன் நெருங்கி இருந்த‌ ப‌ல‌ரும் அவ‌ரால் ம‌ன‌ உளைச்ச‌லுக்கு உள்ளாகி உள்ள‌ன‌ர் என்ப‌து தெரிய‌ வ‌ருகிற‌து. அத‌னால், நான் சொல்ல‌ வ‌ரும் முன்னெச்ச‌ரிக்கை ஒன்றே ஒன்றுதான்.

ப‌திவுல‌கில் யார் ஒருவ‌ர் சொல்வ‌தை வைத்தும், அவ‌ர்க‌ளைப் பற்றிய‌ பிம்ப‌த்தை க‌ட்ட‌மைத்துக் கொள்ள‌வேண்டாம். குறைந்த‌து அப்ப‌டி க‌ட்டமைக்க‌ப்ப‌டும் பிம்ப‌த்தை ந‌ம்பி ப‌ண‌மாவ‌து கொடுக்காம‌ல் இருப்ப‌து ந‌ல‌ம்..

73 comments:

said...

:(

said...

அண்ணே இதுக்கு நீங்க அவர் பெயரை சொல்லியே பதிவு போட்டு இருக்கலாம்.

said...

:-(((((

said...

:-(((

said...

very shocking :(

said...

err.... I dont know what to say.

said...

ந்த அனுபவம் உங்களக்கு பல பாடங்களை கற்று தந்திருக்கும். மேலும் இந்த கசப்பான அனுபவத்தை மறக்க முயற்சி செய்யுங்கள்.அநியாத்திற்கு 'அவரை' பற்றிய எச்சரிக்கை முன்பே நான் அறிந்த 'தோழர்' சொல்லியிருந்தார்.

said...

:(

said...

உங்களை கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவராகவும், எதையும் பொறுத்துக்கொண்டு அமைதியாகச் செல்பவராகவுமே இதுவரை வரிந்துவைத்திருந்தேன். சில பொது விஷயங்களில் உங்களின் தீவிரமும், உரக்கப்பேசும் தன்மையும் இப்போது என் எண்ணத்தை மாற்றிக்கொள்ளச் செய்கிறது.

said...

இந்தப்பின்னூட்டம் பிற பின்னூட்டங்களை மெயிலில் பெறுவதற்காக..

said...

//"என்னோட‌ ப்ளாக் பேரை வெச்சி என்னோட‌ உண்மையான‌ பேரு ந‌ர‌சிம்ம‌ன்னு எல்லாரு நினைச்சிட்டு இருக்காங்க‌, என் பேர் அதில்லை, வேற‌" என்றார்//

நர்சிம்.. இது நிஜமா?

ஆம் என்றால் :-(

said...

வணக்கம் சகோதரம், உங்கள் பதிவினூடாக நம்ப வைத்துக் கழுத்தறுத்த நயவஞ்சகச் செயலினைப் பற்றிக் கூறியுள்ளீர்கள்.
வாழ்க்கையில் படிப்பினையாக அமைந்த இந்த விடயம், எங்களைப் போன்ற புதிய பதிவர்களுக்கு நல்ல தொரு முன்னுதாரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
உங்கள் வாழ்வில் நீங்கள் பட்ட வலி...எங்களுக்கு ஒரு அனுபவப் பகிர்வாய். நன்றிகள் சகோதரம்.

said...

https://docs.google.com/leaf?id=0B5A7iGNtnQsINzE4ZWZlODgtYWEwNS00ZGU2LTg3YTEtOGUyNmI3ZDFmY2U3&hl=en

said...

வருத்தமாக உள்ளது...

said...

இந்தக் குற்றச்சாட்டுகள் நிஜமென்றால் உங்கள் நண்பர்கள் பலரும்,நானும் கூட மிக வருந்துவேன்...

இரு முறை அவரிடம் பேசியபோது மிகவும் தண்மையாகப் பேசினார்..

:((

காதுலபூ said...

உங்க பேரை இனி காதுல பூ என்று மாற்றிக்கொள்ளவும்,இதேபோல ஊரை ஏய்த்து வாங்கி தின்னும் இன்னொரு பதிவரும் உண்டு.அவரின் முகத்திரையும் விரைவில் கிழியும்.

said...

த்ரிஷா என் தோழி என்று அடிச்சு விடும் போதே உஷாராக வேண்டாமா!

Anonymous said...

Test

Anonymous said...

////"என்னோட‌ ப்ளாக் பேரை வெச்சி என்னோட‌ உண்மையான‌ பேரு ந‌ர‌சிம்ம‌ன்னு எல்லாரு நினைச்சிட்டு இருக்காங்க‌, என் பேர் அதில்லை, வேற‌" என்றார்//
//

ithuveraya??

said...

Is this real? or April fool?

said...

//ந‌ண்ப‌ர்க‌ளை தேர்வு செய்வ‌தில் நான் ம‌ற்றொரு முறை தோற்று விட்ட‌தின் வ‌லி நான் சாகும் வ‌ரை இருக்கும் என்ப‌தில் ஐய‌மில்லை.
//

I have been there.

said...

:(

Anonymous said...

அப்படியெனில், மரணத்தோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தவனின் பெயரால் திரட்டப்பட்ட பணம் ரொட்டேஷனில் விடப்பட்டிருக்கிறது இல்லையா...?! இந்த ஊழலுக்கு என்ன பெயர் வைக்கலாம்...?!
- செல்வேந்திரன்

Anonymous said...

=((

said...

வெண்பூ
உங்க தொலைபேசி எண்ணை எனக்கு அனுப்ப முடியுமா?
கார் ரெண்டல் விஷயம் படிச்சதும் அது பத்தி ஒரு விஷயம் உங்க கூட பகிரணும்னு தோணிச்சு.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

Is it true???????? OMG. Its really shocking....

said...

:-((

said...

மிகப்பொறுமையாக வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து எழுதியிருகிறீர்கள். உண்மைகள் சுடத்தான் செய்யும். சஞ்சய் திருமணம் முடிந்து திரும்பியவுடன் ஒரு நாட்டாமை கவுஜை ஒன்று எழுதி தன் ஆற்றாமையை தீர்த்துக்கொண்டார்.. அவர் எங்கே என்று தெரியவில்லை . வெளிநாடு சென்றிருப்பதாக கேள்விப்பட்டேன்... அவர் மட்டும் என்ன சொல்லுவார் . பொது இடங்களில் ஏன் என்று சொம்பை தூக்குவார்..அவ்வளவுதான்..எனி வே...கடந்து போகட்டும் நண்பரே

said...

@கார்க்கி!

நீங்க குடுத்த லிங்க் நரசிம்மன்னு தான சொல்லுது! ஒரே கொயப்பமா இருக்கே!

நம்ம மெட்ராஸ் தாதா பேர்கூட நரசிம்மன் தான்! ;-)

said...
This comment has been removed by the author.
said...

அப்ப நானும் வாயைத்திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதா வெண்பூ ஜி!

அவருடைய ஐ சி ஐ சி ஐ வங்கிக்கணக்கில் பணம் போட்ட வகையில் பெயர் நரசிம்மன் என்பது எனக்குத்தெரியும். ஆனால் , அது அவர்தானா என்று கேட்டு ஷாக் குடுக்காதீர்கள் ! :)

said...

அட ராமா...

இதுக்கா...இவ்வளவு மல்லுகட்டுனீங்க..?

கெட்டும் பட்டணம் போய்ச்சேர்” என்று ஒரு பழமொழி சொல்வார்கள்...

ஆக பட்டணத்தில் இருப்பவரெல்லாம் என்பது போல ஆகிவிட்டதே...

said...

பரிசல்காரன் said...


நர்சிம்.. இது நிஜமா?

ஆம் என்றால் :-(


இதுதான் மெய்நிகர் உலகம்னு இன்னும் புரியலயா தோழர்?

said...

:((

said...

For comment follow up

said...

for follow up

said...

follow up

said...

கார்க்கி கொடுத்த லின்க்ல "கோடக் மஹேந்திரா"ன்னு வேலை பார்க்கிற கம்பெனி பேரே தப்பா இருக்கே..
அது "கோடக் மஹிந்திரா"அல்லவா? யாரா இருந்தாலும் கம்பெனி பேர தப்பா ஸ்பெல் பண்ணமாட்டாங்க. ஆக இதுவும் டுபாகூரா?

said...

“Insanity is the only sane reaction to an insane society.”
Thomas Szas quotes

said...

:(

said...

அன்பின் வெண்பூ
இத்தருணத்தில் மிகக் கேவலமாக உண்ர்கிறேன். இவ்வளவு சுலபமாக ஒருவரால் ஏமாற்றப் படக்கூடிய அளவுக்கு இளிச்ச வாயனாக இருந்தது குறித்து கேவலமாக உணருகிறேன்.

Rental Car Franchisee விசயத்தில் நான் உங்களுக்கு சீனியர். மே 2010 முதல் ஜூலை 2010 வரை நடந்த கதை இதோ

மே 13 : நண்பர் சாட்டில் வந்தார், XXX: oru urgent help venum personl a

me: சொல்லுங்க me: செஞ்சிடுவோம்

XXX :oru imp personl reason ku i need some money for a MONTH

XXX :thala I need 5 L and I have 3 in hand big amount but you tell me how much you can lend

me: so you need 2 Lakhs

XXX :நான் இதுவரை கேட்டதே இல்ல யார்கிட்டயும் உங்கள சாட்ல பார்த்ததும் கேட்கத் தோணுச்சு

இவரு மே 13 2010 வரை யாரிடமும் பணம் கேட்டதேயில்லயாம். நானும் அவரை மிக உயர்வாகக் கருதியிருந்தேன், அவர் கேட்டவுடன் ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை.
உடனே ஆன்லைன் ட்ரான்ஸ்ஃபரில் ஒரு லட்சம் அவருக்கு அனுப்பிவிட்டு (ஒரு நாளைக்கான மிக அதிக பட்சத் தொகை)அப்புறம்தான் கேட்டேன் பணம் எதுக்கு வேண்டுமென்று.
அடுத்த நாள் இன்னொரு லட்சமும் அனுப்பி வைத்தேன்.ஒரே ஒரு முறை பார்த்த ஒருவரை நம்பி எதுக்குன்னு கூட கேக்காம ரெண்டு லட்சம் எடுத்துக் கொடுத்தவனை கேணையனாக்கி
விட்டீங்களே பாஸு!!!!!
பணம் கொடுத்து விட்டுத்தான் எதுக்குன்னே கேட்டேன்.

me: வீடு ஏதும் வாங்கறீஙகளா?
XXX :illa thala almost like that one venture shall tell you tomorrow
me: also let me know if you are thinking about taking anyone into the venture too absolutely OK if you are not OK to include
anyone

XXX :hellow I am 100% ok will discuss in detail tomorrow

me: i haven't heard the plan, I may or may not be interested making that clear

XXX :happy if we do toghethr sure shall explain tomorrow

மறுநாள் சொன்ன மாதிரி அவர் சாட்டில் வந்து விவரம் சொல்ல வில்லை. நான் போன் பண்ணி கேட்டேன், அப்போ இதே ப்ளான் எனக்கும் சொல்லப் பட்டது மைனஸ் அக்ரீமென்ட்.
அவர் ஃபோர்டில் பெரிய வேலையில் இருப்பதாகவும், கம்பெனி வாடகைக்கார்கள் எடுக்க கம்பெனி தேர்வு செய்கிறார்கள், அவர் பெரிய பதவியில் இருப்பதால் ஈஸியா வாங்கிடலாம் என்றும்
அவரது அண்ணன் பெயரில் எடுப்பதாகவும் சொன்னார், அவர் அண்ணன் கம்பெனியை பார்த்துக் கொள்வாரென்றும் சொன்னார். அப்ப கூட நான் நேர்மையா “நீங்க எல்லா வேலைகளையும்
செய்யப் போறீங்க, வெறும் ரெண்டு லட்ச ரூபாய்க்காக என்னை ஏன் தல பார்ட்னாரா சேத்துக்கறீங்க, உங்களால ஒரு மாசத்தில இந்த ரெண்டு லட்ச ரூபாயைத் திருப்பி தந்துவிடக்
கூடிய நிலையில்” என்று சொன்னேன். அதுக்கு அவர் நீங்க நான் கேட்டதும் எதுக்கு பணம் தரணும், இப்போ கூட இவ்வளவு நேர்மையா சொல்றீங்களே அதுக்காகவாவது உங்களைச்
சேத்துக்கலாமுன்னு சொன்னார்.

to be continued

said...

பாஸு அன்னிக்கே என்னைச் சேர்த்துக் கொள்ள இஷ்டமில்லைன்னு சொல்லியிருந்தால் நான் இன்னிக்கு பூரா புலம்பிக்கிட்டு இருந்திருக்க மாட்டேனே

Coming back to the story, பணம் வாங்கியதிலிருந்து பாஸு என்னை மறந்தே விட்டார், ஒரு மாதத்துக்கு மேலாகியும் பிஸினஸ் பத்தி எதுவுமே சொல்லலை, நானும்
அவருக்கு பார்ட்னர் சேக்க விருப்பமில்லை போல என்று விட்டு விட்டேன். சொன்ன மாதிரி ஒரு மாசத்தில் பணம் திருப்பித்தர வில்லை.
ஜூன் 18ம் தேதி அவருக்கு ஒரு இமெயில் அனுப்பி பணம் ஒரு மாசத்தில் தருவதாகச் சொன்னீர்களேன்னு கேட்டேன், பதில் இல்லை, தலைவரை போனிலும் பிடிக்க முடியவில்லை.
கடேசியா ஜூன் 29ம் தேதி பிடிச்சப்புறம் ஒரு கதை சொன்னார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு குழந்தைக்கு மேஜர் ஆபரேஷன் - அதுக்கு மிகுந்த பொருட் செலவு, அதனால
பிஸினஸ் ப்ளான ட்ராப் பண்ணிட்டதா சொன்னார். வங்கி விவரம் அனுப்பினால் ஓரிரு நாட்களில் பணம் அனுப்பிவிடுவதாகச் சொன்னார்.

அன்று ட்ராப் பண்ணப்பட்டதாக சொல்லப் பட்ட பிஸினஸுக்குத்தான் வெண்பூ பணம் கொடுத்து பார்ட்னராக ஆகி இருக்கிறார்.

பாஸு, நாந்தான் பிஸினஸ்ல சேத்துக்காட்டி பரவாயில்லைன்னு சொன்னேனே பாஸு, அப்புறம் எதுக்கு இந்த பித்தலாட்டம்? குழந்தைன்னு சொன்னவுடனே யாரு அந்த குழந்தைன்னு
கூட கேக்காம, அதுக்கு ஆபரேஷன் முக்கியம், பணம் வெயிட் பண்ணுட்டும்னு சொன்னேனே, அப்ப கூட உண்மையை சொல்ல நா வரவில்லையா பாஸு??

அன்னிலேருந்து பலமுறை போனில் கேட்ட பின் ஜூலை 13ம் தேதி ஓரிரு நாட்களில் பணம் தருவதாய்ச் சொன்னார்

XXX: i shall give the chq to your in law by this Fridy is that ok tomorrow and day after in factory for a meeting

ஜூலை 15ம் தேதி என் மாமனாரிடம் பணம் தருவதாக உறுதி அளித்திருந்தார். அப்போது என் மாமனாருக்கு ஒரு மிக அவசரப் பணத்தேவை இருந்தது. பல முறை கேட்டும் பலனில்லை.
கடைசியாக ஜூலை 20ம் தேதி கண்டிப்பா பணம் தருவதாகச் சொல்லியிருந்தார். அன்று என் மாமனார் பலமுறை அழைத்தும் பாஸு போனை எடுக்கவே இல்லை, அவருக்குத்
தெரியாத ஒரு எண்ணிலிருந்து அழைத்ததும் எடுத்து விட்டார், குடும்பத்தோடு இருந்ததாலோ என்னவோ தெரியல, வீட்டுக்குப் போயி ஒரு செக் கொடுத்துவிட்டார்.
இத்தோட விட்டுச்சான்னா அதுதான் இல்ல, செக்கில் ஒரு பிழை செய்து கொடுத்து விட்டார், பாஸு போனதும் அதைக் கவனித்த என் மாமா உடனே போன் பண்ணி வரச்சொல்லி வேறு
செக் வாங்கி விட்டார். போராட்டங்களுக்குப் பிறகு என் பணம் கிடைத்தே விட்டது.

பணத்தையே ஏமாற்றி இருந்தால் கூட இவ்வளவு வலி இருந்திருக்காது, ஏமாற்றத்தின் வலி மிக அதிகம் பாஸு

அப்துல்லாவைக் கேட்டுப் பாருங்க, அவர் அமெரிக்கா வரும் போது என் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி விட்டு வராமல் போனதுக்கே பல முறை மன்னிப்பு கேட்டும் சமாதானம் ஆகாதவன்
நான் - நீங்க செஞ்சது மிகப் பெரிய நம்பிக்கை துரோகம் இல்லையா?? இப்ப கூட என்னோட வருத்தம் என்ன தெரியுமா? இதுவரை நான் உதவி கேட்ட எல்லாருக்கும் என்னால் ஆன
உதவியை (உடல் உழைப்பு / பணம்) செஞ்சி இருக்கேன், இனிமே யாருக்கும் உதவி செய்யக்கூடாதுன்னு நெனைக்க வச்சிட்டீங்களே - இதனால உண்மையிலேயே உதவி
தேவைப் படுபவர்கள் பாதிக்கப் படுவார்களே? இதுதான் என் வருத்தம்.

யாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம் - இதெல்லாம் நாக்கு சுத்தம் உள்ளவங்களுக்கு பாஸு, நமக்கு எதுக்கு இதெல்லாம்???

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

said...

உங்கள் வருத்தம் புரிகிறது, ஆனாலும் அவர் திட்டம் போட்டு, உள்நோக்கத்துடன் பதிவுலகிற்கு வந்தார் பலரை ஏமாற்ற வேசம் போட்டார் என்ற அளவுக்கெல்லாம் இதில் புரிந்து கொள்ள எதுவும் இல்லை. நீங்களும் அப்படிச் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். அவரால் சிலர் பண விசயத்தில் அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பது தவிர்த்து முற்றிலுமாக ஏமாற்றப்பட்டதாக எதுவும் இல்லை.

கசப்பான அனுபவங்கள் தான், மன்னிக்கலாம். பழகியவர் என்பதால் முற்றிலும் வெறுக்கத் தேவையில்லை.

said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.
said...

ப்ளாகரில் போஸ்ட் போட்டு பழகும் போது உண்மை விஷயங்கள் சொல்லக்கூடாது என்பது நலம். அதற்காக நாங்க பழகியவுடன், பணம் விசயத்தில் ஏமாற்றுவது கேடு.

ஆமாம் கார் ரெண்டல் கம்பெனியில் அண்ணன் பெயரில் முதலீடு செய்தீர்களே.... அந்த அண்ணன் பெயர் தான் அவர் உண்மை பெயர். நரசிம்ஹன் அப்பா பெயராக இருக்கலாம்.

எந்த ஐ.ஐ.எம். பேட்ச்?

said...

கோவிய‌ண்ணே,

உங்க‌ பின்னூட்ட‌த்திற்கு மேலே ப‌லாவின் க‌மென்ட் பாருங்க‌.. ப‌டிச்சும் இத‌ சொன்னீங்க‌ண்னா.. ரைட்டு பாஸ்>. நீர் வாழ்க‌..

ச‌வீதா, அவ‌ர் ஐ.ஐ.எம். இல்லை என்ப‌த‌ற்கான‌ ஆதார‌ம் மேலே க‌மென்ட்ல‌ இருக்கு பாருங்க‌https://docs.google.com/leaf?id=0B5A7iGNtnQsINzE4ZWZlODgtYWEwNS00ZGU2LTg3YTEtOGUyNmI3ZDFmY2U3

said...

வெண்பூ & பாஸ்டன் ஸ்ரீராம், உங்களுக்கு அவர் செய்தது மன்னிக்க முடியாத நம்பிக்கை தூரோகம்.

எப்படியும் இந்த பதிவை படிக்கும் நரசிம் உன் இச்செயலால் நல்ல நண்பர்களை இழந்துவிட்டாய்.

said...

கோவி சொன்னதை நானும் முன்மொழிகிறேன். ஏமாற்றும் உள்னோக்கம் கொண்டவரல்ல என்றே நினைக்கிறேன்.மிகுந்த மனிதாபிமானி, ஆனால் over confidant and careless and imprudent in cash management. பொய் சொன்னதுதான் தவறு. மற்றபடி, பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார் தானே. அவரை துரோகி, சதிகாரன் என்றெல்லாம் கருத தேவையில்லை. அவரின் அடிப்படை மனித நேயத்திற்க்காக மன்னித்துவிடலாம்.

மேலும் : ‘எதையும் தீர விசாரிப்பதே மெய்’ என்ற முதுமொழி.

நீண்ட நாள் வாசகன் said...

புண்ணை சொறிஞ்சுவிட விரும்பவில்லை. ஆனாலும்....

2008/2009-ஆன்னு நினைவில்லை.. பின் நவீனத்துவப் பிதாமகரின் நூல்(கள்?) வெளியீட்டு விழாவை முன்னிட்டு வழங்கப்பட்ட காக்டெயில் பார்ட்டியை அண்ணன் ஸ்பான்ஸர் செய்தார்(ரா?). ஆனால் அது பிதாமகரின் அணத்தலால் (தன் தனிப்பட்ட கஷ்டத்திலும்) அண்ணன் கைக்காசைப் போட்டு பார்ட்டி நடத்தினார் என மூத்த பதிவர் இடுகையிட்டு சில மணி நேரத்தில் எடுத்து விட்டார்.

உண்மை எதுவோ?
ஷ்பான்ஸர்ஷிப் உண்மையாயின்,
கல்லிலும் நார் உரித்த பிதாமகர் கெட்டிக்காரரே.

அந்நிகழ்ச்சியில் சிலநூறு கி.மீ பயணம் செய்து வந்த தங்களிடம் பாராமுகத்துடனிருந்து அண்ணனிடம் நெருங்கியிருந்த பிதாமகரை அவர்கள் வைது மூக்கு சிந்திய இடுகை தனிக் காமெடி.

said...

கார்க்கி, அவரது முகவரி தனிப்பட்ட தகவல்கள் இருக்கும் சுட்டியை பகிர்வதை உடனே தவிர்க்கவும்.

வெண்பூ, தயவு செய்து அந்த பின்னூட்டங்களை நீக்கிவிடவேண்டும்..

இது பற்றி ஆழமாக சிந்தித்து பார்க்கும்போது, அவரது நோக்கம் வெறும் ஏமாற்றும் நோக்கமாகவே மட்டும் இல்லை.

அவர் பதிவுலகின் உள்ளே நுழைந்த காலத்தில் போலி பிரச்சனை இருந்தது, அதனால் யாரும் யாருடையை ஐடெண்டியினையும் காட்டிக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. நெருக்கமாக பழகியவர்கள் கூட உண்மையாக வேலை நிறுவன பெயர்களை பகிர்ந்துகொள்ள தயங்கினார்கள் என்பதே உண்மை.

பதிவர்களை அழைத்துக்கொண்டு சுற்றுலா, சாருவுக்கு தண்ணிபார்ட்டி என்று செலவிட்டபோது உடன் உட்கார்ந்து சரக்கு அடித்தவர்கள் இப்போது அவரை செருப்பால் அடிப்பது போல பேசுவதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.

பணத்தை மேனேஜ் செய்ய இயலாமல் தோல்வி அடைந்ததன் விளைவே இது. அங்க தூக்கி இங்க போட்டு இங்க தூக்கி அங்க போட்டு என்று முழு தோல்வி அடைந்துவிட்டார். அதற்காக பொய் சொல்லி உங்கள் நம்பிக்கைகளையும் பாழடித்துவிட்டார், உங்கள் நட்பை இழந்துவிட்டார்.

அதற்காக மேட்ரிமோனியில் விளம்பரம் கொடுத்து 4 திருமணம் செய்யும் ப்ராடு அளவுக்கு அவரை கீழ்த்தரமாக பேசுவதை என் மனது ஏற்கவில்லை.

இரண்டு சம்பவங்களில் டெபிட் கார்டு கொடுத்தார் என்று சொல்கிறார்கள். டெபிட் கார்டு மட்டும் தான் கொடுத்தார் பின் நம்பர் கொடுக்கவில்லை என்று யாரும் கம்ப்ளைண்ட் கொடுக்கவில்லை. டெபிட் கார்டை எடுத்து கொடுக்க ஒரு வகையான இளகிய / நெகிழ்ந்த / அவசரப்பட்டு எளிதில் ஒரு முடிவை எடுத்துவிடும் மனசு தான் எனக்கு தெரிகிறது. எந்த கெட்ட எண்ணமும் தெரியவில்லை.

உங்களுக்கு இப்போது அந்த பணத்தை திருப்பி புரட்டி கொடுத்துவிட்டார்தானே ? பாஸ்டன் சீரிராமுக்கு ? சில பதிவர்கள் அவரிடம் பணம் வாங்கியிருப்பதாகவும் கேள்விப்பட்டுள்ளேன். அவருடன் நட்பாக இருந்த சிலர் இந்த விஷயங்கள் நடக்கும்போது அவரை அழைத்து பேசி நல்ல விஷயங்களை எடுத்து சொல்லி பிரச்சனைகளை சுமூகமாக முடிப்பது தானே முறை ? அது கூட இல்லாமல் ஏன் அவருடைய காசில் சரக்கு சாப்பிட்டீர்கள் ? (யார் சாப்பிட்டார்களோ அவர்களை சொல்கிறேன்)

பதிவுலகில் மூத்தவர்கள் / சென்னையில் இருப்பவர்கள் / அவருடன் பழகியவர்கள் சேர்ந்து முடிவெடுத்து அவருக்கும், பண விஷயத்தில் அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்யுங்கள்.

Anonymous said...

// இவ‌ர் த‌ன‌து டெபிட் கார்டை கொடுத்துவிட்டு வ‌ந்த‌தாக‌ என்னிட‌ம் சொல்லியிருக்கிறார். //

அதெல்லாம் சரிதான். பின் நம்பரக் கொடுத்தாரா? அங்கே இருக்கு சூட்சுமம்.

சிம்பிளா கிரெடிட் கார்ட கொடுத்திருக்கலாமோ?

said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.
said...

FB

said...

:-/

said...

:-/

said...

15 நிமிட புகழ் அனைவருக்கும் தேவைப்படுகிறது. அவரை இரு முறை பார்த்த வரையில் & பின்னிரவில் என் வீடு வரை வந்து தன் காரில் இறக்கிவிட்ட அவருக்கு 15 என்பது 30 - 45 நிமிட புகழ் தேவைப்படுகிறது. அஷ்டே.


சிற்சில பொய்கள் சொல்லி பின்னாளில் அவைகளை மறைக்க மேலும் பொய்கள் சொல்வது நாம் அனைவரும் செய்வதுதான்.

அதற்காக அடுத்தவர் பண விஷயத்தில் விளையாடுவது? அது கண்டிப்பாக தப்புதான்.

Anonymous said...

//அவர் ஃபோர்டில் பெரிய வேலையில் இருப்பதாகவும், கம்பெனி வாடகைக்கார்கள் எடுக்க கம்பெனி தேர்வு செய்கிறார்கள், அவர் பெரிய பதவியில் இருப்பதால் ஈஸியா வாங்கிடலாம் என்றும்
அவரது அண்ணன் பெயரில் எடுப்பதாகவும் சொன்னார், அவர் அண்ணன் கம்பெனியை பார்த்துக் கொள்வாரென்றும் சொன்னார்.//

இது conflict-of-interest இல்லையா? எந்தப் பெரிய நிறுவனமும் இது தொடர்பான HR கொள்கைகளை தெளிவாக அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவித்திருப்பார்களே?

அந்த நிறுவனத்திற்கு இந்த integrity violation சமாச்சாரம் தெரிந்தால் அவரை பணிநீக்கம் கூடச் செய்யலாம்.

அவருக்கு உதவிய நண்பர்களும் இதைக் கண்டு கொள்ளாதது வருத்தத்திற்குரியது.

said...

அபாரமான பின்னூட்டங்கள் கோவி மற்றும் செந்தழல் ரவி..
உங்கள் இருவரையும் அமைதிக்கான நோபல் விருதுக்கு பரிந்துரை செய்யலாமுன்னு இருக்கேன்.

பணம் ஏமாற்றியதாக நானோ, வெண்பூவோ சொல்லவே இல்லையே!!
லாபம் தரும் பிஸினஸை விட்டு விலகியவர் வெண்பூ, எதுக்கு பணம் தேவைன்னே கேக்காமல் பணம் கொடுத்தவன் நான்.

It is not about Money, it is about Breach of Trust which I am too sensitive to.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

said...

Anony, removing your comment which is no way related to this post..

said...

@ஸ்ரீராம்... /////It is not about Money, it is about Breach of Trust which I am too sensitive to.////
உண்மைதான்.அந்த நேரத்து வலிகளை உணர்கிறேன்.இதைப்போன்ற நிகழ்வுகளை அனுபவமாக எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்.மறப்போம் மன்னிப்போம்.

said...

வெண்பூ & ஸ்ரீராம்,

நீங்கள் இருவரும் இதை பொது வெளியில் வைத்து உடைத்து இருக்க வேண்டாம். இதற்காக அவர் செய்தது நியாயம் என்று நான் கூறவில்லை. இதை பொதுவில் பேசி இருப்பதும் தவறு. இது உங்கள் மூவருக்குள் இருந்த ஒரு தனிப்பட்ட வரவு செலவு கணக்கு. இதை எதற்காக போது வெளியில் பகிர வேண்டும்? யாரும் ஏமாறாமல் தடுக்க வேண்டும் என்றா? எனக்கு அப்படி தோன்ற வில்லை. இதை உங்கள் நெருங்கிய நட்பு வட்டத்திர்க்கு மட்டும் சொல்லி இருக்கலாம் அல்லவா?

நான் இந்த வலைஉலகில் எவரோடும் பழகியதில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள எல்லா வலைப்பூவிர்க்கும் நான் வாசகன். வலைஉலகத்தில் எதாவது பிரச்சனையின் போது கூட சேர்ந்து கும்மி அடிப்பது, பிறகு யாரொடு நெருங்கி பழகினோமோ அவரையே போட்டு வெளுத்து வாங்குவது என்று பக்கா அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது.

அவரின் செயலும், உங்கள் செயலும் எனக்கு வலைஉலகை பற்றிய அச்சத்தை பெரிதக்குகின்றன.

said...

//யாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம் - இதெல்லாம் நாக்கு சுத்தம் உள்ளவங்களுக்கு பாஸு, நமக்கு எதுக்கு இதெல்லாம்??? //

haha good Sriram...
சாத்தான் வேதம் ஓதுகிறது....

said...

it is really unbelievable..

said...

வி வீ சுவாமிநாதன்..
நீங்க சொன்னது உங்க கருத்து என்ற வகையில் அதை மதிக்கிறேன்.

ஏமாற்றத்தின் வலி உணர்ந்தால்தான் தெரியும்.
ஒருவர் தெரியாமல் தவறு செஞ்சிருந்தாலோ, கோவத்தில் கை நீட்டி என்னை அடித்திருந்தாலோ சில மணித் துணிகளில் மறந்து விடலாம்.

Breach of Trust எங்களை எழுதத் தூண்டியது.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

said...

நன்றி ஸ்ரீராம். இது என்னுடய கருத்து மட்டுமே. opinion differs.

நான் கவலைப்படுவது இது ஒரு மாதிரி டிரேன்ட் ஆகிறது. என்னை பொருத்த வரை வலைஉலகம் ஒரு ஆகச் சிறந்த ஊடகம். இதை கருத்துகள் பரிமாற்றத்திர்க்கும், அறிவின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் பிரச்சினைகளை பேசவும் உபயோகப்படுத்தலாம். ஆனால் இங்கே தனி மனித தாக்குதல்களும், ஏமாற்றங்களும் கவனம் ஈர்க்கின்றது.

தமிழில் வாசிப்பு அனுபவம் இல்லாத என் நண்பர்களுக்கு நான் முதலில் புத்தகங்களை விட, வலைப்பூக்களையே அதிகம் பரிந்து உரைப்பேன். இப்பொழுது அவ்வாறு செய்ய பயமாக இருக்கிறது. இந்த தனி மனித தாக்குதல்கள், கீசுகீசுக்கள் எல்லாம் அவர்கள் வார இதழ்களிலேயே படித்து விடலாம் என்பார்ககளோ என்று. புதிதாய் வாசிப்பவர்களுக்கு இவை தான் முதலில் கவனம் ஈர்க்கும்.

நான் உங்களை மட்டுமோ, வெண்பூ-வை மட்டுமோ குறை சொல்லுவதாக என்ன வேண்டாம். ஆனால் எனக்கு நம்பிக்கை இன்னும் போக வில்லை. இது போல் சிறு சிறு சலசல்புக்கள் வந்தாலும் நிறைய நல்ல வேலைகள், பயனுள்ள விவாதங்கள் நடந்து வருகின்றன.
இதையும் தவிர்த்தால் நாம் அனைவரும் அடுத்த அடுத்த படிகளுக்கு முன்னேறலாம் என்பதே என் ஆசை. இந்த விஷயத்தை பதிவில் இல்லாமல் தனியாக பேசித் தீர்த்து இருக்கலாம், அவரிடம் இருந்து ஒதுங்கி இருக்கலாம். உங்களுக்கும் அவருக்கும் உள்ள நட்பு வட்டத்திர்க்கு மட்டும் சொல்லி இருக்கலாம்..

said...

poli vaalpaiyan ???

ஒரு நண்பன் said...

படித்தேன்.. கொஞ்ச நாளாக, ப்ளாக் உலகத்தை கவனித்து வருபவன் என்ற முறையில், இது அதிர்ச்சிதான். சக மனிதனை ஏமாற்றுவது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத செயல் எனக்கு :-(

ஆனால், ஒரு கேள்வி தொக்கி நிற்கிறது. ஸ்ரீராம் இதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று வேண்டுகிறேன். கேட்டவுடன் பணத்தை.. அதுவும் 2 லட்சத்தை டக்கென்று அனுப்பினீர்களே .. அது உங்களது மரியாதையை நிரூபிக்கிறது. ஆனால், இன்னொரு பக்கம், அது தப்பில்லையா நண்பரே? நீங்களே, இன்ன்னொருவருக்கும் இதேபோல் பணம் கொடுத்ததாக ஒரு செய்தி உலவுகிறது. அவரிடமும் இதேபோல் நடந்துவிட்டால்? இந்த உலகில், நண்பர்கள் பெரிதுதான். ஆனால், சில சமயங்களில் சுயநலம்தான் இப்படிப்பட்ட எத்தர்களிடமிருந்து நம்மைக் காக்குமல்லவா நண்பரே?

Anonymous said...

@நரசிம்
உங்களுக்கு பணத்தில் பிரச்சினை பிறகு ஏன் நண்பர்களிடம்?. உங்களுடைய மரியாதையை(!) ஏன் இழக்கிறீர்கள் ....
@ஸ்ரீராம் & @வெண்பு
உங்களுக்கு பாத்திரம் அறிந்து பிச்சை இட தெரியவில்லை.
பிரச்சினையை ஏன் பதிவுலகில் எழுப்புகிறீர்கள்....லாபம் வந்து இருந்தால் பதிவுலகில் கணக்கு வழக்கு பார்ப்பீர்களா?
@கார்கி
வல்லவனுக்கும் உண்டு வழுக்குப் பாறை. ஒருவருடைய பயோ-ட்ட வை பொதுவில் வைக்காதீர்கள். சம்பந்தபற்றவர்கக்கு மட்டும் தெரிவியுங்கள்.

இவை என் கருத்துக்களே ....

மேட்டுத்தம்பி

said...

இன்னுமா ஒலகம் நம்மள நம்பிக்கிட்டிருக்கு..?! வலைப்பூ வ்ரைக்கும் வந்த வெள்ளந்திகள்....

said...

வெண்பூ!

இந்தப் பதிவின் கமெண்ட்ஸ்களை மூடிவிடலாம். பதிவு போட்டவுடனேயே கூட நீங்கள் கமெண்ட்ஸ் டிஸேபிள் செய்திருக்கலாம்.

இப்பதிவுக்கு கமெண்டுகளை பெறுவது உங்கள் நோக்கமாக நிச்சயம் இருக்காது என்று நம்புகிறேன்.

said...

யுவா,

உண்மையில் இந்த‌ ப‌திவுக்கு பின்னூட்ட‌ங்க‌ளை எதிர்பார்த்தேன். ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் ம‌ன‌ம் திற‌ந்து பேச‌ வ‌ச‌தியாக‌ இருக்குமென்று. பாஸ்ட‌ன் ஸ்ரீராம் போன்ற‌வ‌ர்க‌ள் பேசுவ‌த‌ற்கு இது த‌ள‌மாக‌ அமைந்த‌தில் ம‌கிழ்வே.

இத‌ற்கு மேல் பின்னூட்ட‌ங்க‌ளுக்கு இங்கு தேவை இல்லை என்ப‌தால் இப்போது பின்னூட்ட‌ப்பெட்டியை மூடுகிறேன்.

ந‌ன்றி ந‌ண்ப‌ர்க‌ளே.